JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 12 ஜூன், 2017
பதஞ்சலி முனிவர் இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம் பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார் திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார். பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதி நிலை உண்டாகும் என்றார். படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது. பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள் ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே பக்தியுடன் வணங்கும் எமக்கு நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே
2.உரோமரிஷி அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும் போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடனே நீக்கி விட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். உரோமரிஷி இயற்றிய நூல்கள் உரோமரிஷி வைத்தியம் 1000 உரோமரிஷி சூத்திரம் 1000 உரோமரிஷி ஞானம் 50 உரோமரிஷி பெருநூல் 500 உரோமரிஷி குறுநூல் 50 உரோமரிஷி காவியம் 500 உரோமரிஷி முப்பு சூத்திரம் 30 உரோமரிஷி இரண்டடி 500 உரோமரிஷி ஜோதிட விளக்கம் நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தியானச் செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம் சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி, அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம் ரோமசித்தரின் பூஜைமுறைகள் : தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி பக்தியுடன் கோலமிட்டு அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி! 2. ஜடாமுடிப் பிரியரே போற்றி! 3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி! 4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி! 5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி! 6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி! 7. சங்கீதப் பிரியரே போற்றி! 8. தடைகளை நீக்குபவரே போற்றி! 9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி! 11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி! 12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி! 13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி! 14. காலத்தைக் கடந்தவரே போற்றி! 15. தெய்வீகச் சித்தரே போற்றி! 16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும். உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள் : இவர் சந்திர கிரகத்தைப் பிரதி பலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன் மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் இவரை வழிபட்டால் போதும். 1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். 3. சஞ்சல புத்தி நீங்கும். 4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும். 5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
மலைமேல் இருக்கும் திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் நோக்கி பயணம் சென்றோம். இது ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி . தூரத்தில் இருக்கு. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள் நீக்கிய அம்மை ன்னும் சொல்கிறார்கள். மலையடிவாரத்தில் இருக்கும் மருந்தீசர் கோவிலை பார்க்கலாம். கோவிலுக்கு போகும் வழியெங்கும் பச்சை பசேல்ன்னு சீனரிலாம் செமயா இருக்கு. கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபத்துடன் அழகாக காட்சி தருது இராஜகோபுரம் இல்லாத கோவிலின் நுழைவாயில். கோவிலின் முகப்பில் அதன் அமைவிடம், தொடர்புகொள்ளும் நம்பர், நடை திறக்கும் நேரம் முதலியவை அடங்கிய குறிப்பு பலகை இருக்கு. அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம். இந்த கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும். தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே போனதும் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கு. இத்தூண்களில் துவார பாலகர்கள் உருவங்களும் இலிங்கோர்பவர் மாவடி சேவை பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற காணப்படுகின்றன. மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணபடுகிறது. சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் ரம்மியான அமைதியான இடம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி காணபடுகிறது. சுவாமி மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான அமைப்பில் வீற்றிருக்கிறார். இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். விநாயகரை வழிபட்டு வரும் போது சுவாமி சன்னதிக்கு எதிரில் சாரளம் உள்ளது. இதன் எதிரே வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் எல்லாம் காணபடுகின்றன. இங்கே வந்து சுவாமியிடம் வேண்டிகொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிகொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எதிரே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் காணபடுகின்றன. இந்திரன் தன்னோட தீராத வியாதிக்காக நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும் பலை அதிபலை என்ற மூளிகை வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம். அதனால் நாரதரிடம் உபாயம் கேட்க அன்னையை மறந்து தவம் இயற்றியதால் அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம். தன் தவறை உணர்ந்த இந்திரன் அஸ்வினி தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம். பிறகு அன்னை மனம் குளிர்ந்து மூலிகையை அருளினாராம். இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும் மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் ”இருள் நீக்கி அம்மையார்” என்றும் அழைக்க படுகிறாரார்களாம்!!. இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறனும்ன்னு சிவபெருமான் வரம் அருளினாராம். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளருமாம். வெளியே சுப்ரமணியர் அவ்வளவா பராமரிப்பில்லாத கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் காண்டம் காக புஜண்டர் காண்டத்திலும் மருந்தீஸ்வரர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். மேலும் அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒரு முகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. சுப்பிரமணியரின் அருகில் இருந்து பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்யமாக காட்சி அளிக்கிறது. அவரை வழிபட்டு செல்லும் போது இக்கோவிலில் அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஓஷததீர்த்த குளம்” காணபடுகிறது. அவை பராமரிப்பில்லாமல் காணபடுகின்றன. கிணற்றின் உள்பக்கம் அழகாக படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் நவகிரக சன்னதியும் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மூர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு. சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்மமுக சண்டிகேஸ்வரராக சேவை செய்கிறார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். பைரவர் சன்னதியும் காணபடுகிறது. மேலும் விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகம் அமைந்து இருப்பது இகோவிலின் விஷேசம். இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலாம். மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடும். பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலும். மேலும் சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு செல்லும் போது வீழ்ந்த சிறிய துண்டு என்றும் சொல்லபடுகிறது. காலை 7:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
திருக்கச்சூர் (அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவில்) சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து நரசிம்மரை வழிப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்துச் சாலை இல்லாட்டி மறைமலை நகர் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து தியாகராஜபுரம் திருக்கச்சூர் செல்லும் சாலையில் சென்றால் திருக்கச்சூரை அடையலாம். ஊருக்குள்ள போனதும் வலது பக்கம் திரும்பிச் சென்றால் (கச்சூர்) ஆலக்கோயிலையும் இடப்பக்கம் போனா மலையடிவாரக் கோயிலான மருந்தீசர் கோயிலையும் அடையலாம். முதலில் நாம் மலையடிவாரக்கோவிலான அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவில் பற்றி பார்க்கலாம். கோவிலுக்குள்ள நுழையும் முன்னே நம் கண்ணுல படுறது கல்லினால் ஆன தேர் நிறுத்தும் மேடை. மேடை மட்டும் இருக்கு!! ஆனா தேரை காணோம்!! ஆனா அது கூட கலைநயத்தோடு அழகாக காட்சி அளிக்கிறது. அதன் அழகை ரசித்து விட்டு கோவிலின் நுழை வாயிலின் முன் உள்ள ஒரு சிறிய மண்டபத்தினுள் நுழைந்தேம். அங்கே திக்கற்றவர்க்கு ஈசனே துணை என்ற வாசகத்தை உண்மையாக்குற மாதிரி வானமே கூரையாய் வாழும் நரிக்குறவர்களுக்கு வீடாய் மாறி இருந்துச்சு அந்த மண்டபம். இங்கு ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே. கோயிலுக்கு எதிரில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் சுந்தரர் பசிகளைப்பால் படுத்திருந்தாராம். இம்மண்டபத் தூண்களில் அநுமந்த சேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், ஊர்த்துவ தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்கள் காணபடுகின்றது. தொண்டை நாட்டிலுள்ள தியாகராஜா சந்நிதிகளுள் இத்தலமும் ஒன்று. இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர்' என்னும் பெயருடையவர். அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப வடிவில் (ஆமை வடிவில்) இருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு. இக்கோயில் ஆலக்கோயிலாகும். ஆதலின் 'கச்சபவூர்' எனும் பெயர் நாளடைவில் மக்கள் வழக்கில் மாறி 'கச்சூர்' ன்னு மாறிவிட்டது. கச்சூர் கோயில் : ஆலக்கோயில். இறைவன் : விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர், கச்சபேஸ்வரர் அம்பாள் : அஞ்சனாக்ஷியம்மை தலமரம் : ஆல் தீர்த்தம் : கூர்ம (ஆமை) தீர்த்தம். வாயிலில் நுழைந்ததும், கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. இவை சுவாமிக்கு சந்நிதிக்கு நேரே ஜன்னல் வைத்து அதற்கு எதிரில் வெளியில் அமைந்துள்ளது. பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் வழிபடும் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தில் அமுதத் தியாகேசர் சபை உள்ளது. அவற்றை எல்லாம் கண்டு வெளி பிரகாரம் சுற்றும் முன்பு இக்கோவிலின் ஸ்தல வரலாறை கொஞ்சம் பார்க்கலாம். அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில்... மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியதாம். அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றாராம். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றதாம். இத்தலம் ஆதிகச்சபேஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும். இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச்சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கி வந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறைந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர். பசி நீங்கப்பெற்ற சுந்தரர் இறையருள் கருணையை வியந்து முதுவாயோரி என்னும் பதிகம் பாடிப் போற்றினார். வெளிப்பிரகாரத்தில் காலபைரவர் தெற்கு நோக்கி அழகாக அருள்பாலிக்கிறார். திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரராக இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜ சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்றி வலம் வரும் போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோவில் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். தியாகராஜாரை தரிசனம் பண்ணிவிட்டு கோவிலின் வெளியே வரும் போது ஒரு விநாயகர் சன்னதி காணபடுகிறது அதை விட நிறைய பசுக்களும் மாடுகளும் கோவிலின் உள்ளேயும் வெளியேயையும் நிறைய காணபடுகின்றன. அடுத்தது {நாளை} அருகே உள்ள மலை கோவிலைப்பற்றி பார்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)