வியாழன், 26 செப்டம்பர், 2019

16:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

              16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                               (கி.பி. 329 -கி.பி.367 வரை)

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர்.இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர்.பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம்"அச்சுத கேசவர்"இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர்.அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர்.ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி"எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும்படி கட்டளை பிறப்பித்தார்.பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர்.இவர் கி.பி. 367ஆம் ஆண்டை,அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம்,அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி'என்னுமிடத்தில் சித்தி அடைந்தார்.அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.
ஸ்வஸ்தி வாசனம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ததந்தே அதிஸ்ட்டானே சிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் ஜயேந்த்ர சரஸ்வதீ ஸம்யமீந்த்ரானாம் ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் அந்தே வாஸிவர்ய சங்கர விஜயேந்த்ர சரஸ்வதீ பாதானாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 44 ॐ

இந்தக் கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர மற்றப் பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள் மடப்பள்ளிச் சமையல்காரர்கள் சுத்தம் செய்பவர்கள் மற்றப் பணியாளர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள்  இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து உணவு கொடுத்து வந்த பழக்கம் போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும் தற்காலத் தேவையை அனுசரித்து அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும் வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர். ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் "தேவசபை" அல்லது "கல்யாண மண்டபத்"தில் ஏற்பாடு செய்யப்படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். கனகசபையிலிருந்து ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப்படுகிறது. அந்த விளக்கு வந்தாலே நடராஜரே நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது. அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக்களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப்படுகிறது. ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம் எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப்படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப்படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள் கோவிலின் தினசரி பாதுகாப்பு இரவு பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1. நடராஜர் கோவில், 2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப்பட்ட தீட்சிதர் குழு எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும். அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி முறையில் எந்த விதமான வருத்தமோ தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும் பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