செவ்வாய், 24 செப்டம்பர், 2019

*பசுவின் பால் சைவமா அசைவமா ?*

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது.

அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.

இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது.

அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே.

முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம்.

பால் அப்படியல்ல.

பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.

ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.

பசுவுக்கு நான்கு மடு இருக்கும்.

இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.

பசும்பால் மனிதனுக்கு (சத்வ)சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது.

அது புனிதமானதும் கூட.

பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

 பஞ்ச கவ்யம் (பால்,தயிர்,நெய்,பசும்சாணம்,பசுங்கோமியம்) விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்கிறோம்
இதிலிருந்தே புரியாத பலரும் பால் சைவமா அல்லது அசைவமா என்று புரிந்து கொள்ளலாம்.

எது எப்படி புரிந்து கொண்டாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு எதிராக கோஷம் போட ஒரு கோஷ்டி இருந்து கொண்டுதான் இருக்கும்.

*பசு காயத்ரி மந்திரம்:-*

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு
பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக்
கொண்டவளாகவும், இருக்கிறாள்.

பசுவை அடிக்கவோ, விரட்டவோ
கூடாது. பூஜிக்க வேண்டுமென
வேதம் சொல்கிறது.

பிரும்ம சிருஷ்டியில்
உலகம் உய்ய முதலில்
பசுவைப்படைத்து அதன் உடலில்
பதினான்கு உலகையும் முப்பத்து
முக்கோடி தேவர்களையும்
இருக்கச் செய்தார் பகவான்

அதில் முதலில்
வந்தவர்களான தர்மராஜனும்
காலதேவனும்தான் முகத்தில்
இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும்
குடியேறினார்கள். இதில் இரண்டு
பேர்கள் தாமதமாக வந்தார்கள்.

அவர்கள் மஹாலட்சுமியும்
கங்கையும். பசுவின் உடலில்
இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை
மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம்
கொடுத்தால் போதும் என்று
கெஞ்சினார்கள்.

பசுவும்,
தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு
அனுதாபம் இருக்கிறது. ஆனால்
இடமே இல்லையே, ஒன்று
வேண்டுமானால் செய்யுங்கள், என்
உடலிலிருந்து வரும் சாணம்,
கோமூத்ரம் இரண்டும் யாருக்கும்
சொந்தமாகவில்லை.

நீங்கள்
விரும்பினால் அதில் இருக்கலாம்
என்று சொல்ல லட்சுமியும்
கங்கையும் மிகுந்த
சந்தோஷத்துடன் அந்த இடத்தில்
வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அதனால் இன்றைக்கும் பசுவின்
பின் புறத்தில் லட்சுமியும்,
கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.
அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல
பாபங்களையும் போக்கி லட்சுமி
கடாட்சம் அளிக்கக் கூடியது
என்கிறது சாஸ்திரம்.

ஹரே கிருஷ்ண

*பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.!*

பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,
 *முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

 *கொலை களவு செய்வதால் உண்டாகும்
  பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

 *நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

 *பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

பசுவும் புண்ணியங்களும்.....
*******************************

 *பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

 *பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

 *பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

 *பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

 *பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

`மா’ என்று பசு கத்தும் ஓசை..
அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

 *பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

 *மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

 *ஒருவர் இறந்த பின் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் கலந்து ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.

 *பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

 *உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
புரட்டாசி ஸ்பெஷல் !

நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்.!!

கண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி_மூட்டை தூக்கும்_தொழிலாளி. காலையில்_வேலைக்கு போனால்_இரவு நேரமாகி_தான்_வீட்டுக்கு வருவார்.

வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் மிகவும் குறைவு.
கண்ணனின்  மனைவி சீதை, நரசிம்மரின் பக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள். ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்.தன் கணவரிடம், "என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன், நெற்றியில்திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன்" என்பாள். (திருமண் என்பது இங்கு நாமம், விபூதி அல்லது குங்குமம் போன்றவற்றை குறிக்கிறது)

அதற்கு கண்ணன், ‘மனுஷன், காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்’என்பார். அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார் .அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, "நீங்க! திருமண்  இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில்,திருமண் இட்டுள்ள, ஒருவர் முகத்திலாவது, விழிச்சிட்டு போங்க’', என்றாள். கண்ணன் ஒப்புக்கொண்டார்...அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி, தினமும் காலையில் நீராடி, நெற்றியில் திருமண் அணிந்து, வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.

கண்ணன், தினமும், கோவிந்தன்  முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு  செல்வதை வழக்கமாக்கி கொண்டார். ஒருநாள் காலையில் ,கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார். அன்று ஏகாதசி என்பதால்,  கோவிந்தன், நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு, வயலுக்கு போய்விட்டார்.  வயலில் ஏர் ஓட்டிய  போது, அவரது காலில்  ஏதோ தட்டுப்பட்டது. அவ்விடத்தை தோண்டி பார்த்தார். அங்கு, இரண்டு பானைகளில், தங்க காசுகள் இருந்தன. அவர், அந்த பானைகளை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.

தான் புதையல் எடுத்ததை ,கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன், கண்ணனிடம் ஒரு பானையை கொடுத்து, சம அளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார். கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்;புதையல் அரசாங்கச் சொத்து. இதை, மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம்’, என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.

அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், அவர்களுக்கு பரிசு வழங்கினான். அவர்களின் வறுமை நீங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கண்ணன், தன் மனைவியிடம் போய் நடந்ததை கூறினார். அவரோ, திருமண் இட்டவரை தினமும் பார்த்ததற்கே உங்களுக்கு இவ்வளவு நன்மை என்றால், நீங்களும் திருமண் அணிந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்றார்.  உடனே, நெற்றியில் திருமண், விபூதி, குங்குமம் தரிப்பதன் அர்த்தம் தெரிந்து கொண்டு, அதை தினமும் கடை பிடிக்க துவங்கினார்.நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும். நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட, வாழ்வின் நிலை உயர்ந்து விடும்...

கோவிந்தா ஹரி கோவிந்தா !
அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.

ஸ்தல சுத்தி: - தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.


அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.


ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர்.


அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன; என்று சொல்லி கருப்பு எள்ளை இந்த இடத்தில் கையை திருப்பி இறைக்கவும்.


இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் ---பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் --இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும்.


உபவீதி--பூணல் வலம். தீர்த்தத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டிய மந்திரம்.


அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ


நான் மஹா விஷ்ணு ஸ்மரனையுடன் தெளிக்கும் இந்த தண்ணீர் இந்த இடத்தை பவித்ர மாக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றும். வாய் மந்திரத்தை சொல்லும்.


ப்ராசீனாவீதி- பூணல் இடம்;


ஸம்ப்ரதாயப்படி தர்பைகளை தெற்கு நுனியாக போட்டு கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிற மற்ற விரல்களால் எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்ய வேண்டும்.


ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச


ஓ பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.


அஸ்மின் கூர்ச்சே ---------கோத்ரான்--------ஶர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ----------கோத்ரா:----------தா: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி.


என்னுடைய இந்த கூர்ச்சத்தில், எனது இந்த கோத்ரத்தை உடைய இந்த பெயர் உடைய வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்களான எனது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா , எனது இந்த கோத்திரத்தை உடைய இந்த பெயர்கள் உடைய எனது தாய், பாட்டி, கொள்ளு பாட்டி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டுகிறேன். ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.


ஒரே கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்திரம் -------- பெயர்------- வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீ: மாதா மஹ, மாதுஹ் பிதாமஹ, மாதுஹ்ப்ரபிதாமஹீஸ் ச ஆவாஹயாமி. என்று சொல்லி ஆவாஹணம் செய்யும் வழக்கமும் உண்டு. குடும்ப ஸம்ப்ரதாயப்படி செய்யவும். சிலர் மற்றொரு கூர்ச்சத்தில் இம்மாதிரி ஆவாஹனம் செய்யும் வழக்கமும் உண்டு.


வட மொழியில் பிதா= தகப்பனார்; பிதா மஹர்-அப்பாவின் அப்பா; ப்ரபிதாமஹர்= அப்பாவின் தாத்தா; மாதா=அம்மா; பிதாமஹி=அப்பாவின் அம்மா; ப்ரபிதாமஹி= அப்பாவின் பாட்டி;


மாதா=அம்மா; மாதாமஹர்= அம்மாவின் அப்பா; மாத்ரு பிதாமஹர்-= அம்மாவின் தாத்தா; மாத்ரு ப்ரபிதாமஹர்= அம்மாவின் கொள்ளு தாத்தா. ஸ பத்னீ;= மனைவியுடன்.; பத்னி=மனைவி; மாதாமஹி=அம்மாவின் அம்மா;


மாத்ரு பிதாமஹி=அம்மாவின் பாட்டி; மாத்ரு ப்ரபிதாமஹி= அம்மாவின் கொள்ளு பாட்டி


ஆஸன மந்திரம்;-


ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்


அஸ்மின் ஸீதந்து மே பிதரஸ் ஸோம்யா: பிதா மஹா; ப்ரபிதா மஹா: ச அனுகைஸ்ஸஹ. என்று சொல்லி பித்ரு, பிதா மஹ, ப்ரபிதாமஹானாம் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹானாம், ஸ பத்னீக மாதா மஹ மாது; பிதாமஹ; மாதுஹு ப்ரபிதாமஹானாஞ்ச இதமாஸனம். மூன்று தர்பங்களை கூர்ச்சத்தின் கீழ் வைக்க வேண்டும்.


ஓ தர்பையே நீ ஒரு முறை என்னால் அறுக்கப்பட்டாய். உன்னை பரப்புகிறேன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுவான ஆஸனமாக இரு. இதில் அனுக்கிரஹ மூர்த்திகளான என் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா தங்களை சார்ந்தவர்களுடன் அமரட்டும்.


வர்க்க த்வய பித்ருப்யோ நம: ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி கறுப்பு எள்ளை கை மறித்து கூர்ச்சத்தின் மேல் போடவும். வர்க்கத்வயம்= இரண்டு வர்க்கங்க்கள்=அப்பா வர்க்கம்; அம்மா வர்க்கம்.ஏகம்-=ஒன்று; த்வே=இரண்டு; த்ரீனீ=மூன்று; சத்வாரி=நான்கு.


இரண்டு கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் செய்யும் குடும்ப வழக்க முடையவர்கள் இரண்டாவது கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்ரம், அம்மாவின் பெற்றோர் பெயர் சொல்லி ஆவாஹணம்., ஆஸனம், ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்று மறுமுறை சொல்லி போடவும்.


இடது காலை முட்டி போட்டுக்கொண்டு தெற்கு முகமாக ப்ராசீனாவீதியாய் தர்ப்பணம் செய்ய வேண்டும்.


யக்யம் முதலான கர்மாக்களை செய்தவர் உயர்ந்த பித்ருக்கள். ஒளபாஸனம் முதலிய ஸ்மார்த்த கர்மா செய்தவர் மத்யம பித்ருக்கள். கர்பாதானம் முதலான ஸம்ஸ்காரம் இல்லாதவர் அதம பித்ருக்கள்.


தற்காலத்தில் யாகம், யக்யம் செய்ய முடியாது. இதற்கு பதில் சுனந்து முனிவர் பவிஷ்யோத்திர புராணத்தில் திதி பூஜைகள் இம்மாதிரி செய்ய வேண்டும் என்று எழுதியதை பார்த்து திதி பூஜைகள் என்று வெளியிட்டு வருகிறேன். இதையாவது செய்து எல்லோரும் உயர்ந்த பித்ருக்கள் ஆக வேண்டும் என்ற அவாவில் முனிவர்கள் புராணங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எங்காத்து வழக்கம் இல்லை என்று சொல்லி கொண்டு தொலை காட்சியில் சீரியல் பார்த்து கொண்டு பொழுதை கழிக்கிறார்கள். இது மட்டும் அவாத்து பழக்கம்.


1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் தேனோஅவந்து பிதரோஹவேஷு.


பித்ருக்களில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு வகை படுவர். ஒரு வகையினர் அழைத்தால் மட்டும் வருவர். மற்றொரு வகையினர் உங்கள் வீட்டில் எப்போதுமே இருப்பர். காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வீட்டு வாசலில் சாணி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு வைத்தால் தான் உள்ளே வருகிறார்கள். குடுமி தலைமுடி தண்ணீரையும் , நீங்கள் வஸ்த்திரம் பிழியும் தண்ணீரையும் பருகுகிறார்கள். தற்காலத்டில் குடுமியும் இல்லை. வஸ்த்ரம் மந்திரம் இல்லாமல் வாஷிங் மெஷின் பிழிந்து கொடுக்கிறது.


அஸ்து அஸ்து என்று சொல்லி கொண்டிருகிறார்கள் என்று முனிவர்கள் ஞான த்ருஷ்டியில் பார்த்து அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை செய்யாதே வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் சொல்வது நம் காதில் விழ வில்லை. முற் பிறவிகளில் செய்த பாபங்கள் இது நம் காதில் விழாமல் தடுக்கிறது என்று ரிஷிகள் ல்கிறார்கள்.


தற்போது உதீரதாம் என்ற மந்திர அர்த்தம் எழுதுகிறேன். தாழ்ந்தவர்களும், சிறந்தவர்களுமான நம் பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை ஏற்று அருள் புரியட்டும். நாம் அழைத்து வந்த பித்ருக்கள் சிக்ஷிக்க தக்க குற்றம் செய்தாலும் ,நம்மை ஹிம்சிக்காமல் நாம் அளித்ததை ஏற்று நன்றி உள்ளவர்களாகி , நம்மை காப்பாற்றட்டும்.


