17:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
17:ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.பி. 367 -கி.பி.375 வரை)
ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (பாலகுரு)காஷ்மீர் நாட்டு மந்திரியான 'தேவமிச்ரன்'என்பவரிவரின் திருமகனார்.பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைத்தைப் பற்றியே பேசினார்.இவர் பிந்த பின் ஜைன மதத்தை தழுவினார் தேவமிச்ரன்.மகனது அத்வைத நெறியை மாற்ற சாம,தான,பேத,தண்டப் பிரயோகங்களை நடத்தினார்.
இரணியகசிபுவின் முயற்ச்சிகள் பிரகலாதனிடம் பலிக்காதது போல் தேவமிச்ரரின் முயற்ச்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின. இருதியில் தேவமிச்ரரின் புதல்வனை சிந்து நதியில் வீசி எறிந்தார் தந்தை.நீரில் தத்தளித்துத் தடுமாரிய சிறுவனை பாடலிபுரத்து
அந்தணரான'பூரிவசு'என்பவர் காப்பாற்றினார்.'சிந்து தத்தன்'எனப் பெயர் சூட்டி,வேத சாஸ்திரங்களைக் சொல்லிக்கொடுத்தார்.அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் இச்சிறுவனை ஒப்படைத்தார்.இதுவும் கடவுள் சித்தமே.அவரை 'பாலகுரு'என மக்கள் அன்போடு அழைத்தார்கள்.இவர் தனது 17வது வயதில் ஸ்ரீ காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார்.தினமும் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தார்.பாலிக,பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார்.காஷ்மீர் மக்கள் இவருக்கு தங்கப் பல்லக்கை பரிசளித்தனர்.அதில் அமர்ந்து இந்தியா முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார்.எட்டாண்டு காலமே பீடாதிபத்யம் வகித்த இந்த குருரத்தினம் தமது இருபத்தி ஐந்தாவது வயதில் கி.பி.375-ஆம் ஆண்டு,பவ வருடம் ஆனி மாதம் க்ருஷ்ண பட்சம் தசமியன்று'நாசிக்'நகருக்கு அருகிலுள்ள 'த்ரயம்பகத்தில்' சித்தியடைந்தார்.