JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 31 டிசம்பர், 2013
51சக்தி பீடங்கள்-பகுதி- 11
அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில்
மூலவர்:உலக நாயகி, மகிஷாசுரமர்த்தினி
தீர்த்தம்:சர்க்கரை தீர்த்தம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:தேவிபுரம், தேவிப்பூர்
ஊர் :தேவிபட்டினம்
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:நவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம்-623 514.
ராமநாதபுரம் மாவட்டம்.போன்:+91 4567 - 221 213, 264 010, 94444 57971,
94444 57978
பொது தகவல்:கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான
சூழலில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயிலில் 5
நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரம் அமைந்துள்ளது. மூலவருக்கு
மேல் ஏகதள விமானம் அமைந்துள்து. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம்
அமைந்துள்ளது. கோயில் உள்புறம் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம் உள்ளது.
கொடிமரம் அடுத்து பதினாறு கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்புறம்
இருபுறமும் சிங்கம் வீற்றிருக்க அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதை சிற்பம்
உள்ளது. அடுத்துள்ள பதினாறு கால் மகாமண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணி.
அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி , கர்ப்பக்கிரகத்தில் அம்மன்
அருள்பாலிக்கிறாள். சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை:எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன
தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி
பீடமான இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:சுயம்பு மூர்த்தியான இத்தல அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் தோஷ நிவர்த்திக்காக
கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால்
ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள உலகநாயகி அம்மனை
வழிபட்டுள்ளார். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி
10ம்நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக
உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், அந்த தேவியால் இந்த பட்டினம்
தேவிபட்டினம் ஆனதாகவும் கூறப்படுகிறது. நவராத்திரி நாயகியான இந்த தேவியை
வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல
அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மதுரை
மீனாட்சி ராஜமாதங்கி சியாமள பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி
விசாலாட்சி மணிகர்ணிகாக பீடம் என்பது போல், தேவி பட்டினம் அம்மனின் வீரத்தை
பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாகும். ராவண வதத்திற்கு முன் ராமர்,
லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமநாதபுரம் அருகிலிலுள்ள உப்பூர் விநாயகரை
தரிசித்துவிட்டு, வீரசக்தி பீடமான இத்தலத்தில் தங்கி அம்மனை வணங்கி ஆசி
பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
தல
வரலாறு:பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே,
துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை
போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா
துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி,
திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும்,
திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன்
வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும்,
ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள்.
தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண
பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும்
அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி
தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று
மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை
அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில்
அருள்பாலிக்கிறாள்.
சிறப்பம்சம்:அதிசயத்தின்
அடிப்படையில்: அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின்
51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.
51சக்தி பீடங்கள்-பகுதி- 10
அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷõராமா
அம்மன்/தாயார்:மாணிக்காம்பாள்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திராக்ஷõராமா
ஊர்:பாலக்கொல்லு
மாவட்டம்:கிழக்கு கோதாவரி
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
திருவிழா:பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி
தல சிறப்பு:இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின்
பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து
அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க
சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு க்ஷீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு, கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம்.
பொது தகவல்:கர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான
ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும்,
விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி
சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர்.
கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக்
காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர்,
வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி,
மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா
கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை:பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும்,
அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன்
செலுத்துகின்றனர்.
தலபெருமை:இந்தக் கோயிலில் உள்ள லிங்கம்
மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம்
திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி
என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர்.
இந்தக்
கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில்
ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தல வரலாறு:தாரகாசுரனை குமாரசுவாமி
கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது
ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த
லிங்கங்களில் இதுவும் ஒன்று.சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின்
மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான
பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே
உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால்
ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து
நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு
மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி
நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா
என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால்
ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு
ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின்
சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.
51சக்தி பீடங்கள்-பகுதி-9
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்மூலவர்:மகாலட்சுமி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:கோலாப்பூர்
மாவட்டம்:கோலாப்பூர்
மாநிலம்:மகாராஷ்டிரா
திருவிழா:நவராத்திரி
தல சிறப்பு:வருடத்தின் இரண்டு முறை கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் அம்மனின் மீது படுவது சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கரவீர சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் கோலாப்பூர் (கரவீரபீடம்), மகாராஷ்டிரா.
பொது தகவல்:காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
பிரார்த்தனை:தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:அன்னையின் கோயிலைச் சுற்றி 50 சிறு கோயில்களும் ஊர் முழுவதிலும் 3000 கோயில்களும் உள்ளன. சக்தி பீடங்களுள் ஒன்றான இக்கோயில் மராட்டிய பாணியில் கட்டப்பட்டது. தேவி, கோலாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.
தல வரலாறு:பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: வருடத்தின் இரண்டு முறை கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் அம்மனின் மீது படுவது சிறப்பு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)