செவ்வாய், 28 ஜூலை, 2020

உதீத மகா சித்த புருஷர் - தக்கோலம்!

சென்னை அருகே சென்னை – அரக்கோணம் இருப்புப் பாதையில் தக்கோலம் என்னும் சிவத்தலத்தில் பிரஹார மதில் சுவரின் மேல் சுதை ரூபத்தில் தரிசனம் தருகின்ற ஸ்ரீஉததீ மஹா சித்புருஷரின் உருவத்தையும், கோயிலின் உட்புறம் ஒரு இரகசிய சந்நிதி அறை போல் அமைந்துள்ள ஸ்ரீஉததீ மாமுனியின் ஜீவ சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்தியையும் பற்றி பார்ப்போம்.  உதீத மஹரிஷி என்று அழைப்பாரும் உண்டு. பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்ற தக்கோலத் திருத்தலத்தில் தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்து அருள்புரிந்து அன்றும் இன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் ஸ்ரீஉததீ சித்புருஷர் நமக்கு அருள்புரிகின்றார்.

தக்கோலம் சிவாலயத்தில் உள்ள ஜீவசமாதி ஆலயத்தில் உறைந்திருக்கும் ஸ்ரீஉததீ சித்புருஷரானவர் நமக்குப் பலவிதமான அருள்வழி முறைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.  கோயிலில் நுழைந்தவுடனேயே உயர்ந்த மதில் சுவரில் யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஉததீ மாமுனிவரை கழுத்தை உயர்த்தி வான் நோக்கி மேலே நாம் தரிசனம் செய்வதே வசுபூரண தரிசனமாகும்.. இதுவரையில் சமநிலையில் கண்களை நோக்கியவாறோ அல்லது பாதாளத்தில் இருக்கின்ற தெய்வ மூர்த்தியையோ (திருச்சி மலைக்கோட்டை பாதாள அய்யனார், திருஅண்ணாமலை ஸ்ரீரமண மஹரிஷி வழிபட்ட பாதாளலிங்கம், விருத்தாலசத்திலுள்ள ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்) ஆஜானுபாகுவாக 10, 20 அடி உயரமுள்ள தெய்வ மூர்த்திகளை நாம் தரிசிக்கின்றோமே தவிர, என்றேனும் அண்ணாந்து பார்த்து கோபுர தரிசனம் போல ஏதாவது சித்புருஷ தரிசனம் நாம் செய்துள்ளோமா? இதுதான் உததீ மாமுனியின் உத்தமப் பேறாகும். உததீ மாமுனிவர் பலரையும் அரிய திருப்பணிகளைச் செய்ய வைத்து தம்மை அண்டி வந்தோரை அவரவரின் கர்மவினைப் ப(ல)யன்களை எளிய முறையில் சீரமைத்துத் தந்து அவர்கட்கு நல்லருள் புரிந்தவராவார். அவர்தம் முக்கியத் திருப்பணி என்னவெனில் ஆலய கோபுரங்களில் ஊடு பயிராக விளங்குகின்ற மரங்களையும், செடிகளையும் நீக்கி ஆலய கோபுரங்களைப் பாதுகாப்பதாகும். ஆலய கோபுரத்தில் செடிகள் வேர்விட்டு முளைத்து விடுமாயின் அது ஆலய கோபுரத்தையே பதம் பார்த்து விடுமல்லவா? இது மட்டுமின்றி நட்சத்திர தியான முறையிலே நட்சத்திர யோகதரிசனம் எனும் அபூர்வ யோகாசனத்தில் அமர்ந்து இரவு பூஜையிலே சிறந்து விளங்கியவரே ஸ்ரீஉததீ மாமுனியாவார். பகலெல்லாம் பல ஆலயங்கட்கும் சென்று ஆலய கோபுர மற்றும் விமானத் திருப்பணிகளை ஆற்றி, இரவில் சற்றும் உறங்காது வானத்தில் உள்ள நட்சத்ராதி, கிரஹ தேவதை மூர்த்திகளைப் பலவிதமான துதிகளால் வணங்கி கண் துஞ்சாது, சிவ மந்திரங்களை ஓதியவாறு மிகச் சிறந்த தபோபலன்களைப் பெற்று, அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.

இங்கு விடியற்காலையிலும், மாலையும் இருளும் சேரும் நேரத்திலும், இங்கு அமர்ந்து நட்சத்திர தரிசனம் பெறுவது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இங்கு தான் இரவு நேர தியான முறையில் தாமும் தியானித்துப் பிறருக்கும் உபதேசித்து நல்வழி காட்டியவரே ஸ்ரீஉததீ முனிவர்! கலியுக மனிதனானவன் பகல் நேரத்திலே, தொழில், கல்வி, குடும்பம் போன்றவற்றிற்காகச் செலவழிக்கிறானே தவிர இறைத் திருப்பணிக்காகவோ, வழிபாட்டிற்கோ அவன் ஒதுக்கும் நேரம் சில நிமிடத் துளிகளேயாகும். இரவு நேரமோ, உறக்கத்திற்கும், பலவித தீயவழிகட்கும் ஆட்பட்டதாய் அமைந்து விடுகின்றது. பின் எவ்வாறு தான் ஒரு மனிதனானவன் தன்னுடைய தெய்வீக நிலையில் முன்னேறுவதற்காக, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளை நன்கு பயன்படுத்த இயலும்? இதற்கு இரவு நேர தியானங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.

