சனி, 24 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 16
இந்த பகுதி சற்று மாருதலும் கொஞ்சம் தேவையானதும் கூட

மூலாதாரம் : 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது. இதன் அதி தேவதை : விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி. இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம். உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம் : மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.

உணர்வுகள் : மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும். இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம் : தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

உணர்வுகள் : தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.

அதி தேவதை : வாஹினி, ருத்ரன், லாகினி

உடல் பாகங்கள் : ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

இந்த சக்கரங்களுக்கும் நாளமில்லச் சுரப்பிகளுக்கும்( endocrine glands) பல நேரடித் தொடர்புகள் உண்டு.

மூலாதாரம் - adrenal gland
அனாஹதம் - thymus
ஆக்ஞா -pieneal
சஹஸ்ராரா - pitutary
விஷுத்தி - thyroid(இதை நீங்களும்
குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். )

மணிபூரம் - solar plexus (இதுநாளமில்லாச் சுரப்பி அல்ல. நாபிக்கருகிலுள்ள நரம்புக் கூட்டம் )

கருத்துகள் இல்லை: