செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 20: ஸமய விசேஷ தீட்சா விதி

20 வது படலத்தில் சமய விசேஷ தீட்சாவிதி கூறப்படுகிறது. முதலில் சமயத்தை சார்ந்த தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். ஆசார்யன் நித்ய அனுஷ்டானத்தின் சாமான்யார்க்ய பாத்ரத்துடன் யாகசாலை நுழைந்து திவார பூஜை இடையூறுகளை நீக்கி யாகசாலைக்கு காப்புதல் செய்து பூதசுத்தி ஸகளீகரண அந்தர்யாகம் செய்து விசேஷார்க்யம் செய்து அந்த தீர்த்தத்தால் தன்னையும் பொருள்களையும் சுத்தி செய்து பிராதேச மாத்ரம் என்ற (சாண் அளவு) உடைய 36 தர்ப்பங்களால் ஞான கட்கம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முறைப்படி பஞ்சகவ்யம் செய்து பஞ்சகவ்யத்தால் யாகமண்டபத்தை பிரோட்சித்து பொரி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, தர்பம் புஷ்பம் அட்சதை ஆகிய ஏழு பொருள்களுடன் கலந்த விகிரம் என்ற திரவ்யத்தை அபிமந்தரித்து மண்டபத்தில் அவைகளை வாரி இறைத்து நிரீக்ஷணம் முதலிய கிரியைகளால், யாகமண்டபத்தை ஸம்ஸ்காரம் செய்து அதுபோல் குண்டத்திற்கும் முறைப்படி கிரியைகள் செய்து மண்டபம் அல்லது வேதிகையில் ஈசானத்திலோ, மேற்கு திக்கிலோ சிவகும்பவர்த்தினியையும் வைத்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என்று கும்பம் வர்த்தனியை ஸ்தாபிக்க வேண்டும் என்று கும்பவர்த்தனி அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பத்து திக்பாலகர்கள் 10 அஸ்திரங்கள் இவைகளுக்கு பூஜை முறையும் கூறப்படுகிறது. பின்பு உங்களால் உங்களுடைய திக்கில் இடையூறை போக்குவதற்காக பொறுமையாக வேள்வி முடியும் வரை இருக்க வேண்டும். என சிவனுடைய உத்தரவை திக்பாலகர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது. மண்டபம் ஸ்தண்டிலத்திலோ லிங்கத்திலோ விசேஷ பூஜையுடன் சிவனை பூஜிக்க வேண்டும். அக்னியில் சிவனை பூஜிக்கவும் என கூறி அந்த பூஜை முறை கூறப்படுகிறது. ஹே பகவானே என்னுடைய சரீரத்தில் நுழைந்து இரக்கத்துடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று வேண்டி சிவனிடம் இருந்து உத்தரவை பெற்றவனாக ஆசார்யன் ஆத்மா சிவன் இரண்டையும் சேர்ந்ததாக எண்ணவும் என கூறி சிவசரீர அழைப்பு முறை கூறப்படுகிறது.

மண்டபத்தில் செயலின் சாட்சியாகவும், சிவகும்பத்தில் யாகத்தின் சாட்சியாகவும், அக்னியில் ஹோமத்தின் இருப்பிடமாகவும், சிஷ்ய சரீரத்தில் பாச பந்தத்தை விடுவிக்க கூடியதாகவும், என் சரீரத்தில் அருள்பாலிக்கும் தன்மை உடையவராகவும் ஈஸ்வரன் இருக்கிறார். ஐந்து இருப்பிடத்தை உடைய ஈச்வரனானவன் நானே சதாசிவன் என்று வேற்றுமை இல்லா தன்மையாக தன்னை எண்ணிக் கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு தீட்சைக்காக வாயிலில் இருக்கும் சிஷ்யர்களுக்கு யாக மண்டபத்தை நுழையும் பொருட்டு சிவனிடம் வேண்டுதல் மூலம் அவர் உத்தரவை அடைந்தவனாகவும் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யர்களுக்கு தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. சிஷ்யனுக்கு கண்ணை கட்டும் துணியால் கண்ணை மறைத்து மண்டல சமீபம் அழைத்து சென்று ருத்திர ஈஸ்வர பதத்தை கொடுக்க கூடியதாகிய சிவஹஸ்தத்தை சிஷ்யன் தலையில் வைத்து அவன் அஞ்சலி ஹஸ்தத்தில் புஷ்பங்களை கொடுத்து கண்ணை மூடிய துணியை நீக்கி ஈஸ்வரனை காண்பித்து புஷ்பசமர்ப்பணம் செய்து புஷ்பம் விழுந்த இடத்தை அனுசரித்து பெயர் சூட்டவும் என கூறப்படுகிறது. பிராம்மண ஜாதிகிரமமாக நான்கு வர்ணத்தவர்களுக்கும், பெண்களுக்கும் பெயர் சூட்டும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யக் கூடிய கிரியைகளை விசேஷமாக விளக்கப்படுகிறது. பிறகு நாடி சந்தானம், பிராம்மண தன்மை ஏற்படுத்துதல் ருத்திர தன்மை ஏற்படுத்துதல் இவைகள் கூறப்படுகிறது. ஆசார்யனால் பிராணாயாம முறையினால் சிஷ்ய சரீரத்தில் சிவனை சேர்க்கும் முறை கூறப்படுகிறது. ஆசார்யன் சிஷ்யனுக்கு பூணூல் அணிவிக்கவும். பிறகு நூறு, ஆயிரம் முறை மந்திரஹோமம் செய்து சிவ மந்திரத்தினால் பூர்ணாஹூதி செய்க என ஹோம முறையின் முடிவானது காணப்படுகிறது. இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்துடன் கூடியவன் சிவபூஜை ஹோமமுறை அத்யயனம், மந்திரத்தை கேட்டல் ஆகிய விஷயங்களில் தகுதியுடையவனாகிறான். அவன் ருத்திர பதம் அடைகிறான். அவனே நிர்வாண தீட்சைக்கு தகுதியாகிறான். முடிவில் எந்த ஆசார்யன் பிராம்மணர்களின் தீட்சா முறைப்படி சூத்ரனுக்கு தீட்சை செய்கிறானோ அவன் சூத்ர தன்மையை அடைகிறான். இவ்வாறு 20வது படல கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது சமயத்தை சார்ந்தவர்களின் தீøக்ஷ (ஸமயதீøக்ஷ) கூறுகிறேன் என்கிறார். ஆசார்யன் நித்யானுஷ்டானம் மந்த்ராதி தர்ப்பணம் செய்தவராயும்

2. சூர்ய பூஜை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மந்திரத்தை உடையவனாகவும் ஸாமான்யார்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு யாக மண்டபமடைந்து

3. திவாரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷணம் செய்து திவாரம் திவாராதிபர்களையும் பூஜிக்க வேண்டும். முதலில் சாந்திகலாத்வாராய நம: என்று

4. கிழக்கு நுழைவு வாயிலில் பூஜித்து தெற்கு நுழைவு வாயிலில் வித்யாகலையையும் மேற்கு நுழைவு வாயிலில் நிவ்ருத்தி கலையையும் வடக்கு நுழைவு வாயிலில் பிரதிஷ்டா கலையையும்

5. கிழக்கில் நந்தி, மஹாகாளர், தெற்கில் பிருங்கி, வினாயகர், மேற்கில் விருஷபர், ஸ்கந்தர், வடக்கில் தேவீ, சண்டேஸ்வரர்களையும்

6. முதலில் ஓம்காரமும் நான்காம் வேற்றுமை பதத்துடயன் நம: என்பதை இறுதியிலும் உள்ளதாக முறைப்படி சேர்த்து நந்தி முதலானவர்களை பூஜிக்க வேண்டும். தோரண தேவதைகளை கடங்கள் அல்லது சுவற்றில் உள்ளதாகவோ பூஜிக்கலாம்.

7. மேற்கு திவாரத்தை அடைந்து புஷ்பம் எறிதலை செய்து அஸ்திர மந்திரத்தால் பூமியை மூன்று முறைப்படி காலால் தட்டி அந்த பூமியிலுள்ள

8. இடையூறுகளை போக்கி மூன்றுமுறை கைதட்டுவதால் ஆகாயத்தின் இடையூறு களையும் மூன்று முறை கைசொடுக்குவதால் வெளியிலுள்ள இடையூறுகளை நீக்கி

9. இடது தூண் பக்கமாக வலது காலால் நுழைந்துகீழ் வாசற்படியில் புஷ்பத்தைப்போட்டு

10. மண்டபமத்தியில் வாஸ்தோஷ்பதே பிரம்மணே நம: என்று சந்தனம் புஷ்பங்களால் வாஸ்து பிரம்மாவை பூஜித்து, யாக மண்டபத்தை அஸ்திரமந்திரத்தால் சுற்றியதாகவும் செய்து

11. கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து யாகசாலையை ஸம்ரக்ஷணம் செய்து வடக்கு முகமாக அமர்ந்து பூதசுத்தியை செய்ய வேண்டும்.

12. அங்கநியாஸ, கரன்யாசம் செய்து அந்தர் யாகம் செய்ய வேண்டும். விசேஷார்க்யமானது யவை வெண் கடுகு அக்ஷதை

13. தீர்த்தம், எள், தர்ப்பை நுனி, பால், புஷ்பம் இவைகளோடு சேர்ந்ததாக கல்பிக்க வேண்டும். அர்க்ய ஜலத்தால் தன்னையும் பூஜை திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும்.

14. அஸ்திர மந்திரத்தினால் பிரோக்ஷிச்சு கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரித்து சந்தனத்தால் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

15. சிவஹஸ்த கல்பனம் செய்து அந்த சிவ்ஹஸ்தத்தால் தலை முதல் பாதம் வரை சிவபாவனையாக்கிக் கொண்டு ஞானகட்கத்தை முப்பத்திஆறு, முப்பத்தி இரண்டு

16. தர்ப்பைகளால் ஒரு சாண் அளவும் அஸ்திர மந்திரமாகவும் நிர்மாணித்து பஞ்சகவ்யம் தயார் செய்ய வேண்டும். அதன் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது.

17. மண்டபத்தின் சுபபாகமான திக்கில் ஒன்பது பாகமாக்கப்பட்ட பூமியில் ஐந்து தத்வம் பூஜிக்கப்பட்ட இடத்தில் ஐந்து பாத்திரங்களை வைக்க வேண்டும்.

18. ஐந்து தத்வங்கள் சிவன், சதாசிவன், வித்யை, காலம், புருஷன் ஆகிய கோஷ்ட பூஜை பெயர்களாகும். சுப்ரதிஷ்டம், சுசாந்தம், தேஜோவத், அம்ருதாத்மகம்.

19. ரத்னோதகம் ஆகியவை பாத்திர பூஜை பெயர்களாகும், பால், தயிர், நெய், கோமூத்ரம், கோசாணம் இவைகளை ஈசானம் முதலிய மந்திரங்களால் அபிமந்திரித்து

20. ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற வரிசைப்படி பூஜித்து ஆறு தடவை ஜபத்தால் குசோதகத்தை பூஜித்து அம்ருதீகரணமும் சிவ ஒருமைப்பாடும் செய்ய வேண்டும்.

21. பஞ்சகவ்யத்தால் மண்டபத்தை பிரோக்ஷித்து விகிரங்களை அபிமந்திரிக்கவும் நெற்பொறி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, புஷ்பம், தர்பம், அக்ஷதை.

22. ஆகிய இந்த விகிரத்தின் காரணமான ஏழு பொருட்களை அஸ்த்ர மந்திரத்தினால் கலந்து மண்டபத்தின் நிருருதி திக்கில் இருந்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

23. நிரீக்ஷணமும் முதலிய ஸம்ஸ்காரங்களை வடகிழக்குமுகமாக நின்று பூஜித்து முன்பு கூறப்பட்டபடி குண்டத்திற்கும் அஷ்டாதசமஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

24. வடகிழக்கு திசையிலிருந்து ஞானகட்கத்துடன் விகிரங்களை இறைக்க வேண்டும். மண்டபத்தில் ஈசான வேதிகையிலோ மேற்கு திக்கு வேதிகையிலோ

25. தங்கம் முதலியவைகளாலான கும்பத்தில் ஜலம் நிரப்பி மாவிலை, தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ஸ்தாபித்து

26. விகிர பூஜை முடித்து அஸ்த்ர கும்பங்களுக்கு சலாசனம், ஸ்திராஸநம் கல்பிக்க வேண்டும். மூர்த்தி மந்திரத்தால் சிவமூர்த்தயே நம: என்று சிவகும்பத்தை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்திரம், நூல், தங்கம், தீர்த்தம் இவைகளுடன் கூடிய வர்த்தனியை பிரத்யங்கமான திவாரத்துடன் கூடியதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்டதாக வைக்க வேண்டும்.

28. சந்தனம், புஷ்பம் இவைகளால் சிவகும்பம் அஸ்த்ரகும்பம் இவைகளை பூஜித்து இந்திரன் அக்னி, யமன், நிருருதி வருணன்.

29. வாயு, ஸோமன், ஈசானன் ஆகிய திக்பாலர்களை கிழக்கு முதலான திசைகளில் பூஜித்து ஈசான திக்கின் தெற்கில் பிரம்மாவையும் நைருதி திக்கின் வடக்கில் விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்.

30. இந்திராதிகளை கடம் அல்லது கலசம் இவைகளிலோ கும்பத்தில் இருப்பதாகவோ பூஜிக்க வேண்டும். அதேபோல் வஜ்ரம் முதலிய தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

31. ஹே இந்திரனே! உம்மால் உங்களுடைய திசையில் இடையூறுகளை நீக்குவதற்காக யாக பூஜை முடியும் வரை சிவாக்ஞையால் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்று

32. எல்லா லோக பாலர்களிடமும் சிவாக்ஞையை முறைப்படி அறிவித்து யாகேஸ்வர அஸ்திரகும்பங்களை வலம் வருதல் வேண்டும்.

33. பிறகு யாகேஸ்வரகும்ப வர்த்தனியை முன்பு போல் ஸ்தாபித்து யாகேஸ்வர கும்பம் அஸ்திர கும்பம் இவைகளுக்கு ஸ்திராஸந பூஜையை செய்ய வேண்டும்.

34. சிவமூர்த்தி வித்யாதேஹம் அங்கபூஜை ஸஹிதமாக சிவ ஆவாஹனம் ஆவரணபூஜை அஸ்திர கும்ப பூஜை செய்து இருவர்களின் ஐக்கிய பாவம் கல்பித்து யோநி முத்ரையை காண்பிக்க வேண்டும்.

35. வலது கை முஷ்டி பாகம் பிண்டிகை உருவமான உமாதேவியாகும். கட்டைவிரல் லிங்க உருவமான சிவரூபமாகும். போகத்திற்காக முதலில் அங்குஷ்ட முத்ரையால் சிவ கும்பத்தையும்

36. பிறகு முஷ்டிபாகத்தால் வர்த்தனியை ஹ்ருதய மந்திரத்தால் ஸ்பர்சிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு முதலில் முஷ்டி பாகத்தால் சிவகும்பத்தையும்.

37. அங்குஷ்டத்தினால் வர்த்தனி கும்பத்தையும் ஸ்பர்சிக்க வேண்டும். உமா பக ரூபிணியாகவும் லிங்க ரூபம் உடையவராக

38. சங்கரரையும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்து இந்த யாகத்திற்கு அதிபதி நீங்கள், தங்கள் மூர்த்தி, ஸ்திரமான மூர்த்தியாகும்.

39. இந்த உம்முடைய ஞான கட்கத்தை உம்முடைய ஆயுதமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாகம் நடத்துகின்ற என்னால் உம்முடைய யாகம் பிரவ்ருத்திக்கப்பட்டது.

40. யாகம் முடியும்வரை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டவும், யாகத்தை ரக்ஷிக்கும் விருப்பமுள்ள ஞானகட்கத்தை யாகேஸ்வரரிடமே ஆசார்யன் வைக்க வேண்டும்.

41. அர்க்ய பாத்ரம் கல்பித்து நிரோதனத்திற்காக அர்க்யம் கொடுத்து அர்க்ய பாத்திரத்தை நிரோதனத்திற்காக அங்கேயே வைக்க வேண்டும்.

42. வர்த்தனீகும்ப தீர்த்தம் சுற்றுதல், விகிர திரவ்யம் இரைத்தல், இவைகளால் யாக மண்டபம் முழுவதும் இடையூறு இல்லாததாக நினைத்து பூஜைக்காக பூமியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

43. மண்டலம் ஸ்தண்டிலம் லிங்கம் இவைகளில் சிவனை பூஜிக்க வேண்டும். விசேஷ பூஜையுடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

44. ஹே பகவானே உன் தயவினால் என்னுடைய தேஹத்தில் நீவிர் ஆவிர்பவித்து பக்வமான சிஷ்யர்களுக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

45. என்று பிரார்த்தித்து அப்படியே செய்கிறேன் என்று அங்கீகரித்ததாகவும் சிவனிடம் இருந்து உத்தரவு பெற்றதாக நினைத்து ஏழுமுறை மூலமந்திரத்தால் மந்திரிக்கப்பட்ட

46. வெண்மையான தலைப்பாகையை தலையில் வைத்து சிவனுடன் சேர்ந்ததாக நினைத்து பிரார்த்திக்க வேண்டும். பரமேஸ்வரன் எல்லா கர்மாவிற்கும் ஸாக்ஷியாக மண்டலத்தில் இருக்கிறார்.

47. யாகத்தை ரக்ஷிப்பவராக சிவகும்பத்தில் இருக்கிறார். ஹோம அதிகாரியாக அக்னியில் பரவி இருக்கிறார்.

48. சிஷ்யனின் சரீரத்தில் அந்த சிஷ்யனின் பாசத்தை விடுவிப்பவராக இருக்கிறார். அருள்பாலிக்கும் தெய்வமாக என் சரீரத்தில் வியாபித்து இருக்கிறார்.

49. ஐந்துவித இருப்பிடத்தில் இருப்பவரான சதாசிவர் ஸோஹம் பாவனையாக இருக்கிறார். ஆத்மா வெவ்வேறாக இல்லாததாகவும் சிவகுணம் ஸமமானதாக உள்ளதாகவும் பாவிக்க வேண்டும்.

50. சாதனமாகிய ஹ்ருதயம் முதலியவைகள் என்னுடையதாகும். சந்தேகமில்லை. சிவனை ஸ்வதந்த்ரரராக பாவித்து சிவனிடம் விக்ஞாபிக்க வேண்டும்.

51. என்னால் எதற்காக இந்த யாகம் பிரவிருத்திக்கப்பட்டதோ அந்த யாகம் உம்முடைய தாகும். இந்த பசுக்கள் வாசற்படியில் இருக்கும் ஜலத்தைபோல் சாந்தர்களாக இருக்கிறார்கள்.

52. சச்சரவில்லாத அடையாளம் உள்ளதுமான உம் கைகளால் உம்மால் தூண்டப்பட்டதுமான பிரகாசமான விருத்திகளை வெகுகாலமாக அறிந்து

53. யோக்யமான அவச்யமான ஸ்நானம் செய்ததாகவும் அனுஷ்டித்த நித்யானூஷ்டானர் களாகவும் வெண்மையான வஸ்திர உத்தரீயம் உடையவர் களாகவும் உன் பாத பத்மத்தை தர்சிக்க விரும்புவர்களாக

54. உள்ள சிஷ்யர்களின் பிரவேசித்ததற்காக ஹேசங்கரா எனக்கு அனுக்ரஹம் செய்வாயாக என்று கூறி உன் பாதாரவிந்த ஸமீபமாக அந்த சிஷ்யர்களை பிரவேசிக்க செய்கிறேன்.

55. சிவனே நான் சிஷ்ய பிரவேசம் செய்ய மங்கள வார்த்தை கூறும் என்று சிவனை பிரார்த்தித்து சிவன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறியதாக பாவித்து சிஷ்யப் பிரவேசம் செய்ய வேண்டும்.

56. வாயிற்படியை எதிர்நோக்கி வெளியில் பிரணவமிட்ட தர்பாசனத்தில் சிஷ்யனை நிற்கச் செய்து தான் வடக்கு முகமாக நின்று கொண்டு

57. சிகையின் அடிபாகம் முதல் வலது பாத நகநுனிவரையும், பாத நகநனி முதல் சிகை அடிபாகம் வரை தத்வ ஞான த்ருஷ்டியால் சிஷ்யனை பார்க்க வேண்டும்.

58. இந்த ஆத்மா சிவத்தன்மைக்கு உரியவனாகிறான். விடுவிக்கப்பட்ட பந்த பாசங்களை உடையவனாகிறான். பதி சக்தி பிரவேசத்திற்காக பாசக்கூட்டம் என்வசப்படுகிறது.

59. அப்பொழுது இவனை தாம்ரத்திலிருக்கும் தன்னுடைய குண உதயயோக்யமான ஸ்பர்சத்தால் மணியை போல் காந்தி உடையவனாகவும் செய்து சிவனால் நான் தூண்டப்பட்டவனாகிறேன்.

60. ஸ்பர்சத்தால் நிர்மலமாக்கி சீக்கிரமாக தங்கம் போல் நல்ல குணமுள்ளதான மஸ்தக பூஷணத்தை செய்கிறேன்.

61. தர்பையினால் பிரோக்ஷணம் செய்து சிரஸில் விபூதியால் தாடனம் செய்து தர்பையின் நுனி அடிபாகங்களால் ஹ்ருதயத்தின் மேல்கீழ் பாகமாக

62. பிரவ்ருத்திக்கு காரணமான பாசகூட்டத்தை உல்லேகனம் செய்ய வேண்டும். அந்த சிஷ்யனை ஸகளீகரண பாவனையாக செய்து கண்ணை கட்டி

63. அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷித்ததும் கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்ததும் ஆன வெண்மையான வஸ்திரத்தினால் மூலமந்திரத்தை ஸ்மரித்ததாக (கண்ணை கட்டி)

64. சிஷ்யனை அழைத்து சென்று மண்டலத்தில் புஷ்ய ÷க்ஷபம் செய்வித்து சிவமூர்த்தியை காண்பிக்க வேண்டும். சிவமண்டலத்தின் வலதுபக்க மண்டலத்தில் முன்பு போல் செய்ய வேண்டும்.

65. பிரணவத்தை ஸ்தாபித்து உயர்ந்ததான சரீரமுடைய சிஷ்யனை தாரணம் முதலிய பாவனைகளால் சோதித்து அந்த சரீரத்தை ஸகளீகரணம் செய்ய வேண்டும்.

66. தன்னுடைய வலக்கையை சந்தனம் முதலிய வாசனை உடையதாக செய்து ஆஸநம் மூர்த்தி, மூலம் இவைகளுடன் கூடியதாக

67. சிவஹஸ்தமாக பாவித்து போக மோக்ஷமாக ஹ்ருதயத்திலிருந்து புருவம் வரையிலும் பிறகு சிகை வரையிலுமாக

68. எல்லா பாச முடிச்சுகளையும் விடுவிக்கும் பிராஸாத மந்திரத்தை கூறுவதால் ருத்ரேஸ்வர பத வியாப்திகமாக சிரசில் வைக்க வேண்டும்.

69. விசேஷமாக சிஷ்யனுடைய எல்லா அங்கத்தையும் பார்க்க வேண்டும். பிறகு சந்தனம், தூபம், இவைகளால் வாசனை உடைய புஷ்பத்தை அவன் அஞ்சலி ஹஸ்தத்தில்

70. வைத்து ஸர்வாத்மாவான சிஷ்யனால் தனிமையாக பிரார்த்திக்க வேண்டும். சிஷ்யனுடைய நேத்ரத்தை கட்டிய துணியை விலக்கி

71. ஸ்வபாமாகவே தர்சிக்கப்பட்ட ஈசானம் முதலான சிவவக்த்ரங்களை கொண்டு எந்த அங்க பாகம் உள்ளதாகவும் சிவத்தை எதிர்நோக்கியதாகவும் புஷ்பத்தை

72. வெளிப்பட்ட பக்தியாகிற சிவனாகிற தாமரையின் மேல் இருக்கின்ற கிளிபோல் அடைபட்ட அந்த சிஷ்யனை அவனால் முன்பு போடப்பட்ட மண்டல ஸ்தானத்தின் பெயரை சிவபதமுடைய பெயராக வைக்க வேண்டும்.

73. சிவசப்தமான பெயரை பிராம்மணனுக்கு வைத்து க்ஷத்ரிய வைச்ய நான்காம் வர்ணத்தவர்களுக்கு தேவ, கண்ட, கணம் என்று வரிசையாகவும் ஸ்திரீகளுக்கு சக்தி என்று முடிவுடைய பெயராக வைக்க வேண்டும். (ஈசான சிவன் ஈசான தேவன் ஈசான கண்டன் ஈசான கணன் என்பது போல)

74. அல்லது எல்லோருக்கும் எப்பொழுதும் சிவன் என்ற வார்த்தையை முடிவுடையதான பெயரை வைக்க வேண்டும். சிஷ்யனை பிரதட்சிணம் செய்வித்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய சொல்லி உபதேசம் செய்ய வேண்டும்.

75. சிஷ்யனை குண்ட சமீபத்தில் தன்னுடைய தென்பாகத்தில் பிரணவாஸநத்தில் அமர்த்தி சிஷ்யனுடைய கையில் தர்பத்தின் அடியை கொடுத்து

76. தர்பை நுனியை தன்னுடைய முழங்கால் இடுக்கில் ஆசார்யன் சேர்த்து கொண்டு சிசுவின் பிராணவாயுவை வெளிக்கொணர்ந்து பிங்களை மத்தியில்

77. தன் தேஹ நாடியில் மூலமந்திரத்தால் சேர்ந்ததாக பாவித்து ஆசார்யன் நாடீசந்தானத்திற்காக மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

78. சிஷ்ய சைதன்ய கிருஹணத்திற்காக ரேசகமும் பூரகமும் செய்ய வேண்டும். மூலமந்திரத்தினால் நூற்றி எட்டு அஹுதியும் அங்க மந்திரத்தினால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

79. சிவமந்திரமான மூலமந்திரத்தால் பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்த நிமித்தமாக சிவ மூலமந்திரத்தால் நூற்றி எட்டு ஆஹுதி செய்ய வேண்டும்.

80. பிராம்மணாதி வர்ணத்தவர்கள் நான்காவது வர்ணத்தவர்களையும் அவர்களின் குணங்களை அனுசரித்து அவர்களை உத்தாரணம் செய்ய வேண்டும். நான்காவது வர்ணமுள்ள ஜாதித்வத்தை விலக்கி மூலமந்திரத்தால் ஸ்வாஹாந்தமாக

81. மூன்று ஆஹுதி செய்து பிறகு சிவனை நோக்கி இவ்வாறு கூற வேண்டும். உணவு செயல் போன்ற நடத்தையால் யோநி பீஜசரீரத்திலிருந்து

82. சுத்தமான பிராம்மணனாகட்டும், இந்த ஆத்மா ஹே பகவானே பரமேஸ்வரா என கூறவும் ருத்ராம்சம் ஏற்பட்ட சமயத்திலும் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

83. ஹே பகவானே உன் அனுக்ரஹத்தால் இந்த ஆத்மா ருத்ரனாகட்டும் என்று பிரார்த்தனை செய்து பிரோக்ஷணமும் தாடனமும் செய்ய வேண்டும்.

84. தன் ரேசகத்தால் ஆசார்யன் சிஷ்ய தேஹத்தில் பிரவேசித்து அஸ்திர மந்திரத்தினால் விடுபட்டதாக பாவித்து அங்குச முத்ரையால்

85. சிஷ்ய சைதன்யத்தை ஆகர்ஷித்து த்வாத சாந்த மெடுத்து சென்று உடனே பூஜித்து சிஷ்ய மஸ்தகத்திலிருந்து

86. ஸம்ஹார முத்ரையால் தன் ஹ்ருதயத்தில் பூரகத்தால் பிரவேசிக்க செய்து கும்பகத்தால் சிஷ்யனின் ஒருமைப்பாட்டை ஸ்மரித்து

87. ரேசகத்தால் த்வாதசாந்தத்தில் ஈசானம் முதலான ஸதாசிவர்களை அடைந்து ஆத்மாவை த்வாத சாந்தத்தில் சேர்த்து பிறகு சிவனையும் சேர்த்து

88. ஸம்ஹார முத்ரையால் சிஷ்ய சரீரத்தில் சேர்க்க வேண்டும். மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட பூணூலை அணிவிக்க வேண்டும்.

89. நூறு அல்லது ஆயிரம் ஆஹூதி கொடுத்து பூர்ணாஹூதியை சிவமந்திரத்தால் செய்ய வேண்டும். இவ்வாறே சமயதீøக்ஷ பெற்றவன் சிவபூஜை

90. ஹோமம் அத்யயனம், மந்திர சிரவணம், இவைகளால் ஒருவன் யோக்யனாகிறான். ருத்ர பதத்தை அடைகிறான்.

91. பிறகு பிராம்மணன் நிர்வாண தீøக்ஷக்கு அதிகாரம் உள்ளவனாகிறான் பிராம்மண விதானப்படி நான்காம் வர்ணத்தவர்க்கு தீøக்ஷ செய்தால்

92. சந்தேகமின்றி தீøக்ஷ செய்விப்பவனும் நான்காம் வர்ணத்தவருடைய தன்மையை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகமென்ற மஹாதந்திரத்தில் ஸமயவிசேஷ தீக்ஷõ விதியாகிற இருபதாவது படலமாகும்.
படலம் 19: நவ நைவேத்ய விதி

19 வது படலத்தில் நவநைவேத்யமுறை கூறப்படுகிறது. முதலில் ஆடி, மார்கழி, மாசி இந்த மாதங்களை தவிர மற்ற மாதங்களில் நவநைவவேத்ய முறை அனுஷ்டிக்கவும் என காலம் விளக்கப்படுகிறது. ஆசார்யன் அங்குரார்ப்பணம் செய்து நல்ல நட்சத்ர லக்ன முஹூர்த்தம் இவைகளுடைய சிவபக்தர்களுடன் கூடி அஸ்த்ரதேவர் சண்டிகேஸ்வரருடனும் பலவிதமான நாட்டிய, வாத்யங்களுடன் தேவ பூமியை அடைந்து தயிருடன் கூடிய ஹவிஸால் பூத பலி கொடுத்து பலவித காய்கறி சமையல் பொருள்களுடன் தான்ய சங்க்ரஹணம் செய்து கிராம பிரதட்சிணத்துடன் ஆலயத்தை அடையும் என கூறப்படுகிறது. அங்குரார்ப்பணம், அஸ்த்ரதேவர், சண்டீசர் இவர்கள் இல்லாமலும் எல்லா பூஜையும் செய்யலாம் என விளக்கப்பட்டுள்ளது. பிறகு சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை முறைப்படி உரலில் இடித்து அரிசியை தயாரிக்க வேண்டும். பிறகு மிளகு, சீரகம், தேங்காய், வெல்லசர்க்கரை, இவைகளுடன் அரிசியை ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். ஸ்வாமி அம்பாளுக்கு தண்டுல நிவேதன விதி கூறப்படுகிறது. ஸகல மூர்த்திகளுக்கும் விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கும் நைவேத்யமுறை கூறப்படுகிறது. அங்கு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை பலிகொடுக்கும் முறை உத்ஸவம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பைரவபலி, உலக்கை கிரியையகளின்றி மற்ற எல்லாம் செய்ய வேண்டும். விசேஷமாக வஸ்திரஸ்வர்ண மோதிரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். யார் முடிவில் இவ்வாறு நவநைவேத்யபூஜை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைகிறான். என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 19வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நவ நைவேத்ய லக்ஷணம் பற்றி கூறுகிறேன் என்கிறார். மார்கழி, ஆடி, மாசி மாதங்களை தள்ளுபடி செய்து

2. மற்ற எல்லா மாதங்களிலும், நவநைவேத்ய முறையை கடைபிடிக்க வேண்டும். நிச்சயிக்கப்பட்ட சுபநக்ஷத்திரத்திற்கு முன்தினம் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அங்குரார்ப்பணம் இல்லாமலும் நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் சங்க துந்துபி, நாதம், கீதம் நாட்யம் முதலிய மங்களகரமான சப்தங்கள்

4. பலவிதமான கொடி விதானங்கள், தூப தீப அங்குரங்களுடனும் சிவ பக்தர்கள் புடை சூழ அஸ்த்ர தேவருடன் கூடி

5. சண்டேச்வரனுடன் கூட தேவனுடைய வயல்பூமியை அடைய வேண்டும். சண்டேசர் அஸ்த்ர தேவர் இன்றியும் தேவ÷க்ஷத்ரத்தை அடைந்து

6. தயிருடன் கூடிய ஹவிஸை பூதங்களுக்கு பலிகொடுக்க வேண்டும். பலியை கிழக்கு முதலான எட்டு திசைகளிலும் சந்தனம் புஷ்பம் இவைகளுடன் சேர்ந்ததாக செய்ய வேண்டும்.

7. லக்ஷணத்தோடு கூடினதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்ட அரிவாளோடு கூடி கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ அமர்ந்து ஹ என்று அஸ்த்ர மந்திரத்தை நினைத்து

8. கதிரை (நெல்) அறுத்து மேடையின் மேல் வைக்க வேண்டும். அந்த நெற்கதிருடனும் கூடிய புதிய நெல்லுடன் கூடிய

9. அரிசி முதலானவைகளுடன் பலவித காய்கறி பொருட்களுடனும் தேங்காய் புதிய பாக்குப்பழத்துடனும்

10. மிளகு, வெல்லக்கட்டியுடனும் கரும்பு, பல காய் கனிகள் பலவித உருதுணைப் பொருட்களும் (ஊறுகாய், கறி, கூட்டு முதலியன)

11. தனித்தனியான கிழங்கு பழங்களுடனும், அவ்வாறே பூஜைக்கு உரிய பொருட்களுடனும் ஆச்சர்யமேற்படும் வஸ்துக்கள் பலவித வாத்யங்களிவைகளுடன்

12. நாட்யம், பாட்டு, பலவித கொடிகள், பலவித குடைகள் இவைகளுடன் கூடி நகரம் முதலான பிரதேசங்களை அடைந்து

13. கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்து பூர்ணகும்பம் பலவிதமான தீபங்களுடனும் கூடி

14. வாழைமரம் பலவிதமான மங்களப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தை அடைந்து நெற்கதிரிலிருந்து நெல்லை எடுத்து வெய்யிலில் காயவைத்து

15. மூங்கில் முதலானவைகளாலான பாத்திரத்திலோ சாணம் மெழுகப்பட்ட பூமியிலோ மாவினால் கோலமிடப்பட்ட இடத்திலோ வைத்து தீபத்துடன் கூடியதாக

16. சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை குத்தி உமியை நீக்கிசுத்தமான அரிசியை எடுத்து ஜலத்தால் களைந்து சுத்தம் செய்து, மிளகு சீரகம் வெல்லச்சக்கரையுடனும்

17. தேங்காயுடனும் அரிசியை பக்குவம் செய்ய வேண்டும். சுவாமிக்கு ஸ்நபனம் செய்து ஆபரணங்களால் ஸ்வாமியை அலங்கரிக்கவும்

18. நல்ல முகூர்த்தத்தில் பூமியில் நெல்லைப் பரப்பி வஸ்திரத்தை அதன்மேல் வைத்து வாழை இலையை வைக்க வேண்டும்.

19. அஸ்த்ர மந்திரம் கூறி ஜலத்தால் பிரோக்ஷித்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லிக் கொண்டு கருப்பஞ்சாரினால் நனைத்த பக்குவமான அரிசியை வைத்து

20. கவசாய நம: என்று அவகுண்டனம் செய்து ஹ்ருதயாய நம: என்று பூஜித்து தேனுமுத்திரை காண்பித்து பிரம்ம மந்திரங்களினாலோ அல்லது தத்புருஷ மந்திரத்தாலோ

21. பரமேஸ்வரனுக்கு நைவேத்யம் செய்து தாகசாந்திக்கு தீர்த்தமும் கொடுக்க வேண்டும், மேற்கூரிய மந்திரங்களால் தாம்பூலத்தை சுவாமிக்கு நிவேதிக்க வேண்டும்.

22. புதிய பாக்குப் பழத்துடன் தாம்பூலத்தை தேவிக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். மற்ற எல்லா ஸகலமூர்த்திகளுக்கு முன்கூறிய விதிப்படி நிவேதிக்க வேண்டும்.

23. அல்லது நைவேத்ய பாத்திரமான ஸ்தாலிகையில் எடுத்து எல்லா மூர்த்தங்களுக்கும் நிவேதிக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கு ஹோம கர்மாவுடன் முடிக்க வேண்டும்.

24. நைவேத்யம் செய்து தாம்பூலம் ஸமர்ப்பிக்க வேண்டும். பலிதானம் செய்து அதிதிகளுக்கும் வழங்க வேண்டும்.

25. அன்னமும் தண்டுலமும் நிவேதித்து பிறகு ஹோமமாவது செய்ய வேண்டும். அதன்முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். உத்ஸவமின்றியும் செய்யலாம்.

26. ÷க்ஷத்ர (பைரவஸ்வாமி) பலியின்றியும் உரல் ஸம்ஸ்காரமின்றியும் மற்றகிரியைகளை ஸாமான்யமாக செய்து பிறகு குருவை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்த்ரம் தங்க மோதிரத்துடன் தட்சிணையை கொடுக்க வேண்டும். இவ்வாறு யார் நவநைவேத்ய விதியை செய்கிறானோ அவன் நல்ல புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் நவநைவேத்ய முறையாகிற பத்தொன்பதாவது படலமாகும்.
படலம் 18 : பவித்ரோத்ஸவ விதி

பதினெட்டாவது படலத்தில் ஆவணி மாதத்தில் செய்ய வேண்டிய பவித்ரோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தோஷத்தின் அழிவிற்காக செய்ய வேண்டிய பவித்ரகர்மா விளக்கப்படுகிறது என உத்தரவு ஆகும். பிறகு பவித்ர கர்மா அனுஷ்டிக்காத சமயத்தில் தேசிகன், சாதகன், புத்ரகன், சமயீ இவர்களுக்கு குற்றம் உண்டாகும் என விளக்கப்படுகிறது. எந்த சொல், மனது சரீரம் இவைகளின் செயல்களால் உண்டாகிற பயன்களில் இருந்து காப்பாற்ற படுகிறதோ அந்த பொருளானது, பவித்ரம் என பவித்ர பயனின் பொருள் விளக்கப்படுகிறது. பவித்ர ஸமர்பணகாலம் நிரூபிக்கப்படுகிறது. பவித்ரம் தயாரிக்க நூல் சேரிக்கும் முறை கூறப்படுகிறது. பவித்ரம் செய்யும் முறை அதன் அதிதேவதை விளக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ லிங்கங்களை அனுசரித்து நூலின் எண்ணிக்கை விளக்கப்படுகிறது. முடிச்சு போடும் முறையும் செஞ்சந்தனங்களால் நூலை அழகு படுத்தலும் கூறப்படுகிறது. தத்வ சம்பந்தமான யக்ஞசூத்திரமாலை, பாகு மாலை பவித்ரம் இவைகளுக்கு அழகுபடுத்தும் முறை கூறப்படுகிறது. பிறகு க்ஷúத்ரலிங்க விஷயத்தில் விருஷபம் ஸ்வாமி, ஆவரண விஷயம், சண்டிகேஸ்வரர், பைரவர் இவர்களுக்கும் சாத்தக் கூடிய பவித்ரத்தின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு திக்பாலகர்கள் பைரவர் இவர்களுக்கு வலமாக ஒன்று மட்டும் அர்ப்பணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை, விருஷபம் இருக்கும் இடம், கோபுரம் குண்டம் இவைகளுக்கு எல்லா கும்பங்களுக்கும் முப்புரி நூலில் சுற்ற வேண்டும்.

பிறகு பவித்ரஸமர்ப்பணம் முன் தினம் செய்ய வேண்டிய அதிவாச விதி விளக்கப்படுகிறது. முதலில் மண்டபத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. மண்டபத்தில் வேதிகை, குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. மேற்கு திக்கில் மண்டலம் அமைக்கவும் கிழக்கு திக்கில் பவித்ரத்தை வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டப பூஜை செய்யும் முறையில் பூஜைக்கு பிறகு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஹவிஸ் செய்யும் முறையும் பல்குச்சி, முதலிய விரதத்திற்கு அங்கமான பொருள்களின் அதிவாச முறையும் கூறப்படுகிறது. பிறகு அதிவாசத்தில் பவித்ரத்திற்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சம்பாத ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. சூரியன் முதலானவர்களுக்கு கந்தபவித்ர ஸமர்ப்பணம் நிரூபிக்கப்படுகிறது. சிவனுக்கு ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பணம் கூறப்படுகிறது. அதில் ஆமந்த்ரத்தின் மந்திர விளக்கம் கூறப்படுகிறது. திக் பாலகர்களுக்கும் அஸ்த்ரங்களுக்கும் பைரவர்க்கும் ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பிக்கும் முறை சித்தாந்த புஸ்தகம் தனி ஆசார்யன இவர்களுக்கு பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியில் வந்து ஆசமனம் செய்து பஞ்சகவ்யம் அருந்தி ஆசமனம் செய்து சிவமந்த்ரம் ஜபித்து தூங்கவும் என்று அதிவாஸநம் செய்யும் முறை பிறகு மறுதினம் பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. முதலில் ஆசார்யன் காலையில் ஸ்நான ஸந்த்யா வந்தனம் முடித்து ஸ்வாமியிடம் இருந்து பவித்ரங்களை எடுத்து சண்டிகேஸ்வரருக்காக ஈசானதிக்கில் உள்ள மண்டல பாத்ரத்தில் வைக்கவும்.

பிறகு முறைப்படி விசேஷ ஸ்நபனத்துடன் சிவனை பூஜிக்கவும் ஜபத்திற்கு பிறகு அக்னிகார்யம் செய்து பூரணாஹூதிக்கு பிறகு சூரியன் நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து வரிசை கிரமமாக பிரம்மா, கும்பவர்த்தினி இவைகளுக்கு பவித்ரம் கொடுக்க வேண்டும். பிறகு சரீரம் குருபரம்பரை இவர்களுக்கு பவித்ரம் ஸமர்ப்பிக்கவும் பிறகு பகவான் சிவனின் பொருட்டு என் விருப்பப் பயன் பூர்த்தி அடைவதற்காக என்று வேண்டுதல் மூலம் விளக்கப்படுகிறது. அங்கு ஆத்மதத்வாதி தத்வத்ரய பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. நான்கு மூன்று இரண்டு ஒன்று மாசமோ 15 தினம் 7,5,3,1 தினங்களிலோ ஆரம்பிக்கப்பட்ட காரியம் முடியும் வரை 1 வேளை உணவுடன் சுத்தமாக முடிந்தவரை அனுஷ்டானம் செய்யவும். இந்த விரத அனுஷ்டானமானது பவித்ரத்தை எடுக்கும் வரை செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு நான்காவது பவித்ர ஸமர்பண முறையும் பவித்ரோத்ஸவ வரகார்பண விதியும் கூறப்படுகிறது. பிறகு பவித்ராவரோஹண முறை கூறப்படுகிறது. இவ்வாறு பவித்ரோத்ஸவ கிரியைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக 18 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஹே சிறந்த முனிவர்களே! ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட தீய செயலின் அழிவின் பொருட்டு பவித்ரோத்ஸவத்தை கூறுகிறேன் கேளும்.

2. ஒழுங்குமுறையை கடைபிடிக்காததால் நேர்ந்த பிராயச்சித்தத்தை செய்யத் தவறிய ஆசார்யன் நற்பலனின் குழப்பத்தையடைகிறான் தேசிகன் வியாதியடைகிறான்.

3. புத்ரன் அனுபவிப்புத் தன்மையின்றியும் ஒரே பிறப்பில் சுழலுவதால் ஸமயன் ஸமயஸ்தனின்றி ஆகிறான். மேற்கூறியவை பவித்ர மனுஷ்டிக்காததால் அடைகிறான்.

4. எந்த முறையிலாவது முயற்சியுடன் பவித்ரத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் வாக்கு, மனது, உடலிவைகளாலேற்படும் பாபத்தில்

5. விழுவதிலிருந்து எது காப்பாற்றப்படுகிறதோ அது பவித்ரகம் என்ற கிரியையாகும். இதற்கு ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்கள் உத்தம மத்யம அதமமாகும்.

6. வேறுவிதமாக ஐப்பசி கார்த்திகை மாதமும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் சுக்லபக்ஷ சதுர்தசியில் பவித்ரோத்ஸவம் கூறப்பட்டுள்ளது.

7. மற்ற மாதங்களில் சுக்லகிருஷ்ணபக்ஷங்களில் சதுர்தசி. அஷ்டமிதிதியிலும் பவித்ரோத்ஸவத்தை முறைப்படி செய்ய வேண்டும்.

8. கார்த்திகை தீபோத்ஸவத்திற்கு பிறகு பவித்ரோத்ஸவம் செய்யக் கூடாது. குடும்பமுடையவன் வளர்பிறையிலும், முனிவர்கள் இரண்டு பக்ஷத்திலும் செய்யலாம்.

9. செய்விப்பவன், செய்பவன் இவர்களுக்கு உகந்த நட்சத்ரத்தை கண்டோ காணாமலோ செய்யலாம். பட்டு, பருத்தி இவைகளாலான நூல், முஞ்சை புல்லாலோ இல்லையெனில்

10. தர்ப்பையாலோ, மரவுரி(மரப்பட்டையாலோ) யாலோ நூல்தயாரித்து பவித்ரம் செய்து அதிவாஸம் செய்ய வேண்டும். மூன்றாக உள்ள நூலை மும்மடங்காக சுற்றி அஸ்திர மந்திரத்தினால் சுத்தி செய்ய வேண்டும்.

11. உரோமம் முதலியவைகளை அஸ்திர மந்திரத்தினால் தூய நீரால் அலம்பி ஹ்ருதய மந்திரத்தினால் காயவைத்து அந்த ரோமத்தால் (கம்பளியால்) பவித்ரம் செய்ய வேண்டும்.

12. ஒன்பது நூல்களுக்கு வாமை முதலான ஒன்பது சக்திகள் அதிபர்களாவர். இரண்டு மடங்கான நூல்கள் பத்து முழ அளவினால் அதிகமாகயிருப்பது முதல்

13. நூற்றியெட்டு எண்ணிக்கை வரையுள்ள நூல்கள் உத்தமோத்தமம் ஆகும். பன்னிரண்டுக்கு அதிகமாகி முடிவான பன்னிரண்டு வரை முடிவுள்ளதாக உள்ள

14. நூல்கள் கடைநிலை முறைகளுக்கு ஏற்றதாகும். யவையளவு மெலிந்தான பதினாறு முதல் ஐம்பத்தியொன்று எண்ணிக்கை உள்ளது நடுநிலைக்கேற்றதாகும்.

15. உத்தமமான லிங்கங்களுக்கு எண்பத்தோரு நூல் எண்ணிக்கையுள்ளதாகும். மானுஷ லிங்கங்களுக்கும் அவ்வாறேயாம். ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்கள், பாணம், ரத்னம்

16. ஆகிய லிங்கங்களிலும், ஸ்தண்டிலம், மண்டலம் உத்ஸவபிம்பம், மூர்த்தி பிம்பங்களிலும் எல்லா எண்ணிக்கையுள்ளதாகவுமோ சமமாகவோ, சமமின்றியோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

17. குடும்பமுள்ளவர்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் அவ்வாறே வசதியில்லாத குறைவான லிங்கங்களின் விஷயத்திலும் ஸமமான அளவேயாம்.

18. ஒன்றொன்றாக அதிகரித்து பன்னிரண்டு எண்ணிக்கை வரை நூல்கள், அவ்வாறே நெருக்கமாகவும், புதியதாகவும் பன்னிரண்டு முடிச்சு உள்ளதாகவும் கிரஹிக்க வேண்டும்.

19. ஸம அளவென்ற விஷயத்தில் விரும்பியபடி முடிச்சு போடலாம். முடிச்சின் அளவு ஒன்று முதல் மூன்றங்குல அளவுடையதாக இருக்க வேண்டும்.

20. அறிவாளிகளால் விரும்பிய இடத்தில் முடிச்சுகளை போட வேண்டும். செஞ்சந்தனம் குங்குமப்பூ, கைரிகை, அகில், சந்தனமிவைகளோடு

21. நீலோத்பல கிழங்கு, பச்சை கற்பூரத்துடனும், மஞ்சள் கருஞ்சந்தனத்துடன் ஹ்ருதய மந்திரத்தினால் பூசி அலங்கரித்து அல்லது சிகப்பு நூல்களாலோ

22. மூன்று பவித்ரங்களை ஆத்ம, வித்யா சிவதத்வரூபமாக லிங்க சிரஸில் சமர்ப்பித்து எல்லா தத்வமயமான நான்காவது ஆவுடையாரில் சேர்க்கவும்.

23. பூணூலின் பொருட்டாக சூத்ரமாலை, தோள்பாக பக்க சூத்ர, பவித்ரமாலையை ஸகள விக்ரஹத்திலும் முகலிங்கத்திலும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

24. முழந்தாள் வரை காந்தியுள்ளதாக வெளியில் தெரியும்படியாக மூன்று முதல் விருப்பப்பட்ட நூல் உள்ளதாக பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். யந்திரத்திற்கு லிங்க அளவாகவோ புஷ்பலிங்க அளவாகவோ பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

25. க்ஷúத்ரலிங்கத்திலும், ஸ்தண்டிலம் முதலியவைகளிலும் விருப்பப்படி பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். விருஷபத்திற்கு கொம்பு முதுகு தோள் குளம்பிலுமாக ஒன்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. எல்லா ஆவரண தேவதைகளுக்கும் ஒரு பவித்ரமாகும். சண்டிகேஸ்வரர்க்கும் பைரவர்க்கும் ஒரு பவித்ரமேயாகும்.

27. ÷க்ஷத்ரபாலர், இந்திரன் முதலான திக்பாலகர்களுக்கு வலமாக ஒரு பவித்ரம் ஆகும். யாகசாலை விருஷபஸ்தான, விமானம், ஆலயம் இவைகளை சேர்ந்த

28. எல்லா காரண தேவதைகளுக்கும் மூவிழை நூலால் சுற்றவும் இவ்வாறு மூர்த்தங்களுக்கு பவித்ர முறையை அறிந்து உத்ஸவத்தின் முன் தினம் அதிவாஸத்தை செய்ய வேண்டும்.

29. ஆலயத்தின் முன்பு அல்லது வலது இடது பக்கத்திலோ மண்டபத்தில் ஐந்து முதல் இருபத்தி நான்கு முழ அளவுள்ளதாக

30. பதினாறு அல்லது பன்னிரண்டு தூண்கள் உடையதாகவும் நடுவில் எல்லா அழகோடு வேதிகையோடு கூடியதான நடுவில்

31. மூன்று பங்கு அளவு நீளமும் இருபது தூணையுடையதும் முன்பே நிர்மாணிக்கப்பட்டதுமான மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று முழ அகலமான வேதிகையும்

32. அதைச்சுற்றி நன்கு அமைக்கப்பட்ட ஒன்பது ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களையோ அதே எண்ணிக்கையுள்ள ஸ்தண்டிலத்திலோ வேதிகையுடன் கூடியதாகவோ

33. அமைத்து மேற்கில் மண்டலம் அமைத்து பவித்ரத்தை கிழக்கு நோக்கி வைக்கவும். காலைக்கடன் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் மந்திரதர்ப்பணம் முதலியவைகளைச் செய்தவனாகவும்

34. சூர்ய பூஜையுடன் நித்ய பூஜையையும் செய்து சூர்யனை விஸர்ஜனம் செய்து பூத சுத்தியால் மந்திரமய சரீரமுடையவனாக இருந்து கொண்டு

35. யாகத்திற்காக பூமியை ஸ்வீகரித்து, வாயில் வாயிற்காவலர்கள், வாஸ்துநாயகர், லக்ஷ்மீ யாகயாகேஸ்வரர்கள் திக்பாலகர்கள், வினாயகர், ஸப்தகுருக்கள்

36. இவர்களை பூஜித்து வணங்கி வேண்டி அதன்பிறகு மண்டலத்திலும் பரமேஸ்வரனை பூஜித்து முறைப்படி தேவனின் ஸமீபத்தில் நல்ல ஆஸநத்தில் இருந்துகொண்டு

37. பஞ்சாஸனார்ச்சனை ஆரம்பித்து ஆவாஹநம் வரை செய்ய வேண்டும். பஞ்சாம்ருதத்துடன் கூடியதாக விசேஷஸ்னபநத்துடனும்

38. பலவித வாஸனைப் பொருட்களோடும் பலவித பக்ஷண, போஜ்ய, சாதவகைகளோடும் விசேஷமாக பூஜையைச் செய்து குண்ட ஸமீபம் சென்று

39. குண்டஸம்ஸ்காரம் முதல் பூர்ணாஹூதி வரையிலாக ஹோமத்தை செய்யவும், ஸ்மித், நெய், ஹவிஸ், பொறி, எள் கோதுமை முதலான பயிர்வகைகளையும்

40. புரசு, அத்தி, அரசு ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் வன்னி, கருங்காலி, பில்வம், இச்சி முதலிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

41. பிரதான குண்டத்தில் புரச சமித்தையும் ஹோமம் செய்க. சிவமூலமந்திரத்தை நூறு அல்லது ஐம்பது ஆவ்ருத்தியும் அங்க மந்திரங்களை சிவமந்திரத்திலிருந்து பத்தில் ஓர் பங்காக ஹோமம் செய்ய வேண்டும்.

42. முன்கூறிய எண்ணிக்கையில் பாதியாக மற்ற குண்டங்களில் தத்புருஷன் முதலானதும் ஹ்ருதயம் முதலானதுமான மந்திரங்களை ஹோமம் செய்ய வேண்டும். ஸ்தாலீபக ஹவிஸ்ஸை செய்து அதை ஹ்ருதய மந்திரத்தினால் மூன்றாக பிரிக்க வேண்டும்.

