புதன், 31 ஜூலை, 2019

சப்தரிஷிகள்

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

1*கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே  மனித குலம்!

2*அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும்  அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை  வாழ்த்துகிறது ரிக்வேதம்.

3*பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர்  என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

4*விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர்.  விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட  நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

5*கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

6*ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

7*வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச  தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும்  சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி!  ஆவணி மாத வளர்பிறை  5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.


நமது சனாதன தர்மம் வளர்ந்து வரும் விஞ்ஞானத் துறைகளுள் ஒன்று மொழியியல் துறை!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்தத் துறை புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று சம்ஸ்கிருத மொழியின் அதிசயம்!

கடவுளரின் மொழி என்றும் தேவ நாகரி என்றும் அழைக்கப்படும் சம்ஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி – perfect language – என்று பொருள்!ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவத்தாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலைப் பயன்படுத்த சம்ஸ்கிருதமே சிறந்த கருவி என்று கண்டறிந்தனர். “உண்மையைத் தேர்வோம்” என நினைத்த அவர்கள் பயன்படுத்தியது சம்ஸ்கிருத மந்திரங்களேயாகும்.உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று சம்ஸ்கிருதம்!எளிமையானது, தூய்மையானது, கடவுளின் படைப்பின் மகிமையை உணர்த்துவது.ஜோஸப் காம்பெல் சொன்னது போல உலகின் ஆன்மிகக் களஞ்சியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது இது.

அல்பெரூனி வியந்த புராணம்:இந்தியா வந்த அல்பெரூனி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புராணங்களைக் கண்டு வியந்து “அதில் எல்லாம் இருக்கிறது” என்று அதிசயித்துக் கூறினான். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள அவன் தன்னால் மத்ஸ்ய, ஆதித்ய, வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டும் பார்க்க முடிந்தது என்று ஆதங்கப்படுகிறான்.

ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் சுலோகங்களில் அனைத்தும் அடக்கம்!

இனி18புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:

பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்

பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்

விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்

சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்

பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்

பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்

மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்

ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்

நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்

பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்

லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்

வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்

ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்

வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்

கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்

மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்

காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்

பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும் கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும் வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சில பதிப்புகளை வைத்தே இந்த கணக்கீடு உள்ளது என்பதால் அனைத்துப் பதிப்புகளையும் நன்கு ஆராய்ந்தால் சில ஆயிரம் ஸ்லோகங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ஆக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவையும்  இவ்வுலக வாழ் நெறிகளையும் மோட்ச வாழ் நெறிகளையும் மோட்ச மார்க்கத்தையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.இவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கப் போவதில்லை!நாஸா(National Aeronautics and Space Administration) வியக்கும் சம்ஸ்கிருத மொழி! இப்படிப்பட்ட மொழிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?
எல்லா மொழிகளையும் தன் பயன்பாட்டிற்காக ஆராய்ந்த நாஸா சம்ஸ்கிருதம் ஒன்றே பூமியில் உள்ள ஒரே தெளிவான மொழி என்று கூறுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் சரியான அமைப்புள்ளதாகவும் உள்ள மொழி இது. நாஸாவைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் இதன் பெருமைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.இதனுடைய இலக்கணம் பரிபூரணமானது. உலகெங்கும் உள்ள அறிஞர்களைத் தன் வசம் இழுத்துள்ளது.சமீபத்தில் கணிணி விஞ்ஞானிகள் கணிணி பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சம்ஸ்கிருதமே என்று அறிவித்துள்ளனர்.

வியக்க வைக்கும் மொழி அமைப்பு:1984ம் ஆண்டு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் – AI- என்ற பத்திரிக்கை மெஷின் ட்ரான்ஸ்லேஷனுக்கு – இயந்திர மொழி பெயர்ப்பிற்கு சம்ஸ்கிருதம் சிறந்த இடை மொழியாக இருக்கிறது என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டுமென்றால் முதலில் ஜப்பானிய மொழியை முதலில் சம்ஸ்கிருதத்திற்கு மொழி பெயர்க்க வேண்டும்; பின்னர் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும்.இதற்கான காரணம் சம்ஸ்கிருத மொழியின் அமைப்பேயாகும். உதாரணத்திற்கு ஒரே ஒரு எளிமையான எடுத்துக்காட்டு.

லிஸா புஸ்தகம் படிக்கிறாள் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால்

லிஸா ரீட்ஸ் எ புக் (Lisa reads a book) என்று ஆகும்.இதையே சம்ஸ்கிருதத்தில் கீழே கண்டபடி எப்படி வேண்டுமானாலும் எழுதினாலும் அர்த்தம் மாறுவதில்லை.

லிஸா புஸ்தகம் படதி

புஸ்தகம் லிஸா படதி

புஸ்தகம் படதி லிஸா

படதி புஸ்தகம் லிஸா

படதி லிஸா புஸ்தகம்

லிஸா படதி புஸ்தகம்

ஆறு விதமாக மேலே கண்டபடி எழுதினாலும் அர்த்தம் ஒன்று தான்.
ஆனால் ஆங்கிலத்தில் Lisa reads a book என்பதைA book reads Lisa என்பது அர்த்தத்தை விபரீதம் ஆக்கி விடும். ஒரு புஸ்தகம் லிஸாவைப் படிக்கிறது என்றால் எப்படிப்பட்ட விபரீத அர்த்தம்?

ஆகவே சம்ஸ்கிருதத்தின் இந்த ஒரே அமைப்பே கணிணி மொழிகளில் ஏராளமான நன்மைகளைச் செய்யும் போது அதன் இதர அமைப்பு முறைகள் அதை ஒப்பற்ற மொழியாக ஆக்குகிறது.4000 மூலச் சொற்களில் அனைத்தும் அடக்கம்!லட்சக்கணக்கான சம்ஸ்கிருத சொற்கள் சுமார் 4000 மூலச் சொற்களிலிருந்தே பிறக்கின்றன என்றால் ஆச்சரியமாக இல்லை? இவையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலங்களால் ஆனவை.

மூலத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு அதன் அடிப்படை மூலங்களைப் பிரித்தால் வார்த்தையின் அர்த்தம் தானாகத் தெரிய வரும். இதனால் சம்ஸ்கிருத அகராதி 4000 மூலச் சொற்களுக்குள் அடங்கி விடும் அற்புதத்தைக் காணலாம்!

இயந்திரத் தகவல் தொடர்புக்கு பொருத்தமான ஒரு மொழியை விஞ்ஞானிகள் தேட ஆரம்பித்தனர்.ஆங்கிலம் இதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை உணர்ந்த அவர்களின் கவனம் சம்ஸ்கிருதத்தின் பால் திரும்பியது. அதன் அமைப்பை உணர்ந்து அதிசயித்த அவர்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒலி நுட்பம் உணர்ந்த பாணிணி:வார்த்தையையும் அதன் ஒலியையும் ஆராய்ந்த பாணிணி அற்புதமாக சம்ஸ்கிருத இலக்கணத்தைச் செப்பனிட்டு உலகிற்கு ஈந்தார்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி வார்த்தையை உச்சரிக்கும் விதத்தை வர்ணிக்கும் போது எப்படி ஒரு புலி தன் குட்டியை வாயில் தூக்கிக் கொண்டு போகும் போது அதற்கு வலிக்காத படி அதைத் தூக்கிச் செல்கிறதோ அதே போல வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது!.

இந்த உச்சரிப்பை ஆராய்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி.

சம்ஸ்கிருதத்தை நன்கு ஆராய்ந்த அவர் அது ஒரு பெர்•பெக்ட் லாங்வேஜ்- செம்மொழி என அறிவித்தார். அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றை சில சொல் சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.

உயிருள்ள மொழி:சம்ஸ்கிருதம் இறந்த மொழி அல்ல. கர்நாடகத்தில் ஷிமோகாவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாத்தூரில் கிரிக்கட் மைதானத்தில் கூட சிறுவர்கள் சீக்ர தாவே (வேகமாக ஒடு) என்று சம்ஸ்கிருத மொழியில் பேசி விளையாடுவதைப் பார்க்கலாம்.

இங்குள்ள 5000 பேர் பேசுவது தாய் மொழியான சம்ஸ்கிருதத்தில் தான்!

இது மட்டுமின்றி மேலை நாடுகளில் ஏராளமான சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையங்கள் மூலம் சம்ஸ்கிருதம் பேசப்படுகிறது; பரப்பப் படுகிறது.

இந்நிலையில் மெய்ஞான மொழியான சம்ஸ்கிருதம் கணிணி விஞ்ஞானத்தால் ஆராயப்பட்டு தன் பழம் பெருமையை மீட்டு ஜொலிப்பதைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

இதைப் பேணிக் காப்பது இதன் சொந்தக்காரர்களான நமது கடமை அல்லவா? இதைப் போற்றுவோம்; காப்போம்!
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்மன்:  ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் :  மாவிலங்கை
தீர்த்தம் :  மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :உடையார் கோயில்
ஊர் :திருச்சேறை
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர்

துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமா இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர் செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.திருஞானசம்பந்தர்;தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 95வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை அஞ்சல் 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 435-246 8001 


     
தகவல் : வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச்செய்தி மூலம் அறிய முடிகிறது.  உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும்.  இவருக்கு அடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் பாங்குற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
     
ஸ்தல பெருமை : மனிதனுக்கு செம்மை தரும் நெறியை - முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு ""செந்நெறியப்பர்' என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வர் என அழைக்கலாயினர்.  மற்ற எங்கும் இல்லாத சிறப்பு இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும். நவக்கிரஹத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு இங்குள்ள பைரவருக்கு அப்பரால் பாடல் பெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டும் உள்ளது. மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு  எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே'சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும்  தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரஹ தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிக சிறப்பான அம்சமாகும்.

சூரிய பூஜை : தக்கன் யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. அப்போது சூரிய பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இவ்வூர் ஆற்றூர் ஆறை என மருவி வழங்குதல் போலச் சேற்றூர் என்ற பெயர் சேறை என வழங்கியது எனலாம். தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற வளநகர் என இத்தலத்தை குறிக்கப்படுகிறது.

