நமது ஆச்சார்யர்களை பற்றி தெரிந்துகொள்வோம்
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்து கொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரரின் சிஸ்யர் ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார்.
3:ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.மு. 407 முதல் 364 வரை)
ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வர்த்தனர். தந்தை இவருக்கிட்ட நாமம் மஹாதேவர். ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடமேறியபின் நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் வாதிட வந்தனர். வாதிட்ட சில நாழிகைகளிலேயே அவர்கள் ஒவ்வொருவராய் தோற்க, மூன்று நாள் தொடர்ந்து தளராமல் வாதிட்டார் ஏழு வயதே ஆன மஹாதேவர். நான்காம் நாள் பகவத்பாதரின் கருத்தை ஏற்றுச் சரணடைந்தார். இளம் வயது மஹாதேவரின் விசாலமான ஞானத்தைக் கண்டு அவரை சிஷ்யராக ஏற்று தமது வாரிசாக்கத்திருவுளம் கொண்டார் குரு சங்கரர். அப்பாலகனின் பெற்றோரை வரவழைத்து தமது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் மகிழ்வுடன் சம்மதித்தனர். குருநாதரே மஹாதேவனுக்கு சந்யாச தீக்ஷை அளித்து சர்வக்ஞாத்மர் என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார். இப் பால சந்யாசி சுரேஸ்வராச்சாரியரின் பொருப்பில் விடப்பட்டு சகல சாஸ்திர பண்டிதரானார். 'இந்திர ஸரஸ்வதி' என்ற பட்டம் இவரிலிருந்து தான் தொடங்கியது. தேவேச்வரர் என்றே இவர் சுரேஸ்வரரைக் குறிப்பிடப்படுவார். இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு அழகு மிளிரும் நடையில் 1267 பாசுரங்கள் கொண்ட விரிவான விளக்க உரை எழுதி உள்ளார். இந்த விளக்க உரை'சம்க்ஷேபசாரீரகா' எனப்படுகிறது. அத்துடன் கவிதை நடையில் 'சர்வக்ஞவிலாச' எனும் நூலையும் இவர் இயற்றி உள்ளார். அப்போதைய துவாரகா மடத்தின் ஆசார்யரான பிரம்ம ஸ்வரூபருக்கு குருவாக இவர் இருந்தார். இவர் காலத்துச் சோழ மன்னன் மனுகுலாதித்த சோழன் இம்மன்னனைப் பற்றித் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் காஞ்சியில் கி.மு.364ல் நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் சித்தியடைந்தார்.