ஞாயிறு, 30 ஜூன், 2019

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா
பக்தவத்சல கோவிந்தா
பாகவதப்பிரியா கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாக்ஷ கோவிந்தா
நந்த குமாரா கோவிந்தா
நவநீதசோர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பசுபாலக கிருஷ்ணா கோவிந்தா
பாபவிமோசன கோவிந்தா
துஷ்டஸம்ஸஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலன கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
வஜ்ரமகுடா கோவிந்தா
வராஹமூர்த்தி கோவிந்தா
கோபீ ஜனலோல கோவிந்தா
கோவர்த்தநோத்தார கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுகமர்த்தன கோவிந்தா
பக்ஷிவாஹன கோவிந்தா
பாண்டவப் பிரியா கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராஹ நரசிம்ஹ கோவிந்தா
வாமன ப்ருகுராமா கோவிந்தா
பலராமானுஜ கோவிந்தா
பௌத்த கல்கீ கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
வேணுகானப் பிரிய கோவிந்தா
வெங்கட்ரமண கோவிந்தா
சீதாநாயக கோவிந்தா
ஸ்ரீ தர பரிபாலக கோவிந்தா
தரித்ரஜன போஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனுதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணாகதவத்ஸல கோவிந்தா
கருணாஸாகர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கமலாதளாக்ஷõ கோவிந்தா
காமுதபலதா கோவிந்தா
பாபவினாஸக கோவிந்தா
பாஹிமுராரே கோவிந்தா
ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்ஸாங்கித கோவிந்தா
தரணி நாயக கோவிந்தா
தினகரதேஜோ கோவிந்தா
பத்மாவதி பிரிய கோவிந்தா
ப்ரஸன்ன மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
அபயஹஸ்தா கோவிந்தா
அர்ச்யாவதார கோவிந்தா
சங்குசக்ரதார கோவிந்தா
சாரங்கதாதர கோவிந்தா
விரஜாதீர்த்தா கோவிந்தா
வீரோதி மர்தன கோவிந்தா
சாலக்ராம ஸாரா கோவிந்தா
ஸஹஸ்ரநாமா கோவிந்தா
லக்ஷ்மீவல்லப கோவிந்தா
லக்ஷ்மணாக்ரஜா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனாம்பரதா கோவிந்தா
கருடவாஹனா கோவிந்தா
கஜராஜரக்ஷக கோவிந்தா
வானரஸேவித கோவிந்தா
வாரதிபந்தன கோவிந்தா
ஏழுமலையானை கோவிந்தா
ஏகஸ்வரூபா கோவிந்தா
ராமகிருஷ்ணா கோவிந்தா
ரகுகுலநந்தன கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யக்ஷதேவா கோவிந்தா
பரமதயாகர கோவிந்தா
வஜ்ரகவசாத கோவிந்தா
வைஜயந்தீமாலா கோவிந்தா
வட்டிகாசனே கோவிந்தா
வசுதேவசுதனே கோவிந்தா
பில்டபத்ராதர கோவிந்தா
பிக்ஷúக ஸம்ஸ்துத கோவிந்தா
மோஹனரூபா கோவிந்தா
சிவகேஸவமூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரம்ஹாண்டரூப கோவிந்தா
பக்தரக்ஷக கோவிந்தா
தித்யகல்யாணா கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹத்தீராமப்ரியா கோவிந்தா
ஹரிஸர்வோத்ம கோவிந்தா
ஜனார்தனமூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தா
அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபத்பாந்தவா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ரத்னகிரீட கோவிந்தா
ராமானுஜ ஹரி கோவிந்தா
ஸ்வயம் பிரகாஸா கோவிந்தா
ஆஸ்ரிதபக்ஷõ கோவிந்தா
நித்யசுபதப கோவிந்தா
நிகிலலோகேஸ கோவிந்தா
ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்தரஹிதா கோவிந்தா
இஹபர தாயக கோவிந்தா
இஹபர ரக்ஷித கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பத்மதளாக்ஷõ கோவிந்தா
பத்மநாபஹரி கோவிந்தா
திருமலை நிவாஸ கோவிந்தா
துஸசீ தளமால கோவிந்தா
சேஷாயி கோவிந்தா
சேஷாத்ரி ஹரி நிலயா கோவிந்தா
ஸ்ரீ நிவாச கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேச கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா

வியாழன், 27 ஜூன், 2019

சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம். இந்த வேதத்தை நான்காக  வகுத்தவர் வியாசர். அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்று மொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார். யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார். அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான். அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்து விட்டார் வைசம்பாயனர். அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான். அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர். சீடர்கள் வழக்கம் போல வந்து வணங்கினார்கள். ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார். சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும். இங்கே ஆச்சார்யரே பாவம் செய்து விட்டார். சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும். வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம். அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு? என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.

வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்து விட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய். அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை. நீ ஆசிரமத்தை விட்டு வெளியே போ! என்று கோபத்தோடு சொன்னார். யாக்ஞவல்கியருக்கு அதற்கு மேல் கோபம். ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை. அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல. என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள். உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார். அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.

யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை. கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார். மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும். வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார். அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள். இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர். தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது. வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார். பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார். அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள். அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீ வைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார். மறுக்க வழியில்லாமல் கொடுத்து விட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும். நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.

அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார். அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம். வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார். அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது. நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக. நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய். அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்து வைத்திருக்கிறார். எனது கடாக்ஷத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள் புரிந்து மறைந்தாள். அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார். சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர் முன் தோன்றினான். {அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்து விட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.} சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பி விட்டார். அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார். யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்து விட்டார். அப்படி சூரியன் உபதேசம் செய்தது தான் சுக்லயஜுர் வேதம்.
ஸ்ரீ குருவாக்ய பரிபாலனம்
     ***தர்மசாஸ்திரம்***

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்ம சாஸ்திரம்
---------------------------------------------------
கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!

பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று அல்லது ஐந்து வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.
----------------------------------------------
ஏழுபடை வீடு!

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு அவர்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு. அத்துடன் முத்துக்குமாரசுவாமி, பால தண்டாயுதபாணி சுவாமியையும் சேர்த்து ஏழு சன்னதிகள் உள்ளதால் இந்தக் கோயிலை ஏழு படை வீடு என்கின்றனர்.
----------------------------------------------
கிரகதோஷ நிவர்த்திக்கு யாரை வணங்குவது சிறந்தது?

நவக்கிரக வழிபாடு தற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.
---------------------------------------------------
அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடத்துவது சரியா?

ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இரவு நேர பூஜையை ஆகம சாஸ்திரம் அனுமதிக்கிறது. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே வழிபாட்டுக்காக கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழக்கமான நேரத்தில் வழிபடுவதே சரியானது.
---------------------------------------------------
அம்மாவின் ஆணை!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்தராமனைக் காட்டுக்குஅனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு.சுமித்ரை தன் மகன்லட்சுமணனிடம், ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒருவேலைக்காரன் போல் நடந்து கொள், என்று மகனுக்கு ஆணையிட்டாள். பிறர் நலனுக்காக, மகனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட இவளே தெய்வத்தாயாக உயர்ந்து நிற்கிறாள்.
---------------------------------------------------


அனுமன் கையில் சிவலிங்கம்!

ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். உடல்நிலை சரியில்லாதவர்கள் மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில் தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு. இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக... ஒரு வீட்டை நாம் காலி செய்யும் போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும். ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். உயிர் பிரியும்.

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான். உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும். இவ்வாறாக புனரபி ஜனனம், புனரபி மரணம்.
என்ற நிலை அமைகிறது. பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும், புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும். அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல் வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உருப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல் இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள் தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர - அஸ்மதாசார்யாய நமோ நம:

ஸ்ரீ சந்த்ரமௌளி - பாதாப்ஜ - மதுபாய நமோ நம:

ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

ஸர்வக்ஞாசார்ய - பகவத்ஸ்வரூபாய நமோ நம:

அஷ்டாங்கயோகனிஷ்டா - கரிஷ்டாய நமோ நம:

ஸனகாதி - மஹாயோகி - ஸத்ருசாய நமோ நம:

மஹாதேவேந்த்ர - ஹஸ்தாப்ஜ - ஸஞ்ஜாதாய நமோ நம:

மஹாயோகி - விநிர்பேத்ய - மஹத்த்வாய நமோ நம:

காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

கலிதோஷ - நிவ்ருத்த்யேக - காரணாய நமோ நம:

ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

பாரதீக்ருத ஜிஹ்வாக்ர - நர்தனாய நமோ நம:

கருணாரஸகல்லோல - கடாக்ஷாய நமோ நம:

காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து - கம்ராபாய நமோ நம:

அமந்தா நந்தக்ருன் - மந்தகமனாய நமோ நம:

அத்வைதானந்தபரித - சித்ரூபாய நமோ நம:

கடீதட - லஸச்சாரு - காஷாயாய நமோ நம:

கடாக்ஷமாத்ர - மோக்ஷேச்சா - ஜனகாய நமோ நம:

பாஹு - தண்ட - லஸத்வேணு - தண்டகாயநமோ நம:

பாலபாக - லஸத்பூதி - புண்ட்ரகாய நமோ நம:

தரஹாஸ - ஸ்புரத்திவ்ய - முகாப்ஜாய நமோ நம:

ஸூதாமதுரிமா - மஞ்ஜு - பாஷணாய நமோ நம:

தபனீய - திரஸ்காரி - ஸரீராய நமோ நம:

தப: ப்ரபா - ஸதாராஜத் - ஸுநேத்ராய நமோ நம:

ஸங்கீதானந்த - ஸந்தோஹ - ஸர்வஸ்வாய நமோ நம:

ஸம்ஸாராம்புதி - நிர்மக்ன-தாரகாய நமோ நம:

மஸ்தகோல்லாஸி - ருத்ராக்ஷ - மகுடாய நமோ நம:

ஸாக்ஷாத் - பரஸிவாமோக - தர்ஸனாயநமோ நம:

சக்ஷுர்கத - மஹாதேஜோ - அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

ஸாக்ஷாத்க்ருத - ஜகன்மாத்ரு - ஸ்வரூபாய நமோ நம:

க்வசித் - பாலஜனாத்யந்த - ஸுலபாய நமோ நம:

க்வசின் - மஹாஜனாதீவ - துஷ்ப்ராபாய நமோ நம:

கோப்ராஹ்மண - ஹிதாஸக்த - மானஸாயநமோ நம:

குருமண்டல - ஸம்பாவ்ய - விதேஹாயநமோ நம:

பாவனாமாத்ர - ஸந்துஷ்ட - ஹ்ருதயாய நமோ நம:

பாவ்யாத்யபாவ்ய - திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

வ்யக்தாவ்யக்ததராநேக - சித்கலாய நமோ நம:

ரக்தஸுக்ல - ப்ரபாமிஸ்ர - பாதுகாய நமோ நம:

பக்தமானஸ - ராஜீவ - பவனாய நமோ நம:

பக்தலோசன - ராஜீவ - பாஸ்கராய நமோ நம:

பக்த-காமலதா - கல்ப - பாதபாய நமோ நம:

புக்திமுக்தி ப்ரதாநேக - சக்திதாய நமோ நம:

சரணாகத - தீனார்த்த - ரக்ஷகாய நமோ நம:

ஸமாதி - ஷட்க - சம்பத் - ப்ரதாயகாய நமோ நம:

ஸர்வதா ஸர்வதா லோக - சௌக்யதாய நமோ நம:

ஸதா நவநவாகங்க்ஷய - தர்ஸனாய நமோ நம:

ஸர்வ - ஹ்ருத்பத்ம - ஸஞ்சார - நிபுணாய நமோ நம:

ஸர்வேங்கித - பர்ஜ்ஞான - ஸமர்த்தாய நமோ நம:

ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட - ஸித்திதாய நமோ நம:

ஸர்வவஸ்து - விபாவ்யாத்ம - ஸத்ரூபாய நமோ நம:

தீன - பக்தாவனைகாந்த - தீக்ஷிதாய நமோ நம:

ஜ்ஞானயோக - பலைஸ்வர்ய - மானிதாயநமோ நம:

பாவ - மாதுர்ய - கலிதாபயதாய நமோ நம:

ஸர்வபூதகணாமேய - ஸௌஹார்தாய நமோ நம:

மூகீபூதாநேகலோக - வாக்ப்ரதாய நமோ நம:

ஸீதளீக்ருத - ஹ்ருத்தாப - ஸேவகாய நமோ நம:

போகமோக்ஷ - ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

ஸீக்ரஸித்திகராநேக - ஸிக்ஷணாய நமோ நம:

அமானித்வாதி - முக்யார்த்த - ஸித்திதாய நமோ நம:

அகண்டைக - ரஸானந்த - ப்ரபோதாய நமோ நம:

நித்யாநித்ய - விவேக - ப்ரதாயகாய நமோ நம:

ப்ரத்யகேகரஸாகண்ட - சித்ஸுகாய நமோ நம:

இஹாமுத்ரார்த்த - வைராக்ய - ஸித்திதாய நமோ நம:

மஹாமோஹ - நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ - ப்ரத்யேக - த்ருஷ்டிதாய நமோ நம:

க்ஷயவ்ருத்தி - விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

தூலாஜ்ஞான - விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

மூலாஜ்ஞான - பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

ப்ராந்திமேகோச்சாடன - ப்ரபஞ்ஜனாய நமோ நம:

ஸாந்தி - வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

ஏககால - க்ருதாநேக - தர்ஸனாய நமோ நம:

ஏகாந்தபக்தஸம்வேத்ய - ஸ்வகதாய நமோ நம:

ஸ்ரீ சக்ரரத - நிர்மாண - ஸுப்ரதாய நமோ நம:

ஸ்ரீ கல்யாணதராமேய - ஸுஸ்லோகாய நமோ நம:

ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ - ப்ராபகாய நமோ நம:

அகிலாண்டேஸ்வரீ - கர்ண-பூஷகாய நமோ நம:

ஸசிஷ்யகண - யாத்ரா - விதாயகாய நமோ நம:

ஸாதுஸங்கநுதாமேய - சரணாய நமோ நம:

அபின்னாத்மைக்யவிஜ்ஞான - ப்ரபோதாய நமோ நம:

பின்ன - பின்ன - மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

தத்தத்விபாக - ஸத்போத - தாயகாய நமோ நம:

தத்தத்பாஷா - ப்ரகடித - ஸ்வகீதாய நமோ நம:

தத்ர தத்ர க்ருதாநேக - ஸத்கார்யாய நமோ நம:

சித்ரசித்ர - ப்ரபாவ - ப்ரஸித்திகாய நமோ நம:

லோகானுக்ரஹக்ருத்கர்ம - நிஷ்டிதாய நமோ நம:

லோகோத்த்ருதி - மஹத்பூரி - நியமாய நமோ நம:

ஸர்வவேதாந்த - ஸித்தாந்த - ஸம்மதாய நமோ நம:

கர்மப்ரஹ்மாத்மகரண - மர்மஜ்ஞாய நமோ நம:

வர்ணாஸ்ரம - ஸதாசார - ரக்ஷகாய நமோ நம:

தர்மார்த்தகாமமோக்ஷ - ப்ரதாயகாய நமோ நம:

பத-வாக்ய - ப்ரமாணாதி - பாரீணாய நமோ நம:

பாதமூல - நதாநேகபண்டிதாய நமோ நம:

வேதசாஸ்த்ரார்த்த - ஸத்கோஷ்டீ - விலாஸாய நமோ நம:

வேதசாஸ்த்ரபுராணாதி - விசாராய நமோ நம:

வேதவேதாங்கதத்வ - ப்ரபோதகாய நமோ நம:

வேதமார்கப்ரமாண - ப்ரக்யாபகாய நமோ நம:

நிர்ணித்ரதேஜோவிஜித - நித்ராட்யாய நமோ நம:

நிரந்தர - மஹானந்த - ஸம்பூர்ணாய நமோ நம:

ஸ்வபாவ - மதுரோதார - காம்பீர்யாய நமோ நம:

ஸஹஜானந்த - ஸம்பூர்ண - ஸாகராய நமோ நம:

நாதபிந்துகலாதீத - வைபவாய நமோ நம:

வாதபேதவிஹீனாத்ம - போததாய நமோ நம:

த்வாதஸாந்த - மஹாபீட - நிஷண்ணாயநமோ நம:

தேஸகாலாபரிச்சின்ன - த்ருக்ரூபாய நமோ நம:

நிர்மானசாந்திமஹித - நிஸ்சலாய நமோ நம:

நிர்லக்ஷய - லக்ஷய - ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

ஸ்ரீஷோடஸாந்த - கமல - ஸுஸ்திதாயநமோ நம:

ஸ்ரீ சந்த்ரஸேகர - ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்  படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.

ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.

செவ்வாய், 25 ஜூன், 2019

கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஸ்தல வரலாறு.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

கபாலீசுவரம் :  பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய "மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார்.

அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,

"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்''

என்று பதிகம் பாடினார்.

""மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.

யானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

தல வரலாறு: உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். "சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, "மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி "மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-

1. புரசைவாக்கம் (சென்னை) - கங்காதரேசுவரர் திருக்கோயில் 
   
2. சிந்தாதிரிப்பேட்டை - ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில் புரசைவாக்கத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருவல்லிக்கேணி - திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் சிந்தாதிரி பேட்டையிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

4.  திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி திருக்கோயில் (திவ்ய தேசம்) திரு வேட்டீஸ்வரர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.

5. மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் திருக்கோயில் (பதிவில் காணும் கோயில்) (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவல்லிக்கேணியிலிருந்து நான்கு  கி.மீ தொலைவில் உள்ளது.

6. மயிலாப்பூர் - வெள்ளீஸ்வரர் திருக்கோயில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

7. திருவான்மியூர் - மருந்தீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) மயிலாப்பூரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ் நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம். 
பகவதாஷ்டமி 25.06.2019 ஆனி தேய்பிறை பிறை வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்க்கும் அஷ்டமி விரதம்.


அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

* மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி

* தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி

* மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி

* பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

* சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி

* வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி

* ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி

* ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி

* ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி

* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி

* ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி

* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.

சிவபெருமானின்  அவதாரங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஒன்று. சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீபைரவர் அவதாரம் 64 வகைகள் உண்டு .

பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயிற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முழந்தாளில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். 

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை  மேற்கொள்வோம்.
தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் {சாதம்} போட ஏதாவது மந்திரம் உண்டா?

ஒவ்வொருவரும் தினந்தோரும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்து, வீட்டில் இருக்கும்பசு மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் வைக்கோல் முதலிய தேவையான உணவளித்து, பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் கொஞ்சம் சாதம் போட்டு விட்டுஅதாவது காக பலி ஸ்வான பலி, யாராவது தன் வீட்டிற்கு அதிதி {விருந்தாளி} வருகிறார்களா? என்று சிறிது நேரம் வாசல் பக்கம் பார்த்து விட்டு, பிறகு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும், அதில் மதியம் சாப்பிடும் முன்பாக காக்கைக்கு உணவளிக்கும் போது கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்...

ஸ்லோகம் –ஓம் ஐந்த்ர வாருண வாய்வ்யா:, ஸௌம்யா யாம்யாஸ்ச நைர்ருதா:
வாயஸா: ப்ரதிக்ருஹ்ணந்து பூமாவன்னம்  மயார்ப்பிதம்.

{இந்திரன், வருணன், வாயு, ஸோமன், யமன், நிர்ருதி மற்றும் இவர்களைச் சேர்ந்த வாயஸங்கள் அனைவரும் என்னால் தரையில் வைக்கப்பட்ட இந்த உணவை பெற்றுக் கொள்ளட்டும்.} என்னும் இந்த மந்திரம் சொல்லி காக்கைக்கு அன்னம் போடவேண்டும். வாயஸம் என்றால் காகம் என்று பொருள் அதனால் தான் சிராத்த பிண்டத்திற்கு வாயஸ பிண்டம் என்று பெயர் இவ்வாறே ஒவ்வொரு நாளும் இரவில் சாப்பிடும் முன்பாக

ஓம் ஸ்வாநௌ ஹி ஸ்யாம சப, லௌ வைவஸ்வத குலோத்பவௌ
தாப்யாமன்னம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதா மேதாஹிம்ஸதௌ

{கருப்பு நிறத்துடனும் பல நிறங்களுடனும் இருக்கும் வைவஸ்வத மஹாராஜாவின் குலத்தில் பிறந்த இரண்டு நாய்கள் {அரசர்} என்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். இவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்} என்னும் மந்திரம் சொல்லி நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாய் மற்றும் அதன் ஜாதியைச் சேர்ந்த எந்த ப்ராணியாலும் நமக்கு ஆபத்து நேராது. மேலும் காக்கைக்கு உணவளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்த்திரம்.
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

திங்கள், 24 ஜூன், 2019

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும் நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடா விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும் போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் தெற்கு  முகமாக பார்த்த படி தான் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி நடக்காமல் இருப்பது வேதனையான விஷயம் தான்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்த படி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்த படி 3 தடவை நீர் விடுதல் வேண்டும்.
பெண் வயது 18 - என் பொண்ணுப்யூர் வெஜிடேரியன். வெங்காயம் கூட எங்காத்துல இல்ல. பாவம், பி.இ. முடிச்சிட்டு அப்ராட் போனாள்னா என்ன பண்ண போறாளோ தெரியலை

பெண் வயது 21 - பொண்னு பிரமாதமா பாடுவா எட்டு வருஷம் சாங்கித்யம், பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்கே மூனு லட்சம் ஆச்சு, அவ்ளோ பிரமாதமா ஆடுவா.... எங்கப்பா வேத வித்து...ரிக் வேத உபாகர்....தாத்தா நித்ய அக்கினிஹோத்ரி....ஜாதகமா குவியறது, இப்ப ஒன்னும் அவ்ளோ அவசரம் இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிண்டு இருக்கேன்.

பெண் வயது 23 - தென்கலை வரன்லாம் கூட நெறைய வற்றது, நாங்கதான் வேண்டாம்னுடோம். வடகலைதான் வேணும்ண்டார் என் ஆத்துக்காரர்

பெண் வயது 25 - ஜாதகமா கொட்றது...நான் நீன்னு ஒரே போட்டா போட்டி, முந்தாநேத்து வந்த வரன் கூட நல்லா படிச்சிருக்கான் ஆனா ஒரு ஸ்மார்ட்னெஸ் இல்ல, மத்து மாதிரி இருக்கான்.

ஸ்மார்த்தாவாம் நமக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லிட்டோம். அட்லீஸ்ட் நல்ல ஐயாங்கார் வரனா பாருங்கோனுட்டோம்....எங்க பொண்ணு பி.இ. பையன் வெறும் எம்.எஸ்.ஸி அது ஒத்து வராது.

பெண் வயது - 28 - இத பாருங்கோ, பையன் நல்லா சம்பாதிக்கரான் ஓகே, ஆனா மாமனார் மாமியார் கூட இருக்கப்படாது, என்ன பன்றது அவள இண்டிப்பெண்டெண்டா வளர்ந்துட்டோம் ? இன்னைக்கு ஐ.டி. இண்டஸ்ட்ரில யார் பொட்டு வெச்சுக்கரா மாமி ? .... பையனுக்கு கூட பிறந்தவ ஆத்துக்காரர் வைதீகம் பன்றாராம் அந்த சம்பந்தம் வேணாம்.... பையன் இப்பதான் அறுபதாயிரம் வாங்கரானாம், சொத்துனு மடிப்பாக்கம் தாண்டி ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் வெச்சிருக்கா நமக்கு சரிப்பட்டு வராது.

பெண் வயது 31 - பையனுக்கு 34 ஆச்சாம், 3 வயசு வித்யாசம் வேண்டாம்னுட்டோம். மேக்ஸ்மிமம் 33 இருந்தா ஓ.கே. யு.எஸ் ஜாதகமா இருந்தா க்ரீன் கார்ட் இருக்கனும், ஏற்கனவே ட்ரம்பு துரத்திண்டிருக்கான்....வயசாறதுனு கண்டவனோட அனுப்பிட முடியுமா ?

பெண் வயது 34 - பையன் பேரு மைக்கலாம்... நல்ல டாலா ஹேண்ட்ஸம்மா இருக்கான். ஆன் சைட் பிராஜெக்ட் போயிருந்த போது இவளுக்கு பழக்கமாம். என்ன பண்றது மாமி அவ விருப்பம் முக்கியமோல்லியோ ? உலகம் இன்னிக்கு மாறிண்டே இருக்கே ? நாமதான் நெக்ஸ்ட் ஜெனரேஷனுக்கு ஏத்தா மாறி அட்ஜெஸ்ட் பண்ணிக்கனும். அவா வழக்கப்படி சர்ச்லதான் கல்யானம் பண்ணிக்குவேன்னுட்டா.....சரி விட்டு புடிப்போம் கொழந்தைக்கு என்ன தெரியும் ? மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ. மொத நா நீக்ரோ மாப்பிளைக்கு எங்காத்து வாத்யார் தலைமைல உபநயன பிரம்மோபதேசம் ஆறது. அவஸ்யம் வந்திருந்து நடத்தி கொடுக்கோணும்.
பிராமண கல்யாணங்களின் வருங்காலம் ?

நம் கலாசாரத்தின் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்கள் பலர் இந்தப் பிரச்னை காரணமாய் மனம் வெதும்பி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சமுதாயத்தில் ஒரு சுனாமியாய் உருவெடுத்துள்ள கலப்புத் திருமண பேரலையால் திணறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நாமும் நம் சுற்றமும் இந்த அலைக்கு மாளாமல் நம் சமுதாயதிற்கும் ஒரு நல்ல வழியைக் காட்டும் கம்பீரமான கலங்கரை விளக்கமாய் நிலைத்து நிற்பது எங்ஙனம் ? வாமனர் போன்று சில சின்ன சின்ன அடிகளை எடுத்து முன்வைத்தோமானால் அவையே நம்மை திரிவிக்ரமனாக்கி நம் இலக்கை எளிதாக அடைய வழிவகுக்கும்.

1. கலப்புத் திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வந்தால் அங்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அழைப்பு வைக்க வந்தவரிடமே நேர்முகமாக உங்கள் நிலையை கூறிவிட வேண்டும். உங்களுடைய இந்த நிலைப்பாடு உங்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்.

2. கலப்புமணம் செய்து கொண்டவர்கள் உங்கள் அலுவலகத்த்தில் அல்லது உங்கள் பிள்ளைகளின் வட்டத்தில் இருந்தால் அவர்களின் சங்கத்தை அலுவலக நிமித்தமாக மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நம் வீட்டிற்கோ விழாக்களுக்கோ சேர்த்துக்கொள்ளக் கூடாது.

3. வீட்டில் அனைவரும் பாழ் நெற்றியுடன் எப்போதும் இருக்கவே கூடாது. திருநீறு, திருமண், திலகம் தரிக்காமல் வெளியில் எங்கும் செல்லக் கூடாது. அதுவும் நெற்றியில் பளிச்சென விளங்கவேண்டும்.

4. அலுவலக நிமித்தமாய் பாண்ட்/ஷர்ட் அணிந்தாலும், வீட்டில் வேஷ்டி அணிவதை கண்டிப்பாக்க வேண்டும். சிறு குழந்தைகள் நீங்கலாக மற்ற எவரும் ஜீன்ஸ்/ஷார்ட்ஸ் அணியவே கூடாது. லுங்கி அணிந்த எவரையும் நம் வீட்டினுள் சேர்க்கக் கூடாது.

5. ஆண்கள் மீசை வளர்த்துக் கொள்வதையும், பெண்கள் தலைமுடி வெட்டிக் கொள்வதையும் தவிர்ப்பது உத்தமம். முழுவதும் சிகை வைத்துக் கொள்ள இயலாவிட்டாலும் சிறிய முடிச்சு போடும் அளவிற்காவது வைத்துக்கொள்வது நம் சம்பிரதாயத்திற்கு ஏற்றது

6. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சம்பிரதாய உடையான பஞ்சகச்சம்/மடிசார் கண்டிப்பாக அணிய வேண்டும்.

7. சந்தியாவந்தனம்/நித்யபூஜை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. எச்சில், பத்து, மடி, விழுப்பு, தீட்டு இவற்றில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது. இதற்கு விஞ்ஞான விளக்கம் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

8. முட்டாள் பெட்டியை முதலில் தூக்கி ஏறிய வேண்டும். அது பிரம்மண்யத்திற்கு முதல் எதிரி. சினிமா பற்றி எதுவும் கூறத் தேவையில்லை.

9. கோயிலுக்குச் செல்வதே நமது பொழுது போக்காக வைத்துக்கொள்ள வேண்டும். நம் ஆச்சார்யார்களை குடும்பத்துடன் தரிசனம் செய்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

10. குலதெய்வத்தின் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வதை ஒரு நியமமாய் வைதுக்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய வழிகளைப் பெரும்பாலும் பின் பற்றுவோர் குடும்பங்களுக்கு கலப்புமணப் பிரச்சினை அண்டாது. அதுவல்லாமல் ஏதேதோ காரணம் கூறி இவற்றைத் தவிர்க்கும் குடும்பங்கள் புதைச்சேற்றில் சிக்கின கதையாய் முடியுமேயன்றி வேறில்லை.
நமக்கு வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை கால்களால் எடுக்கவோ மிதிக்கவோ கூடாது. ஏனென்றால் தேவதைகள் அனைவரும் வஸ்திரத்தில் குடியிருப்பார்கள். வேதத்தில் வஸ்திரத்தை செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் வஸ்திரதம் மிகவும் மகத்தானது. கரையுள்ள வஸ்திரத்தை யாருக்கேனும் அளித்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமம். அதே போல் யார் கொடுத்தாரோ அவரும் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று ஸங்கல்பம் ஆகும். இதனால் தான் வஸ்திரத்தை தரும் பொழுது கரையில்லா வஸ்திரத்தை தரமாட்டார்கள். கரையுள்ளவையே தருவார்கள்.