ஸ்தல வரலாறு : இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு  லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய  ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.  (ரிண- கடன், விமோசனம் - நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் - ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.ஒருவர் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.இவ்விறைவர், ரிண  விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.
கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.
274 சிவாலயங்கள்:அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பசுபதீஸ்வரர்
அம்மன் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி
ஸ்தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் :சூரிய தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பந்தணைநல்லூர்
ஊர் : பந்தநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், திருநாவுக்கரசர்

தொண்டர் தொழுதேத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார் ஏமந் தோறும் அண்டத்துக் கப்புறுத்தார் ஆதி யானார் அருக்கனாயார் அழலா யடியார் மேலைப் பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம்.
 
விழா : மாசி மகம், பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
      
சிறப்பு : இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.போன்:91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045 



     
பொது தகவல் :ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள் பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை : கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
     
ஸதல பெருமை : பசுவின் பதியாக வந்ததால் சிவன் பசுபதீஸ்வரர் ஆனார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர் கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் சுவாமி, அம்மன், நவகிரக்தை சுற்றுவது நலம். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் ஆதிகேசவ பெருமாளாக அருள் பாலிக்கிறார். காம்பேலி மன்னன் தன் மகனுக்கு பார்வை பெற்ற தலம்.
பெருமாள், கன்வர், வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும், பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர்.

ஸ்தல வரலாறு : சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்த போது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் நான்கு  வேதத்தையும் நான்கு பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன், பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் "பந்தணை நல்லூர்' ஆனது. பார்வதியை காப்பாற்ற மகா விஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்து கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன் படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள் பாலிக்கிறார்.
------------------------------------------------------------

செவ்வாய், 30 ஜூலை, 2019

பாடல் பெற்ற சிவாலயங்கள் இன்று அருள் மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : சாயாவனேஸ்வரர்
அம்மன் : குயிலினும் இனி மொழியம்மை
ஸ்தல விருட்சம் : கோரை
தீர்த்தம் : ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : திருச்சாய்க்காடு, மேலையூர்
ஊர் : சாயாவனம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
பாடியவர்கள் : தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே.(திருநாவுக்கரசர்)

விழா : சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.  
      
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம். போன் : +91- 4364 - 260 151 
     
தகவல் : இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது. கோயில் குளத்திற்கு தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வர் சன்னதியில் மூவர் முதலிகளே உளனர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளன.

ஸ்தல பெருமை : கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் யானையால் புக முடியாத கோயில் என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதை எல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும் என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார் நான் உன் மனைவியுடன் செல்கிறேன் நீ ஊர் திரும்பலாம் என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க எனக்கூறி மறைந்தார்.மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும் தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.

வில்லேந்திய வேலவன் : இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

ஸ்தல வரலாறு : இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன் அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.கோவிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் தோன்றி இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக என அருள்புரிந்தார்.


சுருதி ஸூக்தி மாலா : இன்று சுலோகம் 31 முதல்35முடிய
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சுருதி ஸூக்தி மாலா
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்.
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004

சுலோகம் 31
அர்த்த : ச்ரியா சிவ ந கோபி விரஜ்யதஸ்தே
ச்ரேஷ்டஸ்தயா த்வமஸி தாசதயீபிருக்த : |
லப்தும் ச்ரியம் ஜனிம சாரு விசித்ரரூபம்
அப்யர்ச்சிதம் தவ மருத்பி ருதாஹரந்தி ||
ஆறுகுணங்களில் ச்ரீ என்ற குணமுள்ளவராக சிவபெருமான் கூறப்படவில்லையே. வாஸுதேவனல்லவா ஸ்ரீபதி எனப்படுகிறார் என்ற சங்கை ஏற்பட, ஆத்மானந்த த்ருப்தனாகிய சிவபெருமானுக்கு விஷயங்களில் வெறுப்பு இருந்த போதிலும், ஸ்ரீமான் என்ற பதம் சுருதிகளில் காணப்படாவிடினும், ச்ரியா ச்ரேஷ்ட : என்ற அடைமொழி சிவபெருமானுக்குக் காணப்படுவதாலும், மற்றெல்லாரும் ச்ரீயை அடைய விரும்பி சிவபெருமானைப் பூஜித்து, அஷ்டைச்வர்யங்களை அடைந்தார்களென்று காணப்படுவதாலும், சிவபெருமான் ஸ்ரீமான் என்பதில் ஸந்தேகமில்லை, என்று இந்த ச்லோகத்தில் விளக்குகிறார்.
பதவுரை
சிவ – சிவபெருமானே ! விரஜ்யத : – உலக விஷயங்களில் முற்றிலும் பற்றுதல் இல்லாத, தே – உமக்கு ச்ரியா – லக்ஷ்மியால், ந கோப்யர்த்த : – ஒரு பயனுமில்லை. தாசதயீபி : – ருக் வேதத்திலிள்ள ருக் மந்த்ரங்களால் தயா ச்ரேஷ்ட : – அந்த லக்ஷ்மியால் நிரம்பியவராக, சிறந்த லக்ஷ்மீவானாக, த்வம் நீர், உக்தோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர்.
ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர : ச்ரியாஸி
தபஸ்தமஸ் தபஸாம் வஜ்ரபாஹோ
என்பதல்லவா ருக்வேத மந்த்ரம். இந்திர உருவமெடுத்து ஆவிர் பவித்த தாங்கள், தபஸாம் – ஸ்தோத்ரம் செய்யப்படுகிறவர்களுள், தபஸ்தம : – அதிகமாக ஸ்துதிக்கப்படுபவர், ச்ரியா ச்ரேஷ்டோஸி – ஸம்பத்துள்ளவர்களுக்குள்ளும் சிறந்தவராக இருக்கிறீர். அநித்யமான உலக ஸுகத்தைத் துறந்து, ஸஞ்சல லக்ஷ்மியை வேண்டாதிருப்பதல்லவா நித்யமான ஸ்ரீ ஆகும். இது பற்றியே.
ஸா ஹி ச்ரீ ரம்ருதா ஸதாம் என்று, வேதங்கள் தான் அழியா ஸம்பத்தென்பது பொருந்தும். வேதத்ரய ப்ரதிபாத்யனான ஈசானன் தான் அழியாத ஸம்பத்துள்ளவன் என்பது தாத்பர்யம். ச்ரியம் லப்தும் : ஸம்பத்தை யடைவதற்கு, விசித்ர ரூபம் – விசித்ர உருவமுள்ள, சாரு – அழகான, மங்களகரமான, தவ – உம்முடைய, ஜனிம – மகாலிங்கரூபமாக ஆவிர்ப்பவித்த அருணாசலேச்வர, மத்யார்ச்சுனேச்வர உருவத்தை, மருத்பி : – தேவகணங்களால், அப்யர்ச்சிதம் – நன்கு பூஜிக்கப்பட்டதாக, உதரஹரந்தி – சொல்லுகிறார்கள்.
மகாலிங்க மூர்த்தியை ஆராதித்ததால் ஸகல தேவர்களும் தங்கள் பதவிகளையும், ஸம்பத்தையும் அடைந்தார்கள் என்பது பிரஸித்தம். அதிகம் சொல்வானேன். வாஸுதேவன் ருக்மிணி முதலிய மகிஷிகளை மணந்ததும், ஸாம்பன், சம்பு, ப்ரத்யும்னன் முதலிய புத்ரர்களை யடைந்ததும், உபமன்யு மக்ர்ஷியின் பிரஸாதத்தால் கிடைத்த உபதேசத்தின் படி, சிவபெருமானைப் பூஜித்து உபாஸித்ததால் தான் என்ற விஷயம் அனுசாஸன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ருக்வேதம் : – தவ ச்ரியே மருதோ மர்ஜயந்த : ருத்ர யத்தே ஜனிம சாரு சித்ரம் பதம் யத் விஷ்ணோருப மந்நிதாயிதேன பாஸி குஹ்யந் நாமகோனாம்.
ருத்ர – ஹே பரமேச்வரா ! மருத : – தேவர்கள், யத் – யாதொரு பிரஸித்தமான, தே – உம்முடைய, சாரு சித்ரம் – மங்களகரமான, ஆச்சர்யமுண்டு பண்ணும், ஜனிம – மகாலிங்க ப்ராதுர்பாவத்தை, மர்ஜயந்த : – 12 சுபத்ரவ்யங்களால், சதருத்ரீய மந்த்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்தார்கள். (எதற்காக) ச்ரியே – லக்ஷ்மியை அடைவதற்காக எந்த ப்ராதுர் பாவத்தைப் பூஜித்தார்கள்?
விஷ்ணோ :- பரமம் பதம் லிங்கம் – என்பது ஸனத்குமரரஸம்ஹிதையில் விஷ்ணுவரல் சொல்லப்பட்ட வசனம். விஷ்ணோ : பரமம பதம் என்ற சொற்றொடர் மகாலிங்க மூர்த்தியைக் குறிப்பதாக, விஷ்ணுமூர்த்தியால் கூறப்பட்டது எனில். தன்னையே குறிக்க வில்லை யென்பது விளங்குமல்லவா? மேலும் ருத்ர என்ற விளி வேற்றுமை, விஷ்ணுவை பூஜித்தார்கள் என்ற அர்த்தத்துடன் பொருந்தாது.
தத் பதம் லிங்கமாக்யாதம் சிவோ யேனைவ த்ருச்யதே
தல்லிங்கஸ்யாபி மாகாத்ம்யம் யுவாம் த்ரஷ்டும் ந ஹி க்ஷமெள,
ஸூரயோ யத் ப்ரபச்யந்தி தத் விஷ்ணோ : பரமம் பதம்.
தத்விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய :
திவீவ சக்ஷுராததம்.
தத்விப்தஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸ : ஸமிந்ததே
விஷ்ணோர் யத் பரமம் பதம் ||
முதலிய சுருதிகளும், உப ப்ரும் ஹண, புராண வசனங்களும், விஷ்ணோ : பரமம் பதம் என்ற சொற்றொடர், வ்யாபகமான, சிறந்த, பிரமம் விஷ்ணுக்களும் காண்பதற்கரிய, மகாலிங்க, ஜ்யோதிர்மய மூர்த்தியைக் குறிப்பிடுவதாக நன்கு விளக்குகின்றன.
சுலோகம் 32
ஸத்யம் க்ஷமா த்ருதி ரதிஷ்டிதிராத்மபோத:
ஸ்ருஷ்டிர் விராக தபஸீ மதிரீச்வரத்வம் |
நத்வத் வியந்தி ந கதாசிதபைதி தர்ம:
கிந்தந் நயத் பவதி தே குண ஸம்மதேஷு ||
வாசஸ்பதி மிச்ரர் என்ற வேதாந்த நிபுணர் வேதத்தையும் வேதப் பொருளான சிவபெருமானையும், சிலேடையாக அடைமொழி கொடுத்து வணங்குகிறார்.
ஷட்பி ரங்கை ருபேதாய விவிதை ரவ்யயைரபி |
சாச்வதாய நமஸ்குர்மோ வேதாய ச பவாய ச ||
வேதத்தின் உண்மை விளங்க சிக்ஷா, வ்யாகரணம் சந்த :, நிருக்தம, ஜ்யோதிஷம், கல்ப்ப: என்ற ஆறு அங்கங்கள் தேவை. ஈச்வரனுடைய ஆறு குணங்கள் (அங்கங்கள்) ஆவன.
ஸர்வக்ஞதா த்ருப்தி ரனாதி போத:
ஸ்வதந்த்ரதா நித்ய மலுப்தசக்தி:
அனந்தசக்தி: ச விபோர் விதிஞா:
ஷடாஹுரங்கானி மஹேச்வரஸ்ய ||
அவ்விதமே அழியாத, அவ்யயமான மற்றும் பத்து குணங்கள் கூறப்படுகின்றன.
ஞானம் வைராக்ய் மைச்வர்யம் தபஸ் ஸத்யம் க்ஷமா த்ருதி:
ஸ்ரஷ்ட்ருத்வ மாதம் ஸம்போதோ ஹ்யதிஷ்டா த்ருத்வமேவ ச ||
அவ்யயானி தசைதானி நித்யம் திஷ்டந்தி சங்கரே |
ஆதலால் ஸகல குணங்களுக்கும், (சமுத்ரம்போல சிறந்த பதார்த்தங்களுக்கு) அழியா இருப்பிடமான, ரத்னாகரன் சிவபெருமான் தான்.
பதவுரை
ஸத்யம் – தர்மத்தையும், ஸத் வித்யையையும் தெரிவிக்கும், பிரம்ம ப்ரதிபாதகமான வேதவாக்யம். (சிவ பெருமான் மூச்சு போல் வெளிவந்தமையால், அவருக்குச் சொந்தமாக, அவருடைய அழியா குணமாக சொல்லப்படுகிறது). க்ஷமா – பக்தர்களின் அபராதத்தைப் பொறுத்தல். ஆசுதோஷி என்ற பெயர். சிவபெருமானுக்கே உரித்து; வணங்குவதால் உடன் ஸந்தோஷமடைகிறவ்ர்; உடன்வரம் அளிப்பவர். இவ்விதம் தான் பாணினி வ்யாகரணத்தில் உணாதிஸூத்ரம் ஈச்வரசப்த்த்துக்கு அர்த்தம் கூறுகிறது.
அச்னோதே ராசுகர்மணி வரட் ச
சீக்ரம் ஸந்தோஷத்தால் பயன் கொடுக்கும், எங்கும் நிரம்பிய ஆசுதோசஷர் என்பது ஈச்வர பதத்தின் உண்மைப் பொருளென்று, உணாதி ஸூத்ரத்தின் முதலிய வீரச்செயல்கள்; அதிஷ்டிதி: – எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக ஸர்வ ஆதாரமாக இருத்தல்; ஆதமபோத: – அகண்ட சைதன்ய ரூபமாக ப்ரகாசித்தல்; ஸ்ருஷ்டி:- உலகங்கனனைத்தையும் படைத்தல்; (பிரம்மாதிபதி; பிரம்மணோதிபதி ; என்பது ச்ருதி; உலகங்களைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்த சிவபெருமானைச் சேர்ந்தது ஸ்ருஷ்டி என்பது உண்மையே) விராக தபஸீ – வைராக்யம்; உலகத்தைப் படைப்பதில் தடையற்ற ஸத்யஸங்கல்ப்பம்; மதி :- கார்யங்களை ஆலோசித்தல் : ஈச்வரத்வம் – தலைவனாக இருந்து காத்தல், இவைகள் பத்தும், தவத் – உம்மிடமிருந்து, ந வியந்தி – எப்பொழுதும் பிரிந்து போகிறதில்லை. ஆகையால் இவை பத்தும் அவ்ய்யங்கள் எனப்படுகின்றன. வேற்றுமை மாற்றத்தால் மாறாத சப்தத்திற்கு அவ்யயம் என்ற பெயர் பாணினியால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, இந்த பத்து குணங்களும் ஒருபொழுதும் பிரியாமல் மாறாமல் இருப்பதால் அவ்யயங்கள் எனப்படுவது யுக்தமே, தர்ம : – அணிமாதி அஷ்டைச்வர்யங்களும். கதாசிதபி – ஒருபொழுதும், தவத் – உம்மிடத்திருந்து, நாபைதி – விலகுகிறதில்ளை. குணஸம்மதேஷு – குணமென்று கூறப்படுவதுள் தேயத் ந பவதி – உம்மிடம் இல்லாத அந்தக் குணம். கிம் – என்ன இருக்கிறது? ஈச்வரன் அனந்த, ஸகல கல்யாணகுண பரிபூர்ணன் என்பது தாத்பர்யம்.
நாஸ்தி யத்யதகல்யாணம் தத்ததஸ்ய கதாசன |
கல்யாணம் ஸகலஞ்சாஸ்தி பரமாத்மா சிவோ யத ||
என்ற புராணவசனங்கள் சிவ பத அர்த்தத்தை நன்கு விளக்குவது இங்கு காணப்பட வேண்டும்.
ஒளதார்ய, வீர்ய, காம்பீர்ய மாதுர்ய மகராலய:
என்ற சிவபெருமான் அடைமொழியும் இவ்விஷயத்தை விளக்கிக் கூறுகிறது.
சுலோகம் 33
நைவேச்வராந் ந யசஸா மஹதோ ந வீராந்
ந ஸ்ரீமத : க்ஷிதிபதீனபி ஸார்வபெளமாந் |
அந்யாத்ருசானாபி மஹேச்வர ! வீதராகாந்
ப்ரஞாவதோ பகவத : ப்ரவதந்தி வ்ருத்தா : ||
ஆறு குணங்கள் அடைந்தவர் பகவான் எனப்படுவர்; பத்து அழியாக் குணங்கள் நிரம்பியவர் பகவான் எனப்படுவர், என்ற மத த்வயப்படி, சிவபெருமாந்தான் பகவத் சப்த வாச்யர் என்று நிரூபிக்கப்பட்டது. சில பெரியார்கள் ஞானம் வைராக்யம் இந்த இரண்டு குணங்கள் நிரம்பியிருந்தாலும், அவரே பகவான் என்று சொல்வார்கள்.
பதவுரை
வ்ருத்தா :- பெரியோர்கள், ஈச்வராந் நைவ – பணம் இருப்பதற்காக அல்ல, யசஸா மஹத : நைவ – புகழ் மிகுந்தவர் என்பதற்கல்ல, வீராந் ந – வீரர்களையும் அல்ல; ஸ்ரீமத் : க்ஷிதி பதீத் ஸார்வ பெளமானபி ந – பூமியின் தலைவர்களான ஸம்பத்தைப் படைத்தவர்களையுமல்ல, அந்யா த்ருசானபி – இந்த குணங்கள் இல்லாவிடினும் வீதராகாந் ப்ரஞாவத : – ஆசையற்ற, சிறந்த அறிவு வாய்ந்தவர்களையே பகவத : ப்ரவதந்தி – பகவத் சப்த வாச்யர்களாகக் கூறுகிறார்கள். ஆதலால், ஞானமூர்த்தியான, சிறந்த வைராக்யம் படைத்த உம்மை, பகவான் என்பது பெரியோர்களின் உணமையான் கருத்து.
சுலோகம் 34
ஆதர்வணா மதனசாஸன ! நிப்ருவாணா:
நாமா நி நாம பகவானிதி தே நிராஹு 
அத்யாச்ரமோ பநிஷதாஹ பகேசவ்ரம் த்வாம்
நைகண்டுகா : ச பகவந்த முசந்தி பூஜ்யம் ||
பகவான் என்ற பதம் ஈச்வரனைக் குறிப்பது என்று சுருதியும் சொல்லுகிறது.
பதவுரை
மதனசாஸன – (பிறப்புக்காரணமான) மன்மதனை அடக்கியவரே ! ஆதர்வணா :- அதர்வவேதம் பயின்றவர்கள், தே – உம்முடைய, நாமாநி – பெயர்களை நிப்ருவாணா :- வ்யுத்பத்தியால் விளக்குகிறவர்களாய், பகவான் இதி நாம – பகவான் என்ற பெயரை. நிராஹு : – வ்யுத்பத்தியால் உம்மைச் சேர்ந்ததாக வெளிப்படுத்துகிறார்கள். அத கஸ்மாத் உச்யதே மஹாதேவ :- ஸர்வான் பாவான் பரிதயஜ்ய, ஆத்மஞானயோக, ஐச்வர்யே மஹதி மஹீயதே தஸ்மாத் உச்யதே மகாதேவ : என்பது அதர்வ வேதம் மகாதேவ சப்தத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது. அப்படியே அத கஸ்மாத் உச்யதே பகவான்– ய: ஸர்வான் பாவான் நிரீக்ஷதி, ஆத்மஞானம் நிரீக்ஷயதி, யோகம் கமயதி தஸ்மாத் உச்யதே பகவான் என்று பகவத் சப்தத்தின் அர்த்தத்தையும் தெளிவாகக் கூறுகிறது. ஆதலால், பங்கஜ சப்தம்போல, பகவான் சப்தம் யோக ரூடியாகக் கருதப்பட்டு, சிவபெருமானைத்தான் குறிக்கும். இங்கு சப்தாதேவ ப்ரமித : என்ற வ்யாஸ ஸூத்ரத்தின் கருத்து ஸாதகமாகக் கொள்ளப்பட வேண்டும். சுக்ரா சார்யாரும் சுக்ரபகவான் என்று கெளணமாகச் சொல்லப்படுகிறார். அவ்விதம் வந்த பெயர் தான் பாகவதம் என்பது, கிருஷ்ண சரித்திரம் விளக்கும் வாஸுதேவ புராணத்துக்கு ஏற்பட்ட பேயர். மஹேச்வர! சிவபெருமானே! த்வாம்-உம்மை அத்யாச்ரமோபநிஷத்-பஸ்மோத் தூளனம் செய்து கொள்பவர்களுக்கு, உபதேசிக்கப்படுகிற அத்யாச்ரமோப நிஷத்தும்,
தர்மாவஹம் பாபநுதம் பகேசம் என்று, பகேசம்-பகவான் என்று கூறுகிறது, நைகண்டுகா: ச – நிகண்டு என்ற வ்யுத் பத்தி க்ரந்தத்தை யறிந்தவர்களும்,
பூஜ்யம் பகவந்தம் உசந்தி, பூஜிக்கத் தகுந்தவர்களையே பகவான் என்று சொல்லுகிறார்கள். பூஜிக்கத்தகுந்தவர் தாங்கள் ஆதலால், பகவத் சப்தம் உங்களைத்தான் குறிக்கும்.
தத்ர பவான் பகவானிதி சப்தோ வ்ருத்தை: ப்ரயுஜ்யதே பூஜ்ய : என்பது நிகண்டு வசனம் நமஸ்தே அஸ்து பகவத: அதீஹி பகவோ ப்ரும்ஹேதி என்ற சுருதிகளிலும், பூஜ்யனை பகவத் சப்தம் கூறுகிறது. சுருதி நிகண்டுகளில், பூஜிக்கப்படுகிறவர்கள் அனைவர்களையும் பகவத் சப்தம் குறிப்பிடுவதாக இருந்தாலும், வாக்கு, மனது, உடல், முககரணங்களால் துதித்துப் பூஜிக்கத்தகுந்தவராக சுருதி. தமுஷ்டுஹி என்பது உம்மையே கூறுவதால், நீர்தான் பகவான் முக்கியமானவர். மற்றாவ்ர்களை உம்மைப்போல் பூஜிக்கப் படவேண்டியது பற்றி ஸிம்ஹோ மாணவக: என்பது போல பகவத் சப்தம் குறிக்கிறது என்பது தாத்பர்யம். ஆதலால், ஆறு குணங்களோ, ஞான வைராக்கியமோ, பூஜ்யதையோ, இம்மூன்றில் எது, ப்ரவ்ருத்தி நிமித்தமாகக் கொண்டாலும், பகவான் தாங்கள் தாம். மற்றவர்கள் உம் ஸம்பந்தத்தால் பொருளாவார்கள். ஆதலால் பகவத் சப்த வாச்யத்வம் அதிவ்யாப்தி இல்லாத இரண்டாவது லக்ஷணமாவது திண்ணம்.
அதாபி யத் பாத நகாவஸ்ருஷ்டம்
ஜகத் விரிஞ்ச்சோ பஹ்ருதார்ஹணாம்ப : |
ஸேசம் புனாத்யன்யதமோ முகுந்தாத்
கோநாம லோகே பகவத்பதார்த்த : ||
என்ற வசனம் முகுந்தனைத்தவிர, பகவத்சப்த வாச்யத்வம் வேறு ஒருவனுக்குக் கிடையாது என்று கூறுகிறது. ஆதலால் முகுந்தனிடத்தில் அதிவ்யாப்தம், சிவபெருமானிடம் அவ்யாப்தம் இரண்டாவது லக்ஷணம் என்ற கேள்வி எழும்புகிறது கீழே சொல்லப்பட்ட அதர்வண வேதம் அத்யாசரமோபநிஷத் என்ற மந்த்ரோப நிஷத் ஆகிய சுருதிகள் சிவபெருமானை பகவானாகக் கூறும்போது, அதற்கு விருத்தமான இந்த வசனம் விரோதாதிகரண ந்யாயப்படி தள்ளப்பட வேண்டியதுதான். ஒளதும் பரீ என்னும் கட்டையப் பூராவும் வஸ்த்ரத்தால் மறைக்க வேண்டும் என்ற ஸ்ம்ருதிகூட ஒளதும்பரிக் கட்டையைத் தொட்டுக் கொண்டு ஸாமகானம் செய்யவேண்டும் என்று சொல்லும் சுருதிக்கு விரோதமானதால் தள்ளப்பட வேண்டியதாக ஜைமினி முனிவர் சொல்லிய மீமாம்ஸ ந்யாயம் இருக்கிறது.
மேலும் இந்தவாக்யமே த்வேசஷத்தால் எழுதப்பட்டதென்பது தெளிவு. ஸேசம் ஜகத் புனாதி என்றதால், வாஸுதேவன் பாததீர்த்தம் சிவபெருமானையும் புனிதமாக்கினதாகச் சொல்வது ஸரியான முறையல்ல அபத்தம். மகாலிங்கம், ஜ்யோதிர்லிங்கம், ப்ராதுற்பவித்ததும், ப்ரம்மா, விஷ்ணு இருவர்களும் அன்னம் வராகம் ரூபம் கொண்டு மேலும் கீழும் பலகாலம் தேடிச் சென்றும் காணமுடியாத வரலாறும், ஈச்வரனுக்கு ஆயிரம் நாம அர்ச்சனை செய்த வாஸுதேவன், ஒர் தாமரை குறைந்ததால், தன் கண்ணை பக்தியுடன் அர்ச்சித்து, ஈச்வரனிடம் சக்ராயுதம் பெற்றதும், ப்ரம்மா ஸாரதியாகவும், விஷ்ணு பாணமாகவும் வர, ஸாதனங்களை எதிர்பாராமல் ஸங்கல்ப்ப மாத்திரத்தில் நடந்த த்ரிபுர ஸம்ஹார வரலாறும், தேவர்கள் அமிர்தம் வேண்டி ஸமுத்ரத்தைக் கடைந்தபோது உண்டான கால கூட விஷ தாபத்தால் ஓடிவாடிய பிரம்ம விஷ்ணுக்களையும் மற்றும் ஸகலதேவர்களையும், சிவபெருமான் விஷத்தை தாம் ஏற்றுக் காப்பாற்றிய சரித்திரத்தாலும், பிரம்ம விஷ்ணுக்களையும் தன்வசப்படுத்தின காமனை, எரித்த வரலாற்றாலும், தேவியின் ஸ்வயம் வரத்தில், குழந்தை யுருவமெடுத்து வந்த சிவபெருமான், விஷ்ணு முதலிய தேவர்களை ஸ்தம்பிக்கச் செய்த வரலாற்றாலும் மத்ஸ்ய, கூர்ம வராஹ, த்ரிவிக்ரம, ந்ருஸிம்ஹம் விஷ்வக்ஸேனர் முதலியவர்களை அடக்கிய வரலாறுகளாலும், ப்ரம்மாவின் ஐந்தாவது தலையைப் பொய் சொன்னதற்காகக் கிள்ளி சதுர் முகனாகிய சரிதத்தாலும், சுருதி ஸ்ம்ருதி புராண இதிகாஸங்கள் அனைத்தும் சிவபெருமானை மகாதேவனாக அங்கீகரிக்கும்போது, அவரை சுத்தப்படுத்தியது முகுந்தன் பாத தீர்த்தம் என்று ஒரு வசனம் எழுதி வைத்தது எங்ஙனம் ப்ரமாணமாகும்?
த்யஜேத்ஏகம் குலஸ்யார்த்தே, க்ராமஸ் யார்த்தே குலம் த்யஜேத் | க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹியாத்மார்த்தே ப்ருதி வீம் த்யஜேத் என்றல்லவா உலக ந்யாயமும், பகாஸுரானால் உபத்ரவும் நீங்க, தினந்தோறும் ஒரு சிறு பிள்ளையை ஏகசக்ரபுரத்தில் தியாகம் செய்து வந்த பாரத வரலாற்றுப்படி, பல சுருதி விரோத மானத்தால், கீழே சொன்ன முகுந்தன் பாததீர்த்த சுலோகமும், த்வேஷத்தால் எழுதப்பட்டது தள்ளத் தகுந்தது.
கங்கா தேவி மலையரசன் பெண்ணாக ஹிமய மலையிலிருந்து விழும் ஸமயம், கர்வாப ஹரணத்துக்காக ஈச்வரனால் ஜடையில் தாங்கப்பட்டாள். விஷ்ணுபாத தீர்த்தமாக வாமனாவதார காலத்தில் இருந்தது வேறு ஜன்மாவில் என்றல்லவா ஜன்ம பேதம் சொல்லப்படுகிறது.
த்வம் தேவேஷு ப்ராம்மணோஸி. அஹம் மனுயேஷு.
விஷ்ணோராதி பத்யம் க்ஷத்ரம் ஸ்ம்ருதம்.
என்ற ப்ரமாணப்படி, சிவபெருமான் ப்ராம்மணத்வம், ப்ராம்மணாதிபத்யம் படைத்தவர். முகுந்தன் க்ஷத்திரியன், க்ஷத்ரியாதி பத்யம் படைத்தவன் என்ற சித்தாந்தமும் ஸர்வஸம்மதமாக இருக்க, பிராம்மணர் சிவன், க்ஷத்ரியன் விஷ்ணு பாத தீர்த்தத்தால் புனிதனானான் என்று, விவேகமுள்ள எந்த மனிதனும் சொல்லமாட்டான், ஒப்புக் கொள்ளமாட்டான்.
ப்ரம்ஹாசாஸெள அதிபதி : ச ப்ரம்ஹாதிபதி :
என்ற கர்மதாரய ஸமஸத்தை, நிபாதஸ்தபத் யதிகரண ந்யாயப்படி ஆச்ரயித்து, சிவபெருமான் ப்ராம்மணர், ப்ராம்மணர்களுக்கு அதிபதி என்பதை ஈசான மந்த்ரம் நன்கு வெளியிடுகிறது.
ஈசான ஸர்வவித்யானாம் …… ப்ரம்மணோதிபதி:
சுலோகம் 35
பூஜா தமுஷ்டுஹிவதா விஹிதா மஹேச
மந்த்ரேண வாங்மனஸ காய நிபந்தனாதே |
ஸர்வாபி ரப்யுபநிஷத்பி ருபாஸனோக்தா
நாராயணோப நிஷதம் பரிபாவயாம : ||
பகவத்பத வாச்யம்போல, பூஜாசேஷித்வம் என்பதும் சிவபெருமானுக்கு லக்ஷணம் அதிவ்யாப்தி இல்லாததாகச் சொல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
பதவுரை
மஹேச – சிவபெருமானே ! தமுஷ்டுஹிவதா மந்த்ரேண – தமுஷ்டுஹி என்ற பதத்துடன் ஆரம்பிக்கும் சதருத்ரீயமந்த்ரத்தினால், தே – உம்முடைய, வாங்மனஸ் காய நிபந்தனா பூஜா – வாயால் துதிப்பதும் மனதால் த்யானிப்பதும் உடம்பால் நமஸ்கரிப்பதுமாகிய பூஜையானது விஹிதா –விதிக்கப்பட்டிருக்கிறது, ஸர்வாபி ருபநிஷத்பி:- எல்லா உஅபநிஷத்துக்களால், உபாஸனேக்தா – உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. அபி – ஆனாலும், நாராயணோப நிஷதம் – நாராயணோப நிஷத் என்ற மஹோப நிஷத்தை, பரிபாவயாம :- யுக்திகளைக் கொண்டு தத்வார்த்தம் என்ன வெளியாகிறது என்பதாக விமர்சனம் செய்வோம். மஹோப் நிஷத்தில் சிவன் உபாஸிக்கப்படுவதாகவும் முகுந்தன் உபாஸகனாகவும் தாத்பர்யம் வெளிப்படுத்தப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களிலும் சிவபெருமான்தான் உபாஸ்யர் என்ற கருத்து தெளிவாகி விடும். என்ற நோக்கத்துடன், 36 முதல் 55 முடிய, 20 செய்யுள்களால், மஹோப்நிஷத் உபாஸ்யத்வம் என்ற மூன்றாவது லக்ஷணத்தை அதிவ்யாப்தி, அவ்யாப்தி தோஷம் இல்லாமல் ஸமன்வயப் படுத்துகிறார்.
ய: எவர் த்ரிஷு அக்னிமனீகம், ஸோமம், சல்யம் விஷ்ணும் தேஜனம் – என்ற சுருதிப்படி கட்டை, தார், கூறு என்ற மூன்று பாகங்களாக அமைந்த, விஷ்ணு, ஸோமன், அக்னி, தேவர்களாகிய பாணத்தை உடையவரும், அல்லது கர்ணபர்வசரிதப்படி விஷ்ணுவை பாணமாக கொண்டவரும், ஸுதன்வாலிங்க புராணப்படி மேருவை வில்லாகக் கொண்டவரும், கர்ணபர்வப்படி ஸம்வத்ஸர தேவதையை வில்லாகக்கொண்டவரும், அல்லது சாந்திபர்வப்படி பிரணவம் என்ற ஓங்காரத்தை வில்லாகக் கொண்டவரும், (ஓங்காரம் வில்லாகவும், காயத்ரீ நாணாகவும், பஞ்சாக்ஷரங்களை பாணமாகவும் வைத்து த்ரிபுரஸம்ஹாரம் செய்ததாக சாந்தி பர்வா சொல்லிகிறது,) ப்ரணவ வ்யாக்ருதி ஸஹிதி காயத்ரீ ஜபத்தாலும், பஞ்சாக்ஷர ஜபத்தாலும், ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண மென்ற முப்புரம் நீங்கி முக்தியடையலாம் என்ற தாத்பர்யத்தை விளக்குகிறது.
ய: விச்வச்யபேஷஜஸ்ய க்ஷயதி ஸம்ஸார நிவ்ருத்தி மருந்தாகிய ஞானத்துக்கு எவர் இருப்பிடமோ, எவர் ஞானப்ரதாதாவோ, தமு – அந்த சிவபெருமானையே, ஏ மனதே ஸதுஹி – துதிப்பாயாக, மஹே – உத்ஸவ காலத்தில், ஸோமனஸாய – நல்ல மனம் பெறவேண்டி, தமுயக்ஷ்வ அவரையே குறித்து மனதால் த்யானம் செய். அஸுரம் – உயிரைக் கொடுக்கும் ஆபத்பாந்தவனாகிய, ருத்ரம் தேவம் – ருத்ரக் கடவுளை, நமோபி :- நமஸ்காரங்களால் துவஸ்வ – பணிவிடை செய்வாயாக. என்று ருக் வேதமந்த்ரம் முக்கரணங்களால் பூஜிக்க வேண்டியது சிவன் ஒருவனையே என்ற விதியை, உபரிதாரண ந்யாயப்படி கற்பிக்க வேண்டுமென்பதத் தெளிவாகக் கூறுகிறது. மேற்படி ந்யாயம் மீமாம் ஸகர்களுக்குப் பிரஸித்தம். வாயவீய ஸம்ஹிதையில் ஸாம்பூஜா த்ரிதா ப்ரோக்தா மனோவாக்காய ஸாதனை : || என்று சொல்லப்படுவதும் காண்க.
சுருதி ஸூக்தி மாலா : இன்று சுலோகம் 36 முதல்40முடிய
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சுருதி ஸூக்தி மாலா
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்.
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004

சுலோகம் 36
வாக்யம் யதாஹ தஹராந்த ருபாஸனம் தே
யத்வா ஸமர்ப்பயதி ரூப விசேஷமஸ்மை |
அந்தர்கதைரபி ததெள பயிகாபி தேயை :
பாவ்யம் வசோபிரிதி வாக்யவிதாம் ப்ரவாத : ||
அங்காங்கு எல்லா உபநிடதங்களிலும் உபாஸனை செய்யப்பட வேண்டுமென்று முதலில் விதிகாணப்படுகிறது. பிறகு உபாஸிக்கப்படவேண்டிய, செயப்படு பொருளின் பெயர், உருவம், குணவிசேசஹ்ங்கள் கூறப்படுகின்றன. பிறகு உபாஸனையின் பயன் கூறப்படுகிறது. இவ்விதம் ப்ருஹதராண்யகம், பஹ்வ்ருசாரண்யகம். ஸாமவேத ஸம்பந்தமான தலவகார உபநிஷத், அதர்வவேத ஸம்பந்தமான முண்டகோபநிஷத், அதர்வசிரஸ், அதர்வசிகை, கைவல்யம், ச்வேதாச்வதரம், தைத்ரீ யோபநிஷத், ரிக்வேத ஸம்பந்தமான ஐத்ரேயகம், முதலிய பல இடங்களில், உபநிஷத்துக்களில், உபாஸனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் நாராயணோப் நிஷத்துக்கு மஹோப நிஷத் என்ற ப்ரஸித்தி இருப்பதால், அதைப் பரிசீலனை செய்து, உண்மையான அர்த்தம் கூறப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களின் அர்த்தமும் அப்படித்தான் என்பது கைமுதிக ந்யாயப்படி ஸித்திக்குமாதலால், நாராயணோப் நிஷத்தைப் பரிசீலனை செய்ய ஆரம்பிக்கிறார்.
யாஞ்ஞிக்யுபநிஷத் ப்ரோக்த உபாஸ்யத்வம் பரமசிவனுடைய அஸாதாரணமான அதிவ்யாப்டி தோஷமற்ற மூன்றாவது லக்ஷணம் என்றதை ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறார். தைத்ரீய உபநிஷத் நாலாவது ப்ரச்னத்தில், அதாவது தைத்ரீயாரண்யகம் பத்தாவது ப்ரச்னத்தில், பரமேச்வரன் உபாஸனை ஸம்பந்தமாக மூன்று அநுவாகங்கள் கூறப்படுகின்றன. அணோரணீயாந் – என்பது 12-வது அநுவாகம் ஸ்ஹஸ்ர சீர்ஷம் தேவம் என்பது 13 வது அநுவாகம் பிறகு சில அநுவாகங்களுக்குப் பிறகு இதன் முடிவு ருதம் ஸத்யம் என்ற 23 வது அநுவாகத்தில் காணப்படுகிறது. சப்த ப்ராணா : என்ற மந்த்ரங்களால், ஸ்கலஜகத்துக்கு பரிணாம்யுபாதான காரணமான, அதிஷ்டாதாவான, மகேச்வரனை விளக்கி, அவர் அனுக்ரஹத்தால் பச்யதி வீத சோக: என்று ஸகல துக்கங்கள் நீங்கும்படி ஸாக்ஷாத்காரம் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது, இவ்விதமே ச்வேதாச்வர மந்த்ரமும் கூறுகிறது. தேனேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் என்ற மந்த்ரம் வரையில் உபாஸ்ய மகேச்வரப்ரபாவம் கூறப்பட்டிருக்கிறது. ந கர்மணா என்ற மந்த்ரத்தால் த்யாகத்தின் ஆவச்யகம் கூறப்பட்டது., வேதாந்த விக்ஞான என்ற மந்த்ரத்தால், வேதப்பொருளை நன்கு அறிந்து ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமான யோகத்தால் பிரம்மலோகமடைந்து, பரார்த்த த்வய காலத்துக்குப் பிறகு, அம்ருதவாச்யரான மகேச்வரனை யடைந்து முக்தி யடைகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஜாபாலம் முதலிய உபநிஷத்துக்களால், அம்ருதம் என்ற பதம் பரமசிவனைக் குறிக்குமென்பது தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
தஹ்ரம் விபரபம் என்ற மந்த்ரத்தால், ததுபாஸிதவ்யம் என்று, தவ்ய ப்ரத்யய முள்ள விதி ப்ரத்யயத்தால
ஸ்வாத்யாயோ த்யேதவ்ய :
என்ற ப்ரஸித்த விதிபோல உபாஸனாவிதி கூறப்பட்டுள்ளது. பிறகு அந்த உபாஸ்ய வஸ்துவின் பெயர், ஓங்கார ப்ரதிபாத்யமான, ஓங்கார ப்ரதீகமான மஹேச்வரனென்று கூறப்படுகிறது நாதத்தைல் ஸகல ப்ரபஞ்சத்தையும் லயிக்கும்படி வைத்துக் கொண்டிருப்பதால், ப்ரணவம் ப்ரக்ருதி லீன: என்று சொல்லப்படுகிறது. பிறகு மஹேச்வரன் ரூபம் என்னவென்பதை, 23-வது அநுவாகம் ருதம் ஸத்யம் என்பது, கிருஷ்ண பிங்களம் ஊர்த்தவ ரேதம், விருபாக்ஷம் என்று அஸாதாரணமான பரமேச்வரன் ரூபங்களைக் கூறுவதால் விளக்குகிறது.
இவ்விதம் உபாஸனா விதிவாக்கியம், அ தன் பயன், உபாஸ்ய வஸ்துவின் நாம ரூபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன இந்த மகேச்வரன் உபாஸனா ஸந்தர்ப்பத்தின் நடுவில் கூறப்படும் நாராயண பரமான, ஸகஸ்ர சீர்ஷம் என்ற 13-வது அநுவாகத்துக்கு எப்படி ஸம்பந்தம் ஏற்படுத்துவது என்பதை வாக்ய நியாயங்களைக் கொண்டு மீமாம்ஸ சாஸ்திர முறையில் நிச்சயிக்க வேண்டும். மீமாம்ஸா சாஸ்திரத்தில் உபக்ரமாதி கரணத்திலும் அச்வப்ரதிக்ரஹேஷ்டி அதிகரணத்திலும் முதலில் ஆரம்பிக்கப்பட்டதைத் தழுவி பின்னால் சொல்லப்படுவது விரோதமாகவிருந்தால் மாற்றி அர்த்தங் கொள்ள வேண்டுமென்பது ந்யாயமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளது இங்கு முதலிலேயும், முடிவிலேயும், 12, 23 அநுவாகங்களில் மஹேச்வர உபாஸனை சொல்லியிருப்பதால், நடுவில் உள்ள நாராயணபரமான 13 அநுவாகம் மஹேச்வர உபாஸனா பரமாக இருக்க முடியாது. இதுதான் ஸந்தம்சம் ந்யாயம் என்றும், இல்லாவிடில் வாக்யபேதம் வரும். உத்கர்ஷம் வரும் என்றும், பலவாறாக மீமாம்ஸையில் தூஷிக்கப்பட்டு, ஏக வாக்யதை வேண்டும் என்று, கைமுதிக ந்யாயத்தைக் காட்டி ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. ஆதலால் நாராயண பரமான நடு 13-வது அநுவாகம் தனியல்ல. மஹேச்வர உபாஸனா விதியில் அங்கமாகச் சேர்க்கப்படவேண்டியது என்பது ந்யாய ப்ராப்தம். உபாஸனை, உபாஸ்ய நாம ரூபம், இரண்டும் சொல்லப்பட்டு விட்ட படியால் பாக்கியுள்ள உபாஸகன், (அதாவது யார் உபாஸிக்கிறான் என்பது) 13-வது அநுவாகத்தால் சொல்லப்படுகிறது. அதாவது நாராயணன் தன் ஹ்ருதய புண்டரீகத்தில், பரமேச்வரனை உபாசித்தார். ஆதலால், வேதாந்தத்தால் பரம்பொருள் அறிந்தவர்கள் த்யாகிகளாக, முக்திக்காக பரமேச்வரனை உபாஸிக்க வேண்டுமென்பது தாத்பர்யம்.
மேலும் 13-வது அநுவாகத்தில் நாராயணனை ப்ரதிபாதிப்பதில், அவரை உபாசிக்க வேண்டும் என்று விதி காணப்படவில்லை. நாராயணன் மகினையைச் சொல்லுவதால் உபாஸனா விதியைக் கல்ப்பித்தது ஆகாது. உபாஸிதவ்யம் என்ற 12-வது அநுவாகத்தில் உள்ள பரமசிவன் உபாஸனா விதிப்பதத்தை அனுஷங்கம் செய்து, நாராயண உபாஸனை விதிப்பதாக அங்கீகரிப்பது ந்யாய விருத்தம். ஒர் விதிவாக்யத்தில் உபாஸ்ய ஸ்வரூபம் சொல்லப்பட்டிருந்தால், மற்றொரு வாக்கியத்திலுள்ள உபாஸ்யரூபம் அந்த விதியோடு அந்வயிக்காது என்பது ஜைமினி ந்யாயம். வைச்வ தேவயாகத்தில் ஆமிக்ஷா என்ற ஹவிஸ் சொல்லப்பட்டுவிட்டபடியால், மறு வாக்கியத்திலுள்ள வாஜினம் என்ற ஹவிஸ் அந்தக் கார்யத்தில் அன்வயிக்கமுடியாமல், வேறு கார்யத்தை ஏற்படுத்திவிடுகிறது. கர்மபேதம் என்றல்லவா மீமாம்ஸகர் கொள்கை? ஆதலால் உபாஸனா பேதம் சொல்ல வேண்டும். அதுவும், உபக்ரம உபஸம்ஹாரத்துக்கு மாறுபாடாக நடுவில் இருப்பதால் முடியாது. முதல் முடிவுகளில் சொல்லப்பட்ட பரமேச்வரன் உபாஸனைக்கு அனுகுணமாக இருந்தால் தான் பொருத்தமுடியும். ஸ்வதந்த்ர நாராயணோ பாஸனையாக இருக்க முடியாது. பொருந்தாது. நாராயணனை உபாஸகராகச் செய்து பொருத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆதலால், மஹேச்வரன் உபாஸ்யர், முக்தி பயன். நாராயணன் உபாஸகர். அவர்போல, மற்ற இக்காலத்து த்யாகிகளும் உபாஸித்து முக்திபெறலாம் அம்ருத பதவாச்யரான மஹேச்வரனை யடைந்து, பவ பாசத்திலிருந்து விடுபடலாம் என்பது தான் மூன்று அநுவாகங்களின் ஏக வாக்யதையைக் கொண்டு ந்யாயப்படி ஸித்தமான அர்த்தம் என்பதை விளக்குகிறார்.
பதவுரை
யத் – யாதொரு, வாக்யம் – (தஹாம் விபாபம் – ததுபாஸி தவ்யம்) உபக்ரமத்திலுள்ள உபாஸனா விதிவாக்யம் தஹராந்த: ஹ்ருதயம் என்ற புண்டரீகத்தின் தாமரையின் நடுவில் உபாஸனம் – உபாஸனாகார்யத்தை, ஆஹ – செய்யவேண்டுமென்று சொல்லுகிறதோ, யத்வா – எந்த உபஸம் ஹாரத்தில் உள்ள ருதம் ஸத்யம் —-நமோ நம : என்ற 23 வது அநுவாக வாக்யம். அஸ்மை – இந்த உபாஸனை சொல்வதற்காக அபேக்ஷிதமான, தே – உம்முடைய. ரூபவிசேஷம் – க்ருஷ்ணபிங்களம் ஊர்த்த்வ ரேதம், விரூபாக்ஷம் என்ற அஸாதர்ரணமான லக்ஷணங்களை, ஸமர்ப்பயதி – தெரியப்படுத்துகிறதோ ஆரம்பம், முடிவு. இந்த இரண்டு மந்த்ரங்களுக்கு நடுவில் உள்ள, வசோபிரபி – ஸஹஸ்ரசீர்ஷம் என்ற 13 வது அனுவாகமாகிய மந்த்ரங்களாலும், ததெளபயிகா பிதேயை :- அந்த உபாஸனா விதிக்கு அனுகுணமான, சேஷ பூத அர்த்தத்தை உடையவைகளாகத்தான் பாவ்யம் – இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏகவாக்யதை ஏற்படாமல், வாக்யபேத தோஷம் ஏற்பட்டுவிடுமென்று, இதி – இவ்விதமாக, வாக்யவிதாம் – வாக்ய ந்யாயத்தை அறிந்த மீமாம்ஸகர்களின், ப்ரவாத :- தீர்மானம், உத்கோஷம்.
சுலோகம் 37
நாராயணஸ்ய யதுபாஸ்யதயாபி தானம்
யத்வா பலந்ததிஹ நோபலபே கதஞ்சித் |
உத்பத்திசிஷ்ட பவதன்வய மன்யகாமி
சக்யம் மஹேச்வர ! ந கர்த்து முபாஸனம் தே ||
நடு அநுவாகத்தில் நாராயணனையே ஸ்பஷ்டமாகக் குறிப்பதால் எவ்விதம் பரமசிவன் உபாஸனையுடன் சேர்க்க முடியும், தனியாக நாராயண உபாஸனை விதியைக் கற்பிப்பதோ, முன் உபாஸிதவ்யம் என்ற விதியை அநுஷங்கம் செய்து, நாராயண உபாஸனையும் அங்கீகரிப்பதோ, உசிதமானது என்ற சங்கைக்கு பதில் சொல்லப்படுகிறது.
பதவுரை
இஹ – இந்த நடுவாகிய 13-வது அநுவாகத்தில் நாராயணஸ்ய – நாராயணனுடைய, உபாஸ்யதயா பிதானம் – உபாஸிக்கும்படி சொல்லும் விதியும், யத்வா பலம் – அதன் பயனும் (முன் 12-வது அநுவாகத்தில் மஹேச்வர உபாஸனைக்குக் காணப்படுவதுபோல) தத் – அவ்விரண்டும், கதஞ்சித் – சிரமப்பட்டாலும், எந்த விதமாகவும் நோபலபே – காணமுடியவில்லை மகேச்வர – பரமேச்வரனே ! தே – உம்முடைய, உபாஸனம் – உபாஸனாவிதி – பல விதிகளை, உத்பத்திசிஷ்ட பவதன்வயம் – விதியின் உத்பத்தி வாக்யத்திலேயே அன்வயிக்கும்படி உமது கர்மபாவத்தை 12-வது அநுவாகத்திலேயே சொல்லப்பட்டு ஆகாங்க்ஷை முடிந்து விட்டதால், அந்யகாமி – வேறு உத்பந்ந சிஷ்டமான கர்மாவைப் பொருந்துவதாக, கர்த்தும் ந சக்யம் – செம்யமுடியாதல்லவா? இது தான் குணந்யாயம், வாஜினி ந்யாயமென்று சொல்லப்படுவது காண்க.