உத்தேசமாக 7 அல்லது 8 கருப்பு எள்ளுடன் (ஒவ்வொரு தடவையும்) 100 மில்லி தண்ணீருடன் கூர்ச்சத்தின் நுனியில் வலது கை மறித்து விட வேண்டும். தாழ்ந்தவர்கள் என்று எழுதியதற்கு விளக்கம் அக்காலத்தில் அவர்கள் எழுதி வைத்ததையே ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா 1956 ல் எழுதிய புத்தகத்தை பார்த்து இங்கு எழுதுகிறேன்.


ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் தண்ணீர் விடுவது பித்ரு தீர்த்தம் எனப்பெயர். நான்கு விரல் நுனிகளால் விடுவது தேவ தீர்த்தம். சுண்டி விரலுக்கு கீழ் உள்ள உள்ளங்கையால் விடுவது ரிஷி தீர்த்தம் என்று பெயர்.


உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வழியாக தீர்த்தம் வருவது ப்ருஹ்ம தீர்த்தம் என்று பெயர். ஆசமனம் செய்யும் போது தண்ணீர் அருந்துவது ப்ருஹ்ம தீர்த்தம்.


--------கோத்ரான்---------ஶர்மண: இம்மாதிரி( : )உள்ளதை ஹ என்று உச்சரிக்க வேண்டும். வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


பித்ருக்களை ரக்‌ஷிக்க ஸ்வதா தேவி உண்டாக்க பட்டாள் என தேவி பாகவதத்தில் உள்ளது.


1-2. அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:


தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞ்இயானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம:


----------கோத்ரான்------சர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


அங்கீரஸ், அதர்வா, ப்ருகு என்று நமது பித்ருக்கள் அழைக்க படுகிறார்கள். அவர்கள் மிக சிறந்த குணமுள்ளவர். ஸந்ததிகளிடம் புதிது புதிதாக அன்புள்ளவர். யாகத்தினால்


ஆராதிக்க தக்க அவர்களது மங்கள கரமான மனதில் நாம் இருக்க வேண்டும்.


1:3. ஆயந்துந; பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவ யானை:


அஸ்மின் யக்ஞ்யே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்.


--------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


யாகம் செய்யாமல் பித்ரு லோகம் சென்ற அக்னிஷ்வாத்தர் என்பவரும் மனோ வேகம் உள்ளவருமான பித்ருக்கள் தேவ யான மார்கமாக இங்கு வரட்டும். இங்கு நாம் செய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்வதா என்று அளிக்கும் உணவினால் சந்தோஷம் அடையட்டும். பர லோகத்தில் நமக்காக பரிந்து பேசட்டும். நம்மை காக்கட்டும்.


2-1. ஊர்ஜம் வஹந்தீர் அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.----------கோத்ரான்--------ஶர்மண: ருத்ர ரூபான் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


ஓ தீர்த்தமே கர்மவசமாகி , ஒரு ஸமயம் -மனுஷ்ய, தேவ, ராக்‌ஷஸ, (குணம்) மரம், செடி, கொடி, சண்டாளன் முதலிய பிறவியை எங்கள் பித்ருக்கள் அடைந்திருந்தால் அவர்களுக்கு உசிதமான அன்னம், அம்ருதம், நெய்,பால், ரக்தம், கள், முதலிய அவரவர்களுக்கு உசிதமான உணவாகி , பித்ரு அன்னமாக இருந்து என் பித்ருக்களை ஸந்தோஷ படுத்து.


2-2. பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: பிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: -------கோத்ரான்-------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


ஸ்வதா என்று கூறி அளிக்கும் உணவை விரும்புவர்களான பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர் ஆகியவர்களுக்கு ஸ்வதா என்று தர்ப்பணம் செய்து வணங்குகிறேன். பித்ருக்கள் உண்டு களிக்கட்டும்.


2-3. யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்கும் ஸ்வதயா மதந்தி.-------கோத்ரான் ---------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


எல்லாம் அறிந்த ஓ அக்னியே எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ளனர், எவர் இங்கு இல்லையோ எவரை நாம் அறிவோமோ , எவரை நாம் அறிய மாட்டோமோ அவர் அனைவரையும் நீர் அறிவீர். ஆதலால் அவர்களுக்கு ஏற்றதாக இந்த உணவை அவர்களுக்கு அளியும். அதனால் அவர்கள் சந்தோஷ மடையட்டும்.


3-1. மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: -----------


கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


பித்ரு தர்பணம் செய்கின்ற எனக்கு காற்று நன்மையை தரட்டும். நதிகளும், ஓஷதிகளும் மதுரமானதை அளிக்கட்டும்.


3-2. மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.


---------கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


இரவு, காலை, பகல் ஆகிய காலமும் நமக்கு இன்பத்தை தரட்டும். பூமியின் தூளியும் இன்பத்தை தரட்டும். ஆகாயமும் கபடமில்லாமல் இன்பம் தரட்டும்.


3-3. மதுமான்னோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ----------கோத்ரான்-------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தாபமின்றி ஜீவ சக்தியை அளிக்கட்டும்.பசுக்களும் மதுரமான பால் தந்து இன்பம் அளிக்கட்டும்.






ஸ்த்ரீகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது வேத மந்திரம் கிடையாது.


--------கோத்ராஹா--------நாம்னீ: (அல்லது தா: )மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.

அர்த்தம் உணர்ந்து பித்ரு கர்மாவை சரியாக புரிந்து நலம் பெற வேண்டுகிறேன். 🙏🙏💐💐🙋‍♀
*அம்பிகையின் வைபோகம்*

*நவராத்திரியில் 9நாளும் செய்ய வேண்டியவை*

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். நவராத்திரி பூஜையும் அப்படியே!!

சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துகொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.

பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம். வீட்டிலே இருந்தால், ‘மஹா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை சுவாமிக்கு காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அனுபவிப்பதற்காக பிரபஞ்சம் முழுவதையும் போக்கிய வஸ்துகளை வெளியில் உண்டாக்கி, அவற்றை அனுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார்.

*9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:*

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து  மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)
ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா

*ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:*

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

*ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:*

• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

*ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:*

நாம் அனுபவிப்பதை எல்லாம் அவருக்கு சமர்ப்பித்து விட்டே உபயோகித்து கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தை கொடுத்து விடுகிறோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம் தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் சுவாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாக கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர அவருக்கு இதனால் எதுவுமில்லை.

“நிவேதயாமி” என்றால் “அறிவிக்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர “உண்பிக்கிறேன்” என்று அர்த்தமில்லை. “அப்பனே, இந்த வேளைக்கு உன்னுடைய கருணையில் நீ இந்த அன்னத்தை கொடுத்திருக்கிறாய்!” என்று அவனுக்கு தெரிவித்து விட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸான்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

*தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:*

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி (வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

*பின் குறிப்பு:*

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.

அவளை  பூஜை என்று வைத்து கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம். என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இந்த பக்குவம் நம்மை நல்லவர்களாக்கும்.

நவராத்திரியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி , அன்னையின் அருளைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன்.
மற்றவர்களையும்  சந்தோஷப்படுத்தி, அதன்மூலம்  நாமும் சந்தோஷம் அடைவோம்.

*நவராத்திரி 2019 நமோ தேவ்யை  குமார் ராமநாதன்.*
*மகாளய அமாவாசை: செய்ய வேண்டிய தானங்கள்*

_மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்._

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

*அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்*

*துணி - ஆயுள் அதிகமாகும்*

*தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்*

*தீபம் - கண்பார்வை தெளிவாகும்*

*அரிசி - பாவங்களை போக்கும்*

*நெய் - நோய்களை போக்கும்*

*பால் - துக்கம் நீங்கும்*

*தயிர் - இந்திரிய சுகம் பெருகும்*

*பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்*

*தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்*

*வெள்ளி - மனக்கவலை நீங்கும்*

*பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்*

*தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்*

*நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்*

*பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்*

சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

*பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.*

பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

_அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்._
*பிராம்மண தர்மம்*

*இவைகளை ஒதுக்கினதால் தான் இன்று நாம் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்பதை உணரவேண்டும்*.

1.நாம் நமது தர்ம சாஸ்திரத்தை அவசியம் தெரிந்து கொண்டு முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும்.

 2. ப்ராஹ்மணர்களாகிய நாம் ஸுர்ய உதயத்தின்போதும் அஸ்தமனத்தும் போதும் தூங்ககூடாது.

3. *நமது நித்யகர்மாக்களில் அடிப்படையான ஸந்தியாவனத்தை தவறாமல் செய்ய வேண்டும்.*

4. ஆண்கள் வெள்ளை வேஷ்டி துண்டுடன் தான் கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

 5. கலர் மற்றும் தைத்த துணிகளைப் போட்டுக்கொண்டு அனுஷ்டானங்களைச் செய்யக்கூடாது.

 6. பெண்கள் வேத மந்திரங்களைச் சொல்லக்கூடாது.

 7. கர்மானுஷ்டானம் செய்யும்போது ஆண்கள் கச்சம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ள வேண்டும்.

 8.விவாஹம் ஆன பெண்கள் விளக்கேற்றும்போது மடிசார் வைத்து புடவை கட்டிக் கொள்ள வேண்டும்.

 9. ஒருவர் பயன்படுத்திய வஸ்திரம், செருப்பு, சாப்பிடு ம் தட்டு, படுக்கை, மாலை ஆகிவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.

10. *விதிக்கப்பட்ட அபர கர்மாவிற்கு தவிர மற்றைய நேரத்தில் ஈர வஸ்திரத்துடன் இருக்கக் கூடாது*.

11. *மற்ற கர்மாக்களை ஈரத்துணியுன் செய்யக்கூடாது.*

12. *விதிக்கப்பட்ட அபர கர்மாவைத் தவிர ஒருபோதும் தலைமுடி நுனியை கட்டாமல், விரித்து தொங்க விடக்கூடாது*.

13. எல்லா கர்மாவிற்கும் அவரவர் தனித்தனியாக தீர்த்தப்பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. எல்லா கர்மாக்களையும் பூமியில்தான் செய்ய வேண்டும்.  மாடியில் செய்யக்கூடாது.

15.கர்மாக்கள் இருவகை- நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்கள்.

16. *நித்தியகர்மாக்களான ஸந்தியாவந்தனங்களைச் செய்யாவிட்டால் பாபம் வரும்*.

 17. *ஸந்தியாவந்தனம் செய்யாத பிராமணன் வேறு எந்த கர்மாக்களைச் செய்தாலும் பலன் இல்லை*.

18. *ச்ராத்தத்தை எல்லா பிள்ளைகளும் தனி*
*தனியாகத்தான் செய்ய வேண்டும்* .

 19. எந்த கர்மா செய்தாலும் நடுவில் பேசக்கூடாது.

20. *அம்மா அப்பா ச்ராத்தங்களை குறிப்பிட்ட முறைப்படித்தான் செய்ய வேண்டும்.*

26. *சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆசார, அனுஷ்டானங்களைச் சொல்லித் தர வேண்டும்*.

27. நாம் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும்.

28. *நமது சரீர சிரமமில்லாத எந்த கர்மாவும் முழுப்பலன் தராது.*

29. நமது தர்மத்தை நாம் பின்பற்றி காப்பாற்ற வேண்டும்.

 30. ஆலயத்திலிருந்து பிரசாதாமாக வீபூதி, குங்குமம், துளசி மற்றும் வில்வம் போன்றவற்றைத் தவிர மற்றவற்றை பிரசாதமாகப் பெறக்கூடாது.

31. *கிருஹஸ்தர்கள் அவசியம் வருடத்தில் இரண்டு பட்சத்திலாவது ஔபாஸனம் செய்து, பிரதமையன்று ஸ்தாலீபாகம் செய்ய வேண்டும்*.

 32. நாம் ரிஷிகளின் பரம்பரையில் வருவதால், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மிருதிகளில் கூறப்பட்டுள்ள முறைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

33. *ஸ்மிருதி அல்லது தர்ம சாஸ்திரத்தை மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை*.

34- தர்ம சாஸ்திரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், பிராமணர் அல்லாதவர் ஆகிய அனைவருக்ககும் தனித்தனியாக அந்தந்த காலத்திற்கேற்ப உள்ளது.

 35. *எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆண் அல்லது பெண் விவாஹரத்து செய்து கொள்ள தர்ம சாஸ்திரத்தில் இடம் இல்லை*.

36.  *விவாஹம் ஆன பெண்ணுக்கு தர்மசாஸ்திர முறைப்படி ஒரே கோத்திரம் அல்லது வேறு தோஷம் அல்லது தீராத வியாதி இருப்பது தெரியவந்தால், அந்த மனைவியை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டுதான், அந்த  ஆண் மறு விவாஹம் செய்து கொள்ள வேண்டும்*.

 37. அப்பா அல்லது அம்மா அல்லது மற்றவர்களுக்காக செய்யும் அந்திமக்கிரியை முடிந்தவுடனோ அல்லது தாயாதிகளுக்கு பத்து தீட்டு கடைபிடிக்கும் போதோ மற்றும் கர்ப தீட்சை முடியும் போதோ ஆண்கள் வபநம் செய்து கொள்ள வேண்டும்.

 38. *நாம் குடியேறும் அல்லது குடியிருக்கும் வீடு கீழ் தளத்தில் இருந்தால் தர்மசாஸ்திரப்படி கர்மானுஷ்டம் செய்ய முடியும்*.

39. கணவன் இறந்துவிட்டால், மனைவி சாஸ்திரப்படி வபநம் செய்து கொண்டால்தான் அவர்களுக்கு இறப்பு தீட்டு விலகும். இல்லாவிடில் இவர்களிடமிருந்து இறப்புத்தீட்டு விலகாது. இந்த விதவைகள் இறப்புத்தீட்டு விலகாமல், ஐபம் செய்வதாலும், கோவிலுக்கு போவதாலும் அவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் மஹா பாபமாகும். கெடுதல் ஏற்படும். இறப்பு தீட்டு மகா சக்தி வாய்ந்ததாகும்.
*அநாதை பிணத்தை ஸ்மஸ்கரிப்பதும்,  பூஜையில்லாத சிவலிங்கத்தை பூஜிப்பதும், ஏழை, குருடன் இவர்களுக்கு உதவுவதும் ஸகல பாபங்களையும் போக்கக்கூடியது. ஸ்மிருதி முக்தாபலம்.(வர்ணாச்ரம தர்ம காண்டம்)*.

40. *எந்த வீட்டில் சாஸ்திர முறைப்படி வேத சப்தம் கேட்காமலும், சாஸ்திரப்படி கர்மானுஷ்டங்கள் நடை பெறாமலும், எந்த கிரஹத்திற்கு வேத விற்பனர்கள் அடிக்கடி வரவில்லையோ அந்த வீடு சுடுகாடாகும் என்று ஸ்மிருதி கூறுகிறது.*

41. *இன்று ஸ்நானம் செய்துவிட்டு வஸ்திரத்தை உலர்த்தி, மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு அதை உடுத்திக்கொள்வது நித்ய கர்மாவிற்கு மட்டுமே பொருந்தும்*.

 42. *மற்ற கர்மாக்களுக்கு, குறிப்பாக சிராத்ததிற்கு அன்று குளித்துவிட்டு உலர்த்திய வஸ்திரத்தைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்*.

44.இரண்டு சூரியனுக்கு (அதாவது இரண்டு பகல்) மேல் பார்த்த (உலர்த்திய) வஸ்திரம் கட்டிக் கொண்டு கர்மாக்கள் செய்ய சுத்தமில்லை.

45. வேதம் படித்தவர்களை ஒரு போதும் குறை கூறக்கூடாது.

46. காஸ் அடுப்பை கர்மாக்கள் செய்யும் போது உபயோகப்படுத்தக்கூடாது.

47. *நாம் செய்யும் கர்மாவை நன்றாக தெரிந்து கொண்டு சிரத்தையாகச் செய்ய வேண்டும்.*

48. வைதிகர்கள் தர்ம சாஸ்திரத்தைத் தெரிந்து கொண்டுதான் வைதிக கர்மாக்களைச் செய்து வைக்க வேண்டும்.

49.தர்ம சாஸ்திரத்திற்கு விரோதமாகச் கர்மாக்களை செய்து வைக்கும்போது, அதன் பாபம் தட்சிணை வாயிலாக அந்த வைதிகற்கே வந்து சேரும்.

50. *வேதங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதில் சிறிதளவும்*
*அனுஷ்டானம் செய்யாத பிராமணனைவிட, தர்ம* *சாஸ்திர முறைப்படி நித்யகர்மாக்களான சந்தியாவந்தனாதிகளை மட்டும் செய்கின்ற பிராமணனே உத்தமன்*.

----------------------------------------------
மீண்டும் மீண்டும் மீண்டும்
படித்து புரிந்து கொள்ளவும்.

----------------------------------------------
ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் அஷ்டோத்திர சத நாமாவளி
பத்ரகாளியம்மன் அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் காளியை நம:
ஓம் கராளியை நம:
ஓம் கம்காளியை நம:
ஓம் கம்காளாஸ நவிநதாயை நம:
ஓம் கல்யாண்யை  நம:
ஓம் கரவீரப்ரியாயை நம:
ஓம் நீளாளகாயை நம:
ஓம்  நீலின்யை நம:
ஓம் நீளாஞ்சனஸமப்ரியாயை நம:
ஓம் மாம்ஸாசனாயை நம:

ஓம் தீர்க்க ஜிக்வாயை நம:
ஓம் தாரகக்கின்யை நம:
ஓம் ஜ்வலநேத்திரியை நம:
ஓம் ரக்தபாண்யை நம:
ஓம் கடக்கின்யை நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் மாதங்கியை நம:
ஓம் டாகின்யை நம:
ஓம் தாகின்யை நம:
ஓம் காளறாதிரிகாயை நம:

ஓம் மாலின்யை நம:
ஓம் மாத்திருகாஸேவ்யாயை நம:
ஓம் பூதவேதாளஸம் விர்ந்தாயை நம:
ஓம் மனோண்மண்யை நம:
ஓம் மகாரௌத்திரியை நம:
ஓம் மகாத்துவன்யை நம:
ஓம் தீப்த்தஜ்வாலாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் திரிபுரசுந்தரியை நம:

ஓம் டாணாஸநாயை நம:
ஓம் ஸத்ரூவீரநாஸநாயை நம:
ஓம் அஷ்டஆஸின்யை நம:
ஓம் சௌபாக்கியதாகின்யை நம:
ஓம் குமாரியை நம:
ஓம் பரமேஸ்வரியை நம:
ஓம் காரியை நம:
ஓம் ஸர்வஜனன்யை நம:
ஓம் பஞ்சதஸாக்ஷரியை நம:
ஓம் திரைலோக்யவசம் கரியை நம:

ஓம் மகா கோரியை நம:
ஓம் சர்வசாரு பூஜிதாயை நம:
ஓம் மோகின்யை நம:
ஓம் ஸதம்பின்யை நம:
ஓம் பூர்ணாயை நம:
ஓம் துவிஷிண்யை நம:
ஓம் புவநேஸ்வரியை நம:
ஓம் சக்ரநாதாயை நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் ஸம்வித்தாயை நம:

ஓம் ஆனந்தல கரியை நம:
ஓம் ஸ்யாமவருணாயை நம:
ஓம் ரக்த பத்றாயை நம:
ஓம் அஷ்டபுஜாயை நம:
ஓம் வீரதேவியை நம:
ஓம் ஊர்த்வகேஸின்யை நம:
ஓம் கமலாஸநாயை நம:
ஓம் வியக்த்தரஸநாயை நம:
ஓம் பிரேதரஸநாயை நம:
ஓம் மதுறாஸநாயை நம:

ஓம் கெரூடாஸநாயை நம:
ஓம் கெஜாஸநாயை நம:
ஓம் மஹிஷாஸநாயை நம:
ஓம் பத்மாக்ஷதாரன்யை நம:
ஓம் நாகாபரண பூஜிதாயை நம:
ஓம் ராஜ ராஜேஸ்வரியை நம:
ஓம் சந்த்ர சூடாயை நம:
ஓம் ஸம்பாவிவ்யை நம:
ஓம் ஸ்ரீ வித்யாயை நம:
ஓம் திரிபுரேஸ்வரியை நம:

ஓம் ஸர்வ ஸித்தி பிரதாயினியை நம:
ஓம் ஆதாரவிதி பாதிதாயை நம:
ஓம் அநா அதாப்ஜ நீலதாயை நம:
ஓம் மணி பூரக சுந்தரியை நம:
ஓம் அமராவத்யாஸநாயை நம:
ஓம் பிரணாவாஸநாயை நம:
ஓம் பாதஸாதித்ய ஸம்காஸாயை நம:
ஓம் உரங்கபூஷாணாயை நம:
ஓம் ஸ்ரீம்காரரூபிண்யை நம:
ஓம் சுத்தவஸ்திரநாயை நம:

ஓம் ஷட்சமோகின்யை நம:
ஓம் ஞான வித்யாயை நம:
ஓம் குந்தப்ரியாயை நம:
ஓம் ஜகதாத்ரியை நம:
ஓம் திரிநேத்திரியை நம:
ஓம் ஆதாரஸக்திரேவிண்யை நம:
ஓம் மகாபிரக்ஞாயை நம:
ஓம் திரிகெஜத்துருவிண்யை நம:
ஓம் புவநேஸ்வரியை நம:
ஓம் ஏகாக்ஷரியை நம:

ஓம் தர்மண்யை நம:
ஓம் ஸர்வாபரணபூஷதாயை நம:
ஓம் ஸிம்மவாகநாயை நம:
ஓம் அதிகோரரூபிண்யை நம:
ஓம் திரிசூலின்யை நம:
ஓம் உக்றாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் கிரதயுகாயை நம:
ஓம் த்ரேதாயுகாயை நம:
ஓம் துவாபரயுகாயை நம:

ஓம் கலியுகாயை நம:
ஓம் ஸிரிஸ்டவிப்நாயை நம:
ஓம் மகாகாளியை நம:
ஓம் மகிஷாசுரவர்த்தின்யை நம:
ஓம் பத்ரதாயின்யை நம:
ஓம் வீரதாயின்யை நம:
ஓம் காளிதாயை நம:
ஓம் பத்திரகாளியை நம:

ஓம் நாதாவீத கெந்த பரிமளகுங்கும புஷ்பாணியை
சோபியாயை யாகுந்தேந்து துஷார ஞானாயை
யாசுப்பிரவஸ்திரா விதர்யை
யாவீண வரதண்டமண்டிதாயை
கறாயஸ்வேத பத்மா சம்கரயை.