சனி, 7 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 29 ॐ

நிருத்த சபையில் சற்று உயரமான இடத்தில் மேற்கே பார்த்துக் கொண்டு ஒரு விநாயகர் சன்னதி காணப்படுகிறது. அந்த விநாயகரைத் தரிசனம் செய்வது என்றால் ஏணியின் படிகளில் ஏறிப் போய்த் தான் பார்க்கவேண்டும். உச்சிப் பிள்ளையார் என்று அழைக்கப்படும் இந்த விநாயகரைத் திருமுறை கண்ட விநாயகர் என்றும் சொல்கின்றனர். நாயன்மார்களால் எழுதப் பட்ட பன்னிரு திருமுறைகள் இந்தச் சிதம்பரம் கோவிலில் ஒரு அறையில் சுவடிகளாய் அடைபட்டுக்கிடந்தது. பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி அவர்களின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சுவடிகள் அங்கு இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜன் அந்தச் சுவடிகளை அங்கிருந்து மீட்டு உலகுக்கு அதை அர்ப்பணித்தார். இது கொஞ்சம் விரிவாய் எழுத நினைத்தேன் நேரம் இன்மையால் சுருக்கி விட்டேன். அப்போது நம்பியாண்டார் நம்பியின் வேண்டுதலின் பேரிலும் மன்னனின் வேண்டுதலின் பேரிலும் அவர்களுக்குப் பன்னிரு திருமுறைகள் இருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டியது இந்த விநாயகர் அருளினால் தான் என்று கூறுகிறார்கள். அன்றிலிருந்து இந்த விநாயகர் "திருமுறை கண்ட விநாயகர்" என அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகே உள்ள சிவலிங்கத்தைச் சிலர் தாயுமானவர் என்றும் வேறு சிலர் மாயூர நாதன் என்றும் அழைக்கின்றனர். எப்படி இருந்தாலும் சிவனருள் நமக்கு நிச்சயமாய்க் கிட்டும். இதே பிரகாரத்திலேயே தேவார நால்வர் ஆன அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்காக ஒரு கோவில் கிழக்கே பார்த்துக் காணப்படுகிறது. தினமும் தீவிர சைவர்களும் ஓதுவார்களும் இந்தச் சன்னதியில் அமர்ந்து தேவாரம் ஓதுவது வழக்கம். கோவிலுக்கென்று அமைந்த ஓதுவார்கள் இங்கே ஓதுவதோடு மட்டுமின்றி கனகசபையில் அவர்களுக்கென்று நியமித்த நேரத்தில் கால வழிபாட்டின் போதும் மற்றச் சமயங்களிலும் தேவாரம் ஓதுவது உண்டு. தினந்தோறும் தீட்சிதர்களில் யாராவது ஒருவரால் தேவார நால்வருக்கும் அந்த அந்தக் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

அடுத்து வருபவர் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி. பெயருக்கேற்பத் தென் திசை நோக்கி இருக்கும் இவரின் தோற்றமும் சின்முத்திரை காட்டும் அழகும் எல்லார் மனதையும் கவர வல்லது. சிவனின் பல்வேறுவிதமான லீலா விநோதங்களில் அவர் பல ரூபங்கள் எடுத்தார். அப்படி எடுத்த இந்த ஞான ஸ்வரூபம் மெளனத்தின் மூலமே நமக்கு உண்மையை உணர்த்துகிறது. சனத்குமாரர், சனகர், சனந்தனர், சனாதனர் நால்வருக்கும் மெய்ப்பொருளை அறியும் ஆவல் ஏற்பட்டது அதற்காக அவர்கள் தகுந்த குருவைத் தேடி அலைந்த போது ஒரு கல் ஆல மரத்தின் அடியே அவர்கள் ஞான ஸ்வரூபம் ஆன ஒரு இளைஞன் சின்முத்திரை காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். அவர்களை அறியாத உணர்வால் தூண்டப் பட்ட நால்வரும் அங்கே அமர்ந்து குரு உபதேசம் பெற முயற்சிக்க உபதேசம் பெறாமலேயே அந்த ஞான குருவின் மெளனத்தின் மூலமும் அவர் காட்டிய சின் முத்திரையின் மூலமுமே அவர்கள் மெய்ப்பொருளைக் கண்டறிந்தனர். அன்று முதல் எல்லாச் சிவன் கோவிலிலும் தட்சிணா மூர்த்தி ஸ்வரூபம் ஞானகுருவாக வழிகாட்டியாக வணங்கப் படுகிறது. குருவாரம் அல்லது வியாழக்கிழமை என்று சொல்லப் படும் கிழமையில் வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊற வைத்து மாலை கட்டி இந்த தட்சிணாமூர்த்திக்குச் சாற்றி வழிபட்டால் எல்லா ஞானங்களும் பெறலாம் என்பதோடு அல்லாமல் அஞ்ஞானமும் அகலும். முக்கியமாய்ப் படிப்பு நன்கு வராத மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் நன்கு பலன் பெறலாம். நம்பிக்கைதான் முக்கியம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
உலகெலாம் அடிபணியும் ஆதிசிவன் பார்வதியின்
ஆனைமுகத் தலைமகனாம் ஐங்கரனின் ஆசிகொண்டு

பூவுகில் மாந்தர்யாவும் நெறிவழுவா வாழ்வுபெற
தூயவனாய் உதித்தோனின் தரிசனத்தை தடமிடவே
ஏங்கிநிற்கும் சிறுகுழந்தை அடியேனின் குறைபொருத்து
மையல்கொண்டு மனமெழுதும் தமிழ்மொழியை ஏற்றிடுவீர்!

சிகையதனில் கங்கையோடு மதியதனை தாங்கொண்ட
பூதியவன் அவதாரப் பெரியோனின் அருளாலே
எல்லோரும் என்றென்றும் எல்லாமும் பெற்றிடவே
அடியேன் சீர்குருவின் அருள்வேண்டி நமஸ்காரம்!

ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர...

குருவிருக்கக் குறைவில்லை!

வாழ்வோம்! வாழ்விப்போம்!!
------------------------------------------------------------------------------------------------------------
கிருஷ்ணா கிருஷ்ணா மன மோகணா
   மேக ஷியாமா மது சூதணா
கிருஷ்ணா கிருஷ்ணா மன மோகணா
------------------------------------------------------------------------------------------------------------
கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்!

கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்: கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா  கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும்  பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.

விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர்,  வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும்  வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்   இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார்  எனவே, அன்று வீட்டைச்  சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது  பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.

பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம்  செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
இவருக்கு எத்தனை வண்ணம்?

சிவபெருமானின் மேனிவண்ணம் பற்றிய குறிப்புகள் தேவாரப் பாடல்களில் உள்ளன. சுந்தரர் தன் பாடலில்,  பொன்னார் மேனியனே என்று சி வனைப் பொன் போல  ஒளிர்பவராக குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர், பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறு அணிந்தவர் என பவளம் போல  சிவந்தநிறம் கொண்டவராகப் பாடியுள்ளார். சம்பந்தர், காடுடையச் சுடலைப் பொடி என்னும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியதால், வெண்ணிறம்  கொண்டவராகச் சித்தரிக்கிறார். ஆனால், சித்திரங்களில் சிவன் நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்ததால்,  கழுத்தில் மட்டும் சிவன் நீலநிறம் கொண்டிருப்பார். இதனால் இவருக்கு நீலகண்டன் என்று பெயருண்டு. சிவனை நீலநிறத்தில் வரைவதற்கு சாஸ்திர,  ஆகமங்களில் குறிப்பு ஏதுமில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!

விநாயகர் துதி (மேஷம்)

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
முருகன் துதி (ரிஷபம்)

பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப்
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா ! வருகவே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
பெருமாள் துதி (மிதுனம்)

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
-------------------------------------------------------------------------------------------------------------------------
நரசிம்மர் துதி (கடகம்)

அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் துதி (சிம்மம்)

விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

கண்டேன் ஒரு சீதையையே
கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
வென்றேன் எனவே விழைந்தானையே நான்
கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய்
உயர்வே அருள்வாய் திருமாருதியே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோவிந்தன் துதி (கன்னி)

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
ராகவேந்திரர் துதி (துலாம்)

நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிவ துதி (விருச்சிகம்)

நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
துர்க்கை துதி (தனுசு)

இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
துர்க்கை துதி (மகரம்)

சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.

சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்
பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிவன் துதி (கும்பம்)

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவரில்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்
ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !
------------------------------------------------------------------------------------------------------------
குபேரர் தியான ஸ்லோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்

ஓம் யக்ஷிய குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா

குபேர காயத்ரீ

ஓம் யக்ஷசாய ச வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தன்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்
------------------------------------------------------------------------------------------------------------
காமாக்ஷி அம்பாள் ஆயிரம் போற்றி!

ஓம் ஸ்ரீ காஞ்சி நகர்வாழ் கன்னிகை போற்றி
ஓம் காமகோடி பீடபத்மத் துறைந்தனை போற்றி
ஓம் கைலாஸ வாஸிநீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் காருண்ய ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீகாமபீடந்தனில் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் திருந்தனை போற்றி
ஓம் காருண்ய கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் காயத்ரீ மண்டபத்து அமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமகோடி காமாக்ஷி காயத்ரீ போற்றி
ஓம் மாவடியின் கீழமர்ந்த மங்கையே போற்றி

ஓம் ஸ்ரீகாமாக்ஷி முக்கண்ணி ஸ்ரீதேவி போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ ஸாவித்ரீ ஸரஸ்வதீ போற்றி
ஓம் கரும்பு வில் கைக்கொண்ட கன்யகை போற்றி
ஓம் கருணை பொழியும் கண்ணுடையினை போற்றி
ஓம் நவரத்ன சிம்மபீடத் தமர்ந்தனை போற்றி
ஓம் ரக்த பத்மாசனத் திருந்தனை போற்றி
ஓம் கோடி காமமருளும் காமகோடி போற்றி
ஓம் பகழி பாச அங்குசமும் கொண்டனை போற்றி
ஓம் வாணியாய் வந்தருள் வாமாக்ஷி போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர ப்ரிய காமேசுவரீ போற்றி

ஓம் ஓம் கடவூருறையும் கமலை போற்றி
ஓம் அருளது நல்கும் அம்பிகை போற்றி
ஓம் குலமலையரசன் கொடியே போற்றி
ஓம் ஸர்வ ஸங்கீத ரஸிகையே போற்றி
ஓம் பரசிவனிடத் தொளிர் விளக்கே ! போற்றி
ஓம் அவனியின் படைப்பின் ஆதியே ! போற்றி
ஓம் பிந்துஸ்தானத்தொளிர் நன்மணியே! போற்றி
ஓம் ஆதி அந்தமிலாதொரு அன்னையே! போற்றி
ஓம் இன்பம் நல்கிடும் ஈசுவரீ போற்றி
ஓம் சங்க்க சக்ர கதா தாரிணீ போற்றி

ஓம் பரிசு சூல பினாக தாரிணீ போற்றி
ஓம் பூர்ணிமை சந்திர நிவாஸிநீ போற்றி
ஓம் பூரண கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் பூர்ணிமை வாஸிநீ பூர்ணீ போற்றி
ஓம் புவனம் ஆளும் புவநேசுவரீ போற்றி
ஓம் சதகோடி மன்மத சுந்தரீ போற்றி
ஓம் ஓங்கார ரூபத்துள் விளங்கினை போற்றி
ஓம் கருணையருளும் கண்மணி போற்றி
ஓம் அட்டமூர்த்தங்கள் தொழும் அன்னையே போற்றி
ஓம் ஞானியர் மனக்குகை அடைந்தனை போற்றி

ஓம் திருமால் இதயம் சேர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நடுவண் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் மல்லிகை மலரொத்த புன்முறுவலோய் போற்றி
ஓம் பஞ்சாக்ஷர பீடத்து விளங்கினை போற்றி
ஓம் இதழாயிர பத்மத்து அமர்ந்தனை போற்றி
ஓம் நவரத்னமணி த்வீபத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் திருக்கையில் சூலம் கொண்டனை போற்றி
ஓம் பக்த ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் விந்தியாசல நிவாஸிநீ பார்வதீ போற்றி
ஓம் அருள்புரி அன்னை ஆனந்தீ போற்றி

ஓம் அட்ட சித்தியருள் காமாக்ஷீ போற்றி
ஓம் மனக்குகையினில் உறை மாதங்கீ போற்றி
ஓம் இதயக் கோயிலிலொளிர் விளக்கே போற்றி
ஓம் உவமையிலாத்தாள் உடையினை போற்றி
ஓம் ஸத் சித் ஆனந்த வடிவே போற்றி
ஓம் பஞ்ச பூத காரணீ பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் எண்ணிய எண்ணியாங்கு அருள்வோய் போற்றி
ஓம் ஸர்வ மங்கள சக்தி சுமங்கலை போற்றி
ஓம் கௌரீ காமாக்ஷீ காயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸ்ரீஸரஸ்வதீ போற்றி

ஓம் வீரீ அமரீ வேதாளி போற்றி
ஓம் நவமணி கிரீடமும் பூண்டனை போற்றி
ஓம் நலம் நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் ஒழிக்கும் பாலையே போற்றி
ஓம் முக்கண்ணுடையோய் முக்கண்ணீ போற்றி
ஓம் நிரந்தரி சுதந்தரீ துரந்தரி போற்றி
ஓம் ரூப ரஸ கந்த ரூபேசுவரீ போற்றி
ஓம் பிரம்ம விஷ்ணு சிவ ஆதீசுவரீ போற்றி
ஓம் பிராஹ்மீ மகேசுவரீ கௌமாரீ போற்றி
ஓம் வைஷ்ணவீ வாராஹீ வாமாக்ஷீ போற்றி

ஓம் இந்த்ராணீ ஸ்ரீ சாமுண்டா சிவதூதீ போற்றி
ஓம் தேவீ பரமேசுவரீ ஸ்ரீலலிதையே போற்றி
ஓம் வரமது அருளிடும் வாராஹீ போற்றி
ஓம் மாசற்ற அன்னையே அம்பிகை போற்றி
ஓம் ஸர்வ பாப விநாசனீ போற்றி
ஓம் ஸர்வ துஷ்ட ஸம்ஹரிணீ போற்றி
ஓம் பத்மாசனத் தமர்ந் தருள் புரிந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர வாமாக்ஷீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஸர்வேசுவரீ ஸர்வ ரூபிணீ போற்றி
ஓம் ஸர்வா லங்காரப்ரிய ஸ்ரீஸரஸ்வதீ போற்றி

ஓம் மதுகைடப மஹிஷாசுர மர்த்தனீ போற்றி
ஓம் சும்ப நிசும்ப ஸம்ஹார சுந்தரீ போற்றி
ஓம் சண்ட முண்ட ஸம்ஹார சாமுண்டீ போற்றி
ஓம் சரத்காலத் தொளிர் நிலவொளி போற்றி
ஓம் அமரர்கள் போற்றும் அமலை போற்றி
ஓம் விண்ணவர் விரும்பும் விமலை போற்றி
ஓம் மண்ணவர் மகிழும் சுமங்களை போற்றி
ஓம் பார்வதீ உமா மகேசுவரீ போற்றி
ஓம் அன்பர்கள் மனத்தமர் அன்னமே போற்றி
ஓம் அகிலம் ஈன்றதோர் அம்மையே! போற்றி

ஓம் பூவுலக சிருஷ்டிக் காரணீ போற்றி
ஓம் இரத்தின மாலை பூண்டனை போற்றி
ஓம் பக்தர்கள் பற்றும் பற்றே போற்றி
ஓம் இதய வனத்தில்வரு குயில் போற்றி
ஓம் இதயம் குளிர அருள்வோய் போற்றி
ஓம் அறுபத்து நான்காயிரப் பீடரசே!! போற்றி
ஓம் அக்ஷர ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வடிவே போற்றி
ஓம் உலகோர் வாழ்த்தும் உமையே போற்றி
ஓம் சந்திர மண்டல கமலத் தொழுகுதேன் போற்றி

ஓம் சந்திர நிவாஸினீ சாந்தினி போற்றி
ஓம் பஞ்சதசாக்ஷரீ ஸ்ரீபார்வதீ போற்றி
ஓம் தேகதேவாலயத் துறைந்தனை போற்றி
ஓம் தேன் பெருகும் மலரடைந்தனை போற்றி
ஓம் ஸரஸ்வதீ லெக்ஷ்மீ கிங்கரீ போற்றி
ஓம் பஞ்சப்ரேதரசனத் தமர்ந்தனை போற்றி
ஓம் பரமானந்த சிவ பார்வதீ போற்றி
ஓம் பார்வதி சங்கரீ சக்தியே போற்றி
ஓம் சிவை முக்கண்ணி ஸ்ரீதேவீ போற்றி
ஓம் மாணிக்கக் கடகம் பூண்டனை போற்றி

ஓம் சோடசாக்ஷரீ மாமந்திரத் திருந்தனை போற்றி
ஓம் யௌவன மாங்கல்ய சுமங்கலை போற்றி
ஓம் ஸர்வலோக பயங்கரீ சிவையே போற்றி
ஓம் பிரகாச பீடத்து அமர்ந்தனை போற்றி
ஓம் சந்திரசூடாமணி கிரீடம் பூண்டனை போற்றி
ஓம் ஸ்ரீமேருசுக்கரத் துறைந்தனை போற்றி
ஓம் சரண கமலம் கொண்ட கமலை போற்றி
ஓம் கசல கலா ரூபிணீ ஸ்ரீமாத்ருகா போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் பாலை யுவதி விருத்தையே போற்றி

ஓம் பக்தானுக்ரஹ ஸ்ரீபராசக்தியே போற்றி
ஓம் திரிபுரமெரித்த திருபுராந்தகீ போற்றி
ஓம் பரசிவமிடப் பாகம் கொண்டனை போற்றி
ஓம் காலனைக் கொன்ற காளிகை போற்றி
ஓம் திருக்கையில் வெற்றிவேல் கொண்டனை போற்றி
ஓம் சுந்தர வெள்ளச் சுதந்தரீ போற்றி
ஓம் ஸ்ரீகாளீ கராளி துர்க்கை போற்றி
ஓம் நீலோத்பல மலர் தரித்தனை போற்றி
ஓம் நீடூழி ஆளும் நிலமகள் போற்றி
ஓம் திருஆலங்காடு சிவத்தை எதிர்த்தனை போற்றி

ஓம் அமிழ்த மயமான அன்னையே போற்றி
ஓம் சிம்ம வாஹனம் கொண்ட சிவையே போற்றி
ஓம் பிறையினைச் சிரமேற் கொண்டனை போற்றி
ஓம் பிறங்கு மோக்ஷõமிர்தப் பெருக்கே! போற்றி
ஓம் பிரம்மம் போற்றும் பிராஹ்மீ போற்றி
ஓம் சிவமுடனிருக்கும் செல்வியே போற்றி
ஓம் முப்பத்து முக்கோடியின் முதலாதியே போற்றி
ஓம் இதய வானத்து நிலவொளி போற்றி
ஓம் கதம்ப வனத்தமர் கலியாணீ போற்றி
ஓம் பயங்கர உருக்கொண்ட ஸ்ரீதுர்க்கை போற்றி

ஓம் கவிகள் கருத்தினிற் கலந்தனை போற்றி
ஓம் கருணா நிதியே ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் கஷ்ட நிவாரணக் காரணீ போற்றி
ஓம் வேத விருக்ஷத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உபநிடத மலரின் மணமே போற்றி
ஓம் ஞானக் கனியின் சுவையே போற்றி
ஓம் மோக்ஷ ஸாம்ராஜ்யத் தனி அரசியே போற்றி
ஓம் பல்லோர் புகழும் பரிமளை போற்றி
ஓம் பூமத்திய ஸ்தானமும் அடைந்தனை போற்றி
ஓம் ஆகாய பீட ந்தனிலு மமர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீ காமகோடி ஆதி பீடக் காரணி போற்றி
ஓம் காமனையும் வென்ற கடாக்ஷணி போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நிவாஸநீ ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் உலகெலா முணர்ந் தோதுவோய் போற்றி
ஓம் உவமை சொலா உரு வுடையினை போற்றி
ஓம் பிரம்மானந்த வல்லி பிராம்மணீ போற்றி
ஓம் வீணாவாத்ய ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீஅகில அண்டேசுவரீ அம்மையே! போற்றி
ஓம் வெள்ளயங் கிரிதனி லமர்ந்தனை போற்றி
ஓம் பரசிவ மனத்தைக் கவர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீகைலாச நாதனுட னுறைந்தனை போற்றி
ஓம் பக்தர்க் கருள்புரி பகவதீ போற்றி
ஓம் பூர்ண சந்திரமுக முடையினை போற்றி
ஓம் பார்தனி லொளிரும் பார்வதீ போற்றி
ஓம் வடமொழி எழுத்தின் வடிவினை போற்றி
ஓம் முக்கண்ணுடைய மூகாம்பிகை போற்றி
ஓம் இறந்ததோர் சிசுவை எழுப்பினை போற்றி
ஓம் வேதாகம வனத்துறை வேதாந்தி போற்றி
ஓம் அருமைச் செல்வியே ஆனந்தி போற்றி
ஓம் மண்டலம் மகிழும் மகேசுவரீ போற்றி

ஓம் புண்ணிய ரூபிணீ புவநேசுவரீ போற்றி
ஓம் புஷ்ப விமானந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பராசக்தி பீடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் மனக்கண் முன் ஒளிர் நன் மதியே போற்றி
ஓம் மாயைத் திரையினை விலக்கினை போற்றி
ஓம் ஆசையை அகற்றிடும் அன்னையே போற்றி
ஓம் அன்பை அருளும் அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசண்டிகே என் இதயத் தமர்வோய் போற்றி
ஓம் விண்மீன் நடுவண் விளங்கினை போற்றி
ஓம் விருத்தையே உமையே விமலையே போற்றி

ஓம் அறியாமை அகற்றும் அன்னை போற்றி
ஓம் ஞானக் கனி நல்கும் நாயகீ போற்றி
ஓம் ஞானவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அத்வைத ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர சேகரகுரு சங்கரீ போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர மௌளீசுவர சக்தியே போற்றி
ஓம் என் இதயத் தமர்ந்த ஈசுவரீ போற்றி
ஓம் ஆனந்தம் அருளும் அம்பிகை போற்றி
ஓம் அருள்மழை பொழியு மகிலேசுவரீ போற்றி
ஓம் தாமரை நடுவண் தங்கினை போற்றி

ஓம் நந்தவன நடுவளர் நாயகீ போற்றி
ஓம் நாற்கரம் கொண்ட நவ துர்க்கை போற்றி
ஓம் பிரம்மசாரிணீ பிராஹ்மீ போற்றி
ஓம் அம்பிகை ரூபிணீ அபிராமீ போற்றி
ஓம் ஆட்கொண் டருளும் ஸ்ரீதேவீ போற்றி
ஓம் வருவோய் அமர்ந்தருள் புரிவோய் போற்றி
ஓம் அறுபத்து நாற் கலைகளினரும்பே போற்றி
ஓம் அறியாமை யகற்றுமுறு வாயினை போற்றி
ஓம் உபநிடத கமலத்தினி லோங்காரி! போற்றி
ஓம் பார்வதீ ஸ்ரீசக்ர லலிதேசுவரி! போற்றி

ஓம் மின்னற் கொடிபோல் விளங்கினை போற்றி
ஓம் அஷ்ட ஐசுவரியப் பிரதானிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வாமாக்ஷீ போற்றி
ஓம் முனிவர்க் கருள்புரி மூகேசுவரீ போற்றி
ஓம் பூவுலகம் புகழ் பூதேசுவரீ போற்றி
ஓம் அகிலம் யாவுமாளும் அகிலேசுவரீ போற்றி
ஓம் குயிலினுமினிய குரலுடையினை போற்றி
ஓம் மலையரசன் மனம் மகிழ் மங்கை போற்றி
ஓம் மகிழ்வுடன் அருள்செயும் மாதா போற்றி
ஓம் நவரத்னபொன் ரதந்தனி லமர்ந்தனை போற்றி

ஓம் பிரகாச பீடத்திருந் தாண்டனை போற்றி
ஓம் துக்கம் துடைத்தருள் துர்க்கை போற்றி
ஓம் கஷ்டம் களைந்தருள் காயத்ரீ போற்றி
ஓம் நன்மை நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் போக்கிடும் பவாநீ போற்றி
ஓம் காக்ஷி கொடுத்தருள் காமாக்ஷீ போற்றி
ஓம் திருமகள் வணங்கிடும் தேவியே போற்றி
ஓம் பக்தர் பற்றுமோர் பரமேசீ போற்றி
ஓம் திருக்கயிலைமலை நடுவண் திகழ்ந்தனை போற்றி
ஓம் சிதக்னி குண்டத் தொளிர் தேவேசீ போற்றி

ஓம் புன்னகை புரியும் பூங்கொடி போற்றி
ஓம் மார்பினிற் பதக்கம் பூண்டனை போற்றி
ஓம் வேத ரூபிணீ வேதேசுவரீ போற்றி
ஓம் என் தாமரை இதயத் தமர்ந்தனை போற்றி
ஓம் சிருஷ்டியாதி காரணி பரசிவையே போற்றி
ஓம் கஸ்தூரி திலகக் காமாக்ஷீ போற்றி
ஓம் பரிமள ரூபிணீ பரிமளை போற்றி
ஓம் பில்வ தளந்தனி லடங்கினை போற்றி
ஓம் அறிவுக் கடலின் அருமணி போற்றி
ஓம் சிவே சரண்யே ஸ்ரீசாரதை போற்றி

ஓம் துஷ்ட விநாசக் காரணீ போற்றி
ஓம் மாயை உலகின் நன்மதியே! போற்றி
ஓம் மதியினை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கன்னிகை ஸ்ரீசிவபரமேசீ போற்றி
ஓம் கயிலைச் சிவமுடன் கலந்தனை போற்றி
ஓம் மனவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அரும்பொன் மாலை யணிந்தனை போற்றி
ஓம் பிலாகாச ரூபிணி ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் காஞ்சீ ஆவரணத் தடங்கினை போற்றி
ஓம் காமகோடி சக்கரத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் காமகோடியாதிபீடக் காம கன்யகை போற்றி
ஓம் பதிரியில் ஜோதிப் பார்வதீ போற்றி
ஓம் துவாரகைக் காளீ துர்க்கை போற்றி
ஓம் ஜகந்நாதத் தொளிர் விமலை போற்றி
ஓம் சிருங்க கிரியினிலமர் சாரதே போற்றி
ஓம் கருத்தினி லடங்காக் காமேசுவரீ போற்றி
ஓம் உலக உண்மையின் உருவே போற்றி
ஓம் வடிவழகமைந்தோர் வாமேசுவரீ போற்றி
ஓம் தேவர்கள் தொழும் தேவேசுவரீ போற்றி
ஓம் இளந்தளிர் விரலுடை இமையே போற்றி

ஓம் சகல சௌபாக்கிய ஆதிகாரணீ போற்றி
ஓம் அகில மா மந்திரத் தடங்கினை போற்றி
ஓம் அன்பர்கள் நாடும் அபிராமி போற்றி
ஓம் சகல கலாவல்லி ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் தாமரை மலர்க்கரம் கொண்டனை போற்றி
ஓம் தாரகன் மார்பினைத் தகர்த்தனை போற்றி
ஓம் நான்மறையின் நடு நாயகம் போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி
ஓம் கோவை நிறமுடைக் கோமதி போற்றி
ஓம் பிறவியகற்றும் பிரம்ம மாயினை போற்றி

ஓம் வெண் தாமரையிலமர் வேதநாயகி போற்றி
ஓம் தென்முகனிடத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் பீஜாட்சரத் தொளிர் பீஜாக்ஷரீ போற்றி
ஓம் சாவித்ரீ ஸர்வ மங்களை போற்றி
ஓம் சாந்தியி னிருப்பிடச் சங்கரீ போற்றி
ஓம் சண்டிகை ரூபிணீ ஸ்ரீசாமுண்டி போற்றி
ஓம் தாண்டவப்ரிய தாக்ஷõயணீ போற்றி
ஓம் மகேசன் மனம் மகிழ் மங்களை போற்றி
ஓம் சிவபாதியுடம்பினிற் பதிந்தனை போற்றி
ஓம் மல்லிகை முல்லையின் மணமே போற்றி

ஓம் தும்பை மலரின் தூய்மையே போற்றி
ஓம் தேனினுமினிய மொழியினை போற்றி
ஓம் தேவர்கள் தேடும் தேவேசுவரீ போற்றி
ஓம் அன்னத்தின் அருங்குண அம்மையே போற்றி
ஓம் மின்னலை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கொண்டையிற் கொன்றை கொண்டனை போற்றி
ஓம் ஒட்டியாண பீடந்தனி லொளிர்ந்தனை போற்றி
ஓம் காமகோடி பீடத் தமர்ந்தரசியே போற்றி
ஓம் ஏகாம்பரனிடத் தொளிர் ஏகேசுவரீ போற்றி
ஓம் காமேசுவரீ கமலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் மூலகாமாக்ஷியின் ஆதிமூலமே போற்றி
ஓம் தவம்புரியும் தவக் காமாக்ஷீ போற்றி
ஓம் குகையினிற் குலாவும் குமரியே போற்றி
ஓம் யந்திரத்தினி லமர் யதீசுவரீ போற்றி
ஓம் வெளிதனிலொளிரும் வேதாளி போற்றி
ஓம் காயத்ரீ மண்டபக் காமகோடி போற்றி
ஓம் தீபப்பிரகாசத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் சிந்தையடக் கருள்புரி சிவகாமீ போற்றி
ஓம் மூவுலகத்தின் தோற்ற முதலாயினை போற்றி
ஓம் தருமத்தினுருவாயு மமர்ந்தனை போற்றி

ஓம் அகில சக்தியினாதி சக்தியே போற்றி
ஓம் தாமரைத் தடாகத்தினிலவொளி போற்றி
ஓம் பாற்கடல் நடுமவர் பார்வதீ போற்றி
ஓம் காமனின் விற்புருவ முடையினை போற்றி
ஓம் வண்டினை யிகழ்விழி யுடையினை போற்றி
ஓம் செந்தாமரை மலரடி யுடையினை போற்றி
ஓம் இருபத்து நான்கக்ஷரத் தடங்கினை போற்றி
ஓம் ஸ்ரீகச்சியின் நடுவமர் ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் திருக்கயிலையமர் மனமகிழ் கமலை போற்றி
ஓம் பார்வதீ பகவதீ பைரவ ஓங்காரீ போற்றி

ஓம் காஞ்சீ ரத்ன பீடத் தமர்வோய் போற்றி
ஓம் அறியா வனமெரி அக்னியே! போற்றி
ஓம் ஆதரித் தாண்டருள் அம்பிகை போற்றி
ஓம் தாயென வந்தருள்செய் காமாக்ஷி போற்றி
ஓம் தாமதம் செயாதருள் புரிவாய் போற்றி
ஓம் அடியேனை யாண்டருள் அம்மையே போற்றி
ஓம் மூகனுக்கருள் செய்த மூகாம்பிகை போற்றி
ஓம் செஞ்சுடர் உடலுடைச் செல்வமே போற்றி
ஓம் செங்கனி வாயுடைச் செல்வியே போற்றி
ஓம் குஞ்சிதச் சரணம் கொண்டனை போற்றி

ஓம் ரஞ்சித வடிவம் உடையினை போற்றி
ஓம் பஞ்ச புஷ்ப பாணமும் தரித்தனை போற்றி
ஓம் குங்கும ஆடையும் கொண்டனை போற்றி
ஓம் கருணை வெள்ளக் காமாக்ஷி போற்றி
ஓம் சஞ்சல உலகினில் சாந்தினி போற்றி
ஓம் தங்க நிறத்துடன் நின்றனை போற்றி
ஓம் யோகநிலை கொண்ட காமாக்ஷி போற்றி
ஓம் வினைகளகற்றிட வரும் தாய் போற்றி
ஓம் நினைப்பவர் உளத்துறை காமாக்ஷி போற்றி
ஓம் கலைமகள் வாழ்த்தும் காமாக்ஷி போற்றி

ஓம் சிந்தையடக் கருள்புரி சிவேசுவரீ போற்றி
ஓம் தாஸனுக் கருள்புரி தாக்ஷõயணீ போற்றி
ஓம் ஸெளபாக்கிய சுந்தரீ காமரூபி போற்றி
ஓம் மதுரை மீனாக்ஷியாயொளிர் காமாக்ஷி போற்றி
ஓம் காசி விசாலாக்ஷியாயமர் காமாக்ஷி போற்றி
ஓம் மயிலைக் கற்பக மஹேசுவரீ போற்றி
ஓம் காயத்ரீயாயொளிர் கமலே காமாக்ஷி போற்றி
ஓம் வேகமாய் வந்தருள்பொழி காமாக்ஷி போற்றி
ஓம் மங்களம் நல்கிடும் மங்களை போற்றி
ஓம் அஞ்சேல் கூறிட வருதாய் போற்றி

ஓம் இன்ப வீட்டினை யருள்வோய் போற்றி
ஓம் இதயத் தாமரையிலமர்ந் தருள்வோய் போற்றி
ஓம் இதயத் தடாகத்தினி லன்னமே போற்றி
ஓம் வீணையின் நாதத்தை வென்றனை போற்றி
ஓம் இருளை நீக்கி அருள்வாய் போற்றி
ஓம் சங்கரன் மனதினில் கலந்தனை போற்றி
ஓம் உமேசனுக்குகந்ததோர் உமையே போற்றி
ஓம் கச்சியின் நடுவதி லமர்ந்தனை போற்றி
ஓம் ஊமையை அகற்றிய உத்தமி போற்றி
ஓம் இளம்பிறை சூடிய இமையே போற்றி

ஓம் மேரு பிந்துவினி லமர்ந்தனை போற்றி
ஓம் கயிலைக் கண்மணி காமாக்ஷி போற்றி
ஓம் உளத்தினொளியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் அறியா இருளினை யகற்றினை போற்றி
ஓம் சக்தி பீட அரசே ஸ்ரீராஜேசுவரீ போற்றி
ஓம் மணிமண்ட பந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பாபங்கள் அகற்றிடும் பவாநீ போற்றி
ஓம் ஞானப் பாலூட்ட வருதாய் போற்றி
ஓம் உலக அன்னையே உமையே போற்றி
ஓம் அருவா யொளிரும் அன்னை போற்றி

ஓம் எளியேனுக் கருள்புரி காமாக்ஷி போற்றி
ஓம் காமேசுவர வாமாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் ஜயதேவீ ஜயேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் சர்வேசுவரீ ஜகந் மோகினி போற்றி
ஓம் கயிலைச் சபை நடுவண் அமர்ந்தனை போற்றி
ஓம் இந்திரன் புகழும் இந்த்ராக்ஷி போற்றி
ஓம் கன்யா குமாரிக் கன்யகை போற்றி
ஓம் பத்மாசனத் தமர் பார்வதி போற்றி
ஓம் பஞ்சப்ரேத ஆசனத்தமர் பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் உலகினில் ஒளிரும் சுடரொளியே போற்றி

ஓம் ஒப்பிலா உருவாயு மொளிர்ந்தனை போற்றி
ஓம் மனதிற் கிசைந்ததோர் மங்களை போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகை வுருவா யருள்வோய் போற்றி
ஓம் அன்னத்தின் மேலமர் அம்பிகை போற்றி
ஓம் பக்தர்கள் மனமுள் பனிமதி போற்றி
ஓம் தீப ஜோதியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உருவா யொளிரும் உமையே போற்றி
ஓம் திருவா யொளிர் திரு புரேசுவரீ போற்றி
ஓம் அமுதா யினிபதா யருள்தாய் போற்றி
ஓம் ஞானக் கனியினில் கலந்தனை போற்றி

ஓம் உதய மதியிடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் பிறப்பிலா மருந்ததை அருள்தாய் போற்றி
ஓம் விரைவினில் வந்தருள் புரிவோய் போற்றி
ஓம் உமையே விமலை கமலை போற்றி
ஓம் சடை நாதனிடத் தொளிர் சங்கரீ போற்றி
ஓம் வேதார்த்தமாகிய வேதேசுவரீ போற்றி
ஓம் புராணார்த்தமாகிய புராந்தகீ போற்றி
ஓம் நாரணீ காரணீ பரிபூரணீ போற்றி
ஓம் காமேசனிடத் தொளிர் காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணமாகியதோர் ஜோதியே போற்றி

ஓம் வேத உண்மையின் வடிவாயினை போற்றி
ஓம் காளீ மகேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் கருணையோ டருள்புரி காயத்ரீ போற்றி
ஓம் பரம்பொருளுருவா யமர்ந்தனை போற்றி
ஓம் சதாசிவனிடத் தமர் சங்கரீ போற்றி
ஓம் சரணமடைந்தேன் சாரதே போற்றி
ஓம் சாகா வரமருள் சாம்பவீ போற்றி
ஓம் அஞ்சேலென் றருள்புரி அபிராமி போற்றி
ஓம் ஸ்ரீசதாசிவ பரப்ரும் மேசுவரீ போற்றி
ஓம் கையினிற் கடகம் பூண்டனை போற்றி

ஓம் தேவாதி தேவ தேவேசுவரீ போற்றி
ஓம் மும்மூர்த்திகள் தொழும் மூகாம்பிகை போற்றி
ஓம் ஆனந்த முக்தியருள் ஆனந்தி போற்றி
ஓம் யோக சமாதியினி லமர்ந்தனை போற்றி
ஓம் அண்ட மருளிய அன்னை போற்றி
ஓம் மண்டலமருளிய மங்களை போற்றி
ஓம் சராசர மருளிய சங்கரி போற்றி
ஓம் மாணிக்கப் பதக்க மணிந்தனை போற்றி
ஓம் உனதடி பணிந்தேன் உமையே போற்றி
ஓம் குருவாயும் வந்தருள் குண்டலினி போற்றி

ஓம் தீனதயாபரீ தீர காமாக்ஷீ போற்றி
ஓம் திரிபுர சுந்தரீ சிவ காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணீ யோகப் புராதனீ போற்றி
ஓம் சாந்த மகேசுவரீ சியாமளை போற்றி
ஓம் சங்கர நாயகீ சாந்தினி போற்றி
ஓம் சோக நிவாரணக் காரணீ போற்றி
ஓம் பஞ்ச தசாக்ஷர வித்யாப் பார்வதீ போற்றி
ஓம் எந்தன் முன் வந்தருள் புரிதாய் போற்றி
ஓம் பிந்து ஒளிக்குள் ஒளிர்சுடர் போற்றி
ஓம் சிந்தை மகிழ அருள்புரி சிவையே போற்றி

ஓம் சித்தர்கள் பணியும் சிவமணியே போற்றி


ஓம் பத்தர்தம் மனத்தமர் பரமேசி போற்றி
ஓம் செம்பவளக் கொடியே! என் செல்வமே போற்றி
ஓம் சங்கடந் தீர்த்தருள் சங்கரீ போற்றி
ஓம் ஆதி பராசக்தி அம்பிகை போற்றி
ஓம் பாசமகற்றிடும் பரம குருவாயினை போற்றி
ஓம் விந்தியாசலத்தமர் வீரேசுவரீ போற்றி
ஓம் பய இருளகற்றிடும் பனிமதி போற்றி
ஓம் மூள் பிறவி தீர்க்கும் மூகாம்பிகை போற்றி
ஓம் கலைகளின் முதலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் அன்பர்களுக் கெளியதோர் அன்னை போற்றி
ஓம் இன்ப நிலையருளும் இமையே போற்றி
ஓம் வேதாந்த வீட்டை விளக்கினை போற்றி
ஓம் காமாரி தேடும் காமாக்ஷீ போற்றி
ஓம் உள்ளே உணர அருள்வோய் போற்றி
ஓம் பஞ்சப்ரம்ம ரூபிணீ பார்வதி போற்றி
ஓம் சக்தி பீஜாக்ஷரீ சங்கரீ போற்றி
ஓம் மூகன் புகழ் கடாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் பிந்து பீடவாஸிநீ பிராம்மணீ போற்றி
ஓம் சம்பு மாதவன் மகிழ் சாம்பவீ போற்றி

ஓம் அம்பிகை கோமதி அபிராமி போற்றி

ஓம் மதுரஸம்பாக்ஷிணி மங்களை போற்றி
ஓம் மதுகைடப ஸம்ஹார மகேசுவரீ போற்றி
ஓம் வேதத்துத் தியானத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் செழும் பசும் பொன்னே ! செல்வமே ! போற்றி
ஓம் கற்பக வல்லி ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் மீனாக்ஷீ காமாக்ஷீ விசாலாக்ஷீ போற்றி
ஓம் மஹிஷாஸுர மர்த்தன மங்கை போற்றி
ஓம் எண்பத்து பீடத் தொளிர் ஏகேசுவரி போற்றி
ஓம் அருள்செய வருதாய் காமாக்ஷீ போற்றி

ஓம் தீர்த்தேசுவரீ தீனதயாபரீ காமாக்ஷீ போற்றி
ஓம் மந்த்ரேசுவரீ மஹேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தந்த்ரேசுவரீ தாக்ஷõயணீ காமாக்ஷீ போற்றி
ஓம் யந்த்ரேசுவரீ யதீசுவரி காமாக்ஷி போற்றி
ஓம் சக்த்யேசுவரீ சங்கரீ காமாக்ஷி போற்றி
ஓம் பீடேசுவரீ பீஜாக்ஷரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தத்வேசுவரீ தர்மேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸப்தேசுவரீ ஸரஸ்வதீ காமாக்ஷி போற்றி
ஓம் ஏகேசுவரீ ஏகாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் நாதேசுவரீ நாராயணீ காமாக்ஷி போற்றி

ஓம் விசுவேசுவரீ விசாலாக்ஷீ காமாக்ஷி போற்றி
ஓம் தீ÷க்ஷசுவரீ தீரேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் யோகேசுவரீ யோகாஸநீ காமாக்ஷி போற்றி
ஓம் வர்ணேசுவரீ வாமேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கலேசுவரீ காயத்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் வேதேசுவரீ வேதாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் அசுவலெக்ஷிமி அம்புஜாக்ஷீ காமாக்ஷி போற்றி
ஓம் தாந்யலெக்ஷிமி தாக்ஷõயணீ காமாக்ஷி போற்றி
ஓம் ராஜ்யலெக்ஷிமி ராஜேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கஜலெக்ஷிமி கன்யகை காமாக்ஷி போற்றி

ஓம் தனலெக்ஷிமி தனேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸந்தானலெக்ஷிமி சங்கரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஜயலெக்ஷிமி ஜயேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் கட்கலெக்ஷிமி கௌமாரீ காமாக்ஷி போற்றி
ஓம் காருண்யலெக்ஷிமி காயத்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸெளம்யலெக்ஷிமி ஸெனந்தரீ காமாக்ஷி போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமி முதலாதி, காமாக்ஷி போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி
ஓம் ஓங்கார பீஜாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் பிறவியிலா தகற்றிடும் பிராஹ்மீ! போற்றி

ஓம் மகேசன் மனத்தமர் மகேசுவரீ போற்றி
ஓம் கௌரியாயருள்புரி கௌமாரீ போற்றி
ஓம் வையகம் விரும்பிடும் வைஷ்ணவீ! போற்றி
ஓம் சங்கரன் நாடும் சங்கினி போற்றி
ஓம் வநந்தனி லுலவும் வாராஹீ போற்றி
ஓம் இந்திரன் மகிழும் இந்திராணீ போற்றி
ஓம் சண்டிகை சாரதே சாமுண்டி போற்றி
ஓம் சிவபிரான் செல்வியே சிவதூதீ போற்றி
ஓம் கவிகள் கருத்துறை காளி போற்றி
ஓம் லக்ஷõர்ச் சனாப்ரிய மஹாலெக்ஷிமி போற்றி

ஓம் ஸத்குருவாயு மருள்புரி ஸரஸ்வதி போற்றி
ஓம் ஸ்ரீசைலத்தொளிர் ப்ரம ராம்பிகை போற்றி
ஓம் கௌமாரீ சங்கரீ சைலபுத்ரீ போற்றி
ஓம் பிரம்ம ரூபிணீ ப்ரம்மசாரிணீ போற்றி
ஓம் சந்த்ர மௌளீச சந்த்ர கண்டா போற்றி
ஓம் சண்ட முண்ட ஸம்ஹார கூஷ்மாண்டா போற்றி
ஓம் கருணா கடாக்ஷ ஸ்கந்த மாதா போற்றி
ஓம் காலனைக் கடிந்த காத்யாயனீ போற்றி
ஓம் காமனை எரித்த காளராத்ரீ போற்றி
ஓம் பத்ம பீடந்தனிலமர் மஹாகௌரீ  போற்றி

ஓம் ஸித்தர்கள் மனத்தமர் ஸித்தாத்ரீ போற்றி
ஓம் சாம்பவீ பகவதி சக்தி பீஜாக்ஷரீ போற்றி
ஓம் ஸத்குரு ஸ்ரீசரண ரூபிணீ போற்றி
ஓம் காரணி காமேசி காமாக்ஷி போற்றி
ஓம் பாதி சந்த்ர சூடேசி பார்வதீ போற்றி
ஓம் த்ரியம்பிகே தேவ ஸ்ரீ நாராயணீ போற்றி
ஓம் கபர்த்தீசுவர ப்ரிய நாயகி போற்றி
ஓம் திரு வலஞ்சுழிநாத வாமாக்ஷீ போற்றி
ஓம் ஸ்ரீ காமகோடி, த்ரிபுர ஸுந்தரீ போற்றி
ஓம் ஸ்ரீ காமாக்ஷீ ஸ்ரீராஜ ராஜேசுவரீ போற்றி

ஓம் ஸ்ரீ காயத்ரீ மந்த்ரலலி தேசுவரி போற்றி
ஓம் மஹா கைலாச சாம்பசிவ மனோகரீ போற்றி
ஓம் சின்மயமாயொளிர் சித்ரூபி போற்றி
ஓம் மல்லிகார்ஜுன ப்ரிய ப்ரம ராம்பிகை போற்றி
ஓம் யோகரூபா தீசுவரீ யோகினீ போற்றி
ஓம் ஆயிரந்தள நடுவண் அமர்ந்தனை போற்றி
ஓம் காமனணுகா தருள்புரி காமாக்ஷி போற்றி
ஓம் காலனணுகா தருள்புரி காமகோடி போற்றி
ஓம் பிறப்பு பெரும் தளையினைக் களைவோய் போற்றி
ஓம் இறப்புத் தளையினை யழித்தருள் போற்றி

ஓம் உணர்வினி லொளியை விளக்கினை போற்றி
ஓம் அடியேன் பிழைபொறுத் தருள்புரிவோய் போற்றி
ஓம் விதியினை விலக்கருள் புரிவோய் போற்றி
ஓம் புகழியற்றும் வன்மை புரிவோய் போற்றி
ஓம் அன்னையே நினைச்சர ணடைந்தேன் போற்றி
ஓம் மகிழ்வுடனென் மனத்தமர் மங்கை போற்றி
ஓம் உனையென்றும் மறவேன்யான் உமையே போற்றி
ஓம் அடியேன்பால் அருள் புரிதாய்! போற்றி
ஓம் ஸ்ரீ லலிதேசுவரீ ஸ்ரீசக்கர ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் ஸ்ரீராஜராஜேசுவரீ ஸ்ரீமேருமத்ய காமகோடி போற்றி

ஓம் ஸ்ரீபஞ்சப்ரேதாச நேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் பரப்ரம்மேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் சிவகாமேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் சாமுண்டீசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் காளிமஹேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் காம பீடேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் சந்த் ரேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் த்ரிலோகேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் இச்சாசக்த்யேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் க்ரியா சக்த்யேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி

ஓம் ஞான சக்த் யேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஸ்ரீசக்ர மஹாயந்த்ரேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் மஹாயந்த்ர மத்யேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் விந்த்யாசலேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஹிமாசலேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் கம்பாதீரேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஏகாம்பரேசுவரி ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் அகில அண்டேசுவரீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் புலிமேலமர்ந்தருள் புராந்தகி போற்றி

ஓம் புன்னகை புரிபுவ நேசுவரீ போற்றி
ஓம் நவதுர்கா நவ கன்யகை போற்றி
ஓம் விஷ்ணுவி னிடத்தொளிர் வைஷ்ணவீ போற்றி
ஓம் பிரஹதீசுவர பிரஹந் நாயகீ போற்றி
ஓம் கஜமஸ்தகந் தனிலமர்ந்தனை போற்றி
ஓம் ஸித்த ஒளஷதமருளும் ஸித்தேசுவரீ போற்றி
ஓம் அழிவிலா நகரமர்ந் தரசியே போற்றி
ஓம் அன்பினுருவே ஜகதாம்பிகை போற்றி
ஓம் அறியா மனமதை யகற்றினை போற்றி
ஓம் மனமுள் மகிழ்வா யமர்ந்தனை போற்றி

ஓம் நாற்பத்து முக்கோண நடுவமர்ந்தனை போற்றி
ஓம் பஞ்சபாண மந்திரப் பார்வதி போற்றி
ஓம் ரத்ன சிந்தாமணியிடத் தமர்ந்தனை போற்றி
ஓம் காளீ காயத்ரீ ஸ்ரீகாமகோடி போற்றி
ஓம் பாசபந்த மகற்றிடும் பார்வதி போற்றி
ஓம் ஸ்ரீஸத்குரு திருரூபிணீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஐம்பத்தோரக்ஷரத்து மொளிர்ந்தனை போற்றி
ஓம் கம்பை நதிக்கரை யமர்ந்தனை போற்றி
ஓம் காமனை யெழுப்பிய காமேசுவரீ போற்றி
ஓம் பரமஹம்ஸர் மனத்தொளிர் பனீமதி போற்றி

ஓம் அறுமுகனன்னையே என் அம்பிகை போற்றி
ஓம் கவிச்சொற் பெருக்கத் தனாதியே! போற்றி
ஓம் மந்தஹாஸ மலர்முகத் தொழுகுதேன் போற்றி
ஓம் அசுரர்கள் சிரமாலை யணிந்தனை போற்றி
ஓம் சிவத்தின் ஜோதியே! சிவாதி சக்தியே! போற்றி
ஓம் கௌரீ, காளீ, கௌமாரீ போற்றி
ஓம் கோவைக் கனியதர முடையினை போற்றி
ஓம் வேத வனந்தனில் வருமயில் போற்றி
ஓம் உபநிடத வானத்தொளிர்மதி போற்றி
ஓம் ஆதிகுரு நாதனாய் அமர்ந்தனை போற்றி

ஓம் மல்லிமலர்ப் புன்னகை புரிந்தனை போற்றி
ஓம் குங்கும ஆடையும் அணிந்தனை போற்றி
ஓம் குற்றங்கள் பொறுத்தருள் குருவே போற்றி
ஓம் பரம்பொருளே! ஸ்ரீபரமசிவேசுவரீ போற்றி
ஓம் மனக்கடல் மகிழ வருமதி போற்றி
ஓம் மகேசன் மனதுள் மகிழ்வோய் போற்றி
ஓம் ஆதிசிதம்பரத் தாடிய ஆனந்தி போற்றி
ஓம் இருளுடைப் புவியினி லொளிர்மதி போற்றி
ஓம் அடியேன்! அறியேன்! அருள்வோய் போற்றி
ஓம் சிங்காசனத் தமர்ந்த சிவசாந்தி போற்றி

ஓம் மலைகளின் நடுவண் மகிழந் தமர்ந்தனை போற்றி
ஓம் கருணையீந் தருளும் கங்கையே போற்றி
ஓம் கவிகள் கருத்தொளிர் கலைமகள் போற்றி
ஓம் வீணையைக் கையினிற் கொண்டனை போற்றி
ஓம் அகண்ட வித்யா செல்வமருள் அன்னை போற்றி
ஓம் அன்னபூரணி அம்மையே ! அகிலேசி! போற்றி
ஓம் ஒன்பதுருவாயு மொளிர்ந்தனை போற்றி
ஓம் சாம்பவீ சங்கரீ ஆதிசக்தி போற்றி
ஓம் நான்மறை நடுவொளிர் நாரணீ போற்றி
ஓம் எண்கரம் கொண்ட யதீசுவரீ ! போற்றி

ஓம் மீன் கண்ணுடைய மீனாம்பிகை போற்றி
ஓம் மூவுருவா யுலகினி லமர்ந்தனை போற்றி
ஓம் உலக முடிவின் காரணீ ரௌத்ரீ போற்றி
ஓம் கமலாயதாக்ஷீ ஸ்ரீகாமேசுவரீ போற்றி
ஓம் ஏழையின் ஏழ்மையை அகற்றினை போற்றி
ஓம் பசுவினுடலினுள் பதிந்தனை போற்றி
ஓம் மாலை மலையொளியினில் மகிழ்ந்தனை போற்றி
ஓம் ஆனந்த அத்வைத தத்வாம்பிகை போற்றி
ஓம் கருணை மழையினைப் பொழிந்தனை போற்றி
ஓம் ஞான ஒளியினை மனமுள் நல்கினை போற்றி

ஓம் அறியா இருள்வனத் தொளிர்மதி போற்றி
ஓம் வேத விருட்சத்துத் திகழ்துளிர் போற்றி
ஓம் வேட்டையை விரும்பும் வீரேசுவரீ போற்றி
ஓம் காஞ்சீ நகரத் தன்னை காமாக்ஷீ போற்றி
ஓம் அறுவகை யாசையை யகற்றினை போற்றி
ஓம் செங்கண்ணுடைய செல்வியே போற்றி
ஓம் ஐங்கரன் மனமகிழ் அன்னையே போற்றி
ஓம் ஆனந்தி ஸ்ரீஅகிலாண் டேசுவரீ போற்றி
ஓம் அத்வைத தத்துவத் துள்ளடங்கினை போற்றி
ஓம் புன்னகை யொளிமழை பொழிந்தனை போற்றி

ஓம் பிரணவப் பொருளினுள் ளடங்கினை போற்றி
ஓம் நித்யான்னதான நிரந்தரீ போற்றி
ஓம் மோக்ஷ நிலையருளும் முக்கண்ணீ போற்றி
ஓம் ஞானத் தேனருளும் நறுமலர் போற்றி
ஓம் ஏகாந்த இடத்து நிலவினை போற்றி
ஓம் ஏகாம்பர நாதருள் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் அன்புடை அம்மையே ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் திருபுராந்த கனிடத்துத் திகழ்ந்தனை போற்றி
ஓம் மதுமாமி சப்ரிய மங்கை மஹோதரீ போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே! ஸ்ரீபுவன ஈசுவரீ போற்றி

ஓம் நங்கையே மங்கை கங்கை போற்றி
ஓம் முனிவர் மனத்தடாகத் தொளிர் மலர் போற்றி
ஓம் ஞான ஓடமதருளும் ஞானேசுவரீ போற்றி
ஓம் ஜீவரத்ன மருளும் சிவையே போற்றி
ஓம் ஏகாம்பர நாதப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் செந்தாமரை நடுவளர் திருசெல்வீ போற்றி
ஓம் சர்க்கரையன்ன ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் தேவர்களுக் கருளும் தேவேசுவரீ போற்றி
ஓம் ஓங்காரீ ஒளிர்மதி உமையே போற்றி
ஓம் அன்புப் பூங்கொடியதன் அருமலர் போற்றி

ஓம் மனஅமைதி யருளும் மங்கையே போற்றி
ஓம் உலக உடலினுள் ளொளிர்ந்தனை போற்றி
ஓம் ஒப்பிலா அம்மையே காமாக்ஷீ போற்றி
ஓம் ரத்ன த்வீபச் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீவித்யா பஞ்சதசீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் ஸ்ரீ கடாக்ஷ மதருள் ஸ்ரீ சிவேசுவரீ  போற்றி
ஓம் ஸ்ரீ சங்கர நாயகீ ஸ்ரீ சாரதே போற்றி
ஓம் பெருமை யிலடங்காப் பேருருவே போற்றி
ஓம் பிறவிக்கடல்யான் நீந்தருள் பிராம்மீ போற்றி
ஓம் தாமரைத் தாளுடை தாக்ஷõயணீ போற்றி

ஓம் ஸ்ரீ காஞ்சீ புராதீசுவரி ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் மோக்ஷ மாளிகையி லொளிர் சுடர் போற்றி
ஓம் காளி தாசனுக்கருள் செய்த காமாக்ஷி போற்றி
ஓம் பரசிவ (ஜீவ) ப்ராண பார்வதீ போற்றி
ஓம் எட்டுநிதி ஈந்தருள் யதீசுவரீ போற்றி
ஓம் குறைகளை யொழிக்கும் குடிலை போற்றி
ஓம் அருளது கொழிக்கும் அம்பிகை போற்றி
ஓம் காமகலே! கமலே! ஸ்ரீ காமாக்ஷீ போற்றி
ஓம் பந்தகாசுர ஸம்ஹாரக் கன்யகை போற்றி
ஓம் குண்டலி, குமாரி, குடிலை போற்றி

ஓம் பரசிவச் சகோரப் பனிமதி போற்றி
ஓம் மார்க் கண்டனுக் கருள்புரி சண்டிகை போற்றி
ஓம் நரர் மாலை பூண்ட ஸ்ரீ சாமூண்டா போற்றி
ஓம் காமராஜ ஆதிபீடத்தமர் காமாக்ஷி போற்றி
ஓம் ஜாலந்திர பீடத்தமர் ஜயேசுவரீ போற்றி
ஓம் பிந்து மண்டல பீடத்தமர் பிரஹதீசீ போற்றி
ஓம் ராஜாதி ராஜ சக்ரஸ்ரீ ராஜேஸ்வரீ போற்றி
ஓம் மனதடக்கருள் புரிந்தமர் மங்கை போற்றி
ஓம் ஆறு சக்கரத்தினுள் ளமர்ந்தனை போற்றி

ஓம் சித்வானத் தொளிர் சிவரூபிணீ போற்றி
ஓம் சிவமுடைச் செங்கண் செல்வியே போற்றி
ஓம் மஹாலிங்க த் தோடமர் மங்கையே போற்றி
ஓம் வேத சாஸ்திர ஸ்ரீவித்யா ரூபிணீ போற்றி
ஓம் பராசக்தி ஸ்ரீபரதேவ பரமேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீ பட்டாரி காளீ ஸ்ரீ பரமேசுவரீ போற்றி
ஓம் யோக நிஷ்டையினுள் ஒளிர் ஜோதீ போற்றி
ஓம் ஸ்ரீகைலாஸநாத ஆனந்தவல்லி அகிலேசீ போற்றி
ஓம் தடாக மலரதர முடையினை போற்றி
ஓம் சிவஞ்ஞான மூல காரணீ சித்ரூபீ போற்றி

ஓம் சிவனிடத்தொளிர் புன்னகைமாலை போற்றி
ஓம் காசி, கங்கை: யமுனை, சரஸ்வதீ போற்றி
ஓம் அடியேன் பிழை பொறுத்தருள் புரிவாய் போற்றி
ஓம் உனையென்றும் மறவேன், அருள் தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீ காமேசுவர பீடகாரணீ காமரூபீ போற்றி
ஓம் உனைக் காணருள்புரி உமையே! போற்றி
ஓம் கம்பா தீர த்ருபுர சுந்தரீ போற்றி
ஓம் கச்சியதன் செல்வீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் கருணையோடருள்புரி காமேசீ போற்றி
ஓம் காமகலேசுவரீ ஏகாக்ஷரீ ப்ரணவாக்ஷரீ போற்றி

ஓம் ஆயுதம் பல பூண்டமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகே ரூபிணி ஸ்ரீ சாமுண்டீ போற்றி
ஓம் ஞாபக ரூபிணி ஸ்ரீ ஞானே சுவரீ போற்றி
ஓம் ஸ்ரீ ஸாதசிவ மங்கள சுமங்கலை போற்றி
ஓம் ஸுஷுப்தி ரூபிணி ஸுந்தரீ போற்றி
ஓம் ஆனந்த மயச் சக்கரத் தமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீ காசீ விசுவேசுர விசாலாக்ஷீ போற்றி
ஓம் ஸ்ரீ சங்கர நாராயண கோமதீ போற்றி
ஓம் கையினிற் கபாலம் கொண்டனை போற்றி
ஓம் பூதவேதாளத் தோடொளிர்வோய் போற்றி

ஓம் சந்த்ராக்நி, யம சக்தியாதி காரணீ போற்றி
ஓம் வருணவாயு, சக்தியாதி வாமரக்ஷீ போற்றி
ஓம் மஹாகோர ரூபிணீ ஸ்ரீ பத்ரகாளி போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ர மந்த்ரேசுவரீ ருத்ரகாளீ போற்றி
ஓம் சர்வ வ்யாதி நிவாரண காரணீ போற்றி
ஓம் ஸ்ரீ காமகோடி யோகீசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஜீவன் முக்தியருளும் ஜீவேசுவரீ போற்றி
ஓம் பரமாத்ம ஜீவாத்மானந்த ரூபிணீ போற்றி
ஓம் ஸ்ரீ சண்டீகேசுவரீ ஸ்ரீ சாமுண்டேசுவரீ போற்றி
ஓம் உனைப் பலநாள் உணராதிருந்தேன் போற்றி

ஓம் உனதருளால் இனி நினை உணர்ந்தேன் போற்றி
ஓம் பிழை பொறுத்தருள் காக்ஷி தருவோய் போற்றி
ஓம் ஆனந்த மலையே! அலை கடலே! அம்மையே போற்றி
ஓம் உன் பொற்பாதமடையருள் பார்வதீ போற்றி
ஓம் உன் சரணகமலத் தேனருள்வாய் போற்றி
ஓம் முக்திமாளிகை செல்லொளி அருள்வோய் போற்றி
ஓம் பஞ்சமா பாதகமற்றிடும் பகீரதீ போற்றி
ஓம் முக்தியின் வித்தே! மூகேசுவரீ போற்றி
ஓம் எளியேன் பாவி அடியேன் துணையே போற்றி
ஓம் நின் அன்புப் பெருக்கில் நீந்தருள் அன்னை போற்றி

ஓம் அன்பின் வித்தே! அகிலாண்டேசுவரீ போற்றி
ஓம் அழகுடை அன்னையே! சரணடைந்தேன் போற்றி
ஓம் தாமரை முகக்காக்ஷி தந்தருள்வாய் போற்றி
ஓம் நின் அழகு ஓடையில் மூழ்கருள் அம்பிகை போற்றி
ஓம் புன்னகை யொளியுடை நன்மதியே போற்றி
ஓம் உன திடம் வரவருள் பேரொளியே போற்றி
ஓம் உன்னைக் காணாதிரேன் உமையே, கமலை போற்றி
ஓம் ஒளியுடை முகமுடை சிவோங்காரி போற்றி
ஓம் விந்திய மலையிலொளிர் ஜ்யோதியே போற்றி
ஓம் ஞானத்தேன் மலர்ப்பாதமீந்தருள்வோய் போற்றி

ஓம் சித்தர்கள் சிவஜோதி சிவங்கரீ போற்றி
ஓம் அஞ்ஞானக் கடல் கடக்கருள் அம்பிகை போற்றி
ஓம் ஞான மாளிகை செல்லருள் நாரணீ போற்றி
ஓம் பக்தி ஓடமீந்து முக்தியருள்தாய் போற்றி
ஓம் ஞானக் கனியீந்தருள் காமேசுவரீ போற்றி
ஓம் ஸர்வ ம்ருத்யு நிவாரண ஸாவித்ரீ போற்றி
ஓம் ஸகல வித்தையினாதியே! ஸத்குருவே போற்றி
ஓம் பரசிவானந்தத் தாண்டவ ப்ரியேசுவரீ போற்றி
ஓம் பஞ்சாக்ஷரீ, நவாக்ஷரீ, பஞ்சதசாக்ஷரீ போற்றி
ஓம் சிந்தாமணி வீட்டின் செல்வமே போற்றி

ஓம் ஏகாக்ஷரீ த்ரிபுரை மஹா சோட சாக்ஷரீ போற்றி
ஓம் நான்மறை ரூபிணீ நாராயணீ போற்றி
ஓம் திரு ஆரூருறை நீலோத்பலக் கமலே போற்றி
ஓம் திருமகள் வணங்கும் திருபுரை போற்றி
ஓம் கலைமகள் புகழ்ந்திடும் காமாக்ஷி போற்றி
ஓம் இரத்த ஆயுதமுடை ரக்தாக்ஷீ போற்றி
ஓம் ரஸாசலேசுவரப்ராண காமாக்ஷீ போற்றி
ஓம் ஏகசூதமதியினுயிரா யொளிர்ந்தனை போற்றி
ஓம் அன்னையாயருள் புரியுமபிராமி போற்றி
ஓம் கோடி காமரூபிணீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் பெரும் பிழை பொறுத்தருள் அபிராமி போற்றி
ஓம் மகாலிங்க ஜோதிரூபத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் கொண்டையிற் பிறைகங்கை கொண்டனை போற்றி
ஓம் வேதாத்ம தத்துவ வேத நாயகீ போற்றி
ஓம் குருமூர்த்தியா யருள் குண்டலினி போற்றி
ஓம் மனச்சாந்தி மகிழ்ந் தருள் மஹோதரீ போற்றி
ஓம் சிவாய நம: நாம நாராயணி போற்றி
ஓம் எக்காலத்து மெனைக்காத் தருள்வாய் போற்றி
ஓம் என்மன வீடடைந்தருள் மகேசுவரீ போற்றி
ஓம் மன, ஆசைமான் அழித்தருள் மங்கை போற்றி

ஓம் என் கொடிய கோபமகற்றும் கோமதி போற்றி
ஓம் பாப இருளகற்றிடும் பனிமதி போற்றி
ஓம் பொறாமை யகற்றிப் பொறுமை யருள்தாய் போற்றி
ஓம் வேண்டிய வரமருள் வேதாளி போற்றி
ஓம் உலகோர் புகழ் வாழ்வருள் உத்தமி போற்றி
ஓம் சத்ரு பயமகற்றியருள் சர்வேசுவரி போற்றி
ஓம் பராசக்தியே! பர்வதராஜ கன்யகை போற்றி
ஓம் பரதேவதை! நின்புகழ் பாடருள்தாய் போற்றி
ஓம் கஷ்டங்கள் களைந்தருள் கல்யாணீ போற்றி
ஓம் கவலைகள் தீர்த்தருள் கமலாக்ஷி போற்றி

ஓம் வாழ்க்கை கடக்க வழியருள் வராஹீ போற்றி
ஓம் வாழ்க்கை ஆழிகடக்க ஓடமு மருள்வாய் போற்றி
ஓம் அழியா ஆத்மாவினா தியே! அம்மையே போற்றிஓம் உனையன்றி வேறொன்றறியேன் தாய் போற்றி

ஓம் திருவுருவக் காக்ஷி தந்தருள்தாய் போற்றிஓம் நின்திருவடி யடைந்தேன் வரமருள் போற்றி

ஓம் திருவடி அழகோடையில் திளைந்தேன் போற்றி
ஓம் மனக்களைப்பு நீக்கியருள் காமேசுவரீ போற்றி
ஓம் மங்களை கோமளை ராஜசியாமளை போற்றி
ஓம் சிறுமையகற்றிப் பெருமை அருள்வோய் போற்றி

ஓம் ஸெளந்தர்ய நாயகியகில ஈசுவரீ போற்றி
ஓம் அறுபத்து நாற் கலைகளி லமர்ந்தனை போற்றி
ஓம் சக்தி பீடத்தின் செல்வீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் கோடி யர்க்க ஒளியுடைக் கோமதி போற்றி
ஓம் புண்ணியம் மிகச்செய அருள் புராந்தகீ போற்றி
ஓம் தர்ம சாம்ராஜ்யத் தனியரசே போற்றி
ஓம் தர்மம் செயும் மனம் தருதாய் போற்றி
ஓம் முனி கணம் புகழ அமர்ந்தோய் போற்றி
ஓம் மூக கவியின் சொல்லதில் கலந்தனை போற்றி
ஓம் ஐந்நூறு பாடருளிய அம்மையே போற்றி

ஓம் பெரும் புகழ் உடையோய்! பார்வதி போற்றி
ஓம் மோக்ஷ வீட்டினிலொளிர் தீபமே போற்றி
ஓம் மோக்ஷ தத்துவ வுபதேச ஞானகுருவே போற்றி
ஓம் ஸ்ரீசங்கர பகவத் பாதம் நினையருள் பகவதி போற்றி
ஓம் எங்கும் என்றும் என்மனத் தமர்வோய் போற்றி
ஓம் தேவாலய உடலின் தேவியே போற்றி
ஓம் ஸ்ரீசக்கரத் தாமரை நடு அமர்ந்தனை போற்றி
ஓம் பரப்ரும்ம ரூப நினைவு மருள்வோய் போற்றி
ஓம் மனபக்திபாற் பெருங்கட லடைந்தனை போற்றி
ஓம் காமக்ரோத மோஹ மகற்றி, காக்ஷியருள் போற்றி

ஓம் யஜுர்வேத ருத்ர நடுவண் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ஜீவரத்ன பரிமளை போற்றி
ஓம் ஸ்ரீசக்கர சிந்தாமணி நடு அமர்ந்தனை போற்றி
ஓம் ரக்த வஸ்த்ர ப்ரிய ராஜ ராஜேசுவரீ போற்றி
ஓம் புலி ஸிம்ம வாஹனம் கொண்டனை போற்றி
ஓம் நவரத்ன ஸிம்ம பீடத் தமர்ந்தனை போற்றி
ஓம் வெகு வீரமாய் ஸிம்மத் தமர்ந்தனை போற்றி
ஓம் நின்புகழ் பொற்பத மருள்வோய் போற்றி
ஓம் ஓம், ஐம், ஹ்ரீம், க்லீம்; பீஜாக்ஷரீ ஹ்ரீங்காரீ போற்றி
ஓம் நவவகை பூஜையில் மிக மகிழ்ந்தனை போற்றி

ஓம் இப் புகழகவல் உனக்கு அர்ப்பணித்தேன் போற்றி
ஓம் புகழ் பொற் பாதத்து ஸமர்ப்பித்தேன் போற்றி
ஓம் கோடி பிழை பொறுத்தருள் காமகோடி போற்றி
ஓம் பகவகை பக்ஷண ப்ரியேசுவரீ போற்றி
ஓம் பூர்ணிமை பூஜாப்ரியான்ன பூரணீ போற்றி
ஓம் மிக மகிழ்வுடனுமருள் மீனாக்ஷி போற்றி
ஓம் ஒன்பது கோடி யோஜனைக்குள் ளொளிர்ந்தனை போற்றி
ஓம் பார்வதி பகவதியோங்காரீ பகீரதி போற்றி
ஓம் ஸ்ரீகாமாக்ஷி ஸ்ரீலலிதே ஸ்ரீசாரதே போற்றி

ஓம் த்ரியக்ஷ்ரீ தீனதயாபரீ தீனேசீ போற்றி
ஓம் ஸ்ரீசண்டிஹோம ப்ரிய சாமுண்டி போற்றி
ஓம் பலி யைவிரும்பிடும் பத்ரகாளீ போற்றி
ஓம் கன்யகா ரூபமாயும் முன் நின்றனை போற்றி
ஓம் விருத்தையா யமர்ந்த துர்க்கையே போற்றி
ஓம் கடாக்ஷ அருளீந்தருளும் இமையே போற்றி
ஓம் ஞான மதியுதயம் அருள்வோய் போற்றி
ஓம் அறியா அர்க்கனொளி அழித்தருள் போற்றி
ஓம் மன ஆசை மான் அழித்திடும் சிம்மமே போற்றி
ஓம் மன்மதாயுத கடாக்ஷமுமருள் தாய் போற்றி

ஓம் வேத சாஸ்திர வழி காட்டிட வரு குருவே போற்றி
ஓம் சம்சாரச் சேறழுந்தாக் கடாக்ஷக் கோலருள்வோய் போற்றி
ஓம் இதயமலையிலொளிர் ஞானமதியே போற்றி
ஓம் ஸம்ஸார ரோக நிவாரண மூலிகை போற்றி
ஓம் கடாக்ஷ ஒளஷதமருள் காமகோடி போற்றி
ஓம் நாக்வயல்; வாக்பயிர்க்கு வரும் மழை போற்றி
ஓம் வாக்குப் பயிர் வினையருள் வாமேசி போற்றி
ஓம் மனயானையைப் பக்தியாலடக்கருள் போற்றி
ஓம் ஸம்ஸார விஷ விருக்ஷ நாச மூலகாரணீ போற்றி
ஓம் கடாக்ஷக் கோடரியால் களைந்தனை போற்றி

ஓம் கருணை யுவதி ஸ்ரீ காம கடாக்ஷிணி போற்றி
ஓம் மன்மத ராஜ ஸிம்மாசனத் தமர்ந்தனை போற்றி
ஓம் பரம்பொருள் ஒளிகாண அருள்வோய் போற்றி
ஓம் ஞானக் காற்றால் மாயைப்புகை விலக்கருள் போற்றி
ஓம் என் நாவிலிருந்து கவிபாட அருளினை போற்றி
ஓம் மூகேசுவர ஜகத்குரு புகழ் காமாக்ஷி போற்றி
ஓம் ஊமையைக் கவிபாட அருளினை போற்றி
ஓம் மன்தம ரூபமும் மகிழ்வோடருள்வாய் போற்றி
ஓம் ஏழைக்கு இந்திர செல்வமும் அருள்வோய் போற்றி
ஓம் யாவைக்குமென்றும் மூல காம கடாக்ஷிணி போற்றி

ஓம் கருணா கடாக்ஷீ காமகடாக்ஷீ காமகோடி ரூபீ போற்றி
ஓம் பல முறை பிறந்தழியா தருள்வோய் போற்றி
ஓம் ஸம்ஸார வெயிற் கொடுமையில் யான் வாடினேன் போற்றி
ஓம் கடாக்ஷ ஓடையில் நீந்தருள் காமாக்ஷீ போற்றி
ஓம் சிவமயில் மகிழ் கடாக்ஷக் காளமேகமே போற்றி
ஓம் சிவமன காமாக்னி பெருகமர் காமாக்ஷி போற்றி
ஓம் சிவயோகி மனம் மகிழ் கடாக்ஷி போற்றி
ஓம் கருணை நீரீல் மூழ்கிய கடாக்ஷிணீ (கடாக்ஷ விழி) போற்றி
ஓம் காதுவரை நீண்டொளிர் இருகருவிழி போற்றி
ஓம் மன்மத விற் புருவமு முடையினை போற்றி

ஓம் விற்புருவினால் சிவனை எதிர்த்தனை போற்றி
ஓம் சிவ அன்னம் நீந்தும் அழகோடையே போற்றி
ஓம் கடாக்ஷத் தாமரையோடையில் கலக்கருள் போற்றி
ஓம் சிவ சகோரம் மகிழ் கடாக்ஷ நன்மதியே போற்றி
ஓம் சிவ சங்கர ப்ராண ஸர்வ மங்களை போற்றி
ஓம் ஏழ்மை போக்கி மேன்மை யருள்தாய்! போற்றி
ஓம் மூவெழுத்திளில் பெரும்புகழ் வுடையினை போற்றி
ஓம் கடாக்ஷக் கருவிழியால் கண் பாராய் போற்றி
ஓம் ஒரு நொடியினில் என்மனந்தனிலமர்ந்தனை போற்றி
ஓம் சிலமார்பினில் தவழ் கடாக்ஷச் சிசுவே போற்றி

ஓம் மன இருட்டு கடாக்ஷ தீபமருள்வாய் போற்றி
ஓம் மனக்கண்முன் திருக்காக்ஷி காணருள் போற்றி
ஓம் கஷ்டமலை களைந்தருள் கமலேசுவரீ போற்றி
ஓம் பகைவரை யழித்தருள் பார்வதீ போற்றி
ஓம் நீலகண்டத் தடாகத்துத் திளைந்தனை போற்றி
ஓம் எல்லாமறியும் வன்மையும் அருள்தாய் போற்றி
ஓம் கீர்த்திமாலை யருளும் கன்னிகை போற்றி
ஓம் அகாராதி க்ஷகாராந்தமு மமர்ந்தனை போற்றி
ஓம் மஹாபாஷ்ய உபதேச ஞானஸத்குருவே போற்றி
ஓம் கடாக்ஷக் கோலருளும் காமகுரு போற்றி

ஓம் காமகோடி பத்ம பீடக் கன்யகை போற்றி
ஓம் வாக்கினில் (கலை) வாணியாய் வந்தனை போற்றி
ஓம் கொடும்பசி நீக்கி வந்தமர்வோய் போற்றி
ஓம் பசி பிசாசகற்றிடும் பார்வதீ போற்றி
ஓம் பரமன் மகிழ் பகவதி பார்வதி போற்றி
ஓம் அறியா மான்களை விரட்டும் சிம்மமே போற்றி
ஓம் அதிவிரைவில் அழித்துவந் தமர்வாய் போற்றி
ஓம் மன்மதனின் அழகினைக் கவர்ந்தனை போற்றி
ஓம் நீலகண்டன் மனதினை மயக்கினை போற்றி
ஓம் சிவமன மீன்பிடி கடாக்ஷ வலையே போற்றி

ஓம் சிவஸ்வரூப ஜோதியுள்ளொளிர்ந்தனை போற்றி
ஓம் அறிவு மலரழியானையை அழித்தருள் போற்றி
ஓம் கற்பக விருக்ஷ கடாக்ஷ மலர்த்தேன் போற்றி
ஓம் சஞ்சலக் கண்ணுடை சங்கரீ போற்றி
ஓம் என் சஞ்சலமகற்றிடும் சாம்பவீ போற்றி
ஓம் ஸம்ஸார ஸாகர விமோசன காரணீ போற்றி
ஓம் கடாக்ஷரத்ன ஓடமருள் கல்யாணீ போற்றி
ஓம் கவிகள் மனமகிழ் காத்யாயனி போற்றி
ஓம் காமன் புகழ் கடாக்ஷக் கன்யகை போற்றி
ஓம் ஞானக் கடாக்ஷ சந்த்ரோதய நாராயணீ போற்றி

ஓம் இதயமலை சிகரமமர்ந்த ஞானாம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீராஜாராஜேவரீ ராஜ்ய பீடலெக்ஷ்மீ போற்றி
ஓம் சிவந்த பட்டாடை தரித்தனை போற்றி
ஓம் இந்த்ர நீலமணி மாலையும் பூண்டனை போற்றி
ஓம் நாற்கரங்களில் வளையல் அணிந்தனை போற்றி
ஓம் விரல்களில் மோதிர மணிந்தனை போற்றி
ஓம் பொன் ஒட்டியாண மிடையில் பூண்டனை போற்றி
ஓம் கால்களில் சிலம்பும் பூண்டனை போற்றி
ஓம் காதினிற் தாடங்க மணிந்தனை போற்றி
ஓம் நவரத்ன சிம்மபீடத் தமர்ந்தனை போற்றி

ஓம் பகழிபாசாங்குச புஷ்ப பாணம் கொண்டனை போற்றி
ஓம் பரிவுடன் மிக மகிழ்வுடன் அமர்ந்தனை போற்றி
ஓம் பெருமையிலடங்காப் பேருருவே போற்றி
ஓம் மனக் காட்டினிலொளிர் ஞானமயிலே போற்றி
ஓம் பக்தி மோகத்தால் மகிழ்வுட னாடினை போற்றி
ஓம் கங்கை யமுனைப் புன்னகைக் கடாக்ஷீ போற்றி
ஓம் சிவன் மகிழ் காமாக்னி கடாக்ஷப்புகையே போற்றி
ஓம் கவலையுடை அடியேனைக் காத்தருள் போற்றி
ஓம் கவலை நீக்கிக் கருணையோ டருள்தாய் போற்றி
ஓம் பெற்ற தாயினும் அன்புடை தாக்ஷõயணி போற்றி

ஓம் நினைப்பவை யீந்தருள் நீலாயதாக்ஷிணீ போற்றி
ஓம் சம்சாரக் கட்டவிழ்த்தருள்புரி காமாக்ஷி போற்றி
ஓம் பக்தியால் முக்திவீடுமருள் பரமேசி போற்றி
ஓம் முக்திரூப முழுமுதற் பரம்பொருளே போற்றி
ஓம் பலமூர்த்திகள் ரூபியாய்ப் புவியமர்ந்தனை போற்றி
ஓம் சோதனை செயாது கடாக்ஷ மருள்வாய் போற்றி
ஓம் கருணைப் பெருக்கா லெனைச் சற்று நனைப்பாய் போற்றி
ஓம் ஆயிரம் புகழ் பெயருடை அம்பிகை! போற்றி
ஓம் தாமரை மணமலர்ப் பூஜையில் மகிழ்ந்தனை போற்றி
ஓம் எளியேன் சிறியேன்! கடாக்ஷ மருள்தாய் போற்றி
ஓம் நின் பார்வையைச் சிறியேன் காணருள் போற்றி

ஓம் காமராஜ்ய பீடக்காரண காமாக்ஷீ போற்றி
ஓம் மனம் கவர் முகமுடை மங்கையே போற்றி
ஓம் பாத பூஜாப்ரிய பரமேச பராம்பிகை! போற்றி
ஓம் சிவ மூலக் காரண ஏக ஆம்ரமே போற்றி
ஓம் நான்மறை ரூபக் கிளையுடைத் தருவே போற்றி
ஓம் அழியாப் புகழுடைத் துளிருடைத் தருவே போற்றி
ஓம் மார்க்கண்டனி னாதார ஏகாம்பர த்தருவே போற்றி
ஓம் காஞ்சீ நகரப்ரிய காமகோடி ரூபீ போற்றி
ஓம் நாற்பத்து நாற்கோண ஸ்ரீசக்ர நடு நாயகீ போற்றி
ஓம் ஏழ்கோடி மாமந்த்ர ரூப ஏகாக்ஷரீ போற்றி

ஓம் வேதேசுவரீ காமேசுவரீ வாகீசுவரீ போற்றி
ஓம் சக்த்யேசுவரீ வாமேசுவரீ சர்வேசுவரீ போற்றி
ஓம் கோடியர்க்க ப்ரகாச கோமதி போற்றி
ஓம் பொறுமை மனமருளியாள் தேவியே போற்றி
ஓம் குயில்போல் இனியகவி பாடருள் போற்றி
ஓம் ஸ்ரீகாஞ்சீ சங்கரபாத ஸ்ரீசக்ரேசுவரீ போற்றி
ஓம் பிறப் பிறப் பகற்றியருள் பிரும்மேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீபரப்ரும்ம ஸ்வரூப சிவாதிசக்தியே போற்றி
ஓம் சிருஷ்டிஸ்திதி ஸம்ஹார திரோதானகாரணீ போற்றி
ஓம் இனித் தாமதம் செயாதருள் ஸ்ரீகாயத்ரீ போற்றி

ஓம் நின் முழுமதி முகக்காக்ஷி யருள்தாய் போற்றி
ஓம் ஆனந்த மயிலாய் மனவனம் நாடினை போற்றி
ஓம் மனப்பக்குவம் ஈந்தருள் மங்களை போற்றி
ஓம் யோக நிஷ்டையுள் ளொளிரும் யோகினீ போற்றி
ஓம் யோகலிங்க ரூப ஜோதியுள் ளொளிர்ந்தனை போற்றி
ஓம் பரசிவமயமா ளொளிர் ப்ரணவப் பொருளே போற்றி
ஓம் யாவரு மடையா முக்தியடையருள்தாய் போற்றி
ஓம் கொடிய பாபமகற்றிடும் கோமதி போற்றி
ஓம் பாபம் பல செயுமெனைப் பொறுத்தருள் போற்றி
ஓம் பாபம் செயா தொரு மனமு மருள்தாய் போற்றி

ஓம் பாபப்பனி போக்கியருள் பார்வதி போற்றி
ஓம் செய்த வினையால் புவியில்யான் பிறந்தேன் போற்றி
ஓம் நினையடைந்தேன், யினியான் பிறவாதருள் போற்றி
ஓம் உயர்ஞான ஸத்குருவா யருளிணை போற்றி
ஓம் ஸத்குருவாய் ஞானமாய் முன் திகழ்ந்தனை போற்றி
ஓம் எங்குமுள உனையென்றும் யான் மறவேன்! போற்றி
ஓம் ஏகாந்த யோக நிஷ்டையுள் விளங்கினை போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ மா மந்த்ராக்ஷரத் தடங்கினை போற்றி
ஓம் நின் பூஜையில் மகிழ்மன மருள்தாய் போற்றி

ஓம் நின் பூஜையால் பொற்பாதநிலை யடையருள் போற்றி
ஓம் ராஜ ராஜர் புகழ் ராஜ ராஜேசுவரீ போற்றி
ஓம் ராஜேசுவரீ ஜெயேசுவரீ வாகீசுவரீ போற்றி
ஓம் சண்டி சாமுண்டி ஸ்ரீ ஸரஸ்வதீ போற்றி
ஓம் சங்கரி சண்டமூண்ட விநாசிநீ போற்றி
ஓம் பஞ்சயக்ஞப்ரிய பஞ்சப்ரேதாசனீ போற்றி
ஓம் காளீ ரூபமுடன் மகிழ்வோ டாடினை போற்றி
ஓம் கைகளாடை யிடையினி லணிந்தனை போற்றி
ஓம் ரக்த அலங்காரத்தில் மகிழ்ந்தனை போற்றி

ஓம் பலியினில் பரிவுடை பத்ரகாளீ போற்றி
ஓம் ரக்த வர்ணப்ரிய ரத்னேசுவரீ போற்றி
ஓம் மூன்றரைச் சுற்றுடைக் குடிலை போற்றி
ஓம் இலையாடை யிடையினில் தரித்தனை போற்றி
ஓம் வேடமகள் வேடமும் பூண்டனை போற்றி
ஓம் சிவ வேடனுடனுறை புரிந்தனை போற்றிஓம் நால் வேத நாயகனோ டொளிர்ந்தனை போற்றி

ஓம் பாசுபதாஸ்த்ர மீந்த சிவ பார்வதி போற்றிஓம் சந்த்ர சூரிய தாடங்க மணிந்தனை போற்றி

ஓம் சத்ரு கோப ஸம்ஹார சண்டீ போற்றி

ஓம் கம்பை நதிக்கரை யடைந்தனை போற்றி
ஓம் ஸங்கீத ப்ரியமுடை சியாமளை போற்றி
ஓம் கையினிற் கிளியுடன் நின்றனை போற்றி
ஓம் காம கலாத்வைத தந்த்ரேசுவரீ போற்றி
ஓம் பரம கிருபா சங்கரி பயிரவீ போற்றி
ஓம் பலமுறை பல உருக் கொண்டனை போற்றி
ஓம் பஞ்சபாண நிகேதனத் தமர்ந்தனை போற்றி
ஓம் சமபுத்தி அருளியாள் பராசக்தியே போற்றி
ஓம் ஸ்தூல சரீரமுடைச் சிவையே போற்றி
ஓம் ஸுக்ஷ்ம மந்த்ர மயமாயு மொளிர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீ ஆதி கும்பேசுவர மங்களாம்பிகை போற்றி
ஓம் ஆதியே! பரஞ்சோதியே! குணவாரியே போற்றி
ஓம் மெல்லிய இடையுடைக் குமரியே போற்றி
ஓம் பல நினைவு போக்கியருள் பகவதி போற்றி
ஓம் உனையன்றி வேறொன்று நினையாதருள் போற்றி
ஓம் மந்த்ர தந்த்ர யந்த்ர சக்தியேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீ வித்யா மாமந்த்ர ஸ்ரீ திரிபுர சுந்தரீ போற்றி
ஓம் காஞ்சீ காமகோடி மாபீடமமர்ந்தனை போற்றி
ஓம் மாஹாத்ம்ய முடையதோர் மாகேசுவரீ போற்றி
ஓம் க்ஷீரான்னப்ரியேசுவரீ ஸ்ரீ காமாக்ஷீ போற்றி

பிறந்து, இருந்து, இறவாது அருள்தாய் போற்றி
போற்றி போற்றி போற்றி ஜய ஜய போற்றி!
குண்டலகேசி முன்னுரை!

குண்டலகேசி (குண்டலகேசி விருத்தம்) சமயப்பூசல் அடிப்படையில் தோன்றியது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. தேரி காதையின் 46- ஆம் காதை நூலின் வரலாற்றையும், வைசிக புராணத்தின் 34 ஆம் சருக்கம் கதைத் தலைவியின் வரலாற்றையும் கூறுகின்றன.இக்காப்பியத்தில் 19 செய்யுட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விருத்தப்பா என்பது இந்நூலின் பா வகையாகும். இக்காப்பியத்தின் தலைவி  குண்டலகேசி. இவரது பெயரே நூலுக்கு வைக்கப்பட்டது. சுருண்ட கூந்தலை உடையவள் என்பது குண்டலகேசி என்பதன் பொருளாகும். இவள் இயற்பெயர் பத்திரை. குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போல் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பவுத்தத் துறவியானாள்.
1. கடவுள் வாழ்த்து

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே.

(இதன் பொருள்) முன் தான் பெருமைக்கண் நின்றான் உலகின்கண் பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபேற்று நெறியின்கண் நிற்றற்கு முன்பே தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி; முடிவு எய்துகாறும்-தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை எய்துமளவும்; நன்றே நினைந்தான் பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும் நெறியினையே ஆராய்ந்துணர்ந்தான்; அன்றே- அந்நாளே குணமே மொழிந்தான்- அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே மக்கட்குச் செவியறிவுறுத்தினான்; தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் தான் தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய்; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்- பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன்; அவன் இறைவன்-அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக் கடவுள் ஆவன்; நாங்கள் சரண் ஆதலால் அவ்விறைவன் திருவடிகளுக்கே அடியேங்கள் அடைக்கலமாகி வணங்குவோம் என்பதாம்.

(விளக்கம்) உலகின்கண் முதன் முதலாக மெய்க்காட்சி பெற்று அக்காட்சிவழி நின்றொழுகியவன் எங்கள் புத்தபெருமானே! என்பாள் முன்றான் பெருமைக்கண் நின்றான் என்றாள். பெருமை, ஈண்டுத் துறவொழுக்கம். என்னை?

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு    குறள்-21.

என்பவாகலான். நிற்றலாவது-அவ்வொழுக்கத்திற் பிறழாது ஒழுகுதல். முடிவு-என்றது. பரிநிருவாணத்தை (வீடுபேற்றினை). நன்று-நன்மை தரும் அறம். குணம்-ஈண்டு-நன்மைமேற்று. தனக்கு என்று-தான் இன்புறுதற் பொருட்டு. ஒன்றானும்-யாதொரு பொருளையும்.

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து    குறள், 344.

எனவும் விடல் வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு எனவும் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை எனவும் தலைப்பட்டார் தீரத் துறந்தார் எனவும் ஓதுபவாகலான் தனக்கென்று ஒன்றானும் உள்ளான் எனல் வேண்டிற்று. அன்று ஏ: அசைகள்.

