செவ்வாய், 19 மே, 2020

*சாளக்கிராம  நித்ய பூஜா !*

              *கண்டகி  நதியில்  கிடைக்கும்  சாளக்கிராம  கற்கள்  மிகுந்த  புனிதம் வாய்ந்தவை.* இவைகளையே  தெய்வ  ஆராதனைக்கு  பயன்படுத்துகிறோம். சிவ, விஷ்ணு , நரசிம்ம .......என  பலவாறாக  சாளக்கிராம  கற்கள்  கிடைக்கின்றன.  உங்களின்  ஆராதனை  தெய்வத்திற்கு  ஏற்றாற்போல  தேர்ந்தெடுத்து   நித்ய  பூஜை   செய்வது  சாலச்சிறந்தது.

             சாளக்கிராமக்   கற்களில்   இயற்கையாகவே  நம்முடைய   ஆராதன மூர்த்தி   இருப்பதால்,  அதற்கு   சங்கல்பம்,  ஆவாஹனம் , விசர்ஜனம் .....போன்றவைகள்   செய்வதில்லை.  அவைகள்  சுயம்பு  மூர்த்திகளே ................

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.
1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.
2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.
3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.
4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.
6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.
7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.
8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்
9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்
10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்
14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்
15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்
17. புருஷோத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்
18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்
19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்
20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்
21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்
22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்
23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்
24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.

  *மிகவும்   எளிமையாக  அவற்றுக்கு  பூஜை  செய்யும்  முறையைக்   காண்போம் :*

          1. பன்னீராலும் ,
          2. பச்சைக்கற்பூரம்   கலந்த   நீராலும்,
          3. பாலாலும்,
          4. சந்தனத்தால்,
          5. அபிஷேக மஞ்சள் , 
          6.  கரும்புச்சாறு  (இருந்தால்) ,
          7. அபிஷேக  திரவியப்பொடி  கலந்த   நீர்,...........
          8.  நெய் , தேன் மற்றும்   தயிராலும்,
          9.  விபூதி  கலந்த   நீராலும்,
        10.  கங்கை  நீராலும் ..................

      அபிஷேகம்   செய்யலாம்.  அவ்வாறு  செய்யும் பொழுது,  ஸ்ரீ ருத்ரம்  மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு  சூக்தம், நாராயண  சூக்தம் , துர்கா  சூக்தம் ) பாராயணம்   செய்யலாம்.

          இவற்றுடன்  அந்ததந்த  உபாசனை   மூர்த்திகளின்  ஸஹஸ்ரநாமங்களோ,  அல்லது  அஷ்டோத்ரங்களோ  பாராயணம்  செய்யலாம்.  மேலும்  விருப்பமான  ஸ்துதிகள்,  ஸ்தோத்ரங்கள்   பாராயணம்  செய்வது   சாலச்சிறந்தது.

         அபிஷேகம்  முடிந்தவுடன்  மடி  வஸ்திரத்தால் (தூய்மையான  துணியால் )  துடைத்து  சந்தனம், குங்குமம் ....விபூதி  இட்டு ,.......ஆசனம், பாத்யம்,  அர்க்யம் , ஆசமனம்   செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால்  அர்ச்சித்து ,  தூப , தீப ,நைவேத்யம்   செய்து.........

       ஸ்நானம்,  கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம்   என  பூஜா  புத்தங்களில் விவரித்துள்ளதை  போல  அர்ச்சனைகள்  செய்து ஆனந்திக்கலாம்.

      சாளக்கிராமம்   உள்ள  வீடு  பாடல் பெற்ற   தலத்தின்  சிறப்பினைக்  கொண்ட புண்ய  க்ஷேத்ரம். 12  சாளக்கிராமம்  கொண்ட  வீடு  ஒரு  திவ்ய தேசம்
ஆகும்.  அங்கு  லக்ஷ்மி  நித்ய வாசம்  செய்கிறாள். மேலும்   பாவங்கள்  குறைந்து  அழிந்துவிடும்.     

            *மஹாபெரியவா   ஒருமுறை,  " எங்கு   சாளக்கிராம  பூஜை  நடைபெறுகிறதோ,  அங்கு   ஒரு  குறையும்  வருவதில்லை.*  அதைச்சுற்றி  சுமார்  2km  தூரத்திற்குள்  உயிர் விடும்  எந்த   உயிரினமும், அதன்  கடைசி   நேரத்தில்  அந்த  புண்ணிய  பூஜையின்  அதிர்வுகளை  பெற்று.........வாசனைகளும்  வினைகளும்   குறைந்து   சாந்தியாக,  அமைதியடைந்து   அதனால்   அதன்  மறுபிறவி  மிக  சிறந்ததாக  அமையப்  பெறுகின்றன " என்று   கூறியதாக  கேள்விப்பட்டோம். மேலும்  அந்த   வீட்டிலுள்ளோர்கள்  கொடிய  மரணம் , மோசமான  விபத்துகள் ,  துர்மரணம்   போன்றவை   சாளக்கிராம  பூஜை  நடைபெறும்   வீட்டில்  நிகழ்வதில்லை.

       தமிழ்   திருமுறைகள் , திவ்யப்  பிரபந்தங்கள்  முதலியன   பாடி , அபராத  சமரோபணம்  செய்து,  நமஸ்கரித்து,...........
அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய  பிரசாதம் வீட்டில்  எல்லோருக்கும்  கொடுத்து, நாமும்   தீர்த்தம்  பருகி , பிரசாதம்  உண்டு .....  பூஜையை   முடித்துக்  கொள்ளலாம்.

*ஓம் நமோ நாராயணாய  !*
*மதுரை மீனாக்ஷி அம்மன் பற்றிய தனிசிறப்புகள்.*

மதுரையின் அரசி மீனாக்ஷி ..!

மீனாக்ஷி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும்., ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாக்ஷி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு மீனாக்ஷி அம்மனை (அம்பிகையை) முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு. இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.

தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாக்ஷி. நவராத்திரி நான்காம் நாள் அன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாக்ஷி மீனாக்ஷி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

மதுரையில் மீனாக்ஷி தினமும் எட்டு (ஏழு) விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
இந்த எட்டு (ஏழு) வித ஆராதனை.

*திருவனந்தல் ~ பள்ளியறையில்* – மஹா ஷோடசிப்ராத சந்தியில் – *பாலா*

6 முதல் ~ 8 நாழிகை வரையில் – *புவனேஸ்வரி*

காலையில் (பூஜை நேரத்தில்) – *மீனாக்ஷி*

12 முதல் ~ 15 நாழிகை வரையில் – *கெளரி*

மத்தியானத்தில் (உச்சி காலத்தில்) – *சியாமளா*

சாயரக்ஷையில் (சாயம் சந்தியா காலத்தில் – *மாதங்கி*

அர்த்த ஜாமத்தில் (இரவு பூஜை நேரத்தில்) – *பஞ்சதசி*

பள்ளியறைக்குப் போகையில் – *ஷோடசி*

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது., அவளுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது.
மாலை நேரத்தில் தங்க கவசம்., வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள்.

அதிகாலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம்., காலை வேளையில் குமரியாக., உச்சி காலத்தில் மடிசார் புடவையுடன்., இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்பது சத்தியம்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை., பால்., பழங்கள்., பாடல்கள்., வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடை பெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

பிள்ளை இல்லாதவர்கள்
காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.

வியாபார நஷ்டம் தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.
இதையெல்லாம் விட தாயை இந்த எல்லா அலங்காரத்திலும் நாம் காண என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!

முடிந்தவர்கள் ஒருமுறையாவது மதுரை சென்று மீனாட்சியை நேரில் தரிசனம் செய்யுங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகத கல்லிலால் ஆனது.

கருவறை பக்கம் நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்க மாட்டார்கள். கல் என்றாலே கடினமானது என்று சொல்வார்கள். ஆனால் மரகத கல் மிக மென்மையானது. நாதஸ்வரம்., மேளம் போன்ற இசை கருவிகளை இசைக்கும் போது வரும்/எற்படும் ஒலி அதிர்வுகளை கூட தாங்கி கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட ஒரு கல்லை (ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத) உளியால் செதுக்கி மீனாட்சி அம்மன் சிலை செய்து இருக்கிறார்கள் என்றால்., நம் சிற்பிகள் எவ்வளவு திறமையானவர்கள் அதுவும் எந்த தொழில் நுட்ப கருவியும் வசதியைம் இல்லாத காலத்திலேயே…

நம் தமிழர்களின் கலையை போற்றுவோம்…

என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்….
தாயே த்ரிபுர சந்தரி. பால த்ரிபுர சுந்தரி தாயே...லலிதையே..

உன் அழகினை நான் கண்டேன் காண மனம் ஆனந்த கூத்தாடுகிறதே பாலா த்ரிபுர சுந்தரி தாயே.

நன்னா அழகா வகிடு எடுத்த கூந்தல்,

சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி,

அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,

புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,

குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி,

அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,

அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,

பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும்,

அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,

குறு நகை செய்யும் குட்டி வாய்.....

இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ

அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம் !!

சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடிவந்து செல்ல மகளாக வந்து நிற்கும் அம்பிகே ... உன்பேர் சொல்ல சொல்ல இனிக்குதடி அம்பிகே ... ஜகதம்பிகே... தாயே..தயாபரி.
#நிர்வாண_ஷட்கம்

வீட்டைத் துறந்து தன் குருவைத் தேடிப் பயணித்த இளம் சங்கரன், இமாலயத்தின் அடியில் பத்ரிநாத்தை அடைந்தபோது எட்டே வயது பாலகன்.

ஆச்சார்யர் கோவிந்தபாதரைச் சந்தித்த சங்கரன் அவர் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தபோது “நீ யாரப்பா?” என்று கேட்ட ஒரு கேள்விக்கு, அந்தச் சீடனே ஒரு குருவோ என்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய அந்த ஆறு ச்லோகங்களும் “நிர்வாண அஷ்டகம்” என்று பெயர் பெற்றன.

ஆறு ச்லோகங்களும் ஒரு துள்ளும் இளங்கன்றின் வேகத்துடனும், முதிர் ஞானம் பெற்ற ஒரு துறவியின் ஆழத்தோடும், ஓடும் நதியாய்ப் பெருக்கெடுத்துச் செல்கிறது.  

நிர்வாண ஷட்கத்தை இதற்கு முந்தைய தலைமுறையினர் கோயில்களில் பாடக் கேட்டிருக்கலாம். வீடுகளில் பாடப்பட்டன. பிறகு இசைக் கருவிகள் பாடின. இப்போதோ நிர்வாண ஷட்கம் இயற்றப்படுவதற்கு முந்தைய பெருத்த நிசப்தம் நம் ஆலயங்களை,வீடுகளைப் பீடித்திருக்கின்றன.

பற்றையும், பற்றின்மையையும் போதனையாய் ஒருங்கே நினைவுறுத்தும் இந்தப் பொக்கிஷத்தை நம் வீடுகளில் ஒலிக்கச் செய்வோம். குழந்தைகளின் காதுகளில் இவை ஒலிக்கட்டும். இவற்றின் பரிச்சயம் அவர்களின் செவிகளுக்கு உண்டானால், அதன் பொருளை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வார்கள்.

இனி #நிர்வாண_ஷட்கம்:

1.
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

2.
ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச:
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

3. 
ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ: 
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை; 
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை; 
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

4. 
ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்! 
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ: 
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா, 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை; 
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை; 
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

5. 
ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத: 
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா 
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை; 
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

6. 
அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ, 
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம் 
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை; 
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே; 
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
அவள் தான் அழகுக்கும் அழகு ஆனால் உதாரணம் சொல்லாமல் அவளுடைய அழகை உணர்ந்து ரசிக்க முடியாதே. இதோ உதாரணத்துடன்.

வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவனுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான். அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம்.

இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.
#காமாக்ஷி_கடாக்ஷி 2

தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளே காமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.

இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.

ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.

அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.

காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.

'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,

'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.

வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.

ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).

பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.

மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம்.

கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர். 

வளரும்

இது மதுரையம்பதி இணையதள பதிவு 2011.
#காமாக்ஷி 
#என்ற_நாமாவின்_அர்த்தம்.

1. #காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால்
#இவள் "#காமாக்ஷி".

2. #நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் #இவள் "#காமாக்ஷி"

3. #கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச் (அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த #மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள்.

4. #கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் #நேத்ரங்களாய்_உடையதால் இவள் "காமாக்ஷி"

5. காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் #ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் !
#இவள் "#காமாக்ஷி"

6. காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு #அக்ஷரங்களையும் #கண்களாககொண்டதால் இவள் "காமாக்ஷி"

7. கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, #பார்வதியாக #விளங்குவதால் இவள் "காமாக்ஷீ"

8. கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ #மஹாமந்த்ரத்தை தனது #கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி"

9. கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான #லலிதாம்பாளே 
தனது பஞ்ச ரூபங்களான "#த்ரிபுரா", "#ராஜராஜேச்வரீ", #மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால்
#இவள் "#காமாக்ஷி".

10. தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், #ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால்
#இவள் "#காமாக்ஷீ".

11. தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், #ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

12. தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ"

13. தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

14. தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி".

15. தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி".

16. தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி".

"காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றது.

#காமாக்ஷி_கடாக்ஷி.!
சிந்தூர  அருண விக்ரஹாம்..

இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அப்பொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.

அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள் என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவள் சிகப்பு வர்ணத்தில் ."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்பு வடிவம் கொண்டாள்.

அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்.

தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.

இதே ஸ்ரீசூக்தத்தில் ஹிரண்ய வர்ணாம் அப்படின்னே ஆரம்பிக்கறது.

இதே போல இன்னும் சில சூக்தங்களில் வேறு நிறம்.

எப்படியெல்லாம் நினைக்கிறோமோ வணங்குகிறோமோ அப்படியெல்லாம் தோன்றுகிறாள் பராசக்தி, இல்லையா.

மேலும் அவள் அருள்  கிட்டிட...... அவள் நாமம் உரைப்போம்.

லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே ! சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான்.

ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.

முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.

சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா சித் என்பது  உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம்."சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம், அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார்.அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.

தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்.

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!

கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம். அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள்.  அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம். மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும். கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.

முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது.

மறுமுறை படியுங்கள்

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!

தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!

தேவியின் முகம் தெரியும்.

அவள் உங்களுக்கு அருள் புரிய சிரிப்பாள்.

4 வது வரியிலிருந்து 20ஆவது வரி வரைக்கும் லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனைதான். அதிலிருந்து ஒரு வரியைப் பார்க்கலாமா !

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா

அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்கும். சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது.அதுதான் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது. எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன் மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்.

குமார் ராமநாதன்.
ஆதிபராசக்தி அகிலம் தழைக்கவும் அகிலத்தில் வாழும் மக்களைக் காப்பதற்கும் ஆயிரமாயிரம் வடிவங்களோடும் ஆயிரமாயிரம் நாமங்களோடும் மண்ணுலகில் அவதாரம் எடுத்தார்கள்.

மண்ணுலகில் தோன்றியபோது, தமக்கு உறுதுணையாகவும் உதவி செய்வதற்கும் தம் சக்தியில் இருந்து ஏழு சக்திகளை தோற்றுவித்தார்கள். அவர்களையே சப்த மாதாக்கள் என்றும் சப்த கன்னியர்கள் என்றும் சப்த தேவிமார்கள் என்றும் அழைக்கிறோம்.

சப்தம் என்றால் ஏழு, மாதாக்கள் என்றால் தாய்க்கு சமமான தேவியர்கள், தம் சக்தியால் எழு அம்சங்களாக, ஏழு தேவியர்களை தோற்றுவித்தார்கள்.

மகேசனின் அம்சமான மகேஸ்வரி; விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவி; பிரம்மனின் அம்சமான பிராமி; இந்திரனின் அம்சமான இந்திராணி; முருகனின் அம்சமான கௌமாரி; வராக வடிவான வராகி; காளி வடிவான சாமுண்டி ஆகியோர் சப்த மாதாக்களாக திகழ்கிறார்கள் என்று தேவி பாகவதமும் சக்தி புராணமும் கூறுகிறது.

சப்த மாதாக்கள் எழுவருள், இம்மை, மறுமை ஆகிய பயன்களை அருள்பவள்  மகேஸ்வரி, சுமங்கலி வரத்தையும் செல்வத்தையும் தருபவள் வைஷ்ணவி. கல்வி ஞானத்தை அளிப்பவள் பிராமி. வீரத்தையும் ஞானத்தையும் அளிப்பவள் கௌமாரி. பெரும் பதவி, புகழ், திருமணப்பேறு அருள்பவள் இந்திராணி. வீரத்தை அளித்து பகைவரை அழிப்பவள் வராகி. நீதியை காப்பாற்றி வழக்குகளில் நியாயமான வெற்றிகளை வழங்குபவள் சாமுண்டி. இப்படி, ஒவ்வொரு விதமான செயல்பாட்டையும் ஏற்று அனைவருக்கும் அருள்பாலித்திடுவாள் ஆதிபராசக்தி.

தமிழகத்தின் கிராமங்களில் கிராமங்கள்தோறும் கிராம தேவதை, கிராம காவல் தெய்வம், கிராம எல்லையம்மன், கிராம குலதெய்வம் என்று அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனோடு சப்த மாதாக்களும் இருப்பார்கள் அல்லது தனி சந்நிதியிலும் இருப்பார்கள். சப்த மாதாக்கள் இல்லாத கோயில்களில் ஏழு கற்களை நட்டு அலங்காரம் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

சப்த மாதாக்களை ஏழு கற்களை நாட்டி வழிபடுவதோடு மேலும் ஏழு கற்களை நட்டு பூஜைகள் செய்து அண்ணன்மார்களாக வழிபடுகிறார்கள். சப்த மாதாக்களின் துணைவர்களே அண்ணன்மார்களாகச் சொல்லப்படுகிறது. இந்த தேவியரை வழிபடுவதால் உலகமும் மக்களும் சுபிட்சமாக வாழலாம்.

சப்த மாதாக்கள் வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. பல்லவர் காலத்திற்கு முன்னதாகவே சக்தி வழிபாட்டில் சப்தமாதர் வழிபாடு மிக சிறப்பாக இடம் பெற்று இருந்ததை "சக்தி வழிபாடு' என்னும் அரிய நூல் சிறப்பாக தெரிவிக்கிறது. அந்த வகையில் பல்லவ பேரரசனான
நந்திவர்மனால் கட்டப்பெற்ற பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் அற்புதமானது.

கருவறையில் அம்மனோடு சப்த மாதாக்களும் அமர்ந்து அருள்புரிகின்றனர். அம்மன் கோயிலுக்குள்ளே சிறிய சந்நிதியில் சப்த மாதாக்கள் துணைவர்களான சப்த அண்ணன்மார்கள் எழுவரும் காட்சி அளிக்கின்றனர். அண்ணன்மார்கள் எழுவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

தேவாரத் தலமான கருவூர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானோடு கருவறையில் சப்த கன்னியர்கள் சிவலிங்கத்திற்கு பின்புறத்தில் அமர்ந்து காட்சி அளிக்கின்றனர்.

அற்புதமான கடம்பவனேஸ்வரரை வணங்கி வழிபட்டால் கடலளவு துன்பத்தையும் போக்கி சுபிட்சத்தை தந்து அருளுகிறார். இதுபோன்ற அமைப்புள்ள கோயில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. மேலும் அம்மன் கோயிலான பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயத்தில் இந்த அமைப்பைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டு காலமாக வரலாற்று தடையங்களைச் சுமந்து நிற்கும் பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் கொரட்டூர் அக்ரகாரம் ஏரிக்கரை ஓரத்தில் இயற்கை எழியோடும் அமைதியான சூழலில் ஏகாந்த நிலையில் அமைந்துள்ளது.

கோயில் செல்ல: சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கம் கொரட்டூர் ரயிலடியில் இருந்தும் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் 11/2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் செல்லும் 100 அடி சாலையில் கொரட்டூர் அக்ரகாரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 11/2 கி.மீ. தொலைவில் கோயிலைச் சென்றடையலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை. மீண்டும் 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

சப்த மாதாக்கள் காயத்ரி.

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!