படலம் 52: பிக்ஷõடன பிரதிஷ்டை
52வது படலத்தில் பிக்ஷõடனர் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. இங்கு பிக்ஷõடனருக்கும் கங்காளமூர்த்திக்கும் அமைப்பு முறை விளக்கத்துடன் அந்த இருவர்களின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. கங்காளமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. பாதத்தில் பாதுகையுடன் கூடியதாகவும், நான்கு கையும், பூணூலும் கிளம்புவதற்கு தயாராகவும் இருப்பதாக தேவனை அமைக்க வேண்டும். வலது காலை சிறிது வளைந்ததாகவும் இடது கால் நேராக இருப்பதாகவும் அமைக்கவேண்டும், பக்கவாட்டில் உள்ள கைகளில் வலக்கையில் குச்சியையும் இடக்கையில் உடுக்கையையும் அமைக்க வேண்டும். மற்ற இரு கைகளில் இடது கையில் தோகையுடன் கூடியதும் எலும்பு கூட்டையும் உடைய காலதண்டத்தை அமைக்க வேண்டும். வலது கையில் மானின் நாக்கை தொட்டு கொண்டது போல் அமைக்க வேண்டும். பக்கத்தில் பெண்களையும் பூதங்களையும் அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பெண்களுக்கும் பூதங்களுக்கும் உருவ அமைப்பு முறை பலவிதமாக கூறப்படுகிறது. இப்பேர் பட்ட லக்ஷணம் உடையவரே கங்காள தேவர் ஆவர். கங்காளம் தண்டம் இவைகள் இல்லாத வரும் ஆடையில்லா ஸ்வரூபமாகவும் இருப்பவர் பிக்ஷõடனதேவர் ஆவர்என்று பிக்ஷõடன மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. மூர்த்திகளின் பிரதிஷ்டா முறை விளக்கப்படுகிறது. இங்கு கூறியமுறைபடி நல்லகாலத்தில் அங்குரார் பணம் செய்யவும். பிறகு தேவன் பூதம் பெண்கள் இவர்களுக்கு ரத்னநியாஸம் முறைப்படி செய்யவும். பெண் முதலானவர்களுக்கு செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று ரத்னநியாஸ முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிணம் ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் செய்யவேண்டும் என்று கிரியைகளை குறிப்பிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு முன்புபோல் யாகமண்டபம் அமைத்து குண்டம் வேதிகை தயார் செய்து சில்பியை திருப்தி செய்து பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.
பிறகு ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி பிம்பங்களை அனுசரித்து தனித்தனியாக சயனம் அமைக்கவும். ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கு ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்வித்து மத்தியில் ஈஸ்வரன் அதற்கு தெற்குபக்க வடக்குபக்கத்தில் பூதங்கள் ஆகியவற்றை முறைப்படி வஸ்திர அலங்கரிக்கப்பட்டதாக சயன அதிவாசம் செய்யவும் கங்காள தண்டம் தனியாக இருந்தால் அதை ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் அதிவாசம் செய்யவும் என்று சயனஅதிவாச முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. இங்கு சயனவிஷயத்தில் குறிப்பிட்டுள்ள பிம்பங்களுக்கு கும்பஸ்தாபன முறை கும்பத்தை பூஜிக்கும் விஷயத்தில் மந்திர விசேஷம் அவ்வாறே தத்வ தத்வேஸ்வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸவிஷயத்தின் விசேஷங்கள் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாசவிஷயத்தின் விசேஷ குறிப்பிற்கு பிறகு ஹோமம் செய்யவும் என்ற திரவ்யங்களில் நிரூபனமுறைப்படி ஹோமவிதி சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது நாள் தட்சிணையை பெற்று ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி பூஜைகளை நன்கு செய்து பிம்பத்திற்கு முன்னதாக கும்பங்களை வைத்து மந்திரநியாஸம் செய்யும் முறை அவ்வாறே அந்த கும்பங்களால் அபிஷேகம் செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு ஆச்சாரிய பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனமும், பெரியஉத்ஸவமும், அதிகமான நைவேத்தியமும் செய்யவேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்யஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு எந்த மனிதன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைவான் என்று கூறப்படுகிறது! முடிவில் இவர்களின் பிரதிஷ்டை எல்லாஇடத்திலும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாக இல்லையா என்று விவரிக்கப்படுகிறது. இவ்வாறு 52வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!
1. ஹே, உயர்ந்த அந்தணர்களோ, பிக்ஷõடனர், கங்காளர் இவர்களுடைய உருவ அமைப்புகளும் பிரதிஷ்டையையும் நான் கூறுகிறேன், கேளுங்கள்.
2. காலில் காலணியுடனும் நான்கு கைகளுடனும் பூணூலுடனும் அமைதியான வடிவமும் நடந்து செல்லத் தயாரான நிலையில் இருக்கக்கூடிய நிலையிலும்
3. ஜடாமகுடத்தால் பிரகாசிக்கக்கூடியவரும் கத்தியை கட்டியவராகவும், அழகானவராகவும் வெண்பட்டோடு கூடியவராகவும் ஆபரணங்களோடு கூடியவராகவும் செய்ய வேண்டும்.
4. இடது காதில் சங்கினால் ஆன காதணியையும், வலது காதில் மகர குண்டலத்தையும், வலது காலை வளைத்த நிலையில் உடையவராகவும், இடது காலை நன்கு பூமியில் வைக்கப்பட்டவராயும்
5. ஸமபங்கம் என்ற அமைப்புடனும், தன்னுடைய பிரகாசமான சரீரத்தோடு, வலது கையில் தண்டத்தையும் இடது கையில் உடுக்கையையும்
6. வலது கை நடுவிரலுடைய நுனியானது மானுடைய நாக்கு நுனியை தொட்டவாறும், முன் இடது கைகளில் மயில்தோகை குச்சியையும், காலதண்டத்தையும்
7. இரண்டு தண்டங்களுடைய மூலப்ரதேசமானது தோள் பட்டைக்கு மேல் உயர்ந்ததாகவும், பலவிதமான தேவாஸுர கூட்டங்களோடு கூடியவராகவும்
8. தன்னுடைய இடதுபாகத்தில் தலையில் சுமந்த பலிபாத்ரத்தோடு கூடிய பூதத்துடனும் பல ரூபங்களை தரித்த பலவிதமான பூதங்களோடு கூடியதும்
9. பேரீ, தவில் முதலியவைகளின் ஆரவாரத்தோடு பாட்டு, நாட்டியம் முதலியவைகளைச் செய்யவராகவும் தன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே மோஹித்தவர்களும் வசீகரிக்கப்பட்டவர்களுமான குற்றமற்ற சவுந்தர்யமுள்ள அழகிய பெண்களோடு கூடியவராகவும்
10. நழுவிய வஸ்திரம், அணிகலன்களோடு கூடியவர்களாயும், பிøக்ஷயிடுவதற்கு எதிர் நோக்கியிருப்பவர்களும் சிலர் ஆசீர்வாதத்திற்காக எதிர்நோக்கியிருப்பவராகளாயும், சிலர் ஆலிங்கனம் செய்ய எதிர் நோக்கியிருப்பவர்களாயும் இருக்கும்படி (ஸ்திரீ) பெண்களை அமைக்க வேண்டும்.
11. சிரஸ் சூத்திரமானது நெற்றியின் மத்தியிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி இருக்க வேண்டும். கால் கட்டை விரலுடைய அடியிலிருந்து இடது மூக்கு முனியோவெனில்
12. வலது பாகத்தில் எட்டு யவ பிரமாணம் தள்ளியும் இதயத்திலிருந்து வலது பாகத்தில் மூன்று யவப்பிரமாணம் தள்ளியும், தொப்பூழ், ஆண்குறி இவைகள் இடதுபாகத்தில் ஏழு அங்குலமாக இருக்க வேண்டும்.
13. இரு கால்களுடைய கட்டை விரல்களின் மத்யமானது ஆறு மாத்ர அளவுள்ளதாக கொள்ள வேண்டும். இரு குதிகால் பாகங்களுடைய அளவு ஏழங்குலமாகும். முழங்கால்களுடைய அளவிலிருந்து முகத்தினுடைய அளவின் இடைவெளி
14. அங்குலம் என்று அறியவும். குச்சியையுடைய கையில் வளைவான கடகம் தொப்பூழ் பிரதேசம் வரையிலும் உடையதாகவும்
15. நாபியிலிருந்து மணிக்கட்டினுடைய முடிவானது முன் சொல்லப்பட்ட பாகமாக கூறப்படுகிறது. வலது மேல் கைக்கும் கீழ்கைக்கும் மத்ய பாகமானது ஐந்து மாத்ர அளவுள்ளதாகவும்
16. மான் முகத்தை தொடக்கூடிய கையானது தொடையின் நடுபாக அளவாகவும், தொடை மத்தியிலிருந்து அந்த மான் முகத்தை தொடக்கூடிய கை வரையிலும் 21 மாத்திரை அளவாகவும்
17. அந்த மானை தொடக்கூடிய கடக முத்ரையோடு கூடிய கீழ்நோக்கிய கையானது நுனிபாகத்துடன் கூடியதாகவும், இடது மேல் கைக்கும் கீழ்கைக்கும் உள்ள அளவானது 7 மாத்ரை அளவுள்ளதாகும்.
18. கங்காள மூர்த்தியினுடைய தோகையை தரித்திருக்கக்கூடிய கையினுடைய கக்ஷபாகம் சமமான உயரமுள்ளதாக இருக்க வேண்டும். கையின் முடிவிலிருந்து மணிக்கட்டின் முடிவு வரையில் 16 அங்குலமாகவும்
19. கையிலிருக்கக்கூடிய அந்த தோகை தண்டமானது 12 அங்குல மாத்ரமோ (அளவு) அந்த தோகையும் அதே அளவாகவும் கீழிருந்து சுவாமியினுடைய மூக்கின் நுனி வரையிலும் இருக்க வேண்டும்.
20. கங்காள மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய தண்டமானது சுவாமியினுடைய கீழ்கழுத்து வரையிலும் அந்த தண்டத்தினுடைய நுனியில் பூதபிரேத முகத்தையும் செய்ய வேண்டும்.
21. பெண்கள், சுவாமியினுடைய மார்பு, முகம், ஸ்தனம், நாபி இவைகள் வரையிலும் உயரமானவர்களாகவும் பூதரூபங்கள் மூன்றுமுக முள்ளவைகளாகவோ இஷ்டப்படியோ செய்யலாம்.
22. இவர் இவ்வாறாகவும், மற்றொருவரான பிக்ஷõடனர் வஸ்த்ரமில்லாமலும் பூதப்ரேதாதிகள் இல்லாமலும் (பெண்களுடன்கூட) இருபக்கங்களிலும் விரித்த ஜடையும், சுருண்ட முடிகளோடு அலங்கரிக்கப்பட்டவராகவும்
23. இடுப்பு பிரதேசத்தில் பாம்பு சூத்ரமாக சுற்றப்பட்டும் வரதஹஸ்தமும் கபாலமானது இடதுகையில் கல்பிக்க வேண்டும்.
24. இடது பாகத்தில் மற்றொரு கையில் உடுக்கையும் ஏந்தி, வலது பாகத்தில் இன்னொரு கையில் மயில் தோகையை தரித்தவராகவும்
25. பாம்பானது பக்கத்தில் இருக்குமாறும் மான் முகமானது முன்பக்கத்தில் இடது பாகம் திரும்பியும் அல்லது இடது பாகத்தில் மூலையாக பார்த்தவாறும் செய்ய வேண்டும்.