இனி, துறந்தோர் சிலர் காடுபற்றியும் கனவரை பற்றியும் மலை முழைஞ்சு புக்கிருந்தும் தனித் துறைதலும் ஒருவகையாற் றன்னலமே கருதிப் பிறர் நலம் பேணாப் பீழையுடைத்து: எம்மிறைவனோ தான் மெய்யுணர்ந்து நன்றின்கண் நிலைபெற்றுழியும் அவ்வாறு தனித்திராமல் மன்னுயிரின் துன்பமெல்லாம் போக்குதல் வேண்டும் என்னும் பேரருள் காரணமாகப் பெரிதும் முயல்வானாயினன் என்பாள் பிறர்க்கு உறுதிக் குழந்தான் என்றாள் அவன் என்றது அத்தகைய சான்றோனாகிய எங்கள் புத்தபெருமான் என்பது பட நின்றது. அவன் இறைவன், அவன் தான் சரண் என அவன் என்பதனை முன்னுங் கூட்டுக. சரண்-அடைக்கலம். அடைக்கலம் புகுதலாவது அவன் கூறிய அறநெறியிலே உறுதியாக நின்றொழுகுதல். இனி இக் குண்டலகேசிச் செய்யுளை வழிமொழிந்து வருகின்ற நீலகேசிச் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது; அது வருமாறு

ஆதிதான் பெரியனா யறக்கெடு மளவெல்லா
மூதியமே யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன் பொருந்தினா ருயக்கொள்வான்      நீலகேசி, குண்டல, 27

எனவரும்

அவையடக்கம்

2. நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே.

(இதன் பொருள்) நோய்க்கு உற்ற மாந்தர்- பிணிகட்கு உறைவிடமாகப் பொருந்திய மக்கள்; மருந்தின் சுவை நோக்ககில்லார்-அப்பிணிதீர்தற்குக் காரணமான மருந்தினது சுவை இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வாரல்லர், தம் பிணி தீர்தல் ஒன்றே குறிக்கொள்வர்; தீக்கு உற்ற காதல் உடையார்-குளிரால் வருந்தித் தீக்காயும் அவாவுடையோர்; புகைத்தீமை ஓரார்-அத்தீயின் கண்ணதாகிய புகை தமக்குச் செய்யும் தீமையை ஒரு பொருளாகக் கொள்ளார்; போய்க் குற்றம் மூன்றும் அறுத்தான்-அரசவின்பத்தையும் துறந்துபோய் மனமொழி மெய்களால் விளையும் மூவகைக் குற்றங்களையும் அறுத்தவனாகிய புத்ததேவனுடைய; புகழ் கூறுவேற்கு- புகழைப் பாடுகின்ற என்பால்; வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும்-அறியாமை காரணமாக என் வாய்க்கு இயல்பாகவமைந்த சொற்களின் குற்றங்களும்; வழுஅல்ல-அப் புத்தன்பால் அன்புடையாராய் அவனறங் கொண்டுய்யவெண்ணும் சான்றோருக்குக் குற்றங்களாகமாட்டா; என்பதாம்.

(விளக்கம்) நோயக்குற்றமுடைய மாந்தர் எனினுமாம் நோயுடையோர் தம் நோய்தீரக் கருதுவதல்லது அந்நோயின் தீர்வு கருதித் தாமுண்ணும் மருந்து இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வதிலர். எனவே, பிறவிப் பிணிக்கு மருந்தாகிய புத்த தேவருடைய அறத்தையே கூறுகின்ற எமது நூலின்கண் அவ்வறத்தையே நோக்குவதல்லது என் அறியாமை காரணமாகவுண்டாகிய குற்றங்களை நோக்கி இந்நூல் இகழ்வாரல்லர் ஆதலால் யானுமிந்நூலைச் செய்யத் துணிந்தேன் என்பது கருத்து. தீக் குற்ற காதல்..............ஓரார் என்பதற்கும் இங்ஙனம் கூறிக்கொள்க.

தீக்குற்ற காதலுடையார் என்றது குளிரால் வருந்தித் தீக்காய அவாவு வோரை. புகைத்தீமை-புகையாலுண்டாகுந் துன்பம். அவை மூச்சு முட்டுதல்: கண்கரித்தல் முதலியன.

போய் என்றது அரசவின்பத்தைத் துறந்துபோய் என்றவாறு.

மூன்று குற்றம்- மெய் மொழி மனம் என்னும் மூன்றிடத்தும் தோன்றுகின்ற மூவகைக் குற்றங்கள் இவற்றுள் மெய்யிற்றோன்றுங் குற்றங்கள் கொலை களவு காமம் என்பன. மொழியிற்றோன்றுவன பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பன. மனத்திற்றோன்றுவன- வெஃகல் வெகுளல், பொல்லாக் காட்சி என்பனவாம். என்னை?

தீவினை, என்பது யாதென வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையோ வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
உள்ளத் தன்னில் உறுப்பன மூன்றும்

எனவரும் மணிமேகலையானும் உணர்க

இனிக் குற்றம் மூன்றும் என்பதற்கு காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் எனினுமாம். என்னை?

யாமே லுரைத்த பொருள்கட் கெல்லாம்
காமம் வெகுளி மயக்கங் காரணம்   மணி, 30-5-12

எனப் பௌத்தநூல் கூறுதலும் காண்க. இனி, திருவள்ளுவனாரும்

காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்    குறள், 340

என்றோதுதலும் காண்க.

இனி மூன்று குற்றம் என்பதற்குப் பௌத்தர் துறவோர்க்கு மட்டுமே உரிய குற்றங்களாகக் கூறுகின்ற அவாவும் பற்றும் பேதைமையும் ஆகிய மூன்றும் எனினுமாம். என்னை?

குலவிய குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை              மணி,30-169-70

என்றும் ஓதுபவாகலான்

இது பேதைமை முதல் பன்னிரண்டாக விரித்துக் கூறியதனை மூன்றாகத் தொகுத்தோதியபடியாம். இவற்றை ஆசிரவம் என்றும் கூறுப என் வாய்க்குற்ற சொல்லின் வழு என்றது, அறியாமை காரணமாக இயல்பாகவே என் வாய்க்குப் பொருந்திய சொற்குற்றம் என்றவாறு (2)

மனந்தூயோர்க்கே இன்பமுளவாகும் எனல்

3. வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.

(இதன் பொருள்) மாண்டவய நாவாய்- மாண்புடைய வலிமைமிக்க மரக்கலங்கள்; வாயுவினை நோக்கி உள- தமது இயக்கத்திற்குக் காற்றினையே பெரிதும் அவாவியிருப்பனவாகும்; வாழ்கை உயிர்களின் வாழ்வு தானும்; ஆயுவினை நோக்கி உள- தமக்கென ஊழ் வகுத்த அகவையையே குறிக்கொண்டிருப்பனவாம்; அது போல்- அங்ஙனமே; துப்புரவும் எல்லாம்- பொறிகளானுகரப்படும் நுகர்ச்சிகளும் பிறவுமாகிய நன்மைகளெல்லாம்; தீயவினை நோக்கும்- தீவினையே நயந்து நோக்கும் நோக்கமும்; இயல் சிந்தனையும்-அத் தீவினை செய்தற்குரிய நெறிகளிலே செல்கின்ற நினைவும்; இல்லாத் தூயவனை- தன்பாற் சிறிதுமில்லாத தூய்மையுடைய சான்றோனையே; நோக்கி உள-தாம் எய்துதற்குரிய இடமாக எதிர்பார்த்திருப்பனவாம் என்பதாம்.

(விளக்கம்) மரக்கலங்கள் தமக்கு ஆதாரமாகக் காற்றை எதிர்பார்த்திருப்பது போலவும், உயிரினங்களின் வாழ்வுகளெல்லாம் தத்தமக்கு ஊழ்வரைந்துள்ள வாழ்நாளையே ஆதாரமாகக் குறிக்கொண்டிருப்பது போலவும் இவ்வுலகத்துள்ள இன்பங்களும் புகழ்களும் தீவினை செய்தற்கண் ஆர்வமும் அவ்வழியியங்கும் எண்ணங்களும் சிறிதுமின்றி மனந்தூயனாகிய நல்லோனையே தமக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளன என்றவாறு.

எனவே மனந்தூயரல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பமும் பிற நலங்களும் உளவாகா என்பது கருத்தாயிற்று. ஆகவே இம்மை யின்பங்களையும் புகழ் முதலியவற்றையும் விரும்புவோர் மனநலம் உடையராகவே அவை யெல்லாந் தாமே வந்தெய்தும். மனத்தூயரல்லார்க்கு இவைகள் எய்தா; ஆதலின் மனந்தூயராய்த் தீவினையை எஞ்ஞான்றும் அஞ்சவேண்டும் என்றறிவுறுத்தவாறாயிற்று, இதனோடு,

மனத்தூயார்க் கெச்ச நன்றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை     -குறள், 456

எனவும்,

மனநலம் மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்

எனவும்

மனநலத்தின் ஆகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து    -குறள், 459

எனவும், வரும் அருமைத் திருக்குறள் களையும்,

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து- மெய்யில்
புலமைந்துங் காத்து மனமா சகற்று
நலமன்றே நல்லா றெனல்    -நீதிநெறி விளக்கம், 60

எனவும்

மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும்-எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தினவர்
-நீதிநெறி விளக்கம், 58

எனவும் வரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. (3)

மெய்த்தவம்

4. போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்
வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.

(இதன் பொருள்) உடை போர்த்தல்-காவி ஆடை முதலியவற்றால் உடம்பினைப் போர்த்துக் கோடலும்; நீக்குதல்-ஆடையுடாது விட்டுவிடுதலும்; பொடித் துகள் மெய்பூசல்- சாம்பல் முதலியவற்றை உடல் நிரம்பப் பூசிக்கோடலும்; கூர்த்த பனி குளித்து ஆற்றுதல்- மிக்க பனியினும் (மழையினும்) நீருட் குளிர்ந்து நின்று அவற்றாலுண்டாகும் துன்பங்களைப் பொறுத்துக் கோடலும்; அழலுள் நிற்றல்-கோடையின்கண் தீயினுள் நிற்றலும்; சார்த்தர் இடு பிச்சையர் ஆதல்- தம் சமயத்தைச் சார்ந்துள்ள இல்லறத்தாரிடுங்கின்ற பிச்சையை ஏற்றுண்டு திரிதலும்; சடைத்தலையார் ஆதல் சடை வளர்த்துக் கட்டிய தலையினையுடைராதலும்(அன்றி மழிந்த தலையையுடையராதலும்) இவை வார்த்தை இன்னோரன்ன செயலெல்லாம் வறிய சொல்லளவே யன்றித் தவவொழுக்க மாகமாட்டா; செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்-இனி வாய்மையாகச் செய்கின்ற தவவொழுக்கம் யாதெனின் மனம் பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுகும் ஒழுக்கமேயாம் என்று கூறினான்; என்பதாம்.

(விளக்கம்) உடை போர்த்தல்-காவியாடை துவராடை முதலியவற்றால் உடம்பு முழுதும் போர்த்தல்.காவியாடை போர்ப்பவர் வேதவாதியர் துவாரடை போர்ப்போர் பௌத்தர். பல்வேறு சமயங்களும் அடங்குதற்கு உடை போர்த்தல் எனப் பொதுவினோதினர். பொடியும் துகளும் என உம்மை விரித்துப் பொடி பூசுவோர் சைவசமயத்தினர் என்றும், துகள் பூசுவோர் வைணவ சமயத்தினர் என்றுங் கொள்ளலாம். ஈண்டுத் துகள்:மண்ணும், சூரணமும் என்க. கூர்த்தல்- மிகுதல். பனி கூறியதனால் மழையும் கொள்க. சடை  கூறியதனால் மழித்தலும் கொள்க. பிச்சை கூறியதனால் கிழங்கு தழை காய் கனி சருகு முதலியன உண்ணலும் கொள்க. வார்த்தை ஈண்டுப் பொய்õய புகழ் எனபது பட நின்றது.

இனி, இதனோடு

வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
ஓடு கோடலு டுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே    சீவக, 1427

எனவும்,

ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந் துணிகுவம்     சீவக, 1428

எனவும்,

தூங்குறிக் கிடந்து காயும் பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைகள் என்றார் பகவனா ரெங்கட் கென்னின்
ஓங்குநீண் மரத்திற் றூங்கு மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப் பழவினை பரியு மன்றே     சீவக, 1429

எனவும்,

அல்லியும் புல்லும் உண்டாங் காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்புத் துணியும்வெவ் வினைக ளென்னிற்

எனவும்,

நீட்டிய சடைய மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான்,சீவக, 1431

எனவும் வரும் சீவகன் மொழிகளும்

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்    குறள், 280

எனவும்,

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்    குறள், 278

எனவும்,

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து     குறள், 277

எனவும் வரும் திருவள்ளுவர் பொன்மொழிகளும்,

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே- கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது    நீதிநெறி விளக்கம், 93

எனவருங் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் ஒப்புநோக்கற் பாலன   (4)

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனில்

5. வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்
புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்
அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!

(இதன் பொருள்) வகை எழில் தோள்கள் என்றும்-இலக்கண வகுப்பிற்கியைந்த தோள்கள் இவனுடைய தோள்கள் என்றும்; மணி நிறம் குஞ்சி என்றும்-இவனுடைய மயிர்க்குடுமி நீல மணியினது நிறம் போன்ற நிறமுடைய புகழ் உண்டாகும்படி பலபடப் பாரித்துக் கூறுதற்குக் காரணமான; பொருள் இல் காமத்தை வாய்மையினோக்குவார்க்கு ஒரு சிறிதும் பொருள் இல்லாததாகிய காமவின்பங்களை; மற்று ஓர் தொகை எழும் காதல் தன்னால்-ஒரு தொகுதியாகத் தம்பால் தோன்றுகின்ற காமக் கிளிர்ச்சியாலே; துய்த்து-(அவற்றையெல்லாம் எய்தி) நுகர்ந்து; யாம் துடைத்தும் என்பார்-அக் காமக்குணத்தை அழிக்கக் கடவேம் என்று ஒரு சிலர் கூறாநிற்பர், அங்ஙனம் கூறுவது மடமையேயாம்; என்னை? அகை அழல் அழுவந்தன்னை- எரிகின்ற தீப் பற்றிக்கொண்ட காட்டினை; நெய்யினால் அவிக்கலாமோ- நெய் பெய்து அவித்தல் சாலுமோ? என்பதாம்.

(விளக்கம்) அவாவினை நுகர்ந்து அவித்தல் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இவர் கூற்று நெய்யினால் எரி நுதுப்பேம் என்பார் கூற்றுப்போலப் பேதைமையுடைத் தென்றவாறு.

என்பினை நரம்பிற் பின்னி உதிரந்தோய்த்து இறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர் பொலிய வேய்ந்திட்டு,ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில் குரம்பை என இவ்வுடம்பினியல்பினை உள்ள படியே உணராமல் காமத்தான் மதிமயங்கி வகை எழிற்றோள்கள் என்றும், மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக்கின்ற என்றாள். இங்ஙனம் விகற்பித்தற்குக் காமமே காரணமாகலின் விகற்பிக்கின்ற காமம் என்றாள்; காமம்- காமவின்பம். காதல்-காமக் கிளர்ச்சி. அகைதல்-எரிதல். அழுவம்-காடு.

அவிக்கலாமோ என்னும் வினா அவிக்கவொண்ணாது என்னும் அதன் எதிர்மறைப் பொருளை வற்புறத்தி நின்றது. காமத்தை நுகர்ச்சியால் அவித்தல் கூடாது. நுகர்தற்குரிய பொருள்களின் பொல்லாங்கனை இடையறாது நினைந்து காணுமாற்றால் அவற்றின் இழிதகவுணரின் அவற்றின்பாற் செல்லும் அவா அறம் என்பது பௌத்தர் கொள்கை. இதனை, அசுபபாவனை என்பர். அஃதாமாறு:- துறவியானவன் உடம்பானது பலவகை இழித்த பொருளால் ஆக்கப்பட்டதென்றும், சாணியின் குவியலில் தோன்றி வளரும் புழுக்கள்போல் கருப்பையிலுண்டாகின்றதென்றும், மலங்கழிக்குமிடம் போல் வாலாமையின் உறைவிடமாயிருப்பதென்றும், அருவருப்பான அழுக்கின் கசிவுகள் இதன்கண் அமைந்த ஒன்பது வாயிலினும் இடையறாது பெருகுகின்றன என்றும், அங்கணம்போலே வெறுத்தற்குரிய தீ நாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும் மறவாது நினைத்திருத்தல் என்ப. இவ்வாறு, இவ்வுடம்பின் இழிதகவினை நினைவூட்டுமிடங்கள்  மணிமேகலையிற் பலவிடங்களினும் காணப்படுதலும் நினைக.

இனி, இவ்வுடம்பின் அகவை நாளும் மிகமிகக் குறுகியது என்று நினைதலும் இதன்பாற்படும் என்க.

அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
               மணி, 20-254-55

என்பதுமது       (5)

இதுவுமது

6. அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார்.

(இதன் பொருள்) அனல் என நினைப்பிற் பொத்தி- நொய்ய விறகினில் தீக்கதுவுமாறுபோல நினைவின்கண் கதுவிக்கொண்டு; அகந்தலைக் கொண்ட காமக் கனலினை- நெஞ்சத்தை யிடமாகக்கொண்டு வளர்கின்ற காமமாகிய பெரு நெருப்பை; உவர்ப்பு என்னும் நீரால்- வெறுப்பு என்னும் நீர் பெய்து; கடையற அவித்தும் என்னார்- எச்சமின்றி அவித்துவிடுவேம் என்று கருதாராய்; நினைவிலாப் புணர்ச்சிதன்னால் நீக்குதும் என்று நிற்பார்- நினைவிழந்து அதுவேயாகி அழுந்துதற்குக் காரணமான புணர்ச்சியினாலேயே அக் காமத்தை அகற்றுவேம் என்று முனைந்து நிற்கின்றார் மடவோர்;புனலினைப் புனலினாலே யாவர் போகாமை  வைப்பார்- மிக்குப் பெருகுகின்ற வெள்ளத்தை மற்றுமொரு வெள்ளத்தாலே அணையிட்டுத் தடுத்துவைக்கும் ஆற்றலுடையோர் யாவரே உளர் என்பதாம்.

