ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

கருப்பறியலூர் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயத்தின் அவல நிலை

கருப்பறியலூர்- நாகை பட்டினம் மாவட்டம்/ மயிலாடுதுறை வட்டம் / பட்டவர்த்தியில் இருந்து பிரிந்து இடது புறம் செல்லும் வழியில் தலைஞாயிறு இன்றைய பெயர் திருஞானசம்பந்தர்/சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்

உலகத்தில் கொகுடிக்கோயில் அமைப்பில் உள்ள அரிய வகையான புராதனமான சிவாலயம்

கும்பாபிஷேகம் நடைபெறாமல்
65 ஆண்டுகள் ஆகி விட்டது கடைசி கும்பாபிஷேகம் 1953 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் சுப்ரமணிய தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களின் அருளாட்சியில் நடை பெற்றது

முறையாக ஆறு காலம் சுவாமி** குற்றம் பொறுத்த நாதர்** அவர்களுக்கு பூசை இல்லை

குருக்கள் சிவாச்சாரியார் மேல் குறை இல்லை மயிலாடுதுறையில் இருந்து தலைஞாயிறு (கருப்பறியலூர்) வந்து செல்ல 38 கிலோ மீட்டர் ஆகும் குருக்களுக்கு மாதம் சம்பளம் 3800 ருபாய் இதனால் அவர் ஒரு கால பூசை மட்டுமே நடை பெறுகிறது  தினமும் பெட்ரோல் செலவு 100 ருபாய் ஆகிறது எப்படி குருக்கள் 3900 சம்பளம் வைத்து தன்னுடைய குடும்பத்தை ஜிவனாம்சம் செய்வார் ???

மேலைக்காழி என்று சிறப்பாக போற்றப்படும் கருப்பறியலூர் வெளி பிரகாரம் மதில் சுவர்கள் உடைந்து திருடர்கள் திருமேனி திருடுவதற்காக வசதியாக உள்ளது

மலைக்கோவிலில் அம்மையப்பராக சுவாமி அம்பாள்  இருந்த சான்றாக கருப்பறியலூர் தேவார‌ பதிகத்தில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் - மடம்படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன் .2 ஆம் திருமுறை 4 வது பாடல்  என்று திருஞானசம்பந்தர் சுவாமிகள் போற்றிய

மலைக்கோவில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து பக்தர்கள் தலையில் விழும் நிலையில் உள்ளது மரங்கள் முளைத்து மலைக்கோவில் சிதலம் அடைந்துள்ளது

மலைக்கோவில் உள்ள சட்ட நாதர் அவர்கள் திருமேனி சுற்றி  கருப்பு வர்ணம் பூசப்பட்டது போல் உள்ளது

சட்டநாதரை தரிசிக்க செல்லும் மரப்படிக்கட்டு உடைந்து உள்ளது

சுவாமி விமானங்கள் / கோவில் மேல் மரங்கள் முளைத்து சிவாலயம் அழிந்து கொண்டு வருகிறது

கருப்பறியலூர் நந்தனவனத்தில் - கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் புகழ்பெற்ற நந்தனவனம் முழுவதும் பாலைவனமாக உள்ளது

மற்றும் சுவாமிக்கு சந்தனம் அரைக்கும் இடம் குப்பை தொட்டியாக காட்சி தருகிறது

கருப்பறியலூர் சிவாலயத்தை உடனே கும்பாபிஷேகம் செய்து பாதுகாக்க வேண்டும் தருமபுரம் ஆதீனம் & இந்து சமய அறநிலையத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவரகளே தமிழக முதலமைச்சர் என்று பெருமையாக பேசி எந்த பயணம் இல்லை தமிழ் நாட்டின் புராதனமான சிவாலயங்களை பராமரிப்பு செய்யாமல் என்ன செய்து கொண்டு உள்ளது அரசு சிவாலயங்களின் சொத்துக்களை  ஐந்து வருடங்களில் எவ்வளவு சுருட்டலாமோ அவ்வளவு திருடி கொண்டு உள்ளதா தமிழ் நாடு அரசு பதில் தர முடியுமா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களே ?? பயம் என்பது எங்களுக்கு கிடையாது ஏன் என்றால் நாங்கள் பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள்

வீரத் திருத்தொண்டர் சத்தியார் 8489061461
மயிலாடுதுறை அழிவின் விளிம்பில்

திருநின்றியூர் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் அழிந்து விட்டது
நாகை பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஊர் பெயர் திருநின்றியூர்

திருஞானசம்பந்தர் சுவாமிகள்/திருநாவுக்கரசர் சுவாமிகள்/சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்

பரசுராமர்/ஜமதக்னி/ அகத்தியர்/இந்திரன்/மகாலட்சுமி/ஐராவதம்/பசு ஆகியோர் வழிபட்ட திருவருள் பெற்ற சிவாலயம்

கும்பாபிஷேகம் நடைபெற்று 63 ஆண்டுகள் ஆகி விட்டது இதனால்  (சர்வ நாசம்) நாடு நாசமாகும்/உயிர்கள் துன்பத்தை அடையும் / தர்மம் அழியும்/ அதர்மம் ஓங்கும் /

கிழே இணைத்துள்ள அனைத்து புகைப்படங்கள் பார்க்க வேண்டும்

இவ்வளவு சிறப்பான 1500 வருடம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் அழிந்து கொண்டு வருகிறது பாதுகாக்க மயிலாடுதுறையில் உள்ள மக்களுக்கு எண்ணம் இல்லை எல்லாம் சுயநலம் மயிலாடுதுறையில் மனிதர்களே இல்லையா .‌ நான் தமிழின் என்று மார் தட்டும் தமிழர் எங்கு சென்றார்கள் ??

திருநின்றியூர் சிவாலயம் சுவாமி விமானம்/ அம்பாள் விமானம் /மதில் சுவர்கள்/ இராஜ கோபுரம் / அனைத்தும் அழிந்து விட்டது இதற்கு‌ மேல் அழிய ஒன்றும் இல்லை இது என்ன சிவாலயமா ???

மடப்பள்ளி முழுவதும் கருங்கல் திருப்பணி இன்று கட்டினால் 1 கோடி செலவு ஆகும் அதை பராமரிப்பு செய்யாமல் மடப்பள்ளி சுத்தமாக அழிந்து விட்டது இனிமேல் மடப்பள்ளி புதிதாக 1 கோடி செலவு செய்து கட்ட வேண்டும்

திருநின்றியூர் சுவாமி வாகனங்கள் அனைத்து முறையாக பராமரிப்பு செய்யாமல் அனைத்து வாகனங்களும் அழிந்து விட்டது இனிமேல் வாகனங்கள் செய்ய 25 லட்சம் வேண்டும் இனிமேல் வாகனங்கள் செய்ய வேண்டும் என்று.யார் வர போகிறார்கள் பாவம் உபயதாரர்கள்?

தல விருட்சம் மரம் இல்லை விளா‌மரம்

சிவாலயத்தின் மதில் சுவர்கள் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும்/ இராஜ கோபுரம் இடிந்து பக்தர்கள் தலையில் விழும் நிலையில் உள்ளது / வெளி பிரகாரம் விநாயகர்/சுப்ரமணியர் விமானங்கள் அழிந்து கொண்டு வருகிறது

திருநின்றியூர் சிவாலயத்தில் சொத்து மதிப்பு 360 வேலி 7 ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய தேவாரம் 7ஆம் திருமுறை 65 பதிகம் 3 வந்து பாடலில் தெளிவாக கூறி உள்ளார்

 ****மொய்த்த சீர்((*முந்நூற் றறுபது வேலி*))
  மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
  ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
  பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
  செல்வத் தென்றிரு நின்றியூ ரானே**** 7.65.3

திருநின்றியூர்  360 வேலி (7200 மா / 2400 ஏக்கர்) நிலம் உடைய சிவாலயம் ஏன் 63 ஆண்டுகள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது  இவ்வளவு கோடிக்கணக்கான பணம் கொண்ட சிவாலயம் ஏன் அழிந்து விட்டது ஏன் தருமபுரம் ஆதீனம் இந்த சிவாலயத்தை கண்டு கொள்ளாதது ஏன் ?

திருநின்றியூர் சிவாலயத்திற்கு சொந்தமான அரசர்கள்/ புண்ணியவான்கள் தந்த ( 7200 மா / 2400 ஏக்கர் )நிலம் எங்கே போயிற்று தமிழ்நாடு அரசு இந்த சமய அறநிலையத்துறை எதற்கு உள்ளது சிவாலயங்களின் சொத்துக்களை திருடி தின்பதே தமிழ்நாடு அறநிலையத்துறை வேலையா ??

