ஞாயிறு, 17 ஜனவரி, 2021

முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.

முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.

1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்

இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது. எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

நமசிவாய

"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல்,
சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

திருமந்திரம் நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."

"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க. இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.

இதன் ஞான நிலை:சிவவாக்கியர்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"

தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம்.
நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே. அதுவே இறையின் மலர்ப்பாதங்கள்.

இவைகளைப் (சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.

லிங்கம் விளக்கம்

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. .

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்
லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

நட்சத்திர கோயில்கள்:பரணி-2

நட்சத்திர கோயில்கள்:பரணி-2
 
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
 
மூலவர்:அக்னீஸ்வரர்
அம்மன்:சுந்தரநாயகி
தல விருட்சம்:வன்னி, வில்வம்
ஆகமம் பூஜை :சிவாகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநல்லாடை
ஊர்:நல்லாடை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்தமிழ்நாடு  
 
திருவிழா: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு.
 
தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
 
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91 4364-285 341,97159 60413,94866 31196
 
பொது தகவல்: பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.
 
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.
 
இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
 
பிரார்த்தனை:பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.
 
தலபெருமை:கார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.
 
 தல வரலாறு:மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.
 
மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.
 
மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.
 
மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

நட்சத்திர கோயில்கள்:அசுவினி-1

 நட்சத்திர கோயில்கள்:அசுவினி-1

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
 
மூலவர்:பிறவி மருந்தீஸ்வரர்

அம்மன் :பிரகன்நாயகி (பெரியநாயகி)
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருத்துறைப்பூண்டி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
    
திருவிழா:சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.   
       
தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.போன்:+91 4369 222 392, 94438 85316, 91502 73747  
      
பொது தகவல்:அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

பிரார்த்தனை:அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:அஸ்வினி நட்சத்திரத்தலம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

கஜசம்ஹார மூர்த்தி: தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.

தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார்.  முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.   
       
தல வரலாறு:ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல,

இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.

அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்

அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்
 
மூலவர்:வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)
தீர்த்தம்:கங்கா நதி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:கட்ரா
மாவட்டம்:கட்ரா
மாநிலம்:ஜம்மு & காஷ்மீர்
 
திருவிழா:வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சிறப்பாக நடைபெறுகிறது.   
       
தல சிறப்பு:இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)   
       
திறக்கும் நேரம்:திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைகோயில் (பவன்) ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர இதர மாதங்களில் யாத்ரா மேற்கொள்ளலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணோதேவி இலவச தரிசனம்.   
     
முகவரி:அருள்மிகு வைஷ்ணவி தேவி திருக்கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.போன்:+91-1991-232 125  
      
பொது தகவல்:ஸ்ரீவைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.

யாத்ரா வைஷ்ணோதேவி ஸ்தலமான இந்த குகை கோயிலுக்கு வர நாம் முதலில் ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும் பயணிகளில் 75 சதவீத மக்கள் ஸ்ரீ வைஷ்ணோதேவியை தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணோதேவி மலையை சென்றடைய நம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. ஜம்முவில் இளைப்பாற சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோதேவி தாம் என்ற இரு தங்கும் விடுதியை பக்தர்களுக்காக வைஷ்ணோதேவி போர்டு உருவாக்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 50 கி.மீ. பிரயாணம் செய்ய ஜம்மு ரயில் நிலையத்திலிருந்தே அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ரயிலிலிருந்து வரும் பக்தர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

2003ல் ஜம்மு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய ராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பஸ் நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவியை தரிசிக்க முதலில் தங்களை பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே வைஷ்ணோதேவி போர்டு - பதிவு நிலையத்தை 24 மணி நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இலவசமாக தரப்படுகிறது. இந்த ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பஸ் நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ செக்போஸ்ட்டில் நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

ஒரு முக்கிய வேண்டுகோள் : மலைக்கு செல்லும்போது முடிந்தவரை உடைகள், உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.

வைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :
மலை பிரயாணத்திற்காக மட்ட குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி (4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண் / பெண் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தே ஜெய் மாதா தி என்ற கோஷத்துடன், மனஉறுதியுடன், பக்தியுடன் நடந்தே வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு "ரெப்பிரஸ் மென்ட்' ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.

வசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் கட்ராவில் பெற்றவுடன் பஸ்நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தை தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம் மலைமீது உள்ள வைஷ்ணோதேவியை எளிதில் அடையலாம். ஹெலிகாப்டர் மூலம் செல்ல கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்).

மலைமீது நடக்க அனைத்து பரிசோதனைக்கு பின் நாம் முதலில் நீராட வேண்டிய நதி பாண்கங்கா. ஸ்ரீவைஷ்ணோதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான நதி பாண்கங்கா. எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி என்ற சரண கோஷத்துடன் மலைஏற துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற திரு.குல்சன்குமார் அவர்கள் பெயரில் மிகப் பெரிய அளவில் பாண்கங்காவில் அன்னதானம் (24 மணி நேரமும்) நடைபெறுகிறது.

அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணோதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயா என்ற பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அர்த்த குமாரியை அடையலாம். நாம் மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும் கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவுவாயிலை அடையலாம்.

மலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து விட்டுத்தான் பவன் என்றும் ஸ்ரீவைஷ்ணோதேவி குகைக்கோவிலுக்கு செல்ல முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். கேட் 1*2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேட் 3. மூலம் ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும் விடுதிகள், தனி நபர் டால்மெண்ட்ரிகள், இலவச பெட்ஷீட்கள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.
 
பிரார்த்தனை:இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
 
நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.  
      
தலபெருமை:கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

குகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கர்ப்பகிரஹம் உள்ளது. சுயம்புவான மூர்த்த உருவில் மூன்று உருவங்களாக தேவியை மிக கவனத்துடன் தரிசிக்கவும். இடதுபுறம் மஹா சரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மஹாகாளியாகவும், நடுவில் மஹாலெட்சுமியாகவும் ஆக மூன்று தேவியரின் முழு உருவாக வைஷ்ணோதேவி அருட்காட்சி அளிக்கிறாள். தேவியை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரைபாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம் பொறித்த வெள்ளி டாலர் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வைஷ்ணோதேவியை வருடந்தோறும், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்வதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களின் குல தெய்வமாக வைஷ்ணோதேவி விளங்குவதோடு அவர்களது குடும்பங்களை காத்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக வந்துசெல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இந்த வைஷ்ணோதேவி குகைக்கோயில் (பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.
 
தல வரலாறு:தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு. ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு திருமகளாக வைஷ்ணோ தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குகையில் ஒளிந்துகொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை சம்ஹாரம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. தேவி, மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை (பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்ற வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.
 
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோவில்

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோவில்




மூலவர்:தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர்:தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம்:பாபநாசதீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:குமரிகண்டம்
ஊர்:கன்னியாகுமரி
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு
   
திருவிழா:புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.   
       
தல சிறப்பு:இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி - 629702, கன்னியாகுமரி மாவட்டம்.போன்:+91- 4652 - 246223  
      
பொது தகவல்:கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.

கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும். சுசீந்திரம் கன்னியாகுமரியின் வடக்கே 10 கி.மீ,. தொலைவில் உள்ளது.
 
பிரார்த்தனை:கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது. இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
 
      
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.  
      
தலபெருமை:விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.

பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.

கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.

முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம். வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.
 
தல வரலாறு:முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர் அடக்கியாண்டனர். தர்மம்  அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும். பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாள் செல்ல செல்லக்  கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார். அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம்  தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால்,  தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை  எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.

விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!

விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை!
 



