சனி, 24 ஆகஸ்ட், 2019

ஸ்ரீ சைலத்தை சுற்றி 12 வீர சைவ மடங்கள் இருந்ததாகவும் தற்போது ஆறு மடங்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அவற்றில் ஒன்று தான் மணிமடம் எனப்படும் ஸ்ரீ கண்ட்ட மடம் ஆகும். மணிமடத்தின் சிறப்பு இங்குள்ள பழைமையான மணி தான் இங்கு உறையும் இறைவரின் திருநாமம் ஸ்ரீ கண்ட்டார்கஸித்தேஸ்வரர் ஆகும்.. இம்மடம் தற்போது Archeological துறையின் வசம் உள்ளது.. இம்மடத்தில் மூன்று நபர் சேர்த்து ஒரே சமயத்தில் வழிபாடு செய்வது வழக்கும் அதாவது ஒருவர் இங்குள்ள மணியை ஒலிக்க செய்ய மற்றொருவர் அமிர்த்த குண்டத்தில் நீர் எடுக்க மற்றொருவர் ஸ்வாமியை அபிஷேகிக்க வேண்டும் அடியேனும் செய்துள்ளேன் இங்கு எந்த ஒரு நன்கொடையும் வசூலிப்பதில்லை.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தற்போது மடம் விரிவாக்கம் செய்து வருகின்றனர் மூலவர் சுயம்பு மூர்த்தி தற்போது உள்ளே இல்லை எப்படி கலாகர்ஷணம் செய்தனர் தெரியவில்லை.... தற்போது சூண்ய தேவாலயமாகவே காட்சியளிக்கிறது இங்கு சில சூரியன் பிரதிஷ்டை செய்த சூரிய லிங்கம் மற்றும் நகுலன் பிரதிஷ்டை செய்த நகுல லிங்கமும் ஒரு வீரசைவ சாதுவின் அதிஷ்டானமான இராஜ ராஜ முனிஷ்வரரின் சமாதியையும் தரிசிக்கலாம்... ஸ்ரீ சைலம் வரும் ஏழை மக்கள் தங்குமாறு பெரிய அளவில் தர்மசாலா கட்ட உள்ளனர் என்பது சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீ கண்ட்டஸித்தேஸ்வராய நம 🙏

கருத்துகள் இல்லை: