புதன், 30 செப்டம்பர், 2020

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை




உலகப்புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி சிவ பெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம். இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடை பெறுகின்றன

காமாக்ஷி அம்மன் கோவில்.

காமாக்ஷி அம்மன், காஞ்சிபுரம்

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.


தெரிந்து கொள்வோம்

 தெரிந்து கொள்வோம்  !!

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம். 


2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்.


3. ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.


4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

 
5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம். 


6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம். 


7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.


8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ர

னுக்கு புத்ரன் பிறந்தால்.
9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

 
10. பூர்ணாபிஷேகம் = 100 ஆவது வயதில் சுபதினத்தில்.