26. கபாலமேந்திய கையினுடைய பின்பக்கமானது தொப்பூழ் வரையிலும் இருக்க வேண்டும். தொப்பூழிலிருந்து அந்த மணிக்கட்டின் முடிவு வரையிலும் 16 அங்குலமாக கூறப்பட்டுள்ளது.
27. உடுக்கையினுடைய மேல்பாகமானது காதினுடைய கடைசி வரையிலும் அந்த கையின் மணிக்கட்டிலிருந்து காது முடிவு வரை 16 மாத்ரை களாகவும், மீதமுள்ளவைகள் கங்காளமூர்த்தியை போலும் இருக்க வேண்டும் (அளவு முறை)
28. ஹரனான பிக்ஷõடனர் தனியாகவும், விஷ்ணுவோடு கூடியதாகவும் அமைக்கலாம். ஹே முனிபுங்கவர்களே, சுருக்கமாக ஸ்தாபன முறையை சொல்லுகிறேன்.
29. அந்த பிரதிஷ்டாகாலமானது முன்னமே கூறப்பட்டுள்ளது. அதைப்போலவே அங்குரார்பணம் ரத்னந்யாஸம் முதலியவைகளை சுவாமிக்கும் பூதங்களுக்கும் முறைப்படி செய்து
30. குருவானவர் பெண்களுக்கு தனிப்பீடமாகவோ அல்லது ஒரே பீடத்திலோ மான் முதலானவைகளை விட்டுவிட்டு ரத்னந்யாஸம் செய்ய வேண்டும்.
31. நயனோன்மீலனம் செய்து பிம்ப சுத்தி ஜலாதிவாஸம், கிராமபிரதட்சிணம் முதலியவைகளை முறைப்படி செய்து
32. யாக மண்டபத்தை அடைந்து திக்குகளில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் எண்கோணம், வட்டவடிவம் முதலிய குண்டங்கள் யாக சாகலையில் முன்பு கூறியதுபோல் அமைக்க வேண்டும்.
33. பிறகு சில்பியை மரியாதை செய்து அனுப்பிவிட்டு ஸ்பர்சதோஷத்திற்காக வித்வான்களுக்கு உணவளித்து புண்யாஹம், வாஸ்துஹோமம், சயனம் முதலியவைகளுக்கு தனியாக ஸ்தண்டிலம் அமைத்து
34. பிறகு ஸ்நபனாபிஷேகம், காப்புகட்டு, பிம்ப சுத்தி, முதலியவைகளை தனியாகச் செய்து மத்தியில் மூலபேரத்தையும் அதற்கு வலது பாகத்தில் இடது பாகத்தில் முறையாக பெண்களையும் பூதங்களையும்
35. தனித்தனியாக வஸ்திரம் அணிகலன்களால் அலங்கரித்து எல்லாவற்றையும் முறைப்படி சயனம் செய்வித்து அந்த கங்காள தண்டமானது தனியாக இருப்பின் தலைபாகத்தில் தனியாக சயனம் (படுக்கை) செய்வித்து
36. கிழக்கு ஈசான திக்கு இவைகளுக்கிடையில் (விஷ்ணு, பிக்ஷõடணர் இவர்களுக்கு மத்தியில்) வர்த்தீனியோடு கூட கும்பங்களை வைத்து, மற்ற கும்பங்களை அந்த மூர்த்திக்கு தலைபாகத்தில் வர்த்தீனியுடன் கூடியதாக
37. வைத்து அந்தந்த தேவதைகளுடைய மந்திரங்களோடு கூட சந்தன புஷ்பங்களோடு உபசாரங்களை செய்து அந்த பூதகணங்களுடைய கும்பங்களில் வீரேசாய நம: என்று ஆசார்யரானவர் பூஜைசெய்து
38. அந்த பூதகணங்களுடைய கும்பவர்த்தனியில் நந்தனாயை நம: (நந்தநாயே நம:) என்று மனதால் பூஜை செய்து பிரதான கும்பத்தில் கங்காளரை பூஜை செய்து தத்வ நியாஸத்தை செய்ய வேண்டும்.
39. சுவாமிக்கு தத்வங்கள் முன்போல் செய்து வீரேசகும்பங்களுக்கு மறுபடியும் சொல்லப்படுகிறது. மூர்த்திகள் முன்போலவும் மூர்த்தீச்வரர்கள் பிரமுகன், துர்முகன் என்றும்
40. பிரமோதன், ஆமோதன், விக்னராட் என்றும் கங்காள மூர்த்திக்கு விஷ்ணுவுக்கு போன்றும் செய்து பிறகு ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
41. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து, சமித்து, அன்னம், நெய், நெல், பொறி, எள், மருந்து வகைகளோடும் (மூலிகை) அக்ஷதைகளோடு கூட ஹோமத்தை செய்ய வேண்டும்.
42. பலா, கருங்காலி, அரசு, அத்தி முதலியவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி முதலியவைகளை தென்கிழக்கு முதலான கோணங்களிலும்
43. (அல்லது) பிரதானத்திலும் எல்லா குண்டங்களிலும் புரச சமித்தையும் ஆசார்யனானவன் தேவர்களை ஆவாஹனம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
44. பிறகு இரண்டாவது நாளில் பிம்பம், கும்பம், அக்னி, முதலியவைகளில் ஈசனை பூஜித்து வஸ்த்ரம், தங்கம், தட்சிணை இவைகளை அடைந்தவர்களான ரித்விக்குகளுடன் கூடிய ஆசார்யன்
45. மந்திர நியாஸம் செய்து பிம்பத்திற்காக முன்பாக கும்பங்களை வைத்து, கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சுவாமியினுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து
46. வர்த்தனீயிலிருந்து பீஜத்தை எடுத்து சுவாமியினுடைய தாமரை பீடத்தில் நியாஸம் செய்து, மற்ற கும்பங்களிலிருந்து பீஜங்களை எடுத்து அவரவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.
47. ஆசார்யரானவர் அந்தந்த கும்ப ஜலங்களினால் அபிஷேகம் செய்து, ஸ்நபநம், உத்ஸவம் முதலியவைகளையும் செய்து பிரதிஷ்டையின் முடிவில் நிறைய நிவேதனமும் செய்ய வேண்டும்.
48. இதில் சொல்லப்படாததை பொதுவான ஸ்தாபனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த புத்திமானானவன் இவ்வாறு செய்கிறானோ அவன் புண்யகதியை அடைகிறான்.
49. நடு சூத்திரத்திலிருந்து சூத்ரங்களுக்கு இரண்டு அங்குலம் இரண்டங்குலமாக எல்லா அங்கங்களையுடையவும் அமைப்பாகும்.
50. கைகளுடைய எண்ணிக்கை கூடவும், ஆடை, ஆபரணம் முதலியவை, முத்ரைகளும் வெண்மை முதலிய வர்ணங்களுடன் இருக்க வேண்டிய நிலையில் ஸ்பஷ்டமாக காண்பிக்க வேண்டும்.
51. ஆசார்யன் சில்பி, கர்த்தா, இவர்கள் எதை விரும்பி செய்கிறார்களோ அதை செய்ய வேண்டும். பிராம்மணர்களே எல்லா தேவதைகளுக்கும் மேலே கூறப்பட்டது பொதுவான முறையாகும்.
52. இந்த பிரதிஷ்டையானது (ஆத்ய) பாலஸ்தாபனம், செய்தோ, செய்யாமலோ எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். பிக்ஷõடனர், கங்காளர், பிரதிஷ்டா விதிமுறை இம்மாதிரி கூறப்பட்டது.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பிக்ஷõடன பிரதிஷ்டா முறையைக் கூறும் ஐம்பத்திரண்டாவது படலமாகும்.