(விளக்கம்) பொத்துதல்-மூடிக்கோடல். அகம்-நெஞ்சு. உவர்ப்பு நீர்: பண்புத்தொகை. உவர்ப்பு- வெறுப்பு.

காமத்தீ மெய்யுணர்வால் அவிவதன்றி நுகர்ச்சியால் அவியாது என்பதனையும், காமத்தாற் கதுவப்பட்டார் அதனிடத்தே அழுந்தி உலகினையே மறப்பர் என்பதனையும்,

சிற்றிடைச் சீதையென்னு நாமுஞ் சிந்தை தானும்
உற்றிரண் டொன்றா நின்றா லொன்றொழித் தொன்றை யுன்ன
மற்றொரு மனமு முண்டோ மறக்கலாம் வழிமற் றியாதோ
கற்றவர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்க லாமோ

எனவரும் கம்பநாடர் மொழியானும் உணர்க. (6)

யாக்கை நிலையாமை

7. போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்.

(இதன் பொருள்) போதர உயிர்த்த ஆவி-உடம்பினின்றும் வெளியேறுவதற்கு விடுகின்ற மூச்சானது; புக உயிர்க்கின்றதேனும்- மீண்டும் காற்று உட்புகுந்தற் பொருட்டே விடப்படுகின்றதாயினும்; உணர்வினான் மிக்க நீரார் ஊதியம் என்று கொள்வர்-அங்ஙனம் அக்காற்று மீண்டும் உட்புகுவதனை மெய்யுணர்வினின் மிக்க பெரியோர் ஒரு பேறாகவே கருதாநிற்பர்; ஆதலால் அழிதன்மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா-அங்ஙனமாதலால் அழியுமியல்புடைய உடம்பு முதலியவற்றின் அழிவிற்கு நெஞ்சழிந்து வருந்துதல் வேண்டா; காதலால் அழுதும் என்பார்-இவ்வுடம்பின் கண் பற்றுடைமையாலே அதன் அழிவிற்கு ஆற்றாது அழுவேம் என்று கருதுபவர்; கண் நனி களையல் உற்றார்- தம் கண்களை வாளா வருத்துபவரே யாவர் என்பதாம்.

(விளக்கம்) வெளியேறிய மூச்சு மீண்டும் உட்புகாமற் போயே விடுதலும் கூடும். ஆதலால் மெய்யுணர்வுடையோர் தாம் உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சும் தமக்கு ஊதியமாகவே கருதுகன்றனர். அத்துணை நிலையாமையுடையது இவ்வுடம்பு. இதன் அழிவுக்கு வருந்துதல் வேண்டா. இதன் அழிவு கருதி அழுபவர் வீணே தம்மை வருத்துபவரே யாவர் என்றவாறு.

சான்றோர் உயிர்கும் மூச்சு உட்புகுவதனை ஊதியமாகக் கருதற்குக் காரணம் பின்னும் பிழைத்திருந்து அதனாலாய பயன் கோடல் கருதியேயாம். பின்னும் வாழ்வேம் என்னும் அவாவாலன்று என்க.

இனி இச்செய்யுளோடு,

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை    குறள், 331

எனவும்,

நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு     குறள், 336

எனவும்,

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு     குறள், 338

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களும்,

சாதலும் பிறந்த றானுந் தம்வினைப் பயத்தி னாகும்
ஆதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்

எனவும்,

பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண் முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு கண்டாய்

எனவும்,

அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்

எனவும்,

அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்

எனவும்,

மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார்

எனவும்,

இளமையின் மூப்புஞ் செல்வத்
திடும்பையும் புணர்ச்சிப் போதிற்
கிளைநரிற் பிரிவு நோயில்
காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
கண்ணிமைப் பளவு மென்றாள்

எனவும் வரும் சீவக சிந்தாமணி செய்யுள்களும் ஒப்புநோக்கியின்புறுக

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்- நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று        நீதிநெறி விளக்கம், 6

என்பது குமரகுருபரவடிகளார் திருமொழி               (7)

கூற்றுவன் கொடுமை

8. அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.

(இதன் பொருள்) அரவு இனம்- கொடிய நச்சுப் பாம்பினங்களும் அரக்கர்- இரக்கமென்றொரு பொருளிலாத அரக்கரும்; ஆளியாளி முதலிய வல்விலங்குகளும்; சிறிது தம்மை மருவினால் தீய ஆகா- சிறிது காலம் தம்மோடு யாரும் பழகுமிடத்தே அவர்பால் அன்புடையவாய்த் தீமை செய்வன ஆகாவாம்; வரம்பு இல் காலத்துள் என்றும்- எல்லையில்லாததாய் இறந்தகாலத்திலெல்லாம் நாள்தோறும்; பிரிவு இலம் ஆகி- தன்னோடு பிரிதலிலமாய்; தன்சொற் பேணி ஒழுகும் நங்கட்கு- தன் கட்டளையை மேற்கொண்டு ஒழுகிவருகின்ற மாந்தராகிய நம்பொருட்டு; ஒருபொழுது இரங்கமாட்டா- ஒருசிறிது பொழுதேனும் இரங்குமியல்பில்லாத, கூற்றின்- கூற்றுவனுக்குத் தப்பி; உய்தும் என்பார்- யாங்கள் உய்ந்திருக்கவல்லேம் என்று கூறவல்லார்; யார்- யாவரேயுளர்; ஒருவருமிலர் என்பதாம்.

(விளக்கம்) அரவினம் அரக்கர் ஆளி எனத் திணைவிரவி வந்தது, மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது.

அரவினம் முதலியன கொல்லும் தொழிலினையுடையன வாயினும் தம்மோடு சிறிதுகாலம் பழகுவோர்பால் அன்புகொண்டு அவரைக் கொல்லாமல் விடுதலுமுண்டு. கூற்றுவனோடு யாம் எல்லையற்ற காலமெல்லாம் கூடியிருப்பேமாயினும் அவன் நம்பால் சிறிதும் இரக்கம் கொள்வானலன். ஆதலால் அவனுக்குத் தப்பி உயிர்வாழ்வோர்யாருமிலர் என்றவாறு.

கூற்றுவன் கணம் கணமாக நம்மகவை நாளை நம்மோடிருந்துண்கின்றான் ஆதலால், வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலமாகி என்றார். அவன் சொற் பேணுதலாவது, அவன் கட்டளைப்படி கணந்தோறு மிறந்திறந்து வருதல். சிறிதேனும் இரங்குதலிலன் என்பாள். ஒருபொழுது இரங்கமாட்டாக் கூற்று என்றாள். உய்துமென்பார் யார்? என்னும் வினா ஒருவருமிலர் என்பது பட நின்றது. இனி, இதனோடு.

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ

எனவரும் மணமேகலைப் பகதியும்,

கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத் தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும்
நோற்றவன் வலையை நீக்கி நுகர்ச்சியி லுலக நோக்கி
ஆற்றுறப் போத றேற்றா மளியமோஒ பெரிய மேகாண்

எனவரும் சிந்தாமணிச் செய்யுளும்,ஒப்ப நோக்குக.          (8)

இதுவுமது

9. பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!

(இதன் பொருள்) பாளை ஆம் தன்மை செத்தும்-யாம் நம் முடைய உடம்பு நந் தாய்மாரின் வயிற்றின்கண் கருவாகியிருந்த நிலைமையிலிருந்து இறந்தும்; பாலன் ஆம் தன்மை செத்தும்- பின்னர் எய்திய குழவிப் பருவம் இறந்தும்; காளை ஆம் தன்மை செத்தும்- அப்பருவத்தின் பின் வந்தெய்திய காளைப்பருவம் இறந்தும் காமுறும் இளமை செத்தும்-அதன்பின்னர் வந்ததும் காமுற்று மகளிரை மருவுதற் கியன்றதும் ஆகிய இளமைப் பருவமும் இறந்தும் வந்துள்ளோம்; மீளும் இவ்வியல்பும்-இவ்வாறு மீண்டு மீண்டும் இறக்கின்ற இந்த இயல்பினையே; இன்னே மேல் வரும் மூப்பும் ஆகி- இப்பொழுதே இதற்கு மேலே வருகின்ற முதுமைப் பருவமும் எய்தாநிற்ப; நாளும் நாள் சாகின்றாமால்-இவ்வாறே யாம் ஒவ்வொரு நாளும் இறப்பினை எய்துகின்றோ மல்லமோ?; நமக்கு நாம் அழாதது என்னோ? பிறர் சாகின்றதற்கு அழுகின்ற யாம் நமது சாவிற்கு நாமே அழாததற்குக் காரணந்தான் என்னையோ? என்பதாம்.

(விளக்கம்) யாம் நஞ்சுற்றத்தார் இறந்துழிக் கண்கனிந்து அழுகின்றோம்; ஆனால் யாமோ யாம் கருவிருந்த பருவத்தினின்றும் இறந்தோம். பின்வந்த குழவிப் பருவத்தினின்று மிறந்தொழிந்தோம். அதன் பின்வந்த காளைப் பருவத்தினின்றும் இறந்தோம். அதன்பின்னர் மகளிரைக் காமுற்றக் களிக்குமத் தனியளம்பருவத்தினின்றும் இறந்தொழிந்தோம். இப்போது வந்தெய்துகின்ற இம் மூப்புப் பருவத்தினின்றும் இறத்தல் ஒருதலை. இவ்வாறு நாள்தோறு மிறக்கின்ற நாம் நமது இறப்பிற்கு அழாமைக்குக் காரணம் யாதோ? என்றவாறு.   (9)

இதுவுமது

10. கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!

(இதன் பொருள்) கோள்வலைப்பட்டு-பகைவரால் சிறையாகப் பிடிக்கப்பட்டு; கொலைக்களம் குறித்துச் சென்றே- கொலைக்களத்திற் கொடுபோய்க் கொல்லுதலைக் குறித்துச் சென்று; மீளினும் மீளக்காண்டும்- ஒரே வழிக் கொலையுண்ணாமல் மீண்டு வருபவரையும் யாம் காணலாம்; மீட்சி ஒன்றானும் இல்லா-ஆனால் எவ்வாற்றானும் மீள்வதென்பது இல்லாத; நம் உயிர் பருகும் கூற்றின் நாள் அடியிடுதல் தோன்றும்- நம்முடைய உயிரைக் குடித்தொழிதற்குக் கால்கோள் செய்தல் தோன்றாநின்ற; வாளின் வாய்- நாளாகிய அவ் வாளின்கண்; தலை வைப்பாக்கு- நமது தலையை வைத்தற்கு; செல்கின்றோம்-யாம் நாடோறும் செல்வதல்லது; வாழ்கின்றோமோ- யாம் வாய்மையாக வாழ்கின்றோமில்லை என்பதாம்.

(விளக்கம்) யாம் நாள்தோறும் நாள்கள் வருதல் கண்டு அறியாமையால் வாழ்கின்றோமென்று மகிழ்கின்றோம் ஆராய்ந்து பார்க்குமிடத்து யாம் ஒருநாளும் வாழுகின்றோமில்லை. நாள்தோறும் நமது வாழ்நாளை ஈர்கின்ற கூற்றுவன் வாளின்கண் நமது தலையை வைப்பது நன்கு விளங்கும் என்பதாம். ஈண்டு,

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்     குறள், 334

என்னுந் திருக்குறளை நினைவு கூர்க   (10)

யாக்கையின் இழிதகைமை

11. நன்கணம் நாறும் இது என்று இவ் உடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும் உள் நின்று அழுக்குச் சொரியத்
தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின்
இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகை யாற்கொள்ள லாமே.

(இதன் பொருள்) இது நன்கனம் நாறும் என்று-இது நன்றாக நறுமணம் கமழ்கின்றது என்று பாராட்டி; இவ்வுடம்பு நயக்கின்றது ஆயின்- இந்த உடம்பு நம்மாற் பெரிதும் விரும்பப்படுமானால்; ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்குச் சொரிய- மற்றிவ்வுடம்பே அதன்கண் அமைந்த கண் முதலிய ஒன்பது தொளைகளின் வழிகளானும்; அதனகத்தினின்றும் தீ நாற்றமிக்க அழுக்குகள் ஒழுகா நிற்பவும்; தின்பது ஓர் நாயும்-அதனைத் தின்னுமியல்புடைய நாய்கள்; தீசைதொறும் இழுப்ப- தம்முள்கலாம் கொண்டு வாயாற் கௌவி நாற்றிசைகளினும் இழுத்தலாலே; சீ பில்கு போழ்தின்-இவ்விடம்பினின்றும் சீழ் வடிகின்ற பொழுது; இதன்கண் இன்ப நல் நாற்றம் எவ்வகையால் கொள்ளலாம்-இவ்வுடம்பின்கண் மனமின்புறுதற்குக் காரணமான நறுமணத்தை எவ்வாற்றால் யாம் எய்துதல் கூடும்? கூறுமின்! என்பதாம்.

(விளக்கம்) இவ்வுடம்பு இயற்கையாகவே அருவருக்கத்தக்க தீ நாற்றம் உடையதேயாம் இதன்கண் செயற்கையாலுண்டாகிய நறுமணத்தை அதன் மணிமாகவே கருதி அறிவிலிகளாற் பாராட்டப்படுகின்றது அதனியற்கை தீ நாற்றமே என்பதனை அதன்கண் அமைந்த ஒன்பது தொளைகளும் சொரிகின்ற அழுக்காலும் உயிர் போயவழி நாய் முதலியன பற்றி யிழுக்க அவ்வுடம்பினின்றும் ஒழுகும் சீ முதலியவற்றாலும் உணரலாம். ஆதலால் இவ்வுடம்பு விரும்பத்தகுந்த சிறப்பொன்று மில்லாதது என்பதாம்.
இதனோடு,
எழுகு றும்பி பெருகு காதை வள்ளையென்ப ரிகழ்கரும்
புழுவ டர்ந்õ குழலி ருண்ட புயல தென்பர் பூளைநீ
ரொழுகு கண்கள் குவளையென்பர் தரளமென்ப ருயிரொடும்
பழுது றும்பல் லென்பை யின்ன பகர்வ தென்ன பாவமே
எனவும்,
எச்சி றங்கு வாய்வி ளிம்பு பவளமென்ப ரெழுமிரண்
டச்சி லந்தி கொங்கை யானை யாகு மென்ப ரதுபெருங்
கச்சி லங்கி ருந்து மாவி கவரு கின்ற தென்பராற்
பிச்சி லங்க வர்க்கு நேர்பி ராந்தர் யாவர் பேசிலே
எனவும்,
நாசி யூறல் கோழை யெச்சி னாறு மாமு கத்தையே
மாசு றாத பூர்ண சந்த்ர வட்ட மென்ப ரொட்டுவைத்
தேசு றாந ரம்பி னைக்கொ டென்பு கட்ட மைத்ததோள்
வீச வீச நெஞ்ச ழிந்து வேணு வென்பர் காணுமே
எனவும்,
குடர்ந ரம்பு தசைவ ழும்பு குருதி யென்பு சுக்கில
முடைகி டந்த பொந்தின் மேலொர் தோல்வி ரித்து மூடியே
யடர்வு றும்பஃ றுளைக டோறு மருவ ருப்ப றாமலம்
படர்தல் கண்டு மதனை யேகொன் மகளி ரென்று பகர்வதே
எனவும்,
கூராரும் வேல்டவிழியார் கோலாக லங்களெல்லாந்
தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கரும
மாராய் பவருக் கருவருப்ப தாய்விடுமே
எனவும்
வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீல நறுங்குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே
எனவும்,
கிட்டா தகன்மின் கிடப்பதிதிற் பொல்லாங்கென்
றிட்டா ரலரே லிலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ
எனவும்,
வீசியதுர்க் கந்தம் வெளிப்படுந்தம் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியா ரங்கமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ
எனவும்,
மாற்றரிய தம்மூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றே னாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொம்புளித்துப் பாகுசுரு
டீற்றுவது மென்குதலை தீர்க்கு மருந்தென்றோ
எனவும்,
பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயவங்கள் மற்றவைக்கு மேற்குவண்ணம்
கட்டாணி முத்தங் கனகமணிப் பூடணங்க
ளிட்டா லலதவருக் கென்னோ வியலழகே

மெய்ஞ்ஞான விளக்கம், 10-19

எனவும் வரும் செய்யுள்கள் ஒப்புநோக்கற்பாலன    (11)

இதுவுமது

12. மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்கு எழு என்றும்
தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!

(இதன் பொருள்) மாறுகொள் மந்தரம் என்று- ஒன்றனோடு ஒன்று வலமிடமாக மாறுபட்டிருக்கின்ற இரண்டு மந்திரமலைகளே இவைகள் என்றும்; மரகத வீங்கு எழு என்றும்-பருத்த மரகத மணியாலியன்ற தூண்களே இவைகள் என்றும்; தேறிட- கேட்போர் உணரும்படி; தோள்கள் திறத்தே- ஆடவர்களுடைய தோள்களைக் குறித்து; திறத்துளிக் காமுற்றது ஆயின்- மகளிர் முறையே அவாவுவதானால்; பாறொடு நாய்கள் அசிப்ப- பருந்துகளும் நாய்களும் இவையிற்றை இரையாகத் தின்னுதற் பொருட்டு; பறிப்பறிப் ஏறிய இத்தசைதன் மாட்டு-பருத்துத்திரண்ட இந்த வறுந்தசையின் கண்; இங்கு இன்புறல் ஆவது என்னோ-இவ்வுலகத்து அம்மகளிர் இன்புறுதற்கியன்ற பண்பு யாதோ? கூறுமின் என்பதாம்.

(விளக்கம்) இஃது ஆடவர்பாற் காமங்கொண்டு வருந்தும் மகளிர்க்குக் கூறியபடியாம். ஆடவர் உறுப்புக்களுள் வைத்து மகளிர் நெஞ்சைப் பெரிதும் கவர்வது அவர்தம் தோள்களேயாம். ஆதலால் அத் தோள்களேயாம் கூறினர். மகளிரை ஆடவர் தோள்களே பெரிதும் கவரும் இயல்புடையன எனபதனை,

நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை
ஆக்கிய மதுகையான் றோளி லாழ்ந்தன
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங் கனையவ டனத்திற் றைத்தவே   மிதிலைக், 36

எனவரும் இராமவதாரத்தானும் உணர்க.

வலத்தோளும் இடத்தோளுமாய் வேறுபட்டிருத்தலின் மாறுகொள் மந்தரம்- மந்தரமலை மரகதம்-ஒரு மணி; மரகதத்தாலியன்ற எழு. வீங்கெழு என்று தனித்தனி கொள்க. எழு-தூண். பாறு-கழுகுமாம்: உளி ஏழாவதன் சொல்லுருபு. பறிப்பறி- பிடுங்கிப் பிடுங்கி என்றவாறு. பறித்தல்- பிவுங்குதல். என்னோ என்னும் வினா ஒன்று மில்லை என்பது படநின்றது              (12)

இதுவுமது

13. உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ !

(இதன் பொருள்) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை- கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை முதலிய உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஒருடம்பாக இருந்த இந்தத் தோலாலியின்ற பெரிய பையானது; மறைப்பில்- மேலே தோல் போர்த்துள்ள மறைப்பினாலே; விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல்- நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி நம்மை மயக்கு மியல்புடையதென்னின்; உறுப்புக் குறைத்தனபோல- மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித் தன்னுறுப்புக்கள் துணிக்கப்பட்டன போல்வனவாக; அழுகிக் குறைந்து குறைந்து சொரிய -அழுகி நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப; வெறுப்பிற் கிடந்த பொழுதின்- கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக் கிடந்த காலத்து; வேண்டப் படுவதும் உண்டோ- இவ்வுடம்பின்கண் யாம் அவாவுதற்கியன்ற தன்மையும் உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.

(விளக்கம்) உறுப்பு, கண் முதலிய புறுவுறுப்புக்களும் குடர் முதலிய உள்ளுறுப்புக்களும். தோலாற் போர்த்து மறைக்கப்பட்டடிருத்தலால் இது விழைவிற்குச் சார்வாய் மயக்குவது; அங்ஙனம் போர்க்கப் படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம் என்பாள்; மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது என்றாள் அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக் குறைந்து குறைந்து சொரியக் கிடந்த பொழுதின் இதன்கண் மயக்குவதற்குரிய தன்மை சிறிதும் இல்லையாம் என்றவாறு.

என்புந் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவின் பிண்டம்

என்றார் மணிமேகலையினும். இன்னும், இவ்வுடம்பியல்பினை

காலி ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
பாலி ணக்கிமு கட்கு மேல்வளை யடர்ந்த ரம்பெனு மாக்கையாற்
கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே

வந்து போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும்(அவித்தியா-13-14)

எனபினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான்

எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும்(1577) அறிவுறுத்துதலையும் ஈண்டு நினைக.              (13)

இதுவுமது

14. எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ!

(இதன் பொருள்) பாவி- தீவினையாளனே!; எனது எனச் சிந்தித்தலால்- என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்கிடனாயிருத்தலாலே; இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்-இந்த உடம்பு யான் இன்புறுதற்குரியதாகும் என்பாயாயின்; இஃது உன்னுடையதாதல் தான் எங்ஙனம்? தினைப்பெய்த புன்கத்தைப் போல- தினையரிசி பெய்து சமைக்கப்பட்ட சோறு போன்று; சிறியவும் மூத்தவும் ஆகி-உருவத்தாற் சிறியனவும் பெரியனவுமாய்; நுனைய- கூர்ந்த வாயினையுடையனவாகிய; புழுக்குலந்தம்மால்- புழுக் கூட்டங்களாலே; நுகரவும் வாழவும் பட்ட- தம்முடையதாகவே கொண்டு உண்ணவும் உறையுளாகக் கொண்டு வாழவும் படுகின்ற; இனைய உடம்பினை-இத் தன்மையான இந்த உடம்பினை யான் என்று என்னால் ஆமோ-யான் என்றாதல் என்னுடையது என்றாதல் கூறுதல் கூடுமோ? கூடாதுகாண் என்பதாம்.

(விளக்கம்) தினையரிசியாலாய சோறு உடலிலுண்டாகும் சிறியவும் பெரியவும் ஆகிய புழுக்களுக்குவமை. புன்கம்- சோறு.

இதனை,

நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்    புறநானூறு,

எனவரும் செய்யுளினும் காண்க.

இந்த வுடலை யாம் எனதென்று கொள்வேம், இதன்கண் வாழுகின்ற புழுக்குலங்களும் தமதாகவே கொண்டு இதனை உண்டு இதனிடத்தேயே வாழ்கின்றன, ஆதலால் இத்தகைய வுடம்பினை யான் எனது என்று யாம் உரிமை கோடல் பேதைமையேயாம் என்றவாறு.

இன்னும்,

சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ
டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே
யுடன்மீதிவ் வுடல்போலு திக்கின்ற புழுவைத்
திடமான மகவென்று சீராட லென்னே

எனவும்,

ஊறுதுய ருஞ்சுகமு முற்றுனுப விக்கும்
பேறுபெறு தன்னுடலு மாவிபிரி யுங்காற்
கூறுசிறு புள்ளெழு குடம்பையென வப்பால்
வேறுபடு மென்னிலினி மெய்யுறவு யாதே

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் நியற்னை பாலவாம்.

இறைமாட்சி

15. இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்

(இதன் பொருள்) மும்மத யானையான்- மூன்று மதங்களையும் பொழிகின்ற களிற்றியானையையுடையவனும்; திங்கள் வெள்குடை- நிறைத்திங்கண் மண்டிலம் போன்ற வெள்ளிய தன்குடையினாலே; அறங்கொள் கோல்- அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட செங்கோன் முறைமையினையுடைய; அண்ணல்- இவ்வேந்தன் இவ்வாற்றால்; இறந்த நற்குணம்-இவ்வுலகத்தை விட்டகன்று போய்விட்ட நல்ல மக்கட் பண்புகள்; எய்தற்கு அரியவாய் மீண்டும் மாந்தர் எய்துதற்கரியனவாகி; உறைந்த தன்மை எல்லாம் இருந்தவற்றை யெல்லாம்; உடன் ஆக்குவான்- மீண்டும் இவ்வுலகத்து மக்களோடே சேர்த்து அவரை யுய்விக்கும்பொருட்டு; பறிந்த மூர்த்தி ஒத்தான்- துடித விமானத்தினின்றும் போந்து இந் நிலவுலகத்திற் றோன்றியருளிய புத்தபெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.

(விளக்கம்) இச் செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன் மாண்புகள் இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன் பல செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று நினைத்தற்கிடனுளது. அவை யெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின் முற்போந்த செய்யுட்களில் அந்த அரசனுடைய அறமாண்புகளை வருணித்து இச் செய்யுளில் இவ்வாற்றால் இம் மன்னவன் புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று கூறுகின்றார் போலும்.

புத்தபெருமான் உலகின்கண் அறங்கள்கெட்டு மக்கட்பண்பு அழிந்த காலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில் நிறுவினன் என்பவாகலின் இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த தம்மை யெல்லாம் உடனாக்குவான் பிறந்த மூர்த்தி என்று புத்தரைச் சுட்டினார். மக்கள் மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின் எய்தற்கரியவாய் உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த தம்மையெல்லாம் என்றது உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர் உலகின் அறமுதலியன நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,

பூமகனே முதலாகப் புகந்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே
எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைத்தோய்நீ
மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதநீ துறைவனீ யிறைவனீ
அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
தொருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ

எனவரும் பழம் பாடலானும் (வீரசோழியம்: யாப்புப் படலம் 11 ஆம் கலித்துறையின் உரையிற்கண்டவை) இன்னும்

தரும தலைவன் றலைமையி னுரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
உலாநீர்ப் பெருங்கட லோட தாயினு
மாங்கத் துளைவழி யுகுநீர் போல
வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்
சொல்லலு முண்டியான் சொல்லுத றோற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
......................................
புத்த ஞாயிறு தோன்றுங் காலை

எனவரும் மணிமேகலையானும், (12:58-86)

இன்னும்,

துடித விமானத்தினின்றும் போந்து குயிலாலபுரத்துத் தோன்றி உலும்பினி வனத்துப் பிறந்து கபிலபுரத்துப் புத்ததத்துவம் பெற்றுத் தர்மோப தேசம் பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி(மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுரை) எனவரும் நீலகேசி யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக.   (15)

இதுவுமது

16. சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.

(இதன் பொருள்) சீற்றம் செற்று-அம்மன்னவன் இப்பேருலகத்தின்கண் ஓருயிர் மற்றோருயிரைச் சினந்து வருத்தாதபடி உயிரினங்களின் சினத்தையும் அகற்றி; பொய் நீக்கி- மாந்தர் பொய் பேசாதவண்ணம் செய்து; செங்கோலினால் கூற்றம் காய்ந்து- தனது செங்கோல் முறைமையாலேயே தனது ஆட்சியின்கண் முறைபிறழ்ந்து மறலியும் புகுந்துயிரைக் கவராதபடி அவனையும் தடுத்து; கொடுக்க எனுந்துணை மாற்றமே நவின்றான்-தான் தன் குடிமக்களுக்கு ஆணை பிறப்பிப்பதாயின் உடையோர் எல்லாம் இல்லோர்க்கு வழங்குமின்! என்னும் இந்நல்லறத்தையே ஆணையாகப் பிறப்பிக்குமளவேயன்றி அவர் வருந்தும்படி பிறிதோர் ஆணையும் இடானாயினான். தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான்- இங்ஙனமிருந்தவாற்றால் இவன் ஆட்சியில் இன்புற்றிருந்தோரெல்லாம் வீடு வேண்டாராய்த் தடுமாற்றத்திற்குக் காரணமான பிறப்பினையும் விரும்புவாராகும்படி தோன்றித் திகழ்வானாயினன் என்பதாம்.

(விளக்கம்) செங்கோன் முறை பிறழாத வேந்தர் ஆளும் நாட்டில் உயிரினங்கள் சினந்தவிர்ந்து அரட்குணமுடையவாய் ஒன்றற்கொன்று தீமைசெய்யாவகலின், செங்கோலினால் சீற்றம் செற்றுப் பொய் நீக்கினன் என்றார்.

இதனை,

..........................பரல் வெங்கானத்துக்
கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு

எனவரும் இளங்கோவடிகளார் மொழியானும்(13:4)

அல்லது கடித்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேளவன் நிலையே கெடுகநின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யாவேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ இரவல!

எனவரும் பெரும்பாணாற்றுப்படையானும் (36-45) உணர்க.

கருதலரும் பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோர்
திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலநின்றோர்
பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்

எனவரும் இராமவதாரத்தினும் (குலமறை. 5) இக்கருத்து வருதலுணர்க

இனிச் செங்கோலரசர் நாட்டில் உயிரினங்கள் தத்தமக்கியன்ற அகவை நாளெல்லாம் வாழ்ந்து இயல்பாக இறத்தலன்றி இளம் பருவ முதலிய காலத்தே இறத்தல் இல்லையாகலின், செங்கோலினாற் கூற்றங் காய்ந்து என்றார். இக் கருத்தினை

கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்ற னல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே

எனவரும் இராமவதாரத்தானும் (நாட்டுப், 39)

மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையிற் றிரிந்து எனவரும்(5: 218-20) சிலப்பதிகாரத்தாலும்,

மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் எனவரும் விக்கிரம சோழனுலாவாலும்(7-8)

மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
கூற்றுயிர் கோடலு மாற்றா தாக
வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப  (4.2; 54-6)

எனவரும் பெருங்கதையானும் உணர்க.

இனி, செங்கோன்மை முறையினின்று அருளாட்சி செய்கின்ற  வேந்தன் குடை நீழலில் வாழ்பவர் மீண்டும் மீண்டும் அந்நாட்டிற் பிறத்தற் கவாவுதலின் தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் என்றார். இனி இவ்வறவேந்தனைக் கண்டோர் இத்தகைய அறவோனாய்ப் பிறத்தல் வீடுபேற்றினும் சிறப்புடைத்து ஆதலால் மனித்தப் பிறப்பும் வேண்டுவதே என்று தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் எனினுமாம்.    (16)

குற்றங் கடிதல்

17. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.

(இதன் பொருள்) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த- வானுலகத்தே வாழுகின்ற தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற; விழுமியோன்- சிறப்பினையுடையவனும்; நெற்றிபோழ்ந்த கண் உளான்- நெற்றியைப் பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய; கண்டம் தன்மேல் கறையை- மிடற்றின்கண்ணமைந்த களங்கத்தை; யார் கறை அன்று என்பார் யார்தாம் களங்கம் அன்று என்று கூறுவார்? அங்ஙனமே; குற்றம் மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று- குற்றம் என்பது இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும் உண்டாவதொன்றன்று குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும்- குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்; குற்றமே-குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி; நல்ல ஆகா-அவர் மேலோர் என்பதற்காக நல்லனவாகி விடா; ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புட னிருத்தல் வேண்டும் என்பதாம்.

(விளக்கம்) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பெச்சம்.

கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப் போல்வார் என்றார். வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு கைவரப் பெற்ற மேலோரை.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வார் பழிநாணு வார்     குறள், 433

எனவும்,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை       குறள், 434

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக.     (17)

இடுக்கணழியாமை

18. மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.

(இதன் பொருள்) மறிப மறியும்- அழியும் பொருளெல்லாம்
அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது) மலிர்ப மலிரும்-அங்ஙனமே வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்; (அவற்றை வளராமற் றடுக்கவு மியலாது) பெறுப பெறும்- பயன் பெறுகின்ற ஆகூழுடையன பெற்றே தீரும்; (அப் பயனைப் பெறாவண்ணம் செய்தலு மியலாது); பெற்று இழப்ப இழக்கும்-அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன அவற்றை இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது) அறிவது அறிவார்-ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்; அழுங்கார்- தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல் பென்றுணர்ந்து அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர். உவவார்-அங்ஙனமே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பது மிலராவர்; உறுவது உறுமென்று உரைப்பது நன்று-ஆதலால் வருவது வந்தே தீரும் என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.

(விளக்கம்) உறுவதுறும் என்பது ஒரு பழமொழி

மறிப, மலிர்ப, பெறுப, இழப்ப என்பன பலவறிசொல்.

மெய்யுணர்வுடையோர் யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின் செயலென்று கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக் களிப்பதிலர் வறுமை வந்துழி வருந்துவதுமில்லை என்றவாறு. இக்கருத்தோடு,

யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவன்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே

எனவரும் கணியன் பூங்குன்றனார் பொன்மொழியும் (புறநா-192)

மெய்த்தி ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருந்த முகத்தினை யுன்னுவாள்

எனவரும் கம்பநாடர் கவின் மொழியும் ஒப்பு நோக்கற் பாலன.  (18)

இதுவுமது

19. வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.

(இதன் பொருள்) வேரி கமழ் தார் அரசன்- மணங்கமழ்கின்ற மலர் மாலையணிந்த மன்னவன்; விடுக என்ற போழ்தும்- சிறைவீடு செய்க என்று கட்டளையிட்ட காலத்தும்; தாரித்தல் ஆகா வகையால்-இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே; கொலை சூழ்ந்த பின்னும்- கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்; பூரித்தல் வாடுதல் என்று இவற்றால்- உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய மெய்ப்பாட்டினாலாதல் அல்லது துன்புற்று வாடுதல் என்னும் மெய்ப்பாட்டினாலாதல்; பொலிவு இன்றி- தன் உடம்பின்கண் யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி; நின்றான்- அமைதியாக நின்றனன், அஃதெற்றாலெனின்; பாரித்ததெல்லாம்-தனக்கு நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்; வினையின் பயன் என்ன வல்லான்-தான் முன் செய்த பழவினையின் பயன்களே யன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால் வன்மையுடையோன் ஆகலின் என்பதாம்.

(விளக்கம்) இதனால் குறிக்கப் படுகின்ற மெய்யுணர்வாளன் யார் என்றும் அவன் சிறைப்படுதற்கும் சிறைவீடு பெறுதற்கும் பின்னர்க் கொலை செய்க என்று மன்னன் கட்டளை யிடுதற்கும் உற்ற வரலாறு சிறிதும் அறிகின்றிலேம் இதனால் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்தில் இன்னோரன்ன வரலாறுகள் இருந்தன என்று மட்டும் அறிகின்றோம்.

இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து ஒரு கால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர் அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும் கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும் கொலை செய்க என்ற போது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான் என்றுணருகின்றோம். இச்செய்யுள் இராமகாதையுள் தயரதன் இராமனை அழைத்து இனி நீ இவ்வரசாட்சியை ஏற்றுக் கொள்க என்று வேண்டிய பொழுது,

தாமரைக் கண்ணன்
காதலுற்றிலன் இகழ்ந்திலன்     கம்ப- மந்திர-70

எனவரும் கம்பநாடர் மொழியும்; யசோதர காவியத்துள் மாரிதத்தன்
என்னும் மன்னவன் மாரி என்னுந் தெய்வத்திற்குப் பலியிடுதற்குப் படித்து வந்த அபயருசி  அபயமதி என்னும் அண்ணனும் தங்கையும் தம்மைப் பலியிடப் போதலறிந்தும் அமைதியுடனிருத்தல் கண்டு அவ்விளந் துறவியை நோக்கி அவ்வேந்தன்:

இடுக்கண் வந்துறவு மெண்ணா
தெரிசுடர் விளக்க னென்கொல்?
நடுக்கமொன்றின்றி நம்பால்
நகுபொருள் கூறகென்ன,

அதுகேட்ட அவ்விளந்துறவி, வேந்தே!

அடுக்குவ தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்

என விடையிறுத்தமையும் நம்நினைவிற்கு வருகின்றன.

இன்னும்,

இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்
விடுகணை யரிபு மெஃகா மிருந்தழுதி யாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே

எனவரும் சீவகசிந்தாமணியும் (509)

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம

எனவும்

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்     குறள், 319

எனவும் வரும் திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம்.     (19)

குண்டலகேசி என்னும் பெருங்காப்பித்தின்கண்
பெரும்பாலும் அழிந்தனபோக எஞ்சி நின்று
இற்றைநாள் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பதிற்கும்
பெருமழைப் புலவர். பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த சொற்பொருள் உரைகளும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதிகளும் முற்றும்.
----------------------------------------------------------------------------