அழகு கொஞ்சும் ஐந்து முகங்கள்; ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள்; ஐந்து சிரங்களையும் அலங்கரிக்கும் அழகான மணிமகுடங்கள். மகுடத்துக்கு மகுடம் போல அழகானதொரு சந்திர கலை; அழகிய திருக்கரங்கள் பத்து; இடக்கரங்களில், சங்கு, பாசம், கேடயம், வில் மற்றும் செங்கழுநீர் பூவை ஏந்தியும், வலக்கரங்களில் சக்ரம், அங்குசம், வாள், அம்பு, நாரத்தம்பழம் ஆகியவற்றை ஏந்தியும், ஸர்வாபரண பூஷிதையாக மஞ்சள்நிறப் பட்டாடை உடுத்தி உதயகால சூரியனின் ஒளி போல தேஜோமயமாக ஜொலிக்கிறாள் விஜயா நித்யா.
 
ஜயம் என்றால் வெற்றி என்று பொருள். விஜயம் என்றால் விசேஷமான வெற்றி. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்றே பொருள். தன் பக்தனுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பைக் கொடுப்பதே விஜயா நித்யாவின் பணி. பள்ளியிலும் கல்லூரியிலும் பரீட்சையில் வெற்றி; வேலைக்கான தேர்வில் வெற்றி; வேலையில் வெற்றி; முன்னேற்றத்தில் வெற்றி; வியாபாரத்தில் வெற்றி; வரவு செலவில் வெற்றி; சந்தோஷத்தில் வெற்றி; எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையிலேயே வெற்றி.. இப்படி தொட்டதெல்லாம் துலங்கும்படியான ஒரு வாழ்க்கை சாத்தியமாகுமா?
 
கற்பனையிலும் கனவிலும் மட்டும் கண்ட வெற்றிகளை நிஜமாக்க, விஜயா நித்யாவின் பேரருள் இருந்தால் சந்தேகமில்லாமல் சாத்தியமாகும்.இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றி என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு வெற்றி கிடைப்பதற்கு உழைப்பும் திறமையும் மட்டும் போதாது. மிகுந்த திறமையும், கடின உழைப்பும் இருந்தும் பலர் சோபிக்க முடியாமல் குடத்திலிட்ட விளக்காகவே விளங்குவதை நாம் பார்க்க முடியும். திறமையையும் உழைப்பையும் சரியானபடி பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டையும் சரியான நேரத்தில் வெளிக்கொண்டு வருவது இறையருள் மட்டுமே! அப்படி வெற்றியடையச் செய்பவள் விஜயா நித்யா மட்டுமே!
 
வியாபாரமாக இருந்தாலும், வழக்காக இருந்தாலும் தன்னையே சரணமென்று பணிந்து வணங்கும் பக்தனுக்கு நியாயமான வெற்றியை அருள்கிறாள். தன் பக்தனை எந்த இடத்திலும் துவள விடாமல் ஜெயிக்க வைக்கிறாள்.
 
உலகில் வெற்றிபெற்ற பலரும், குடும்ப வாழ்வில் நிம்மதி இழந்து தவிப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இதை விஜயா தேவி போக்குவதோடு மட்டுமல்லாமல் குடும்ப ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறாள். இவளை முறையாக ஆராதனை செய்தால் - குடும்பத்தில் உள்ள மனஸ்தாபங்கள், கருத்து வேற்றுமைகள் மறைந்து மன சந்தோஷமும் ஒற்றுமையும் பெருகும்.
 
பண்டைய காலங்களில் போருக்குச் செல்லும் அரசர்கள், விஜயா தேவியை வழிபட்டு, அதன் பின்னரே புறப்படுவார்கள். புரட்டாசி மாத சுக்லபட்ச தசமியன்று சாயங்காலத்துக்குப் பின்னர் நட்சத்திரங்கள் உதயமாகும் காலத்துக்கு விஜயா என்றே பெயர்; அந்த நேரத்தில் துவங்கப்படும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் (இதுதான் நம்மால் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது).
 
