புதன், 9 அக்டோபர், 2024

முருகனின் அருள் பெற்றவர்கள்...

முருகனின் அருள் பெற்றவர்கள்...

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக்குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடுகளையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில்ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்:  பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுõல், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்:  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்:  யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நூலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர்,மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நூல் இது. பஞ்சாமிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்குஅபிஷேகம் செய்தவர் இவர்.

படலம் 48: லிங்கோத்பவ பிரதிஷ்டை...

படலம் 48: லிங்கோத்பவ பிரதிஷ்டை...
 

48 வது படலத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் லிங்கோத்பவரின் பிரதிஷ்டைகளை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. லிங்கோத்பவ அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு கர்ப்பக்கிரஹத்தை அனுசரித்து அதன் அளவுப்படி லிங்கம் வைத்து அதற்கு மத்தியில் சந்திரசேகர மூர்த்தி அமைப்பு முறையும் அவ்வாறே லிங்கத்திற்கு மேலும் கீழுமான பிரதேசத்தில் அன்னபட்சியையும் பன்றியையும் அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. இங்கு லிங்க மத்தியில் அமைத்த சந்திரசேகரரின் அமைப்பு முழங்காலிலிருந்து கீழ் பாகம் கண்ணுக்கு புலப்படாததாக ஆகும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு லிங்கத்தை அனுசரித்து இரண்டு பக்கங்களிலும் எல்லா அவயவமும் அழகுடன் கூடிய பிரம்மா விஷ்ணுவை நமஸ்கரித்து கொண்டு நின்ற கோலத்தில் உள்ளதாக அமைக்கவும் என்று கூறப்படுகிறது. இம்மாதிரியான தேவன் பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்பட்ட லிங்கோத்பவர் என்று கூறப்படுகிறது. பிறகு பிரம்மா விஷ்ணு இல்லாமல் அன்னமும் பன்றியும் மட்டும் உள்ளதாக அமைக்கலாம் என்று வேறு ஒரு விதி கூறுகிறது. பிறகு பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தை பரிக்ஷித்து அங்குரார்ப்பணம் செய்து யாகத்திற்காக குண்டம் வேதிகையுடன் மண்டபத்தை முன்பு போல் அமைக்கவும். பிறகு நியாஸ கர்மா இல்லாமல் நயனோன்மீலனம் பேர சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என்று கர்மாவின் வரிசை முறை குறிப்பிடப்படுகிறது. பிறகு மண்டபத்தை அலங்கரித்து அங்கு வாஸ்து ஹோமம் முறையாக பூபரிக்ரஹ கர்மாவை செய்து வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் கல்பித்து, ஜலத்திலிருந்து எடுத்து வந்த சுவாமியை முறைப்படி சுத்தி செய்து ரக்ஷõபந்தனம் செய்து, சயனத்தில் அதிவாசம் செய்யவும்.

இவ்வாறே பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் நயனோன்மீலனம் முதலான கர்மாவையும் முடித்து ஈஸ்வரனின் தென்பாகத்தில் பிரம்மாவையும், வடக்கு பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் சயனாதி வாசம் செய்யவும் வஸ்திரங்களால் பிரதிமைகளை போர்த் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும் என்று சயன அதிவாசமுறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன் பிரம்மா விஷ்ணு இவர்களின் சசிரோ பாகத்தில் பிராதன கும்பங்களை ஸ்தாபிக்கவும். சிவகும்பத்திற்கு வடக்கில் வர்த்தினியை ஸ்தாபிக்கவும். பிறகு சுற்றிலும் வித்யேச்வரர் முதலிய கும்பங்களான 8 கும்பங்களை ஸ்தாபிக்கவும். முறைப்படி ரூப தியானத்தை சொல்லி பூஜிக்கவும். ஈஸ்வரனுக்கும் பிரம்மா விஷ்ணுவிற்கும்  தத்வ தத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு ஆசாரியன் மூர்த்திபர்களுடன் செய்யவும் என கூறி ஹோம முறை திரவ்ய நிரூபண முறைப்படி சுருக்கமாக விளக்கப்படுகிறது. பிறகு இரவு பொழுதை கழித்து காலையில் சுத்தாத்மாவான ஆசாரியன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும். அந்த ஆச்சார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கவும் பின்பு முகூர்த்த நாழிகைக்கு முன்னதாக ஆசார்யன் மந்திர நியாஸம் செய்யவும் என கூறி மந்திரன்யாசம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. முடிவில் ஸ்நபநம் உத்ஸவத்துடன் கூடியதான பூஜையை செய்யவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறி இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொன்னபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறே லிங்கோத்பவ பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் இவ்வுலகின் புத்தி உள்ளவனாக இருந்து முடிவில் சிவசாயுஜ்ய பதவி அடைகிறான் என்று வர்ணிக்கப்படுகிறது. இவ்வாறு 50வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லிங்கோத்பவருடைய பிரதிஷ்டையை முதலில் கூறுகிறேன். கர்பக்ருஹ அளவை அனுசரித்து லிங்கத்தை முன்பு கூறப்பட்ட முறைப்படி நன்கு அமைக்க வேண்டும்.

2. லிங்கத்தினுடைய உயரத்தில் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாக அம்சத்தில் ஓரம்ச அளவு கீழே விட்டு இறக்க வேண்டும். அதே ஓரம்ச அளவோ, அல்லது அதில் பாதி அளவோ மேல் பாகமாக விட்டுவிட்டு அவைகளின் இடைவெளியில்

3. முன்பு கூறப்பட்ட அமைப்புமுறை சந்திர சேகர உருவத்தை நன்கு அமைக்க வேண்டும். லிங்கத்தின் கீழ்பாகத்தின் சந்திரசேகரின் முழந்தாளின் கீழுள்ள பாதத்தை கண்ணுக்கு புலப்படாதவாறு அமைக்க வேண்டும்.

4. லிங்கத்தின் மேல் கீழ்பாகம் முறையே, அன்னபக்ஷி, பன்றி ஆகிய இவற்றின் உருவ அமைப்பை அமைக்க வேண்டும். பிம்பத்தின் முக அளவிற்கு தக்கவாறும் பிம்பத்தை எதிர்நோக்கியும் அன்னப் பறவையை அமைக்க வேண்டும்.

5. பிம்பத்தை எதிர்நோக்காமல் பூமியை தோண்டுவது போல் பன்றி உருவத்தை அமைக்க வேண்டும். அந்த லிங்கத்தின் ஆறில் ஒரு பங்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பாகங்களினால்

6. பிரம்மா, விஷ்ணுவை இரண்டு பக்கங்களிலிருப்பதாகவும், வணக்கத்தை உடையதாகவும், அனுகூலமாக இருப்பதாகவும், குறுக்காக உள்ள பாதத்தை உடையதாகவும், எல்லா அவயங்களும் அழகாக உள்ளதாகவும்

7. பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்படுகிறவராயும், பிரம்மா விஷ்ணுவின்றி, அன்னம், பன்றியுடன் கூடியதாகவோ லிங்கோத்பவரின் அமைப்பு

8. இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. பிரதிஷ்டையின் காலம் முன்பு போல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே, அங்குரார்பணத்தையும் செய்து

9. பிறகு மண்டப நிர்மாணம் செய்து, ஒன்பது, ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கைப்படி சுற்றிலும் நான்கோணம் அளவான குண்டங்களை அமைக்க வேண்டும்.

10. எண்கோணகுண்டம், வட்டவடிவமான குண்டங்களையோ அமைக்க வேண்டும். இந்த பிம்பத்திற்கு ரத்னந்யாஸம் தேவையில்லை. ரத்னந்யாஸம், பிம்பசுத்தி முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

11.கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம், மண்ட பாலங்காரம், வாஸ்து ஹோமம் இவைகளைச் செய்ய வேண்டும்.

12. முதலிலோ அல்லது முன்கூறியபடியோ பூமியை ஏற்றுக் கொண்டு வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்திற்கு வேண்டிய முறைகளை செய்ய வேண்டும்.

13. ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை எடுத்து பிம்பசுத்தியை செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தின் மேல் பிம்பத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

14. நயனோன்மீலனம் முதலியவைகளை பிரும்மா விஷ்ணுவிற்கும் செய்ய வேண்டும். தெற்கு பாகத்தில் (வலது பாகத்தில்) பிரம்மாவையும், வடக்கில் (இடது பாகத்தில்) விஷ்ணுவையும் சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

15. வஸ்திரம் முதலியவைகளால் போர்த்தி சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும். பிம்பங்களின் தலைபாகத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

16. சிவகும்பத்தின் வடக்கு பாகத்தில் சிவ கும்பத்தை ஸ்தாபிக்கவும். வித்யேச்வர கும்பங்களாக எட்டு கடங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

17. முறைப்படி லிங்கோத்பவ மூர்த்தி அமைப்பாக ஹ்ருதயத்தில் ஆசார்யன் தியானித்து மூர்த்தீஸ்தாபன பாவங்களால் பூஜித்து

18. லிங்க மூர்த்தி, பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கு தத்வ தத்வேஸ்வர, மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸங்களை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும்.

19. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் சேர்ந்து ஹோமம் செய்யவும். ஸமித், அன்னம், நெய், பொறி, எள், கடுகு, மூங்கிலரிசி இவைகளாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

20. கிழக்கு முதலான திசைகளில் புரசு, அத்தி, அரசு, இச்சி முதலிய ஸமித்துக்களையும், தென்கிழக்கு முதலான கோண திசைகளில் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற்கொன்னை ஆகிய ஸமித்துக்களையும்

21. பிரதான குண்டத்தில் புரசு சமித்தையும், அந்த புரசையே எல்லா குண்டத்திலும் ஹோமம் செய்து மேற்கூறிய திரவ்யங்களால் ஹோமம் செய்து பிரம்மாவையும், விஷ்ணுவையும்

22. ஸமித்து முதலிய பொருட்களால் பிரதான குண்டத்தில் ஆசார்யன் பூஜிக்கவும். மீதிப் பொழுதான இரவை போக்கி சுத்தமான அதிகாலையில்

23. சுத்தமான மனதை உடைய ஆசார்யன் தத்வமறிந்தவனாக மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், குண்டம், குண்டத்திலுள்ள அக்னி இவைகளை பூஜித்து

24. ஆசார்யர்களை பூஜித்து தட்சிணையைக் கொடுக்க வேண்டும். பிரதிஷ்டா முஹூர்த்த ஸமயத்தின் ஓர் நாழிகைக்கு முன்பாக மந்திரநியாஸம் செய்ய வேண்டும். வேதிகையிலிருந்து கும்பங்களை எடுத்து மூர்த்திக்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

25. சிவகும்பத்திலிருந்து மந்திர பீஜத்தை எடுத்து தேவனின் ஹ்ருதயத்தில் சேர்த்து, வர்த்தநீ கடத்திலிருந்து வர்த்தநீ பீஜமந்திரத்தை எடுத்து பாத தேசத்தில் சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

26. வித்யேச கும்பத்திலிருந்து அவ்வாறே மந்திரங்களை எடுத்து சேர்பித்து ஈசனை அந்த ஜலங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிரம்மவிஷ்ணு இவர்களின் பீஜமந்திரத்தை வைத்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

27. ஸ்நபன பூஜைசெய்து அபிஷேகம் செய்து முடிவில் திருவிழா நடத்தவும் பிம்பங்களை பிறகு ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமிக்கு தெற்கு பாகத்தில் பிரும்மாவையும் (வலது)

28. வடக்கில் (ஸ்வாமிக்கு இடது) பாகத்தில் மஹாவிஷ்ணுவை ஸ்தாபிக்க வேண்டும். இங்கு கூறப்படாததை பொதுவான பிம்ப ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

29. எந்த மனிதன் மேற்கூறியவாறு லிங்கோத்பவ பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் இவ்வுலகில் பெரிய தனவானாகி முடிவில் சிவஸாயுஜ்ய பதவியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டா முறையாகிற ஐம்பதாவது படலமாகும்.

படலம் 47: ஸோமாஸ்கந்த ஸ்தாபன விதி...

படலம் 47: ஸோமாஸ்கந்த ஸ்தாபன விதி...

47வது படலத்தில் ஸோமாஸ்கந்த ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு அமைப்பு முறை பிரகாரம் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, முதலில் ஸோம லக்ஷணம் அல்லது உமாஸஹித தேவரின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவர் நான்கு கை, மூன்று கண் ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டு எல்லா ஆபரணத்துடன் கூடியதாகவும் வரதாபய ஹஸ்தமும் பார்ஸ்வ ஹஸ்த்தத்தில் மானும் மழுவும் உடையவராகும் பூணூல் தரித்தவராகவும் பிரஸன்னாத்மாவாகவும் இடது பாகத்தில் கவுரியுடன் கூடியதாக இருப்பவர் ஸோமன் என்று ஸோமேச லக்ஷணம் கூறப்படுகிறது. கவுரி லக்ஷணம் தேவி ஸ்தாபன முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு இந்த விஷயத்தில் சூத்ரபாதம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஸோமாஸ்கந்த மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளின் மத்தியில் ஸ்கந்தரை அமைக்கவும் என கூறி ஸ்கந்தரின் லக்ஷணம் கூறப்படுகிறது. அந்த ஸ்கந்தரானவர், இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடம் சர்வாபரண பூஷிதம் வலது கையில் தாமரை புஷ்பம், தொங்க விடப்பட்ட இடது கை, அல்லது இரண்டு கைகளிலும் தாமரை புஷ்பம், நாட்டிய கோலம் அல்லது அம்பாளின் மடியில் அமர்ந்த கோலம், தாமரை புஷ்பம் இல்லாத கை அல்லது அமர்ந்த கோலம் நின்ற கோலம் ஆகிய இப்பேர்பட்ட அமைப்பு உடையவர் ஸ்கந்தர் ஆவர் என கூறப்படுகிறது. பிறகு ஸ்கந்தரும் உமாவும் இல்லாத மூர்த்தி சுகாசனர் என்று சுகாசன மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு ஸோமாஸ்கந்த சுகாசன மூர்த்திகளின் லக்ஷணம் கூறப்பட்டு ஸோமாஸ்கந்த மூர்த்தியின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஸ்வாமி அம்பாள், குஹன் இவர்களுக்கு ரத்னநியாச முறை கூறப்படுகிறது. அந்தந்த பிரதிஷ்டையில் சொல்லப்பட்டபடி மந்திரங்களுடன் அந்தந்த ரத்னன் நியாஸம் செய்யவும் என கூறப்படுகிறது. மேலும் அம்பாளுக்கு ஸ்வர்ணபத்மமும், ஸ்கந்தருக்கு ஸ்வர்ண மயூரமும் வைக்கலாம் என்று வேறு ஒரு விதி முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம் ஜலாதி வாசம் ஆகியவைகள் முன்பு போல் செய்யவும் என கூறப்படுகிறது.

பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைத்து அங்கு வேதிகை குண்ட அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு சிற்பியை திருப்தி செய்து விட்டு பிராம்மண போஜனம், புண்யாகப் ரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதன் மத்தியில் சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து மண்டபத்தை அடைந்து ஸ்நபனம் செய்ய வேண்டும். பிறகு அந்த மூன்று பிம்பங்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்து மூன்று வித அதிவாசம் செய்யவும். தனித்தனியான வஸ்திரங்களால் மூடவும் பிறகு சிவனுடைய சிரோதேசத்தில் சிவகும்பம், அதற்கு வடக்கு பாகத்தில் அம்பாளுக்கு வர்த்தனி, தெற்கு பாகத்தில் ஸ்கந்த கும்பம் வைத்து ரூபதியான முறைப்படி சந்தனாதிகளால் பூஜிக்கவும். சுற்றிலும் 8 கும்பங்களில் வித்யேஸ்வரர்களை பூஜித்து ஸ்தாபிக்கவும். பிறகு அந்தந்த மூர்த்தி ஸ்தாபனப்படி அந்தந்த மூர்த்திக்கு தத்வதத்வேஸ் வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு குண்டமமைத்து முறைப்படி ஹோமம் செய்யவும் என கூறி ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முன்பு கூறிய பிம்பங்கள் தனிமையான பீடமாயிருப்பின் தனிமையான மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. மறுதினம் ஆசார்யன் தேவகும்ப அக்னிகளை மூர்த்திபர்களுடன் பூஜித்து யஜமானனால் கொடுக்கப்பட்ட வஸ்திராதி தட்சிணைகளை பெற்றுக் கொண்டு மந்திரநியாசம் செய்யவும். இங்கு அம்பாள் ஒரே பீடமாக இருந்தால் அம்பாள் ஹ்ருதயத்தில் மந்திரநியாசம் செய்யவும். இவ்வாறு கும்பாபிஷேகமும் செய்யவும். பிறகு விசேஷமாக கல்யாண கர்மாவும் செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்ய பிரதிஷ்டைபடி செய்ய வேண்டும். இந்த பிரதிஷ்டை செய்பவன் இங்கு சித்திகளின் பலனை அனுபவித்து முடிவில் சிவ ஸாயுஜ்யம் அடைகிறான் என்பது பலச்ருதி. இவ்வாறு 47 வது கருத்து சுருக்கம் ஆகும்.

1. சிரேஷ்டமான ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையை கூறுகிறேன். அதன் அமைப்பின் முறை இப்பொழுது கூறப்படுகிறது.

2. நான்கு கைகள், மூன்று கண், ஜடாமகுடத்துடனும் எல்லாவித ஆபரணத்துடனும் வரதம், அபயம் என்ற முத்ரையை கீழ் இருகைகளிலும்

3. மேல் இரண்டு கைகளில் மான், மழுவேந்தியவரும் இடது காதில் கர்ணபத்ரமும் வலது காதில் மகரகுண்டலத்தையுடையவரும்

4. பூணூலுடன் பிரஸன்ன முகமுடையவரும் மடக்கப்பட்ட இடது காலையும் தொங்கவிடப்பட்ட வலது காலையுடையவரும் இடப்பாகத்தில் கவுரியையுடையவரும்

5. எல்லா லக்ஷணமும், எல்லாவித ஆபரணபூஷிதருமாக இருப்பவர் ஸோமேசராவர். (ஸோமாஸ்கந்த லக்ஷணம்) நெற்றி மூக்கு, தொப்பூழ், குஹ்யபிரதேசம் கால்கள், குதிகால் மத்தியிலும்

6. இடுப்பு பாகத்தையும் சேர்ந்துள்ள சூத்ரம், மத்ய சூத்ரமெனப்படும், யோநிபாகத்தின் அடியிலிருந்து முகத்தின் அடிபாகம் வரை கழுத்தின் பக்கத்திலிருந்தும்.

7. ஸ்தனக்காம்பிலிருந்தும் இடுப்பின் பார்ச்சவத்திலிருந்தும், உஷ்ணீச பாகத்திலிருந்தும் பிடரி பக்கமும் கழுத்தின் பின்பக்கமும் மத்தியிலிருந்தும்

8. உள்ள சூத்ரம் ப்ருஷ்ட சூத்ரமெனப்படும், பார்வங்களிலிருந்து ஒன்றரை அளவும் இரண்டு பார்சவங்களில் விட்டு, துடை நீளம் வரையிலும்

9. மடக்கப்பட்ட கால் பதினைந்து அங்குலமும் தொங்குகின்ற கால் மூன்று (ஆறு) அங்குலமாகவும் இடது முழந்தாளின் கடைசியான ஸூத்ரத்திலிருந்து சரீர பாதி அளவிலும்

10. துடைபாக கடைசியிலிருந்து முதுகுத்தண்டு வரையிலும், பாததளத்தின் நுனியிலிருந்து துடையின் நடு பகுதி வரையிலும் இடைப்பட்ட அளவு மூன்றங்குலம்

11. தொங்குகிற காலசூத்ரத்திலிருந்து தலை பகுதி வரை ஏழரை அங்குலமாகும். கடகமுத்ரையிலிருந்தும், மணிக்கட்டிலிருந்தும் இடுப்பின் நுனி எல்லை வரையும்

12. தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலும் பதினாறங்குலம் ஆகும். வரதஹஸ்தமெனில் அதன்பின் பாகத்திலிருந்து தொப்பூழ் வரை ஸமமாகும்.

13. இடதுபாகத்தில் தேவிபிரதிஷ்டையில் கூறிய வண்ணம் பிரதிஷ்டை செய்த அம்பாளுடன் கூடியிருப்பதால் (உமாவுடன் கூடியவர்) ஸோமர் என்றும் ஸ்கந்தனுடன் கூடியிருப்பதால் ஸோமாஸ்கந்தர் என்று கூறப்படுகிறார்.

14. சுவாமியின் பத்தில் ஒரு பாக உயரமோ பத்தில் இரண்டு பாக உயரமோ 10 ல் மூன்று நான்கு பாக உயர அளவுகளாலோ ஸ்கந்தரை நடுவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

15. இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடமுடையவரும், இரு காதுகளிலும் மகர குண்டலங்களை அணிந்திருப்பவரும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும்

16. வலது கையில் தாமரையையும் இடது கையை தொங்கும் அமைப்பாகவுமோ (அல்லது) இரு கைகளிலும் தாமரையையுடையவராகவோ நடன அமைப்பிலுள்ளவராகவோ

17. தேவியின் மடியில் அமர்ந்திருப்பவராகவோ தாமரையில்லாத கையையுடையவராகவோ அமர்ந்திருப்பவராகவோ நின்ற திருக்கோலத்திலோ இருப்பவர் ஸ்கந்தர் ஆவர்.

18. ஸ்கந்தர் உமையின்றி இருப்பவர் சுகாஸனராவர். உமையுடன் கூடியவரிடத்திலும் ஸோமாஸ்கந்தர் அமைப்பிலும், ஸுகேசர் அமைப்பிலும் உருவ அமைப்பு சமமாகும்.

19. அங்குரார்ப்பணம் முதற்கொண்டதான இந்த பிரதிஷ்டையானது நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். தேவனுக்கு ரத்னந்யாஸம் செய்து, தேவிக்கும், குஹனுக்கும் ரத்னந்யாஸம் செய்யவும்.

20. அல்லது (சுவாமிக்கு ரத்னந்யாஸம் செய்து) தேவிக்கு தங்கத்தாமரையையும் ஸ்கந்தனுக்கு தங்க மயிலையும் நியஸிக்க வேண்டும். அந்தந்த மூர்த்தியின் பிரதிஷ்டையில் கூறிய உருவத்யானம் மந்திரங்களால் கூடியதாக

21. அந்தந்த பத்மபீடத்தில் நன்கு இருக்கமாக பிரதிஷ்டை செய்யவும். நயநோன்மீலநம் (கண்திறத்தல்) பிம்பசுத்தி, க்ராமப்ரதக்ஷிணம்

22. ஜலாதிவாஸம், மண்டபிரவேசனம் முதலியன செய்யவணும். எண்கோணம், வட்டவடிவ குண்டம், நாற்கோண குண்டமோ அமைக்க வேண்டும்.

23. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டம் அமைக்கவும். சில்பியை திருப்தி செய்து அனுப்பி அந்தணர்களுக்கு உணவளித்தலை செய்விக்க வேண்டும்.

24. புண்யாஹப்ரோக்ஷணம், வாஸ்துசாந்தி, சயனத்தை தயார்செய்து ஸ்நபனம் முதலியவை செயற்பாலது.

25. மூன்று பிம்ப உருவங்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்தது, பிறகு சயனத்தில் எழுந்தருளச் செய்து மூன்று கும்பங்கள் அமைத்து வஸ்திரங்களால் அழகுபடுத்தவும்.

26. சிவனின் தலைபாகத்தில் சிவகும்பமும், அதன் வடக்கில் வர்த்தனியையும் வைத்து ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகில் தெற்கில் கடம் ஸ்தாபித்து

27. ஸ்கந்தமந்திரங்களினால் பூஜித்து சந்தனம், புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். பிறகு பிம்ப லக்ஷண ரூபத்யான மறிந்த புத்தியுள்ள ஆசார்யன்

28. அக்கும்பங்களை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கடங்களுடன் ஸ்தாபித்து அந்தந்த பிரதிஷ்டா முறைப்படி தத்வத்வேஸ்வர மூர்த்தி, மூர்த்தீஸ்வரந்யாஸம் செய்ய வேண்டும்.

29. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம், (பூஜை முறையை) செய்து ஸமித்து, நெய், அன்னம் பொரி, எள், தான்யம் பயறுகளாலும் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

30. புரசு அத்தி, அரசு, ஆல் சமித்துகளால் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வ சமித்துகளால் தென்கிழக்கு முதலிய நான்கு திசை மூலைகளிலும்

31. பிரதானத்தில் முன்பு சொன்னபடி புரச சமித்தையும் ஹோமம் செய்து எல்லா க்ரியைகளையும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். ஸ்கந்தருக்கும், தேவிக்கும் பிரதான குண்டத்தில் தர்பண தீபனம் செய்ய வேண்டும்.

32. இந்த பிம்பங்கள் தனித்தனியான பீடமாயிருப்பின் தனித்தனியாக மண்டபம் அமைக்க வேண்டும். இரண்டாம் நாள் தேவர், கும்பம் அக்னி, இவைகளை முன்புபோல் பூஜை செய்ய வேண்டும்.

33. தசநிஷ்கம் (10 வராஹன்) முதலான தட்சிணையை மூர்த்திபர்களுக்கும் கொடுத்து வஸ்த்ரம் தங்க மோதிரங்களால் குருவான ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.

34. கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து (க்ரகித்து) பரமேச்வரனிடம் சேர்க்கவும். வர்த்தனியிலிருந்து மூலமந்திரத்தை ஸ்வாமி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

35. ஸ்வாமி பீடத்துடன் தேவி சேர்ந்திருந்தால் வர்த்தனீ பீஜத்தை (மூலமந்திரம்) அம்பாளிடம் சேர்க்க, குஹகும்ப மந்திரத்தை குஹனிடம் சேர்க்க வேண்டும்.

36. மற்ற வித்யேச்வர கும்பங்களை பீடங்களை சுற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த மூர்த்தங்கள் தனித்தனியான பீடங்களாயிருப்பின் தனித்தனி மண்டபம் (யாக) அமைத்து பூஜைகளை செய்ய வேண்டும்.

37. முறைப்படி விசேஷமான கல்யாணோத்ஸவம் செய்யவேண்டும். இப்படலத்தில் கூறாததை பொதுவான ஸ்தாபனத்தில் (பிரதிஷ்டையில்) கூறியபடி செய்ய வேண்டும்.

38. உயர்ந்த மனிதன் இவ்வாறு ஸோமாஸ்கந்தர் முதலிய பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் விருப்ப பயன்களையும் சிவஸாயுஜ்ய பதவியையும் அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகிற நாற்பத்தியேழாவது படலமாகும்.

படலம் 46: நடராஜரின் பிரதிஷ்டை...

படலம் 46: நடராஜரின் பிரதிஷ்டை...

46 வது படலத்தில் நடராஜரின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு லக்ஷண அமைப்பு முறையுடன் நடராஜமூர்த்தி பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. பின்பு நடராஜமூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் ஸூத்ரபாதம் என்ற முறைப்படி கூறப்படுகிறது. இங்கு நான்கு கை மூன்று கண் ஜடாமகுடத்துடன் கூடி அபஸ்மாரன் மேல் வலது காலால் நின்று கொண்டு பலவித ஸர்ப்ப பூஷணங்களோடு இருப்பவர் புஜங்க த்ராஸர் என கூறப்படுகிறது. ஜடையில் தட்சிண பாகத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய கங்கை, வாம பாகத்தில் இளம்பிறை சந்திரன் பிரகாசிக்கிறார்கள் என கூறப்படுகிறது. அபஸ்மாரம் கங்கை இல்லாததாகவோ இருக்கலாம் என வேறுபாடுகள் கூறப்படுகிறது. பிறகு சிரஸில் உள்ள பாலச்சந்திரன் உயர அளவிற்கு புஜாங்கத்ராஸ மூர்த்தி பக்கத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்கவும் இவ்வாறே பிருங்கிரிடியையோ பத்ரகாளியையோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு புஜங்கத்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் கூறி புஜங்கத்ராஸரை போல் எல்லா லக்ஷணமும் கூடியதான புஜங்க லலிதம் என்ற நடராஜர் இருப்பார். ஆனால் இங்கு கால் வைக்கும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என கூறி விசேஷம் கூறப்படுகிறது. பிறகு புஜங்கத்ராஸ, நடராஜர் போல புஜங்க பைரவரும் இருப்பார். ஆனால் அங்கும் ஒரு விசேஷம் என கூறி பாத விஷயமே வேறு விசேஷம் என கூறப்படுகிறது. ஆனால் பைரவர் நான்கு கையோடோ எட்டு கையோடுமோ இவைகளுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறாக நடராஜ மூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸ, புஜங்க லலித, புஜங்க பைரவ என்று மூன்று மூர்த்திகளின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரீசிட்சித்து அங்கு ரார்ப்பணம் செய்து, ரத்னநியாஸம், நயனோன்மீலனம் நன்கு செய்ய வேண்டும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என அங்குரார்பணம் முதல் ஜலாதி வாசம் வரையிலான காரியங்கள் வரிசைப்படி கூறப்படுகின்றன. பிறகு யாகத்திற்காக மண்டப முறையையும் குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பிராம்மண போஜன, வாஸ்து ஹோம, புண்யாக வாசனம், பூ பரிகிரஹம் செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூபரிக்கிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூ பரிகிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு வேதிகைக்கு மேல் பிரோக்ஷண பூர்வமாக ஸ்தண்டிலம் அமைத்து அங்கு சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிரதிமையை சுத்தி செய்து ரக்ஷõபந்தன பூர்வமாக சயனாதி வாசம் செய்யவும் என்று சயனாதி வாச முறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் சிவகும்பம் வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அஷ்டவித்யேஸ்வரர்களையும் ஸ்தாபிக்கவும். வர்த்தினியில் கவுரியை பூஜிக்கவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் நைவேத்தியம் வரை பூஜிக்கவும். தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு கூறப்பட்ட காலத்தில் மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணம் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை பாட்டு, நாட்டியம், ஸ்தோத்திரம், வேத கோஷங்களால் கழித்து காலையில் ஸ்நாநம் செய்து ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்தை எடுத்து கந்த புஷ்பங்களால் பூஜித்து குண்டம், அக்னி, கும்பம் இவைகளை பூஜிக்கவும். பிறகு பூர்ணாகுதி செய்யவும். யஜமானன் ஆசார்ய பூஜையும் தட்சிணை கொடுப்பதும் முறைப்படி செய்யவும். ஸ்தாபனம் ஆரம்பிக்கவும். சல பிம்பமாக இருந்தால் ஸ்நான வேதிகையில் வைக்கவும். அசலமாயிருப்பின் அதன் ஆலய மத்தியில் ஸ்தாபிக்கவும். ஸ்தாபன விஷயத்தில் கும்பங்களை எடுத்து பலவித வாத்ய ஸஹிதமாக ஆலய பிரதட்சிணம் செய்து கும்பங்களை பிம்பத்திற்கு முன்பாக வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திரன்யாஸ முறையும் கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. பிறகு தேவி பிரதிஷ்டை முறைப்படி தேவியை ஆசார்யன் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. நிதி நிலையை அனுசரித்து ஆசார்யன் கல்யாணகர்மாவும் உத்ஸவமும் செய்ய வேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதன் சிவ பாவனையுடன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ இந்த லோகத்தில் போகங்களை அனுபவித்து பிறகு ஈஸ்வர பதத்தை அடைகிறான் என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 46வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நடராஜாவின் பிரதிஷ்டையை லக்ஷணத்துடன் கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள், விகீர்ணமான (பரந்த) ஜடையை உடையவரும்

2. ஜடாமகுடத்துடன் கூடியவரும் சுருட்டி கொண்டு படத்துடன்கூடி சுற்றப்பட்ட ஸர்பமுடையவரும், ஐந்து முதல் ஒவ்வொன்றதிகமான பின்பாகம் இருபக்கமுடைய

3. இடைவெளியுடைய முப்பது எண்ணிக்கையுடைய ஜடையை உடையவரும் கருவூமத்தை, கொன்னை, எருக்கு முதலிய புஷ்பங்களையும் பிங்கள வர்ணமுடைய ஜடைகளை உடையவரும்

4. ஜடையின் தட்சிண பாகத்தில் அஞ்சலிஹஸ்தமுடைய கங்கையையுடையவரும் இடப்பாகத்தில் ஜடையில் இளம்பிறை சந்திரனை உடையவரும் (ஜடா மகுடத்தில்)

5. மகிழம்பூ மாலையுடையவரும், ஸர்பாபரணம் அணிந்தவராயும், புலித்தோலை அணிபவரும், ஸர்வாபரண பூஷிதராகவும்

6. இடது தோள் முதல் தொங்கிக் கொண்டிருக்கிற புலித் தோலை தரித்தவராகவோ, திவ்யாம்பரத்தோடு கூடியவராகவோ, மான் தோலை தரித்தவராகவோ

7. தலையில் உள்ள பிரம்ம கபாலமும், எல்லா புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் பன்றியின் தந்தத்தை தரித்தவரும், புலி நகத்தை உடையவரும் ஆமையின் ஓட்டையும்

8. சங்கு மணிகளால் தொடுக்கப்பட்ட மாலையால் அலங்கரித்த ஹ்ருதயத்தையுடையவராகவும் வலது காலால் நின்று கொண்டு இடது காலால் மேலே குறுக்காக மடித்தோ

9. குஞ்சித பாதமாகவும், இடது கையை குஞ்சித பாதத்திற்கு மேல் பிரஸாரிதகரமாகவும், அம்பிகையின் முகமாகிய தாமரையில் சுற்றுகின்ற வண்டை போல் கண்ணையுடையவராகவும்

10. பாதத்தில் சலங்கையும், கொலுசு என்ற ஆபரணத்தையுடையவராகவும், இடது காதில் கர்ண பத்ரமும், வலது காதில் மகர குண்டலமும் உடையவரும்

11. வலக்கை அபயமுத்ரையும், படத்துடன் கூட ஸர்பத்தையுடையவரும் பார்ச்வ இடக்கையில் நெருப்பையும், வலக்கையில்

12. டமருகம் (உடுக்கை) யுடையவராகவும், யக்ஞோபவீதமுடையவரும் பால்போல் வெண்மையானவரும், பன்னிரண்டங்குலம், பங்கமாக உடையவரும் (வளைந்ததாக)

13. பல ஸர்பாபரணங்களையுடையவரும், அபஸ் மாரத்தின் மேல் நிற்பவராகவும் சிரஸ் நெற்றியின் வலப்பக்கம், மூக்கின் வலப்பக்கமும்

14. நாபியின் வலப்பக்கம், குதிகால் மத்தியிலும், ஸூத்ரம் காண்பிக்கவும். மத்திய சூத்ரம் இரண்டு மாத்ரமாகும்.

15. கடி (இடுப்பு) பாக சூத்ரங்களின் மத்தி மூன்று மாத்ரமாகும். இடுப்பு முதல் இடது துடை வரை உள்ள சூத்ரமும் மூன்று மாத்ரமாகும்.

16. இரண்டு கணுக்கால் மத்தியில் உள்ள சூத்ரம் ஒரு அங்குலமாகும். வளைந்த முழங்கால் வரை உள்ள சூத்ரமானம் பன்னிரண்டு, எட்டு, ஏழு என்ற மாத்ரங்குலமாகும்.

17. அந்த ஜாநுசூத்ரத்திலிருந்து, இடது ப்ருஷ்டம் வரையுள்ளது. பதினேழு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து இடது முழங்கால்வரை நாற்பத்தியொன்றும் பத்தங்குலமுமாகும்.

18. இடது சூத்ரத்திலிருந்து வயிறு பக்கம் குக்ஷி பாகம் எட்டு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து வலது குக்ஷி பாகம் பண்ணிரண்டங்குலமாகும்.

19. வலது துடையிலிருந்து சூத்ரம், பதினேழு அங்குலமாகும் இடதுபக்க வாமபாக துடையிலிருந்து ஒன்பது மாத்ரமாகும்.

20.  இடது கண்டம் மத்ய சூத்ரத்திலிருந்து ஐந்தங்குலமாகும். வலது கண்ட (கழுத்து) சூத்ரமும் அதே பாக அளவான ஐந்தங்குலமாகும்.

21. அந்த சூத்ரத்திலிருந்து இடது தோள்வரை மூன்றங்குலம் குறைவானதாகும். அல்லது வேறு விதமாகவும் சூத்ரபாதம் (கோடிடும் முறை) கூறப்படுகிறது.

22. கண்ணின் கருவிழி வரையும், தலை மூக்கின் வலது பாகம் தொப்பூழின் வல இடப்பாகம் ஊன்றியதான வலது முழங்கால், கணுக்கால் மத்தியமும் வரை

23. ஸ்பர்சமான சூத்ரம், மத்யசூத்ரம் எனப்படும், மேல் சூத்திரத்திலிருந்து இடப்பாகம் ஐந்து மாத்ரமும் முகமும் கழுத்தும் மூன்று மாத்ரமும்

24. தோள்பாகம் வரை பதினைந்து மாத்ரமும், கக்ஷ பாகம் வரை ஒன்பது மாத்ரமும், வயிறு மத்தியில் எட்டு மாத்திரையும், இடுப்பு பாகம் ஏழங்குலமாகும்

25. இடுப்பு பாகம் பதினைந்து அங்குலமாகவும் வேறு இடத்தில் 60 அங்குலமாகும் ஒன்பது மாத்ரம் துடை பாகமாகும். குதிகால் வரை நான்கங்குலமாகும்

26. ஏழங்குல முகமும் வேறு இடத்தில் கழுத்து ஆறு மாத்ரமுமாகும். தோளின் கடைபக்கம் மூன்று மாத்ரையும், கக்ஷõந்தம் ஏழு மாத்ரையுமாகும்

27. பதினான்கங்குலம் குக்ஷி பாகமும் இடுப்பின் மேல் பாகம் நான்கு மாத்ரமும் கடிபாகம் நான்கு மாத்ரமும், முழங்கால் எட்டங்குலமும் ஆகும்.

28. பாதாக்ரபாகம் ஒரு மாத்ரமும் (முகத்திற்கு சொன்ன ஏழு மாத்ரமும்) அறிந்து செய்யவும். நீட்டபாதத்தின் நீளம், ஸ்தித பாதத்தின் முழங்கால் சமமாகும்.

29. அப்பக்கத்து முழங்கால்களின் இருமுக இடைவெளி இரண்டங்குலமாகக் கூறப்பட்டது. இடுப்பின் மேல் உயரமானது, இடது முழங்காலின் உயரமாகும்.

30. அந்த துடை மத்தியிலிருந்து நாபி வரை இடைவெளி ஒன்பது மாத்ரையாகும். இடது முழங்கால் லம்பஹஸ்தத்ததின் மணிக்கட்டின் இடைவெளி பதினான்கு மாத்ரையாகும்.

31. தொங்குகின்ற இடது ஹஸ்தத்திற்கும், அபய ஹஸ்தத்திற்கும், இடைவெளி ஆறங்குலம் வலக்கை கட்டைவிரல் கடைபாகத்திலிருந்து மார்பக நுனி வரை இரண்டங்குலம் இடைவெளி ஆகும்.

32. அந்த பாஹு உச்சமும், அந்த தோள்களிலும் மத்ய ஹ்ருதயத்திற்கு சமமாகும். பதினேழு அங்குலம் தண்ட ஹஸ்த (லம்ப) புறங்கை பிரதேசத்திற்கும் இடைவழியாகும்.

33. முழங்கை கடையிலிருந்து அக்னி கை உச்சமும் அக்னியின் உயரமும் ஐந்தங்குலம் சிரோபாகம் முதல் கேசம் வரை உள்ள கோலகமும் மூன்று சிகைகளுக்கும் ஐந்தங்குலம்

34. உடுக்கை தரித்த ஹஸ்தம், கர்ணத்தின் உயரத்தில் ஓரங்குல மதிகம் டமருக விஸ்தாரம் ஒன்பதங்குலமாகும், முக விஸ்தாரம் ஐந்தங்குலமாகும்.

