ஓம் சிவாய நம: (நமஸ்காரம் பதிவு)
========================================
" நம: என்றால் நமஸ்காரம், என்று பொருள் நமஸ்காரம் என்பவை எல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள்.
இவற்றில் "நமஸ்காரம்' என்ற சொல்லுக்கு " வணங்குதல் என்று பொருள். "
குரு நமஸ்காரம்
============
நமாமி சத்குரும் சாந்தம் ப்ரத்யக்ஷம் சிவரூபினம் சிரஸா யோகபீடஸ்த்தம் முக்தி காமார்த்த ஸித்திதம் = குரு கீதை சாந்தமானவரும் ப்ரத்யக்ஷ சிவரூபியும், யோகபீடத்தி லிருப்பவரும், முக்தி காமமாகிய செல்வத்தைத் சித்திக்க செய்பவரும் ஆகிய ஸத்குருவைத் தலையால் வணங்குகிறேன்.
சிலர் ஸ்ரீருத்ரத்தை பற்றி சந்தேகத்திலிருந்து தெளிவு பெற ஸ்ரீ பரத முனிவரிடம் சென்றனர்.
அதற்கு ஸ்ரீ ருத்ரம் சாக்ஷாத் பரமேஸ்வரனுடையது. ஏனென்றால்
இதில் நம: என்ற பதம் அதிகம் வந்திருப்பதால் ஸ்ரீ பரமேஸ்வரனுடையது, என்றார். அதற்கு விளக்கம் அளிக்கையில்
தைத்திரியம் “பரப்ரம்மத்தை நமஸ்காரம் பண்ணத்தகுந்தவர் “என்று உபாஸிக்க வேண்டும்,
அவ்வாறு செய்தால் நமது விருப்பங்கள் நம்மை நமஸ்கரித்து தானாகவே வந்தடையும் என்கிறது
நமஸ்காரம் நைவேதிகும்.
சமயதி" = ஸ்ருதி தெய்வம், ரொம்ப உயர்ந்தவர், பெரியவர்களை கண்டால் உடனே நமஸ்காரம் பண்ணவேண்டும். அதனால் சுலபமாக அவர்களது அன்பும் அருளும் கிட்டும் எந்த ஒரு இடத்தில் இருக்கும் போதும் ஒருவன் எல்லா நேரங்களிலும், எப்பொழுதுமே
“ருத்ரருக்கு நமஸ்காரம்” என்று ஜபித்துக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் “ஸர்வமும் ருத்ரனே” என்று முழங்குகிறது ஸ்ருதி
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம் பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
“ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே”“ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருஸ்யதே" = ஸ்வேதாஸ்வரோபனிஷத்”
அவருக்கு சமமானவரோ மேலானவரோ காணப்படவில்லை
ஸ்ரீருத்ரத்தில் ஏகதோ, உபயதோ நமஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது
ஸ்ரீ ருத்ரத்தில் மந்த்ரங்களுக்கு ஆதியிலும் ,அந்தத்திலும் நம:
சொல்லை உடைய மந்திரங்கள் உபயதோ நமஸ்கார மந்திரங்கள் எனப்படும். அதாவது ஒரு வாக்யத்தில் முன்னும் பின்னும் நமஸ்கார பதங்கள் உள்ளன. மற்றும் ஒரு வாக்யத்தின் கடைசியில் நமஸ்கா பதம் சொல்லபடுகின்றது. “நமோ ஹிரண்ய பாகவே ஸே நான்யே திஸாஞ்ச பதயே நம “ என்று இரண்டு நமஸ்கார பதங்கள் – “ நமோ பாவயச ருத்ராயச “ வாக்யத்தின் கடைசியில் ஒரு நமஸ்கார பதம் உள்ளது.
பரத சாஸ்திரத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு முத்திரை உள்ளது. அதில் நமஸ்கார முத்திரை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு மட்டும் கூறப்பட்டுள்ளது. அதனால் பரமேஸ்வரனுடையது ஸ்ரீ ருத்ரம் எனத்தெளிவுபடுத்தினார்.
=ஸ்ரீ பட்டபாஸ்கர் ஸ்ரீருத்ர பாஷ்யத்திலிருந்து நாம் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அடிமை, பக்தன், குழந்தைகள் அதனால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து சரணாகதி அடைதலை குறிப்பது ஆகும். ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் நம் நித்யம் செய்யும் பூஜையின் அங்கமாக உள்ளது வீட்டிலும், ஆலயங்களிலும், பூஜையின் முடிவு தரிசனம் செய்த பின் நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும்.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் ( சாஷ்டாங்க நமஸ்காரமும்),
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். ஆலயத்தில் வாஹனமாகிய நந்தி, பலி பீடத்திற்கு பின் அல்லது கொடிமரம் இருந்தால் அதனடியிலேயே நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தெற்கு நோக்கியும், நமது கால்களை மற்ற தெயவங்களுக்கு நேரே தெரியாமல் நமஸ்கரிக்க வேண்டும்.
ஆலயத்தில் இறைவனைத்தவிர யாருக்கும் நமஸ்காரம் பண்ணக்கூடாது.
நாம் பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது நம் உடம்பில் உள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைடனிக் எனர்ஜி ஏற்படுகிறது விஞ்ஞானம்.
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை.
சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை! சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை.
திருமந்திரம் அப்பேற்பட்ட ஆதி அந்தமில்லாத ஸ்ரீபரமேஸ்வரனை தினமும் நமஸ்கரிக்கிற பாக்யம் கிட்டுமேயாகில் நாம் மட்டுமின்றி நம் பரம்பரையே புண்யசாலிகள். அதில் சந்தேகம் வேண்டாம்.