புலனடக்கம் மிகக் கொண்டு கடும் அனுஷ்டானங்களுடன் மனத்தை வென்ற சாதகன், இவளை முறையாக இவளது சக்ரத்தில் பூஜிப்பானாகில், அவனால் அடைய முடியாதது ஏதுமில்லை. அவன் வாழ்வில் எப்போதும் இன்பம் மட்டுமே நிலைத்திருக்கும். உலகியல் வாழ்வின் அனைத்து கூறுகளிலும் வெற்றியைத் தொட்டு, ஆன்ம வாழ்விலும் தன்னைத் தான் உணர்ந்து ஆன்ம வெற்றியையும் அடைவான். உபாஸனேதி சவும்யாம் ச ப்ரயோகே பீமதர்சனாம் எனும் வாக்கின்படி, நிஷ்காம்யமாக தன்னை வணங்கும் பக்தனுக்கு அவனது சகல காரியங்களிலும் வெற்றியைத் தருகிறாள் விஜயா தேவி. பிரதிபலன் எதிர்பார்க்காமல் வணங்கும்போது அம்பிகையை சவும்ய ரூபிணியாக - சாந்த வடிவில் வணங்கும்படி ஸம்ஹிதைகள் அறிவுறுத்துகின்றன. அதேசமயம் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து அதாவது எதிரிகளை வெல்லவோ, வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகவோ பூஜிக்கும்போது, அம்பிகையை உக்ர ரூபிணியாக தியானிப்பது வழக்கம். சிங்கத்தில் அமர்ந்த கோலத்திலும், அவளது பரிவாரங்கள் புலிகளின் மேல் வீற்றிருக்கும் கோலத்திலும் அம்பிகையை தியானித்து பூஜிக்க வேண்டும். இம்முறை, குருவின் நேரடி வழிகாட்டிதலில் செய்யப்படுதலே நலம் பயக்கும்.
 
விஜயா நித்யாவுக்கான அர்ச்சனை:
 
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:
ஓம் வாமலோசனாயை நம:
 
ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் குலோத்பவாயை நம:
ஓம் க்ருசாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் க்ஷõமகண்டாயை நம:
ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமேச்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:
ஓம் துச்சாங்க்யை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:
ஓம் நீருஜாயை நம:
ஓம் ருஜ நாசின்யை நம:
ஓம் விசல்யகரிண்யை நம:
ஓம் ச்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:
ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ரநமிதாயை நம:
ஓம் சந்த்ரரேகாயை நம:
ஓம் ஸுவர்ணிகாயை நம:
ஓம் ரத்னமாலாயை நம:
ஓம் அக்னி லோகஸ்தாயை நம:
ஓம் சசாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராதீதாயை நம:
ஓம் தாரயந்த்யை நம:
ஓம் பூர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாயை நம:
ஓம் பூரிசுத்தாயை நம:
ஓம் மந்த்ர ஹுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:
 
விஜயா நித்யாவுக்கான பூஜை :
 
முதலில் லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.
 
யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்
 
என்று கூறி, லலிதா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான விஜயா நித்யாவை, அவளது யந்திரத்திலோ படத்திலோ தியானிக்கவும்.
 
ஜயப்ரதாம் ஸ்ரீ விஜயாத்ம போத
ஸெளக்ய ப்ரதாம் மோக்ஷவிதான க்ஷõம்
ஜயாதி ரூபாம் விஜயாமஜேயாம்
ஐகாரரூபாம் ப்ரணமாமி நித்யாம்
 
என்று கூறி, விஜயா நித்யா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.
 
மேற்கூறிய நாமாவளியால் தேவிக்கு உகந்த சாமந்தி, மந்தாரை போன்ற மஞ்சள் நிற புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும். அவல் கொண்டு செய்யப்பட்ட நிவேதனங்களைச் சமர்ப்பிக்கவும். பின்னர் தேவியின் காயத்ரியைக் கூறி, கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.
 
விஜயா தேவிக்கு உகந்தவை:
நாட்கள்: வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி
புஷ்பம்: மஞ்சள்நிறப் பூக்கள்
நைவேத்யம்: அவல்
காயத்ரி மந்திரம்:
 
விஜயா தேவ்யை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்