யத்வேதாதெள – என்ற 12-வது அநுவாக மந்த்ரத்தால், மஹேச்வர : ப்ரக்ருதி லீனஸ்ய பர : என்று பரமேச்வரனை உபாஸ்ய ரூபமாக உத்பத்தி காலத்திலேயே சொல்லப்பட்டுவிட்டபடியால், 13-வது அடுத்த அநுவாக ப்ரதிபாத்யனான நாராயணனை அந்த விதியில் உபாஸ்யனாக அபேக்ஷ இல்லாததால் பொருத்தமுடியாதல்லவா? அப்படியானால் 13-வது அநுவாகத்தில் மகேச்வரன் உபாஸனா விதிபரமான இரண்டு அநுவாகங்களின் மத்தியில் நாராயணன் மகிமையைத் தெரிவிப்பது வீணாகிவிடாதா – என்ற சங்கைக்குப் பரிகாரம் 38-வது சுலோகத்தில் சொல்லப்படுகிறது.
சுலோகம் 38
நாஸா வுபாஸன முபாஸ்யகதைவதூரே
தஸ்மா துபாஸகதயா பரிசேஷஸித்தி : |
அந்தர் வ்யவஸ்தித கிரா பரமாத்மனஸ்தே
சப்தாத்ருதேபி விஹிதம் ததுபாஸகத்வம் ||
பதவுரை
அஸெள – இந்த 13-வது அநுவாகத்தில் ப்ரதிபாதிக்கப்படும் நாராயணன் முன் பின்னுள்ள உபாஸனம் – உபாஸனாக்ரியையாக ; ந – இருக்கமுடியாது. சேதனனான புருஷன் அசேதன க்ரியை ரூபமாக எப்படியிருக்க முடியும்? உபாஸ்யஜதாதூர எவ – உபாசிக்கப்படும் கர்மாவாக அந்வயிப்பதோ அங்கீகரிக்கவே முடியாது. தஸ்மாத் – ஆதலால், க்ரியையும் இல்லை கர்மாவும் இல்லையென்றதால், உபாஸகதயா பரிசேஷ ஸித்தி: மீதி, உபாஸனா கர்த்தாவாகத்தான் நாராயணன் சொல்லப்பட்டவராக ஆகிறார். பரமாத்மனஸ்தே – பரம் பொருளாகிய நீர், அந்தர்வ்யவஸ்திக கிரா – நாராயனுடைய ஹ்ருதய புண்டரீக ஜோதியின் நுனியில் வீற்றிருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பதால், அந்த வாக்கியத்தின் லிங்கத்தைக் கொண்டு, சப்தாத்ருதே அபி – உபாஸகர் என்ற பதமில்லாவிடினும், ததுபாஸகத்வம் – அந்தப் பரம்சிவனைத் தன் ஹ்ருதய புண்டரீக ஜோதியில் உபாசித்துக் கொண்டிருப்பவர் நாராயணர் என்பது, விஹிதம் – ந்யாயத்தால் லிங்க மூலம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ஸ்ருவம் என்ற பாத்ரத்தால், எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்யத்தில். சக்தியை, லிங்கத்தை யனுஸரித்து, த்ரவத்ரவ்யமான நெய், பால், எடுப்பதில் ஸ்ருவம்; முட்டை, மற்ற கடின த்ரவ்யத்தில் கையால் எடுப்பது, மாம்ஸ்த்தை வழுக்குமாதலால் கத்தியால் எடுப்பது என்று பதமில்லாவிடினும், சக்தி என்ற லிங்கத்தால் நிர்ணயித்திருக்கிறார். கர்மகாண்டத்தில் மீமாம்ஸகர்கள் அனுஸ்ரீஉதியே நேராகச் சொன்னதாகக் கொள்ள வேண்டும் என்பது ந்யாயவித் ஸித்தாந்த மல்லவா? நாராயணன் ஹ்ருதய புண்டரீக ஜோதிநுனியில் பரமசிவன் இருப்பதாகச் சொல்வது. அவர் உபாஸகர் என்பது ஒப்புக் கொள்ளப் படாவிடில் பொருந்தாது அல்லவா? இது தான் அர்த்தாபத்தி என்ற ப்ரமாணமகக் கருதப்படும். ஆதலால், உபாஸகபதம் வாசகமாக இல்லாவிடினும், வாக்ய சேஷந்யாயப்படி லிங்கத்தால், மஹேச்வர உபாஸனா விதியில் மிக மகிமை வாய்ந்த நாராயணன் உபாஸகன் என்பது சொல்லாமல் ஸித்திக்கும். இதுவே பரிசேஷ ஸித்த ந்யாயம் என்றும் சொல்லப்படும். எங்குமுள்ள ஸர்வ வ்யாபியான ஸர்வாந்தர்யாமி பரமசிவன், நாராயாணன் ஹ்ருதய ஜோதியில் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருப்பது அவர் உபாஸிக்கிறவராக இருந்தால் தான் பொருத்தமாக அந்வயிக்கும்.நாராயணன் தன் இஷ்டம் நிறைவேற ஸாம்பாதி புத்ர லாபார்த்தமாக பரமசிவனை உபாசிக்கிறவர் என்ற விஷயம் மகா பாரதத்தில் சாந்திபர்வாவில் நரநாராயண ஸம்வாதத்தில், நரனுக்கு நாராயணன் தானே தன் வாயால் சொன்னதாக, நன்கு ஐயமறக் கூறப்பட்டிருப்பது ஸித்தாந்தத்திற்கு நல்ல உபப்ரஹ்மணமான அத்தாக்ஷியாகும் ருத்ரம் ஸம் பூஜயாம்யஹம் என்று தன் வாயால் சொல்வது காண்க.
புத்ரார்த்தம் ஆராதிதவான் ஆத்மா ஆத்மானம் ஆத்மன: என்பதும் காண்க.
சுலோகம் 39
யஸ்ய ஸ்திதோஸி ஹ்ருதயே பரமஸ்த்வ மாத்மா
யுக்தந்ந தஸ்ய பரமாத்ம தயாபிதானம் |
ஸ்வேன ஸ்வயம் மனஸி வன்ஹிசிகாந்தராளே
திஷ்டந் நுபாஸ்ய இதி ஹாஸ்ய பதம் ந கஸ்ய ||
ஆத்மா நாராயண : பர : என்ற சுருதி நாராயணனைப் பரமாத்மாவாகக் கூறுகிறது. அவரை யல்லவா தஸ்யா சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித : என்ற சிகாவாக்யத்திலும் ஹ்ருதயஜோதி நுனியில் இருப்பதாகச் சொல்ல வேண்டும், அப்பொழுது நாராயணன் உபாஸ்ய தெய்வமாக அல்லவா ஆவார். உபாஸகனாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்ற சங்கைக்கு ஸமாதானம் கூறப்படுகிறது.
பதவுரை
பரம: ஆத்மா த்வம் – பரமாத்மாவாகிய தாங்கள், யஸ்ய ஹ்ருதயே ஸ்திதோஸி – எந்த நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறீரோ, தஸ்ய – அந்த நாராயணனை, பரமாத்மதயா அபிதானம் – ஆத்மா நாராயண : பர : என்ற பாகத்தால் பரமாத்மாவாகச் சொல்வது ந யுக்தம் – பொருத்தமாகாது, மனஸி – ஹ்ருதய புண்டரீகத்தில், வன்ஹி சிகாந்தராளே – ஜோதி நுனியின் நடுவில் ஸ்வயம் திஷ்டந் – தானே பரமாத்மாவாக இருந்து கொண்டு, ஸ்வேன உபாஸ்ய : – தன்னால் உபாஸிக்கப்படுகிறார், இதி – என்று அர்த்தம் கொள்வது பதமாக இருக்காது.
ஒருவனுக்கு கர்த்த்ரு பாவமும் கர்மபாவமும் ஏற்பது பொருந்தாதல்லவா? நல்ல சிக்ஷை பெற்ற நாட்டியப் பெண்ணும், தன் தோளில் தானே ஏற முடியுமா? பரமாத்மா என்ற பதம் பரமசிவனைத்தான் குறிக்கும். மற்ற தெய்வத்துக்குப் பொருந்தாது என்று ஸித்தாந்தம், மகாபாரதம் சாந்தி பர்வம் ஸபாபர்வங்களில் வ்யாஸ முனிவரால் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது, மற்ற புராணங்களிலும், தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
உத்தம புருஷஸ்து அன்ய: பரமாத்மா
இதி – உதாஹ்ருத:
என்ற கீதா வாக்யம் மூவுலகத்தையும் அந்தர்யாமியாக வ்யாபித்துத் தாங்கும் ஈச்வரனை அநுவதித்து, பரமாத்மா என்ற ஸம்ஞையை விதிக்கிறது. வாயவீய ஸம்ஹிதையிலும் மந்த்ர சாஸ்திரங்களிலும் இது ப்ரஸித்தமானது காண்க.
ஈச்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுமதிஷ்டதி |
என்று ஹ்ருதயத்தில் பரமேச்வரன் அந்தர்யாமியாக வீற்றிருப்பதைச் சொல்லி, தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேண பாரத || என்று அச்சிவபெருமானையே சரணமடையும்படி கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். தன்னைச் சரணமடையும்படி சொல்லவில்லை. மாயினம் து மகேச்வரம்’ என்றபடி மாயையைக் கொண்டு உலகைப் படைத்து ஆள்பவர் பரமேச்வரன் என்பது ஸித்தாந்தம். தமேவ என்று ஏவ பதமும் அவரையே சரணமடையும் படி அழுத்தமாகக் கூறுகிறது. ஒரு பதிவ்ரதா ஸ்த்ரீ பரபுருஷனால் அபகரிக்கப்பட்டாலும், தன் புருஷனையே குறிக்கோளாகக் கொள்வதுபோல, ஈச்வரன் என்ற ச்ருதி வாணி, ப்ரகரணத்தால் நாராயணன் ஸமீபம் கொண்டு போகப்பட்டாலும் பரபுருஷனாகிய அவரைக் குறிக்காது என்பது திண்ணம். மகாகவி காளிதாஸரும்.
அணிமாதி குணோபேத மஸ்ப்ருஷ்ட புருஷாந்தரம், யஸ்மின் ஈச்வர இத்யனன்ய விஷயச் ச்ப்தோ யதார்த்தா க்ஷர: என்று ஸித்தாந்தம் செய்திருப்பது இங்கு காணப்பட வேண்டும்.
சுலோகம் 40
நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸுஷிரம் மகாக்னி :
அக்னே : சிகா ச பரமாத்ம பதம் யதுக்தம் |
ஸர்வோப்யுபாஸன விதே : அயம் அர்த்தவாத :
ச்ரத்தா விசிஷ்ட புருஷா சாணாத் விதேயே ||
வேதாந்த விக்ஞான ஸுநிச்சிதார்த்தா: |
என்ற மந்த்ரத்தால் உபாஸகர்கள், யதாத்மாவாகிய சுத்தமனதுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருப்பதால்
யதாத்மானோ முக்திகாமா: மஹேச்வரம் உபாஸீரந் – என்ற விதி பூர்தி (அடங்கிய மனமுள்ளவர்கள் முக்திக்காகம் பரமசிவனை உபாசிக்க வேண்டும்) ஏற்பட்டுவிட்ட படியால் பரிசேஷந்யாயத்தால், நாராயணன் உபாஸகன் என்ற கக்ஷி அர்த்த மற்றதாகும் அல்லவா, என்ற சங்கை நீக்கப்படுகிறது.
பதவுரை
நாராயணஸ்ய – நாராயணனுடைய, ஸுஷிரம் – த்வாரமுள்ள, ஹ்ருதயம் – ஹ்ருதய புண்டரீகமும், மகாக்னி :- அதன் மத்தியில் பெரிய ஒளியும், அக்னே : சிகா ச – அந்த ஒளியின் நுனியும், பரமாத்ம பதம் – பரமாத்மாவாகிய பரமேசவ்ரன் வஸிக்கும், உபாசிக்கப்பட வேண்டிய இடமாக, யதுக்தம் – யாதொன்று சொல்லப்பட்டிருக்கிறதோ, ஸர்வோஅபி – அது எல்லாம், விதேயே – செய்யப்பட வேண்டிய கார்யத்தில் (ப்ரவ்ருத்தி ஏற்படுவதற்காக) ச்ரத்தா விசிஷ்ட புருஷா சரணாத் – சிறந்த புருஷனான நாராயணனும் மிகுந்த ச்ரத்தையுடன் இந்த உபாசனையைச் செய்திருக்கிறார் என்று யதார்த்தத்தைச் சொன்னதால், உபாஸனவிதே : அயம் அர்த்தவாத :- உபாசனை விதிக்கு இது அர்த்தவாதமாக பூதார்த்தவாதமாகச் கருதப்படுகிறது. பெரியோர்கள் செய்து பயனடைந்த கார்யமிது. ஆதலால் முக்திவேண்டுபவர் பரமசிவனையே, ஹ்ருதய கமல ஜோதியில் உபாசியுங்கள் என்பது ருசியை உண்டு பண்ணுவதற்காகச் சொல்லப்படுகிறது. கர்ம காண்டத்தில் இம்மாதிரி ஒரு கர்மாவை விதித்துவிட்டு, அதில் சிரத்தை வருவதற்கு தேவேந்திரன் செய்த கார்யமிது என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பது ஸஹஜம்.
274 சிவாலயங்கள்:அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்

மூலவர் : பாலுகந்தநாதர்
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : அத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி
ஊர் : திருவாய்பாடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்
      
ஆதியும் அறிவுமாகி அறிவுனுட் செறிவுமாகிச் சோதியுட் சுடருமாகித் தூநெறிக்கு ஒருவனாகிப் பாதியிற் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 40வது தலம்.
 
விழா : சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.  
      
திறக்கும் நேரம்:காலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி - 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 94421 67104


 
தகவல் : முன் மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்புள்ளது. வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், நடராஜர் சபை, பைரவர் சன்னதிகள் உள்ளன.

ஸ்தல பெருமை : அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள் பாலிப்பது சிறப்பு.
 
ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் "ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், "ஆப்பாடி' ஆனது.
274 சிவாலயங்கள் :அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில்

மூலவர் : அருணஜடேசுவரர்
அம்மன் : பெரிய நாயகி
தல விருட்சம் : பனைமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
ஆகமம் பூஜை  : காமிய ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் : திருப்பனந்தாள்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்

விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம்.

விழா : சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம்:காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள் : 612 504 தஞ்சாவூர் மாவட்டம்.போன் : +91- 435 - 245 6047, 94431 16322, 99658 52734 


     
தகவல் : இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம்.கிழக்கில் ஐந்து நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

பிரார்த்தனை : நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
     
ஸ்தல பெருமை : கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.

ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்த முடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிய படி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.
274 சிவாலயங்கள் : அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  பிராணநாதேசுவரர்
அம்மன் :  மங்களாம்பிகை
தல விருட்சம் :  கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
தீர்த்தம் :  மங்களதீர்த்தம் (காவிரி)
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமங்கலக்குடி
ஊர் :  திருமங்கலக்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம்.
 
விழா : பங்குனி உத்திரம் பத்து நாட்கள்  பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் திருக்கல்யாணம் விசேசம் இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா இதுவே ஆகும். இது தவிர சங்கட சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களும் இத்தலத்தில் சிறப்பு மிகுந்த நாட்கள் என்பதாகும். அஷ்டமி தேய்பிறை அன்று பைரவர்க்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இரவில் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை ஆறு மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு ஒன்பது மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன் பின் திருமண விருந்தும் நடக்கும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி : 612 102 தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91-435 - 247 0480. 



     
தகவல் : சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.
பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள். இது தவிர சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின் புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட ஸ்தலம். இங்கு முருகன்  சண்முகர்  என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். பதினோறாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டுள்ள தலம். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மேற்பார்வையில் நடந்து வரும் கோயில் இது.  
      
பிரார்த்தனை : நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷம் உள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தீர்க்க சுமங்கலி பாக்கியம் திருமணம் ஆன பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது இத்தலத்தில் மிகவும் விசேசம். தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம் (எதிரிகள் பயம்) நீக்கம்பெறல்,  திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் : தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம் எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி சுவாமிக்கு வஸ்திரம் படைத்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து ஐந்து சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி மஞ்சள் குங்குமம், பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். கலசாபிசேகம் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
     
1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி
2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை
3. இக்கோயில் விமானம் மங்கள விமானம்
4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம்
5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகங்கள் வழிபட்ட சிவன் : ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும் படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.

நின்ற லிங்கம் : பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்த போது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தி தான் மலர் வைத்து பூஜித்தாராம்.

முதல் கோயில் : கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே இவ்வாறு இரட்டை கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷம் உள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு அதன் பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம்: நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

மரகத லிங்கம் : நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தாலி தரும் தாய் : அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள் அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சந்தன அலங்காரம் : நவராத்திரியின் போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால் இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன் படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததை போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.  
      
ஸ்தல வரலாறு : பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார்.  கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும் போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்ப தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அது படி மந்திரி உயிர் திரும்ப பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்) என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

274 சிவாலயங்கள் :அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்) கோடிகாநாதர்

அம்மன் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,
தல விருட்சம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேத்ரவனம்
ஊர் : திருக்கோடிக்காவல்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்
இன்று நன்று நாளை நன்று என்று நின்று இச்சையால் போன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37 வது ஸ்தலம்.
 
விழா : நான்கு கால பூஜை, சித்திரை, பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை : 609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் :+91-0435 - 2450 595, +91-94866 70043, 



     
தகவல் : இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது. சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்ம பல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.
ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழை வாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்து தான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர் மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோக சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளை தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது.

கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். தினமும் ஐந்து குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காண முடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜ கோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்ப கோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ள பூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகா விஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்கு புற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

பிரார்த்தனை : இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.
     
ஸ்தல பெருமை : இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.

1) "கா' என்றால் சோலை எனப் பொருள்படும். "கா' என முடியும் ஐந்து சிவத்தலங்களை "பஞ்ச காக்கள்' என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்), திருநெல்லிகா, (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடுர் அருகில்), மற்றும் திரு கோடிக்கா, ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

2) "திரிகோடி' என்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், "திரிக்கோடிக்கா' என்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் "திருக்கோடிக்காவல்' என்று மருவி இருக்கலாம்.

யமபயம் இல்லை : சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்று விட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரக லோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவ பெருமானிடம் வந்து முறையிடுகிறார்.
தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன்  யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது.  இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. வைணவருக்கு அருள் பாலித்த ஈஸ்வரன் இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடிய வில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்து கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றி கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார். மறுநாள் காலை திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர்தான் என்பதில் சந்தேகம்  இருக்க முடியுமா?

காட்சி கொடுத்த அம்பாள் : ஸ்ரீ திருக்கோடீஸ்வரரைப் போல் ஸ்ரீ திரிபுரசுந்தரி  அம்பாளும் அருள் பாலித்த விபரம் வருமாறு.

1. ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல்: ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்ட போது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

2. துர்வாசருக்கு காட்சி கொடுத்தல்: காட்சி கொடுத்த அம்பாளாக திருக்கோடீஸ்வரர் சந்நிதியில் வீற்றிருக்கும் இந்த அம்பாளைக் குறித்து வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. அதைக் கூறுவதற்கு முன்னால் பிருங்கிமஹரிஷியின் கதையை தெரிந்து கொள்வது அவசியம். பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம் பொருள் என்று துணிந்து சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவ பெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாத படி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவ பெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று ஸ்வாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை ஸ்வாமியிடம் வரம் பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார்.

துர்வாச மகரிஷி, தக்ஷின சிதம்பரம் என அழைக்கப்படும் "திருக்களர்' ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று ஸ்ரீ நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுர சுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன்வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி அதற்கு சந்தர்ப்பமே  கொடுக்கக்கூடாது என்று எண்ணி தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது.

திருக்கோயிலில் ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தேவானையுடன் அசுரமயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்க விட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டா தேவி தன் மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம் மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

இனி வடபுற திருச்சுற்று சன்னதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதை கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதே போல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது.

திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு  ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.

க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் "சாயுஜ்'  முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்கு வந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெற முடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில் தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக்  கொண்டிருக்கும் சமயம் ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும் படியும் ஒரு மாதம் காசியில் தங்கி விட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும் படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்து கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில்  கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள்  துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்க வில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து  சென்று விட்டார். சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும் தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழி படுங்கள் எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற போது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெற முடியும். என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக்கேட்டு கோபமடைந்த மந்திரதேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின்  அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திர தேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ நாராயணனைக்குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத  தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன் ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும் ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மஹா ஹத்யா பாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில் தான் பாப நிவர்த்தி கிடைத்தது.

இந்த ஷேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும் படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். ஸ்ரீ நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி பிப்பல மரத்தை பிரதட்சனம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து அசுவமேத யாகங்கள் செய்ய ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து ஸ்ரீ நாராயணன் முன்தோன்றி அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். ஸ்ரீ நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்  என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் ஸ்ரீ நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும் படி கூறுகிறார். மந்திர தவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்க போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. ஸ்ரீ நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு விட்டேனாபார் என்று கர்ஜித்து விட்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி பிரத்யட்சமானவுடன் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன க்ஷேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார்.

அந்த பிரவாஹத்தில் மகா காளியும், வீரபத்திரரும், மஹாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன் புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறி விட்டு தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள்.  உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும் படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார். என்று துர்வாசர் கூறி விட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார். திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டு கோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித்தந்து சிவ பூஜா விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர்  திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர்   திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ரநாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

""த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய
த்ரிகோடி   பரிஸேவித:
த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:
த்ரிகோடி  பரிவேஷ்டித:

என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர்  கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறு வயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்) சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும் போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுர சுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம் மஹாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும் படி கூறுகிறார். அதன் படி மந்தர தேவதைகள் நந்திக்கு சமீபம் கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர், சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் மேபரமஸ்வரனிடம் சென்று ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படி முறையிட்டார். அதன் படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர பிராமணர்கள் முன் தோன்றினர். பிரபோ! எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ் வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு திருக்கோடிக்கா ஷேத்திரத்தின் மகிமையை கூறலானார். நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய க்ஷேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம க்ஷேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில் இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது.

ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது.
இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்து விடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார்.