திங்கள், 30 செப்டம்பர், 2024

50. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

50. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....

ஐம்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 1247 - 1297]

ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, இவரது தந்தையின் பெயர் "அருணகிரி". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "கங்கேசர்".

இவரும் தன் குருநாதரைப் போல அம்பிகையை ஆகம முறைப்படி பூஜித்தவர். இன்று நினைத்து கூட பார்க்க முடியாத படி ஒரு கோடி சண்டிகா ஹோமங்களை நடத்தியவர்.

இவர் கி.பி.1297 ஆம் ஆண்டு, துர்முகி வருடம், ஆனி மாதம், வளர் பிறை, சஷ்டி திதியில் கெடில நதிக்கரையில் சித்தி அடைந்தார்.

இவர் 50 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 

49. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-III


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

49. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-III

நாற்பத்தி ஒன்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 1200 - 1247]

ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று, தஞ்சை மாவட்டம் "சாயாவனம்" என்னும் ஊரில் பிறந்தவர். தந்தையின் பெயர் "அச்சுதன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "குருமூர்த்தி". இவர் பெரும் சக்தி உபாஸகர்.

நவராத்திரி, பௌர்ணமி பூஜைகளைச் சிறப்பாக வைதீக முறைப்படி நடத்தியவர்.

இவர் கி.பி.1247 ஆம் ஆண்டு,  பிரபவ வருடம், ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி திதி அன்று, கெடில நதிக்கரையில் சித்தி அடைந்தார்.

இவர் 47 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 

48. ஸ்ரீ அத்வைதாநந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

48. ஸ்ரீ அத்வைதாநந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....




நாற்பத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி.1166 - 1200]

ஸ்ரீ அத்வைதாநந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், பிநாகி நதிக்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் "பிரேமேசர்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "சீதாபதி".

இவர் தனது 17 ஆம் வயதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பொறுப் பேற்றார். இவர் பலரையும் வாதில் வென்றாலும் அதில் குறிப்பிடத்தக்கவர். "நைஷதம்" எழுதிய "ஸ்ரீஹர்ஷ வர்த்தனர்".

இவர் [1174 - 1200] தான் இயற்றிய நூல்களில் ஸ்ரீ "அத்வைதாநந்தரை" போற்றிப் பாடியிருக்கிறார். "ஹர்ஷர்". [குறிப்பாக நைஷதத்தில் "யோக லிங்கமென்னும் ஸ்படிக லிங்கத்தை" பற்றி பெருமையாக சொல்லியிருக்கிறார்.]

தாத்திரிக நெறியைக் கடைப்பிடித்த பெரும் புலவரான "அபிநவ குப்தனை" தர்க்கம் செய்து வென்ற ஸ்ரீ அத்வைதா நந்தர், பிரம்ம வித்யாபரணம், சாந்தி விவரணம், குருப்ரதீபா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் கி.பி. 1200 ஆம் ஆணடு, சித்தார்த்தி வருடம், ஆனி மாதம், வளர்பிறை தசமி திதி அன்று சிதம்பரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 36 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.