ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்

தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்.

இந்த துதியை பாராயணம் செய்தால் தீராத நோயெல்லாம் வைத்தீஸ்வரன் திருவருளால் தீரும். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தவுடன் வைத்தீஸ்வரனை நினைத்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சான்றோர்கள் கருத்து.

ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத
ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பினாகினே துஷ்டஹராய நித்யம்
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும், மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய
த்ரிமூர்த்திரூபாய ஸஹஸ்ரநாம்னே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம்
பிஸாசது:க்கார்த்திபயாபஹாய
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம்
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும், தனது வைத்தீஸ்வரன் கோயிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய
        ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய
       ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

வாலாம்பிகேச வைத்யேச
பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயந் நித்யம்
மஹாரோக நிவாரணம்

(மேலே சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு) வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும். இந்த அஷ்ட ஸ்லோகம் மகான்களால் தொன்று தொட்டு ஜபிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பை விளக்கவல்லது.

நவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்

நவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்

ஆலங்குடி - குரு வியாழன்
திங்களூர் - சந்திரன்
திருநாகேஸ்வரம் - ராகு
சூரியனார் கோயில் - சூரியன்
கஞ்சனூர்:சுக்கிரன் - வெள்ளி
வைதீஸ்வரன் கோயில் - செவ்வாய்
திருவெங்காடு - புதன்
கீழ் பெரும்பள்ளம் - கேது
திருநள்ளார் - சனீஸ்வரன்

#சூரியன்

நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியக்கடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப்படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்களாகக் கொண்டுள்ளன.

#ராகு

திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருநள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

#செவ்வாய்

கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' (மார்ச்) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.

இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துனைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது.

#சந்திரன்

திங்களூர், என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமையப் பெற்றது என்று ஐயப்பாடு இருந்தாலும், வரலாற்று ஆசிரியர்கள், பக்தி மார்க்க காலம் ஆகிய , கி.மூ.ஏழாம் நூற்றாண்டிற்கு வெகுகாலம் முன்பே, ஆங்கிலத்தில் மூந் என்றும் சமஸ்கிருதத்தில் சந்திரன் என்றும் தமிழில் திங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கிரகத்துக்குரிய இத்தலம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். நீண்ட ஆயுளையும் வசதியான வாழ்க்கையையும் பெற இக்கிரகத்தினை ஆராதிக்கின்றனர். ஜோதிடத்தில், இந்த சந்திரன் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய கிரகமாக கூறப்படுகிறது. தேவி பார்வதி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

#சனி

திருநள்ளார், கோவில்களின் சொர்க்க பூமியான கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் ஸ்யாடர்ந் என்றும் தமிழில் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே கோவிலாகும் இத்தலம். தனது வான வெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமஹாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, ஆராதித்து, தனது பெரும்துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்ததை அக்காவியம் குறிப்பிடுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் எல்லா வித துரதிருஷ்டங்களும், துன்பங்களும் கழுவப்பட்டு, நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில், ஜனன காலத்திலும், சஞ்சார காலத்திலும் தனது இருப்பிடம் முகாந்திரமாக அந்த ஜாதகருக்கு துன்பங்களும், தொல்லைகளும், துயரங்களும் கொடுப்பவர் எனவும், அதேபோல் ஈடாக இவரை மனப்பூர்வமாக ஆராதிக்கும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நல்லவராகவும் இருப்பார் என்றும் ஜோதிட குறிப்புக்கள் கூறுகின்றன. இந்த சனி கிரகத்தின் அதி தேவதை யமதர்மா ஆகும். நாச விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைக்கும் தகவல்களும் உண்டு. இத்தளத்தை கடக்கும் விண்வெளி கலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எந்த ஒரு சமிக்கையும் வழங்காமல் இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள் அவ்விடம் இதுவென கண்டு பல ஆராய்ச்சிகளின் மத்தியில் ஒன்றும் அறியாமல் அதிசயப்பட்டுப் போனார்கள். இதனைப் பற்றிய குறிப்புக்களை தங்களின் பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்கள்.

#சுக்கிரன்

கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் வீனூஸ் என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.

#கேது

கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.

#குரு

ஆலங்குடி, கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு, காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். 'குரு பார்க்க கோடி புண்ணியம்' என்பது

#புதன்

திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் மர்க்யுரீ என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், மர்க்யுரீ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப் படும் இக்கிரகம் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது.

ஸ்ரீமாத்ரே நம:

ஸ்ரீ மாத்ரே நம:

16 பேறுகள் கிடைக்க செய்யும்
ஸ்ரீ மகாலக்ஷ்மி வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினாறு பேறுகள் இன்னும் பல நல்லன எல்லாம் கிடைக்கும்.

1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்
2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்
3. பகை அழிந்து அமைதி உண்டாகும்
4. கல்வி ஞானம் பெருகும்
5. பலவிதமான் ஐஸ்வரியங்கள் செழிக்கும்
6. நிலைத்த செல்வம் அமையும்
7. வறுமை நிலை மாறும்
8. மகான்களின் ஆசி கிடைக்கும்
9. தானிய விருத்தி ஏற்படும்
10. வாக்கு சாதுரியம் உண்டாகும்
11. வம்ச விருத்தி ஏற்படும்
12. பதவி உயர்வு கிடைக்கும்
13. வாகன வசதிகள் அமையும்
14. ஆட்சிபொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்
15 தொழில் அபிவிருத்தி வியாபாரம் விருத்தி
16. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

#மகாலட்சுமி_ஸ்துதி

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

#மகாலட்சுமி_ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார்
திருவடிகளே சரணம்!

ஸ்ரீ மாத்ரே நம:

ஸ்ரீ மாத்ரே நமஹ

அம்மனுக்கு ராகு கால நேரத்தில் ஒரு திருவிளக்கு ஏற்றி வைத்து பாதத்தில் சிறிது குங்குமம் சமர்ப்பியுங்கள்.


