வெள்ளி, 10 அக்டோபர், 2014

பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் :மகாபலிபுரம்
பிறந்த நாள் :7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் :தெரியவில்லை, (ஐப்பசி வளர்பிறை நவமி திதி)
கிழமை :புதன்
எழுதிய நூல் :இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் :100
சிறப்பு :குருக்கத்தி மலரில் பிறந்தவர்,திருமாலின் கதாயுத அம்சம்.
மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார்.இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார்.இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார்,பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார்.பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார்.மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை,பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி,திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார்.பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல்,பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.
1. திருநீர்மலை(அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2.திருவிடந்தை(அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை,காஞ்சிபுரம் மாவட்டம்)
3.திருக்கடல் மல்லை(அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில்,மகாபலிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
4.அத்திகிரி(அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
5.திருத்தங்கல்(அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில்,திருத்தங்கல்,விருதுநகர்)
பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்
1. திருக்கோயிலூர்(அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர்,விழுப்புரம்)
பூதத்தாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார்
2.வெண்ணாற்றங்கரை(அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள்,தஞ்சைமாமணி கோயில்,தஞ்சாவூர்)
பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்
3.திருப்பாடகம்(அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில்,திருப்பாடகம்,காஞ்சிபுரம்)
பூதத்தாழ்வார்,பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,பேயாழ்வார்
4.திருக்கோஷ்டியூர்(அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)
பூதத்தாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்
5.திருமாலிருஞ்சோலை(அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்,மதுரை
பூதத்தாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார்
6.கும்பகோணம்(அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்)
பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார், ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்
7.திருவேங்கடம்(அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி,சித்தூர்,ஆந்திரா)
8.திருப்பாற்கடல்:பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்,தொண்டரடி பொடியாழ்வார்
9.ஸ்ரீரங்கம்(அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில்,ஸ்ரீரங்கம், திருச்சி)

பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.
ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு      சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)

2. திருப்பாற்கடல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

புதன், 8 அக்டோபர், 2014

மானசரோவர் என்றால் என்ன?

இமயமலையிலுள்ள கயிலாயம் அருகிலுள்ளது மானசரோவர் ஏரி. ‘மானசரோவர்’ என்றால் ‘மனதில் இருந்து தோன்றிய தடாகம்’ என பொருள்.சுத்தமான நீர் கொண்ட இந்த ஏரி பார்வதியின் அம்சமாகும். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள் பிரம்மாவிடம் சிவவழிபாட்டுக்காக நீர்நிலை ஒன்றை அருளும் படி வேண்டினர். பிரம்மாவும் தன் மனதில் இருந்து இந்த தெய்வீக ஏரியை உருவாக்கினார். ஏரியின் நடுவில் சுவர்ணலிங்கமாக(தங்கலிங்கம்)சிவன் முனிவர்களுக்கு காட்சியளித்தார்.இந்த குளத்து நீரே பூமிக்கடியில் சென்று கங்கையாக உற்பத்தியாவதாக கருதுகின்றனர்.புனித நதிகளின் தாயாக போற்றப்படும் மானசரோவரை திபெத்தியர்கள் ‘மகாசரோவர்’ என்கின்றனர்.412 ச.கி.மீ.,பரப்பும், 300 அடி ஆழமும் கொண்ட இந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது.