சனி, 26 டிசம்பர், 2020

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்

'திரிசங்கு சொர்க்கம்' என்ற வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம் அல்லது கேள்விப்படுகிறோம். ஆனால், பெரும்பாலோனார்க்கு அந்த வார்த்தையின் உண்மையான பொருள் என்ன என்பது தெரிவதில்லை. அதாவது, 'அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல்' அந்தரத்தில் நிற்கும் நைலயை குறிப்பதற்கு 'திரிசங்கு சொர்க்கம்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதுசரி... அந்தரத்தில் நிற்கும் நிலையை குறிப்பதற்கு 'திரிசங்கு சொர்க்கம்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? அதற்கான கதையை தெரிந்துகொள்ள வேண்டாமா? இதோ! அந்தக்கதை.

'திரிசங்கு' என்ற மன்னன் நீதித்தவறாமல் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வயதாகிவிட்ட நிலையில் அவனுக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. தன் விதி முடிந்ததும் இறந்து விடாமல் தன் உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விரும்பினான்.

காட்டிலிருக்கும் தன்னுடைய குலகுருவான வசிஷ;டரை அணுகினான். தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினான். ஆவர்சிரித்துக்கொண்டு 'இது நடக்காத வீண் கனவு. ஒருவரும் பூலோகத்தில் பிறந்த உடலோடு சொர்க்கம் செல்ல இயலாது' என்றார்.

இருப்பினும் திரிசங்கு மனம் தளர்ந்துவிடவில்லை. பல முனிவர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்டான். ஆனால் எல்லோரும்ஒரே மாதிரியான பதிலைத்தான் கூறினர். இறுதியில் விசுவாமித்திரரிடம் சென்று தன் ஆசையைக் கூறி, பல முனிவர்களையும்வசிஷ;டரையும் சந்தித்ததையும் அவர்கள் 'முடியாது' என்று கூறிவிட்டதையும் கூறி தனக்கு பூலோகத்தில் பிறந்த உடலோடுசொர்க்ம் செல்ல வழி கூறும்படி கேட்டான்.

விசுவாமித்திரருக்கு, வசிஷ;டர் முடியாது என்று கூறியதை தாம் செய்து காட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன்னுடைய தவ வலிமையால் திரிசங்குவை உடலோடு சொர்க்ம் அனுப்புவதாக வாக்களித்தார். அதுவரை தாம் செய்த ஜபதவங்களின் பலன்களை அர்ப்பணம் செய்து 'ஹும் சொர்க்கம் செல்' என்றார்.

அடுத்த நிமிடம் திரிசங்கு வானவீதியை நோக்கிக் கிளம்பினான். சொர்க்கத்தின் வாயிலை அடையும் சமயம் தேவலோக மன்னன் இ;ந்திரன், மனித உடலுடன் வரும் திரிசங்குவைக் கண்டு ஆத்திரமடைந்தான். தனது வஜ்ராயுதத்தால் அவனை அடித்தான். அடிதாளாமல் திரிசங்கு கத்திக்கொண்டே பூமியை நோக்கித் தலைகீழாக வருவதைக் கண்ட விசுவாமித்திரர் ஆத்திரமடைந்து 'நில்' என்றார்.

திரிசங்கு அந்தரத்தில் நின்றான். உடனே விசுவாமித்திரா தன் தவவலிமையால் திரிசங்குவுக்குத் தனியாக ஒரு சொர்க்கத்தையே படைத்து அருள்பாலித்தார். அதுவே 'திரிசங்கு சொர்க்கம்' எனப்பட்டது.