ஸ்ரீ துர்காதேவி சரணம்

ஓம் காத்யானையா  வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கே  ப்ரசோதயாத் :

#ஸ்ரீ_துர்கா_ஸ்தோத்ரம்

நமோ நமஸ்தே ஜகதாம் விதாத்ரி
     ஸம்ஹர்த்ரி ஸர்வாந்தர ஸத்யரூபே |
ப்ரபந்த லோகாத்ய விநோச ஹேது
     தயாம் புராசே பரிபாஹி துர்கே ||     1

மஹாபயாத் தாநவ ராஜரூபரத்
     த்வாய ஸம்ஸ்தம் ஜககேதத்ய |
த்ராதம் யாதா க்ரூரமஹா ஹிக்ரஸ்தம்
     மேகம் தாதாஸமத் பரிபாஹி துர்கே ||     2

யாதவ்யம் துர்விஷஹா பதோகைர்
     க்ரஸ்தாஸ ததாத்வம் ஜகதாம் விதாத்ரீ |
லீவாவபு: ப்ராப்ய விம்ருஷ்ட மாத்ரா
     விபந்தி மக்நாத் பரிபாஹி துர்கே ||     3

மாயாத்துகா த்வப் நிஜநிர்மலேம்ப
     யதோ ஜகத்சித்ர முதீர்ய ஸேங்கே |
விசித்ர ரூபாயி சிதேகரூபா
     விபாவ்ய சக்தி: பரிபாஹி துர்கே ||     4

யத்தே பதாப்ஜை ஸமாச்ரயாஸ்தே
     விசித்ரா க்ருத்யா விதிவிஷ்ணு முக்யா: |
தத்தே விசித்ரா க்ருதி ரத்தகா ஸ்யாத்
     ஸ்தும: கவம் த்வாம் பரிபாஹி துர்கே ||     5

துர்கேஷு நித்யம் பவஸங்கடேஷா
     தரந்த சிந்தாஹி நிகிர்ய மாணாத் |
சரண்ய ஹிநாத் சரணாக தார்த்தி
     நிவாரணீ த்வம் பரிபாஹி துர்கே ||     6

#ஸ்ரீ #துர்காதேவி_சரணம்

கனகதாரா ஸ்லோகம்

கனகதாரா ஸ்லோகம்

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா: 1

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ
வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
ஸாகர ஸம்பவாயா: 2

ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய
முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
பூஜங்க சயாங்கனாயா 3

ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
விபாதி
காமப்ரதா பகவதோபி
கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
கமலாலயாயா: 4

மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி
கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
பார்கவநந்தனாயா: 5

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில்
இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத:
கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவீ
ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
மிந்திராயா 7

அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டா விசிஷ்ட மதயோபி
யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
மம புஷ்கர விஷ்டராயா 8

எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

தத்யாத் தயானுபவனோ
த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
நயனாம் புவாஹ: 9

எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
குரோஸ்தருண்யை! 10

திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்ருத்யை நமோஸ்து
சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
புருஷோத்தம வல்லபாயை 11

நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
நந்தனானி
ஸாம்ராஜ்யதான
விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
கலயந்து மான்யே 16

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ
ஹஸ்தே
தவல தராம்சுக
கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
ப்ரஸீத மஹ்யம் 18

சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப
முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
அம்ருதாப்தி புத்ரீம் 19

பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை
வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும்
வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

- ஜகத் குரு ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் -

@@@@@@@@@@@@@@@@@@@@

#கனகதார
#ஸ்தோத்திரம்_தமிழில்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளி செய்தது

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக வாழலாம்.கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண் வைப்பாய் கமலத்தாயே…!

நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு
கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே…!

நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்
நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்
பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்து மூடி
பரம்பரைப் பெருமை காப்பார்
பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு
ஆனந்தம் கொள்வதுண்டு
இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே…!

மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !
பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
பிழைப்பன்யான் அருள் செய்வாயே,
பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே…!

கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!
செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்
கொய்தெடு விழியை என்மேல் கொண்டு வந்தருள் செய்வாயே
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே..!

போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதியின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய்
மங்கையின் விழிகளன்றோ! மாலவன் தன்னை வென்ற
தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே
திருமலை வேங்கடேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே…!

மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்
சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும்
எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே…!

எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்
தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும்
அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே
இல்லத்தைச் செல்வமாக்கி இன்னருள் புரிவாய் தாயே…!

நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்
நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்
வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்
வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே
திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!

ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி
ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்
தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்
வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே
வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!

வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி
சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி
கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி
ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி
பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி

நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி  போற்றி
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி…!அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி
அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி
குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி
குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி
மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி
மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி
என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி
எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி…!

தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி
தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி
தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி
தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!

பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி
தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி
சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி
பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!

கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி
மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி
விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி…!

மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி
மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி
விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி
கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி
காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி…!

மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி
மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி
ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி
தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி…!

கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி
பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி
பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி
வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி…!

மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி
தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே
அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்…!

பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ
ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்
இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்
தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!

முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி
மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்
நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்
நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார்

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்

மார்கண்டேய ரிஷி அருளிய

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்

(இது மார்க்கண்டேயரால் இயற்றப்பட்டது. யமபயம் நீங்கும். துர்ஸ்வப்னம் பலிக்காது. எதிரிகள் நாசமடைவார்கள். குரு மறைவுஸ்தானத்திலிருந்து குரு தசை, குரு புக்தி மோசமாயிருப்பவர்கள் தினமும் இதைப் படிப்பது நல்லது.)

☘#ஸ்ரீ_கணேசாய_நம:

ஓம் அஸ்ய ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ர மந்த்ரஸ்ய ஸ்ரீ மார்கண்டேய ருஷி: | அனுஷ்டுப் சந்த: |
ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜயோ தேவதா || கௌரீ சக்தி: |
மம ஸர்வாரிஷ்ட ஸமஸ்த ம்ருத்யு ஸாந்த்யர்த்தம் ஸகலைச்வர்ய ப்ராப்த்யர்த்தம் ஜபே விநியோக:
 | அத த்யானம் ||☘

1. ☘சந்த்ரார் காக்நி விலோசனம் ஸ்மிதமுகம் பத்மத் வயாந்த ஸ்திதம்
    முத்ராபாஸ்ம்ருகாக்ஷ ஸூத்ர விலஸத் பாணிம் ஹிமாம் ஸூப்ரபம்
    கோடீந்து ப்ரகலத் ஸூதாப்லுததனும் ஹாராதி பூஷோஜ்வலம்
    காந்தம் விஸ்வ விமோஹனம் பஸூபதிம் ம்ருத்யுஞ்ஜயம் பாவயேத் ☘

   (சந்திரன், சூரியன்,  அக்னி இவர்களை விழிகளாகக் கொண்டவனும், மந்தகாசமான வதனம் உடையவனும், இரண்டு தாமரை மலர்களில் அமர்ந்தவனும், சின்முத்திரை, பாசம், மான், ருத்ராட்ச மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற கைகளை உடையவனும், சந்திரனைப் போன்ற ஒளி படைத்தவனும், கோடி சந்திர மண்டலங்களிலிருந்து பெருகுகின்ற அமிர்த தாரைகளால் நனைந்திருப்பவனும், முத்தாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், அழகனும், உலகங்களை மோகிக்கஸ் செய்பவனும், பசுபதியும், காலனை ஜெயித்தவனுமான பரமசிவனைத் தியானிக்க வேண்டும்.)

2.  ☘ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்ட உமாபதிம்
     நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

    (பாபம் செய்தவர்களுக்கு துக்கத்தைக் கொடுப்பவனும், அஞ்ஞானத்தை அழிப்பவனும், அழிவற்றவனும், கருநீலமான கழுத்தை உடையவனும், உமா தேவியின் மணாளனுமான மகாதேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய  முடியும்? )

3. ☘காலகண்டம் கால மூர்த்திம் காலஜ்ஞம் கால நாசனம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

   (நஞ்சை கழுத்தில் வைத்திருப்பவனும், கால ரூபியும், காலத்தை உணர்த்துபவனும், யமனை சம்கரித்தவனுமான தேவ தேவனை நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய  முடியும்? )
   
4.  ☘நீலகண்ட விரூபாக்ஷம் நிர்மலம் விமல ப்ரபம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

    (நீலமான கழுத்தை உடையவனும், மூன்று கண்களைக் கொண்டவனும், நிர்மலனும், சுத்தமான காந்தி உடையவனுமான    தேவனை சிரசு பூமியில் பட நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய முடியும்.? )

5. ☘வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(வாமதேவனும் மகாதேவனும் உலகங்களை ரட்சிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் குருவுமான தேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை யமன் என்ன செய்ய முடியும். ? )
   
6. ☘தேவ தேவம் ஜகன்னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(தேவர்களுக்கெல்லாம் தெய்வமும், ஜகங்களில் தலைவனும்,  தேவர்களால் பூஜிக்கப்படுபவனும், விருஷக் கொடி உடையவனுமான ஈசனைத் தலையால் நமஸ்கரிக்கின்றேன். எங்களைக் காலன் என்ன செய்ய முடியும் ? )

7. ☘கங்காதரம் மஹாதேவம் ஸர்வாபரண பூஷிதம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(சிரசில் கங்கையைத் தாங்கியவனும், மகாதேவனும், சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்து ஜ்வலிப்பவனும் (பார்வதி, மீனாட்சி திருமண சமயங்களில்) ஆன தேவர் தலைவனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும் ? )

8. ☘அநாத: பரமானந்தம் கைவல்ய பததாயினம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(காலங்களுக்கு அப்பாற்பட்ட பரமானந்த வடிவமும்,  மோட்சத்தைத் தரக்கூடியவருமான பரமேஸ்வரனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்)

9. ☘ஸ்வர்கா பவர்கதாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம்
  நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(சொர்க்க வாசத்தையும், முக்தியையும் கொடுக்கின்றவரும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றவருமான தேவாதி தேவனைத் தஞ்சமெனக் கொண்டவர்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

10. ☘உத்பத்தி ஸ்திதி ஸ்ம்ஹார கர்த்தா ரஞ்சேஸ்வரம் குரும்
   நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி☘

(பிறப்பு, வளர்ப்பு, மரணம் ஆகியவற்றை நடத்துகின்றவனும், ஐச்வர்யத்தை உடையவரும், குருவான தட்சிணாமூர்த்தியானவனுமான ஈஸ்வரனைப் பணியும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

11. ☘மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம்ய: படேத் ஸிவ ஸந் நிதௌ
      தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி நாக்னி ஸௌரபயம் க்வசித்☘

(மார்கண்டேயரால் செய்யப்பட்ட இந்த ஸ்லோகத்தை சிவசன்னதியில் ஏகாக்ர சிந்தையுடன் படிக்கிறவர் குடும்பத்தில் அகால மரணம் சம்பவிக்காது. நெருப்பு, கள்வர்கள் என்ற சம்சார துக்கங்களும் ஏற்படாது.)

12. ☘ஸதா வர்த்தம் ப்ரகர்த்தவ்யம் ஸங்கடே கஷ்ட நாசனம்
      ஸூசிர்பூத்வா படேத் ஸ்தோத்ரம் ஸர்வஸித்தி ப்ரதாயகம்☘

(தாங்க முடியாத  அபாய காலத்தில் நூறு முறை படித்தால் ஆபத்து நீங்கி விடும். மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். இடையூறு ஏற்படும் காரியங்களும் தடை நீங்கிப் பூரணமாகும்.)

13.  ☘ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ராஹிமாம் ஸரணாகதம்
      ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகை: பீடிதம் கர்ம பந்தனை☘

(ஓ, யமனை ஜெயித்தவனே !  மஹா தேவனே ! கர்மாவின் விளைவுகளான பிறப்பு, வியாதி, முதுமை,  இறப்பு இவைகளில் சிக்கித் தவிக்கும் என்னை, உன்னைச் சரணமடைந்த காரணத்திற்காகவாவது காத்தருள வேண்டும்.)

14.  ☘தாவகஸ்த்வத் கத்ப்ராண ஸ்த்வச் சித்தோஹம் ஸதாம்ருட
      இதி விஞ்ஞாப்ய தேவேஸம் த்ரியம்ப காக்யம் மனும் ஜபேத்☘

(சுகத்தை அளிப்பவரே ! நான் எனது உயிரையும், மனதையும் உங்களிடம் கொடுத்துவிட்டேன். "நான் உங்களது சொந்தம்" எனக் கூறி " ஓம் நமசிவாய" என முடிந்தவரை ஜபிக்க வேண்டும்.

15.  ☘நம: சிவாய ஸாம்பாய ஹராய பரமாத்மனே
      ப்ரண தக்லேஸ நாஸாய யோகினாம் பதயே நம: ☘

(தேவிக்குப் பாதி உடலைத் தந்தவனும், பாபங்களை அழிப்பவனும், சரணமடைந்தவர்களின் மனக் கவலையைப் போக்குகின்றவனும்,  ஞானிகளுக்குப் பதியுமான  பரமேஸ்வரனை நமஸ்கரிக்கின்றேன்.)

ஓம்  நமச்சிவாய

ஸ்ரீருத்ரம்

ஸ்ரீருத்ரம்

ஓம் னமோ பகவதே’ ருத்ராய ||
னம’ஸ்தே ருத்ர மன்யவ’ உதோத இஷ’வே னமஃ’ | னம’ஸ்தே அஸ்து தன்வ’னே பாஹுப்யா’முத தே னமஃ’ | யா த இஷுஃ’ ஶிவத’மா ஶிவம் பபூவ’ தே தனுஃ’ | ஶிவா ஶ’ரவ்யா’ யா தவ தயா’ னோ ருத்ர ம்றுடய | யா தே’ ருத்ர ஶிவா தனூரகோரா‌உபா’பகாஶினீ | தயா’ னஸ்தனுவா ஶன்த’மயா கிரி’ஶம்தாபிசா’கஶீஹி | யாமிஷும்’ கிரிஶம்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்த’வே | ஶிவாம் கி’ரித்ர தாம் கு’ரு மா ஹிக்ம்’ஸீஃ புரு’ஷம் ஜக’த்| ஶிவேன வச’ஸா த்வா கிரிஶாச்சா’வதாமஸி | யதா’ னஃ ஸர்வமிஜ்ஜக’தயக்ஷ்மக்‍ம் ஸுமனா அஸ’த் | அத்ய’வோசததிவக்தா ப்ர’தமோ தைவ்யோ’ பிஷக் | அஹீக்’‍ஶ்ச ஸர்வாம்”ஜம்பயன்த்ஸர்வா”ஶ்ச யாதுதான்யஃ’ | அஸௌ யஸ்தாம்ரோ அ’ருண உத பப்ருஃ ஸு’மம்களஃ’ | யே சேமாக்‍ம் ருத்ரா அபிதோ’ திக்ஷு ஶ்ரிதாஃ ஸ’ஹஸ்ரஶோ‌உவைஷாக்ம் ஹேட’ ஈமஹே | அஸௌ யோ’‌உவஸர்ப’தி னீல’க்ரீவோ விலோ’ஹிதஃ | உதைனம்’ கோபா அ’த்றுஶன்-னத்று’ஶன்-னுதஹார்யஃ’ | உதைனம் விஶ்வா’ பூதானி ஸ த்றுஷ்டோ ம்று’டயாதி னஃ | னமோ’ அஸ்து னீல’க்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷே” | அதோ யே அ’ஸ்ய ஸத்வா’னோ‌உஹம் தேப்யோ’‌உகரன்னமஃ’ | ப்ரமும்’ச தன்வ’னஸ்-த்வமுபயோரார்த்னி’ யோர்ஜ்யாம் | யாஶ்ச தே ஹஸ்த இஷ’வஃ பரா தா ப’கவோ வப | அவதத்ய தனுஸ்த்வக்‍ம் ஸஹ’ஸ்ராக்ஷ ஶதே’ஷுதே | னிஶீர்ய’ ஶல்யானாம் முகா’ ஶிவோ னஃ’ ஸுமனா’ பவ | விஜ்யம் தனுஃ’ கபர்தினோ விஶ’ல்யோ பாண’வாக்ம் உத | அனே’ஶன்-னஸ்யேஷ’வ ஆபுர’ஸ்ய னிஷம்கதிஃ’ | யா தே’ ஹேதிர்-மீ’டுஷ்டம ஹஸ்தே’ பபூவ’ தே தனுஃ’ | தயா‌உஸ்மான், விஶ்வதஸ்-த்வம’யக்ஷ்மயா பரி’ப்புஜ | னம’ஸ்தே அஸ்த்வாயுதாயானா’ததாய த்றுஷ்ணவே” | உபாப்யா’முத தே னமோ’ பாஹுப்யாம் தவ தன்வ’னே | பரி’ தே தன்வ’னோ ஹேதிரஸ்மான்-வ்று’ணக்து விஶ்வதஃ’ | அதோ ய இ’ஷுதிஸ்தவாரே அஸ்மன்னிதே’ஹி தம் || 1 ||

ஶம்ப’வே னமஃ’ | னம’ஸ்தே அஸ்து பகவன்-விஶ்வேஶ்வராய’ மஹாதேவாய’ த்ர்யம்பகாய’ த்ரிபுரான்தகாய’ த்ரிகாக்னிகாலாய’ காலாக்னிருத்ராய’ னீலகண்டாய’ ம்றுத்யும்ஜயாய’ ஸர்வேஶ்வ’ராய’ ஸதாஶிவாய’ ஶ்ரீமன்-மஹாதேவாய னமஃ’ ||

னமோ ஹிர’ண்ய பாஹவே ஸேனான்யே’ திஶாம் ச பத’யே னமோ னமோ’ வ்றுக்ஷேப்யோ ஹரி’கேஶேப்யஃ பஶூனாம் பத’யே னமோ னமஃ’ ஸஸ்பிம்ஜ’ராய த்விஷீ’மதே பதீனாம் பத’யே னமோ னமோ’ பப்லுஶாய’ விவ்யாதினே‌உன்னா’னாம் பத’யே னமோ னமோ ஹரி’கேஶாயோபவீதினே’ புஷ்டானாம் பத’யே னமோ னமோ’ பவஸ்ய’ ஹேத்யை ஜக’தாம் பத’யே னமோ னமோ’ ருத்ராயா’ததாவினே க்ஷேத்ரா’ணாம் பத’யே னமோ னமஃ’ ஸூதாயாஹம்’த்யாய வனா’னாம் பத’யே னமோ னமோ ரோஹி’தாய ஸ்தபத’யே வ்றுக்ஷாணாம் பத’யே னமோ னமோ’ மம்த்ரிணே’ வாணிஜாய கக்ஷா’ணாம் பத’யே னமோ னமோ’ புவம்தயே’ வாரிவஸ்க்றுதா-யௌஷ’தீனாம் பத’யே னமோ னம’ உச்சைர்-கோ’ஷாயாக்ரன்தய’தே பத்தீனாம் பத’யே னமோ னமஃ’ க்றுத்ஸ்னவீதாய தாவ’தே ஸத்த்வ’னாம் பத’யே னமஃ’ || 2 ||

னமஃ ஸஹ’மானாய னிவ்யாதின’ ஆவ்யாதினீ’னாம் பத’யே னமோ னமஃ’ ககுபாய’ னிஷம்கிணே” ஸ்தேனானாம் பத’யே னமோ னமோ’ னிஷம்கிண’ இஷுதிமதே’ தஸ்க’ராணாம் பத’யே னமோ னமோ வம்ச’தே பரிவம்ச’தே ஸ்தாயூனாம் பத’யே னமோ னமோ’ னிசேரவே’ பரிசராயார’ண்யானாம் பத’யே னமோ னமஃ’ ஸ்றுகாவிப்யோ ஜிகாக்ம்’ஸத்ப்யோ முஷ்ணதாம் பத’யே னமோ னமோ’‌உஸிமத்ப்யோ னக்தம்சர’த்ப்யஃ ப்ரக்றுன்தானாம் பத’யே னமோ னம’ உஷ்ணீஷினே’ கிரிசராய’ குலும்சானாம் பத’யே னமோ னம இஷு’மத்ப்யோ தன்வாவிப்ய’ஶ்ச வோ னமோ னம’ ஆதன்-வானேப்யஃ’ ப்ரதிததா’னேப்யஶ்ச வோ னமோ னம’ ஆயச்ச’த்ப்யோ விஸ்றுஜத்-ப்ய’ஶ்ச வோ னமோ னமோ‌உஸ்ஸ’த்ப்யோ வித்ய’த்-ப்யஶ்ச வோ னமோ னம ஆஸீ’னேப்யஃ ஶயா’னேப்யஶ்ச வோ னமோ னமஃ’ ஸ்வபத்ப்யோ ஜாக்ர’த்-ப்யஶ்ச வோ னமோ னமஸ்திஷ்ட’த்ப்யோ தாவ’த்-ப்யஶ்ச வோ னமோ னமஃ’ ஸபாப்யஃ’ ஸபாப’திப்யஶ்ச வோ னமோ னமோ அஶ்வேப்யோ‌உஶ்வ’பதிப்யஶ்ச வோ னமஃ’ || 3 ||

னம’ ஆவ்யாதினீ”ப்யோ விவித்ய’ன்தீப்யஶ்ச வோ னமோ னம உக’ணாப்யஸ்த்றுகம்-ஹதீப்யஶ்ச’ வோ னமோ னமோ’ க்றுத்ஸேப்யோ’ க்றுத்ஸப’திப்யஶ்ச வோ னமோ னமோ வ்ராதே”ப்யோ வ்ராத’பதிப்யஶ்ச வோ னமோ னமோ’ கணேப்யோ’ கணப’திப்யஶ்ச வோ னமோ னமோ விரூ’பேப்யோ விஶ்வரூ’பேப்யஶ்ச வோ னமோ னமோ’ மஹத்ப்யஃ’, க்ஷுல்லகேப்ய’ஶ்ச வோ னமோ னமோ’ ரதிப்யோ‌உரதேப்ய’ஶ்ச வோ னமோ னமோ ரதே”ப்யோ ரத’பதிப்யஶ்ச வோ னமோ னமஃ’ ஸேனா”ப்யஃ ஸேனானிப்ய’ஶ்ச வோ னமோ னமஃ’, க்ஷத்த்றுப்யஃ’ ஸம்க்ரஹீத்றுப்ய’ஶ்ச வோ னமோ னமஸ்தக்ஷ’ப்யோ ரதகாரேப்ய’ஶ்ச வோ னமோ’ னமஃ குலா’லேப்யஃ கர்மாரே”ப்யஶ்ச வோ னமோ னமஃ’ பும்ஜிஷ்டே”ப்யோ னிஷாதேப்ய’ஶ்ச வோ னமோ னமஃ’ இஷுக்றுத்ப்யோ’ தன்வக்றுத்-ப்ய’ஶ்ச வோ னமோ னமோ’ ம்றுகயுப்யஃ’ ஶ்வனிப்ய’ஶ்ச வோ னமோ னமஃ ஶ்வப்யஃ ஶ்வப’திப்யஶ்ச வோ னமஃ’ || 4 ||

னமோ’ பவாய’ ச ருத்ராய’ ச னமஃ’ ஶர்வாய’ ச பஶுபத’யே ச னமோ னீல’க்ரீவாய ச ஶிதிகம்டா’ய ச னமஃ’ கபர்தினே’ ச வ்யு’ப்தகேஶாய ச னமஃ’ ஸஹஸ்ராக்ஷாய’ ச ஶதத’ன்வனே ச னமோ’ கிரிஶாய’ ச ஶிபிவிஷ்டாய’ ச னமோ’ மீடுஷ்ட’மாய சேஷு’மதே ச னமோ” ஹ்ரஸ்வாய’ ச வாமனாய’ ச னமோ’ ப்றுஹதே ச வர்ஷீ’யஸே ச னமோ’ வ்றுத்தாய’ ச ஸம்வ்றுத்வ’னே ச னமோ அக்ரி’யாய ச ப்ரதமாய’ ச னம’ ஆஶவே’ சாஜிராய’ ச னமஃ ஶீக்ரி’யாய ச ஶீப்யா’ய ச னம’ ஊர்ம்யா’ய சாவஸ்வன்யா’ய ச னமஃ’ ஸ்த்ரோதஸ்யா’ய ச த்வீப்யா’ய ச || 5 ||

னமோ” ஜ்யேஷ்டாய’ ச கனிஷ்டாய’ ச னமஃ’ பூர்வஜாய’ சாபரஜாய’ ச னமோ’ மத்யமாய’ சாபகல்பாய’ ச னமோ’ ஜகன்யா’ய ச புத்னி’யாய ச னமஃ’ ஸோப்யா’ய ச ப்ரதிஸர்யா’ய ச னமோ யாம்யா’ய ச க்ஷேம்யா’ய ச னம’ உர்வர்யா’ய ச கல்யா’ய ச னமஃ ஶ்லோக்யா’ய சா‌உவஸான்யா’ய ச னமோ வன்யா’ய ச கக்ஷ்யா’ய ச னமஃ’ ஶ்ரவாய’ ச ப்ரதிஶ்ரவாய’ ச னம’ ஆஶுஷே’ணாய சாஶுர’தாய ச னமஃ ஶூரா’ய சாவபின்ததே ச னமோ’ வர்மிணே’ ச வரூதினே’ ச னமோ’ பில்மினே’ ச கவசினே’ ச னமஃ’ ஶ்ருதாய’ ச ஶ்ருதஸே’னாய ச || 6 ||

னமோ’ தும்துப்யா’ய சாஹனன்யா’ய ச னமோ’ த்றுஷ்ணவே’ ச ப்ரம்றுஶாய’ ச னமோ’ தூதாய’ ச ப்ரஹி’தாய ச னமோ’ னிஷம்கிணே’ சேஷுதிமதே’ ச னம’ஸ்-தீக்ஷ்ணேஷ’வே சாயுதினே’ ச னமஃ’ ஸ்வாயுதாய’ ச ஸுதன்வ’னே ச னமஃ ஸ்ருத்யா’ய ச பத்யா’ய ச னமஃ’ காட்யா’ய ச னீப்யா’ய ச னமஃ ஸூத்யா’ய ச ஸரஸ்யா’ய ச னமோ’ னாத்யாய’ ச வைஶம்தாய’ ச னமஃ கூப்யா’ய சாவட்யா’ய ச னமோ வர்ஷ்யா’ய சாவர்ஷ்யாய’ ச னமோ’ மேக்யா’ய ச வித்யுத்யா’ய ச னம ஈத்ரியா’ய சாதப்யா’ய ச னமோ வாத்யா’ய ச ரேஷ்மி’யாய ச னமோ’ வாஸ்தவ்யா’ய ச வாஸ்துபாய’ ச || 7 ||

னமஃ ஸோமா’ய ச ருத்ராய’ ச னம’ஸ்தாம்ராய’ சாருணாய’ ச னமஃ’ ஶம்காய’ ச பஶுபத’யே ச னம’ உக்ராய’ ச பீமாய’ ச னமோ’ அக்ரேவதாய’ ச தூரேவதாய’ ச னமோ’ ஹன்த்ரே ச ஹனீ’யஸே ச னமோ’ வ்றுக்ஷேப்யோ ஹரி’கேஶேப்யோ னம’ஸ்தாராய னம’ஶ்ஶம்பவே’ ச மயோபவே’ ச னமஃ’ ஶம்கராய’ ச மயஸ்கராய’ ச னமஃ’ ஶிவாய’ ச ஶிவத’ராய ச னமஸ்தீர்த்யா’ய ச கூல்யா’ய ச னமஃ’ பார்யா’ய சாவார்யா’ய ச னமஃ’ ப்ரதர’ணாய சோத்தர’ணாய ச னம’ ஆதார்யா’ய சாலாத்யா’ய ச னமஃ ஶஷ்ப்யா’ய ச பேன்யா’ய ச னமஃ’ ஸிகத்யா’ய ச ப்ரவாஹ்யா’ய ச || 8 ||

னம’ இரிண்யா’ய ச ப்ரபத்யா’ய ச னமஃ’ கிக்ம்ஶிலாய’ ச க்ஷய’ணாய ச னமஃ’ கபர்தினே’ ச புலஸ்தயே’ ச னமோ கோஷ்ட்யா’ய ச க்றுஹ்யா’ய ச னமஸ்-தல்ப்யா’ய ச கேஹ்யா’ய ச னமஃ’ காட்யா’ய ச கஹ்வரேஷ்டாய’ ச னமோ” ஹ்றுதய்யா’ய ச னிவேஷ்ப்யா’ய ச னமஃ’ பாக்‍ம் ஸவ்யா’ய ச ரஜஸ்யா’ய ச னமஃ ஶுஷ்க்யா’ய ச ஹரித்யா’ய ச னமோ லோப்யா’ய சோலப்யா’ய ச னம’ ஊர்ம்யா’ய ச ஸூர்ம்யா’ய ச னமஃ’ பர்ண்யாய ச பர்ணஶத்யா’ய ச னமோ’‌உபகுரமா’ணாய சாபிக்னதே ச னம’ ஆக்கிததே ச ப்ரக்கிததே ச னமோ’ வஃ கிரிகேப்யோ’ தேவானாக்ம் ஹ்றுத’யேப்யோ னமோ’ விக்ஷீணகேப்யோ னமோ’ விசின்வத்-கேப்யோ னம’ ஆனிர் ஹதேப்யோ னம’ ஆமீவத்-கேப்யஃ’ || 9 ||

த்ராபே அன்த’ஸஸ்பதே தரி’த்ரன்-னீல’லோஹித | ஏஷாம் புரு’ஷாணாமேஷாம் ப’ஶூனாம் மா பேர்மா‌உரோ மோ ஏ’ஷாம் கிம்சனாம’மத் | யா தே’ ருத்ர ஶிவா தனூஃ ஶிவா விஶ்வாஹ’பேஷஜீ | ஶிவா ருத்ரஸ்ய’ பேஷஜீ தயா’ னோ ம்றுட ஜீவஸே” || இமாக்‍ம் ருத்ராய’ தவஸே’ கபர்தினே” க்ஷயத்வீ’ராய ப்ரப’ராமஹே மதிம் | யதா’ னஃ ஶமஸ’த் த்விபதே சது’ஷ்பதே விஶ்வம்’ புஷ்டம் க்ராமே’ அஸ்மின்னனா’துரம் | ம்றுடா னோ’ ருத்ரோத னோ மய’ஸ்க்றுதி க்ஷயத்வீ’ராய னம’ஸா விதேம தே | யச்சம் ச யோஶ்ச மனு’ராயஜே பிதா தத’ஶ்யாம தவ’ ருத்ர ப்ரணீ’தௌ | மா னோ’ மஹான்த’முத மா னோ’ அர்பகம் மா ன உக்ஷ’ன்தமுத மா ன’ உக்ஷிதம் | மா னோ’‌உவதீஃ பிதரம் மோத மாதரம்’ ப்ரியா மா ன’ஸ்தனுவோ’ ருத்ர ரீரிஷஃ | மா ன’ஸ்தோகே தன’யே மா ன ஆயு’ஷி மா னோ கோஷு மா னோ அஶ்வே’ஷு ரீரிஷஃ | வீரான்மா னோ’ ருத்ர பாமிதோ‌உவ’தீர்-ஹவிஷ்ம’ன்தோ னம’ஸா விதேம தே | ஆராத்தே’ கோக்ன உத பூ’ருஷக்னே க்ஷயத்வீ’ராய ஸும்-னமஸ்மே தே’ அஸ்து | ரக்ஷா’ ச னோ அதி’ ச தேவ ப்ரூஹ்யதா’ ச னஃ ஶர்ம’ யச்ச த்விபர்ஹா”ஃ | ஸ்துஹி ஶ்ருதம் க’ர்தஸதம் யுவா’னம் ம்றுகன்ன பீமமு’பஹன்துமுக்ரம் | ம்றுடா ஜ’ரித்ரே ரு’த்ர ஸ்தவா’னோ அன்யன்தே’ அஸ்மன்னிவ’பன்து ஸேனா”ஃ | பரி’ணோ ருத்ரஸ்ய’ ஹேதிர்-வ்று’ணக்து பரி’ த்வேஷஸ்ய’ துர்மதி ர’காயோஃ | அவ’ ஸ்திரா மகவ’த்-ப்யஸ்-தனுஷ்வ மீட்-வ’ஸ்தோகாய தன’யாய ம்றுடய | மீடு’ஷ்டம ஶிவ’மத ஶிவோ னஃ’ ஸுமனா’ பவ | பரமே வ்றுக்ஷ ஆயு’தன்னிதாய க்றுத்திம் வஸா’ன ஆச’ர பினா’கம் பிப்ரதாக’ஹி | விகி’ரித விலோ’ஹித னம’ஸ்தே அஸ்து பகவஃ | யாஸ்தே’ ஸஹஸ்ரக்ம்’ ஹேதயோன்யமஸ்மன்-னிவபன்து தாஃ | ஸஹஸ்ரா’ணி ஸஹஸ்ரதா பா’ஹுவோஸ்தவ’ ஹேதயஃ’ | தாஸாமீஶா’னோ பகவஃ பராசீனா முகா’ க்றுதி || 10 ||

ஸஹஸ்ரா’ணி ஸஹஸ்ரஶோ யே ருத்ரா அதி பூம்யா”ம் | தேஷாக்ம்’ ஸஹஸ்ரயோஜனே‌உவதன்வா’னி தன்மஸி | அஸ்மின்-ம’ஹத்-ய’ர்ணவே”‌உன்தரி’க்ஷே பவா அதி’ | னீல’க்ரீவாஃ ஶிதிகண்டா”ஃ ஶர்வா அதஃ, க்ஷ’மாசராஃ | னீல’க்ரீவாஃ ஶிதிகண்டா திவக்ம்’ ருத்ரா உப’ஶ்ரிதாஃ | யே வ்றுக்ஷேஷு’ ஸஸ்பிம்ஜ’ரா னீல’க்ரீவா விலோ’ஹிதாஃ | யே பூதானாம்-அதி’பதயோ விஶிகாஸஃ’ கபர்தி’னஃ | யே அன்னே’ஷு விவித்ய’ன்தி பாத்ரே’ஷு பிப’தோ ஜனான்’ | யே பதாம் ப’திரக்ஷ’ய ஐலப்றுதா’ யவ்யுதஃ’ | யே தீர்தானி’ ப்ரசர’ன்தி ஸ்றுகாவ’ன்தோ னிஷம்கிணஃ’ | ய ஏதாவ’ன்தஶ்ச பூயாக்ம்’ஸஶ்ச திஶோ’ ருத்ரா வி’தஸ்திரே | தேஷாக்ம்’ ஸஹஸ்ரயோஜனே‌உவதன்வா’னி தன்மஸி | னமோ’ ருத்ரேப்யோ யே ப்று’திவ்யாம் யே”‌உன்தரி’க்ஷே யே திவி யேஷாமன்னம் வாதோ’ வர்-ஷமிஷ’வஸ்-தேப்யோ தஶ ப்ராசீர்தஶ’ தக்ஷிணா தஶ’ ப்ரதீசீர்-தஶோ-தீ’சீர்-தஶோர்த்வாஸ்-தேப்யோ னமஸ்தே னோ’ ம்றுடயன்து தே யம் த்விஷ்மோ யஶ்ச’ னோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே’ ததாமி || 11 ||

த்ர்யம்’பகம் யஜாமஹே ஸுகன்திம் பு’ஷ்டிவர்த’னம் | உர்வாருகமி’வ பம்த’னான்-ம்றுத்யோ’ர்-முக்ஷீய மா‌உம்றுதா”த் | யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷ’தீஷு யோ ருத்ரோ விஶ்வா புவ’னா விவேஶ தஸ்மை’ ருத்ராய னமோ’ அஸ்து | தமு’ ஷ்டுஹி யஃ ஸ்விஷுஃ ஸுதன்வா யோ விஶ்வ’ஸ்ய க்ஷய’தி பேஷஜஸ்ய’ | யக்ஷ்வா”மஹே ஸௌ”மனஸாய’ ருத்ரம் னமோ”பிர்-தேவமஸு’ரம் துவஸ்ய | அயம் மே ஹஸ்தோ பக’வானயம் மே பக’வத்தரஃ | அயம் மே” விஶ்வபே”ஷஜோ‌உயக்‍ம் ஶிவாபி’மர்ஶனஃ | யே தே’ ஸஹஸ்ர’மயுதம் பாஶா ம்றுத்யோ மர்த்யா’ய ஹன்த’வே | தான் யஜ்ஞஸ்ய’ மாயயா ஸர்வானவ’ யஜாமஹே | ம்றுத்யவே ஸ்வாஹா’ ம்றுத்யவே ஸ்வாஹா” | ப்ராணானாம் க்ரன்திரஸி ருத்ரோ மா’ விஶான்தகஃ | தேனான்னேனா”ப்யாயஸ்வ ||
ஓம் னமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்றுத்யு’ர்மே பாஹி ||

ஸதாஶிவோம் |

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’
சிவாயநம திருச்சிற்றம்பலம்!

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. 
நூல் 
1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே 
2 துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
3.அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே! 
4. மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னிக்
குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
5. பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதுக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.
6. சென்னியது உன்பொற் திருவடித்தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே
7. ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே!
8. சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
9. கருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே
10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
11. ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான்ந்தமான, சரணார விந்தந் தவளநிறக்
கானம்ந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
12. கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்துபக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து. நான்முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!
13. பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர்  தெய்வம் வந்திப்பதே
14. வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப்பர மானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்– எம்பிராட்டி! நின் தண்ணளியே!
15. தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும், அன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!
16. கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
17. அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய வானன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசய மானது அபசயம் மாக, முன் பார்த்தவர் தம்
மதிசய மாக அன்றோ  வாம பாகத்தை வவ்வியதே.
18. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே
19. வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!
20. உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே?
21. மங்கலை, செங்கலை, சம்முலை யாள், மலையாள், வருணச்
சங்குலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும்பெண் கொடியே!
22. கொடியே, இளவஞ்சிக்கொம்பே– எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
23. கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதான்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளிய என்கண்மணியே.
24. மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.
25. பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
26. ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு  நகையுடைத்தே.
27. உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே?
28. சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும்
செல்லும் தவநெறியும்  சிவலோகமும் சித்திக்குமே.
29. சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
30. அன்றேதடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
31. உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்ததிங்
கெமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
32. ஆசைக்கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தைஎன் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே. 
33. இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க,
அழைக்கும் பொழுதுவந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
34. வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே.
35. திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே. 
36. பொருளே, பொருள்முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும்தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்தன்
அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே.
37. கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே.
38. பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
39. ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே.
40. வாள்ணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்தி றைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்குகெண்ணிய எண்ணம்ன்றோ, முன்செய் புண்ணியமே.
41. புண்ணியம் செய்தனமே மனமே. புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.
42. இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி, நல்லரவின்
படம்கொண்ட அல்குல் பணிமொழி, வேதப் பரிபுரையே.    
43. பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள்! தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப் புச்சிலைக்கை,
எரிபுரை மேனி,  இறைவர்செம் பாகத்து திருந்தவளே.
44. தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே, அவர்தமக்கு கன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்,
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாகமெய்த்தொண்டு செய்தே.  
45. தொண்டு செய்யாது நின்பாதம் தொழாது, துணிந்தச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின்வெறுக்கை அன்றே.
46. வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானு உன்னை வாழ்த்துவனே. 
47. வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும், பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 
48. சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே?
49. குரம்பை அடுத்து குடி புக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து
அரம்பையடுத்து அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி வாய் நின்ற நாயகியே. 
50. நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய்கி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதிய உடையாள் சரணம் அரண் நமக்கே.
51. அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே,
“சரணம் சரணம்” என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 
52. வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,- பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 
53. சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண்மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இதுபோலும் தவம் இல்லையே. 
54. இல்லாமை சொல்லி, ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 
55. மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்றது
அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றுல்லையே. 
56. ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து,  இவ் வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்ற வா. இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. 
57. ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம்மெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ, உன் தன் மெய்யருளே?
58. அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல்நல்லாள், தகைசேர்நயனக்
கருணாம் புயமும், வதனாம் புயமும், கராம் புயமும்,
சரணாம் புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.  
59. தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன்தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார்  அடியார் பெற்ற பாலரையே.
60. பாலினும் சொல்இனியாய். பனிமா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும், சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே?
61. நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து,
நீயேநினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே செங்கண் மால்திரு தங்கைச்சியே. 
62. தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி, கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. 
63. தேறும் படிசில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 
64. வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும், திருமேனிப்ரகாசமன்றிக்
காணேன்,  இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
65. ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவம்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு கிரு மூன்றுஎனத்தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே. 
66. வல்லபம் ஒன்றறியேன், சிறியேன், நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லதுபற்று ஒன்றுஇலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினை யேன்தொடுத்த
சொல் அவ மாயினும்,  நின்திரு நாமங்கள் தோத்திரமே.
67. தோத்திரம்செய்துதொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே. 
68. பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீரடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
69. தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.
70. கண்களிக் கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக் கும்குரல் வீணையும், கையும் பயோதரமும்
மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே. 
71. அழகுக்கு கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ்சே. இரங்கேல், உனக்கென் குறையே.  
72. எங்குறை தீரநின்று றேத்துகின்றேன், இனி யான்பிறக்கின்,
நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர, எம்கோன்சடை மேல்வைத்த தாமரையே. 
73. தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக்கென்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே. 
74. நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 
75. தங்குவர் கற்பகத். தாருவின் நீழலில், தாயர்இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும், பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
76. குறித்தேன்மனத்தில், நின்கோலம் எல்லாம், நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணி பிரான் ஒருகூற்றை, மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்ச பாணபயிரவியே. 
77. பயிரவி, பஞ்சமி, பாசாங் குசைபஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 
78. செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி, அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.  
79. விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே?
80. கூட்டியவா என்னை தன் அடியாரில், கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்! ஆடகத் தாமரை ஆரணங்கே.  
81. அணங்கே. அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே. 
82. அளியார் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுந்தொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.
83. விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்
பரவும், பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிகமும் கற்பகக் காவும் உடையவரே.
84. உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்
படையாளை  உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
85. பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க்கும் குங்குமமுலையும், முலைமேல் முத்துமாலையுமே.
86. மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலைவெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
87. மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்த, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும்படி,  ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே.  
88. பரம் என்றுனை அடைந்தேன், தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற,கை யான் இடப்பாகம் சிறந்தவளே. 
89. சிறக்கும் கமலத்திருவே. நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியமற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுதுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.  
90. வருந்தாவகை, என் மனத்தா மரையினில் வந்து புகுந்
திருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 
91. மெல்லிய நுண்ணிடை மின்னையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்னை யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம்தொழும் அடியாரைத் தொழும. அவர்க்குப்,
பல்லியம் ஆர்த்து எழ வெண்பக டூரும் பதம் தருமே. 
92. பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய் இனி, யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே. 
93. நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே, முகிழ்முலை மானே, முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
94. விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து,
கரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே.
95. நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக் குள்ளம்வெல்லாம்
அன்றே உனதென் றளித்துவிட்டேன். அழியாதகுணக்
குன்றே,  அருட்கடலே. இம வான்பெற்ற கோமளமே. 
96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை, ஏதமிலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத், தம்மால்
ஆமள வும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. 
97. ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன், அமரர்தங்கோன்,
போதில் பிரமன், புராரி, முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்– போற்றுவர் தையலையே. 
98. தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே.  
99. குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை, கோல இயன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 
100. குழையைத்தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத் திருநெடுந் தோளும், கருப்புவில்லும்
விழையப் பொருதிறல்வேரியம் பாணமும், வெண்ணகையும்
உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசங்குசமும் கருப்பும் அங்கையிற் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

மகாளயபட்சம்

மகாளயபட்சம்


மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது. ஒரு பட்சம் ஆகும்
மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் (சில சமயம் 16ஆக மாறுபடும்) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும்.

இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை  வரை நீடிக்கும் .
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும்.
தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை.

மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ( அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும்.

#மகாளயபட்ச_காலத்தில்
#என்னென்ன_செய்ய_வேண்டும்

மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் ( திவசம் ) செய்வோம்.
ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும்.

அந்தணர்களுக்கு வஸ்திரதானம்
ஏழைகளுக்கு அன்னதானம்
படிக்க சிரமப்படும் ( பொருளாதார நிலையில் ) மாணவர்களுக்கு வித்யாதானம்

இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் ( முன்னோர்கள் ) மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் ( பித்ருக்கள் ) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.

அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம் ; ஸ்ரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம் :

(மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்)

முதல் நாள் : பிரதமை திதி - பணம் சேரும்

இரண்டாம் நாள் : துவிதியை திதி - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்

மூன்றாம் நாள் : திரிதியை திதி - நினைத்தது நிறைவேறும்

நான்காம் நாள் : சதுர்த்தி திதி - பகை விலகும்

ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி - வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம் கூடும்

ஆறாம் நாள் : ஷஷ்டி திதி - புகழ் கிடைக்கும்

ஏழாம் நாள் : ஸப்தமி திதி - சிறந்த பதவி கிடைக்கும்

எட்டாம்  நாள் : அஷ்டமி திதி - அறிவு ஞானம் கிடைக்கும்

ஒன்பதாம் நாள் : நவமி திதி - சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும்

பத்தாம்  நாள் : தசமி திதி - நீண்டநாள் ஆசை நிறைவேறும்

பதினோராம் நாள் : ஏகாதசி திதி - படிப்பு கலை வளரும்

பனிரென்டாம் நாள் : துவாதசி திதி - தங்க ஆபரணங்கள் சேரும்

பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி - தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அபிவிருத்தி கிடைத்தல்

பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி - பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை

பதினைந்தாம் நாள் :  மகாளயஅமாவாசை - மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்

#மகாளயபட்ச_விதிமுறைகள்

#குறிப்பு : மகாளயபட்ச (மேலே சொன்ன 15 தினங்கள்) காலத்தில்
கண்டிப்பாக வெங்காயம் சேர்க்க கூடாது
எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது
முகச்சவரம் செய்யக்கூடாது
தாம்பத்யம் (உடலுறவு) கூடாது
புலனடக்கம் மிக மிக அவசியம்
மகாளயபட்சத்து (பதினைந்து நாட்களில்) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது.

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்

ஆடி மாதத்தின் வியாழக்கிழமையில், பிரம்மாவை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருப்பட்டூர் பிரம்மாவை வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யுங்கள். நம் தலையெழுத்தையே திருத்தி அருளுவார்.

ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பர தத்வாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

அதேபோல்,

ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மநாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தை மனதாரச் சொல்லுங்கள்.

ஓம் ஹம்சாரூதாய வித்மஹே
கூர்ச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும்...

ஓம் வேதாத்மஹாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் சொல்லுங்கள்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

முதலான மந்திரங்களை, 11 முறை 24 முறை 54 முறை முடிந்தால் 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

திருப்பட்டூர் பிரம்மாவை நினைத்து, உங்கள் வேண்டு தல்களைச் சொல்லி, மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து கோரிக்கைகளை பிரம்மாவிடம் வையுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை யும் மாலையும் பாராயணம் செய்து வழிபடு வது நல்லது. முடிந்தால், காலையில் பிரம்ம முகூர்த்த த்தில் பிரம்ம மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

இது தான் தமிழ் !

இது தான் தமிழ் !

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..

1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை       நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம் 
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்  
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி 
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல். 

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...