"சர்வம் சிவமயம் ஜகத்" (நெசவு) துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும், நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆணிலும் பெண்மை உண்டு, பெண்ணிலும் ஆண்மை உண்டு. முன்பே அதனை கூறியது அறிவியல் அல்ல. முன்பே ஆன்மீகம் கூறிவிட்டது.(அர்த்த நாரீஸ்வரர் வடிவம் அதுதான்) வேட்டியோ புடவையோ, அவை இரண்டுக்குமே குறுக்கு நெடுக்கில் குட்டையான குறுக்கிழையும் உண்டு. நீண்ட நெடுக்கிழையும் உண்டு. இதனை நேரிழை என்பர். நேரிழை என்றால் பெண் என்று பொருள். (நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்,சீச்சீ இவையும் சிலவோ விளையாடி... மாணிக்க வாசகர். திருவெம்பாவையில்) ஆடையில் ஓடும் நீண்ட நூலிழை பெண். அதில் குறுக்கே ஓடும் குட்டை நூலிழை ஆண். (உலகியல் வாழ்வில் பெண்ணே அதிக பங்கு வகிப்பவள் என்பதை இது காட்டுகிறது. அதனால் தான் இல்லற வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்ணுக்கே முன்னுரிமை தருகிறார்கள். ("Ladies first"என்ற ஸ்லோகனை ஆங்கிலேயன் நம்மை காப்பி அடித்து பின்னால் சொன்னான். முதலில் அதை நாம் தான் சொன்னோம்) அப்படியானால் ஆணையும் பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்தது தான் இல்லற வாழ்க்கையா?ஆமாம் அது தான் உண்மை!. அதை கூறுவதே இந்த வேஷ்டி புடவை முதலான ஆடைகள். அதனால் தான் விழாக்களில் ஒருவருக்கொருவர் வேட்டி வைத்து தருவது. புடவை வைத்து தருவது. குறைந்த பட்சம் ஓர் ரவிக்கை பிட்டாவது வைத்து தருவது எல்லாம் வந்தது) ஆம்  உலகில் நெருக்கமாய் பின்னி பிணைந்த முதல் இண்டர் நெட் வலைத்தள சேவையே இந்த புடவை வேட்டிதான். அதனால் தான் பூர்வ அபர கிரியைகள் எல்லாவற்றிலுமே இந்த துணி என்ற பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் மிக அதிகமாய் உள்ளது. தானங்களில் வஸ்த்ர தானமும் இதனால் தான் வந்தது.

புதன், 19 ஜூன், 2019

அருணந்தி சிவாச்சாரியார்

இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.

இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.

மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்: பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர் தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்து கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும் அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார் இடையே குறுக்கிட்டு ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்து கொண்ட மெய்கண்டார். அவரை நோக்கி "நீர் நிற்கும் நிலை தான் அது" எனக் கூற அருணந்தியார் தனது தவறை உணர்ந்து மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.

நூல்கள்: மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர் அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு நிலத்திற்கு மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறை ஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.

காலம்: இவர் வாழ்ந்த காலம் பற்றித் தெளிவு இல்லை. து. அ. கோபிநாதராயர் என்பவர் கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இவருடைய குருவான மெய்கண்ட தேவர் கி.பி. 1232 ஆம் ஆண்டின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும் குறித்த கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளவர் சந்தான குரவரான மெய்கண்ட தேவர் தானா என்பதில் ஐயப்பாடு உள்ளது.
காஞ்சி மஹா பெரியவா ...

தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல் துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின் மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது?

இடது தோளில் பூணுல் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும் போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.

உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணி விடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை ஆராதிக்கும் போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். (பிராச்ஸினாவீதி) ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.

மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.

பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.

அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.


சனி, 1 ஜூன், 2019

இரண்டாம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.2ம் நூற்றாண்டு சிவலிங்கம்! கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.நூற்றாண்டு சிவலிங்கம்!