35. கோலக மத்ய விஸ்தாரம், சுற்றிலும் உள்ள விஸ்தாரமும், மூன்றங்குலம் ஒரு நாக்கு உடையதும், கம்பீர சத்தம் உடையதுமாக, ஸர்பமுடையவராக உள்ள

36. இரண்டு கைகளிலிருந்து மணிக்கட்டின் கடையளவு முப்பதங்குலமாகும். அபஸ்மார உயரமானது பதினொன்று, பன்னிரண்டு (ஒன்பது) எட்டு மாத்திரை ஆகும்.

37. தேவருடைய முகம் போல் அபஸ்மார முகம் அமைக்கவும். இரண்டு மடங்கு முதல் ஐந்து வரையளவுள்ளதாகவும்

38. முகத்தின் அரை அளவு அதிகமாக்கி ஏழு அளவு வரை உதாரணம் கூறப்பட்டது. நான்கு தாள அளவில் அபஸ்மார உருவம் அமைக்க வேண்டும்.

39. சிரோ பாதத்திலிருந்து பாதம்வரை ஆறு, எட்டு என்று பாகமாக பிரிக்கவும். சிரோ பாகத்திலிருந்து கேசம் வரை உள்ள பிரதேசம் கோளகம் ஆகும். தலைப்பாகையிலிருந்து தலைகேசம் வரை கோளகம் ஆகும்.

40. கேச கடைபாகம் முதல் சரீரம் வரை அஷ்டபாகமாகும். களதேசம் அரையங்குலம் ஒன்ரை அங்குலம் கர்ணதேசம்

41. இடுப்பிலிருந்து பாகத்திலிருந்து ஹ்ருதயம் வரை ஆறங்குலம் ஆகும். ஹ்ருதயத்திலிருந்து நாபி வரை ஆறங்குலமாகும்.

42. நாபியிலிருந்து ஆண்குறி கடைபாகம் வரை ஐந்தங்குலமாகும். அதிலிருந்து துடைபாக நீளம் ஏழு அம்சமாகும். முழங்கால் உயரம் இரண்டு மாத்ரை ஆகும்.

43. ஜங்கை (முழங்கால் கீழ்ப்பிரதேசம்)யின் அளவு ஏழம்சம், பாதத்தின் அளவு இரண்டு மாத்ரை, இருபுஜம், இரண்டு கண், மேல் நோக்கிய உடம்பு கீழ்நோக்கிய முகம்.

44. ஸர்பசரீரம் இடது கையிலும், ஸர்பசிரஸ்தக்ஷ ஹஸ்தத்திலும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டதும், வளைந்த சரீரம் உடையவராகவும், ஸ்வாமியின் வலப்பாக சிரசை உடைய அபஸ்மாரத்தை அமைக்க வேண்டும்.

45. தேவருடைய முக அளவு சமமாகவே கங்கையின் முழு அளவு ஆகும். இருகைகளும் முக்கண்ணும் கரண்டமகுடமுடையவளாகவும்

46. ஸர்வாபரண பூஷிதையாயும், அஞ்சலி ஹஸ்தமுடையவளாயும், ஊர்த்வபாகத்திலிருந்து அதோ பாகம் வரை நீர்வழியும் தோற்றத்துடனும், அமைத்து லக்ஷணமுடைய

47. கங்காதேவியுடன் கூடியவராகவோ கங்கா தேவி ரஹிதமாகவோ அமைக்கவும். பிரபை என்கிற திருவாசியின் விஸ்தாரம் நூற்று பத்தங்குலமாகும்.

48. நூற்றி முப்பத்தி ஏழு ஆயாமம் பிரபையின் தண்டபாக அளவாகும். ஒன்று முதல் பத்து மாத்ரைகளால் குறைவாகவோ, அதிகமாகவோ ஆகும்.

49. இரண்டங்குலம், முதல் ஓரங்குல கணத்தில், ஏழங்குல பரிமாணமாக பிறை சந்திரனாகும். அதை போலவே ஈசனை அனுசரித்து பக்கத்தில் தேவியை கல்பிக்கவும்.

50. பத்ரகாளியையோ ப்ருங்கீரடியையோ அமைக்கவும், பரந்து விரிந்த கையையுடையாக புஜங்கத்ராஸர் கூறப்பட்டு, நிருத்த லக்ஷணமான புஜங்கத்தையுடையாதாகவும் அமைக்கவும்.

51. புஜங்கத்ராஸமாகவே செய்யவும் விசேஷமாகவும் கூறப்படுகிறது. மேல்பாகம் முழங்காலக்கு மேல் தூக்கியதாகவும் அமைக்கவும் முழங்காலுக்கு

52. இரண்டு மாத்ரம், மூன்று மாத்ரம், நான்கு மாத்ரையாகவோ, நிருத்யலக்ஷணம் புஜங்கலவிதமாகும். அது பைரவம் எனப்படுகிறது.

53. புஜங்க திராஸப்படி எல்லாம் செய்யவும், என விசேஷமாக கூறப்படுகிறது. மேல்தூக்கிய தட்சிண பாதத்தையோ, இடது பாதத்தை உடையதாகவோ அமைக்கவும்.

54. பாதத்துடன் கூடிய சரீரமத்தியில் மேல் நோக்கிய பாததளமுடையவராகவும் அமைக்கலாம். சதுர்புஜமோ, அஷ்டஹஸ்தமோ, பலவித திவ்ய அஸ்த்ர பூஷிதராகவும் அமைக்கவும்.

55. கற்சிலை முதலான திரவ்யங்களை சேர்த்து நடராஜரை அமைக்கவும். இவ்வித நடராஜ லக்ஷணம் கூறப்பட்டது. பிரதிஷ்டையை பற்றி கூறுகிறேன்.

56. பிரதிஷ்டை காலம் முன்போல் எனக் கூறப்பட்டுள்ளது. அங்குரார்ப்பணம், ரத்னந்யாஸம், நயஜேனான் மீலனம், முதலியவை முன்போலவே செய்ய வேண்டும்.

57. பிம்பசுத்தி, கிராமாதி, பிரதட்சிணம், ஜலாதி வாஸம், மண்டபபிரவேசம், முதலியவை செய்ய வேண்டும்.

58. சதுரஸ்ரம், வ்ருத்தம், அஷ்டாச்ரம் முதலிய ரூபத்தில் எந்த ரூபத்திலோ ஒன்பது ஐந்து, ஒன்று முதலிய எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

59. பத்து நபரதிகமானதாக ஆயிரம் பிராம்ணர்களுக்கு போஜனம் செய்வித்து மண்டப சுத்திக்காக புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

60. மரீசிபத பூஜையுடன் வாஸ்த்து ஹோமம் செய்யவும், வாஸ்த்து ஹோமம் இல்லாமலாவது பூமி பரிக்ரஹம் செய்ய வேண்டும்.

61. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைக்கவும் ஸ்தண்டிலத்தின் மேல் சயனம் அமைத்து பிம்பசுத்தி செய்யவேண்டும்.

62. ரக்ஷõபந்தனம் செய்து சயனாதி வாசம் செய்யவும், தேவருடைய சிரோபாகத்தில் சிவகும்பம் வைக்க வேண்டும்.

63. உத்தர பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அதில் கவுரியை ஆவாஹிக்கவும். லக்ஷ்ண ரூபத்துடன் தியானம் செய்து சந்தனங்களால் பூஜிக்க வேண்டும்.

64. அஷ்டவித்யேச்வர கலசம் ஸ்தாபித்து, சந்தன, புஷ்பம், நைவேத்யங்களால் அர்ச்சிக்க வேண்டும்.

65. தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீச்வர நியாஸம் செய்யவும், ரித்விக்குகளோடு ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

66. குண்ட, அக்னி ஸம்ஸ்காரம், அக்னிகார்ய விதிப்படி செய்யவும், ஸமித், நெய், அன்னம், நெல்பொறி, கடுகு, யவம், எள் இவைகளாலும்

67. தினை நெல், பாசிபயறு, இவைகளால் ஹோமம் செய்யவும். அத்தி, ஆல், அரசு, இச்சிசமித்துகளால் பூர்வாதி திக்குகளிலும்

68. வஹ்நி, நாயுருவு, பில்வம், கருங்காலி முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களிலும், பிரதானத்தில் புரசு, சமித்தையும் ஹோமம் செய்ய கூறப்பட்டது.

69. ரிக்வேதாதி பாராயணம், மந்திரஜபம், சங்கீதம், நடனம் ஸ்துதீ, ஸ்தோத்ரங்களால் துதித்து முறைப்படி கழித்துவிட்டு

70. ராத்திரி இரவை கழித்து பூஜை முடித்து காலையில் ஸதாசிவரை ஸ்மரித்து ஸ்னானம், மந்திர சுத்தி, தேஹ சுத்தி செய்து கூடினவனாய்

71. சயனத்திலிருந்து, பிம்பத்தை எடுத்து கிழக்கு முகமாக வைத்து, வஸ்திர கூர்ச்சாதிகளை எடுத்து விட்டு, சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

72. கும்ப சண்ட, அக்னி, இவைகளை பூஜித்து வவுஷடந்த மூலத்தால் பூர்ணாஹுதி செய்யவும். மூலமந்திரத்தோடு கடைசியில் வவுஷட் என்பது முடித்து பூர்ணாஹுதி கொடுக்க வேண்டும்.

73. வஸ்திர ஹேமாங்குலீயங்களால் ஆசார்யரை பூஜித்து முன்பு போல் தட்சிணை கொடுத்து ஸ்தாபனம் ஆரம்பிக்க வேண்டும்.

74. பிறகு வேதிகையிலிருந்து கும்பத்தை எடுத்து ஸ்னாந வேதிகையில் ஸ்தாபிக்க சலபேரமாயின் ஆலய மத்தியிலும் அசலபேரமாயின் பிரதிஷ்டை செய்து

75. பிறகு கும்பங்களை எடுத்து ஸர்வவாத்யங்களோடு கூட ஆலய பிரதட்சிணம் செய்து பிம்ப முன்பாக வைத்து

76. சிவகும்ப மந்திரத்தை, நடராஜர் பிம்பத்தில் நியஸித்து வர்த்தநீ பீஜத்தை பிம்ப பீடத்தில் நியஸித்து

77. வித்யேச கடங்களை பத்மபீடத்தில் சுற்றிலும் (அந்த இடத்திலே) ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும். தேவீ பிரதிஷ்டை விதிப்படி தேவீ ஸ்தாபனம் செய்யவேண்டும்.

78. பிரதிஷ்டை முடிவில், புத்தியுள்ளவனான தேசிகன் கல்யாண உத்ஸவத்தை அதன் முடிவில் செய்ய வேண்டும். பணத்தின் நிலையை அனுசரித்து உத்ஸவம் செய்யவேண்டும்.

79. இப்படலத்தில் சொல்லப்படாததை ஸாமான்ய ஸ்தாபன விதிப்படி செய்யவும். இந்த சிவபாவனையோடு யார் பிரதிஷ்டை செய்கிறானோ

80. அவன் இந்த லோகத்தில் போகத்தை அடைந்து பிறகு சிவபதம் அடைகிறார்.

இவ்வாறு உத்தரகாமிகத்தில் ந்ருத்த மூர்த்தி ஸ்தாபன முறையாகிற நாற்பத்தியாறாவது படலமாகும்.

படலம் 45: விக்னேச்வர பிரதிஷ்டா முறை...

படலம் 45: விக்னேச்வர பிரதிஷ்டா முறை...

45 வது படலத்தில் மஹா கணபதி பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறை முதற்கொண்டு விக்னேச ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு சிவாலயம் நிழல் தரும் விருக்ஷ பிரதேசங்களில், மற்ற இடங்களிலும் விக்னேஸ்வரரை ஸ்தாபனம் செய்ய உரிய இடமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு விக்னேச ஆலயம் அமைக்கும் முறை அங்கு திக்தேவதை மூர்த்தி அமைக்கும் முறை பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சுற்றிலும் பரிவாரம் அமைக்க வேண்டும் என கூறி விஸ்வரூபர் முதலான 8 மூர்த்தீஸ்வரர்களின் பெயர்களை கூறி அந்த மூர்த்தீஸ்வரர் களையோ இந்திராதி திக்குகளை அதிஷ்டித்த 8 பீடங்களையோ அமைக்கவும் என பரிவாரம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. வாயில் படியின் முன்பாக மூஷிகம், அவ்வாறே விகடன் பீமன் என்கிற துவார பாலகர்கள் ஈசான திக்கில் நிர்மால்யதாரியாகிய கும்போதரனையும் அமைக்கவும் என்று பரிவார விதி கூறப்படுகிறது. பிறகு விக்னேஸ்வரரின் மூர்த்திபர்கள் ஆமோதன் முதலான 8 மூர்த்திகளும் ஹஸ்தி வக்த்ரன் முதலான 8 மூர்த்திகளும் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பின்பு பூதரூபமான துவார பாலகர்கள், மூஷிகம், நிர்மால்யதாரி கும்போதரன், பரிவாரதேவதைகள், இவர்களின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிபீடம், மஹாபீடம் இவை இரண்டும் முன்பு போல் அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக பரிவாரத்துடன் கூடிய வினாயகர் ஆலயம் அமைக்கும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு சிலை, கற்சிலை முதலியவான திரவ்யங்களால் ஐந்து தாளம் என்ற அளவு முறையால் விக்னேச பிம்பம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பக்கிரஹ அளவால் பிம்ப அளவை நிரூபித்து, தூண் வாயிற்படி அளவாலும், லிங்க அளவாலுமோ பிம்பம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு சிரஸ் முதல் பாதம் வரை சரீர அளவு வர்ணிக்கப்படுகிறது. பிறகு விக்னேஸ்வர மூர்த்தி அமைப்பு கூறப்படுகிறது. இங்கு விக்னேசன் நான்கு கை மூன்று கண் அல்லது இரண்டு கண், நின்ற கோலமோ அமர்ந்த கோலமாகவோ செய்யவேண்டும் என்று கூறி நான்கு கைகளிலும் ஸ்தாபிக்க வேண்டிய வஸ்து விஷயத்தில் ஆயுதம் முறை இரண்டு விதமாக கூறப்படுகிறது.

வினாயகர் மட்டுமோ அல்லது சக்தியுடன் கூடியதாகவோ இருக்கலாம் என்று கூறி இரண்டு சக்தியை உடையதும் ஒரு சக்தியை உடையதுமான விநாயகரை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் வினாயகர் மட்டும் சக்தியோடு கூடிய வினாயகரை உடையதும் ஆன மூலமந்திரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கணேஸ்வரி முத்திரை, மூலமுத்திரை இவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட காலத்தில் அங்குரார்ப்பணம் முன்னதாக ரத்னநியாஸவிதி நயனோ மீலன விதியும் கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியில் தேவியுடன் கூடிய வினாயகர் இருந்தால் அந்த தேவிக்கும் நயனோனந் மீலனம் செய்ய வேண்டும். பிறகு பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் ஜலாதி வாசத்தில் பிரதான கும்பத்தை சுற்றிலும் திக்பாலகர்களை அதிஷ்டித்த 8 கும்பங்களை வைக்கவும் என ஜலாதி வாச முறை கூறப்பட்டுள்ளது. பிறகு யாகத்திற்காக வேதிகை, குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு சில்பியை திருப்தி செய்து பிராம்மண போஜனம் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்துஹோமம், பூ, பரிக்கிரஹ கர்மாக்களை செய்து ஜலத்திலிருந்து வினாயகரை மண்டபத்திற்கு அழைத்து சென்று ஸ்நான வேதியில் வைத்து ஸ்நபநம் செய்து, ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலத்திற்கு மேல் அண்டஜம் முதலான ஐந்து சயனங்களால் சயனம் கல்பித்து, அந்த சயனத்தில் வினாயகரை அதிவாசம் செய்யவும். இவ்வாறு சயனாதிவாசம் கூறப்படுகிறது. பிறகு சிகப்பு வஸ்திரத்தால் மூடி வினாயகரின் தலை பாகத்தில் வஸ்த்ர கூர்ச்சத்துடன் கூடியதாக கும்ப ஸ்தாபிக்கவும். கும்பத்தை சுற்றி 8 கடங்கள் ஸ்தாபிக்கவும் கும்பத்தில் மஹா கணபதியையும் அதை சுற்றிலும் இருக்கிற 8 கும்பங்களில் 8 மூர்த்திபர்களையோ பூஜிக்கவும். முன்பு கூறிய முறைப்படி தியானத்துடன் கந்தம், புஷ்பம், நைவேத்தியம் இவைகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாசமுறை கூறப்படுகிறது. இங்கு இரண்டு அம்பாளுடன் கூடியிருந்தால் விக்னேஸ்வரனின் இரண்டு பக்கத்திலும் இரண்டு வர்த்தனி கும்பம் வைத்து ஒரு அம்பாளுடன் கூடி இருந்தால் வடக்கு பாகத்தில் ஒரு வர்தனி வைத்து பூஜிக்கவும் என்று கூறப்படுகிறது.

பிறகு தத்வதத்வேஸ்வர, மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸ முறை அதன் பூஜை முறையையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமகர்மாவை செய்யவும் என்று ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தமாக உள்ள ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி கும்பம் அக்னி இவைகளை பூஜித்து வினாயகரை எடுத்து ஆலயத்திற்குள் நுழைந்த மானுஷ தைவிக பிம்ப விஷயத்தில் ரத்ன அவுஷதி இவைகளால் நிரம்பிய பிரம்ம சிலையை வைத்து, அந்த சிலைக்கு மேல் வினாயகரை ஸ்தாபனம் செய்யவும். முகூர்த்த லக்னத்தில் மந்திரநியாசம் செய்யவும், சலபிம்பத்தை ஸ்நாநவேதிகையில் வைத்து மந்திர நியாசம் செய்யவும். பிறகு அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும், தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும். பிறகு ஸ்நானம் நைவேத்தியம் உத்ஸவம் ஆகியவைகளும் செய்யவும். இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறப்பட்டது. பிறகு இங்கு பாரதி என்று தேவியுட கூடிய கணேச விஷயத்தில், அவ்வாறு ஏகசக்தி உள்ள கணேசஸ்தாபன விஷயத்திலும் செய்ய வேண்டி விசேஷ முறை கூறப்பட்டு விக்னேஸ்வர ஸ்தாபன பலனை கூறுகிறார். பிறகு நித்யார்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்திய அனுஷ்டானமுடைய ஆசார்யனுக்கு துவார பூஜை துவார பாலார்சனை முன்னதாக நுழைவு முறை முதலில் கூறப்படுகிறது. பிறகு துவார பால விஷயத்தில் விகடபீமனையோ ஸ்வாமிக்கு சொல்லப்பட்ட துவாரபாலார்ச்சனையோ செய்யவும் என விசேஷ பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிற பூஜா விஷயத்தில் ஏகத்ரிம்சத்கலந்யாஸம் செய்யவும். பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிம்ப சுத்தி முறை கூறப்படுகிறது. நிர்மால்யமான பூஜா திரவ்யங்களை நிர்மால்ய தாரியான குண்பசண்டரிடம் கொடுக்கவும் அல்லது தள்ளுபடி செய்யவும். பிறகு கணேசகாயத்ரி மந்திரம் சந்தர்ப முறையாக கூறப்படுகிறது. உலோகம், சித்திரம், முதலிய பிம்ப விஷயத்தில் சுத்தி செய்யும் முறை விசேஷமாக கூறப்படுகிறது. ஆசனம் அமைப்பது மூர்த்தி பூஜை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆவாஹனம் முதலிய மற்ற ஸம்ஸ்கார முறையையும் தூபதீப நைவேத்தியம் வரையிலான பூஜை முறையும் வர்ணிக்கப்படுகிறது.

