படித்ததில் பிடித்தது
ஸ்ரீ நாம பலம்
சரி..... இன்னைக்கு மஹாபாரத பதிவு போடலாம்ன்னு யோசிச்சா கடைசி வரை போதாந்திராளே ஞாபகத்துக்கு வந்துட்டு இருக்கார்... எல்லாம் இந்த பயபுள்ள காலைல பண்ணின வேலையாத்தான் இருக்கும்ன்னு நினைச்சிட்டு பகவான் நாமம் பற்றி கோடானகோடியில் ஒரு துளி எழுதுகிறேன்...
ஏன்னா ! போதாந்திராள் நாமத்துக்காகவே வாழ்ந்து அதை பரப்பி அந்த நாமமாகவே ஆனவர். தன் குரு ஸ்தானத்தில் செய்து கொண்ட சபதத்திற்க்காக தினமும் 100008 ராம நாமம் சொன்னவர். இவரும் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திரரும் ஆத்ம நண்பர்கள். சரி... லட்சத்து எட்டாயிரம் ஜபம்தானே அப்படின்னு சும்மாவும் சொல்ல முடியாது. ஏன்னா ஒரு நாளைக்கே 86400 நொடி தான்... அப்ப நீங்களே யோசிச்சுக்கோங்க... இவருதான் இப்படின்னா நம்ம தியாக பிரம்மம் தினமு ம் 125000 ராம நாம ஜபம் முடிச்சார். இப்படி 21 வருடத்தில் 96 கோடி ஜெபத்தை சங்கல்பித்து முடித்தார்...
அந்த நாம சாகரத்தின் மதிப்பு அப்படி....
போதாந்திராள் பகவன் நாம ரஸாயனம் அப்படிங்கர புத்தகத்தில் சொல்லிருப்பார்...
" ஸதானந்த: ஸ்ரீமான் அனுபதிக்காருண்யவிவாஸோ! ஜகத்ஷேமமாய ஸ்ரீ ஹரிகிரிஸ்ரூபம் வித் ரூதவான்!... " இப்படிங்கர ஸ்லோகத்தில் சொல்லுவார்...
காரணமேதுமின்றி கருணை செய்பவருமான நிர்வ்யாஜ கருணா மூர்த்தியான பகவான் மஹா விஷ்ணு, பரமசிவன் என்ற ரூபம் தரித்தாலும்... இது உலகை உய்விக்க போதாதென்று நினைத்து விஷ்ணு, சிவன் நாம ரூபமாக எழுச்சியுடன் நின்றாராம். (பகவான் நம்ம மேலே கருணை செய்யருக்கு காரணமே வேண்டியதில்லைங்கரார்).
விஷ்ணு சஹஸ்ரநாமம் முன்னுரையில் சொல்லும் போதும்... இதர தர்மத்தை நோக்குங்கால், அவைகளை விட சிறந்ததாக நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ப்ரஹமாண்ட புராண ஆரம்பத்தில் "ஹரி கீர்த்தனம்' என்ற ஸ்துதிக்கு உபதேசம் பெறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுத்தம் அசுத்தம் என்ற காரணமும் இல்லை ஆதலால் உடனே சொல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதாவது " ச ஸ்மஸானச்ண்டாலவாடிகாதினிஷித்ததேஸேஸு ந கார்யம் அனிஷித்தேஸேஷ்வேவ கார்யமிதி....." அப்படிங்கர வாக்கியத்தில், இடு/சுடுகாடு, தீண்டத்தகாதோர் வசிக்கும் இடம், புனிதமான இடம், ஜனன, மரண தீட்டுக்கள், நள்ளிரவு, காலை, மாலை என்ற கால நியதியும் இந்த நாம சங்கீர்த்தன ஜபத்திற்க்கு இல்லை. கடுமையான கலிதோஷம் வாசுதேவரின் நாம ஸங்கீர்த்தனத்தால் நீரில் உப்பு கரைவது போலே கரைகிறது.
"ஹரி" என்னும் இரண்டு எழுத்துக்கள் ஒர் எழுத்தாக சொலப்படும் போது நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் சேற்றுவைக்கப்பட்ட பாவகுவியலை கூட பஞ்சு பொதியை நெருப்பு நிர்மூலமாக்குவது போல பொசுக்கிவிடும் என்று போதாந்திராள் எடுத்துக்காட்டுகிறார். பத்து அஸ்வ மேத யாகம் செய்தவன் கூட மறுபிறவி அடைவான். ஆனால் கிருஷ்ணருக்கு நமஸ்காரம் செய்தவனுக்கு மறுபிறவி இல்லவே இல்லை. கிரஹண காலத்தில் கோடி கோதானம் செய்தல், பிராயகை, காசி, கங்கை முதலிய புண்டணிய ஷேத்திரங்களில் கல்பகோடி காலங்களில் வசித்தல், பல்லாயிரக்கணக்கான வேள்வி செய்தல், மேரு மலையளவு தங்கம் தானம் செய்தல் இவையனைத்தும் " கோவிந்த " சப்தத்திற்க்கு இணையாகா!!! பல்லாயிரக்கணக்கான கொலைகள் செய்த்தல், கடுமையான மதுபானங்கள், கோடிக்கணக்கான ஆசானின் மனைவியை நாடுதல் எண்ணற்ற திருட்டுக்கள் என்ற இவை அனைத்து பாபங்களும் "கோவிந்தா" என்ற நாம சங்கீர்த்தனத்தால் ஒரு நொடியில் அழிக்கப்பட்டு விடுகின்றன.
"நரகே பச்யமானஸ்து" நரகத்தில் வாட்டப்படுபவனுக்கு என்று சொல்லும் போது பூஜை செய்த்தல் என்று சொல்லப்படவில்லை. " கிருஷ்ணருக்கு நமஸ்காரம் " என்று சொன்ன உடனேயே நமஸ்காரம் செய்தல் என்ற செய்கையின் பலன் சென்றடைந்து காப்பாற்றபடுகிறான். ரிக்வேதத்தில் "ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே" என்று சொல்லும் பிரஹரணத்தில், ஒரு தடவை உச்சரிக்கப்படும் நாம சங்கீர்த்தனம் தங்கு தடையின்றி ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்ற ஞானத்திற்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ருதி, ஸ்மிருதி, புராணத்தில் எந்த நாமம் ஆத்யாத்மைகம், ஆதிதைவீகம், ஆதிபூத என்ற தாபங்களை தாண்டுவிக்குமோ எல்லாவித பாபங்களை நீங்க செய்யுமோ எல்லா பாபத்திற்க்கும் பிராய்ச்சித்தமாக அமைகிறதோ இதற்கு மேற்பட்ட புண்ணியம் மூவுலகிலும் இல்லை என்று சொல்லப்படுகிறதே அதுவே "ராம" நாமமாகும் என்று கூறப்படுகிறது.
ஸ்கந்த புராணத்தில் வரும் காசி காண்டத்தில் சொல்லப்படுவது போல ராம நாமமே விஸ்வ நாதர் வாக்கினால் வந்து அனைத்து ஜீவராசிகளை முக்தி அடைய செய்கின்றது. ராம நாமம் அசுரர்களை நடுங்க் வைக்கும் என்று வால்மீகி பகவானும் ராமாயணத்தில் பதிவு செய்கிறார். அதனாலே இது தாரக மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இதற்க்கு கால நேர விதி நியதி என்ற எந்த தடையுமில்லை. எந்த காலத்திலும் ஜெபிக்கலாம். தியாகராஜர் கீர்த்தனையில் குறிப்பிடும் போது " ராம! உன் நாம பலம் யாருக்கு தெரியும்? ஈஸ்வரரை தவிர? " என்பார். பரமேஸ்வரருக்கு மட்டுமே ராம நாமத்தை பற்றி தெரியுமாம்!!!!.....
"கிரக பலமேமி ராம! நின்னு அனுகிரஹபலமுந்தி"--- கிரஹபலம் என்னை என்ன செய்யும் ராம உன்னுடைய அனுகிரஹ பலம் இருக்கும் போது அப்படின்னு தியாக பிரம்மம் பாடினது போல... எல்லா கிரஹ பிரச்சனைகளை ராம நாம பலம் போக்கிவிடும்... ஆதலால் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட 5-10 நிமிடமாவது நாம ஜெபம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். நாம ஜெபத்தின் சிகரம் தொட்ட நாம போதாந்திராள் மற்றும் தியாகபிரம்மம் அதிஷ்டானங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்து அந்த நாம சாம்ராஜ்யத்தில் இணைய ஆசீர்வாதிக்க பிராத்தனை செய்யுங்கள்.
நாம போதாந்திராள் அதிஷ்டானம் கும்பகோணம் மாயவரம் சாலையில் திருவிடைமருதூர் அடுத்து கோவிந்தாபுரம் என்னும் ஊரில் உள்ளது.
தியாகபிரம்மம் அதிஷ்டானம் திருவையாறு தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ளே ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம