ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அருள் மிகு வடக்கு நாதர் திருக்கோயில்

அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்

மூலவர் : வடக்குநாதர்                   பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சூர்
மாவட்டம் : திருச்சூர்
மாநிலம் : கேரளா
விழா : திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால் அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.    

சிறப்பு: இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் வேண்ணையால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "வேண்ணை லிங்கம்' என அழைக்கிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர் : 680 001, கேரளா. போன்: +91- 487 - 242 6040.


தரிசிக்கும் முறை: ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரம் திருக்கோவிலின் முகப்பில் உள்ளது. அதனை ஏழு முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் கழுவி திருக்கோவிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில் குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அதன் பின் அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்கவும். வடக்கே உள்ள சிவபகவானை வேண்டவும். அதன் பின் விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை மூன்று தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும். பின்னர் முதல் முண்டம் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்கவும். அதன் பின் முறையே கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்கவும், திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசிக்கவும், திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் சமாதியை அடைந்து வழிபடலாம். கடைசியாக சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து இரு கால் பாதங்களை திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை. என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும்.

இந்த கோயில் "பெருந்தச்சன்' என்பவரது காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது. அவரது காலத்திற்கு பின் நம்பூதிரிகள் பொறுப்பேற்று, தங்களில் ஒருவரை தலைவராக (யோகதிரிப்பாடு) நியமித்து கோயிலை நிர்வகித்து வந்தார்கள். ஆனால் கொல்லம் ஆண்டு 981 ற்கு பின் கொச்சி ராஜா சக்தன் தம்புரான் காலத்தில் இந்த நடைமுறையை மாற்றி கோவிலை பொது மக்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்தார்.

இவரது காலத்தில் கோவிலை சுற்றி தேக்கு மரக்காடு இருந்தது. இதை அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுத்தனர். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்றனர்.

அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது. மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அக்கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை. சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் தான் இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

சுற்றுப்பிரகாரத்தில் சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. எப்போது பூஜை நடந்தாலும் இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை : இவரை "வடக்குநாதர்' என்கின்றனர். ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.

இந்த லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட வேண்ணை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை. மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.


பெருமை: லிங்கத்தின் அமைப்பு பன்னிரெண்டு அடி உயரம், இருபத்தி ஐந்து அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த வேண்ணை எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது வேண்ணை வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு வேண்ணையால்  அபிஷேகம் செய்து வருகின்றனர். வேண்ணை கட்டியாக உறைந்து வரும். கோடையின் வெப்பமோ, திடங்களின் ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த வேண்ணை உருகி விழச்செய்யாது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள வேண்ணை மனம் கிடையாது. வேண்ணை லிங்கத்திற்கு வேண்ணையால் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.

விலகிய நந்தி: இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோவிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை. வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் உள்ள வியாசமலையில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள் ஹரி ஸ்ரீகணபதியே நமஹ என்று தனது கைகளால் கற்சிலை - வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல). அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம். தற்போது ஏராளமான இளம் பக்தர்கள் பக்தைகள் எழுதி வருகின்றனர்.

உலகம் உய்ய அவதரித்த மகான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார்.

இத்திருக்கோயிலின் முன்புறம் உள்ள தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு பிரதி மார்ச் மாதமும் நடைபெறும். இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்புரம் என்பர்.


வரலாறு: ஒரு முறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் வேண்ணை தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு வேண்ணையால்  செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் வேண்ணையால்  லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம். இதை "தென் கைலாயம்' என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.


பராசரர்

பராசரர்

வசிட்டர் அருந்ததி அவர்களின்
மகன் சக்திரி.

சக்திரி ஓர் ரிஷி ஆவார்

சக்திரி அடர்ந்த மலைக் காட்டில் ஒற்றையடிப் பாதை வழியாக செல்கையில் எதிரில் வந்த இச்வாகு குல மன்னன் கல்மாஷபாதன்
பாதையை மறித்து நின்றார்.

கல்மாஷபாதன் ஓர் நல்ல மாமன்னன். விசுவாமித்திரரே அவனை சீடனாக ஏற்பதாக கூறியும் அவன் தொடர்ந்து மன்னனாகவே இருந்து வந்தான். வசிஷ்டருக்கு விசுவாமித்திரர் செயல் பிடித்தமானதாக இல்லை என கூறி வாதம் செய்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.

விலகி போ என இருவரும் மாறி மாறி சொல்லிய வண்ணம் வாக்குவாதம் செய்தனர். குதிரையை விரட்டும் சவுக்கால் சக்திரி முனிவரை அடித்துப் பாதையை விட்டு விலகிச் செல் என அடித்தார். தன்னை ஒரு ரிஷி என்று அறிந்தும், அரக்கத்தனமாக அடித்ததால், மன்னர் கல்மாஷபாதனை நரமாமிசம் உண்ணும் அரக்கனாக மாற சாபமிட்டார் சக்திரி. அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் வசிட்டர் மீதான கோபத்தை அவரது மகன் சக்திரியை அழிக்கும் விதமாக ஒரு செயல் செய்தார். ஏற்கனவே சக்திரியின் சாபம் பெற்ற கல்மாஷபாதனின் உடலில், விசுவாமித்திரர் ஒரு கிங்கரனை ஏவினார். கல்மாஷபாதன் சக்திரி முனிவரையும் அவரது தம்பியர்களையும் கொன்று குவித்து நரமாமிசம் உண்டான்.

முனிவர் சக்திரி இறந்த போது 12 வயதான அவரது மனைவி அத்ருச்யந்தீ கர்ப்பவதியாக இருந்தாள். ஓர் வனத்தினில் கற்பாரையில் வசிஷ்டர் அமர்ந்திருந்தார். அவரை தின்று பசியை போக்கி கொள்ள கல்மாஷபாதன் ஓடி வந்தான். தன் கமண்டலத்தில் இருந்த நீரை
கல்மாஷபாதன் மேல் தெளிக்க சுய உணர்வு பெற்றான் மன்னன்.

பன்னிரென்டு வருடங்கள் அரக்கனாக நரமாமிசம் தின்றவன்
மறுபடியும் மனிதனாக அரக்க குணம் இன்றி கையெடுத்து வணங்கி நின்றான். அவனை மன்னித்த வசிஷ்டர் நாடாள செல்ல பணிந்தார்.

அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. தனது மகன்கள் இறந்ததை தாக்கி கொள்ள முடியாமல் பல முறை வசிஷ்டர் உயிரை விட எத்தனித்த போது அவர் இறைவனால் காப்பாற்றப்பட்டார்.

ஓரு முறை வசிஷ்டருக்கு யாரோ மந்திரங்கள் சொல்வது காதில் விழுந்தது. மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டு விட்டான் என்றாள். தனக்கு ஓர் பேரன் வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர் வசிஷ்டரும் அருந்ததியும். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார்.

பராசரர் என்ற சொல்லுக்கு பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும் படி செய்பவன் என்பது பொருள்.

இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது.

அவனது தாய் ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டாள். அத்துடன் அவனது தந்தை சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். தன் தந்தை மற்றும் தனது சித்தப்பாவை அழித்தவர்களை பழிவாங்க முடிவு செய்து வசிஷ்டரிடம் அனுமதி கேட்க
பழி வாங்குவது ரிஷிகளின் இயல் பில்லை என மறுத்து அவரை தடுக்கிறார். பராசரர் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான பூதங்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த பூதங்களைகளை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்திரியை நினைத்துக் கொண்டு முதிர்ந்த இளைய பால்ய பூதங்களைகளை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.

முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிவர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.

“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான பூதங்களைகளை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான நமக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்திரி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் கொல்லப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் சுவர்க்கம் சென்றுவிட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார். அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள். பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் அழிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டி விட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பலகாலமாக காணப்படுகிறது.

சக்திரிபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை சுப்ரமணியர் விழுங்கினார். தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார். வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ள நதி இதுவாகும். பராசரர் விஷ்ணுபுராணம் எழுதினார். பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது. பராசருக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவரே வேதவியாசர். வேதவியாசர் மகாபாரதத்தை தந்தவர் ஆவார்.


சாளக்கிராம பூஜை

 சாளக்கிராம பூஜை

1. சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல. பாபங்கள் கழன்று ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியேஇல்லாது அல்லது எதிர் பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் இப்பூஜையினை செய்பவர்கள் விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...! அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

9. சாளக்கிராமம் பகவான் இருக்குமிடம். சர்வ பாபங்களையும  நாசம் செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு
 செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவது போல சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன் கூட சாளக்கிராம பூஜையினால் முக்தி பெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்து விடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து அருள் பாலிக்கின்றனர்.

19. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும். சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவா நிலை கிடைத்து விடும்.


சித்தர்

 30 வருடங்களுக்கும் மேலாக நீர், உணவு இன்றி வாழும் அபூர்வ சித்தர், மகாதேவன் மலை மஹானந்த சித்தர்

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.

மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.

சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது
சித்தரும் சித்தவைத்தியமும் ..,

மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர்.

பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.

மகாதேவ மலை சித்தர் அமைவிடம்...
சென்னையில் இருந்து பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.
வேலூர் மாவட்டம் மஹா தேவர் மலை கோவில் சுற்றுலா தளம் சித்தர் ஈசன்