இந்த பூஜாவிதியில் சந்தனம் முதலான திரவ்யங்களின் அளவு பஸ்ச்சிமதுவார அர்ச்சனையில் கூறப்பட்டபடி கிரஹித்து கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை முறை கூறப்படுகிறது. முதலில் பிரதமாவரணத்தில் ஆக்னேயம் நைருதி வாயு ஈசானம் இந்த திக்குகளில் கிழக்கு முதலான திக்குகளிலும் ஈசானாதிகளையும் ஹ்ருதயாதி மந்திரங்களையும் அதற்கு வெளியில் நான்கு ஆவரணங்களிலும் முறையாக ஹஸ்த்திவக்திரன் முதலான 8 மூர்த்திபர்கள் ஆமோதன் முதலானவர்கள் 8 திக்பாலர்கள் அஸ்திரங்கள் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஒன்று இரண்டு மூன்று ஆவரணங்களாலோ பூஜிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் பாட்டுக்களுடன் கூடியதும் நைவேத்ய பலிஹோமத்துடனும் முறைப்படி செய்யலாம் என்று கிரியைகளின் வரிசையை குறிப்பிட்டு ஹோமம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்யோத்ஸபரிதி விதி கூறப்படுகிறது. ஒரு காலம், இரண்டு காலம், மூன்று காலம், நான்கு காலம், ஐந்து காலம், ஆறு காலம், ஏழுகாலம், எட்டுகாலம் என்றோ அல்லது எப்பொழுதுமோ கணேசனுக்கு நித்ய பூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சதுர்த்தியில் இஷ்டசித்திக்காக பலவித பக்ஷ்யங்களுடன் கூடிய ஸ்நபன அபிஷேகத்துடன் பூஜை செய்யவும் என்று கூறி ஐந்து, இருபத்தி ஐந்து, ஒன்பது, நாற்பத்தி ஒன்பது ஆகிய எண்ணிக்கையுள்ள ஸ்நபன விஷயத்தில் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு 108,ஸ்நபன விஷயங்களில் தேவதையை பூஜிக்கும் முறையை கூறப்படுகிறது. ஸ்நபன விஷயத்தில் இரண்டு சக்தியுடன் கூடிய வினாயகர் விஷயத்திலும் ஒரு சக்தியுள்ள விஷயத்திலும் விசேஷம் கூறிய பிறகு உத்ஸவத்தில் தமநாரோபணம், பவித்ரோத்ஸவம், தீபாரோபனம், வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்திய கர்மா இவைகளை முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிராயச்சித்தம் ஜீரணோத்தாரணம் முதலியவை முன்பு போல் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் மூஷிகத்தையோ விருஷபத்தையோ வரையவும், சிவோத்ஸவத்திலும், வினாயகருக்காக உத்ஸவம் நித்தியம் செய்யவும் என்று விசேஷம் கூறப்பட விநாயகர் உத்ஸவ விஷயத்தில் சக்ராஸ்திரம், திரிசூலாஸ்திரம், விக்னேசாஸ்திரம் இவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளவும் என்று கூறப்படுகிறது. உத்ஸவ பிரதிமை லக்ஷணப்படி அமைக்கவும். உத்ஸவ விஷயத்தில் சொல்லப்படாத பலி திரவ்யம், ஹோமம், திரவ்யம் மற்ற எல்லாம் சிவனுக்கு கூறப்பட்டபடி செய்யவேண்டும் என்ற விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு கணேச மந்திரத்தினால் வச்யம், உச்சாடனம், வித்வேஷனம் மாரணம் ஆகிய கர்மாக்களையும் பவுஷ்டிக சாந்தி கர்மாக்களையும் ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களையும் சாதிக்கலாம் என கூறப்படுகிறது. கணேசனின் பிரதிஷ்டை எல்லா இடத்தில் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ பாலஸ்தாபனம் இன்றியோ செய்யலாம் என விசேஷ முறை கூறப்படுகின்றன. முடிவில் சைவாலயம் அமைக்கும் முறையின் முதலிலோ விக்னேஸ்வரரையோ ஸ்தாபிக்கவும். இவ்வாறு நாற்பத்தி ஐந்தாவது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அமைப்பு முறை முதற்கொண்டதாக வினாயகரின் பிரதிஷ்டையை கூறுகிறேன். பட்டணம், எட்டு திசைகள் அதன் முடிவு, அதன் இடைவெளி முதலிய இடங்களில் வினாயகர் ஆலய இருப்பிடமாகும்.

2. சிவாலயத்திலும், எட்டு திக்கிலும், விருப்பமுள்ள இடத்திலும் மண்டபம் முதலிய இடங்களிலும் நிழல் தரும் குளிர்ச்சியான மரங்களின் கீழ்பிரதேசங்களிலோ அல்லது எல்லா ஆலயத்திலுமோ

3. கடைவீதி, தேரோடும் வீதி, வீடு இவைகளிலோ, மற்ற எந்த இடத்திலேயும் அமைக்கலாம். வினாயகர்க்கு நமக்கு விருப்பமான திசையை நோக்கி யுள்ளதான முகம் அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

4. பிறகு ஒரு முழம் முதல் முப்பத்தி மூன்று முழு சுற்றளவு உள்ளதாகவும் ஒரு பாகம் முதல் ஒன்பது பாகம் பூமி உடையதாக அணுக வேண்டும்.

5. விசேஷமாக கஜப்ருஷ்டம் போலும் மற்ற உருவமுடையதாகவோ திசைகளில் (கோபுரத்தில்) வினாயகரையுடையதாகவும் ஆக்னேயாதி கோணங்களில் மூஞ்சூறையுடையதாகவும் கோபுரம் அமைக்க வேண்டும்.

6. கணங்களையுடையதாகவோ, ஸ்கந்த ரூபங்களையுடையதாகவோ அமைப்பது அதமாலயம் ஆகும். முன்பு போலவே கர்பந்யாஸமும், ஆத்யேஷ்டிகை பூஜையுடன் கூடியதாக வேண்டும்.

7. இந்திராதி மூர்த்தியுடன் கூடியதாகவோ, மத்தியில் ஸ்தூபி கும்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ, முன் சொன்ன முறைப்படி ஆலய அமைப்புடன் கூடியதாகவோ அமைக்க வேண்டும்.

8. பிரகாரம் மண்டபமிவைகளுடன் கூடியதும், மண்டபம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட தாகவும், மண்டப உருவமாகவோ, கொட்டகைப் பந்தலமைப்பு உள்ளதாகவோ வினாயகரின் ஆலயத்தை அமைக்க வேண்டும்.

9. சுற்றிலும் பரிவார மூர்த்தி கூறப்பட்டுள்ளது. விசேஷமாக அந்த விபரமும் கூறப்படுகிறது. விச்வரூபர், விசாலாக்ஷர், அக்ஷயர், மதவிப்ரமர்

10. உன்மத்தர், லலிதன், பீமன், தீக்ஷ்ண தம்ஷ்ட்ரன் என்ற முறையாக வினாயகரின் அஷ்ட மூர்த்தீசர்களையோ அல்லது அவர்களை பீடரூபமாகவோ இந்திராதி திக்குகளில் உள்ளவர்களாக

11. முன்பு சொன்ன பிரகாரம் அமைக்கவும். திவாரத்தின் முன்பக்கம் மூஞ்சூறையும் திவாரத்தின் இருபக்கமும் விகடன், பீமன் என்ற திவார பாலகர்களை அமைக்க வேண்டும்.

12. நிர்மால்யதாரியான கும்ப சண்டரை ஈசான திக்கில் ஸ்தாபிக்கவும். ஆமோதன், ப்ரமோதன், ஸூமுகன், துர்முகன் என்றும்

13. அவிக்ணன், விக்னராஜன், பக்ஷ்யாசீ, பஞ்சஹஸ்தன் ஆகிய இவர்கள் அஷ்டமூர்த்திபர்கள் ஆவர், அவர்களை வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

14. ஹஸ்திவக்த்ரன், ப்ரலம்போஷ்டன், விக்னேசர், கணாதிபர், வினாயகர், ஏகதந்தர், பக்ஷ்ய ப்ரியன், அஹிமேகலர்.

15. ஆகிய இவர்கள் வினாயகரைப் போலுள்ளவர்களாக விக்னேச்வரனின் அஷ்ட மூர்த்திபர்களாவர். வாயிற்படியின் இருபக்கமிருக்கும் திவாரபாலகர்களை பூதரூபமாகவும் இரண்டுகை உடையவர்களாகவும்

16. இடது கையில் உலக்கையும், வலது கையில் தண்டத்தையும் தரித்தவர்களாகவும், உக்ரமான தித்திப் பற்களையுடையவராகவும், சிங்கத்தின் தலைமேல் ஒரு காலை வைத்திருப்பவர்களாகவும்

17. சிவந்த ரூபமும், ரவுத்ர உருவம், விகாரமான முகத்தை உடையவர்களாகத் திவாரபாலகர்களை அமைக்கவேண்டும். மூஷீகமானது, புகைவர்ணம், சிவந்த கண், அழகான தித்திப்பல் இவைகளையும்

18. நீண்டவால், நான்கு கால்கள், சலங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாக அமைக்கவேண்டும். கும்போதரம், (கும்பசண்டர்) நான்கு கை, உளி, சூலம், கத்தி, தண்டம் இவைகளை தரித்தவராகவும்

19. சிவந்தவர்ணராயும், நன்கு பிரகாசிப்பவராகவும், பத்ர பீடத்தில் அமர்ந்திருப்பவராக அமைக்கப்படவேண்டும். வெண்ணிறமானவர்களாகவும், பெரிய சரீரம், உக்ரமானவர்களாகவும் பலவித அழகான ஆடை தரித்தவர்களாகவும்.

20. பாசம், அங்குசம், தன்னுடைய தந்தம், துடையில் வைத்த கை இவைகளையுடைய கைகளை உடையவர்களாயும் வினாயகமூர்த்திக்கு எதிர்நோக்கி உள்ளவர்களாக பரிவார தேவதைகளை அமைக்க வேண்டும்.

21. பரிவார தேவதைகளின் நடுவில் ÷க்ஷத்ர பாலகர்கள் கூறப்பட்டுள்ளன. பலிபீடம் மஹாபீடம் முன்பு போல் அமைக்க வேண்டும்.

22. பீடத்தின் எட்டுதளங்களிலும் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளை பூஜிக்கவேண்டும். கர்ணிகை பூதேசனையும் பீடத்தின் வெளியில் திக்பாலர்களையும், தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

23. ஹே பிராம்மணோத்தமர்களே, வினாயகரின் அமைப்பு முறை சுருக்கமாக கூறப்படுகிறது. கேளுங்கள், கற்சிலை முதலான திரவ்யங்களால் உத்தமமான பஞ்சதாளம் என்ற அளவால் வினாயகரை செய்ய வேண்டும்.

24. கர்பக்ருஹ அளவில் ஐம்பதாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஐந்தாவது அம்சத்திலிருந்து ஒருபாகம் அதிகமாக முப்பதாவது பாகம் வரையில் உள்ள அளவு கர்பக்ருஹ அளவாக உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

25. தூண்களின் அளவாலும், வாயிற்படி அளவாலும் கர்பக்ருஹ அளவு செயற்பாலது. லிங்கம் முதலியவைகளின் அளவுப்படியே அல்லது பிம்ப லக்ஷணப்படியோ செய்தல் வேண்டும்.

26. கேசம் முதல் கால் அடிபாகம் வரை அறுபத்தி நான்கு அம்சமாக பிரிக்க வேண்டும். தலைப்பாகை பாகம் ஓரம்ச மாத்ரம், கேசம் இரண்டு அங்குலத்தினாலும்

27. பன்னிரண்டங்குலத்தால் முகம், இரண்டங்குலத்தால் கழுத்துமாக கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து இதயம் வரை பதினொன்றங்குலமாகும்.

28. ஹ்ருதயத்திலிருந்து தொப்பூழ்வரை பன்னிரண்டங்குலம், குஹ்ய பிரதேசம் ஐந்து அங்குலமாகும். அவ்வாறே முழந்தாள் வரை ஐந்தங்குலம், முழந்தாளின் நீளம் மூன்றங்குலமாகும்.

29. முழந்தாளின் கீழ் பிரதேசம், துடையின் சமமான அளவாகும். பாததளத்தின் உயரம் இரண்டு மாத்ரையாகும். கேசத்திலிருந்து கண் சூத்ரம் வரை நான்கங்குலமாகும்.

30. தந்தத்தின் அடிபாகத்திலிருந்து முழந்தாள் வரையில் துதிக்கையின் நீளமாகும். தந்தத்தின் நீளத்திலிருந்து நான்கு மாத்திரையளவு அந்த நுனியின் அளவாகும்.

31. வலது அல்லது இடது பாகத்தில் ஒரு தந்தம் அமைக்கவும். தலையில் கும்ப சுற்றளவு ஒவ்வொன்றும் மூன்றங்குல சுற்றளவாகும்.

32. கண்ணானது காதின் அடிபாகம் வரையிலாக நான்கு அங்குலமாக கூறப்படுகிறது. பத்து மாத்ரையளவில் காதின் அகல பாகமும், ஒன்பது அங்குலம் காதில் நீளமாகவும் செய்ய வேண்டும்.

33. கையிடுக்கு இரண்டின் இடைவெளி பதினைந்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது. கையிடுக்கிலிருந்து மேல்பக்கவாட்டுக் கையின் இடைவெளி ஆறங்குலமாகும்.

34. நடுசரீரம் (தொந்தியின்) சுற்றளவு பதினான்கு அங்குலமாகும். இதயத்திலிருந்து தொப்பூழ் அடிபிரதேசம் வரை பத்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

35. நாபிக்கு கீழ் பிரதேசத்திலிருந்து குஹ்ய பிரதேசம் வரை எட்டங்குலமாகும். இரண்டு துடையும் எட்டங்குலம், முழந்தாள் மூட்டு மூன்றங்குலமாகும்.

36. இரு முழந்தாளும் காலின் அடிபாகம் வரை எட்டங்குலமாகும். கஜவக்த்ரனாகவும் கணங்களுக்கு அதிபதியாயும், பூதாகார உருவ அமைப்பும் பெரிய வயிறு படைத்தவராகவும்

37. பாம்பை பூணூலாக அணிந்தவராகவும், கனத்த உருண்டையான துடை, முழந்தாள் உடையவராகவும், கருப்பானவரும் (நீலநிற ஆம்பல் பூபோல் பிரகாசிப்பவரும்) நான்கு கைகளால் பிரகாசிப்பவருமாகவும்

38. வலப்பாக அல்லது இடப்பாகத்தில் வளைந்த துதிக்கையையுடையவராகவும் தாமரை பீடத்தில் அமர்ந்திருப்பவராகவும், தன்னுடைய வலது பக்க இரண்டு கையில் தன் தந்தத்தையும் கோடாலியையும் தரித்திருப்பவராகவும்

39. லட்டு, அக்ஷமாலையையோ, நீலோத்பவ புஷ்பத்தையோ இடது கையில் வைத்திருப்பவராகவும் சிவப்பு வஸ்திரம் அல்லது கருப்பு வஸ்திரம் அல்லது மஞ்சள் வஸ்திரம் தரித்தவராகவோ

40. மஞ்சள் சட்டையணிந்தவராகவும், கிரீட மகுடத்தால் பிரகாசிக்கிறவராயும், வெண்மையான பூணூலையணிந்தவரும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவறாகவும்

41. தன் கொம்பான தந்தத்தையும் அங்குசத்தையும் வலது கரங்களிலும் இடது கைகளில் பாசம், லட்டு இவற்றை தரித்திருப்பவராகவும், நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ வினாயகரை அமைக்க வேண்டும்.

42. மூன்று கண்களால் பிரகாசிப்பவராகவோ, இரண்டு கண்களை உடையவராகவோ, தாமரையிலமர்ந்த கோலத்திலோ, பீடத்திலமர்ந்தவாறோ, மூஞ்சூறின் மேலமர்ந்தவாறோ

43. விருப்பப்பட்ட ஆஸனத்திலமர்ந்தவாறோ, திருவாசியால் அலங்கரிக்கப்பட்டவராகவோ, சக்தியுடன் கூடியவராகவோ, தனிமையானவறாகவோ வினாயகரை வடிவமைக்க வேண்டும்.

44. வினாயகர் வலது இடதுபாகம் முறையே பாரதீ, ஸ்ரீ என்ற இரண்டு சக்திகளோடு கூடியவராகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியவராகவோ அமைக்கவும், அந்த தேவியின் (லக்ஷணம்) அடையாளம் கூறப்படுகிறது.

45. ஆஸநத்தில் அமர்ந்தவளாகவும், ரத்ன கிரீடமகுடங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் கரு நிறமுள்ளவளாகவும் உள்ள சக்தியை தரித்திருப்பராயும் திசைகளை ஆடையாக உடைவரும் ஆன

46. வினாயகரின் மடியில் அமர்ந்தவளும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் திசைகளை வஸ்திரமாக உடையவளும், அழகான திருமுகத்துடனும் இரண்டு கைகளை உடையவரும்

47. எல்லா அவயவ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், விக்னேச்வரீ என்ற பெயரையுடையவளும் இடது கையில் பாசமும் வலது கையால் (வினாயகரின்) குஹ்ய பிரதேசத்தை

48. தொட்டுக் கொண்டிருப்பவளும் வினாயகரும், அம்பாளின் குஹ்ய பிரதேசத்தை தொட்டுக் கொண்டு இருப்பவராகவும், ஆன மந்த்ர நாயக வினாயகரை தியானிக்க வேண்டும். நான்கு கை, முக்கன், பாசம், அங்குசத்தை தரித்திருப்பவரும்

49. கரும்பு தரித்த கையுடன் இடது கையால் தேவி குஹ்யத்தையும் துதிக்கையாலும் குஹ்யத்தையும் தொட்டு அல்லது கரும்பையோ தொட்டுக் கொண்டதாகவோ

50. இவ்வாறாக வினாயகரை பாவித்து அந்த மந்திரங்களால் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரண்டாவது வரிசையான கவர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஹ வும் முதல் ஸ்வரமான (அ)வும்

51. பிந்து நாதம் சேர்ந்த ம் என்ற எழுத்தும் விநாயகரின் பீஜ மந்திரமாகும் பதிமூன்றாவது அச்செழுத்தின் முடிவான அவு என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் வினாயகரின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

52. கவர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் ம் ர என்ற எழுத்துடன் ஈ என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் க்ரீ என்றும் ஹ்ருதய எழுத்தான ஹகாரத்துடன் ரீ என்று சேர்த்து ஹ்ரீ என்றும்,

53. லக்ஷ்மீ பீஜம் என்கிற ஸ்ரீம் வாக்பீஜமான க்லிம் சேர்ந்ததாக உபயோகிக்கவும். பஞ்ச பிரம்ம ஷடங்க மந்திரங்களை மூலமந்திரத்தை அனுசரித்து கூற வேண்டும்.

54. வக்ரதுண்டாய ஹும் என்று ஹ்ருதய மந்திரங்களால் ஹ்ராம் என்ற எழுத்தாலான ஆறு எழுத்துக்களை கொண்ட நம: ஸ்வாஹா, வஷட், ஹூம், வவுஷட் ஆகியவை முடிவுடன் கூடியதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை

55. பட்காரத்துடன் கூடியதாகவும் கூறவும். இரண்டாவது வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் அதனுடன் ஆறாவது வர்க்கத்தின் முடிவான ம் சேர்த்து

56. ஏழாவது எழுத்து வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ல் ம், அதே வர்க்கத்தின் நான்காவது, எழுத்தான வ் அந்த வர்க்கத்தின் இரண்டு, ஒன்றாவது எழுத்தான ர ம், ய ம் ஆகிய இந்த ஐந்து (க்,ல்,வ்,ர்,ய்) இவைகளுடன் பதினான்காவது உயிரெழுத்தான அவு என்ற எழுத்துடன்

57. பிந்து நாதமானம் சேர்ந்ததே தசாக்ஷரம் என்ற பீஜமந்திரமாகும். க காரத்துடன் பிரம்ம மந்திரம், அங்கமந்திரங்களை முறையாக கூறவும். (கவும், லவும், வவும், ரவும், யவும்)

58. விரி என்ற சப்தத்தை மூன்று முறை கூறி (விரி விரி விரி) கணபதிம் என்ற சொல்லையும் வரதம் வரத என்ற சொல்லையும் வரத, வரத என்றும் கூற வேண்டும்.

59. ஸர்வ லோக வசம் என்பதுடன் ஆநய என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூறுவது இஷ்டமாகும். இது சக்தி கணபதியின் மூலமந்திரமாகும். (ஓ விரி விரி கணபதே வரத வரத ஸர்வ லோக வசமாநய ஸ்வாஹா)

60. ஓம்காரம் முதற்கொண்டு ஹ்ருதயபீஜ மந்திரமான காம் கா என்ற எழுத்துடன் சேர்ந்ததாக ஹ்ருதயாதி மந்திரங்களை கூற வேண்டும்.

61. கணசாதி பதத்துடன் கூடியதும் பிரதான மந்திரமாகும். (கணேசாதிப:), இக்ஷüததி ஸ்வர்ண த்வீபம், கல்பத்ருமம்

62. ஸிம்மாஸநம் இவைகள் சக்தி கணபதியின் ஆசன மந்திரங்களாகும். வலது கையின் அடிபாகத்தை மூக்கின் மேல் வைத்து

63. சிறிது நுனியை வளைப்பதுபோல் செய்வது கணேச்வரீ முத்ரையாகும். வேறான மூலமுத்ரை கூறப்படுகிறது. நடுவில் விரலை விரித்து

64. மோதிர விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறிது வளைத்து கட்டை விரலை கொம்பு போல் செய்து காண்பிப்பது போல் மூலமுத்ரையாகும்.

65. இந்த மூலமுத்ரையால் உத்தமமான ஆசார்யன் எல்லா கிரியைகளிலும் உபயோகிக்கவும். பிறகு அங்குரார்ப்பணத்துடன் கூடியதாக பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

66. முன்பு கூறப்பட்ட பிரதிஷ்டாகாலத்தில் பீடத்தில் நவ ரத்ன ந்யாஸமோ இல்லையெனில் பஞ்ச ரத்ன ந்யாஸமோ, அல்லது தங்கமோ, தங்க ஊசியுடன் கூடியோ

67. முன்பு கூறியபடி முறையாக இந்திராதி தேவர்களை நினைத்து நியாஸம் செய்யவும். பிறகு (பத்ம) ஜலாதிவாசம் செய்து நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

68. பாத்திரத்திலுள்ள நெய், தேன் இவைகளால் ஹ்ருதய மந்திரத்தினாலும் தங்க ஊசியால் நனைத்து நயோன்மீலனத்தை திரையிட்டுச் செய்து தான்யங்களை காண்பிக்க வேண்டும்.

69. வினாயகர் தேவியுடன் கூடி இருந்தால் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம் செய்யவும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

70. லம்ப கூர்ச்சத்துடன் கூடியதாக ஜலாதிவாசம் ஹ்ருதய மந்திரத்தினால் செய்யவும். (பிம்பத்தை) சுற்றிலும் அஷ்டதிக்பாலர்கள் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

71. யாகசாலைக்காக மண்டபம் ஆலயத்தின் முன்போ இருபக்கத்திலோ அமைக்க வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ, வடக்கிலோ, அழகுபடுத்தப்பட்ட மண்டபம் அமைக்க வேண்டும். பத்ம குண்டத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

72. குண்டங்கள் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். வ்ருத்தகுண்டம் சதுரஸ்ரம், அஷ்டாஸ்ரம் முதலிய குண்டங்களையோ அமைக்க வேண்டும்.

73. எல்லா யாகத்திலும் வ்ருத்த குண்டம் பிரதானமாகும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைக்க வேண்டும்.

74. சில்பியை திருப்தி செய்வித்து அனுப்பி பிராம்மண போஜனம், புண்யாஹவாசனம் செய்து பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.

75. முன்பு கூறியமுறைப்படி பூபரிக்ரஹமும் செய்து, ஜலாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து வந்து ஸ்நான வேதிகையில் வைக்க வேண்டும்.

76. வடக்கிலுள்ள மண்டபத்தில் முன்புகூறிய முறைப்படி ஸ்நபநம் செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து முடிவில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

77. சயன வேதிகையில் ஸ்தண்டிலத்தின் மேல் மயிற்தோகை முதலான திரவ்யங்களால் ஐந்து வித சயனம் அமைக்கவும் அல்லது சுத்த வஸ்திரங்களால் சயனம் கல்பித்து விநாயகரை சயன அதிவாஸம் செய்யவும்.

78. சிவப்பான இரண்டு வஸ்திரங்களால் போர்த்தி கும்பந்யாஸம் செய்யவும். வினாயகருடைய தலைப்பக்கம், நூல்சுற்றி கூர்ச்சத்துடன் கூடியதாகவும்

79. கும்பத்தை நல்ல வஸ்திரம், பலா, மாவிலை, அரசிலையுடன் கூடியதாகவும், பஞ்சரத்னோதகமுமோ அல்லது ஸ்வர்ணோதம், மா÷ஷாதகமுமோ

80. மாதுளம் பழத்துடன் கூடியதான எட்டு கடங்களை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். வஸ்திரம் தங்கம், சந்தனம், புஷ்பம் இவைகளுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

81. பூதசுத்தியுடன் கூடியதாக வித்யா தேஹ கல்பனமும், கணேசரை ஆவாஹித்தவராகவும் முன்பு கூறப்பட்ட தியான முறையுடன் சந்தனம், புஷ்பம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.

82. பரிவார கும்பங்களில் ஹஸ்தி வக்த்ரன் முதலானவர்களையோ அல்லது ஆமோதன் முதலானவர்களையோ, நைவேத்யம் வரையிலாக உத்தமமான ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.

83. இரண்டு தேவியுடன் இருந்தால் இரண்டு பக்கத்திலும் வர்த்தனீ கும்பத்தை ஸ்தாபிக்கவும். ஒரே தேவியுடன் இருந்தால் வடக்கு திக்கில் மட்டும் ஒரு கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வங்களை அதன் அதிபர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

85. கணேசன் முதலான தத்வ தத்வேஸ்வரர்களை சதுர்த்தி விபக்தியை முடிவாக கொண்டு அதனுடன் நம: என்ற பதத்துடன் கூடியதாக பூஜிக்கவும். இந்த முறைப்படியே ஆத்மதத்வ, வித்யா தத்வ, சிவதத்வேஸ்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

86. மூர்த்தி மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க மூர்த்திகள் முன்பு கூறியபடியாகும். இந்திராதி திக்குகளில் ஹஸ்தி வக்த்ராதிகளையோ, ஆமோதாதிகளையோ மூர்த்தியதிபர்களாக பூஜிக்க வேண்டும்.

87. பஞ்சகுண்ட பக்ஷத்தில் மூர்த்தீசர்கள் எட்டு மூர்த்தீசர்களில் முதன்மையாக உள்ள ஐந்து மூர்த்தீசர்களாகும். மூர்த்தி, பஞ்சப்ரம்மம், ஷடங்கங்கள், வித்யாதேஹம், மூலமந்திரம் இவைகளையும் பூஜிக்க வேண்டும்.

88. சந்தனம், புஷ்பாதி திரவ்யங்களால் மூர்த்தி கும்பங்களை பூஜித்து ஹோமம் செய்யவேண்டும். முன்பு கூறப்பட்டுள்ள ஆபரணங்களுடன் கூடிய ஆதிசைவ குலத்தில் உதித்த (பிறந்த)

89. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் கூடி ஹோம கர்மாவை செய்யவும். நான்கு திசைகளில் நான்கு வேதபாடங்களையும் ஆக்னேயாதி கோணங்களில் மூலமந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

90. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை அக்னிகார்ய முறைப்படி செய்யவேண்டும். கிழக்கு முதலான திசைகளில் தத்புருஷன் முதலான மூர்த்தி மந்திரங்களையும் ஆக்னேயம் முதலான கோணங்களில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும்

91. பிரதான குண்டத்தில் ஈசனான விநாயகரையும் எல்லா தேவர்களையும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களுடன் ஆவாஹித்து சந்தனம் முதலான திரவ்யங்களால்

92. சமித்து, நெய், அன்னம், பொறி எள், அப்பம், வெல்லம், யவை முதலிய திரவ்யங்களால் த்ருப்தி செய்விக்கவேண்டும். தத்வ தத்வேச்வரன், மூர்த்தீ மூர்த்தீ ச்வரர்களுக்கும் ஹோமம் செய்யவும்.

93. சாந்தி கும்ப பிரோக்ஷணம், அந்தந்த மந்திரங்களின் ஜபம், தர்ப்பையால் ஸ்பரிசிப்பது ஆகியவை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

94. பிறகு அதிகாலையில் எழுந்து மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் சுத்திகளை முடித்து கொண்டு சயனாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து கும்பம், அக்னி இவைகளை பூஜிக்க வேண்டும்.

95. பிராயச்சித்த நிமித்தமாக அகோர மந்திரத்தை நூறு ஆஹுதி செய்யவும். பூர்ணாஹுதி செய்து ஆசார்யன் ஆலயத்தை அடைய வேண்டும்.

96. மானுஷ பிம்பம், தெய்விக பிம்பமாக இருப்பின் முன்புபோல் சம்ஸ்காரங்களை செய்யவேண்டும். பிரம்ம சிலையை முன்பு கூறிய மந்திரத்தினால் நவ ரத்னம், ஓஷதிகள் இவைகள் நிறைந்ததாக செய்ய வேண்டும்.

97. பிறகு விநாயகரை பிரம்ம சிலையுடன் கூடியதாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். முன்புபோல் விநாயகரின் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விநாயகரை ஸ்தாபித்து

98. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர ந்யாஸம் செய்யவும். சல உற்சவ பிம்பமாக இருப்பின் ஸ்நான வேதிகையிலேயே மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

99. பிம்பத்தின் முன்பாக கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை பிம்ப ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்ற கும்பங்களில் இருந்து மந்திரங்களால் பீடத்தை சுற்றிலும் நியாஸம் செய்ய வேண்டும்.

100. அந்தந்த கும்பதீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும். தத்வதத்வேச மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸம் முன்பு போல் செய்ய வேண்டும்.

101. முடிவில் ஸ்நபனாபிஷேகமும், நைவேத்யம், உற்சவம் (திருவீதிஉலா) செய்ய வேண்டும். விநாயகர், பாரதி, ஸ்ரீ என்ற இருதேவிகளுடன் கூடிஇருந்தால்

102. அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி உத்தமமான ஆசார்யன் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விக்னேச்வரீ என்ற தேவியுடன் கூடி இருந்தால் அந்த தேவியின் பெயரால் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. கும்பத்தின் பக்கத்திலுள்ள வர்த்தினீ மந்திரத்தால் பூஜிக்கவும். அம்பாளின் ஹ்ருதயத்தில் விசேஷமாக இந்த மந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

104. இவ்வாறாக விநாயக பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் புத்திமானாகவும் ஆகிறான், ஆயுளை விரும்புபவன் ஆயுளை அடைகிறான், தனத்தை விரும்புபவன் தனவான் ஆகிறான்.

105. கல்வியை விரும்புபவன் சுத்தமான கல்வியையும், அழகான பெண்ணை (ஸ்திரீ) விரும்புபவன் அழகான பெண்ணையும், புத்திரர்களை, சவுபாக்கியம், ஆரோக்யம், புகழ், வீர்யம், ஐஸ்வர்யம், சுபம் இவைகளை இந்த லோகத்திலும் அனுபவித்து

106. மேலுலகத்தில் மோக்ஷத்தையும் வினாயகருடைய ஸ்தாபனத்தால் அடைகிறான். விநாயகரின் பூஜை முறையை சுருக்கமாக கூறுகிறேன். ஹேமுனிபுங்கவர்களே கேளுங்கள்,

107. கட்டாயமாக காலையில் எழுந்து (சவுசம்) காலைக் கடன்களையும், ஸ்நானத்தையும் முடித்து ஸந்தியா வந்தனம், மந்திரதர்ப்பணம் இவைகளை முன்பு போல் செய்து

108. ஆலயத்தை அடைந்து நமஸ்காரம் செய்யவும், ஆசமனம் செய்து ஸகளீகரணம் ஸாமாந்யார்க்கியம் உடைய ஹஸ்தத்தினால் ஆசார்யன்

109. திவாரத்தை (வாயிற்படி) ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து விகடனையும், பீமனையும் பூஜித்து, தேவருக்கு கூறப்பட்ட விமலன், சுபாஹூ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.

110. திரையை ஹ: என்று கூறி அர்ச்சித்து வலது காலால் நுழைந்து வாஸ்த்வீசனை பூஜித்து, தன்னுடைய ஆசனத்தில் வடக்குமுகமாக அமர்ந்து

111. ஆத்மாவை சக்தியுடன் இணைத்து உறுதி நிலை தளர்ந்ததாக பாவிக்க வேண்டும். சக்தியிலிருந்து உண்டான அம்ருதத்தினால் நனைந்த சரீரமுடையவனாக (கூட)

112. அஸ்திர மந்திரத்தினால் கையை சுத்தி செய்து கொண்டு சந்தனத்தினால் அலங்காரம் செய்து கொண்டு ஈசன், தத்புருஷன், அகோரன், வாம தேவ, ஸத்யோஜாத மந்திரங்களை ஐந்து விரல்களிலும் நேத்ர மந்திரத்தையும் உள்ளங்கையிலும்

113. மூலமந்திரத்தையும் உள்ளங்கையிலும், நியஸித்து ஹ்ருதயம், சிரஸ், சிகாகவசம், என இந்த மந்திரங்களை முறையாக பெரிய விரல் முதற்கொண்டு விரல் நுனிகளில் நியாஸம் செய்து மூலமந்திரத்தையும்

114. வித்யாதேஹத்தையும் நியாஸம் செய்து அந்தந்த மந்திரங்களால் சரீரந்யாஸம் செய்து பிறகு விநாயகருக்கு செய்வது போல் ஏக திரிம்சத்கலாந்யாஸம் செய்து கொள்ளவும்.

115. அக்ஷரந்யாஸம் செய்து கொண்டோ, செய்யாமலோ இவ்வாறாக மந்திர மயமான சரீரம் ஏற்படுத்தி விநாயகரை போன்று தன்னை தியானித்து அந்தர்யாகம் செய்து கொள்ளவும்.

116. அல்லது சிவமந்திரங்களால் சிவ சரீர பாவனை செய்து கொள்ள வேண்டும். விநாயகரை ஹ்ருதயம், நாபி, த்வாதசாந்தமான பிந்து ஸ்தானம் இவைகளில் பீஜுத்து ஹோமம் செய்து தியானம் செய்து (ஹ்ருதயம் பூஜை, நாபிஹோமம், பிந்துதியானம்)

117. பிறகு ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் தயார் செய்து ஸமர்பிக்க வேண்டும். முன்பு கூறப்பட்ட திரவ்யங்களுடன் கூடியதாகவோ சந்தனம், புஷ்பம், அக்ஷதை இவைகளுடன் கூடியதாகவோ

118. பாத்யம், ஆசமனத்தையும் அவ்வாறே அர்க்யத்தை மட்டுமோ தயார் செய்து கொண்டு அர்க்ய ஜலத்தினால் ஒவ்வொரு த்ரவ்ய சமூகத்தையும் பிரோக்ஷணம் செய்து

119. ஹ்ருதயம் முதலான மந்திரங்களால் அபிமந்திரிக்கப்பட்ட ஆத்மாவை எல்லா தேவர்கள் அதிஷ்டிதமாக ஸ்மரித்து, மந்திரசுத்தி, பிம்ப சுத்தியையும் செய்யவும்.

120. நிர்மால்ய பூஜையை செய்து வக்ரதுண்டாய வித்மஹே என்றும் ஹஸ்திவக்த்ராய தீமஹி என்றும் பிறகு

121. தன்னோ தந்தி என்ற பதமும் பிறகு ப்ரசோதயாத் என்ற பதத்தையும் சேர்த்து கூறி சாமான்யார்க்யத்தால் பிரோக்ஷித்து பூஜிக்கவும். (வக்ரதுண்டாய) வித்மஹே ஹஸ்திவக்த்ராய தீமஹி, தந்தோ தந்தி - ப்ரசோதயாத்

122. ஹ்ருத மந்திரத்தினால் நிர்மால்ய புஷ்பத் த்ரவ்யங்களை எடுத்து வெளியில் உள்ள நிர்மால்யதாரீ கும்பசண்டரிடம் ஸமர்ப்பிக்க அல்லது வெளியில் போட்டு விட்டு முன்பு கூறியபடி பிம்ப சுத்தி செய்யவேண்டும்.

123. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும். சித்திரபிம்பம் முதலியவைகளுக்கு கண்ணாடியில் பூஜை செய்யும் க்ரியையால் சுத்தி ஏற்படுவதாக எண்ண வேண்டும்.

124. அஸ்த்ர மந்திரத்தினால் இளங்காற்றாலோ விசிறியாலோ, சித்திராதி பிம்பங்களை சுத்தி செய்ய வேண்டும். இவ்வாறாக ஆத்ம, பூ, த்ரவ்ய, மந்திர, பிம்ப சுத்தியாகும்.

125. மத்தியில் ஆஸனம் கல்பித்து பிரணவம், தர்மாதிகளையும், அதர்மாதிகளையும், அதச்சதனம், ஊராத்வச்சதனத்தையும் மத்தியில் பத்மத்தையும்

126. பிரணவயமான தீர்த்தத்தில் பத்ம கர்ணிகையை மஞ்சள் நிறமாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுடன் கூடி இருந்தால் அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி ஆஸனம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

127. பிறகு கணாசநாய என்றும் கணமூர்த்தயே என்றும் ஆவாஹித்து கணபதி முன்புபோல் மந்திரங்களால் வித்யாதேஹம் கல்பித்து

128. பிரணவத்துடன் விக்னேச மூலமந்திரத்தினால் ஆவாஹனம் செய்து ஹ்ருதய மந்திர ஸம்புடிதமாக புஷ்பாஞ்சலி ஹஸ்தமாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும்.

129. ஹ்ருதய மந்திரத்தினால் நிஷ்டுரையால் முதலானவை செய்து அவகுண்டனமும் செய்யவும், ஹ்ருதயம் முதல் அஸ்திரம் வரை உள்ள மந்திரங்களால் முத்ரைகளை காண்பித்து மஹாமுத்ரையையும் காண்பிக்கவும்.

130. ஹ்ருதய மந்திரத்தினால் பாதங்களில் பாத்யமும், முகத்தில் ஆசமனமும், ஈசான வினாயகரை ஸ்மரித்து (தலையில்) அர்க்யமும் கந்த புஷ்பதூபமும் கொடுக்க வேண்டும்.

131. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ, அல்லாமலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். வஸ்திரத்தால் பிம்பத்தை துடைத்து பிம்பத்திற்கு வஸ்திரம் ஸமர்பிக்க வேண்டும்.

132. முகத்தில் ஆசமனம் கொடுத்து சந்தனம், அகில், கோரைகிழங்கு, பச்ச கற்பூரம் இவைகளின் தூள்களுடன் சேர்ந்ததாகவோ அல்லது சந்தனம் மட்டுமோ ஸ்வாமிக்கு சாற்றி (அர்பணித்து)

133. கருமையான அகிலுடன் கூடிய தூபத்தையோ அல்லது வெட்டிவேர், சந்தனம், நிர்யாஸம் என்ற தூப திரவ்யத்தையும் அதனுடன் கற்பூரமிவைகளுடன் கூடி ஹ்ருதய மந்திரத்திற்கு தூபம் கொடுத்து

134. பலவிதமானதும், வாஸனையுள்ளதும், எல்லா ருதுக்களிலும் உண்டாவதும், (தற்போது) அப்பொழுது மலர்ந்ததுமான புஷ்பங்களை (பூ) முன்பு போல் வினாயகர்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

135. நல்லெண்ணையாலோ, நெய்யாலோ பிரகாசிக்கின்ற தீபத்தை ஹ்ருதய மந்திரத்தினால் ஸமர்பித்து, வெண் பொங்கல் முதலியவைகளுடன் கூடிய நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

136. சந்தனம் முதலியவைகளின் அளவு மேற்குத்வார பூஜையில் கூறப்பட்டுள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு தூப தீபத்தின் முடிவில் ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

137. ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான திக்குகளில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும் அதன் வெளியில் ஹஸ்தி வக்த்ரன், ஆமோதன் முதலானவர்களையும் பிறகு

138. அதன் வெளியில் இந்திராதிகள், தசாயுதங்களையும் நன்றாக பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையுள்ள ஆவரணங்களாலோ விநாயகரை பூஜித்து

139. மறுபடியும் தூப, தீபம் மந்திர ஜபங்களை செய்யவும். நைவேத்யம், பலி ஹோமங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

140. புரசமித்து நெய், அன்னம், பொறி, அவல் இவைகளை மூலமந்திரத்தினால் நூறு ஐம்பது, பத்து என்ற எண்ணிக்கைளிலோ ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

141. மூல மந்திர ஆஹூதியின் பத்தில் ஒரு பங்காக அங்க மந்திரங்களால் ஹோமம் செய்யவும். பிறகு நித்யோத்ஸவம் விநாயகர் உத்ஸவ பேரத்தினால் செய்யவும்.

142. முன்பு கூறிய முறைப்படி அந்த பிம்பத்தில் வினாயகரை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம், அக்ஷதை ஆகிய லிங்க உருவங்களில் ஹ என்று கணாஸ்திரம் என்ற அஸ்திரத்தை பூஜிக்கவும்.

143. நித்யோத்ஸவம் சலபேர பிம்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ செய்யவும். முன்பு கூறிய முறைப்படி ஆலய (பிரகாரத்தில்) பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

144. அல்லது பாதுகார்ச்சனையுடன் கூடியதாகவோ ஆலய பிரவேசம் செய்யலாம். ஒருகாலம், இரண்டு காலம் அல்லது மூன்று, நான்கு, ஐந்து காலம்

145. ஆறு, ஏழு, எட்டு என்ற எண்ணிக்கையுள்ள ஸந்தியா காலத்திலோ எப்பொழுதுமாவது வினாயகரை அர்ச்சிக்கவும். இவ்வாறாக அறிந்து பூஜைக்குரிய அங்கங்களால் பிரதி தினம் வினாயகரை பூஜிக்க வேண்டும்.

146. வினாயகரின் நித்ய பூஜையானது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியதாகும். வினாயகரின் பூஜை இஷ்ட சித்தியின் பொருட்டு சதுர்த்தி திதியில் செய்ய வேண்டும்.

147. பலவித பக்ஷணங்கள் ஸ்நபனம் முதலியவைகளுடன் கூடியதாகவும் செய்ய வேண்டும். ஸ்நபனத்தை முன்பு போல் செய்ய வேண்டும். ஆனால் மத்யகும்பத்தில் கணேச்வரரையும்

148. ஐந்து கும்ப ஸ்நபனத்தில் ஆமோதன் முதலியவர்களை நான்கு திக்குகளிலும் நவகலச (9) ஸ்நபனத்தில் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளையும் பூஜிக்கவும். இருபத்திஐந்து கலச ஸ்நபனத்தில்

149. லோக பாலர்களையும் விச்வரூபர் முதலிய எட்டு தேவதைகளையும் எட்டு திக்கிலும் எட்டு திக்கின் இடைவெளியிலும் பூஜிக்க வேண்டும். லோகபாலர்கள், ஆயுதங்கள் (அஷ்ட) வசுக்கள் முதலிய எட்டு பேர்களையும்

150. முன்பு ஆச்ரிதமான (சொல்லப்பட்ட) ஆமோதன், விச்வரூபன், ஹஸ்தி வக்த்ரன் என்ற மூன்று எட்டு தேவதைகளையும் வரிசையாக நாற்பத்தி ஒன்பது கலச ஸ்நபன பூஜையில் தேவதைகளாக பூஜிக்க வேண்டும்.

151. நூற்றி எட்டு கலச ஸ்நபனத்தில் வினாயகர் ஸஹஸ்ரநாமத்தில் உள்ள முதல் நூறு அர்ச்சனைகளை பூஜிக்க வேண்டும். ஆயிரத்து எட்டு (1008) கலசத்தில் (ஸஹஸ்ரநாமத்தில் உள்ளபடி) எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

152. பிறகு ஆசார்யன் எல்லா கும்பங்களிலும் விநாயகரையோ (மட்டும்) பூஜிக்க வேண்டும். பாரதீ, ஸ்ரீ என்ற இரு தேவியுடன் வினாயகர் கூடி இருந்தால் இரண்டு வர்த்தினியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

153. ஒரு தேவியுடன் கூடியதாக இருந்தால் வர்த்தினியை வடக்கு பாகத்தில் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஸ்நபனத்தில் கூறப்படாததை முன்பு ஸ்நபனவிதியில் சொல்லி உள்ளபடி செய்ய வேண்டும்.

154. உத்ஸவமானது, தமனாரோஹனம் என்ற மருக்கொழுந்து சாத்துதல், பவித்ரோத்ஸவம் முதலிய கிரியைகளும் தீபாவளி (கார்த்திகை) வஸந்தோத்ஸவம், மாதங்களில் கூறப்பட்ட மாஸோத்ஸவமும்

155. நவநைவேத்ய கர்மாவும் விசேஷமாக பிராயச்சித்தமும் செய்ய வேண்டும். ஜீர்ணம் முதலியவைகளால் அடையாளம் அடைந்திருந்தால் மற்ற க்ரியைகளை (அதற்கு) முன்பு போல் செய்ய வேண்டும்.

156. மேலும் கொடியில் மூஷீகத்தையோ, வ்ருஷபத்தையோ வரைய வேண்டும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் விக்னேசோத்ஸவம் செய்யலாம்.

157. கொடி ஏற்றுதல், ஹோமம், உத்ஸவபலி, இவையின்றி வலம் வருதல் மட்டும் செய்யலாம். சக்ராஸ்திரமோ அல்லது த்ரிசூலாஸ்திரம் இவற்றை வினாயகரின் அஸ்திர தேவராக செய்யலாம்.

158. முன்பு கூறிய லக்ஷண அமைப்புடன் வினாயகர் உத்ஸவ பிம்பம் அமைக்க வேண்டும். உத்ஸவத்தில் பலித்ரவ்யம் ஹோம திரவ்யங்களான பொருட்கள் எவை

159. இங்கு கூறப்படவில்லையோ அந்த திரவ்யங்களை சிவோத்ஸவத்தில் சொல்லியபடி கிரஹிக்க வேண்டும். வச்யம், உச்சாடனம், வித்வேஷம், மாரணம், பவுஷ்டிகம்

160. சாந்திகம், ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களை இந்த வினாயக மந்திரத்தினால் செய்ய வேண்டும். எல்லா வியாதியும் ஏற்பட்ட பொழுது இந்த விநாயக மந்திரத்தினால் சாந்தப்படுத்த வேண்டும்.

161. இந்த வினாயக பிரதிஷ்டையானது எல்லா இடத்திலும் ஆத்ய பால ஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ பிரதிஷ்டை செய்யலாம். சிவாலயத்தில் முதலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் பாலாலயமின்றி வினாயகரை ஸ்தாபனம் செய்யவும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விக்னேச்வரப்ரதிஷ்டா முறையாகிய நாற்பத்தைந்தாவது படலமாகும்.

படலம் 44: தேவீ ஸ்தாபன விதி...

படலம் 43: தேவீ ஸ்தாபன விதி...

44 வது படலத்தில் தேவீஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் தேவியின் ஸ்தாபனம் லக்ஷண முறைப்படி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு பிம்பத்தை சிலை முதலான திரவ்யங்களால் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு கிராமம் முதலிய இடங்களிலோ சிவாலயத்திலோ, தேவீ ஸ்தாபனத்திற்கு உபயோகமான ஸ்தானங்கள் கூறப்படுகின்றன. பிறகு தேவியின் ஆலய நிர்மாண முறை கூறப்படுகிறது. பிறகு உருண்டை வடிவமாகவோ, நீண்ட வட்ட வடிவமாகவோ, சபையை போன்றோ, கோபுரத்துடன் போன்றதாகவோ ஆலயம் நிர்மாணிக்கவும். பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹ சுவர் செய்யும் முறை, இரண்டு தளம் முதலான வாசல், இடைவெளி அமைப்பு உள்ள சுவர்களை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் திக் தேவதை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தேவியின் வாஹனம் சிம்மத்தையோ விருஷபத்தையோ பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயபிரதிஷ்டையில் ஆலய சுவற்றின் தேவர்களின் எல்லா பிம்பங்களையும் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தேவி ஆலயத்தில் பிரகாரங்கள், பரிவார மண்டபங்கள் செய்யவும் என கூறி பரிவார விஷயத்தில் பலமுறை கூறப்படுகின்றது. பிறகு தேவியின் நிர்மால்ய தாரி என்கிற அசநீ தேவியை குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபீடத்தில் விசேஷமாக எல்லா அப்சர ஸ்திரீகளும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு தேவியின் லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு தேவியின் அளவு லிங்கத்தை அனுசரித்து அமைக்கவும் என கூறி அதில் அளவு முறை கூறப்படுகிறது. பிறகு தேவீ ஸ்வதந்திரமாக இருந்தால் தன்னுடைய ஆலய அளவினாலோ அல்லது அங்குல அளவினாலோ செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மார்த்த பூஜையில் வேறு அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அமைப்பை கூறும் விஷயத்தில் பல முறைகள் வர்ணிக்கப்படுகின்றன.

இங்கு ஒரு முகம், நான்கு கை, மூன்று கண், ஒரு முகம், இரண்டு கை, இரண்டு கண், ஒரு முகம், ஆறு கை, ஐந்து முகம், பத்து கை என்று நான்கு விதங்களாக ஆயுதத்துடன் விளக்கப்படுகின்றன. பிறகு தேவி ஈஸ்வரனுடன் சேர்ந்ததாகவோ அல்லது தனியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவி ஸ்வாமிக்கு கூறப்பட்ட அஸ்திரம் ஆசனம் இவைகளை உடையதாகவோ தேவனை ஆலிங்கனத்தில் ஈடுபட்டுள்ளதாகவோ ஸ்வாமியின் துடையில் அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவியை அமைக்கும் விஷயத்தில் சூத்திர பாதமுறை கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் விஷயத்தில் உயர அளவு முறை கூறப்படுகிறது. தேவிக்கு மனோன்மனீ, கவுரி இரண்டு பெயர் கூறி அவர்கள் விஷயத்தில் லக்ஷண பேதம் இல்லை என்கிறார். சதாசிவன் விஷயத்தில் தேவி பிம்பம் அமைக்கப்பட்டால் அது மனோன்மணி என்று தேவியின் பெயர் ஆகும். நடராஜமூர்த்தி ஆகிய மூர்த்தி விஷயத்தில் கவுரி என்று பெயர் கூறப்படுகிறது. தேவியின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் மனோன்மணி, கவுரி விஷயத்தில் மூலமந்திரம் கூறப்படுகிறது. முன்பு கூறியபடி பிரதிஷ்டா காலத்தை அறிந்து பிம்பத்தை மண்டபத்தில் உள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபித்து செய்ய வேண்டிய ரத்னநியாச முறை, நயனோன்மீலம் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய பூஜை, சில்பி பூஜையும் யஜமானனால் செய்யப்பட்டு ஆசார்யன் மண் முதலியவைகளால் பிம்பசுத்தி செய்து, கிராமப் பிரதட்சிணம் செய்து பிம்பத்தை ஜல கரைக்கு எடுத்துச் சென்று ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை குறிப்பிடப்படுகிறது. ஜலாதி வாச முறையில் பிம்பத்தை சுற்றிலும் வாமா முதலான சிக்திகளுடன் கூடிய கும்பங்களை ஸ்தாபிக்கவும் பிறகு சயனாதி வாசத்திற்கு மண்டப முறை சொல்லப்படுகிறது. பின்பு சில்பியைதிருப்தி செய்வித்த பிறகு பிராம்மண போஜனம், பசுஞ்சாணத்தால் மெழுகிடுதல், புண்யாஹ பிரோசிணம் வாஸ்த்து ஹோமம் செய்து மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலத்தில் சயனம் அமைக்கவும் என்று பூஜை முறை கூறப்படுகிறது.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து, முன்பு போல் ஸ்நபனாபிஷேகம் ரக்ஷõபந்தனம் முடித்து தேவியை, கிழக்கில் தலைவைத்ததாக சயனஸ்தாபனம் செய்யவும் என்று சயன அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தி சந்தனம், இவைகளால் பூஜிக்கவும், பிறகு தேவியின் சிரோபாகத்தில் பிரதான கடத்தை பிம்பலக்ஷண முறைப்படி பூஜிக்கவும். சந்தனாதிகளால் பூஜிக்கவும். அந்த கும்பத்தை சுற்றி எட்டு கடங்களை வாமாதி சக்திகளால் பூஜிக்கப்பட்டதாக ஸ்தாபித்து கந்தனாதிகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்படுகிறது. அங்கு தத்வதத்வேஸ்வரி, மூர்த்தி, மூர்த்தீஸ்வரி, நியாஸம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் ஹோமகர்மாவை ஆரம்பிக்கவும் என கூறி ஹோமமுறை, திரவ்ய நிரூபணம் செய்யும் விதமாகவும் மந்திரத்துடன் கூடியதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஹோம காலத்தில் வேதாத்யயனம் நான்கு திக்குகளிலும், ஆக்னேயாதி கோணங்களில் மந்திர ஜபங்கள் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முன்பு போல் கும்பத்தையும் பூஜித்து தேவியை எடுத்து ஆலயம் நுழைந்து ரத்னம் முதலியவைகளால் நிரம்பிய பிரம்மசிலையில் மூலமந்திரத்தை கூறி ஸ்தாபிக்கவும் பிறகு நல்ல முகூர்த்த லக்னத்தில் மந்திரந் நியாசம் செய்யவும். தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும். முடிவில் ஸ்நபனம், அதிகமாக நைவேத்யம் உத்ஸவம் முதலியவைகளை செய்யவும். பலவித ஸ்தோத்திரங்களால் நமஸ்கரித்து சந்திரனும் சூர்யனும் பூமியில் உள்ளவரை உங்களால், ஹே தேவி இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை படிக்கவும் என்று கூறப்படுகிறது. ஆசார்யன் முதலானவர்களுக்கு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள தட்சிணையை யஜமானன் கொடுக்க வேண்டும், நான்காவது கர்மாவை அறிந்த தேசிகன் கல்யாண கர்மாவை செய்யவும் என்று பிரதிஷ்டாவிதியில் பூஜை வரிசை கூறப்படுகிறது. இங்கு சலபிம்ப பக்ஷத்தில் அந்த பிம்பத்தை ஸ்நான வேதிகையிலேயே வைக்க அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்வதந்திரமானதும் ஸ்வாமியுடன் உள்ளதாகவும் இருக்கும் தேவியின் விஷயத்தில் கல்யாண கர்மா செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு தேவிபிரதிஷ்டையின் முறை, பயன் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு தேவியின் நித்யார்ச்சனை முதலியவைகள் கூறப்படுகிறது.

நித்யானுஷ்டானம் முடித்த ஆசார்யனுக்கு துவாரம், துவார பாலகர்பூஜை முன்னதாக தேவியின் ஆலயம் நுழையும் வரை விதிகள் கூறப்படுகிறது. பிறகு துவார பாலகர், துவார சக்தி இவைகளின் லக்ஷணம் இவைகளை குறிப்பிட்டு ஸ்வாமிக்கு கூறப்பட்ட துவார பாலகர்களையோ பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கதவின் வலது இடது, பாகத்தில் விமலன், சுபாகு இவர்களை பூஜித்து கர்பக்கிரஹ பிரவேசம் கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி முறை வர்ணிக்கப்படுகிறது. ஐந்து முகத்தை உடைய தேவியின் பூஜா விஷயத்தில் அஷ்டத் திரிம்சத்கலான் நியாம், பிரணவத்துடன் கூடியதாக செய்யவும். பிறகு ஒரு முகத்தை உடைய அம்பாளின் பூஜை விஷயத்தில் சசிநீ முதலான 31 கலான் நியாசத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அந்தர்யாக முறையும் கூறப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, திரவ்யசுத்தி, மந்திரசுத்தி முறையும் கூறப்படுகின்றன. பிறகு பிம்பசுத்தி முறை கூறப்படுகின்றன. பிறகு உலோக பிம்பம் சுதாபிம்பம், சித்ர பிம்ப விஷயத்தில் விசேஷ முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசன மூர்த்தியையும் ஆவாஹனம் முதலிய பத்து சமஸ்காரம் செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு தூப தீப நைவேத்யம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. ஆவரண அர்ச்சன முறையும் கூறப்படுகிறது. கர்ப ஆவரணம் கணங்களின் பூஜை லோகபால பூஜை, அஸ்திரங்கள் முதலியன ஆவரணங்கள் ஆகும் என்று பஞ்சாவரண பூஜை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பாவரணம் தென்கிழக்கு மூலையில் ஹ்ருதயத்தையும் ஈசான திசையில் சிரசையும் நிருதி திக்கில் சிகையையும், வாயு திக்கில் கவசத்தையும் மற்ற நான்கு திக்கில் அஸ்திரத்தையும் பூஜிக்கவும். அல்லது வாமாதி அஷ்ட சக்திகளை கிழக்கு முதலான திக்குகளில் பூஜிக்கவும்.

பிறகு மறுபடியும் மந்திர படனங்கள் நைவேத்யம் பலி ஹோமம் செய்யவும் என்று கிரியையின் வரிசை குறிப்பிடப் படுகின்றது. பிறகு நித்யோத்ஸவம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. நித்யோத் ஸவத்திற்காக பிம்பம் அமைக்கும் முறை லக்ஷணத்துடன் கூடியதாக கூறப்படுகிறது. தேவிக்கு ஒரு காலமோ இரண்டு காலமோ, மூன்று நான்கு, ஏழு, எட்டு காலமோ அல்லது எப்பொழுதுமோ பூஜை செய்யவும் என்று கூறப்படுகிறது. பிறகு வர்÷ஷாத்ஸவம் ஸ்னபநம் தமனாரோஹணம், பவித்ரோத்ஸவம், கிருத்திகா தீபம், ஸம்வத்ஸரோத்ஸவம் வஸந்தோத்ஸவம், டோலோத்ஸவம், மாஸோத்ஸவம், நவநைவேத்யம் ஆடிபூரகர்மா, முதலிய விதிகள், முறைப்படி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் சிம்மமோ, விருஷபமோ வரையவும் பூரம் என்கிற பூர்வ பல்குனி நட்சத்திரத்தில் தீர்த்த கர்மா செய்யவும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் தேவிக்கு உத்ஸவம் செய்யவும். தேவியின் உத்ஸவ விஷயத்தில், சக்கர அஸ்திர தேவி அஸ்திரம் இவைகளோ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி உத்ஸவ பிம்பம் அமைக்கவும். ரக்ஷõ பந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்திற்கு வெளியில் யாத்திரை செய்யக்கூடாது என்று என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. ஜீர்ணோத்தாரணம், பிராயச்சித்த விதி இவைகள் முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு தேவியின் பிரதிஷ்டா பாலாலயத்துடன் கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. முடிவில் தேவியால் அனுக்கிரகிக்கப்பட்ட அரசனுக்கு சர்வ வல்லமை தன்மை ஏற்படும் ஆகையால் தேவியின் முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்யவும். இவ்வாறு 44வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தேவியின் பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையை உடையதாக கூறுகிறேன். கற்சிலை முதலான பொருள்களை சேகரித்து அவைகளால் பிம்ப உருவத்தை அமைக்க வேண்டும்.

2. கிராமம் முதலிய இடங்களிலும் சிவாலயத்திலும் எட்டுத் திசைகளிலும் அதனிடைவெளியிலும் அழகான விருப்பமுள்ள இடத்திலும் கவுரி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

3. மூன்று முழ அளவு முதல் ஐம்பது முழ அளவு வரை அகல நீள பரப்பளவு உடையதாகவும், உயர அளவுகளை முன்புள்ள அளவுப்படியுமாகவுள்ளதாகி தேவி ஆலயத்தை அமைக்க வேண்டும்.

4. குறுக்கு வட்ட வடிவமாகவோ, உகந்ததான அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். வட்ட வடிவமாக இருப்பின் உயரத்தை நான்கு பங்காக்க வேண்டும்.

5. கன அளவு, ஓர் அம்ச அதிகரிப்பாலும் ஆறுபாக அளவுகளால் கர்பக்ருஹம் அமைக்கவும். ஓர் அம்ச அளவு சுவர் என்பதாகவும், உயரத்தை மூன்று பாகமாகவோ பிரிக்க வேண்டும்.

6. இரண்டு பாக அளவினால் கர்பக்ருஹமும், ஓர் பாக அளவினால் சுவற்றையும் ஏற்படுத்தவும். நான்காக பிரிக்கப்பட்ட அகல அளவில் ஆறுபாக அளவிலோ கன அளவை அமைக்க வேண்டும்.

7. கர்பக்ருஹம் எட்டு பதங்களானதாக கூறப்பட்டு வேறொரு முறையும் கூறப்படுகிறது. பரப்பளவில் ஐந்தாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஆறு பங்குகளாலோ

8. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து பங்குகளாலோ கர்பக்ருஹம் சுற்றிலும் மீதமுள்ள ஓர் பாக அளவினால் சுவரும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

9. ஆறாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஓர் பாக முதலான அதிகரிப்பால் இரண்டு மடங்கு அளவினால் கர்பக்ருஹம், சுவற்றின் நீளம் முன்புள்ளபடி அமைத்துக் கொள்ள வேண்டும்.

10. பரப்பளவில் இவ்வாறாக இருபது பாக அளவாக கூறப்பட்டதில் அதனதன் இரண்டு மடங்கு அளவு வரை உயர அகல அளவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

11. இரண்டு தளமுதலான தளங்களையுடைய கோபுர வகை தளத்தில் பல எண்ணிக்கையால் இடைவெளி அழகையும், சுவரையும், கால்பாகம், அரை பாகம், முக்கால் பாக அளவுச் சுற்றாகவும்

12. ஒன்றரை பாகம், ஒன்றே முக்கால், இரண்டு பாக அளவினாலே செய்து கொள்ளவும். இடைவெளிச் சுவரை விட்டு வெளிப்பாகத்தினால் கனமாகவோ எல்லா பாகத்தையும் அமைக்க வேண்டும்.

13. அதிஷ்டானம் முதலான ஆறுவர்கங்களை முன்புள்ள அளவுப்படி செய்யவும். பிரகார மண்டபம் போல் ஸபையைப் போல் கோபுர அமைப்புடன் கூடியதுமாகவோ அமைக்க வேண்டும்.

14. கோபுரத்தின் மேலுள்ள ஸ்தூபியின் எண்ணிக்கை ஒன்று முதல் பதினொன்று வரையிலும் ஆகும். திக்தேவதைகளின் விஷயங்கள் தேவியின் ரூபமாற்றங்களை உள்ளதாக கூறப்படுகின்றன.

15. தேவி விமானத்தில் சிவாலயத்தின் தேவதைகளையோ வினாயகர், முருகனையோ தென் கிழக்கு முதலான திசைகளினால் ஸிம்மம் அல்லது வ்ருஷபத்தை வாஹநமாகவோ

16. கோணங்களில் கிளியையோ அமைத்து மற்ற உருவங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்கவும். தேவியானவள் கிழக்கு, மேற்கு, தெற்கு முக அமைப்புள்ளதாகவோ

17. வடக்கு முகமாகவோ அமைக்கலாம். எல்லாதிசை முக அமைப்புகளும் எல்லா ஸம்பத்துக்களையும் கொடுக்க வல்லதாகும். கர்பக்ருஹ அமைப்பின்படி செய்யப்பட்டால் அதன் அளவு விசேஷமாக கூறப்படுகிறது.

18. பிம்ப உருவ இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆயாமம் என்ற கணக்களவை எடுத்து கொள்ளவும். ஆலயத்தில் திக்தேவதைகளை பெண் உருவமுள்ளதாக அமைக்க வேண்டும்.

19. த்வரதசாந்த தளம் என்ற அமைப்புள்ள இடத்தில் ருத்ரன், முருகன், வினாயகர் ஆகிய உருவங்களையும் விமான மூலைகளில் விருஷபத்தையே சிம்மத்தையோ அமைக்க வேண்டும்.

20. மற்ற எல்லா விதமான கர்பக்ருஹ சுவற்றின் தேவதைகளுடைய பிரதிஷ்டை பரமேஸ்வரனின் ஆலயப்ரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளது.

21. இறைவனின் திருவிளையாடல்களை குறிக்கும் பிரதிஷ்டை கூறப்படவில்லை. திருச்சுற்றுப் பகுதிகள் பரிவார தேவதைகளையும், அவைகளின் மண்டபங்களையும் அமைக்க வேண்டும்.

22. வாமை முதலான சக்திகளையோ பரிவாரத்தில் இருக்கும்படி அமைக்கவும். லக்ஷ்மீ, துர்க்கா, பூமாதேவி. சசினீ, காயத்ரி, உஷா இவர்களையும் அவ்வாறே

23. ஸந்த்யை, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளையோ பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். ப்ரக்ஞை, மேதா, ஸ்ருதி. ஸ்வாஹா, வஷட் இவர்களும்

24. த்ருதி, மதி ஆகிய தேவிகள் கிழக்கு முதலான திசைகளில் வரிசைக்கிரமமாக கூறப்பட்டுள்ளன அல்லது ஜ்யேஷ்டா தேவியுடன் கூடிய ஸப்த மாத்ருக்களையும் பிரதிஷ்டை செய்யலாமென கூறப்பட்டுள்ளது.

25. தேஹளீ, பேஷணீ, சுல்லி, கண்டநா, உலூகலீ, முஸலீ, முத்கரீ, வாத்மாநீ, ஆகிய எட்டு தேவதைகளையுமோ பரிவார தேவதைகளாகவும் செய்யலாம்.

26. மேற்கூறிய தேவதைகள் நான்கு கைகளையுடையவர்களாகவும், அவைகளில் விருப்பப்பட்ட ஆயுதங்களையோ, தாமரையை தரித்தவர்களாகவோ அமைக்கவும். வ்ருஷபம், வினாயகர், முருகன் மஹாசாஸ்தா குபேரன்.

27. வீரன், பைரவன், சூர்யன் இவர்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென் மேற்கு அல்லது தென் கிழக்கிலே வினாயகரை ஸ்தாபிக்கவும்.

28. கிழக்கு முதலான திசைகளில் இந்திரன் முதலான திக்பாலர்களையோ வஜ்ரம் முதலான தசாயுதங்களையோ ப்ரதிஷ்டை செய்து வடகிழக்கு திசையில் அசநீ என்ற நிர்மால்யத்தை தரிக்கும் சண்டிகேஸ்வரியை ஸ்தாபிக்க வேண்டும்.

29. முன்பு கூறப்பட்ட பரிவார தேவதைகளையோ ஸ்தாபிக்கவும். மஹாபலிபீடத்தில் விசேஷமாக எல்லா அப்ஸர தேவதைகளும் இருக்கிறார்கள்.

30. சிவலிங்க அளவை அனுசரித்து தேவியின் அளவு மூன்று அளவாக கூறப்பட்டுள்ளது. பூஜைக்குத் தக்கதான அளவையோ, இரண்டு பாகமோ, மூன்று பாகமாகவோ

31. நான்கு பாகம், ஐந்து பங்கு அளவாகவோ, பூஜையின் அம்ச பாகத்திலிருந்து மேற்பட்ட முக்கால் பாகம், பாதி பாகம், அதற்கு மேற்பட்ட எட்டில் ஓர் பங்காகவோ ஒன்பதில் ஓர் பங்காகவோ அமைக்க வேண்டும்.

32. பூஜையின் அம்சருத்ர பாகத்திற்கு மேல் நூற்று இருபத்தி நான்கு பங்காகவோ பிரித்து, புருவம், கண், வாய், காது பாகம் வரையிலும் தோள் பாகம், கையின்மேல் பாக இடைவெளி, மார்பகம் வரையிலும்,

33. நிஷ்களம் என்ற அமைப்புள்ள தேவியின் உருவ அமைப்பை லிங்கத்தின் அளவை அனுசரித்து செய்யவும். சிவமூர்த்த பிம்பத்தை அனுசரித்து தேவிமானமும் கூறப்பட்டுள்ளது.

34. தேவியானவள் தானே பிரதானமாக இருக்குமாயின் அதன் கோயில் அளவு முறைப்படி செய்யவும். அந்த அளவும் முன்னமே கூறப்பட்டுள்ளது. மானாங்குல அளவினாலோ

35. செய்து, வீட்டில் ஆன்மார்த்த பூஜைக்கு மாத்ராங்குல அளவினாலோ, அமைக்கவும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அளவுப்படி தேவியை அமைக்க வேண்டும்.

36. நான்குகை, மூன்று கண், மிகவும் மலர்ந்த ஓர் முகமும், வெண்பட்டையணிந்தவளாயும், கரண்ட மென்கிற அமைப்புடைய கிரீடத்தையுடையவளாகவும்

37. வரதம், அபயம், பாசம், அங்குசமிவைகளை கையிலுடையவளாகவும் அமைக்கவும். இரண்டுகை, இரண்டுகண் இவைகளையுடனுமோ தொங்குகின்ற கையுடனும்

38. தாமரையைக் கையிலுடையவளாயும் மிகவும் அமைதியாயுடையவளாயும் பொன்னிறமாய் உடையவளாயும் உள்ளதாகவோ தேவி கிளியையும் ஆம்பல் புஷ்பத்தை உடையவளாயுமோ சூலம், பாசமிவைகளை உடையவளாயுமோ

39. விரும்பிய ஆயுதத்தை உடையவளாகவோ, ஆறு கையுடன் உடையவள் சங்கம், சக்ரம் இவைகளையுடையவளாகவோ அமைக்கலாம். ஐந்து முகமாயும் தித்திப்பல்லால் பயங்கரமான முகமும் பத்து கைகள் உடையவளாயும்

40. ஸ்வாமிக்கு கூறப்பட்ட ஆயுதங்களையும் ஆஸனத்தையும் உடையவளாகவோ ஸ்வாமியை ஆலிங்கனம் செய்வளாகவோ, ஸ்வாமியின் மடியில் அமர்ந்தவளாகவோ, நின்ற திருக்கோலம், அமர்ந்த கோலமுடையவளாகவோ

41. தொங்குகிற இடதுகால் அல்லது வலதுகால் இவைகளை உடையவளாகவோ, ஸ்வாமியுடன் கூடியவளாகவோ, தனித்திருப்பவளாகவோ கூறப்பட்டுள்ளன.

42. கருப்பு, வெள்ளை, சிகப்பு முதலிய நிறமுடையதாகவோ, ஸாதகனின் விருப்பமுள்ள வடிவமுடையதாகவோ நிமிர்ந்த தோற்றமுடையவளாகவோ த்விபங்கம் என்ற அமைப்புடன் கூடியதாகவோ

43. மூக்கின் நுனியில் சூத்ரத்தை தொங்கவிட்டு வலதுகால் நின்ற கோலமான இடத்தில் நுதிகால் நடுவில் உள்ள நூல்கோடு சிவசூத்ரமொன்று கூறப்பட்டுள்ளது.

44. அந்த சூத்ரத்திலிருந்து இடது பாகத்திலுள்ள மார்பக மத்ய தேசம் வரை மூன்றங்குலமும், அதே சூத்ரம் தொப்பூழ் நடுபாகம் வரை உள்ளவையாக இருப்பது ஓரங்குலமெனப்படும்.

45. சிவசூத்திரம், ஸ்தன மத்ய சூத்ரமிரண்டின் இடைவெளி நான்கு மாத்ரராங்குலமாகும். சிவசூத்ரம், முழந்தாள் சூத்ரமிரண்டின் இடைவெளி மூன்றங்குலம் எனப்படும்.

46. பாதங்களிரண்டின் கட்டை விரலுடைய இடைவெளி ஏழரை அங்குலமும் ஆகும். அந்த ஏழங்குலத்தின் மூன்று பாகமோ, ஓர் பாகமோ, குதிகால்களின் இடைவெளியாகும்.

47. கடக ஹஸ்திரத்தின் நுனிஉயரம் மார்பக நுனிக்கு ஸமமாகும். தொப்பூழ் பாகத்திலிருந்து மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி ஏழரை அங்குல அளவாகும்.

48. பக்கவாட்டுக்கை உள்ளடங்கிய நடுஇரண்டு கையின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். தொங்கும் கையின் நுனியிலிருந்து துடையின் நுனி ஆறங்குல அளவாகும்.

49. முழந்தாள் மூட்டிலிருந்து மணிக்கட்டு பாகம் வரையிலுள்ள இடைவெளி நான்கு அங்குலமாகும். பக்கவாட்டுக் கை, மத்யமக்கைகளின் இடைவெளி ஆறங்குலமாகவும் இருக்கலாம்.

50. கூறப்பட்டுள்ள சூத்ர கணக்கு எடுத்துக் காட்டுக்காகவேயாம். சூத்திரத்தில் நியமமில்லை. தன்னிச்சையான ஆலய தேவியின் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.

51. மூலஸ்தான தேவியின் அளவு முறை முன்னமே கூறப்பட்டுள்ளது. உத்ஸவ மூர்த்தி தேவி பிம்பங்களின் அளவு மூலஸ்தான பிம்பத்தின் அளவேயாம்.

52. மூலாலய லிங்க அளவுப்படியே மூலஸ்தான தேவியின் அளவுப்படியோ அமைக்கவும். சரீர உருப்புக்களின் அளவு முழந்தாள், துடைபாக அளவு ஸமமாகவோ செய்யவும்.

53. இவ்வாறு தேவியை அமைத்து, அதன் பெயர் இருவிதமாக அறியவும். மனோன்மணீ என்றும் கவுரி என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் உருவ அமைப்பில் மாற்றமில்லை.

54. ஸதாசிவ மூர்த்தமான லிங்கம் எங்கு நிர்மாணிக்கப்பட்டு தேவி அமைக்கப்படுகிறதோ அப்பொழுது மனோன்மணா என்ற பெயரை தேவீ அடைகின்றான்.

55. நிருத்த (நடராஜ) மூர்த்தி முதலான உத்ஸவ மூர்த்தி பேதங்களில் கவுரி முதலான பெயரை அடைகிறாள். நல்ல உருவ அமைப்புடன் கூடியதாக தேவியை அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

56. ஸாந்தமென்கிற ஹ, ரேபம் ர, மஹாமாயா ஈ, பிந்து நாதம் இரைகளுடன் சேர்ந்ததான ஹ்ரீம் என்றும் மனோன்மணீயின் பீஜமந்திரம் ஹ என்ற எழுத்து இருக்குமிடத்தில் க வின் முடிவான சேர்ந்ததாகவும்

57. க்ரீம் என்பதானது கவுரி மந்திரமாகும். மேற்கூறியவைகள் விஸர்கத்துடன் கூடியதாகவும், என்றிருக்கலாம். வ என்பதற்கு முடிவான ச வும் ரேபமான ர வும் மாயையாகிய ஈ யும், ஸ்ரீம் விஷ்ணு மந்திரமான ஹ்ரீம் கூடிய மந்திரம்

58. எட்டாவது வர்க்கமென்ற ச ச்வர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ வும், நான்காவது உயிரெழுத்தான ஈ யும், பிந்து நாதத்தன்மை உள்ளதாக இருப்பது தேவீ பீஜமாகும். (ஸீம்)

59. ஐம், க்லீம், சவும் என்பதாகவும், ஹம்ஸபீஜ மான ஹ வும், பிந்து நாதத்துடன் கூடியதாகவும், ஸ்ரீம் என்பதாகவுமோ தேவி பீஜத்தை அறிய வேண்டும்.

60. இவ்வாறு நான்கு பீஜ மந்திரம், தேவிக்கு பொதுவானதாகும். இவ்வாறாக மூலமந்திரம் கூறப்பட்டுள்ளது. அதில் பிரம்ம மந்திரம் அங்க மந்திரங்களை கல்பிக்க வேண்டும்.

61. ஹ்ருதய மந்திரத்திற்குட்பட்ட, ஜாதி பீஜம், மூலமந்திரம் இவைகளும் முறையே மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரமாக கூறப்பட்டுள்ளது. ஆதி சக்தியின் மந்திரமாக ஹ்ரீம்முமோ மூலமந்திரமாக ஆகும்.

62. இவ்வாறாக மந்திரம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை கூறப்பட்டது. பிரதிஷ்டையின் நேரமும், அங்குரார்ப்பணமும் முன்புள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

63. மண்டபத்திலுள்ள ஸ்தண்டிலத்தில் கிழக்கு முகமாக தேவியை ஸ்தாபிக்கவும். தேவியின் பீடத்தில் மத்தியில் தங்கம், கிழக்கில் இந்த்ர நீலக்கல், முறைப்படி

64. வைடூர்யம், பவழம், முத்து, வைரம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம் இவைகளை ரத்னந்யாஸம் முறையாக

65. ஹ்ருதய மந்திரத்தினாலும் வாமை முதலான மந்திரங்களினாலோ வைக்கவும். அல்லது எல்லா இடத்திலும் தங்கத்தையோ வைக்கவும். நயனோந் மீலத்தை தங்கத்தினாலான நகத்தினால் செய்ய வேண்டும்.

66. தேன் முதலிய திரவ்யங்களால் பிம்பங்களுக்கு திரையிடப்பட்டவாறு கண் திறக்கவும். பசு, பிராமணர்கள், தான்யம், மனிதர்கள் இவர்களை பிம்பத்திற்கு காட்டுவதையும் முன்பு போல் செய்து

67. ஆசார்யனையும் சில்பியையும் பூஜித்து விட்டு, மண் முதலான பொருட்களால் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணமும் ஜலாதி வாஸமும் செய்ய வேண்டும்.

68. பிம்பத்தை சுற்றிலும் கலசங்களை வாமை முதலான தேவியர்களை பூஜித்ததாகி வைக்க, ஆலயத்தின் நான்கு திசையிலுமோ, தென் கிழக்கு வடகிழக்கு திசையிலோ மண்டபங்களை அமைத்து

69. அதில் யோநி வடிவமாக ஒன்பது, ஐந்து, ஒன்று ஆகியவைகளை மந்திர எண்ணிக்கைகளுக்கு அடிப்படையாக குண்டம் அமைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் அழகாக முன்புபோல் ஸ்னான வேதிகையை அமைக்க வேண்டும்.

70. யாகசாலை அமைத்து சில்பியை த்ருப்தி செய்வித்து, அந்தணர்களுக்கு உணவளித்து, பசுஞ்சாணமெழுகிட்டு, புண்யாஹவாசனமும், வாஸ்து சாந்தியும் செயற்பாலது.

71. வாஸ்து ஹோமம் செய்து, வேதிகையின் மேல் ஸ்தண்டிலத்தில் முன்பு கூறப்பட்டுள்ளபடி சயனத்தை அமைக்க வேண்டும். தேவீ பிம்பத்தை ஜலத்திலிருந்து எடுத்து முன்பு கூறப்பட்டபடி ஸ்நபநம் செய்விக்க வேண்டும்.

72. சந்தனம் புஷ்பமிவைகளால் தேவி பிம்பத்தை பூஜித்து ஹ்ருதிய மந்திரத்தினால் ரக்ஷõபந்தனம் செய்விக்கவும். கிழக்கில் தேவியின் தலை உள்ளதாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

73. சயன பிம்பத்தை சிகப்புத் துணியால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். தேவியின் சிரோதேசத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

74. உருவ அமைப்பு முறையாக பிம்பத்தை தியானித்து சந்தனமிவைகளால் பூஜிக்கவும். பிம்பத்தை சுற்றிலும் எட்டு கடங்களை ஸ்தாபித்து வாமை முதலியோர்களை பூஜிக்க வேண்டும்.


படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...

படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...
 

76. மேற்கூறிய தத்வங்களை மாயாதத்வ, ஸதாசிவதத்வ, சக்தி தத்வம் வரை வியாபித்திருப்பதாக நியாஸிக்கவும். ஆத்மாதிதத்வாதீச்வரியாக கிரியை, க்ஞான, இச்சா சக்திகள் கூறப்பட்டுள்ளன.

77. தாரிகை, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்ஸ்நா, சேதா, பலோத்கடா, தாத்ரீ விப்வீ என்பதான மூர்த்திச்வரிகளோடு கூடியதாக மூர்த்திகளை ந்யாஸம் செய்ய வேண்டும்.

78. பஞ்சகுண்டப்படி மூர்த்திகளை ந்யாஸம் செய்யும் விஷயத்தில் வாமை முதலான மூர்த்திபர்கள் கூறப்பட்டுள்ளன. மூர்த்தீஸ்வரிகளை சந்தனம் புஷ்பம் இவைகளாலும் பிறகு நைவேத்யம் வரையிலுமாக முறைப்படி பூஜிக்க வேண்டும்.

79. தேவியின் மூலமந்திரத்தையும் மூர்த்தி மந்திரத்தையும் மந்திர அங்கமந்திரங்களையும் பூஜிக்கவும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோம கார்யத்தை ஆரம்பிக்க வேண்டும்.

80. ஆதிசைவ குலத்திலுண்டானவனும், முன்பு கூறப்பட்ட அமைப்பு முறையுடனுள்ளவனுமான ஆசார்யன், கிழக்கு முதலான திசைகளில் வேதபாராயணமும், தென்கிழக்கு முதலான திசைகளில் மூலமந்திர ஜபங்களையும் செய்ய வேண்டும்.

81. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து ஸமித் முதலான பொருட்களால் மூர்த்தியை த்ருப்தி செய்விக்கவும். சமித், நெய், அன்னம், பொறி, எள், கடுகு, யவை இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

82. புரசு, அத்தி, இச்சி, ஆல் ஆகிய ஸமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி, பில்வம் ஆகிய ஸமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

83. பிரதான (முக்கியமான) குண்டத்தில் புரசும், மற்றும் புரச ஸமித்தையே எல்லா குண்டங்களிலும் ஹோமம் செய்யவும். ஆயிரம், ஐநூறு, நூற்றியெட்டு ஆவ்ருத்தியாக

84. ஆசார்யன் மூலமந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். மூர்த்திபர்கள் மேற்கூறிய எண்ணிக்கையளவோ, பாதி எண்ணிக்கையாகவோ ப்ரும்ம மந்திர அங்க மந்திரங்களால் எட்டு திசைகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

85. மூர்த்தி, மூர்த்தீஸ்வரிகளை அந்தந்த குண்டங்களில் ஹோமம் செய்து திருப்திபடுத்த வேண்டும். எல்லா தேவர்களுடன் கூடியதாக முக்யமான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

86. சாந்தி கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து அவரவர்களின் மந்திர ஜபத்தை செய்யவும். தர்பங்களால் தொடும்படி செய்வதை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

87. பிறகு காலையில் மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யன் சுந்தனாக இருந்து தேவியை எழுந்தருளச் செய்து கும்பங்களையும், வஹ்னியையும் முன்போல் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

88. பூர்ணாஹுதி செய்து ஆலயத்தில் நுழையவும் மானுஷ, தைவிக பிம்ப விஷயத்தில் முன்பு கூறியபடி பூஜை முறைகளை செய்து ஸ்தாபிக்க வேண்டும்.

89. பிரம்ம சிலையை நவரத்ண, ஸ்வர்ணங்களோடு சேர்ந்ததாக பூஜித்து முன்பு போல் ஆலயத்தில் எடுத்துச் சென்று ஈச்வரியை மூலமந்திரத்தை கூறி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

90. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர நியாஸம் செய்யவும், உற்சவ மூர்த்தி பிம்பமாயிருப்பின் ஸ்னான வேதிகையில் ஸ்தாபித்து மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

91. தேவிக்கு முன்னதாக கடங்களை ஸ்தாபித்து கும்பத்திலிருந்து மந்திரத்தை கிரஹித்து தேவி ஹ்ருதயத்திலும் மற்ற குடங்களிலிருந்து மந்திரங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியாஸிக்க வேண்டும்.

92. தத்வதத்வேச்வர, மூர்த்தி மூர்த்தீச்வர நியாஸம் முன்பு போல் செய்யவும். அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த இடங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

93. ஸ்நபநாபிஷேகத்தை பின்பு செய்வித்து, அதிகமான நைவேத்யத்தையும், உத்ஸவத்தையும் செய்து, பலவித ஸ்தோத்ரங்களால் புகழ்ந்து பாடி கீழ்வரும் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

94. எந்த காலம் வரையிலும் சந்திரனும், சூர்யனும் பூமியில் இருக்கிறார்களோ, அந்த காலம் வரை ஹே தேவி உம்மால் இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.

95. தேசிகர்களை பூஜித்து தட்சிணையை கொடுக்கவும். உத்தம முதலான அமைப்புள்ள தேவியை லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

96. தேவி மட்டும் முக்யமான தெய்வமாயிருப்பின் நான்காம் நாள் கல்யாண உத்ஸவம் செய்யவும். ஸ்வாமியுடன் சேர்ந்திருக்கும் தேவியாயிருப்பின்

97. கல்யாணோத்ஸவத்தை செய்ய வேண்டாம். இவ்வாறாக பிரதிஷ்டை கூறப்பட்டது. இவ்வாறு எந்த மனிதன் செய்கிறானோ அவன் புண்ய கதியை அடைகிறான்.

98. மேற்கூறியபடி எந்த புருஷன் பாவனையோடு பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தனக்கு விருப்பப்பட்டவைகளை இந்த உலகத்தில் அனுபவித்து முடிவில் சிவபதத்தையாகிறான்.

99. இருபத்தோரு தலைமுறை பித்ருக்களை, முன்னோர்களின் இருப்பிடத்தை அடையச் செய்கிறது. பிறகு தேவியின் நித்யப்படி பூஜையின் முறையை கேளுங்கள்.

100. ஜலமலசுத்தி, ஆசமநம், குளியல், ஸந்த்யாவந்தனம், மந்திரதர்பணம் முதலியவைகளை முன்கூறிய முறைப்படி செய்து ஆலயத்தில் நுழையவும்.

101. கை, கால்களை சுத்தம் செய்து முறைப்படி ஆசமனம் செய்து அங்கந்யாஸம், கரந்யாஸம், ஸாமான்யார்க்கம் செய்முறையும் செய்து

102. வாயிலையும், வாயிற்காப்போர் தேவிகளையும் ஸாமான்யார்க்க ஜலத்தால் பிரோக்ஷித்து வாயிற் படியின் இருபக்கங்களிலும் ஸங்கநிதி, பத்மநிதி இருவர்களை

103. திவார சக்தியாக பூஜித்து, கையில் கத்தி, கேடயம் தரித்திருப்பவர்களாயும், சடாமுடியையுடையவர்களாயும், சிகப்பு கருப்பு நிறமாயும் பயங்கரமாய் உடையவர்களாயும்

104. எல்லா அணிகலன்களையும் எல்லா ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவளாயும் பூஜித்து, வாயிற் படியின் மேல்பாகத்தில் ஸரஸ்வதியையும், இரண்டு கிளைகளிலும்

105. கங்கையையும், யமுனையையும் பூஜித்து, தேஹளீ பாகத்தில் சக்தியஸ்த்ரத்தையும் அல்லது ஜடாமுடியையுடையவளாக விசாலாக்ஷியை

106. சம்ருத்தியையும், த்ருதியையும் வலது இடது கிளை பாகத்தில் பூஜிக்கவும். ஸரஸ்வதியையும் கங்கையையும் வெண்மை நிறமுடையவர்களாக எண்ணவும்.

107. மற்ற எல்லா தேவதைகளையும் கருப்பு நிறமுள்ளவர்களாயும் எல்லா அணிகலன்களையும் இரண்டு கைகளால் கத்தி, கேடயத்தையும் தரித்தோ, நான்கு கைகளையும் உடையவர்களாகவோ

108. ஸ்வாமிக்காக கூறப்பட்ட திவார தேவதைகளையோ விமலன், ஸூபாஹூவையுமோ கதவுகளிலோ பூஜித்து, வலது அல்லது இடது பக்க வழியாக உள்ளே நுழைய வேண்டும்.

109. வாஸ்து பிரம்மாவை பூஜித்து நல்ல இருக்கையில் வடக்கு முகமாக அமர்ந்து தன்னை சக்தியிடம் சேர்ந்ததாக சேர்த்து முன்பு போல் பூதசுத்தியையும் செய்து

110. ஆத்மாவை அம்ருதத்தால் நனைந்ததாகி செய்து ஆத்மாவை அம்ருதீகரணம் செய்வித்து கரந்யாஸமும், அந்த மந்திரங்களால் சரீரந்யாஸமும் செய்ய வேண்டும்.

111. ஓம்காரத்துடன் அஷ்டத்ரிம்சத்கலா நியாஸத்தை ஐந்து தலை முகமுள்ள தேவியின் பூஜையில் செய்ய வேண்டும்.

112. ஓர் சிரஸ் உள்ள தேவிக்கு ஏகத்ரிம்சத் கலாந்யாஸமென்ற 31 கலைகளின் நியாஸத்தையும் செய்ய வேண்டும். சசினி முதலான கலைகளை மட்டுமே நியாஸம் செய்ய வேண்டும்.

113. அல்லது சிவமந்திரங்களால் சைவ விக்ரஹமாக்கி தேவி, முருகன், வினாயகர் ஆகிய எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

114. ஸகளீகரணம் செய்து கொள்ளப்பட்ட சரீரத்தை உடையவனாகி அந்தர்யாகத்தை செய்யவும். ஹ்ருதயத்தில் தேவி பூஜையையும் தொப்பூழ் பிரதேசத்தை ஹோம பாவனையாயும்

115. நெற்றியில் ஈச்வரியை எல்லோரிடமும் இருப்பவளாகவும் வரத்தை கொடுப்பவளாகவும் தியானிக்கவும். ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் செய்ய வேண்டும்.

116. சந்தனம், புஷ்ப, அக்ஷதையிவைகளுடன் கூடிய பொருள்களை விசேஷார்க்ய ஜலத்தால் சுத்தி செய்து ஆத்மாவை பூஜித்து மந்திர சுத்தியையும் செய்ய வேண்டும்.

117. பின்பு பிம்ப சுத்தி செய்து நிர்மால்ய பூஜையை செய்யவும். கணாம்பிகையை வித்மஹே மஹாதபாயை தீமாஹி என்றும்

118. பிறகு தந்நோ தேவீ பிரசோதயாத் என்பது யாக மந்திரத்தை கூறி அர்ச்சித்து நிவேதனம் செய்யவேண்டும்.

119. நிர்மால்ய பொருட்களை நிர்மால்யத்தை சண்டிகேஸ்வரியிடம் ஸமர்ப்பித்து அல்லது விஜர்ஜனம் செய்தோ, தேவியின் அஸ்திரத்தை கூறி பிம்பசுத்தி செய்யவும்.

120. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகமும், சுண்ணாம்புக்கலவை, சுவற்றுச் சித்திரமாயிருப்பின் பூஜை செய்வதே சுத்தியென்றும் கூறப்படுகிறது. (கர்மாச்சையே)

121. அல்லது அஸ்திர மந்திரங்களால் பனை ஓலை விசிறி காற்றினால் சுத்தி செய்யும். அவ்வாறே அங்கு வாடாத மாலையும் அணையா விளக்கு மேற்படுத்தவும்.

122. தினந்தோறும் பூஜிக்காமல் வருடத்திலோர் முறை பூஜிக்கவும். கற்சிலை வடிவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது கூறப்படுகிறது.

123. நடுவில் ஆஸனத்தை ஏற்படுத்தி ஆதார சக்தியையும், அனந்தன், தர்மன் முதலியோர்களையும் அனந்தன் முதலியவர்களையும்

124. அதச்சதநம், ஊராத்வசதளம், பத்மம், கர்ணிகை, சக்தி மண்டலத்தையும் இச்சை, ஞான, க்ரியை ஆகிய மண்டல சக்திகளோடு கூடிய வாமை முதலான தேவிகளுடன் கூடியதும்

125. பிறகு தேவ்யாஸநாய நம: என்பது முதற்கொண்டு மூர்த்தி உருவத்தை பூஜித்து பஞ்ச ப்ரும்ம நியாஸமும், கலாந்யாஸமும் முன்பு போல் செய்ய வேண்டும்.

126. பூஜைக்காக உள்ள மூர்த்தியின் வித்யா தேஹ அமைப்பை ஏற்படுத்தி பிரணவ மந்திரத்தினால் அந்த பிம்பத்தில் அனுக்ரஹத்தால் தேவியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

127. மூலமந்திரத்தை புஷ்பாஞ்சலியையுள்ள கையையுடையவனாய் ஹ்ருதயத்திலிருந்து வந்ததாக பாவித்து தேவியிடம் ஆவாஹித்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

128. ஸன்னிதானம், ஸன்னிரோதனம், அவகுண்டமிவை ஹ்ருதய மந்திரத்தினால் செய்து ஹ்ருதலம், முதலான மந்திரந்யாஸத்தை செய்து மஹாமுத்ரையை காண்பிக்க வேண்டும்.

129. அர்க்யபாத்ரத்தை வைத்துவிட்டு, ஹ்ருதய மந்திரத்தினால் திருவடியில் பாத்யத்தையும் தத்புருஷ மந்திரத்தினால் முகத்தில் ஆசமனீயமும் ஈசான மந்திரத்தினால் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும்.

130. பாத்யம் முதலிய திரவ்யங்களை முன்பு போலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்து ஸமர்ப்பிக்க வேண்டும். சந்தனம், புஷ்பம் இவைகளுடன் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தினால் தூபம் கொடுக்க வேண்டும்.

131. பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ பஞ்சாம்ருதம் இன்றியோ அபிஷேகம் செய்விக்கவும். திரு ஒற்றாடை செய்து ஆடை அணிவிக்க வேண்டும்.

132. வாமதேவ மந்திரத்தினால் ஆசமனத்தை சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளுடன் கொடுக்கவும். தீபத்தையும் நைவேத்யத்தையும் மூலமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

133. ஆமந்திரண ஹவிஸையோ, ஸாமான்ய ஹவிஸையோ நிவேதனம் செய்து பின்பு ஆவரண பூஜையையும் தென்கிழக்கில் ஹ்ருதயத்தையும் பூஜிக்க வேண்டும்.

134. ஈசான திசையில் சிரஸ்ஸையும் தென் மேற்கு திசையில் சிகையையும், வடமேற்கு திசையில் கவசத்தையும் நான்கு திசைகளிலும் அஸ்திரத்தையும் வாமை முதலியோர்களையும் பூஜிக்க வேண்டும்.

135. தேவீகணங்கள், வித்யேசர்கள், திக்பாலர்கள், தசாயுதங்கள் இவர்களைச் சுற்றிலும் பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்பதான ஆவரண பூஜையையோ செய்யவும்.

136. திரும்பவும் தூபம், தீபம், மந்திரம், பாட்டு பாடுதல் இவைகளையுமோ செய்து நைவேத்யம் பலி ஹோமம் முதலியவைகளைச் செய்து நித்யோத்ஸவத்தை செய்யவும்.

137. நித்யோத்ஸவத்திற்காக தேவி அமைக்கப்படவேண்டும். அந்ததேவி ஓர்முகம், நான்கு கை, வரதம், அபயம், சங்கு, சக்கரமிவைகளை தரித்திருப்பவர்களாகவும்

138. தாமரையாஸனத்தில் அமர்ந்திருப்பவளாய் மனோன்மணீயை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம் அக்ஷதைகளால் லிங்கங்களில் முறையே மேதை, ப்ரக்ஞை, உஷை ஆகிய இவர்களை பூஜிக்கவும்.

139. முன்பு கூறப்பட்ட முறைப்படி ஆலயத்தை வலம் வருதலைச் செய்யவும். பாதுகை பூஜையுடன் கூடியோ ஆலயத்தை அடையவும்.

140. தினந்தோறும் செய்ய வேண்டிய திருவிழாவிற்கான பிம்பங்கள் பலவகை இருப்பின், அவைகளில் அந்த ஆலயத்திற்கு ஏற்றவாறு நல்ல அமைப்புள்ள உற்சவ பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

141. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களில் ஏதேனும் ஓர் காலமோ தேவியை எப்பொழுதுமோ பூஜிக்க வேண்டும்.

142. எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய நித்யோத்ஸவம் கூறப்பட்டது. உத்ஸவம், ஸ்நபநம், மரிக்கொழுந்து சாற்றும் முறையையும்

143. பவித்ரோத்ஸவம், க்ருத்திகாதீபோத்ஸவம், வருடாந்திர திருவிழாக்கள், வஸந்தோத்ஸவம்

144. அந்தந்த மாதத்தில் மாத உத்ஸவமும், நவநைவேத்யமுறை, விசேஷமாக பூர நக்ஷத்திர திருவிழாவும் பிராயச்சித்தமும் செய்யவேண்டும்.

145. பழுதடைந்ததை புதுப்பித்தல் செய்வதையும் முன்புபோல் செய்யவும். ஆனால் உத்ஸவக் கொடியில் ஸிம்மத்தையோ, வ்ருஷபத்தையோ வரையவும்.

146. விசேஷமாக பூர நக்ஷத்திரத்தில் தீர்த்த வாரியை செய்யவும். தேவிக்கும், சிவோத்ஸவ முறைப்படி தினந்தோறும் திருவிழாவை நடத்தலாம்.

147. கொடியேற்றுதல், ஹோமம், பலியின்றி வீதிவலத்தை மட்டுமோ செய்ய வேண்டும். தேவிக்கு அஸ்திர சக்தியாக சக்ர ரூபஅஸ்திரத்தையோ, த்ரிசூலாஸ்திரத்தையோ அமைக்க வேண்டும்.

148. உத்ஸவ மூர்த்தி பிம்பமானது முன்பு கூறப்பட்ட முறைப்படி செயற்பாலது. ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்தில் வெளியில் வலம் வருதல் கூடாது.

149. எங்கு பலி கொடுக்கப்படுகிறதோ, அங்கு கட்டாயம் வீதிவலம் வருதலை செய்ய வேண்டும். மற்ற இடத்திலேயாவது வீதிவலத்தையும் எல்லாவற்றை ஆலயத்திலேயுமோ செய்ய வேண்டும்.

150. ஒரே பிரகாரமுள்ள ஆலயமாயிருப்பின், பிரகாரத்திற்கு வெளியில் பலி, வீதிவலம் வருதல் உத்தமம். இந்த விதி முறையில் எல்லா தேவர்களுக்கும் பொதுவானதாகும்.

151. ஆலயத்தின் மூர்த்தேஷ்டிகாஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனமிவற்றை முன்பு போல் செய்யவும். எட்டு திசை மூர்த்திகளுடன் கூடியதாகவும், மத்தியில் கும்பத்தையுடையதாகவும் (ஸ்தூபியுடன்)

152. கோபுரஸ்தாபனத்தை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும். இந்த தேவியின் பிரதிஷ்டையானது முதன் முதலில் செய்யப்படும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

153. அரசனுக்கு தேவியின் திருவருளால் எல்லா ராஜ்யத்திற்கும் தலைவனாகும் தன்மை ஏற்படுகிறது. ஆகையால் தேவிக்கு முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

154. இவ்வாறாக தேவியின் பிரதிஷ்டை முதலிய க்ரியைகள் நன்கு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேவியை பிரதிஷ்டை செய்யும் முறையாகிற நாற்பத்தி நான்காவது படலமாகும்.