சில குறிப்பிட்ட திதிகளிலும், நட்சத்திரங்களிலும், நாட்களிலும் சில குறிப்பிட்ட இரவு நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகள், தியானங்கட்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஆதலின் இப்பூஜைகளின் இந்த அபரிமிதப் பலன்களால் செய்யாமல் விடுபட்ட பூஜைகட்கும் நந்நேரத்தை வீணே கழித்தமைக்கும் பிராயச்சித்தமாக அமைகிறது... உததீ சித்புருஷர் கலியுக மக்களின் நேரப் பற்றாக்குறை, நேரத்தை வீணாக்கும் தன்மையையுணர்ந்து, தீர்க்க தரிசனத்துடன் தான் தன் ஜீவசமாதியில் உததீ சக்திகளைத் தன் தபோ பலன்களின் திரட்சியாகப் பதித்துள்ளார். எனவே, தக்கோலத்தில், குருவாரமாக விளங்குகின்ற வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6 முதல் , மாலை 1 முதல் 2, இரவு 8 முதல் 9) போன்ற குரு ஹோரை நேரங்களில் 21 முழு எலுமிச்சம் பழங்களாலான மாலைகளை வைத்து குரு மந்திரங்களை ஓதி (தட்சிணாமூர்த்தி நாமாவளி, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், கல் ஆலின் புடையமர்ந்து .. பாடல் .., திருமூலர், அப்பர், சம்பந்தர், மணிவாசகர் போன்றோரின் குரு துதிகளை)  நன்கு ஓதி குறைந்தது அரைமணி நேரமேனும் தியானித்து குரு பகவானுக்குரித்தான மஞ்சள் நிற எலுமிச்சம் பழம் அன்னம் போன்ற உணவுப் பண்டங்களை ஜீவசமாதிக்குப் படைத்து தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட எலுமிச்சை மாலையை இல்லத்தில் வைத்து பூஜையில் வைத்து மறுநாள் அதனை அன்னமுடன் கலந்து எலுமிச்சை சாதமாக தானமளிக்க வேண்டும்..

ஒவ்வொரு மனிதனும், இரவில் தான் பல தீய வினைகளையும், தீவினை சக்திகளையும் சேர்த்துக் கொள்கிறான்... முறையற்ற காமச் செயல்களால் விந்துக் குற்றங்களும், கொலை, கொள்ளை, போன்ற தீய செயல்களும் இரவில் தான் நிகழ்கின்றன. மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இவ்வாறாக இரவில் கூடுகின்ற தீவினை சக்திகளைக் களைய இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களாக சமுதாயத்தைப் புனிதப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.

உததீ மஹரிஷியின் ஜீவாலய சமாதிக்கு வியாழன், திங்கட்கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் மூலிகைக் காப்பிடுதல் மிகவும் விசேஷமானதாகும். மூலிகைகட்குரித்தானவர்கள் தானே சித்புருஷர்கள். அதிலும் உததீ மஹரிஷியானவர் மூலிகைத் தாவரங்களின் தெய்வீக சக்தியுணர்ந்து அவற்றின் சாற்றினை மூலிகா பந்தன முறைப்படி மாத சிவராத்திரி தோறும் அருகிலுள்ள ஆற்றில் கலந்து அதன் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் மகத்தான தெய்வீகப் பணியாற்றினார்.
குறிப்பாக மாத சிவராத்திரி தோறும் தக்கோலத்தில் பள்ளியறைப் பால் நைவேதனம், மூலிகைத் தைலக் காப்பு, எலுமிச்சை அன்னதானம், நட்சத்திர பூஜைகளை நடத்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும்... மது, முறையற்ற காமம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்கட்கு அடிமையானோர் வியாழன் தோறும், குருஹோரையில் உததீ சித்புருஷ லிங்க பிரதிஷ்டா மூர்த்தியை வணங்கி அவருடைய ஜீவ சமாதிக்கு அபிஷேக ஆராதனைகளையும் அவர் மிகவும் போற்றிய கீரைகள், மூலிகைகள் கலந்த உணவு பண்டங்களையும் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய தீயவழக்கங்கட்கும் உததீ மாமுனியின் குருவருளால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு அவை அறவே நீங்குவதற்கான நல்வழியும் கிட்டும் (தகவல் - http://www.kulaluravuthiagi.com/Feb1999.htm)
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.....!!!

"மஹாலக்ஷ்மீம் மஹாதேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலாலயாம்
 சங்க சக்ர கதாஹஸ்தாம் பத்மினீம் பத்மஸம்பவாம்"

"ஸர்வ உலகங்களுக்கும் தாயான ஸ்ரீலக்ஷ்மி ஆனவளும், தனக்கு மேல் ஒரு தெய்வமில்லாதவளும், ஸ்வயம்ப்ரகாசையானவளும், மஹா விஷ்ணுவின் ஹ்ருத் பங்கஜத்தை விட்டு என்றும் அகலாதவளும், சங்கம்,சக்ரம்,கதை இவற்றை தரிப்பவளும், தாமரையாளும், அத்தாமரையில் தோன்றியவளுமான ஸ்ரீலக்ஷ்மியையே சரணமடைவோம்"

உலகங்கள் அனைத்திற்கும் அன்னையாதலின் இவள் ஜகன்மாதா. ஆதிகாரணியாதலின் இவளே ஆதிலக்ஷ்மி. அம்மஹாலக்ஷ்மி எங்ஙனம் தோன்றினாள். தோற்றமும் மறைவும் இல்லா பரம்ம வஸ்துவே அவள். ஆத்யந்தம் இல்லா மஹாசக்தியே அவள்.

ஸ்வயம்ப்ரகாசையாக தான் பரப்ரும்மமே என நின்றால் தன் குழந்தைகள் தன்னை நெருங்கி முடியாது போய்விடுமோ? என்றஞ்சி ஆதிலக்ஷ்மியாய் வடிவம் தாங்கினள் அப்பரதேவதை.

"லக்ஷ்மீ" நாமமே தேனினும் தித்திப்பது. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடியது. ஸகல சௌபாக்யங்களையும் தரக்கூடியது. கிடைத்தற்கரிய மோக்ஷத்தையும் அனுக்ரஹிக்கக் கூடியது. அந்த ஆதிமஹாலக்ஷ்மியே, ஸ்வயமிச்சையாக ஸகல உலகங்களுக்கும் மங்களத்தை உண்டாக்கும் வண்ணம் அழகிய ரூபம் தாங்கினள்.

"கருமேகத்தை பழிக்கும் அழகியதும், நீலோத்பல மலரை ஜயிக்கும் அழகும் பொருந்திய அடர்ந்த கூந்தல் உள்ளவளும், அஷ்டமி சந்த்ரனை போன்று அழகிய நெற்றி பொருந்தியவளும், கரும்பு வில் தோற்கும் கரும்புருவங்கள் தரித்தவளும், சூர்யனையும் சந்த்ரனையும் தன் தாமரை போன்ற கண்களாய் உடையவளும்,

எள்ளுப்பூப்போல் நாசி தரித்தவளும், வெள்ளியை பழிக்கும் மூக்குத்தி ஏற்றவளும், பவழத்தை பரிகசிக்கும் அதரம் தாங்கியவளும், பத்மராகம் போன்று கன்னங்கள் கொண்டவளும், அழகிய காதுகளில் அசைந்தாடும் மகர குண்டலங்கள் தாங்குபவளும், பௌர்ணமி நிலவைப்போல் முகக்கமலம் தரிப்பவளும்,

சதுர்புஜங்கள் கொண்டவளும், மேலிரு கரங்கள் தாமரைப்புஷ்பங்களைத் தாங்க, கீழிருகரங்கள் வரமும் அபயமும் கொடுக்க, தனது தாமரை போன்ற பாதங்களை ஆராதிக்கும் திரிமூர்த்திகளை கொண்டவளுமாய்" அப்பரதேவதை விளங்கினாள்.