சிவாலயங்களை பராமரிக்க தவறிய தமிழ்நாடு அரசு ஒழிய வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிவபெருமான் நிறைய துன்பங்களை தர வேண்டும்

தருமபுரம் ஆதீனம் விரைவில் திருநின்றியூர் சிவாலயத்தை பாதுகாக்க வேண்டும் / இது மட்டும் இல்லாமல் உங்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் பணத்தை வைத்து பல சிவாலயம் திருப்பணி செய்ய வேண்டும் என்பது சிவனடியார்கள் விருப்பம்

மனிதனே நேரத்தை விணாக்காது ஒருவனுக்கு ஒரு சிவாலயம் என்ற பாதுகாக்க நீ முன்வரவில்லை என்றால் கடைசியில் சான்று காண்பிக்க உனக்கு மண் கூட மிஞ்சாது

வீரத் திருத்தொண்டர் சத்தியார் 8489061461
அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில்

மூலவர் : சங்குபாணி விநாயகர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
விழா : விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி  
      
சிறப்பு : இங்குள்ள விநாயகர் கையில் சங்கை ஏந்தி, சங்குபாணி விநாயகராக அருள்பாலிப்பது சிறப்பு.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் காஞ்சிபுரம்.  
    
தகவல் : காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கிலும் உலகளந்தபெருமாள் கோயிலுக்குத் தெற்கிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சங்குபாணி விநாயகர். சப்பாணி விநாயகர் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்!  
      
ஸ்தல பெருமை : காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் 16 கணபதிகளில் குறிப்பிடத்தக்கவர் இவர். காஞ்சி மாமுனிவராம் மகா பெரியவா யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடிந்து காஞ்சிக்குத் திரும்பிய பின்பும் இந்தப் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் (சிதறுத் தேங்காயாக) சமர்ப்பிப்பாராம்.  
      
ஸ்தல வரலாறு : தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங்களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர். அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றியவன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் அல்ல; தமையனைவிட பல மடங்கு ஆற்றல் நிறைந்தவனாகத் திகழ்ந்தான். இவர்களைக் கொண்டு தேவர்களை முறியடிப்பதுடன், பிரம்ம தேவனிடம் இருக்கும் வேதங்களையும் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டனர் அசுரர்கள். வேதங்கள் தங்கள் வசம் வந்துவிட்டால், அவற்றைப் படைக்கலன்களாக்கி தங்களை பலவீனப்படுத்தும் தேவர்களின் செயல் முடக்கப்படும். தங்களின் திட்டத்தை சங்காசுரனிடம் தெரிவித்தனர். அவன் தன்னுடைய தம்பி கமலாசுரனை அழைத்து, மறைகளைக் கைப்பற்றி வரும்படி பணித்தான். கமலாசுரனும் தனது மாயையினால் பிரம்மனின் இருப்பிடத்துக்குச் சென்று, அவர் அயர்ந்து உறங்கும் வேளையில், வேதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அண்ணனிடம் ஒப்படைத்தான். அவற்றைக் கடலுக்குள் மறைத்து வைத்துக் காவல் செய்தான் சங்காசுரன். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனாரைச் சரணடைந்தார். விநாயகரை வழிபட்டால் வினை தீரும் என அறிவுறுத்தினார் கயிலைக் கடவுள். அதன்படியே, பத்மாசனத்தில் (தாமரை ஆசனத்தில்) அமர்ந்து, விநாயகரை வழிபட்டார் பிரம்மன். இதனால் மகிழ்ந்து நான்முகனுக்குக் காட்சி தந்த ஐந்துகரத்தான், வருந்தற்க! உமது பிரச்னை விரைவில் தீரும் என்று அருள்புரிந்தார். அதன்பொருட்டு, அந்தணராக உருவெடுத்தார். புதிதாக வேதாகமங்களை உருவாக்கி, ஆயிரம் சீடர்கள் சூழ்ந்து வர, அவற்றை எடுத்துச் சென்று பிரம்மனிடம் தந்தார். மேலும், இவற்றைக் கொண்டு பணியைத் தொடருங்கள். எனது பெயர் மல்லாலர். அசுரர்களை அழிக்க நான் துணை செய்வேன் என்று அங்கிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களிடம் தெரிவித்தார். மல்லாலர் என்பவரால் தேவர்களுக்கு வேதாகமங்கள் கிடைக்கப் பெற்றன என்ற தகவல், கமலாசுரனுக்கும் சென்றது. அவன் விஷயத்தை சங்கா சுரனிடம் தெரிவித்தான். கோபம் கொண்ட சங்காசுரன், நீ விரைந்து சென்று மல்லாலரை அழித்து, மறை நூல்களைக் கைப்பற்றி வா! எனக் கமலாசுரனுக்கு ஆணையிட்டான். அவன் பெரும் படையுடன் புறப்பட்டான். மல்லாலரும் தயாரானார். தனது மாயையால் அளவற்ற படைகளை நொடிப் பொழுதில் உண்டாக்கினார். பெரும்போர் மூண்டது. கமலாசுரன் வல்லமைமிக்க அஸ்திரங்களைப் பிரயோகித்தான். அவற்றைத் தனது மழுப்படையால் அழித்தார் மல்லாலர். ஒரு நிலையில் தனது அஸ்திரங்கள் யாவும் அழிந்துபோக, மாயம் செய்து பெரும் பிரளயத்தை உருவாக்கினான் கமலாசுரன்.அந்தப் பிரளய நீரை, தமது தீக்கணையால் உறிஞ்சச் செய்தார் மல்லாலர். தொடர்ந்து போரிட இயலாத கமலாசுரன் மாயமாக மறைந்து, கடலுக்குள் இருக்கும் சங்காசுரனைச் சென்று சந்தித்தான். அவனோ, புறமுதுகு காட்டி ஓடி வந்து, உனது வீரத்துக்கு இழுக்கு தேடிக் கொண்டு விட்டாய்! எனவே, நாளை மீண்டும் செல். எதிரியை வதைத்து வா! என்று மீண்டும் தன் சகோதரனைப் போருக்கு அனுப்பி வைத்தான். இதற்கிடையே, மல்லாலர் வெற்றி பெறப் பிரார்த்தித்து, பெரிய வேள்வியைச் செய்தார் கர்க்க முனிவர். அதிலிருந்து மலையளவு பிரமாண்டமான மயில் ஒன்று தோன்றி, கூ... கா என்று கூவி, பேரொலி எழுப்பியது. அதை மல்லாலரிடம் ஒப்படைத்தார் கர்க்க முனிவர். அந்த மயிலின் மீது ஏறிச்சென்று போர்க்களம் புகுந்தார் மல்லாலர். அவரது சூலப்படை, கமலாசுரனை அழித்தது. இதையறிந்த சங்காசுரன் வெகுண்டான். பெரும்படையுடன் போருக்கு வந்தான்.ஆனால், அவனாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சங்கு வடிவம் கொண்டு, கடலுக்கடியில் சென்று ஒளிந்துகொண்டான். மல்லாலராகிய விநாயகர் அசுரனைத் தேடிச் சென்று அழித்தார். அத்துடன், அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார். இப்படி மயில் வாகனத்தில் வந்ததால், விநாயகருக்கு மயூரேச விநாயகர், மயூர கணபதி என்றெல்லாம் பெயர் உண்டு. அசுரர்களை அழித்தாலும், அவர்களின் ஆன்மாக்களைப் புனிதப்படுத்தி கணநாதர்களாக ஏற்றுக் கொண்டாராம் கணபதி. சங்காசுரனை தமது வெற்றிச் சங்காக துதிக்கையில் தாங்கினாராம். சங்கு ஏந்தியவர் ஆதலால், அவருக்குச் சங்குபாணி விநாயகர் என்று திருப்பெயர் (பாணி - கை) உண்டானது!


வியாசர்

வியாசரை பரமாத்மா ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பர். பதினெட்டு புராணங்களையும் ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும் எழுதியவர். வேதத்திற்கே வியாசம் எழுதி வேதவியாசர் என்று கீர்த்தி பெற்றவர். ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதத்தை அருளியவர். வேத வியாசர் பதினெட்டு புராணங்களிலும், ஒவ்வொரு தெய்வத்தை பெரிதென்று கூறுகிறார். பிரும்ம புராணத்தில் பிரும்மம் தான் பெரியது என்றும்; விஷ்ணு புராணத்தில் விஷ்ணுவைக் காட்டிலும் பெரியவர் இல்லையென்றும்; கந்தபுராணத்தில் கந்தன்தான் பெரியவன் என்றும்; தேவி பாகவதத்தில் தேவிதான் எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள் என்றும்; சிவ புராணத்தில் சிவபெருமான்தான் அனைத்திலும் உயர்ந்தவர் என்றும்- இப்படி ஒவ்வொரு புராணத்திலும் எந்தக் கடவுளை முன்வைத்து எழுதுகிறாரோ அந்தக் கடவுளை மற்ற தெய்வங்கள் பூஜித்து வணங்குவதாக எழுதுகிறார். ஆனால் பிரும்மாண்ட புராணத்தில், தெய்வங்களுக்குள் வித்தியாசம் கிடையாது; எல்லாமே ஒன்றுதான் என்று எழுதி முடித்தார்.

அனைத்தையும் எழுதி முடித்த வியாசர் இறுதியில் பூதவுடலை உகுத்து விண்ணுலகம் செல்ல விரும்பினார். காசிக்குச்சென்று கங்கையில் முழங்கால் அளவு நீரில் நின்று அபராதக்ஷ மாயாசனம் (தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருதல்) செய்து விட்டு, நாராயணனைக் காட்டிலும் வேறு பெரிய தெய்வத்தை நான் அறியவில்லை என்று கூறினார். அந்த நேரத்தில் நந்திகேஸ்வரர் கங்கையில் நீராட வந்திருந்தார். சரீரம் விடப்பட வேண்டிய நேரத்தில் வியாசர் சொன்னது நந்தி பகவானுக்குக் கேட்க, வியாசனே, ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு தெய்வத்தைப் பெரிதாகக் கூறினாய். முடிவில் பிரும்மாண்ட புராணத்தில் எல்லாமே ஒன்றுதான் என்று தெரிவித்தாய். தற்சமயம் நாராயணனே பெரியவர் என்று சொல்லிக் குழப்புகிறாய். சிவ ÷க்ஷத்திரத்தில், சிவ பக்தனான நான் அருகில் நின்று கொண்டிருக்கும் போதே சொன்னதை மாற்றிச் சொல்கிறாய். எனவே அபராதக்ஷ மாயாசனம் செய்வதற்காக தூக்கப்பட்ட உனது கைகளும், நீரில் அழுந்திய கால்களும் துண்டிக்கப்படட்டும் என்று நந்திகேஸ்வரர் சாபம் கொடுத்தார்.

இதைக் கேட்டு சிரித்த வியாசர், நந்தி பகவானே, நான் சரீரத்தை விடும் நேரம் நெருங்கிவிட்டது. காசியில் இறந்தால் முக்தி. எனவே நான் நேராக முக்தி அடைந்துவிடுவேன். உமது சாபம் பலிக்காது என்று கூறினார். அதற்கு நந்தி வியாசனே, நீ மீண்டும் ஒரு பிறவி எடுக்கப்போகிறாய், அப்போது நான் கொடுத்த சாபம் பலிக்கும் என்றார். நந்தியே, காசியில் இறந்தால் மறுபிறவியில்லை என்பதை நீ அறியவில்லையா? என்று கேட்டார் வியாசர். வியாசனே, காசியில் இயற்கையாக இறப்பவருக்குதான் முக்தி. தானாக உயிரை விடுபவருக்கு முக்தி கிட்டாது என்றார் நந்தி. வியாசர் சற்று அதிர்ச்சியடைந்து, நந்தியின் கால்களில் விழுந்து, என்னை மன்னித்து சாபவிமோசனம் தர வேண்டும் என்று வேண்டினார். சிவ பக்தனான நந்தி கொடுத்த சாபம் பலித்தே தீரும். உனது கை, கால்கள் துண்டிக்கப்பட்டு நீ துன்பப்படும் வேளையில், அந்த பரமேஸ்வரனே உனக்கு தரிசனம் தந்து, இழந்த கை, கால்களை மீண்டும் அருளுவார் என்று அருளினார் நந்தி.

வியாசரும் மனம் தெளிந்து, கங்கையில் தனது சரீரத்தை விட்டுவிட்டு சொர்க்கம் சென்றார். அங்கே தேவேந்திரனும், மற்ற தேவர்களும் பூரண கும்பத்துடன் வியாசரை வரவேற்றார்கள் . பதினெட்டு புராணங்களை இயற்றி, பல தத்துவங்களை போதித்த என்னையன்றி இப்படிப்பட்ட வரவேற்பு வேறு யாருக்குக் கிட்டும்? என்னைப் போன்ற புராண கர்த்தா எவருமே இல்லை என்ற ஆணவத்தோடு சென்றார் வியாசர். தேவேந்திரன் ஒரு ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னான். அந்த ஆசனத்தைக் கண்டதும் வியாசர் அதிர்ச்சியடைந்தார். காரணம், முள்ளால் நிரப்பப்பட்ட ஒரு ஆசனம் அது. வியாசர் கோபமுற்று, தேவேந்திரா, என்ன இது? நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாருமே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எழுதிய எனக்கு இப்படி ஒரு ஆசனமா? என்றார்.

அந்த சமயம் பரம்பொருளான நாராயணர் அங்கே தோன்றினார். வியாசா, நீ சொன்னது எல்லாம் உண்மையே! நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாரும் உயர்ந்த இடத்தைப் பெறட்டும் என்று எழுதியிருந்தாய். அவர்கள் உனது புராணங்களைப் படித்து, கேட்டு, அனுபவித்து பக்திப்பரவசம் கொண்டனர். ஆனால் நீ எழுதினாயே தவிர அதை அனுபவிக்கவில்லை. நான்தான் எழுதினேன் என்ற அகங்காரமும் கொண்டாய். அதனால் நீ இன்னொரு பிறவி எடுத்து அனுபவித்துவிட்டு வா. உனக்கு உயர்ந்த பதவி கிட்டும். நந்தியின் சாபமும் நிறைவேற வேண்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே, தினமும் அக்னி ஹோத்ரம் செய்யும் நாராயண சாஸ்திரி என்ற அந்தணருக்கும், கமலா என்ற அம்மைக்கும் பூரி ஜெகன்னாதரின் அருளால், ஒடிஸ்ஸா மாநிலத்தில் அவதரித்தார் வியாசர். சிறு வயதிலேயே தெய்வ பக்தி நிரம்பியவராகவும் ஆசாரசீலராகவும் இருந்தார். தெய்வாம்சம் பொருந்திய குழந்தையாக இருந்ததால் ஜெயதேவர் என்ற நாமம் சூட்டினார்கள். தக்க வயது வந்தவுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்த பத்மாவதி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தனர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிக்கொண்டும் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டும் தம்பதிகள் இறையின்பத்திலேயே இருந்தனர். ஜெயதேவர் எல்லா தெய்வங்கள்மீதும் பேதமில்லாமல் பாடல்கள் இயற்றினார். ருத்ர கிரந்தம் என்ற நூலை எழுதினார். ராகவகிரந்தம் என்ற நூலையும் இயற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை கொண்டு, 18 புராணங்களையும் இணைத்து கீதகோவிந்தம் என்ற  மகாகாவியத்தை எழுதினார்.

ஜெயதேவரின் மகிமைகளை அறிந்த பகவன்தாஸ் என்ற மன்னர், சில நாட்கள் ஜெயதேவரை தன் அரண்மனையில் வைத்து உபசரித்து, அவரக்கு ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள், எல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஜெயதேவர் ஒரு கானகத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, நான்கு திருடர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ஜெயதேவரின் கை, கால்களை வெட்டி ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, அவர்வசமிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த சமயம் காட்டில் வேட்டையாட வந்த மன்னன் (கிரவுஞ்சன்) ஜெயதேவர் கிணற்றில் இருப்பதைக் கண்டு, மெள்ள அவரை மேலே தூக்கி முதலுதவிகள்  செய்து, பின்னர் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தான். ஜெயதேவரின் இனிய குரலையும், அவரது பக்தியையும் கண்ட கிரவுஞ்ச மன்னன் சுவாமிகளிடம் அன்பைப் பொழிந்தான். அஷ்டபதி பாடுவதும், பாகவத பிரவசனமும் சுவாமிகள் மூலம் கிடைத்தன. ஜெயதேவர் ஒரு பாகவதமேளா நடத்த வேண்டுமென்று மன்னரிடம் கேட்டார். அதன்படி மன்னன் நகரிலுள்ள பாகவதர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக பாகவத மேளா நடத்தினான். அந்த பாகவத மேளாவுக்கு, முன்பு ஜெயதேவரை கிணற்றில் தள்ளிய கள்வர்கள் நால்வரும் பாகவதர்கள்போல வேடம் பூண்டு வந்திருந்தார்கள். அரண்மனையில் சுவாமிகளைக் கண்டவுடன் இவன் திருடன், திருடன் என்றனர்.