43. கும்பத்திலுள்ள சிவனின் பாகத்தையும் அக்னிகார்யமாக ஹவிஸ்ஸையும் தேனாலும், நெய்யாலும் கலந்து தன்னுடைய பாகத்தை நெய்யால் மட்டும் கலந்ததாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

44. ஹ்ருதய மந்திரத்தினால் தேவனின் பாகத்தை பூஜித்து அதை சிவஸமீபம் எடுத்து சென்று ஈச்வரனை பூஜித்து விரதாங்கங்களை தெரிவிக்க வேண்டும்.

45. முறைப்படி தத்புருஷ மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கில் பற்குச்சியை வைக்க வேண்டும். அகோரமந்திரத்தினால் சுத்தமான பாத்ரத்தில் விபூதியை வைக்க வேண்டும்.

46. மேற்கில் ஸத்யோஜாத மந்திரத்தை நினைத்து சுத்தமான மண்ணை வைக்க வேண்டும். வடக்கில் நெல்லிக்கனியை ஸ்தாபித்து கிழக்கில் ஐந்துவிதமான பக்ஷணங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

47. தர்பையுடன் கூடியதான எல்லா ஹோமத்ரவ்யங்களையும் மேற்கு திசையிலும், தெற்கு திசையில் தண்டம், ருத்ராக்ஷமாலை, கோவணம், பிøக்ஷ பாத்ரங்களையும்

48. கோரோசனை குங்குமப்பூ, நல்லெண்ணை, ஊசி, சீப்பு, கண்ணாடி, கத்தரிக்கோல், பல், நகம், சுத்தி செய்யும் கருவி, கண்மை இவைகளையும்

49. வேறான மைபாத்ரம் போன்ற பொருட்களை வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். சுண்ணாம்புடன் கூடிய தாம்பூலத்தை தத்புருஷ மந்திரம் கூறி கொடுக்க வேண்டும்.

50. வடகிழக்கு திசையில் ஆஸனப்பலகை, குடை பாதுகை, யோகவஸ்திரம் இவைகளை ஸ்தண்டிலத்தில் உள்ள பவித்ர சூத்ர சமீபத்தில் சுற்றிலும் அதிவாஸம் செய்து

51. அஸ்திர மந்திரத்தினால் புரோக்ஷித்து கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து தேனுமுத்ரையால் அம்ருதீகரணமாக்கி சிவாம்சமாக தெரிவிக்க வேண்டும்.

52. தேவதேவனுக்காக பிரம்ம மந்திரங்களால் பவித்ராரோபணம் செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் எட்டு மரக்கால் அளவு நெல்லினால் ஸ்தண்டிலம் அமைக்க வேண்டும்.

53. அதன் பாதியளவு 4 மரக்கால் அரிசியும், எள் பொறியுடன் கூடியதாக ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாத்திரத்தில் பவித்ரங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

54. பவித்ரங்களை மண்டலம், வேதிகையின் மேல் பாகம் கும்பஸமீபமிவைகளிலோ வைத்து அர்க்யஜலத்தால் புரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தினால் அபிமந்திரணம் செய்ய வேண்டும்.

55. மான்தோல் முதலியவைகளால் போர்த்தி அக்னிஸமீபம் வைக்க வேண்டும். ஓர் ஆண்டின் குறைவில்லாத எல்லா கார்யத்திற்கும் ஸாக்ஷியாகவும்

56. ரக்ஷிப்பதற்காகவும், கர்மாவின் பயனையடைய நிச்சயித்தின் இருப்பிடமாகவும் சிவனை நினைத்து, சிவமந்திரம், பிரம்ம அங்க மந்திரங்களால்

57. இருபத்தியொரு முறை ஸம்பாத ஹோமம் செய்து மேற்கூறிய மந்திரங்களால் ஹோமம் செய்ய வேண்டும். சூர்யனுக்குகந்த பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து,

58. யாகசாலை, வ்ருபஸ்தானம் பிரகாரம் கோபுரம், அக்னி ஆகியவர்கள் சேர்ந்த காரணதேவர்களை கவச மந்திரத்தினால் ஐந்து சூத்ரத்தினால் சுற்ற வேண்டும்.

59. நந்தி முதலான மூர்த்திகளுக்கு பிரதட்சிணமாக கந்தபவித்ரம் கொடுக்கவும், முன்பு போல் ஆலயத்தில் நுழைந்து பிரம்மாவிற்கு பவித்ரம் கொடுக்க வேண்டும்.

60. ஹே பகவானே இந்த பவித்ரங்களை ஸம்ஸ்கரிக்கப்பட்டவைகளாக்கி குடத்திலிருக்கும் சிவனின் பொருட்டு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவிக்கவும்

61. காப்பாற்றும் பொருட்டு தேவர்களுக்கு கந்த பவித்ரத்தை ஸமர்ப்பித்து முதலில் கும்பத்திற்கும் வர்த்தனிக்கும் ஸமர்ப்பித்து சிவஸமீபமடையவும்.

62. தன்மூர்த்தியான சரீரத்திலும் குரு பரம்பரையிலும் கந்த பவித்ரம் கொடுத்து ஓர் முடிச்சையுடையதும் குறைவான நூலால் நிர்மாணிக்கப்பட்டதும்

63. புகையூட்டப்பட்டு புஷ்பத்துடன் கூடியதும், தேனு முத்ரையால் அம்ருதீகரணம் செய்யப்பட்டதுமான ஆமந்திரண பவித்ரத்தை அஞ்சலி ஹஸ்தமாக எடுத்து,

64. அவன் தலையில் சிவனின் பொருட்டு ஏற்றி ரேசககிரியையால் சிவமந்திரத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும். தேவனுடைய சன்னதியில் ஆமந்திரண மந்திரத்தை கூற வேண்டும்.

65. ஹே ப்ரபோ எல்லா கார்யங்களின் குறைகளை சரி செய்பவரே யாகத்தை குறித்து உன்னை, உன்னுடைய விருப்பத்தை அடைய காரணனாக ஆமந்திரணம் செய்கிறேன்.

66. அதன் விருப்பப்பயனை நீவிர் அறிவீர். சித்துக்கும், அசித்துக்கும் தலைவரே எல்லாவிடத்திலும் எப்பொழுதும் சம்போ உனக்கு நமஸ்காரம், எனக்கு அருள்பாலிப்பீராக!

67. என்று ஜபித்து நிவேதித்து தேவனை ஸ்தோத்தரித்து நமஸ்கரித்து க்ஷமாபிரார்த்தனை செய்து திக்பாலகர்களுக்கும் தசாயுதங்களுக்கும் பவித்ரார்ப்பணம் செய்ய வேண்டும்.

68. சருவின் மூன்றாவது பாகத்தை வஹ்நியில் இருக்கும் தேவனுக்கு ஸமர்ப்பித்து அக்னியில் இருக்கும் தேவர்க்கும் முன்பு போல் ஆமந்திரண பவித்ரத்தை கொடுக்க வேண்டும்.

69. ஓம் இந்த்ராய நம: பலிம் ஸங்க்ருஹாண என்பதாகவும் மற்ற மூர்த்திகளுக்கும் முறைப்படி பஹிர் பலியைகொடுக்க வேண்டும்.

70. வடமேற்கு திசையில் பைரவருக்காக பலிகொடுத்து ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹூதி செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

71. பூ:, புவ: ஸுவ: பூர்புவஸ்ஸுவ, என்ற பதங்களால் தனித்தனியாகவும் சேர்ந்ததாகவும் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயேஸ்வாஹா, ஸோமாயஸ்வாஹா அக்னீ÷ஷாமாப்யாம் (பூஸ்வாஹா, புவஸ்வாஹா, ஸுவஸ்வாஹா, பூர்புவஸ்ஸுவ ஸ்வாஹா, ஸ்விஷ்டக்ருதேஸ்வாஹா)

72. ஸ்வாஹா என்றும் முன்பு கூறப்பட்ட தீப நாஹுதி மந்திரங்களால் ஹோமம் செய்து மண்டலத்திலுள்ள சிவனோடு அக்னியிலுள்ள சிவனையும் பிறகு

73. நாடீ ஸந்தாநமுறைப்படி சேர்ந்ததாக பரமேஸ்வரனை பாவிக்கவும். ஸித்தாந்த புஸ்தகத்திலும் தன் ஆசார்யனிடத்திலும் பவித்ரத்தை கொடுத்து

74. யாகசாலையிலிருந்து வெளி வந்து ஆசமனம் செய்து பல்துலக்குதல் பஞ்சகவ்யம் ஹவிஸ் புசித்தலை முறைப்படி செய்ய வேண்டும்.

75. பிறகு ஆசமனம் செய்து சிவமந்திரத்தை நினைத்து கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் செய்யப்பட்ட ஸ்னானம் ஸந்தியாவந்தனம் மந்திர தர்பணமுடையவனாக

76. விஸர்ஜனம் செய்யப்படாத ஈச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுக்க வேண்டும். அவைகளை வடகிழக்கு திசையிலுள்ள மண்டல பாத்ரத்தில் சண்டேஸ்வரனுக்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

77. தேவனிடம் அஷ்டபுஷ்பம் சாத்தி லிங்கத்திலிருந்து தேவனை விஸர்ஜனம் செய்க. (நிர்மால்ய பூஜைசெய்க) ஆசமனம், மந்திரநியாஸம், ஸாமான்யார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு

78. நித்யானுஷ்டானங்களையும், செய்து ஆசமனத்தையும், மந்திர விக்ரஹபாவனையும் செய்து கொண்டு வாயில் வாயிற்படி தேவதைகளை பூஜித்து அஸ்திரங்களை கும்பத்தையும் பூஜித்து,

79. திக்பாலகர்களையும் தசாயுதங்களையும் முறைப்படி பூஜிக்க வேண்டும். பிரகாசமாந ஆஸனத்தில் வடக்கு முகமாக நேராக அமர்ந்து

80. பூதசுத்தி விசேஷார்க்யம், திரவ்ய சுத்தி, சிவஹஸ்தபாவனை இவைகளையும் செய்து பஞ்சகவ்ய பூஜையையும் செய்து

81. விசேஷமான ஸ்நபனபூஜையுடன் பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்துடன் கூடியதாக அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும்.

82. ஜபம் செய்து ஸமர்ப்பித்து ஆசார்யன் குண்ட ஸமீபத்தையடையவும் குண்டத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து மேகலை, பரிதி இவைகளிலிருக்கும்

83. தேவர்களை பூஜித்து, முறைப்படி ஸ்ருக்ஸ்ருவாஜயஸம்ஸ்காரம் செய்து, பூர்ணாஹூதி செய்து, சிவனை ஆவாஹித்து, பூஜித்து திருப்தி செய்விக்க வேண்டும்.

84. பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். பிறகு சூர்யனுக்கு பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து மந்திரமயசரீரமாக்கி கொண்டு

85. நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து உள்ளே நுழைந்து பிரம்மாவிற்கும், சிவகும்ப வர்த்தநீகும்பத்திற்கும் முறைப்படி பவித்ரம் கொடுக்க வேண்டும்.

86. தேவ சமீபம் சென்று தன் ஆஸனத்தில் அமர்ந்து (விபவாநுசாரமாக) சக்திக்கேற்றவாறு விசேஷ பூஜை செய்து

87. ஸ்வமூர்த்தத்திலும் குரு வரிசைகளில் சிவனை ஸ்மரித்து பவித்ரம் கொடுத்து வர்ஷ, ருது, மாஸ, பக்ஷ, தின நாடீ ப்ராணாதி, விக்ரஹமாயும்

88. எல்லாவித கண் முதலான இந்திரியமுள்ள சரீரம் பொருள், செயலின் காரணமாயும், செய்யப்பட்ட செய்யப்படாத சேர்க்கப்பட்ட விடுபட்டகார்யங்களுக்கு ஒரே ஸாக்ஷியாகவும்

89. பூமியை காப்பவருமான ஈசானனை சுத்தமனதை உடையவன் சரணாகதியாக கூறி ஈச்வர முகத்தை நோக்கி பவித்ரத்தை கையில் உடையவனாக இறைவனை

90. காலாத்மாவான உன்னால் ஹேதேவ என்னால் செய்யப்பட்ட இந்த முறையில் பார்க்கப்பட்டு குறைத்து சேர்த்து, அபஹரித்து மறைத்து இவ்வாறாக என்னால் செய்யப்பட்டதை

91. குறைவானது குறைவில்லாதது, செய்யப்பட்டதும், செய்யப்படாததும் ஆன கிரியை நிறைவுள்ளதாக்கி இந்த சர்வாத்மாவான சம்புவினால் உள்இச்சையால் பவித்ரத்தோடு

92. யாகத்தின் விரதபயனை பூர்த்தி செய்யும் என்று இருமுறை கூறி நியமேஸ்வராய ஸ்வாஹா என்றும் கூறி

93. ஆத்மதத்வாதி பதயே சிவாய நம: என்றும் வித்யாதத்வாதிபதயே சிவாய நம: சிவதத்வாதிபதயே சிவாய நம: என்றும் முக்தி விருப்பத்தையுடைய பதமாக கூற வேண்டும்.

94. அனுபவிப்பதை குறிக்கோளாக உடையவர் சிவதத்வம் முதலாக மூன்று பவித்ரத்தை சிரஸில் ஸமர்ப்பிக்கவும். சிவமந்திரத்தை முதலில் கூறி சிவவித்யா ஆத்ம தத்வத்தையும்

95. கூறி, பிறகு ஸர்வதத்வேஸ்வராய என்று கங்காவதாக பவித்ரத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாஞ்சலி ஹஸ்தத்தோடு பக்தியோடு ஈச்வரனை விஞ்ஞாபிக்க வேண்டும்.

96. சராசரமான உலகில் எல்லா பிறப்புகளுக்கும் உன் கதி ஸ்திரமாயிருக்கிறது. பூதங்களின் உள்புறம் சஞ்சரிப்பவராக நீர் காணப்படுகிறீர்.

97. கர்மா, மனது, வாக்கு இவைகளால் செய்யக்கூடிய செய்கையானது எனக்கு உன்னிடமிருந்து இன்றி வேறில்லை. மந்திர குறைவு, செயல்குறைவு பொருட்குறைவு ஆகியவைகளுடன்

98. ஜபம், ஹோமம், அர்ச்சனை இவைகளின் குறைவை என்னால் உமக்கு நித்யம் செய்யப்பட்டதாகவுள்ளதை செய்யப்படாததாக எண்ணி வாக்யக் குறைவையும் மேற்கூறியவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

99. ஸுரேஸ்வர பாபத்தை யழிக்கக் கூடியதாகவும் சுத்தமானது பவித்ரம். எல்லா ஸ்தாவரஜங்கமங்களும் உன்னால் சுத்தியாக்கப்பட்டதாகும்.

100. விரதத்தின் குறைவுப்பட்ட சேர்க்கையால், ஹேதேவ, என்னால் எது துண்டிக்கப்பட்டதோ அவை எல்லாம் உன் உத்தரவினால் நிரப்பப்பட்டு ஒன்றாகச் சேர்ந்ததாக ஆகட்டும்.

101. ஜபம் செய்து ஈச்வரனிடம் தெரிவித்து நமஸ்கரித்து ஈச்வரனிடமிருந்து நியமமாக பக்தியோடு இருந்து நமஸ்கரிக்க வேண்டும். நான்கு மூன்று இரண்டு ஒரு மாஸமுமோ

102. பதினைந்து தினம் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று ஒரு தினமாகவோ, பூஜை ஆரம்பித்து முடியும் வரை நியமத்தை கடைபிடிக்க வேண்டும்.

103. ஒருவேளை உணவு முதல் எந்த நியமமுண்டோ அவற்றை சக்திக்குதக்கவாறு கடைபிடித்து ஈச்வரனிடமிருந்து பவித்ராவரோஹணம் செய்யும் வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

104. தசாயுதங்களிடமிருந்தும் திக்பாலகர்களிடமிருந்தும் ஸூத்ரத்தை எடுத்ததாக நினைத்து அக்னியிலுள்ள சிவனிடம் நான்காவது பவித்ரத்தை கொடுத்து வியாஹருதிகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

105. வஹ்னியை ஸ்விஷ்டக்ருத்ஹோமம் வரை நிறுத்தி ஹோமம் செய்து உள்ளே நுழைந்து தேவனை பூஜித்து குருவிற்கும் ஸித்தாந்த புஸ்தகத்திற்கும்

106. பவித்ரம் கொடுத்து திக்பாலபலி கொடுத்து ஆசார்யன் ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹுதி செய்து குறைவை நிறைவு செய்யும் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

107. மண்டலத்திலுள்ள தேவனை பூஜித்து ஈச்வரனை மன்னித்தருள கேட்க வேண்டும். அதன் முடிவில் உணவு, உடை, மற்றும் உபகரணப்பொருட்களால்

108. தீக்ஷிதர்களை பூஜித்து என்னிடம் ஸதாசிவன் அன்பாக இருக்கக் கடவன் என கூற வேண்டும். லிங்கத்திலிருந்து பவித்ரத்தை எடுத்து நிர்மால்ய குழியில் போட்டதும்

109. ஸ்நானம் செய்யப்பட்டு பூஜித்த காலத்தில் அதை நிர்மால்ய குழியில் வைத்துப் பிரதிதினமும் விஸர்ஜனம் செய்யாமலிருக்கவும் அதிகமான தினங்கள் வரை விரத முடிவில் பூஜித்து

110. விரதத்தை தெரிவிக்கிறேன் என்று கூறி எனக்கு பலனை யளிப்பதாக ஆகட்டும் போகத்தை விரும்புபவன் விரதியாகவும் விருப்பத்தில் கர்மாவிற்கு கட்டுப்பட்டவன் என்றும்

111. மந்திர தர்பணம் வரை செய்து பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். விபூதி கொடுத்து வஹ்னியிலிருப்பவரை சிவனிடம் சேர்க்க வேண்டும்.

112. வஹ்னியிலிருந்து மந்திரத்தை எடுத்து அதை த்வாதசாந்த ஸமீபம் சேர்த்து ஹ்ருதயத்தில் ஸமர்ப்பித்து அக்னியை விஸர்ஜித்து விஷ்டரத்திலிருந்து தேவர்களை விஸர்ஜித்து

113. பரிதிகளையும் பலிகொடுத்ததாக விஸர்ஜித்து ஆசமனம் செய்து சிவகும்ப அஸ்த்ர வர்த்தநீ கும்ப மந்திரங்களை ஸம்ஹரித்து சேர்க்க வேண்டும்.

114. ஈச்வரனிடத்தில் விருப்பத்தை கூறி மன்னித்தருளும் என்று விஸர்ஜனம் செய்து, லோக பாலகர்களை தசாயுதங்களுடன் சேர்ந்ததாக வேண்டும் வாயிற்படியிலுள்ள திவார தேவதைகளையும்

115. சூர்யன் வரை விஸர்ஜனம் செய்து மஹேச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுத்து சண்டேசனிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.

116. பவித்ரங்களை நிர்மால்யமாகவும் வேறுவிதமாகவும் செய்யப்படாவிடில் அகோர மந்திரத்தை லக்ஷõவர்த்தி செய்து பத்தில் ஓர் பங்கு ஹோமம் செய்க.

117. நித்யபூஜாங்க பவித்ரத்தை புஷ்பம் முதலியவைகளால் கொடுக்க வேண்டும். நித்ய பவித்ரம் கொடுத்தாலும் ஸம்வத்ஸர பவித்ரத்தையும் கொடுக்க வேண்டும்.

உத்தரகாமிக மஹாமந்திரத்தில் பவித்ர சமர்ப்பண முறையாகிற பதினெட்டாவது படலமாகும்.
படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை

பதினேழாவது படலத்தில் ஆடிமாத பூரநட்சத்ர விளக்கப்படுகிறது. முதலில் ஆடிமாத பூர நட்சத்ரம் கூடிய தினத்திலோ ஐப்பசிமாத பூரநட்சத்திரத்திலோ இங்கு பூஜை செய்க என விளக்கமாக காலம் கூறப்படுகிறது. பிறகு தேவிக்கும், அல்லது ஸ்வாமி, அம்பாளுக்குமோ ரக்ஷõபந்தனம் செய்க. காலையில் கன்னிகைகளுக்கு ஸ்வர்ணங்கள் வஸ்திரம் உணவு இவைகளை கொடுத்து தேவிக்கு பால் நிவேதனம் செய்யவும், எல்லா அலங்கார ஸஹிதமாக தேவியை கிராம பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் சேர்க்கவும், கிராம பிரதட்சிண சமயத்தில் உப்புடன் கூடிய முளைப்பயறு நிவேதனம் செய்ய வேண்டும். ஆஸ்தான மண்டபத்தில் வலம் வருதல் விதிக்கப்படுகிறது. பிறகு சூர்ணோத்ஸவம் இன்றி அரிசி முதலிய தானம் மட்டுமே செய்க என சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அஸ்த்ரதேவனுடன் கூடி தேவியை நதி முதலான தீர்த்தங்களுக்கு அழைத்து சென்று தீர்த்தவாரி உத்ஸவபடி செய்ய வேண்டும். தீர்த்த விழாவிற்கு பிறகு தேவியை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீர்த்தோத்ஸவம் இன்றி கிராம பிரதட்சிணம் மட்டும் செய்க என வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமிக்கும், தேவிக்கும் கிராம பிரதட்சிண பூர்வமாக தீர்த்தோத்ஸவம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. தீர்த்தோத்ஸவத்திற்கு பிறகு ஆலயம் அமைத்து அங்கு ஸ்நபனம் செய்து வாசனையுடன் கூடிய தாம்பூலத்துடன் மஹாஹவிஸ் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய பூஜை செய்க என சுருக்கமாக விளக்கப்படுகின்றது. முடிவில் தேவியின் திருப்தி காரணத்திற்காக இந்த பூர நட்சத்திர பூஜா விதானம் எல்லா தீங்கு நிவிருத்திக்காகவும் எல்லா பாப அழிவிற்காகவும் எல்லா கார்ய சித்திக்காகவும், எல்லா விருப்ப பூர்த்திக்காகவும் செய்ய வேண்டும் என பலஸ்ருதி காணப்படுகிறது. இவ்வாறாக 17வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஆஷாடம் என்கிற ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்திலோ, ஐப்பசி மாத பூர நட்சத்திரத்திலோ இந்த பூரநட்சத்திர பூஜையை செய்யவும்.

2. தேவிக்கு முன்பு கூறிய முறைப்படி இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தேவனுக்கும் தேவிக்குமாவது ரக்ஷõபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் முதலியவைகளையும்

3. வஸ்திரம், உணவு முதலியவைகளை கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக தேவியை கிராம வீதி வலம் செய்ய வேண்டும்.

4. அந்த ஸமயத்தில் முளையிட்ட பாசிபயிரை உரிய இலக்கணமுடையதாக அர்ப்பணிக்க வேண்டும். கிராம பிரதட்சிணத்திற்கு முன்பு நைவேத்யம் கொடுத்தோ கொடுக்காமலோ பூஜிக்க வேண்டும்.

5. ஆஸ்தான மண்டபத்தையடைந்து தட்டி சுற்றுதலை செய்க. சூர்ணோத்ஸவ முறைப்படி மஞ்சட் பொடியையும், நல்லெண்ணையையும்

6. தேவனுக்கும், தேவிக்கும் கொடுத்து பிறகு ஜனங்களுக்கும் கொடுக்க வேண்டும். தாம்பூலம், பலவித காய்கறிகள் அரிசி முதலியவைகளுடன் மஞ்சட் பொடியையும் கொடுக்க வேண்டும்.

7. சூர்ணோத்ஸவமின்றியும் அரிசி முதலியவைகளை அளிப்பதுமின்றியுமாக சக்த்யஸ்திரத்துடன் தேவியை நதி முதலான தீர்த்தங் களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

8. நெல் முதலானவைகளால் இரண்டு ஸ்தண்டிலம் அமைத்து அதில் முன்னதாக சூலாஸ்திரத்தையும் தேவியையும் ஸ்தாபித்து அதற்கு முன்பாகத்தில்

9. ஸ்நபன முறைப்படி அந்த குடங்களை முறைப்படி ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தினால் ஸத்துமாவு, பழங்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

10. பிறகு அந்த கும்ப தீர்த்தங்களால் அந்த சக்தியஸ்திரத்தை அபிஷேகம் செய்வித்து தீர்த்த மத்தியில் ஜனங்களுடன் கூடி சூலத்துடன் ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும்.

11. தீர்த்தவாரி கார்யமின்றி, கிராமவீதி வலம் வரையில் அந்த தினத்தில் அணையா விளக்கு, வாடாதமலை இவைகளுடன் கூடியதாகவும் செய்யலாம்.

12. பலியை கொடுப்பதுடன் கூடியதாக ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். அல்லது இரவிலோ பகலிலோ பலி ஹோமமிவைகளுடன் சேர்ந்ததாகவும்

13. எல்லா அலங்காரத்துடன் பிம்பத்தை வீதிவலம் வரச் செய்து எல்லா ஜனங்களுடன் கூடியதாக செய்ய வேண்டும். பலவகையான இனிமையான பழங்களையும்

14. வெல்லக்கட்டியுடன் கூடிய ஸத்துமாவையும் கொடுக்க வேண்டும். பலவித அப்பங்களுடனும் பலவகையான பழங்களையும்,

15. வெல்லம், பழம் ஸத்து மாவையும் தீர்த்தக் கரையில் ஈசனுக்கு நிவேதித்து, தேவதேவிக்கு முன்பாக புதியதீர்த்தத்தில் தீர்த்தவாரி செய்து

16. அல்லது திரிசூலத்துடன் கூடியாவது தீர்த்தவாரி செய்து பின் ஆலயத்தையடைந்து, பூஜையுடன் கூடியதாக ஸ்நபனம் செய்ய வேண்டும்.

17. பிரபூதஹவிஸ் என்ற பாவாடை நிவேதனம் செய்து, முக வாசனையோடு தாம்பூலத்தையும் நிவேதித்து ஆசார்யனை பூஜிக்க வேண்டும்

18. வஸ்திரம், ஸ்வர்ணம், மோதிரமிவைகளோடு தட்சிணையையும் குருவிற்கு கொடுக்க வேண்டும். எல்லா பாபங்களின் அழிவிற்கும், எல்லா கெட்ட கிரியைகளின் நிவ்ருத்திக்கும்

19. எல்லா விருப்ப பயனை அடைவதற்கும் எல்லா செயலும் சித்திப்பதற்காகவும் தேவிக்கு மகிழ்ச்சியையளிக்கக்கூடிய இந்த ஆடிப்பூர பூஜையை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆடிமாத பழ பூஜா முறையாகிற பதினேழாவது படலமாகும்.
படலம் 16 : ஆனி மாத பழ பூஜை

பதினாறாவது படலத்தில் ஆனிமாதத்தில் செய்யவேண்டிய பழ பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. ஆனிமாத மூல நட்சத்ரம் கூடிய தினத்தில் பழபூஜைசெய்ய வேண்டும் என காலநிரூபணம் ஆகும். பஞ்சாம்ருத ஸஹிதம் விசேஷ ஸ்நபனம் செய்து பாயசநைவேத்யத்துடன் விசேஷ பூஜை செய்து சமித், நெய், அன்னம். இவைகளால் விசேஷ ஹோமம் செய்து பலவித பழத்துடன் கூடிய திரவியங்களால் பூர்ணாஹூதி செய்ய வேண்டும். பிறகு பீடத்திலிருந்து லிங்க சிரஸ்வரை பழங்களால் நிரப்பவேண்டும். அதற்கு முன்பாக இரண்டு வஸ்த்ரத்தால் லிங்கத்தையும் பீடத்தையும் மூடவேண்டும், அடுத்த பூஜா காலத்திலும் அல்லது மறுதினத்திலோ பழங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் பழபூஜை முடிவில் தேசிகனுக்கு வஸ்த்ரஸ்வர்ணங்களால் பூஜை செய்க என பழ பூஜாவிதியில் செய்யவேண்டிய கார்யங்கள் விளக்கப்படுகிறது முடிவில் பழபூஜா விதானத்தில் கர்த்தாவின் மனோபீஷ்டம் சீக்ரம் ஏற்படும் என பலன் கூறப்படுகிறது. இவ்வாறாக 16வது படலகருத்து தொகுப்பாகும்.

1. ஜ்யேஷ்ட மாதமென்கிற ஆனிமாதத்தில் மூல நட்சத்திரத்தில் இனிமையான பழங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபநம் பஞ்சாம்ருதத்துடனும்

2. பாயஸ நிவேதனத்துடன் விசேஷ பூஜையுடனும், சமித்து, நெய், அன்னம் இவைகளுடன் கூடிய விசேஷ ஹோமத்துடனும்

3. பலவிதமான பழங்களுடன் கூடிய பொருட்களால் ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்து லிங்கத்தின் தலைபாகம் வரை பழங்களால் நிரப்ப வேண்டும்.

4. பழங்களால் லிங்கம் முழுவதும் மூடியதாகவோ, அல்லது லிங்கம் (பாணம்) தவிர மற்ற இடங்களில் பழங்களை நிரப்பி, கவச மந்திரத்தினால் வஸ்திரத்தினால் லிங்கம் பீடம் இவற்றை போர்த்த வேண்டும்.

5. அடுத்த ஸந்தியா பூஜா வேளையிலோ அடுத்த தினத்திலோ அந்த பழங்களை எடுத்து வெளிக் கொணரவும். பூஜை முடிவில் யஜமானன் ஆச்சார்யனை வஸ்திர தட்சிணைகளால் பூஜிக்க வேண்டும்.

5.5. யஜமானனுக்கு எந்த பயன் விருப்பத்தையளிக்க வல்லதாக உள்ளதோ அந்த பயனை சீக்ரம் அடைவான்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆனிமாத பழ பூஜா முறையாகிற பதினாறாவது படலமாகும்.
படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி!

பதினைந்தாவது படலத்தில் வைகாசி மாசத்தில் செய்யவேண்டிய சீத கும்பவிதியை கூறுகிறார். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்தரம் கூடிய தினத்தில் சீத கும்ப விதி செய்யவேண்டும் என்று காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கிராமங்கள் தீயினால் நஷ்டமானாலும் கிரஹங்கள் வக்ரமாக நிற்கும் சமயத்திலும், பிராணிகள் வியாதியால் பீடிக்கப்பட்டாலும், காய்ச்சல் வைசூரி போன்றவைகள் சம்பவித்தாலும், அந்த தோஷங்களின் நிவர்த்திக்காக உத்பாதம் முதலிய தோஷ எல்லா அத்புதகாலங்களிலும் எல்லா அசுப நிவிருத்திக்காகவும் பிராயச்சித்த விஷயத்திலும் சீதகும்பவிதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் சிரஸ்ஸுக்கு மேல் முக்காலியை வைக்கவும் என கூறி முக்காலி செய்யவேண்டிய விதியையும் தேவதைகளை பூஜிக்கும் பிரகாரத்தையும் வர்ணிக்கப்படுகிறது. பிரதான கும்ப உபகும்பத்தில் அளவு, லக்ஷணம் கூறப்படுகிறது. பின்பக்கத்தில் திவாரத்துடன் கூடியதுமானபிரதான கும்ப உபகும்பத்திலும் செய்யவேண்டிய ஹோமவிதியும் விளக்கப்படுகிறது. ஹோமகாலத்தில் பசுவின் காம்பில் இருந்து விசேஷமாக பாலை கறக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேகவிதி நிரூபிக்கப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்யவேண்டிய நைவேத்யவிதி நிரூபிக்கப்படுகிறது. பலவித வாத்யகோஷங்கள் ஜயசப்தங்கள் ஸ்தோத்ரங்கள் நாட்யவிசேஷங்கள் இவைகளால் ஈசனை சந்தோஷிக்க செய்ய வேண்டும் என கூறப்படுகிறது விருப்பப்பட்ட பயனை அடையும் வரை தினம் தோறும் ஈசனை பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு முதல் தினத்தில் செய்யவேண்டிய விசேஷபூஜையை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் ஏழுதினம் 14 தினம், 21 நாள், 1 மாதம், இரண்டு, மூன்றுமாதமாகவோ, இவ்விதியை அனுஷ்டிக்க வேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கும் விதியும் அவர்களின் உணவிற்காக காய்கறிகளுடன் கூடிய அரிசி முதலியவைகளின் தானவிதியும் கூறப்படுகிறது. தினம்தோறும் பக்தர்கள், முனிவர்கள், ஏழை ஆதரவு அற்றவர்கள், ஆகிய ஜனங்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 15வது படலத்தின் கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு விசேஷமாக சீதகும்பவிதியை கூறுகின்றேன். வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்திலும் பஞ்ச மேற்பட்டபொழுதும் இந்த பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகின்றது.

2. ஸகலவிதமான கெடுதல் நாசமடையவும், எல்லா விதமான வால்நட்சத்ரம் முதலியவைகளின் போக்குவதலின் பொருட்டும் பிராயச்சித்தம் முதலிய கார்யங்களிலும், தீவிபத்துகள் ஏற்படுகின்ற காலத்திலும்

3. ஆடு, மாடு, குதிரை முதலிய நாற்கால் பிராணிகளுக்கு வியாதி, ஜ்வரம், அம்மை முதலியன ஏற்பட்ட காலங்களிலும், அந்தந்த கெடுதல்களை போக்குவதற்காக சீத கும்ப முறையானது கூறப்பட்டது.

4. வேள்விகளுக்கு கூறப்பட்ட மரங்களில் முக்காலியானது எட்டு அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி ஓர் முழம் வரையில் செய்து லிங்கசிரஸில் வைக்க வேண்டும்.

5. ஆசார்யன் எப்படி இடைவெளி இருக்க வேண்டுமோ அப்படியே அமைத்து ஜலத்தினால் அலம்பி கால்களை வஸ்த்திரத்தினால் மூடி தென்பாகத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

6. இடது பக்கத்தில் விஷ்ணுவையும் பின்பக்கத்தில் விருஷப தேவரையும் மூன்று கால்களில் இந்த தேவதைகளையும் பலகையின் மேல் பக்கத்தில் எங்கும் பரவலாக மஹாமாயையும் பூஜிக்க வேண்டும்.

7. இதுபோல் முக்காலியை அமைத்து லிங்கத்தின் தலையில் வைக்கவேண்டும். மண்டபத்தில் எட்டு மரக்கால் நெல் போட்டு ஸ்தண்டிலம் அமைத்து

8. அரிசி எள்ளு பொறி இவைகளை போட்டு கும்பத்தை வைக்கவேண்டும். நான்கு மரக்கால் சிரேஷ்டம் மூன்று மரக்கால் மத்யமம்

9. இரண்டு மரக்கால் அளவு அதமமும் ஆகும். நூல் சுற்றியுள்ளதாயும் வஸ்த்திரமாக கூர்ச்சத்தோடு கோவைப்பழம் ஆக்ருதியோடு

10. தங்கத்தாமரை பஞ்சரத்னங்களோடு சுபமாக பின் பாகத்தில் துவாரம் உடையதாய் தங்க (தண்டுடன்) ஓட்டை உடையதாய்

11. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு நிஷ்க மென்ற அளவினால் நான்கு அங்குல நீளத்தினால் ஊசியின் நுனி துவாரத்தோடு கூடியதாகவும் ஓர் பாத்ரத்தை

12. தேங்காய் முதலிய மூடியோடு கூடியதாக இருப்பதாகவும், மாவிலை வஸ்த்திரம் தங்கம் முதலியவைகளோடு கூடியதாகவும் அதன் முன்பாக உபகும்பமும்

13. அடிப்பாகத்தில் துவாரம் இல்லாததாக திவார பாத்ரத்திற்கு தெற்குபக்கத்தில் வைக்கவேண்டும். பிறகு ஆஸனம் மூர்த்தி பூஜையாக கும்பத்தில் ஆவாஹனம் செய்யவேண்டும்.

14. பஞ்சபிரும்ம மந்திரத்தோடும் கலாமந்திரத்துடன் வித்யா தேகத்தை கல்பித்து ஓங்காரத்துடன் சிவனை ஆவாஹனம் செய்து சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவேண்டும்.

15. பிரதான கும்பத்திலும் உபகும்பத்திலும் இந்த கார்யங்களை செய்யவேண்டும், சந்தன குழம்பு அல்லது தேன், பால், இவைகளை எல்லா நன்மைகளின் பொருட்டு சேர்க்க வேண்டும்.

16. பிராயச்சித்தம், அத்புத சாந்தி, பாபங்களை நாசம் அடைய செய்வதற்காக சுத்த ஜலமோ பஞ்ச கவ்யமோ நிரப்ப வேண்டும்.

17. வாஸனையுடன் கூடிய சந்தனம் விபூதியோடு கூடவோ கல்பிக்கவேண்டும். அல்லது சந்தனம் மாத்ரம் ஆசமனீயத்திற்காக கல்பிக்க வேண்டும்.

18. முடி இல்லாததும் ஐந்துக்களற்றதுமான திரவியத்தை உப கும்பத்தில் சேர்க்கவேண்டும். சந்தனம் முதலானவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் பூஜித்து பிறகு அக்னிகார்யத்தை ஆரம்பிக்கவேண்டும்.

19. ஒன்பது, ஐந்து, ஓர் குண்டங்களில் ஸமித், நெய், அன்னத்தோடு கூடிய எள், பொறி, தேன் ஓஷதிகளோடும்

20. அசோக மரத்தின் ஸமித் இவைகளால் வாருண மந்திரத்தினாலும் அமிருத பீஜத்துடன் கூடிய சிவமந்திரத்தினால் ஸம்புடீகரணம் செய்து

21. ஆப்யதாரண மந்திரத்துடன், ஆயிரம், ஐநூறு, நூற்றெட்டு ஒவ்வொரு திரவியங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

22. ஆப்யாணுமந்தர ஸம்புடிதமான மூல மந்திரத்தை முன்கூறிய எண்ணிக்கைப்படி செய்யவும், ஜபம் செய்கின்றவர்களான எண்மர்களால் வாருண மந்திரம் ஜபிக்கத்தகுந்தது.

23. ரிக், யஜுஸ், ஸாம, அதர்வண, என்ற நான்கு வேதக்காரர்களும் ஆப்யாயஸ்வ, என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும், ஸ்நானம் செய்தவர்களாயும் (அடக்கமுள்ளவர்களையும்) ஹவிஸ் அன்னத்தை சாப்பிடுபவர்களுமான பிராமணர்களால்

24. ஒரே மனதை உடையவர்களாயும் சாந்தர்களாயும், ஆசார்யருடைய கட்டளையை செயல்படுபவர்களாயும் சிவ தீøக்ஷயுடன் கூடியவர்களும் மழையை விரும்புவர்களுமான (பிராமணர்களால்)

25. திருக்கோயில் முழுமையும் ஜலத்தினால் மெழுகுவதினால் இரவுபகலாக ஜலமயமாக்க செய்ய வேண்டும். அந்த காலத்தில் பசுவின் மடியிலிருந்து விசேஷமாக பாலை கறக்கவும் செய்யவேண்டும்.

26. ஆயிரம், ஐநூறு, நூறு எண்ணிக்கை அளவாக பாலின் கறவை விழுமானால் நல்ல புஷ்டியான மழை பெய்யும்.

27. ஹோம காலத்தில் தினந்தோறும் பிராமண சிரேஷ்டர்கள் இவ்வாறு செய்யவேண்டும். பூஜாகாலத்திலும், வாருணீதாரணாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

28. அமிருதமயமான மூல மந்திரத்தை தியானித்து பிறகு வவுஷட் என்பதை முடிவாக கூறி பூர்ணாஹுதி செய்யவேண்டும். தினந்தோறும் சங்கவாத்ய மங்கள கோஷத்துடன் இவ்வாறு செய்யவேண்டும்.

29. நித்ய பூஜை முடிவில் நைமித்திக பூஜையை ஆரம்பிக்கவேண்டும். நைமித்திகம் பெரியதாக இருப்பின் முதலில் நைமித்திகத்தை செய்யவேண்டும்.

30. அனேகவிதமான வாஸனைகளோடு கூடியதும் குளிர்ச்சியான ஜலத்தோடு கூடியதுமாக ஸ்தாபனம் செய்து தேவ தேவனை அமிருதாப்லாவனத்தை நினைத்துக்கொண்டு

31. சந்தனம் அகில் குங்குமப்பூ பச்சைகற்பூரம் இவைகளை அதிகமாகவும் அந்த க்ஷணத்தில் உண்டான சந்தனம் புஷ்பங்கள் இவைகளால் பூஜித்து

32. காரகிலால் உண்டான தூபங்களாலும் இஷ்டமான நெய்யினால் கல்பிக்கப்பட்ட கற்பூரதிரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

33. மண்பாண்டத்தில் தயார் செய்த சால்யன்னமும் நூதன பாண்டத்தில் உயர்ந்த நைவேத்யமும் குடிப்பதற்கு யோக்யமான வாஸனையுடன் கூடிய குளிர்ச்சியான தீர்த்தமும்

34. வெள்ளையான வெற்றிலையும் வாசனையோடு கூடிய பாக்கும் கூடிய தாம்பூலங்களினாலும் தாம்பூலத்தோடு கூடிய பாட்டு வாத்யங்கள் நாட்டியங்கள்

35. புதிய நடன சிறப்போடும் ஸ்வரத்தோடு கூடிய வேதங்களாலும் ஸ்தோத்ரங்களாலும் ஜபம்செய்பவர்களால் ஜயஜய சப்தங்களாலும் அனேக நமஸ்காரங்களாலும்

36. விரும்பிய பலனை அடையும்வரை தினந்தோறும் ஈச்வரனை பூஜிக்கவேண்டும். அதன் முடிவில் தினந்தோறும் ஹோம கார்யம் செய்யவேண்டிய முறையும் கூறப்பட்டது.

37. முதல் நாள் பூர்ணாஹுதிக்கு பிறகு இரண்டு குடத்தையும் எடுத்து தோளிலோ, தலையிலோ வைத்துக் கொண்டு வலம் வந்து

38. ஆலயத்தில் நல்லநாளில் நல்ல கிழமையில் ஆசார்யன், யஜமானன் இருவருடையவும் அனுகூல நட்சத்திரத்தில்

39. நல்ல திதியில் நல்ல லக்னத்திலோ சிவமந்திரத்தை சொல்லிக்கொண்டு துவாரமுள்ள குடத்தை வைத்து அதில் ஒன்பது கும்பத்தில் இருக்கின்ற ஜலத்தை

40. சிவமந்திரம் சொல்லி அமிர்த தாரணையை திரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

41. கூறியுள்ள காலம் வரையில் தினந்தோறும் மீதி ஜலத்தை விடவும் ஏழுதினம், பதினான்கு தினம் இருபத்து ஓர்நாள், ஓர் மாதம்

42. இரண்டு மாதமோ மூன்று மாதமோ இந்த முறையை செய்யவேண்டும். முதலில் ஆசார்யனை வஸ்த்திரங்கள் பஞ்சாங்க பூஷணங்களால் பூஜிக்கவேண்டும்.

43. அரசன் முதலில் பத்து நிஷ்கம் முதலான தட்சிணையை கொடுக்கவேண்டும். முடிவில் இரண்டு மடங்கு பூஜையையும் தட்சிணையையும் கொடுக்க வேண்டும்.

44. மற்றவர்களான எல்லோருக்கும் பொன் வஸ்திரம் மோதிரங்கள் ஓர் நிஷ்க தட்சிணையோடு கூட சிரத்தையோடு கொடுக்கவேண்டும்.

45. தினந்தோறும் சாப்பாட்டிற்காக அரிசி காய்கறிகளுடன் அரசன் சிரத்தையோடு வெற்றிலை பாக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

46. பக்தர்கள், யோகிகளுக்கும் தினமும் சாப்பாடு போடவேண்டும். பிறகு ஏழைகள் ஜனனங்களுக்கு தினந்தோறும் சாப்பாடு செய்யவேண்டும்.

47. முடிவில் ஸ்னபனம் செய்து மஹாஹவிஸ் நிவேதனம் செய்யவேண்டும்.

இவ்வாறு வைகாசி மாத சீதகும்ப விதியாகிற பதினைந்தாவது படலமாகும்.
படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை

பதினான்காம் படலத்தில் சித்திரை மாதத்தில் செய்யக் கூடிய வஸந்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதலில் சித்திரை மாசத்தில் வஸந்தோத்ஸவம் செய்ய வேண்டும். அது இஷ்டத்தை (பலத்தை) கொடுக்க கூடியதாகும் என்று சூசிக்கப்படுகிறது. அதில் முதலில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமன சமயத்தில் ஸ்வாமியை வலம் வரச்செய்து ஸர்வாலங்கார ஸஹிதமாக கிராம பிரதட்சிண பூர்வம் நந்தவனத்தை அடையவும் என்று நந்தவன அலங்காரவர்ணனை கூறப்படுகிறது. நந்தவனத்திலும் செய்ய வேண்டிய உத்ஸவ விதி நிரூபணம் அங்கே வணங்குவதற்காக வஸந்தனும், மன்மதனும் வந்து இருப்பதாக பாவித்து அவ்விருவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பூஜாவிதி வர்ணிக்கப்படுகிறது. பிறகு நாட்யம் வாத்யம் இவைகளால் திவ்யமான பாட்டுகளாலும் காலத்தை போக்கி தேவாலயத்தை அடைந்து ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்க என்று வஸந்தோத்ஸவத்தில் பூஜை விவரம் கூறப்படுகிறது. உத்ஸவம் செய்பவனுக்கு எல்லா விருப்ப பூர்த்தியும் உத்ஸவ பலனாக ஆகும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 14 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. இந்த மாதமான சித்திரை மாதத்தில் இஷ்டமான வஸந்தோத்ஸவம் விதிக்கப்பட்டது. முதல் நாள் காப்புக்கட்டி பலவிதமான மரங்களோடு கூடியதும்

2. பலவிதமான மாலைகளோடு கூடியதும் பல விதமான பழங்களோடு கூடியதும், பலவிதமான வாத்யங்களோடும் பலவிதமான பாட்டுக்களோடும் கூடிய

3. பலவிதமான நடனங்களோடும் கூடிய பலவித வாகனங்களோடும் கூடிய பலவித மணத்தோடும் கூடிய பலபூக்களை வாரி இறைக்கப்பட்டதும்

4. கொடிகளோடு கூடியதும் ஜ்வாலையோடு கூடிய தீபங்களால் பிரகாசிப்பதும் ஆஸ்தான மண்டபத்தோடு கூடியும் ஜலக்ரீடா செய்ய வேண்டிய இடத்துடன் கூடியதுமான

5. ஸகலவிதமான அலங்காரத்தோடு கூடிய தேவர்களின் உத்யானவனத்திற்கு கிராமத்தை வலம் வந்து மாலை வேளையில் ஈசனை சேர்ப்பிக்க வேண்டும்.

6. விசேஷமாக ஈச்வரனை அதில் பிரதட்சிண கிரமமாக செய்து சந்தனம், தூபம், மாலைகள் முதலிய உபசாரங்களால் பூசிக்கவேண்டும்.

7. புஷ்ப பாணத்தையுடைய வஸந்தனை தர்சனம் செய்ய வந்திருப்பதாக பாவித்து ஈச்வரனுடைய இடது வலது பக்கம் அனேகவிதமான வாசனை யோடு கூடியதாக முறையோடு

8. தங்கமயமான வஸ்த்திரங்களை உடையவராக அவ்விருவரையும் பூஜிக்கவேண்டும். இரண்டாவது ஸ்தண்டிலத்தில் எல்லாவிதமான புஷ்பங்களோடு கூடியும்

9. நைவேத்யமான பாயஸத்தை வஸ்த்திரத்தினால் மூடி நிவேதனம் செய்யவும் முடிவில் தாம்பூலத்தை நிவேதித்து விசேஷமாக அவர்களை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

10. நாட்டியம் இவைகளோடு தேவகானத்தினால் பூசை முடித்து மறுபடி ஈச்வரனை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

11. சிவனை ஸ்நபனம் செய்து விசேஷமாக பூசை செய்யவேண்டும். இவ்வாறு விசேஷமாக பூசித்து சிரத்தையுடன் சிவாராதனம் செய்யவேண்டும்.

12. இந்த பிரகாரம் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் எல்லா நன்மைகளையும் இஷ்டங்களையும் அடைகின்றான்.

இவ்வாறு சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறையைக் கூறும் பதினான்காவது படலமாகும்.
படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி


பதிமூன்றாவது படலத்தில் சித்திரை மாதம் தமனபூஜாவிதி பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக மரிக்கொழுந்து தோட்டத்தின் அவதாரம் பற்றி விளக்குவது, பூர்வமாக அந்த பூஜா பலனை நிரூபிக்கிறார். பிறகு தமனம் சேகரிப்பது பற்றி கூறுகிறார். ஸாயங்காலத்தில் அதிவாஸ விதியானது விதிக்கப்படுகிறது. காலையில் அனுஷ்டிக்க வேண்டிய விதியும் நிரூபிக்கப்படுகிறது. பவித்ராரோபண விதிப்படி சிவனை பூஜிக்கவும் என்று அனுஷ்டான கிரமம் சூசிக்கப்படுகிறது. முடிவில் ஹே பகவானே அதிகமானதாகவோ குறைவானதாகவோ என்னால் எந்த தமனார்ப்பண கர்மா செய்யப்பட்டதோ அது ஸம்பூர்ணமாகுக என்று பிரார்த்திக்கவும் என கூறுகிறார். தமநபூஜாவிதிக்கு பிறகு சந்தோஷிக்க படுவதான குருபூஜை, தீட்சிதர்களின் திருப்தியையும் செய்ய வேண்டும். கிருஹஸ்தரோ, பிரம்ம சாரியோ யார் இந்த விதியை ஆசரிக்கிறாரோ அவன் சித்திரை மாத ஜபாதி பலசித்தியையும் அடைவான் என நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 13வது படல கருத்து தொகுப்பாகும்.

1. சித்திரை மாதத்தின் நல்ல பலனையளிக்கக் கூடிய தமனாரோபணம் என்னும் மரிக்கொழுந்து சாற்றும் முறையைக் கூறுகிறேன். முன்பு ஒரு சமயம் சிவனின் கோபத்திலிருந்து தமனன் என்ற பைரவர் தோன்றினார்.

2. அவனால் எல்லா தேவர்களும் அரக்கர்களும் பலசாலிகளும் தன்னடக்கம் உடையவர்களாக ஆனார்கள். திருப்தியடைந்த சிவனால் ஸம்ஸாரமாகிய பூமியில் செடியாக ஆவாய் என்று கூறப்பட்டது.

3. தாந்தநுத்வம் என்கிற மரிக்கொழுந்து வடிவத்தையடைந்து என்னுடைய உபயோகத்திற்காக ஆகப்போகிறாய். எந்த தேவர்கள் உன்கொழுந்துகளால் பூஜிக்கப்போகிறார்களோ

4. அவர்கள் மரிக்கொழுந்து மஹிமையால் உயர்ந்த நிலையை அடையப்போகிறார்கள். எந்த மனிதர்கள் மறுபடியும் குறிப்பிட்ட அளவில் மரிக்கொழுந்து சாற்றும் முறையை செய்யப்போகிறார்களோ

5. அவர்களுக்கு சித்திரை மாதத்தின் பூஜா நற்பயன் என்னால் கொடுக்கப்பட்டதாகும். சப்தமீ திதியிலோ திரயோதசீ திதியிலோ மரிக்கொழுந்து சமீபம் சென்று

6. அஸ்திர மந்திரத்தினால் சுத்தம் செய்து, ஸம்ஹிதா மந்திரத்தால் பூஜித்து சிவவாக்யத்தினால் ஹே தாம! என்பதாக விளிவேற்றுமையோடு கூறி

7. நீ பரமேஸ்வரனின் திருவருளால் இங்கு தயாராயிருப்பாய், சிவனின் உத்தரவால், பரமேச்வரனின் பூஜைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறாய்.

8. என்று மரிக்கொழுந்தை அபி மந்திரித்து, ஸம்ரக்ஷணம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். மரிக்கொழுந்து இருக்குமிடம் வெகுதொலைவில் இருப்பின் வேர் மண்ணுடன் கூடியதாக எடுத்து வந்து

9. மண் நிரப்பிய பாத்ரத்தில் வைத்து நீர் விட்டுக் கொண்டுவர வேண்டும். பிறகு முன்பு கூறிய முறைப்படி வீட்டிலேயே மந்திரங்களை கூறி அபிமந்திரிக்க வேண்டும்

10. மாலை வேளையில் அதிவாஸம் என்னும் முறையை செய்ய வேண்டும். ஸ்நானம் முதலான கடமைகளை முடித்துக்கொண்டு யாகத்திற்கு உபயோகமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு

11. முறைப்படி சூர்யன், சிவன், அக்னி இவர்களை நன்கு பூஜித்து பரமேஸ்வரனுடைய மேற்கில் வேருடனும், மண்ணுடனும் சேர்ந்த தானமருக் கொழுந்தை

12. ஸத்யோஜாதம் அல்லது ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து வடக்கில் வாமதேவம் அல்லது சிரோமந்திரத்தினால் காம்புடன் கூடிய நெல்லிக்கனியை பூஜித்து

13. தெற்கு பக்கத்தில் அகோரம் அல்லது சிகை மந்திரத்தினால் விபூதிக் கிண்ணத்தையும் தத்புருஷம் அல்லது கவச மந்திரத்தினால் கிழக்கில் புஷ்பத்துடன் கூடியதாக பற்குச்சியை வைத்து பூஜித்து

14. வடகிழக்கு பாகத்தில் மூல மந்திரம், காயத்ரி மந்திரத்தினால் பழத்தை சந்தனத்துடன் சேர்ந்ததாக ஸ்தாபித்து ஐந்து பிரிவுகளை உடைய மருக்கொழுந்தை புஷ்பம் அக்ஷதையிவைகளுடன் சேர்ந்ததாக வணங்கி

15. மரிக்கொழுந்து சாற்றுதலுக்காக பரமேஸ்வரனிடன் தெரிவித்து ஹே! பரமேஸ்வரா என்னால் காலையில் நீவிர் அழைக்கப்பட்டுள்ளீர்!

16. உன்னுடைய உத்தரவினால் மரிக்கொழுந்து திருநாள், மிகுந்த பயனை முழுமையுள்ளதாக செய்யவேண்டும் என்று ஈசனின் தலையில் புஷ்பாஞ்சலியை செய்து வணங்கி

17. சிவமந்திரத்தினால் சேர்த்து ஜபம் முதலியவைகளை செய்ய வேண்டும், மீதமுள்ள மருக்கொழுந்து திரவ்யங்களை பாத்ரத்தில் வைத்து அதை தத்புருஷ மந்திரத்தினால் மூடி

18. பவித்ரோத்ஸவ முறைப்படி கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்டதாக செய்து பரமேச்வரனிடம் தெரிவிக்க வேண்டும்.

19. பிறகு உணவின்றியோ அல்லது ஹவிஸ்ஸைமட்டுமோ, உண்ண வேண்டும். சிவாலயத்தின் முன்பு தியானம், பாட்டு, ஜபம் முதலியவைகளால் விழித்திருந்து

20. காலை ஸ்நானம், காலை கடமைகளை முடித்து அஷ்ட புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். விசேஷமாக நித்ய, நைமித்திக பூஜையையும் செய்து

21. மீதமானதும், ஐந்து பிரிவுகளையுடையதுமான மருக்கொழுந்துகளால் தேவனை பூஜிக்கவும், அதிலும் மீதமானதை அருகம்புல், புஷ்பம் அக்ஷதை இவைகளுடன் சேர்ந்ததாக அஞ்சலி ஹஸ்தத்தால் எடுத்து

22. ஐந்து முகமுள்ள ஸதாசிவனை எதிர்நோக்கியுள்ளவராக தியானித்து, ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்வங்களாலும் அதன் அதிபதிகளான ஈச்வரர்களாலும்

23. பவித்ரம் சேர்ப்பிக்கும் முறைப்படி பரமேச்வரனை பூஜிக்கவும். முன்கூறிய ஆத்ம தத்வங்களுடன், இரண்டு, நான்கு, ஆறு என்ற தான உயிரெழுத்துக்களோடும் (ஆ,ஈ,ஊ,ஒள) ஓம் ஹளம் ஆத்ம தத்வாயநம: ஓம்ஹளம் ஆத்மதத்வாதிபதயே சிவாயநம: என்று

24. ஷ என்ற எழுத்து வரிசையின் முடிவான ஹவும், ம் என்ற எழுத்தும் சேர்ந்ததாக பவித்ர மந்திரத்தினால் அஞ்சலி கொடுக்கவும் நான்காவது அஞ்சலி மந்திரமாவது ஓம் என்றும், சிவ மந்திரத்துடனும்

25. விருப்பத்தைக் கொடுக்கக்கூடிய யாகம் யாகேஸ்வரனின் பொருட்டு பூர்த்தி செய்து சூலபாணி என்ற பதத்தை நான்காம் வேற்றுமை நம: என்ற பதத்துடன் கூடியதாக கூறவும் சூலபாணயே நம: எறு அர்ச்சிக்க வேண்டும்.

26. சிவனை பூஜித்து நமஸ்கரித்து முறைப்படி ஹோமம் செய்து பிறகு விருப்பப்பயனை தெரிவிக்க வேண்டும்.

27. ஹே பகவானே, என்னால் செய்யப்பட்ட இந்த பூஜை குறைவுபட்டோ, கூடுதலாகவோ இருப்பின், என்னுடைய பர்வ அளவு மருக்கொழுந்து சாற்றும் திருவிழா எல்லாவற்றிலும் நிறைவுள்ளதாக ஆகட்டும்.

28. என்று இவ்வாறு மருக்கொழுந்து பூஜையை செய்து ஆசானை பூஜித்து, திருப்தி செய்வித்து, ஆசார்யர்களையும் சிவதீøக்ஷ பெற்றவர்களையும் திருப்தியடைய செய்ய வேண்டும்.

29. மனைவி மக்களுடையவனாக இருந்தாலும் பிரம்மசாரியாக இருந்தாலும் இந்த பூஜையை முறைப்படி செய்கிறானோ அவன் சித்திரை மாதத்திற்கு உண்டான ஜபம் முதலியவைகளின் நற்பயனை அடைகிறான்.

இவ்வாறு சித்திரை மாத மரிக்கொழுந்து சாற்றும் முறையாகிற பதிமூன்றாவது படலமாகும்.
படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்யவேண்டிய கந்த பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜைசெய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்தபூஜாவிதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டுபலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்கவேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.
படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.
படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.
படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.
படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி

எட்டாம் படலத்தில் கிருத்திகாமாஸ தீபாரோபண விதி படலம் கூறப்படுகிறது. முதலில் தீபாரோபண கால நிர்ணய பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதற்காக நட்சத்ரதிதி நிர்ணய பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு அங்குரார்ப்பணம் செய்க என கூறப்படுகிறது. தீபா ரோபணத்தின் முன்தினம் அதிவாஸம் செய்தல் வேண்டும். தீப தண்டஸ்தாபன யோக்ய ஸ்தான நிரூபணம், தீபதண்டபிரமாண வாக்யம், தீபதண்டயோக்ய விருக்ஷ நிரூபணம். தீப தண்டத்தில் கீலயோஜநபிரகாரம், அதில் கீலபிரமாணம், கீலபிரமாண வாக்யம் பத்ர தாரணத்திற்கு பிரதிகீலம் சக்ரயோஜந பிரகாரவர்ணணம், பிரதி சக்ரம், தீபிகா யோஜநபிரகார நிரூபணம், தீபிகா ஸங்க்யா வாக்யம், தீபதண்டத்தின் வெளியில் காய்ந்ததான தென்னங்கீற்றுகளால் ஆச்சாதனம் செய்யவேண்டும் என்ற தான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு தீபதண்டத்தில் தக்ஷிண பாகத்தில் தண்டாரோஹ ஸித்திக்காக த்வார கல்பந விஷயத்தில் கல்ப, அனுகல்ப, உபகல்ப மென்றதான மூன்றுவிதம் நிரூபிக்கப்படுகிறது. தீப தண்டஸ்தாபன விஷயத்தில் மாலாகாரமான உருவபேதம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் தீபாரோபணம் எங்கெங்கு செய்யவேண்டும் அந்தந்த ஸ்தானங்களின் பெயர் நிரூபிக்கப்படுகிறது. அதில் கிராமாதிகளில் கிராம வெளியில் தீபாரோபணம் செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு முன்தினமே அதிவாஸம் செய்யவேண்டும் என்ற சூசகத்திற்காக அதிவாஸகர்ம நிரூபணம், அதிவாஸ தீபதண்டஸ்தாபனம் அதனடியில் வேதிகல்பன பிரகாரம் சில்பி விஸர்ஜனத்திற்கு பிறகு அங்கு செய்ய வேண்டிய ஸம்ஸ்கார நிரூபணம், ஹோமவிதி ஆகிய விஷயம் நிரூபிக்கப்படுகிறது.

அதிவாஸத்திற்கு பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும் விதிக்கிலும் பந்தல்கள் அமைக்கவும் என கூறி பந்தலமைப்பு பிரகாரவர்ணம் சூர்யன் மறைந்த சமயமான சாயங்காலத்தில் தீபதண்டத்தை பூஜித்து அதில் வஸ்த்ர யுக்ம வேஷ்டநம், பிறகு பந்தலில் ஸ்தண்டிலங்களில் குண்டங்களிலோ அதிவாஸ ஹோமத்துடன் ஹோமம் செய்க என கூறி அங்கு விதிக்கப்பட்ட ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது. பூர்ணாஹூதி பிரதான முடிவில் எல்லா தீபத்தையும் ஒன்று கூட்டி பாத்திரத்தில் ஸ்தாபனம் பிறகு ஸர்வாலங்கார யுதமாயும் பலவிதவாத்ய ந்ருத்த ஸம்யுதமாயும், பேரயாத்ரா புரஸ்ஸரமாயும், தீபதண்டத்தில் தலையிலிருந்து பாதம் வரை தீபா ரோபணபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் பேர யாத்ரையின்றி தீபாரோபணம் விதேயமென பக்ஷிந்தரம் சூசிக்கப்படுகிறது. அங்கு தீபாரோபண கர்த்தாவான பரிசாரகருக்கு தேசிகனால் வஸ்த்ராதிகளால் பூஜைசெயற்பாலது என கூறப்படுகிறது. ஜ்யோதிர்லிங்கத்தை அனுசரித்து முன்புகல்பிக்கப்பட்ட கூடங்களின் தஹநம் விதேயம் என கூறப்படுகிறது. கூட தஹநமின்றி மற்ற கர்மாவை ஆசரிக்கவும் என பக்ஷõந்தரம் சூசிக்கப்படுகிறது. தோரண கீழ்பாகத்தில் தேவனை தீபதண் பிரதட்சிணம் செய்து ஆலய பிரதட்சிண பூர்வமாக ஆஸ்தான மண்டபம் அடைய வேண்டும். ஆலயங்களில் எல்லா இடத்திலும் தீபா ரோபணம் செய்ய வேண்டும். பிறகு பரிவேஷ கிரமமாக தேவனை பேரஸ்தானத்தை அடைவிக்க வேண்டும். பிறகு பேரம், லிங்கத்திற்குமாக நவகலசஸ்நபனம் செய்யவும் என கல்பிக்கப்பட்டுள்ளது. பின்பு தேங்காய் திருவலுடன் கூடிய அவலை ஈஸ்வரனுக்கு நிவேதனம் செய்யவேண்டுமென தீபாரோபணகிரியையில் பூஜா செயல்கள் விளக்கப்பட்டுள்ளது. இந்த தீபாரோபணகிரியை அங்குரார்பணம் இன்றியும் செய்யலாமென கூறப்பட்டுள்ளது. ஆசார்யர்களுக்கு தட்சிணாதானபிரகாரம் கூறப்படுகிறது. இந்த தீபாரோபண கர்மா ராஜகிருஹம், கிராமாதிகளிலும் செய்யவேண்டும், ரோக நிவ்ருத்திக்காக கோசாலையில் தீபாரோபண கர்மா செய்யவேண்டும். முடிவில் தீபாரோபண கால விஷயத்தில் நட்சத்ர, திதிநிர்ணய பிரகாரம் கூறப்படுகிறது. இவ்வாறாக எட்டாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. தீபாவரிசையை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். கார்த்திகை மாத கிருத்திகா நக்ஷத்திரத்தில்

2. பூர்ணிமையிலோ பூர்ணிமையோடு சேர்ந்த தினத்திலோ எல்லா விருப்பத்திற்காக சூர்யாஸ்தமன வேளையில் தீபாரோஹணம் செய்ய வேண்டும்.

3. கர்த்தாவின் அஷ்டம ராசிமுதல் லக்ன தோஷம் பார்த்து விருஷ்டி வைநாசிக நக்ஷத்திரங்களையும் பார்க்க வேண்டும்

4. சூர்யாஸ்தமனத்திற்கு முன்னதாகவுள்ள யாமத்தின் கால்பாக நேரமும் அஸ்தமனத்திற்கு பிறகு உள்ள அரையாமமும் தீபவரிசையின் பூஜைக்குரிய காலமாகும்.

5. இவ்வாறு காலத்தை நிச்சயித்து அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீபாராதன தினத்திற்கு முதல் தினம் அதிவாஸம் செய்ய வேண்டும்.

6. இறைவனுக்கு முன்போ ஒவ்வொரு கோபுரத்திலோ, அஷ்டதிக்கிலோ நான்கு திக்கிலோ மூன்று அல்லது இரண்டு இடத்திலோ ஓரிடத்திலோ தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

7. கொடிமர அளவுபோல் தீபதண்டத்தின் அளவாகும். அந்த தண்டமும் தென்னை பனை, பாக்கு மூங்கில் மரங்களாலோ செய்யவேண்டும்.

8. கொடிமரத்திற்கு சொல்லப்பட்ட மரங்களினாலேயும் தீபவரிசைக்கான மரத்தையும் தயார் செய்து அதில் ஆப்புகுச்சிகளை சேர்க்க வேண்டும். பன்னிரண்டு அங்குலம் முதல் ஐந்தங்குல அதிகரிப்பாக

9. ஐம்பது முழம்வரை தீபவரிசைக்கான மரத்திற்கு வெளியில் ஆப்புகுச்சி இருக்கவேண்டும். இரண்டு மாத்ராங்குல அளவிலிருந்து கால் அங்குல அதிகரிப்பால் ஆறங்குல அளவுவரை

10. தீபமரத்தின் அகலமாகும். அதன் கனம் மூன்றரை பாகமாகும். முக்கால் பாகம் தீபமரத்தின் குறுக்களவாகும். தீபமரம், ஆப்பு குச்சிகளால் இணைக்கப்பட்டதாக வேண்டும் இருக்கலாம்.

11. ஒன்பது ஆப்புகுச்சி முதல் ஒவ்வொர் ஆப்புகுச்சி அதிகரிப்பாக இருபத்தியேழு ஆப்புகுச்சி வரை ஓர்திசையில் பொருத்த வேண்டும்.

12. மற்றமூன்று திசைகளிலும் இவ்வாறு ஆப்புக் குச்சிகளை பொருத்த வேண்டும். மூன்று ஆப்புகுச்சி, நான்கு ஆப்புகுச்சி, விருப்பப்படியான குச்சியுடனோ

13. தீபமரத்தின் நுனியில் பொருத்தி, தீப பாத்ரத்தை சுமப்பதற்காக ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் மரச்சக்ரங்களை பொருத்த வேண்டும்.

14. ஒவ்வொரு சக்ரத்திலும், எட்டு, பண்ணிரெண்டு, பதினாறு எண்ணிக்கையுள்ள தீபங்களை பொருத்த வேண்டும். தீபமரத்தை சுற்றி வெளியில் தென்னங்கீற்று முதலிய காய்ந்த கீற்றுகளால்

15. நன்கு மூடிய பிறகு இடைவெளியின்றி சுழலும் போலுள்ள சக்ரத்தை அமைக்க வேண்டும். ஓர் முழு அகலமும், இரண்டு முழ நீளமும் உள்ளதாக

16. தீப மரத்தின்மேல் ஏறுவதற்காக தென்திசையில் வாயிற்படி அமைக்க வேண்டும். இவ்வாறு கல்பம் என்ற முறை கூறப்பட்டு அனுகல்பம் கூறப்படுகிறது.

17. எல்லா சக்ரங்களையும் விட்டு ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் தீபத்தை சேர்க்க வேண்டும். ஹோமம், கூடாரமின்றி செய்வது உபகல்பமாகும்.

18. தீபமரமின்றி செய்வது அகல்பமாகும். தீபம் வைக்கப்படும் கூடாரங்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென்கிழக்கு முதலான மூலைகளிலும் நடுவிலும் அமைக்க வேண்டும்.

19. ஒவ்வோர் தெய்வங்களுக்கும் அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை செய்ய வேண்டும். தீபங்களை வைப்பதற்கான மரங்களை மாலை போன்ற அமைப்புள்ளதாகவும் செய்யலாம்.

20. தோரணம் போன்றோ, வட்ட வடிவமாகவோ திருவாசி போன்றோ தீபமரங்களை செய்து அதில் தீபங்களை பொருத்த வேண்டும்.

21. விமானம், கோபுரம், பிராகாரம், பரிவாராலயம், மண்டபம் பலி பீடாதிகள், கிணறு, கிருகம் (வீடு) ஆகிய இடங்களிலோ

22. விருஷப முன்பே மடப்பள்ளியிலோ புஷ்ப மண்டபாதிகளிலோ கிராமங்களிலோ மண்டபத்திற்கு வெளியிலோ தீபங்களை கல்பிக்க வேண்டும்.

23. இவ்வாறு தீபவரிசையின் பூஜை செய்ய வேண்டும். தீப பூஜையின் முதல் நாளின் மாலையிலேயே பூஜித்து அஸ்திர மந்திரத்தால் தீபமரத்தை சுத்தி ஓமென்ற மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.

24. ஆறு, நான்கு, ஐந்து தாள அளவில் பூமியில் குழி அமைக்க வேண்டும். தீபஸ்தம்பபூஜையின் முதல் நாள் குழியில் தீபமரத்தை நட்டு வேதிகையை அமைக்க வேண்டும்.

25. கொடிமரத்தின் வேதிகைபோல் அல்லது தாமரை போன்ற அமைப்பாகவோ வேதிகை அமைத்து சில்பிக்கு தட்சிணை கொடுத்து அனுப்பிவிட்டு புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும்.

26. உள்ளே சென்று சந்தனம், புஷ்பங்களால் தீபஸ்தம்பத்தை பூஜிக்க வேண்டும். ரக்ஷõ பந்தனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

27. ஆலயம், மண்டபம், யாக மண்டபம், அழகான இடம், இவைகளை பசுஞ்சாணத்தால் மெழுகி

28. ஸ்தண்டிலம் அமைத்து அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அங்கு பாத்திரம் வைக்க வேண்டும்.

29. நீராஜன விதியில் கூறப்பட்டுள்ள பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை, பூஜித்து பிரம்மாவின் மந்திரத்தோடு திக்பாலகர்களின் மந்திரங்களினாலோ, மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ, அக்னியுடன் எட்டு வஸீக்களையுமோ வாமை முதலிய எட்டு சக்திகளையுமோ, ஐந்து கலைகள், ஐந்து பூதங்கள், பிரம்மாதி காரணேச்வரர்களையுமோ பூஜிக்க வேண்டும். பாத்ரத்தில் ஓம் என்று கூறி பூஜிக்க வேண்டும்.

30. குண்டத்தில் குண்டஸம்ஸ்காரம், ஸ்ருக் ஸ்ருவஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை செய்து சிவாக்னியை பூஜித்து, ஆஸன, ஆவரண பூஜையும், ஹ்ருதயம் முதலிய ஷடங்கமந்திரத்துடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

31. சமித், நெய், ஹவிஸ், பருத்திவிதைபால் இவைகளால் நூறு, ஐம்பது, இருபத்திஐந்து ஆஹூதிகளை செய்ய வேண்டும்.

32. மேற்கூறிய எண்ணிக்கையால் மூலமந்திரா ஹூதியும், அதில் பத்தில் ஓர் பங்கு அங்க மந்திரா ஹூதியும், வஹ்நி பீஜமான ரம் என்ற மந்திரத்தால் நூற்றெட்டு ஆஹுதியும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

33. பரிவாரதேவர்கள், ஹ்ருதயம் முதலிய ஷடங்க தேவர்களுடன் கூடிய இறைவனை விஸர்ஜனம் செய்து, நல்லெண்ணை அல்லது நெய்யாலோ பாத்ரத்தை நிரப்பி ஸர்வாத்மகரான ஈசனை நினைத்து தீபத்தை ஏற்றவேண்டும்.

34. ரம் என்ற வஹ்நி பீஜத்தை ஸ்மரித்து மத்ய தீபம் முதல் எல்லா தீபங்களையும் சந்தன புஷ்பங்களால் பூஜித்து சிவாக்னியை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

35. பலவித அலங்காரத்துடன் கூடிய தருண தீபமான மத்ய தீபபாத்ரத்தை ஜ்வாலையுடன் கூடியதாக எடுத்து

36. தண்டத்தின் மேல் ஸ்தண்டிலத்தில் ஹ்ருதயத்தினால் வைக்க வேண்டும். ஹோம முடிவில் தீபதண்டத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

37. பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும், விதிக்கிலும், நான்கு தோரண ஸஹிதமாக நான்கு கூடங்கள் அமைக்க வேண்டும்.

38. கூடாரங்கள் ஐந்து, நான்கு, மூன்று முழ அளவும், விரும்பிய அளவுள்ள இடைவெளி உடையதாகவும் அமைத்து, கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் ஒரு கூடாரம் அமைக்க வேண்டும்.

39. தோரணத்தை கூடத்திற்கு தக்கவாறு விருப்பப்படி அமைக்க வேண்டும். கூடாரத்தை சுற்றி தோரணம், தர்ப்ப மாலைகளால் அலங்கரித்து

40. எல்லா அலங்காரத்துடனும் வாழைமரம், பாக்கு மரத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து சூர்யன் மறையும் நேரத்தில்

41. புண்யாஹவாசனம் செய்து கந்தாதிகளால் தண்டத்தை பூஜித்து இரண்டு வஸ்திரத்தால் தண்டத்தின் அடிபாகத்தில் சுற்றி

42. ஸ்வர்ணம் முதலியவைகளால் ஆக்கப்பட்ட பாத்திரத்தை தண்டத்தின் மேல் வைக்க வேண்டும். பருத்தி கொட்டையால் ஆன திரியோடு எண்ணை அல்லது நெய்யை சேர்த்து

43. தீபத்தை கூடத்தில் சேர்த்து குண்டம் ஸ்தண்டிலங்களில் அதிவாச ஹோமத்துடன் ஹோமம் செய்ய வேண்டும்.

44. தென்கிழக்கிலோ, வடகிழக்கிலோ பந்தலில் ஹோமம் செய்ய வேண்டும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈச்வரன் ஸதாசிவன் இவர்கள்

45. இங்கு ஹோமாதிபர்கள் என கூறப்படுகிறார்கள். தீப தண்டத்தில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும். புரசு, ஆல், வன்னி, எருக்கு சமித்துக்களையோ அல்லது எல்லா குண்டத்திலும் வன்னி சமித்தையோ

46. ஹோமம் செய்து வஸ்திரம் தங்கமாபரணங்களால் அசார்யரை பூஜித்து பூர்ணாஹூதி செய்து எல்லா தீபத்தையும்

47. ஒன்று சேர்த்து வஹ்னி பீஜத்தால் (ரம் என்று) ஹ்ருதயத்தால் பாத்திரத்தில் ஸ்தாபிக்க வேண்டும். எல்லா அலங்காரத்துடனும் மங்களாங்குரத்துடனும்

48. விதான த்வஜத்துடனும் சத்ர சாமரத்துடனும் பலவித வாத்யம் பலவித நிருத்தத்துடன் கூடியதாகவும்

49. உத்ஸவ பேரத்துடன், பேரயாத்ரையுடனும் திரு வீதியுலா இன்றியுமோ கிருஹஸ்தரோ பிரம்ம சாரியோ தீபத்தை கையால் எடுத்து

50. தீபமரத்தில் சீக்ரம் ஏறி அதற்கு மேல் வடக்கு நோக்கியவாறு நின்று மரத்தில் மேலுள்ள பாத்ரத்தில் தீபமேற்றி பிறகு அங்கிருந்து இறங்கி

51. மஹேசனிடம் விக்ஞாபித்து அந்த காலத்தில் சக்ரத்திலுள்ள தீபங்களை மூர்த்தாதி பாதம் வரை ஏற்றவும்.

52. ஆசார்யன் தீபமேற்றிய கர்தாவையும் பரிசாரகனையும் வஸ்திராதிகளால் வடக்கு முகமாக இருந்துகொண்டு கவுரவிக்க வேண்டும்.

53. ஜ்யோதிர் லிங்கத்தை ஸ்மரித்து நான்கு கூடத்தையும் சொக்கபானை தஹிக்க வேண்டும் (அல்லது) சொக்கபானை கூட தாஹமின்றி மற்ற எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும்.

54. தோரணத்திற்கு கீழே தேவரை எழுந்தருளச் செய்து தீபமரத்தினின்று பிரதட்சிணமாக தீபத்துடன் கூடி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

55. கோயில் பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் செல்ல வேண்டும். எல்லா கோயில் விமானங்களில் தீபங்களை ஏற்ற வேண்டும்.

56. வலமாக கோயிலையடைந்து, உற்சவ பிம்பத்திற்கு கூறியபடி ஸ்நபனம் செய்துமோ செய்யாமலுமோ இருக்கலாம்.

57. பூர்ணமாக அதிகமான ஹவிஸ் கொடுத்து தாம்பூலம் நிவேதித்து தேங்காயுடன் கூட அவலை தேவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

58. மிளகு ஜீரகத்துடன் வெல்ல சர்க்கரையுடனும் அவலை நிவேதித்து அங்குரார்ப்பணம் செய்யாமலும் இந்த உத்ஸவத்தை செய்யலாம்.

59. குருவிற்கு தட்சிணை கொடுத்து ஹோமம் செய்பவர்களுக்கும் தட்சிணை கொடுக்க வேண்டும். இந்த உத்ஸவத்தில் ஹோம உயயோகித்த திரவ்யம் கொட்டகை, மூங்கில்குச்சி முதலியவைகளையும்

60. அந்த தீப பூஜையின் அங்கமான மற்ற திரவ்யங்களையும் சேர்த்து ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். இந்த தீப பூஜையானது அரசரின் அரண்மனையிலும் செய்யலாம்.

61. கிராமம் முதலியவிடங்களில் பிரம்மஸ்தானமான மத்தியில் தீபவரிசை பூஜை செய்யலாம். மற்றும் மனிதர்களுக்கும் வாஹனங்களுக்கும் தீமை ஏற்படும் போதும் செய்யலாம்.

62. மாட்டுத் தொழுவத்தில் பசுக்களின் வியாதியை போக்குவதற்காக செய்ய வேண்டும். எந்த திதியில் சூர்யன் உதிக்கிறானோ!

63. அந்த வளர்பிறை திதி, ஸகலா என்று பெயர்.

64. சூர்யன் மறையும் நேரத்தில் எந்த நட்சத்ரத்துடன் கூடி சூரியன் இருக்கிறானோ அந்த நட்சத்ரத்தை ஸகலம் என்பதாகவும் நட்சத்திரத்தை அறியும் விஷயத்திலும் அவ்வாறேயாகும்.

65. இவ்வாறாக அறிந்து பூஜை முதலிய எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கிருத்திகா தீபாவளி முறையாகிற எட்டாவது படலமாகும்.
படலம் 7: நீராஜன விதி

ஏழாம் படலத்தில் நீராஜனவிதி கூறப்படுகிறது, அதில் முதலில் நீராஜனத்தின்கால நிரூபணம் பிறகு நீராஜந பாத்ரஸ்தாபநார்த்தம், கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ஸ்நபந மண்டபம் பாகசாலை இந்த இடங்களில் ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைத்து அஸ்த்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கவும் எனவும், நீராஜநத்திற்க்காக பலி பாத்ரம் போல் அளவான தீபாதார ஸஹித பாத்திரங்கள் தயார் செய்யவும் என கூறி, அந்தபாத்ர லக்ஷணபிரமாணாதிகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள பிம்பங்களில் விசேஷமாக நடராஜ மூர்த்தி விஷயத்தில், தீபாதாரத்தில் சேர்க்கவேண்டிய திரவ்யம் பிரதிபாதிக்கப்படுகிறது. தீப பாத்ரதேவதாநிரூபணம் தீப பாத்ர சேர்க்கும் திரவ்யபரிமாண நிரூபணம், நீராஜநம் செய்யும் விதம், பிறகு பஸ்மாவால் திலகதாரண விதி கூறப்படுகிறது. பஸ்மாதாந விதி பிரதி பாதிக்கப்படுகிறது. பின்பு ஜ்வாலாஸஹித, ஜ்வாலைரஹித பாத்ரங்களை எடுத்து பீடாக்ரம், விருஷபாக்ரம் கோபுராந்திகம், விருக்ஷமூலங்களிலோ ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது நீராஜன உபயுக்த மானதிரவியங்களை குருவிடம் கொடுக்கவும் அல்லது அவரே வஹ்நியில் தஹிக்கவும் என கூறப்படுகிறது. முடிவில் ராஜாபிஷேககாலம், ஆசார்யாபிஷேக காலத்திலும் நீராஜநம் செய்க என கூறிஅந்த நீராஜந விதியில் விசேஷ பிரகாரம் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஏழாம் கருத்து தொகுப்பாகும்.

1. நீராஜனவிதியை கூறுகிறேன். அந்த நீராஜனம் ராத்திரி வேளையில் செய்ய விதிக்கப்படுகிறது. பிரதோஷம் முதலிய காலங்களிலோ, தூப, தீப முடிவு சமயத்திலோ,

2. உத்ஸவாதி காலங்கள் மற்ற மங்கள கார்யங்களிலோ நீராஜனம் செய்தல் வேண்டும். அதற்காக ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைக்கவேண்டும்.

3. கர்பகிரஹம் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம் அதன் முன் மண்டபத்திலோ, மடப்பள்ளி மற்ற இடங்களிலும், அஸ்த்ர மந்திரத்தினால் புரோக்ஷணம் செய்து

4. சுத்தமாக தீபத்திற்கு ஆதாரமாக உள்ள பாத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பலிபாத்ர லக்ஷணப்படி பாத்திரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

5.  ஒரு மாத்திரை அளவில் பாத்திர மத்தியில் தீப ஆதாரம் கல்பிக்க வேண்டும். கால் அங்குலம் அதிகரிப்பால் ஒன்பது அங்குலம் முடிய வேண்டும்

6. விஸ்தாரமாகும், விஸ்தார ஸமமாகவோ, அதன் பாதி அளவாகவோ உயரமாகும். எட்டாக பிரிக்கப்பட்ட மத்யம பாகத்தில் ஒன்பது விதமான அளவாகும்.

7. இரண்டு யவை அளவிலிருந்து அரையவை யளவு அதிகரிப்பால் மாத்ராங்குலம் வரை பாத்ர விளிம்பின் அளவாகும். பாத்ர அளவிற்கு தகுந்த கனமும், அரை பாக மாத்ரையளவு ஓட்டையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

8. தாமரைப்போல் உருவமாகவும், பாலிகை பாதம் போலும் கருவூமத்தை பூபோலவோ, சராவம் போல் (மடக்கு) உருவமாகவோ அமைக்கலாம்.

9. நான்கு, எட்டு, இதழுடன், கூடியதாகவும், ஸர்வாலங்காரத்துடன் கூடியதாக ஒரே பாத்திரத்தில் ஒரு தீபாதாரம், ஐந்து தீபாதாரமாகவோ

10. ஒன்பது தீபாதாரமாகவோ செய்ய வேண்டும். அவைகள் இடைவெளியுடன் சேர்ந்ததாக வேண்டும் மாவினாலோ அன்னத்தினா<லுமோ தேவனுக்காக தீபாதாரங்களை அமைக்க வேண்டும்.

11. விசேஷமாக நடராஜருக்கும், மற்ற பிம்பங்களுக்கும் தேவிக்கும் நீராஞ்ஜனம் செய்யலாம். ஓரிடத்தில் எள் மற்றும் கடுகு, உப்பு இவைகளையும்

12. பருத்தி விதையும், கோமயம், மா வேண்டும், பல வர்ணமுள்ள அன்னங்களுடன் ஆல், அரசு இவைகளையும்

13. கிழக்கு முதலிய திக்குகளிலும், அக்னி முதலிய திக்குகளி<லும் வரிசையாக ஸ்தாபிக்க வேண்டும், நடுவில் ஒரு தீபபாத்திரமோ ஐந்து தீபபாத்திரமோ ஸ்தாபிக்க வேண்டும்.

14. சந்தனம், அர்க்யம், புஷ்பம், விபூதி முதலியவைகளை ஆக்னேயாதி விதிக்குகளில் ஸ்தாபிக்க, எல்லா இடத்திலும் ஒன்பது எண்ணிக்கையுடைய ஜ்வாலை உடைய தீபங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

15. அந்த தீபங்களை நெய்யுடனோ, எண்ணையுடனோ கூடி பிரம்ம மந்திர, அங்க மந்திரத்துடன் பிரம்மாவின் மந்திரங்களை நியாஸம் செய்து திக்பாலகர்களையோ மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ அர்ச்சிக்க வேண்டும்.

16. அக்னி தேவருடன் எட்டு வஸுக்கள், வாமை முதலிய சக்திகள், ஐந்துகலை, ஐந்து பூதங்கள், அதன் காரணேஸ்வரர்களான பிரும்மாதி தேவர்கள் ஆகியோர்

17. பாத்ராதிதேவர்கள் என கூறப்பட்டுள்ளார்கள். தீபதேவதை அக்னியாகும். கால் ஆழாக்கு முதல் ஆழாக்கு விருத்தியாக (அதிகமாக) மரக்கால் ( குறுணி) அளவுவரை

18. எள்ளின் அளவாகும். கர்த்தாவின் விருப்பத்திற்கிணங்க பாத்ரங்களின் அளவாகும். பொதுவான நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களை செய்து முறைப்படி துதித்து

19. ரம் என்ற வன்னி பீஜத்தை ஸ்மரித்து, தீபத்தை தீபத்தினால் யோஜிக்க வேண்டும் (தீபமேற்றவும்) ஸர்வ வாத்யத்துடனும், சங்ககோஷத்துடனும்

20. பாட்டு, நிருத்தத்துடன் கூடி ஸ்த்ரீகளையோ பரிசாரகர்களையோ எடுத்துக்கொண்டு வரச் சொல்லி,

21. இறைவனுக்கு தீபத்தை முக்காலியின் மேல் ஸ்தாபித்து பூஜிக்கவும். ஸத்யோஜாத மந்திரத்தால் பாத்யம் ஹ்ருதயமந்திரத்தால் ஆசமனம்

22. ஸ்வபீஜத்தால் எல்லா தீபங்களை கந்தாதிகளால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால், ஏக வாரமோ, மூன்று தடவையோ இறைவன் தலைக்கு நேராகச் சுற்ற வேண்டும்.

23. ஹஸ்தங்களால் திரவ்யங்களை எடுத்து அந்த தீபபாத்ரங்களை பூஜிக்க வேண்டும். ஆத்மதத்வாதி மந்திரங்களால் சிஷ்யகரத்தில் தீபத்தை கொடுக்க வேண்டும்.

24. சிஷ்யனும் தீபத்தை கிரஹித்து வணக்கத்துடன் கூடியதாக நுழையவும். பிறகு சுத்தமானதும், வெண்மையானதும், நல்லவாஸனையானதும் மணலில்லாததுமான

25. விபூதியை கையினால் எடுத்து சிவனுக்கு எதிரில், மூன்று முறை சுற்றி பிறகு தீபமத்தியில் சேர்க்க வேண்டும்.

26. அங்குஷ்ட (கட்டைவிரல்) அநாமிகை (மோதிரவிரல்) விரலால் விபூதியை பஞ்ச வக்த்ர, நெற்றி, ஹ்ருதயம், கைகள் இவைகளில் வரிசையாக திலக மிட வேண்டும்

27. தேவிக்காக பீடத்திலும், இடது பாகத்திலும் திலகமிடவும் தேவீ உருவ அமைப்போடிருந்தால் தேவீ முன் பாகம் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

28. கழுத்து பாகத்தில் மூலமந்திரத்தினாலோ ஹ்ருதய மந்திரத்தினாலோ திலகமிட வேண்டும். உற்சவ பிம்பத்தில் நெற்றி ஹ்ருதயம், கை பிரதேசத்தில் திலகமிட வேண்டும்.

29. அந்த விபூதியை எடுத்து கொஞ்சமாக சண்டேச்வராதிகளிடத்திலு<ம் பக்தர்களிடத்திலும் உலோக பிம்பத்திலும் திலகமிட வேண்டும்.

30. பிறகு பக்த ஜனங்களுக்கும் விபூதி கொடுக்க வேண்டும். ஸர்வாலங்காரயுதமாக தேசிகர்கள் முன்போல் பாத்திரங்களை எடுத்து

31. ஜ்வாலையோடோ, ஜ்வாலையில்லாமலோ, சிவாலயத்திலிருந்து எடுத்து பீடமுன்பாகவோ, விருஷபத்தின் முன்பாகவோ கோபுர சமீபத்திலோ

32. மற்ற விருஷ மூலத்திலோ அந்தி தீபங்களை முறையாக வைக்க வேண்டும். காற்றாலும், நெருப்பாலும், தீபங்களை தஹிக்க வேண்டும். திரவ்யங்களை குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

33. எள்ளு முதலிய திரவ்யங்களின் அளவு விருப்பப்படி இருக்கலாம். யதேஷ்டமாக ராஜாக்களுக்கும், நீராஜனம் செய்யலாம். அதற்கு தேவதை அக்னி.

34. ராஜாபிஷேக காலம், ராஜவெற்றிக்கும், தேசிகாபிஷேக (ஆசார்ய அபிஷேகம்) காலத்திலும் பகலில் தீப பூஜையின்றியும்

35. தண்டுலங்களால் செய்க, ராத்ரியில் தீபத்துடன் கூடியதாக நீராஜந விதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நீராஜனம் செய்யும் முறையாகிற ஏழாவது படலமாகும்.