தேவர்கள்,ஸித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,மஹான்கள் என அனைவராலும் ஆராதிக்கப்பட்டவள் இவளே. தாமரையில் தோன்றியவள் ஆதலின் இவள் "கமலா". மனதிற்கு ஆனந்தத்தை உண்டுபண்ணுவதால் இவளே "ரமா".

மங்களமே மையமாக ப்ரகாசிப்பதால் இவளே "ஸ்ரீ". ஸர்வ லோகங்களுக்கும் அன்னை ஆதலால் இவளே "மாதா". தன் பக்தர்களுக்கு மோக்ஷமளிப்பதே லக்ஷ்யமாக உடையவள் ஆதலால் இவளே "லக்ஷ்மீ" என ஆயிரமாயிரம் பெயர்கள் உண்டு.

ஆனாலும் அவள் மகிழ்வது "தாயார்" எனும் சொல்லில் தான். அண்ட சராசரங்களையும் தனது கர்ப்பத்தில் தாங்குபவள் இவளே!! தானே அனைத்துமாய் நின்றவள்.

அப்பரதேவதையே தன்னை பாற்கடலரசனின் மகள் என காண்பிக்கின்றாள்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்கு கிறாள். இடது காலடியில் அசுர னின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலை களில் பதி னைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திரு முடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த ஆல யத்தை பத்ரகாளி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள்.

‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என் றால் அது மிகையல்ல.

மயிலை குருஜி இந்த ஆலயத்தை புனரமைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். அவர் விநாயகரை வேறு இடத்தில் மாற்றி யமைக்க செய்த முயற்சிகள் மட்டும் பயனளிக்க வில்லையாம். இறைவிக்கு முன் கல்லால் ஆன சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அபிஷேகங்கள் எல்லாம் இந்த  தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என நாளரு மேனியும் பொழு தொரு அலங்காரமுமாக அன்னை அருளும் ஆலயம் இது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு  மேலான ஆலயம் என்பதை கோலவிழி அம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்தி ருக்கிறார்கள். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழா வானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். ஐப்பசி மாதம் 14&ம் நாள் முதல் தை மாதம் முடிய மூன்று மாத காலங்கள் கதிர வன் தன் கிரணங்களால் அம்பிகையை வழிபடும் விதமாக கருவறை அமைப்பு உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது.

சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10&ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

கோல விழியம்மன் மயிலையில் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம் மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

பத்ரகாளியாக இந்த கோலவிழியம்மன் முதலில் மிக, மிக உக்கிரமாக இருந்தாள். குறிப்பாக அவளது கண்பார்வையில் அதிக உக்கிரம் இருந்தது. ஆதிசங்கரர்தான் இந்த அம்மனின் உக் கிரத்தை தணித்தார். சக்கரம் ஸ்தாம்பிதம் செய்து அவர் கோல விழியம்மனை சாந்த சொரூபினியாக மாற்றினார். அகோரிகள் இந்த தலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவம் இருந்து பூஜைகள் செய்து கோல விழியம்மனை வழிபட்டுள்ளனர். இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும்.

இந்த தலத்தில் ஆஞ்ச நேயர், சப்தகன்னிகள்,வராகி ஆகியோருக்கு தனித் தனி சன்னதி உள்ளது. வராகியின் வாகனமான ஆமையும் இங்கு பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆமைக்கு இளநீர் அபி ஷேகம் செய்து வழி பட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். 27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

எல்லோராலும் இந்த தலத்துக்குள் எளிதில் காலடி எடுத்து வைத்து விட முடியாது. கடைசி ஜென்மத்தில் இருப்பவர்கள்தான் இந்த தலத்தில் வந்து பணிகளை செய்ய முடியும் என்று தனசேகர் பூசாரி தெரிவித்தார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு கோல விழி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆடியில் தினமும் அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், ஆப்பிள், சாத்துக்குடி, இளநீர், பன்னீர், அபிஷேகப்பொடி, வெற்றிவேர், சந்தனம், மஞ்சள் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. வசதி, வாய்ப் புள்ள பக்தர்கள் இந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து கோல விழி அம்மன் அருளைப் பெறலாம்.

ஆடி மாதத்தில் இந்த தலத்தில் நடக்கும் தீச்சட்டி ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றது.
*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.*

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.சாக்தம்
3.வைஷ்ணவம்
4.கணாபத்யம்
5.கெளமாரம்  
6.செளரம்         
7.ஸ்மார்த்தம் 

_சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,_
*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,_
*96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்...._
*18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்*

_கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும்_ *தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!*

_செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது_ *தமிழ்நாட்டில் தான்...!!*

_சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்...._
*பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!*

மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்....
*ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்*

_பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,_
*ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!*

_ஆழ்வார்கள்....,  நாயன்மார்கள்.....,_
*தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!*
_பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_*12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது*
*தமிழ்நாட்டில் தான்.*

_சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்.*

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!

_இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே_
*தமிழ்நாடு தான்...!!*

_இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது_
*தமிழ்நாட்டில் தான்....!!!*

தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி...!!!

"பகிருங்கள் அன்பர்களே"...!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....!!

தென்னாடுடைய சிவனே போற்றி..!!
நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
"புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் நாம் பார்ப்பது இல்லை; தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டுதலை, நான்குதலை, பசுமாடு பூஜித்தது என்றுவரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? இது எப்படி சாத்தியம்? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லிவிடுகிறோம்" - பெரியவா.

ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும். தேகம், மனம், சாஸ்திரம், ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து நாம் சாப்பிடுகிறோம். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறோம். அதுபோல நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன. அதனால் பாரபட்சங்களை உதறிவிட்டு, தத்துவத்தில் மனத்தைச் செலுத்தி இறைவனுடன் ஒன்றிவிட வேண்டும்.

