திங்கள், 28 ஏப்ரல், 2014

மாயா பஞ்சகம் (ஆதிசங்கரர் அருளியது)

நிருபமநித்யநிரம்சகே ப்யகண்டே மயி சிதி ஸர்வவிகல்பனாதி சூன்யே கடயதி ஜகதீச ஜீவபே தம் த்வக டிதக டனா படீயஸீ மாயா

பொருள் : ஈடிணையற்றதும் அழிவற்றதும் பிளக்க முடியாததும் தனித்ததும் சித்ஸ்வரூபமானதுமாகிய ஆன்மாவில் நான், இடம், உலகம், ஈசன், ஜீவன் எனும் பல்வேறு உணர்வைப் பொருத்துகிற மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்தவல்லவள்.

ச்ருதிசதநிக மாந்த சோத கான் அப்யஹஹ தனாதி நிதர்சனேன ஸத் ய:கலுஷயதி சதுஷ்பதா த் யபி ன்னான் அக டிதக டனா படீயஸீ மாயா

பொருள் : மறைகள் யாவும் அறிந்தவரையும், மிகுந்த செல்வத்தைப் பெற்றவரையும், மதிமயக்கமுற்ற கால்நடைகள் போல் மாற்றவல்லவளும், தூய அறிவினையும் மங்கச் செய்பவளுமான மாயை நிகழ முடியாத எதையும் நிகழ்த்தவல்லவள்.

ஸுக சித கண்டவிபோ தமத் விதீயம் வியத் நிலாதி விநிர்மிதௌ நியோஜ்யப்ரமயதி பவஸாகரே நிதாந்தம் த்வக டிதக டனா படீயஸீ மாயா

பொருள் : பிளக்க முடியாததும், இரண்டில்லாததும், ஆனந்தமும், பேருணர்வானதுமாகிய ஆன்மாவை வெளி, வாயு ஆகியவற்றில் செலுத்தி சம்சாரக் கடலில் லயித்துச் செய்கிறவளான மாயை, நிகழ முடியாத எதையும் செய்யவல்லவள்.

அபக தகு ணவர்ண ஜாதிபே தே ஸுகசிதி விப்ரவிடாத் யஹம் க்ருதிம் சஸ்புடயதி ஸுததா ரகே ஹமோஹம் த்வக டிதக டனா படீயஸீ மாயா

பொருள் : நான் அந்தணன், நான் வைசியன் என்ற அகங்கார உணர்வையும்- மகன், மனைவி, வீடு என்ற மோக உணர்வையும்-தன்மை, நிறம், ஜாதி ஏதுமற்ற ஆனந்தமயமான உணர்வை ஆன்மாவில் ஏற்படுத்தும் மாயை, நிகழ முடியாத எதையும் நிகழ்த்தவல்லவள்.

விதி ஹரிஹர விபேத மப்ய கண்டே பத விரசய்ய புதானபி ப்ரகாமம்ப்ரமயதி ஹரிஹரவிபேத பாவான் அக டிதக டனா படீயஸீ மாயா

பொருள் : ஹரி, ஹரன் என்று பிரிக்க முடியாத பூரணத்தினுள்ளும் எல்லாமறிந்த அறிஞரும் பிரம்மா, ஹரி, ஹரன் என்ற பேதத்தை உணருமாறு செய்து விடும் மாயை, நிகழ முடியாத எதையும் நிகழ்த்தவல்லவள்.