சனி, 18 ஜனவரி, 2014

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

மூலவர்:காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்:விசாலாட்சி
தல விருட்சம்:வேப்பமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.

தல சிறப்பு:வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.

பொது தகவல்:சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள் பைரவர், சூரியன் சந்திரன் , ஜேஷ்டாதேவி லிங்கோத்பவர் ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சிளிக்கின்றனர்.

பிரார்த்தனை:பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:சில பெண்கள்வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும் சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும் . இப்படி பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

நவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

இத்தலத்தில் உள்ள க்ஷத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும் .ஒரு வேப்ப மரத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார் அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.

தல வரலாறு:அயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார் ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றார் எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.

நவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா சரஸ்வதி காவேரி கொதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர் மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனிதநீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகா மக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கும் அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.
அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:கொற்றவாளீஸ்வரர்
அம்மன்/தாயார்:நெல்லையம்மன்
பழமை:500 வருடங்களுக்குள்
ஊர்:கோவிலூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி

தல சிறப்பு:மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் கோவிலூர், சிவகங்கை.போன்:+91 94892 78792, 94424 39473, 90435 67074.

பொது தகவல்:இக்கோயிலில், வீணை சரஸ்வதி, சர்வ அலங்கார சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யõணம், ரிஷபவாகனத்தில் சிவபார்வதி, மயில் மீது சண்முகர், வீரசேகர பாண்டியன் ஆகிய சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:வேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:காவல் அம்பிகை: சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். அங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

சிறப்பம்சம்: கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றிவந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், ÷காவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.

தல வரலாறு:திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர்புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார். காட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த அந்தணர், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன்வந்தான். அப்÷பாது புலியும், அந்தணனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது. மன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர். மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனஸ்வரர் என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.