இதமான அன்பு வணக்கம் 🌹
பத்ராசல ராமதாசர்

1603-ம் ஆண்டு ஆந்திராவின் கொல்ல கொண்ட பல்லம் (தற்போதைய கோல்கொண்டா பகுதி) என்ற இடத்தில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் கோபண்ணா
என்ற இயற்பெயரைக்கொண்ட ராமதாசர்.

சிறுவயது முதலே ராமாயணக் கதைகளில் ஆர்வம் கொண்ட கோபண்ணா,
ஸ்ரீ ராமபிரானின் மீது பக்தி கொண்டு வளர்ந்தார்.

அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு
ராமரின் மேல் பஜனைப் பாடல்கள் பாடிக் காலம் கழித்து வந்தார்.

இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த ராமபக்தர் கபீர்தாசர்,

ராமதாசர் கனவில் வந்து
இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை கெட்டியாக பிடித்துக் கொள் என்று கூறினார்.

அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார்.
கோபண்ணாவுக்கு இராமதாசர் என்ற பெயரை சூட்டினார் கபீர்தாசர்.

பத்ராசலம் பகுதியில் வாழ்ந்ததால் 'பத்ராசலம் ராமதாசர்' என்று புகழப்பட்டார்.

ஒரு சமயம்,
ராமநவமி அன்று ராமதாஸரின் வீட்டில் ராம நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரது வீட்டில் பெரிய விருந்து நடந்தது.

அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது.

குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் குழந்தையை மறைத்து வைத்தார்.

எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

குழந்தையின் சடலத்தை
இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர்.

தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது.

எல்லாம் ராமரின் கருணை என்று ராமதாசர் மகிழ்ந்தார்.

அன்றிலிருந்து முழுக்க முழுக்க ராம தாசராகவே மாறி தனது சொத்துக்கள் முழுவதையும் ராம பக்தர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார்.

காலம் செல்ல செல்லச் செல்வம் குறைந்து வறியவரானார் ராமதாசர்.

அப்போதும் ராம பக்தர்களை உபசரிப்பதில் தவறவே இல்லை.

வறுமை வாட்டிய நிலையில் ராமதாசரை, அவரது  தாய்மாமன்கள் வற்புறுத்தி ஹைதராபாத் மன்னர் தானி ஷாவிடம் தாசில்தாராக பணிக்கு சேர்த்தார்கள்.

ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வரி வசூலித்து மன்னருக்கு அனுப்புவதே ராமதாஸரின் பணியாக இருந்தது.

பத்ராசலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள்.

அவளும் ராமனிடம் மிகுந்த பக்தி பூண்டவள்.

ஒரு சமயம் காட்டினுள் சென்ற டாமக்கா, ஒரு பாம்பு புற்றிலிருந்து ஒளி வெளிப்படுவதை கண்டு திகைத்தாள். உள்ளே தைரியமாகக் கைவிட்டுப் பார்த்தபோது, அவளுக்கு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் கிடைத்தன.

அவற்றை வைத்து அவளே ஒரு சிறிய கோயில் கட்டி வழிபட்டு வந்தாள்.

கோபன்னா நேர்மையில் சிகரமானவர். அதனால் எதிரிகளும் அவருக்கு அதிகம். அந்த எதிரிகளில் சிலர் இவரைத் தாக்கி காட்டில் போட்டு விட்டுச் சென்றனர்.

அச்சமயம் பாகால டாமக்கா அங்கு வந்து கோபன்னாவிற்குத் தேவையான சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினார்.

அப்போது அவள் உருவாக்கிய சிறிய ராமர் கோயிலைக் கண்ட கோபன்னா மிகவும் பரவசமடைந்தார்.

ராமபக்தியால், தன் மனைவி, மகனுடன் காட்டிற்கு வந்து இந்த ராமரை பூஜித்து வந்தார்.

ராமர் ஆலயம் மிகவும் பழுதடைந்து இருந்தது.

அதைக்கண்ட ராமதாசர் கவலை கொண்டார்.

அதை சீர் படுத்த  மன்னரின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்ய ஆரம்பித்தார்.

ஆறு லட்சம் வராகன் பணத்தை செலவு செய்து ராமபிரானின் கோயிலை அழகாக புதுப்பித்தார்.

அரண்மனைக்கு பத்ராசலம் பகுதிக்கான வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த மன்னர் தானி ஷா கோபம் கொண்டார்.

ராமர் கோயிலை கட்ட அந்த பணம் செலவானது என்று அறிந்ததும் மேலும் சினம் கொண்டு ராமதாசரை கைது செய்தார்.

விசாரணைக்குப் பிறகு 12 ஆண்டுகள் சிறைவாசம் விதித்து ராமதாசரை சிறையில் அடைத்தார்.

சிறையில் மிக அதிகமான கொடுமைகளை அனுபவித்த போதும் ராமதாசர் ராமநாமத்தை சொல்லி வந்தார். 

12 ஆண்டுகளாக வதைபட்டு, ராமனை எண்ணி பல உருக வைக்கும் பாடல்களை பாடினார்.

நீயே இனி காக்க வேண்டும் என்று கதறி சரண் அடைந்தார்

12 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமதாசரை காக்க ராமபிரான் திருவுளம் கொண்டார்.

மன்னர் தானி ஷா முன்னிலையில் ராமபிரானும், அவரது தம்பி லட்சுமணரும் வியாபாரிகளைப்போல வேடமிட்டு வந்தனர்.

ராமதாசர் கட்ட வேண்டிய ஆறு லட்சம் வராகன் பொன்னையும் மன்னரிடம் கட்டி விட்டு அதற்கான ரசீது சீட்டையும் பெற்றுக்கொண்டனர். பணம் கட்டிய ரசீதை ராமதாசர் அருகில் வைத்து விட்டு சென்றனர்.

மன்னர் தானி ஷா பணம் அளித்தது ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் மகிழ்ந்தார்.

உடனடியாக ராமதாசரை விடுவித்தார்.

மன்னருக்கு காட்சி தந்த ராமபிரான், தனக்கு காட்சி தரவில்லையே என்று ராமதாசர் மனமுருகி பாடலைப்பாட, அவருக்கு ஸ்ரீராமர் காட்சி தந்து,

,
"பக்தனே ஆனாலும் மக்கள் பணத்தினை எடுத்து மன்னருக்கு அறிவிக்காமல் தனக்கு கோயில் காட்டியது தவறு என்றும், அதனாலேயே சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது"

என்றும் கூறினார்.

ராமரின் திருக்காட்சியை தரிசித்த நாள் முதல் ராமதாசர் ஊர் ஊராக சென்று ராமநாமத்தை பாடி மக்களை பக்தி வழிக்கு திருப்பினார்.

மக்கள் அவரை அனுமனின் அவதாரம் என்று எண்ணி வணங்கினர்.

பதினேழாம் நூற்றாண்டில் ராமநாமத்தை பரப்பி மாபெரும் சமயப்புரட்சியை உண்டாக்கியவர் பத்ராசலம் ராமதாசர்.

இன்றும் அவரது நெஞ்சை உருக்கும் பல பாடல்கள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது.

பத்ராசல ராமபிரான் கோவில் பற்றி...

பத்ராசல ராமபிரான், தான் திருமால் அவதாரம்தான் என்பதை விளக்கும் வகையில்  சங்கு, சக்கரம் ஏந்தி ஒரு கையில் அம்பு, மற்றொரு கையில் வில்லுடன் சீதா தேவியை தனது மடியில் இருத்தி அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார்.

அருகில் இளையவன் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார்.

இந்த மலைப்பகுதியில் பத்ரா என்ற முனிவரின் ஆஸ்ரமம் இருந்ததால், இத்தலம் பத்ராசலம் என்றாயிற்று.

இத்தலத்தில் ஸ்ரீராமநவமி மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடி ராமபிரானின் திருவருளைப் பெறுகிறார்கள்.

நிஜாம் காலத்தில், பெருமாளுக்கு நிஜாமே ஆபரணங்கள், வஸ்திரங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து விழாவைச் சிறப்பாக நடத்த உதவி வந்தார்.

இன்றும் இத்தலத்தில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் தர்பார் சேவை பிரசித்தி பெற்றது. ராமச்சந்திர மூர்த்திக்கு ராஜ உடைகள் அணிவிக்கப்பட்டு, தர்பாரில் எழுந்தருளச் செய்து அன்றைய கோயில் வருமானம் முறைப்படி எண்ணப்படும்.

அப்போது ராமதாஸரின் கீர்த்தனைகள் இசைக்கப்படும்.

ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா?
ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா?
மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?
த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?
அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?
சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?
சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?
கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?
கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?
தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?
அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?
*காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. 

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. 

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.


■ யார் காரணி ■■■

ஒரு துறவி இருந்தார், அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார்.... எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார். அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.

அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.....

இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே, பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது. துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

மேலும் நம் குருநாதருக்கு, தான் ரொம்ப அழகு என்று நினைப்பு!  அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.

சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .

இவ்வாறு இருக்க,....

ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.
அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!
"சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர்" ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன?  என்று அவரிடம் கேட்டான் மன்னன்.

துறவி சிரித்தார்., இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது,  அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான  காரணத்தை மன்னனிடம் சொன்னார் .

◇◇ எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.
◇◇ எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன்.

◇◇ இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன். அதில்  நான் தெரிவேன். இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன்.

◇◇ கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,  பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன். அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே  என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.

◇◇ சரி,  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன்.

◇◇ எனவே, என் பிரச்சினையை யாரோ   வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல்,  நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன்.

எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும், தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி.

◇◇ அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும்.

◇◇ வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல....,
மிகவும் எளிமையானது....

●அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.●
பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் கோயம்புத்தூர் அருகே உள்ள மருதமலையில்
ஜோகி என்ற மலை வாழ் சமூகத்தில்
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.

சிலர் திருகோகர்னத்தில் பிறந்ததாக
சொல்கின்றனர்.

மருதமலை சுற்றி இருந்த காடுகளில் அதிக அளவு விஷப்பாம்புகள் இருந்தன.
அவற்றை பிடிப்பதும்
அடித்துக் கொள்வதுமாக அந்த இளைஞன் இருந்தான்.

ஊரினுள் யாருக்காவது பாம்பு கடித்தால்
ஔடதம் எனும் மூலிகை வைத்தியம் கொண்டு அவர்களை காப்பாற்றுபவராகவும் இருந்தார்.

யாரும் பிடிக்க முடியாத பாம்புகளையும் மிக அனாசியமாக பிடித்தார்.

மருத்துவர்கள் தங்களுக்கு
நாகமணி பாம்பு உயிரோடு மருத்துவத்திற்காக வேண்டும்
அந்த பாம்பு
மலையுச்சியில் இரவில் மட்டுமே வெளியே வரும்.
தன் தலையில் நாக மணிக் கல்லை
வைத்து இறைதேடும். அந்த பாம்பு இதுவரை
ஒருவரையும் தீண்டாத பாம்பு வயது முதிர்ந்தவுடன் அளவில் சிறியதாகி
பன் மடங்கு விஷ தன்மையுடன் இருக்கும்.

ஆகவே நீ மிக ஜாக்கிரதையாக பிடித்து வந்தால் அதிக அளவு பணம் தருகிறோம் என்றனர்.

அது கேட்ட பாம்பாட்டி இளைஞன் இரவு நேரத்தில் மலை உச்சிக்கு சென்று நவரத்தின பாம்பை
தேடினார்.

ஓர் புதர் மறைவில் நின்று
பாம்பு தென்படுகிறதா என பார்த்துக்கொண்டு இருக்கும் போது
சிறிய ஒளி தெரிந்தது
அந்த ஒளி அந்த இளைஞனை நோக்கி வர வர அது பெரியதாக ஆகிக்கொண்டே இருந்தது.

பாம்பாட்டி இளைஞரின் அருகே வந்து
நின்ற ஒளிக்கதிரின் நடுவே ஓர் விபூதி பூசிய மனிதர் இளைஞனை பார்த்து பயங்கரமாக சிரித்தபடி
நின்றார்.

காடே அதிர்ந்தது.

இளைஞன் நடுங்கியபடி அவரை பார்த்தபடி இருக்க

அவர் இளைஞனை பார்த்து
ஒரு நாகமணி கல்லை சுமந்திருக்கும் பாம்பை தேடி நீ வந்துள்ளாய்
ஆனால் உன் உடலிலே நவரத்தின கல்லை தாங்கிய அற்புத பாம்பை
நீ அறியாமல் இருக்கிறாயே என்றார்.

எனக்கு நீங்கள் சொல்வது எதுவும் புரியவில்லை என்றான்.

