மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்
9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்.
10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவேஅம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:.
11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்.
12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனேசக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்.
13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீகாளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ.
14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது.
15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநேஅஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்.
16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி.
17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 28 டிசம்பர், 2020
மாலையில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தியான ஸ்லோகம்
தியான சுலோகங்கள்!
1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதாநாராயணேந ஸ்வயம் வ்யாஸேந க்ரதிதாம் புராணமுநிநாமத்யே மஹாபாரதம்அத்வைதாம்ருதவர்ஷிணீம் பகவதீமஷ்டாதஸா த்யாயிநீமம்த்வாமநுஸந்ததாமி பகவத் கீதேபவத்வேஷிணீம்ஓம்-ஓம், அம்ப-தாயே, பகவத்கீதே-பகவத்கீதே, ஸ்வயம்-சாக்ஷõத், பகவதா-பகவானான, நாராயணேன- நாராயணனால், பார்த்தாய- பார்த்தனுக்கு, ப்ரதிபோதிதாம்- உபதேசிக்கப்பெற்றவள், புராண முனினா வ்யாஸேன-புராண முனிவரான வியாசரால், மத்யே மஹாபாரதம்-மஹாபாரதத்தின்கண், க்ரதிதாம்-அமைக்கப்பெற்றவள், அத்வைத அம்ருத வர்ஷிணீம்-அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பவத்வேஷிணீம்-பிறவிப்பிணியைப் போக்குபவள், அஷ்டாதச அத்யாயினீம்-பதினெட்டு அத்தியாயங்களையுடையவள், பகவதீம்-பகவதி த்வாம், உன்னை அனுஸந்ததாமி-தியானிக்கிறேன்.பொருள் : ஓம். தாயே, பகவத்கீதே ,சாக்ஷõத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள். அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை யுடையவள் ஆகிய பகவதீ, உன்னைத் தியானிக்கிறேன்.2. நமோ ஸ்துதே வ்யாஸ விஸாலபுத்தேபுல்லாரவிந்தாயத பத்ரநேத்ரயேந த்வயா பாரததைலபூர்ண:ப்ரஜ்வாலிதோ ஞாநமய: ப்ரதீப:விசாலபுத்தே-விசால புத்தியுடையவரே, புல்ல அரவிந்த ஆயத பத்ர நேத்ர-நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரே, வ்யாஸ-வியாசரே, யேன த்வயா-உம்மால், பாரத தைல பூர்ண-மஹாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த, ஞானமய ப்ரதீப-ஞானதீபம், ப்ரஜ்வாலித-ஏற்றிவைக்கப்பட்டது, தே-உமக்கு, நம-நமஸ்காரம், அஸ்து-இருக்கட்டும்.பொருள் : விசால புத்தியுடையவரும், நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றிவைத்த உமக்கு நமஸ்காரம்.3. ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயேஞாநமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம:ப்ரபன்ன பாரிஜாதாய-சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனுக்கு, தோத்ர வேத்ர ஏக பாணயே-பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்தவனுக்கு, கீதா அம்ருத துஹே-கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனுக்கு, ஞான முத்ராய-சின்முத்திரையுடையவனுக்கு, க்ருஷ்ணாய-கிருஷ்ணனுக்கு, நம-நமஸ்காரம்.பொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.4. ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன:பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்ஸர்வ உபநிஷத-எல்லா உபநிஷதங்களும், காவ-பசுக்கள், கோபால நந்தன-கோபாலனுடைய மகன்(கிருஷ்ணன்), தோக்தா-பால் கறப்பவன், பார்த்த-பார்த்தன், வத்ஸ-கன்று, ஸுதீ-பேரறிவாளர், போக்தா-அருந்துபவர்கள், கீதா அம்ருதம்-கீதை என்னும் அமிர்தம், மஹத்-மேலான, துக்தம்-பால்.பொருள் : உபநிஷதங்கள் யாவும் பசுக்கள்; கிருஷ்ணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேரறிஞர்; கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது.5. வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்தேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்வஸுதேவ ஸுதம்-வசுதேவருடைய மகனை, கம்ஸ சாணூர மர்தனம்-கம்ஸனையும் சாணூரனையும் கொன்றவனை, தேவகீ பரம ஆனந்தம்-(தாய்) தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவனை, ஜகத் குரும்-ஜகத் குருவை, தேவம் க்ருஷ்ணம்-தேவனாகிய கிருஷ்ணனை, வந்தே-வணங்குகிறேன்.பொருள் : வசுதேவருடைய மகன், கம்சனையும் சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணனை வணங்குகிறேன்.6. பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தாரநீலோத்பலாஸல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலாஅஸ்வத்தாமவிகர்ணகோரமகரா துர்யோதநாவர்திநீஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேஸவ:பீஷ்ம த்ரோண தடா-பீஷ்மரும் துரோணரும் கரைகள், ஜயத்ரத ஜலா-ஜயத்ரதன் ஜலம், காந்தார நீல உத்பலா-காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம், சல்ய க்ராஹவதீ-சல்யன் என்பவன் சுறாமீன், க்ருபேண வஹனீ-கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணேன வேலா ஆகுலா-கர்ணன் பேரலைகள், அச்வத்தாம விகர்ண கோர மகரா-அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துர்யோதன ஆவர்தினீ-துர்யோதனன் நீர்ச் சுழல், ஸா-அந்த, ரண நதீ-ரண நதியானது, கலு-உண்மையாகவே, பாண்டவை-பாண்டவர்களால், உத்தீர்ணா-கடக்கப்பட்டது, கேசவ-கேசவன், கைவர்தக-படகோட்டி.பொருள் : குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம்; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல், கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.7. பாராஸர்யவச: ஸரோஜமமலம் கீதார்தகந்தோத்கடம்நாநாக்யாநககேஸரம் ஹரிகதாஸம்போதநாபோதிதம்லோகே ஸஜ்ஜநஷட்பதைரஹரஹ: பேபீயமாநம் முதாபூயாத்பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்ஸிந: ஸ்ரேயஸேபாராசர்ய வச ஸரோஜம்-பராசரர் புதல்வராகிய வியாசர் வாக்கு என்னும் நீரில் உதித்த, நா நா ஆக்யானக கேஸரம்-பல கதைகளை மகரந்தமாயுடைய, ஹரிகதா ஸம்போ தன ஆபோதிதம்-ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்தது, லோகே-உலகத்தில், ஸத்ஜன ஷட்பதை-ஸத் ஜனம் என்னும் தேன் வண்டுகளால், அஹ அஹ-நாள்தோறும், முதா-ஆனந்தமாக, பேபீயமானம்-அருந்தப் பெற்றது, கலிமல ப்ரத்வம்ஸின-கலியின் தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு, கீதா அர்த்த கந்த உத்கடம்-கீதையின் மூலம் சுகந்தத்தையுடைய, அமலம்-குற்றமற்ற, பாரத பங்கஜம்- மகாபாரதம் என்னும் தாமரைப்பூ, ச்ரேயஸே-நலத்தின் பொருட்டு, பூயாத்-இருக்கட்டும்.பொருள் : பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் தேன் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப்பெற்ற கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்யத்க்ருபா-யாருடைய கிருபையானது மூகம்-ஊமையை வாசாலம்-பேசவல்லவனாய் கரோதி-செய்கிறது பங்கும்-முடவனை கிரிம் லங்கயதே-மலையைத் தாண்டச் செய்கிறது தம்-அந்த பரமானந்தமாதவம்-பரமானந்த மாதவனை அஹம்-நான் வந்தே-வணங்குகிறேன்.பொருள் :யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.9. யம் ப்ரஹ்மா வருணேந்த்ரருத்ரமருத: ஸ்துந்வந்தி திவ்யை: ஸ்தவை:வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷதைர்காயந்தி யம் ஸாமகா:த்யாநாவஸ்திததத் கதேந மநஸா பஸ்யந்தி யம் யோகிநோயஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம:ப்ரஹ்மா வருண இந்த்ர ருத்ர மருத-பிரம்மா வருணன் இந்திரன் ருத்திரன் மருத் தேவதைகள் யம்-யாரை திவ்யை ஸ்தவை-திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துன்வந்தி-ஸ்துதிக்கிறார்கள் ஸாமகா-சாமகானம் செய்கின்றவர்கள் யம்-யாரை ஸ அங்க பதக்ரம உபநிஷதை-அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதை-வேதங்களால் காயந்தி-பாடுகிறார்கள் யோகின-யோகிகள் யம்-யாரை த்யான அவஸ்தித தத்கதேன மனஸா-தியான முதிர்ச்சியால் மனதை அவன்பால் வைத்து பச்யந்தி-பார்க்கிறார்கள் ஸுர அஸுர கணா-சுர அசுரக் கூட்டங்கள் யஸ்ய-யாருடைய அந்தம்-முடிவை நவிது-அறிகிறார்களில்லை தஸ்மை தேவாய-அந்த தேவனுக்கு நம-நமஸ்காரம்.பொருள் :பிரம்மா,வருணன்,இந்திரன்,ருத்திரன் மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.
ஆரோக்கியம் தரும் கோவில்கள்
ஆரோக்கியம் தரும் கோவில்கள்
வரவிருக்கும் புத்தாண்டில் நீங்களும் உங்களின் உற்றார் உறவினர்களும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள் எவை எவை என்பது குறித்த விவரங்களை அளித்துள்ளேன்.உங்களின் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துகிறோம்.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்,குணசீலம், திருச்சி மாவட்டம்- 621204.
தொலைபேசி:04326-275210
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்,வைத்தீஸ்வரன் கோயில்,நாகப்பட்டினம் மாவட்டம்-609117
தொலைபேசி:04364-279423
அருள்மிகு பவஔஷதீஸ்வரர் திருக்கோயில்,திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம்-614713
தொலைபேசி:04369-222392
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில்,
ராமநாதபுரம்,கோவை மாவட்டம்
தொலைபேசி:0422-2313188
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்,மடவார் விளாகம்,
ஸ்ரீவில்லிப்புத்தூர்,விருதுநகர் மாவட்டம்.தொலைபேசி:04563-261262
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருவான்மியூர்,
சென்னை-600041, தொலைபேசி:044-24410477
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில்,வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம்-612804,
தொலைபேசி:04374-264575
அருள் மிகு காமாக்யாதேவி திருக்கோவில்
அருள் மிகு காமாக்யாதேவி திருக்கோவில்
மூலவர்:காமாக்யாதேவி
தீர்த்தம்:பிரம்மபுத்திரா
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கவுகாத்தி
மாவட்டம்:கவுகாத்தி
மாநிலம்:அஸ்ஸாம்
திருவிழா:நவராத்திரி
தல சிறப்பு:சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும். இதை காமரூப் என்றும் சொல்வார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம்.
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி - 781 010, அசாம் மாநிலம்.போன்:+91- 361- 273 4624, 273 4654
பொது தகவல்:கவுகாத்தியில் தாரா, பைரவி, புவனேஸ்வரி ஆகியோருக்கு கோயில்கள் அமைந்துள்ளன. அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு "அஷ்வகிரந்தா' என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும், சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கீழே இறங்க வேண்டும். பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
கருவறை அமைப்பு: கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை "மேரு வடிவம்' என்கிறார்கள். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர்.
கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த யோனிபீடத்தை தொட்டு தரிசனம் செய்ய வேண்டுமானால் பண்டாக்களை(துணை பூஜாரிகள்) அணுக வேண்டும். மேடையின்கீழ் ஓடும் தண்ணீரை "சவுபாக்யகுண்ட்' என்று அழைக்கிறார்கள். குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிரகாரத்தில் காமாக்யாதேவி"தசமகா வித்யா' என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானஸாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் மறுகரையில் "மயில்மலை' அல்லது "பஸ்மாசலமலை' எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த "காமதகனம்' நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் "உமானந்த சிவா' கோயில் ஒன்றும் இருக்கிறது. இவரை தரிசித்து விட்டு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதன்பிறகே காமாக்யாவின் குகைக்கோயிலுக்கு செல்வார்கள். சென்று திரும்பும்போது, காளிதேவி தன் பரிவாரங்களுடன் சுடலையில் (சுடுகாடு) காட்சி தருவதை தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனிவடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். வசந்த காலத்தின்போது- ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம். அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீருற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்! இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம். இவ்வாலயத்தில் பைரவர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன.
காமாக்யா தேவியை
""மஹா மாயா மஹா காளீ மஹா மாரீ க்ஷீதா த்ருஷா!
நித்ரா த்ருஷ்ணா சைகவீரா காலராத்ரிந் துரத்யயா!!''
என்ற ஸ்லோகம் சொல்லி வணங்குவோம்.
இந்த ஸ்லோகத்தின் பொருளையும் கேளுங்கள்.
""மஹா மாயா! மஹா காளீ! மஹா மாரீ என்ற பெயர்களைக் கொண்டவளும், பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகியவற்றை வெற்றி கொண்டவளும், நிகரற்ற வீரியம் படைத்தவளும், தன்னை எவரும் மீறமுடியாமல் காலத்தை கடந்து நிற்கும் காலராத்ரி தேவியே! எங்களுக்கு அருள்செய்'' என்பதாகும்.
தல வரலாறு:மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் "காமரூப்' என அழைக்கப்படுகிறது. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதிதேவி நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
முற்காலத்தில் இந்தப் பகுதி காமரூபம், ஹரிசேத்திரம், பிரக்ஜோதிஷபுரம் என்ற பெயர்களில் விளங்கியது. இரண்யாட்சகன் பூமியை அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம், இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான்; அதனால் கொல்லவும் படுவான் என்று எச்சரித்தார். அப்போது பூமாதேவி, அப்படியாயின் என் கைகளால்தான் இவன் மரணம் அடைவான் என்னும் வரத்தைத் தாருங்கள் என்று கேட்க, மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார். பல வரங்களைப் பெற்ற நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். பல யுகங்கள் கடந்தன. சக்தி தேவியின் மாயாவடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன்.
இந்த நிலையில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட, அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும்போர் நடந்த நிலையில் வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் மிகவும் கேவலமாகப் பேச, கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது. நரகாசுரனுக்கு வரங்கள் பல தந்து, பின் அவன்மேல் கோபம் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டிருந்த காமாக்யா தேவி, அசுரனின் வதத்திற்குப் பின் மீண்டும் வந்து கோவில் கொண்டாள் என்கிறார்கள்.