வெள்ளி, 20 நவம்பர், 2020

சொரிமுத்து ஐய்யனார் கோவில்

அருள் மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்
 
மூலவர் : சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் : இலுப்பை
தீர்த்தம் : பாணதீர்த்தம்
பழமை : 1000வருடங்களுக்கு முன்
ஊர் : காரையார்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
 



திருவிழா : ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, பங்குனி உத்திரம்.   
       
தல சிறப்பு:முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.   
       
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91 4634 250 209  
      
பொது தகவல்:மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.

பிரார்த்தனை:பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர்.

நேர்த்திக்கடன்:ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்குள்ள அய்யனாருக்கு பக்தர்கள் செருப்பு காணிக்கை செலுத்துகின்றனர்.  
      
தலபெருமை:பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.

சிறப்பம்சம்: பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

செருப்பு காணிக்கை: இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர், பிராமண குலத்தில் பிறந்து, சூழ்நிலை காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு ஜாதியில்லை என்பதை முதன் முதலாக நிரூபித்த இவர், பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தார். அவரை பட்டவராயன் என்று அழைத்து, இந்தக் கோயிலின் ஒரு பகுதியில் சன்னதியும் எழுப்பினர். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் மனைவியருடன் பட்டவராய சுவாமி அருள்கிறார். இவர் பிராமணராயிருந்தும், தன் மாமனார் உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்து கொள்வதற்காக, செருப்பு தைக்கும் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவரது சன்னதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக கட்டுகின்றனர். முதல் ஆண்டு கட்டப்படும் செருப்பை மறுஆண்டில் போய் பார்த்தால் அது தேய்ந்திருக்கும். பட்டவராயரே இந்த செருப்புகளைப் பயன்படுத்துகிறார் என்று பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இது வனப்பகுதி என்பதால் ஆட்களும் அதிகம் செல்வதில்லை. செல்பவர்களும் இந்த செருப்புகளைத் தொடுவதுமில்லை. அப்படியிருந்தும், செருப்புகள் தேய்வது, கலியுக அதிசயமாகவே இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால், கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், கிராமப்புற மக்கள் ஏராளமாக வருகின்றனர்.

இரட்டை யானை விநாயகர்: கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக இருப்பதாக சொல்கிறார்கள். இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.   
       
தல வரலாறு:கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு லிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐயனார் எனப்பட்டார்.   
       
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

சந்தியாவந்தனம்

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.

அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)
சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர்.

 இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு
சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.
நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர்.

 சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது
பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன.

சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள்.

முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன் சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின.

அப்படி ஒரு குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள்.

 பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்
பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர்.

 இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.
(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)
சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது.

உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது.

 சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர்.

 நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை வழிபடுவர்.

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது.

 அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது.

அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

  அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை..
சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.


உரோமரிஷி


உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார்.இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்.ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர்.இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம்,சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம் சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி, அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்:தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு,அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள்,குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு,சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல்,பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும்.பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்: இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி,மன அழுத்தம்,மனப்புழுக்கம்,மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.


2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது,நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.


4. படிப்பிலும்,தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.


5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீராமா

ஸ்ரீராமா



ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.
அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.
அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.
அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.
துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.
எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.
ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.
அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?
உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.
பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.
எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.
இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?
ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.
ராமனுக்கு ஈடாவாரா?
ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.
எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.
இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.
எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.
சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.
அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.
‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”
பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)
இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.