"அந்த அபூர்வ நாகம் அனைத்து மனிதர்களுக்குள்ளும் உண்டு!
குண்டலினி என்பது அதன் பெயர்

ஆனால்
உன்னைப்போலவே பலரும் தங்களுக்குள் இருக்கும் பாம்பை உணர்வதில்லை!

அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள்
என்றார் சட்டை முனி.

சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன்

“சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்

அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதப் படைப்பு!

இந்த உடலுள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்று கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.

அவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், ''பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய்! எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய்! உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி!" எனச் சொல்லி மறைந்தார் சித்தர் சட்டைமுனி!

இவ்விருவரின் சந்திப்பு பற்றி
போக முனிவர் தம் போகர் 7000-ல்,

புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.

இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான்.

தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான்.

தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார்.

என்ன வாழ்க்கை இது…

நாகரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும் என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார்.

தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார்.

ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை.

அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார்.

என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார்.

இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார்.

வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.

ஒரு நாள்‌ வான்‌ வழியே உலா வந்து கொண்டிருந்தார் பாம்பாட்டி சித்தர்‌

மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார்.

இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது.

அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார்.

ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை.
இறந்து போனார்.

கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள்.

அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர்.

அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது.

பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது.

உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார்.

பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர்.

பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்

உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அரசன்‌ எழுந்தான்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சி ஆனால்‌ அரசன்‌ பிழைத்துக்‌ கொண்டாரே தவிர அவர்‌ செய்கைகள்‌ ஏதும்‌ திருப்திகரமாக இல்லை.

மக்களின்‌ விமர்சனம்‌ காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள்‌. அவள்‌ மனதில்‌ சந்தேகப்‌ புயல்‌ மெல்ல விஸ்வரூபம்‌ எடுத்தது.

அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள்‌ கேட்கத்‌ தொடங்கினாள்‌ ராணி.

"ஐயா! தாங்கள்‌ யார்‌ உண்மையில்‌ எங்கள்‌ அரசரா அல்லது சித்து வித்தைகள்‌ புரியும்‌ சித்தரா?" என்று. "அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப்‌ போக்குவதற்காகவே நான்‌ மன்‌னனது உடலில்‌ புகுந்திருக்கிறேன்‌. என்னுடைய பெயர்‌ பாம்பாட்டிச்‌ சித்தன்‌ என்றார்‌. அரசி உண்மையை உணர்ந்தாள்‌ கைகளைக்‌ கூப்பி எங்களுக்குத்‌ தெய்வமாக வந்து உதவி செய்தீர்‌ நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌ கடைத்தேறும்‌ வழியை உபதேசியுங்கள்‌ என்று வேண்டினாள்‌. அடுத்த கணம்‌, அரசரிடமிருந்து பலப்‌பல தத்துவப்‌ பாடல்கள்‌ உபதேசமாக வந்தன. அவைகளைக்‌ கவனமாக அனைவரும்‌ கேட்டனர்‌.

அதே சமயத்தில்‌ இறந்த அரசனுடைய ஆன்மா பரகாயப் பிரவேச முறையில்‌ இறந்துகிடந்த பாம்பின்‌ உடலில்‌ புகுந்து வெளியே ஓடத்தொடங்கியது.

அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறை தவறிய சிற்றின்பத்தில்‌ அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல்‌ கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது.

அப்போது மன்னன்‌ உடலிலிருந்த சித்தர்‌ அந்த பாம்பைப் பார்த்து 'மன்னா! இன்னும்‌ உன்‌ ஆசைகள்‌ அடங்கவில்லையா?' என்று கேட்க அந்தப்பாம்பும்‌ சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர்‌ அந்தப்‌ பாமபைப் பார்த்து ஆடு பாம்பே என்று முடியும்‌ 129 பாடல்கள்‌ அடங்கிய ஒரு சதகத்தைப்‌ பாடி முடித்தார்‌.

அந்த சதகம்‌.

கடவுள்‌ வணக்கம்‌,

குருவணக்கம்‌,

பாம்பின்‌ சிறப்பு,

சித்தர்‌ வல்லபம்‌,

சித்தர்‌ சம்வாதம்‌,

பொருளாசை விலக்கல்‌

பெண்ணாசை விலக்கல்‌,

அகப்பற்று நீங்குதல்‌

என்னும்‌ எட்டு தலைப்புகளில்‌ எளிய தமிழில்‌ பாமரரும்‌ புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில்‌ சென்று சித்தி அடையும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ இந்த ஞான நூலைப்‌ பாடி முடித்துவிட்டு அரசன்‌ உடலை விட்டு வெளியேறியவுடன்‌ கல்ப உடலில்‌ புகுந்து தம் ‌சித்தர்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அரசர்‌ உடலிலிருந்து சித்தர்‌ வெளியேறினார்‌. அரசர்‌ உடம்பு கீழே விழுந்தது. சித்தர்‌ உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்‌ தொடங்கினாள்‌. அரசர்‌ உடலில்‌ இருந்து வெளியேறிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ தான்‌ பத்திரப்படுத்தி வைத்திருந்த தன்‌ பாம்பாட்டி உடலில்‌ புகுந்தார்‌.

பாம்பாட்டி சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
பாம்பாட்டி சித்தர் வைத்தியம்

ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

மருத மலையில்‌ முருகன்‌ சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்‌ சித்தர்‌ குகை என்று ஒரு குகைக்‌ கோவில்‌ உள்ளது.

இவர்‌ தவம்‌ செய்த குகை மருதமலையில்‌ இன்னமும்‌ இருக்கிறது.

பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது

இவர்‌ மருதமலையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, துவாரகையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, விருத்தாசலத்தில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌ கூறுகின்றனர்‌.

மூன்று தலங்களிலும்‌ இவரது நினைவிடம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது.

''தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே! - சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! நெளிந்தாடு பாம்பே! - சிவன்
அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே

மன்னராக வந்த யோது பாடிய பாடல்களில் சில...

“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”

“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”

“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”

“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர்
ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல்
உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே”
*திருக்கடையூர் அபிராமி அழகு முகம்*🚩
🌷🥥🪔🥥🪔🥥🪔🥥🪔🥥🌷
திருக்கடையூரில் அபிராமி அழகு கோலத்தில் காட்சியளித்து, பக்தர்களை காத்து வருகிறாள். கருவறைக்குள் மேற்கு நோக்கி அமுத கடேசுவரர் மகாலிங்கத் திருமேனியராக காட்சி தருகின்றார். நீண்ட ஆயுளைப் பெற்று வாழ விரும்புவோர் இப்பெருமானை வழிபடுகின்றனர்.

மேற்கு நோக்கிய இத்திருச்சன்னிதிக்கு எதிரில் வெளிப் பிராகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு நோக்கித் திருக்கோயில் கொண்டு திகழ்கின்றாள். அன்னையின் திருஉருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி உயர பீடத்தில் நான்கு கரங்களோடு நின்று அருள்கிறாள்.

இரண்டு கரங்கள் அபய வரத முத்திரைகள் தாங்க, இரண்டு கரங்கள் மலரும் மாலையும் தாங்கித் திகழ்கின்றன. அன்னையின் திரு நயனங்களோ அருளை வாரிப் பொழிகின்றன.

நீண்ட ஆயுளைப் பெற்று விட்டால் போதுமா? இன்னலற்ற இன்ப வாழ்வினைப் பெற வேண்டாமா? வாழும் நாள் சிறிதேயாயினும், அதில் இன்னலற்று வாழத்தானே எல்லோரும் விரும்புகின்றனர். அந்த இன்னலற்ற- நோய் நொடியற்ற இன்ப வாழ்வினை அன்னை அபிராமி வழங்குகிறாள்.

நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வினையும் பெற வேண்டும் என்பதனை உணர்த்தும் பொருட்டே அன்னையும் அண்ணலும் எதிர் எதிரே எழுந்தருளியுள்ளனர். ஈசனை வழிபட்டுத் திரும்பும் அந் நிலையிலேயே அன்னையையும் வழி பட வேண்டும் என்பதன் பொருட்டே நம் அன்னையும் அப்பனும் எதிர் எதிரே நின்று அருளுகின்றனர்.
புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார்.

துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது.

• பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின.
• அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது.
• சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது.
• நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது.
• அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர்.
• முகத்தில் பிரகாசம் வீசியது.

இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயித்தான் அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரியவில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.  எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள்.

சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும்.
இதுதான் முறை.

• அகாரம் என்பது பிரம்மனையும்,
• உகாரம் விஷ்ணுவையும்,
• மகாரம் என்னையும் குறிக்கின்றன.

எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.

பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...!

ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள்..

#சிவாய_நம:
 சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்?

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-

அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.

லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
வீடு குடியேறும்போது பால்காய்ச்ச வேண்டும் என்று கூறப்படுவதன் நோக்கம் என்ன?

க்ஷீரே சுக்ராய நம: என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம்.

ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் ரீதியாக சுக்கிரனை தனகாரகன் என்றழைக்கிறார்கள்.

பசுமாட்டினுடைய மடியினில் மகாலட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வார்கள். அந்த மடியிலிருந்து கறக்கப்படும் பால், மகாலட்சுமியின் பிரசாதமாகக் கருதப்படுகிறது.

நாம் குடியேறும் வீட்டினில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், செல்வம் குறைவின்றி நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காகவும் வீடு குடியேறும்போது பால் காய்ச்சப்படுகிறது. தற்காலத்தில் ஒரு சிலர் பால் காய்ச்சுவதற்கு பெரிய பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் சாஸ்திரத்திற்காக சிறிதளவு பாலை மட்டும் காய்ச்சுகின்றனர். அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லை.

பாத்திரத்தில் இருந்து பால் பொங்கி சிறிதளவு வெளியே வழிகின்ற அளவிற்கு பாலை வைக்க வேண்டும். அதற்காக முற்றிலுமாக பால் பொங்கி வெளியேறிவிடவும் கூடாது. பால் பொங்கி பாத்திரம் நிறைவது போல் வீட்டினில் செல்வம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கணபதி உபநிஷத்தில் வரும் ஒரு சில வரிகளும் அதன் அர்த்தமும்.

அவ த்வம் மாம்
அவ வக்தாரம்
அவ ச்ரோதாரம்
அவ தாதாரம்
அவ தாதாரம்
அவ அநூசானமவ சிஷ்யம்
அவ புரஸ்தாத்
அவ தக்ஷிணாத்தாத்
அவ பச்சாத்தாத்
அவ உத்த்ராத்தாத்
அவ ச ஊர்த்வாத்தாத்
அவ ஆதார்தாத்
ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமன்தாத்

பரம் பொருளே என்னைக் காப்பாற்று. என் னுடைய குருவைக் காப்பாற்று. என்னுடைய குருவிடம் வேதம் கற்ற அனைத்து மாணவரை யும் காப்பாற்று. வேதத்தைத் தம் சிந்தையிலே வைப்பவரைக் காப்பாற்று. மெய்ப் பொருளே! உன்னை வணங்க எனக்கு வழிகாட்டியவரைக் காப்பாற்று. இந்த உபநிஷதத்தைக் கற்பவரைக் காப்பாற்று. அனைவரையும் காப்பாற்று.

பல்வேறு திசைகளிலிருந்தும் என்னை நோக்கி வரும் துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று. உன்னை நான் சரணடைந்து விட் டேன். காப்பாற்றுவது உன் கடமை !!
கடவுள் படையலை சாப்பிடுவாரா?

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”. இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?” சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
போதிவனம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்றினால் இலைகள் சலசலத்துக் கொண்டிருந்தன. போதிசத்துவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

       போதிசத்துவர் தியானத்திலிருந்து கண்விழித்தார். ஒரு நடுத்தர வயது மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். போதிசத்துவர் அவனைப் பார்த்து, “நீ யாரப்பா? உன் பெயர் என்ன?” என்று அன்புடன் கேட்டார். அம்மனிதன் தன் பெயர் அபிநந்தன் என்று கூறினார்.  “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். 

        “ தேவா! நான் ஏழை. எனக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உண்டு. பந்தபாசங்களில் உழன்று நான் சித்தரவதைகளை அனுபவித்து விட்டேன். தாங்கள் தான் என்னைத் துறவியாக்கி ஞானம் அருள வேண்டும்” என்று வேண்டினான். போதிசத்துவர் யோசித்தார். பிறகு அவனைப் பார்த்து கேட்டார். “அபிநந்தா! இந்த மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் ஏன் ஆடுகின்றன என்று தெரியுமா? காற்று வந்து மோதுவதால் தான். பாசம் என்னும் காற்று மோதும் போதெல்லாம் மனித இலைகள் இப்படித்தான் ஆடுகின்றன. முதலில் உன் மனதிலிருந்து பாசத்தை அறவே ஒழித்து விட முடியுமா?”

              அபிநந்தன் “முடியும் பிரபு” என்று வாக்களித்தான். “சரி அப்படியென்றால் இன்று முதல் நீ போதிவனத்திலேயே தங்கலாம்” என்று கூறினார். அபிநந்தன் அங்கேயே தங்கினான். சில நாட்கள் சென்றன. ஒருநாள் போதிசத்துவர் குளிப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தவர் அபிநந்தனைக் கவனித்தார். அவனுடன் ஒரு நாய் இருந்தது.

               “அபிநந்தா! இது என்ன நாய்?” என்று விசாரித்தார். அதற்கு அவன் “பிரபு! இந்த நாய் என்னை விட்டு விலகுவதே இல்லை. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்” என்று வேண்டினான். போதிசத்துவர் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

             சில நாட்கள் சென்றன. அபிநந்தனோடும் அந்த நாய்க்குட்டியோடும் ஒரு சிறுவன் இருப்பதைக் கவனித்தார். அபிநந்தனிடம் விசாரித்தார். அதற்கு அவன், “பிரபுவே! இவன் என் மகன். இந்த நாயை விட்டு அவனால் இருக்க முடியவில்லை. ஆகையால் இவனும்” என்று இழுத்தான். போதிசத்துவர் சிரித்துக் கொண்டே போய்விட்டார். பின் ஒரு நாள் போதிசத்துவ குளத்தருகே அபிநந்தனுடன் ஒரு பெண்ணும் இருக்கக் கண்டார். அவனிடம் “யார் இந்தப் பெண்மணி” என்று விசாரித்தார். அதற்கு அவன் “குருவே! இவள் என் மனைவி. மகனை விட்டு அவளால் ஒரு வினாடி கூட இருக்கமுடியவில்லை. ஆகையால் அவளையும்” என்று இழுத்தான்.

             போதி சத்துவர் சிரித்துக் கொண்டே இரண்டு பாத்திரங்களை எடுத்தார். ஒன்றிலே நிறைய பண்டங்கள் இருந்தன. ஒன்று காலிப் பாத்திரம். இரண்டையும் தண்ணீரில் வீசினார். பண்டங்கள் நிரம்பி இருந்த பாத்திரம் அமிழ்ந்துவிட்டது. காலிப் பாத்திரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

              போதி சத்துவர் சொன்னார் “கனமான பாத்திரங்கள் அமிழ்ந்து விடுகின்றன. காலிப் பாத்திரங்கள் மட்டுமே மிதக்கின்றன. காலிப் பாத்திரமே ஞானப் பாத்திரம். கனத்த பாத்திரம் பாசப் பாத்திரம்.”

               “அபிநந்தா! உதிர்ந்து போக விரும்பும் ரோமங்கள் உதிர்ந்து போகின்றன. உதிர விரும்பாத ரோமங்கள் நரைக்கின்றன. உதிர்ந்து விட்ட ரோமங்கள் ஓடிவிடுகின்றன. உதிராத ரோமங்கள் தலையில் இருந்த கொண்டே கேலி செய்கின்றன. விலக்க முடியாத பந்தங்களும் அப்படியே. உன் இதயம் பாசத்துக்காகவே படைக்கப்பட்டது. சித்ரவதை என்பது அதற்கு நீ கொடுத்தே தீரவேண்டிய விலை. போய்வா” என்றார்.

என்ன ஒரு பாடம் !!!
கடவுள் எனபது என்ன? கட -- உள் (வேதாத்திரி மகான் என்கின்ற புத்தகத்தில் இருந்து ) சில சாரம் ஒரு தொகுப்பு பதிவு. என்னுடைய எழுத்தும் உண்டு நண்பர்களே !!!!

முன்பு நான் பதிவு செய்த  இந்த கட்டுரையை என்னுடைய புதிய நண்பர்களுக்காக மீண்டும் பதிவு இடுகின்றேன்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன்  அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.

கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.

சரி விசயத்துக்கு வருவோம்.

உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?

என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.

சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.

அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே.

நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !

உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?

என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.

பாருங்க மக்கள் எப்படின்னு??

ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???

செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??

தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,

உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க.

உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க.

திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.

கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,

நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி.

செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.

இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....

கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்
தமிழ்நாடு இராமனாதபுர மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கை

அதில் முக்கியமான மூன்று விஷயங்கள்.

1. இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

2. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது.

3. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.

எனவே இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுபவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த எஸ்ரா சற்குணம் " இந்தியா கிறித்துவ தேசம்" என்று கூறித்திரிகிறாரே, அவருக்கு ஒரு கேள்வி " யேசுநாதர் பிறந்து 2100 வருடங்கள்தானே ஆகிறது. இந்த இந்துக்கோவில் ( இன்னும் பல கோவில்கள் உள்ளன) 8000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறதே. அப்படியானால் இந்தியா எப்படி கிறித்துவ தேசமாகும்.?

சரி போறான் கிறுக்கன் என்று ஒதுக்கிவிட்டு அக்கோவிலின் சிறப்பம்சங்களை பாருங்கள்.

*உலகின் முதல் சிவன் ஆலயம்*
*அதன் சிறப்பு தகவல்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.

நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.

*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.

மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

*இந்து மதத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* இது உண்மையிலும் உண்மை..

அதே சமயம் நம் இந்து மதத்தை போற்றி பாதுகாப்பதும், நம் இந்து மதத்தின் வரலாற்று உண்மையை பிறருக்கு தெரிய படுத்துவதும் நம் கடமை.

*ஒம் நம சிவாயா*
#பிதாமகர்

களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜூனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜூனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜூனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.
போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜூனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.
மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.

இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது.
தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே #பீஷ்மம்.
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே #பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார்.
தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே #பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.

உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது #மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே #மண்தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும்.

எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க.

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது.

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா.
பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..

மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ?
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன்.

பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன்.
நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்,

மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது.
மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும்.

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது.

எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜூனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜூனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜூனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.

வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை..!!!