கள்வர்கள் சுவாமிகளைப் பற்றி அபாண்டமான பதிலைச் சொன்னதும் பூமி வெடிக்க, அந்த நால்வரும் அந்த பள்ளத்தில் விழுந்தனர். இதைக் கண்ட ஜெயதேவர் கள்வராக இருந்தாலும் பாகவதர்களாக சில நாட்கள் இருந்தார்களே என்றெண்ணி, பாகவத அபசாரம் என்று சுவாமிகளும் அந்தப் பள்ளத்தில் விழுந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிரவுஞ்ச மன்னனும், தான் குருவாக நினைத்து வழிபட்ட சுவாமிகளே விழுந்துவிட்டாரே என்று தானும் பள்ளத்தில் குதித்தான். அப்பொழுது அகிலாண்டேஸ்வரனான பரமேஸ்வரன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமிகளையும், மன்னனையும் காப்பாற்றியருளினார். வியாசரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்ற மகா காவியத்தை எழுதி கிருஷ்ணன் அருளைப் பெற்றார். இது தேவரகசியம் என்றும்; ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நாபாஜி சித்தருக்கு இந்த வரலாற்றைக் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் தான் என்ற அகங்காரம் இருந்தால் அதற்கான தீவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதே நியதி.  பெரிய மகான்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரணமான மானிடர்கள் எப்படி இருக்கவேண்டும். எத்தனை இருந்தாலும் அகம்பாவம் நம்மை அண்டவே கூடாது!


சிதம்பர ரகசியம் பகுதி : 17

சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும் சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள். பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்ம ஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும் சொல்லப் படுகிறது. நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க் கருதப் படுகிறது. நடராஜர் "சொரூபம்" என்றால் சிதம்பர ரகசியம் "அரூபம்" ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ "ரூபரூபம்" அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும்.

இப்போ சித்சபையின் உள்ளே இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம். நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே "சந்திர மெளீஸ்வரர்" என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப் பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள். சிதம்பரம் கோவிலில் வைதீக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின் வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான் செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதீக முறைப்படி வழிபாடு. இது பற்றி முன்னொருமுறை ஒரு நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் அபிஷேஹம், ஆராதனை செய்யப் படுகிறது தீட்சிதர்களால். வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. அது தான் "ரத்ன சபாபதி"! கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின் போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கறுப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர புராணம் என்ன சொல்கிறது? கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கறுப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். செப்டம்பர் மாதம் சிதம்பரம் சென்றிருந்த சமயம் இந்த தீப ஆராதனையையும் பக்தர்கள் கூட்டம் ஒரு ஒழுங்குடனும் கட்டுப்பாடுடனும் தீப ஆராதனை நடக்கும் வரையிலும் நடந்த மொத்த அபிஷேக ஆராதனைகளையும்  அவ்வளவு நேரமும் நின்று கொண்டே கண்டு களித்ததையும் இந்தக் குறிப்பிட்ட தீப ஆராதனையின் போது சம்போ மஹாதேவா ஓம் நமசிவாயா என்றெல்லாம் கோஷம் இடுவதையும் இவரின் வழிபாடு முடிந்த பின்னரே மூலஸ்தானத்து நடராஜருக்கு தீப ஆராதனை நடந்ததையும் அனைவரும் பார்க்கும் வண்ணம் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் இருந்ததும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. பலமுறைகள் பார்த்திருந்தாலும் அன்று சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். என்றாலும் சாதாரணமான நம்மைப் போன்றவர்களும் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது.

மிண்டும் நாளை சந்திக்கலாம்