பயனுள்ள இணையதள முகவரிகள்
நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்
01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 23 நவம்பர், 2020
பயனுள்ள தகவல்கள்
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள் சிவபூஜை செய்து வந்தனர். இவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் ஆனார்கள். ஒரு சமயம் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சுவாமி! தாங்கள் அறிவற்ற பன்றிகளுக்கு கூட உணவுடன் ஞானத்தையும் ஊட்டிய காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றாள். தேவி! அறிவுள்ளவன், அறிவற்றவன் என்ற பேதம் மனிதர்களுக்கு மட்டுமே, எனக்கில்லை. எல்லாரும் எனக்கு ஒன்று தான். அதனால் தான் பசியால் கதறியது பன்றிகள் என்றாலும் கூட திருவருள் புரிந்தேன். அதனால் அப்பன்றிக் குட்டிகள் அளவில்லாத வலிமையையும், வெற்றியையும் கல்வி முதிர்வையும், ஞானத்தையும் பெற்றுக் கொண்டன. இனிமேல் அவர்கள் தங்கள் அறிவால் பாண்டியனின் அமைச்சர்களாவதுடன் சிவகணங் களாகும் பேறையும் பெறுவார்கள், என்றார் சுந்தரேஸ்வரர். அன்றிரவில், ராஜராஜப் பாண்டியனின் கனவில் தோன்றிய அவர், பாண்டியனே! பன்றிமலையில் வசிக்கும் பன்னிரு அறிவுஜீவிகளை உன் அமைச்சரவையில் சேர்த்துக் கொள், என்றார். மறுநாளே, சுவாமியின் விருப்பப்படி பன்றிமலையில் இருந்து அவர்களை வரவழைத்தான் மன்னன். அவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததுடன், முந்தைய அமைச்சர்களின் புத்திரிகளையும் திருமணம் செய்து வைத்தான். பன்றிமுக வீரர்கள் பன்னிருவரும், பாண்டியனுக்குக் கவசமும் கண்ணும் போல் விளங்கினர். பன்னிரண்டு உடலுக்கும் ஓர் உயிரே என அனைவரும் கூறும்படி ஒற்றுமையாக இருந்தனர். பன்னிருவரும் ஈகையும், அறமும், புகழுமள் பாண்டியனுக்குப் பெருகுமாறு எட்டுத் திக்கிலும் வெற்றியுண்டாகச் செய்து வாழ்ந்திருந்தனர். அவர்கள் பலகாலம் பாண்டியனுக்கு உதவியாகச் செயல்பட்டு சிவபதவி பெற்றனர். இந்நிலையில் ராஜராஜனும் இறைவனடி சேர்ந்தான்.
ராமாயணம் பகுதி மூன்று
ராமாயணம் பகுதி மூன்று
தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில் குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர மகரிஷியை வரவேற்றார்.
வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள். ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில் தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார். இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது! விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான் தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன், செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.
தசரதா! நான் உலக நன்மைக்காக கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான், விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில் இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன் ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.
முனிவரே! வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன். வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில் உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன் ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால் முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா? விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார். விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார். தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான். அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து, இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன் அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன் ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.
ராமாயணம் பகுதி இரண்டு
ராமாயணம் பகுதி இரண்டு
குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில் சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும் கவலையை எழுப்பியது. இந்நேரத்தில் ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார். வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை ஏதும் படவேண்டாம். ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும் இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.
தசரதர் மகிழ்ந்தார். வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின் நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும், அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால் நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக் கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார் கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ் பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள் கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் தவறிவிட்டான்.
பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும். அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம் திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம், ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது. வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.
அவ்வுருவம் தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான் கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப் பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம் செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப் பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார். மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான் பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில் கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது. அவளால்தான் ராமாயணம் என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும் கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.
அருள் மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
மூலவர் : காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன் : துங்கபாலஸ்தானம்பிகை
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : கஞ்சாநகரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
சிறப்பு : சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள் அறுவரும் இங்கு அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட்-609 304 தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91 4364- 282 853, 94874 43351
பொது தகவல் : கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும். கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
பிரார்த்தனை:கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபாடு செய்கிறார்கள். சொத்து தகராறு, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
பெருமை:கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்தல வரலாறு : பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும் படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.
சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?
சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும் போது நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம். நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம் சேர்க்கை பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம் ஸம்யோக பலம் த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால் கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்.
நவக்கிரகங்களை தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால் நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்) மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது. இதை கவனித்த நாரதர் இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக இராவணன் சபைக்கு வந்து ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர் ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால் இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான். தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும் போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.
மகா லக்ஷ்மி வாசம் செய்வது எங்கே?
மகா லக்ஷ்மி வாசம் செய்வது எங்கே?
பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால் காலையிலோ மாலையிலோ இதற்கென்று சிறிது நேரம் ஒதுக்கி இறைவனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால் பூஜை செய்வதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில் உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர் அப்படி பூஜை செய்த போது இல்லாத பொருளுக்கெல்லாம் அதன் பெயரைச் சொல்லி அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர் சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும். இவர் தான் எல்லாவற்றுக்கும் பதிலாக அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும் தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி தட்சணைக்கு பதிலாக அட்சதையை நீட்டினாராம் பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அது தான் எல்லாவற்றுக்கும் பதிலாக அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால் இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது துர் தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவர். சிலர் மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக சிலர் படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.
இல்லத்தரசியானவள் காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து நெற்றிக்கிட்டு தலையை கோதி வாசல் பெருக்கி கோலமிட்டு வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி நமஸ்காரம் செய்து முடிந்தால் இரண்டு பூவை போட்டு அதற்கு பின் தான் காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன் வீட்டில் வேத கோஷம் துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில் முடிந்தால் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும் கன்றுக்கும் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால் இதையெல்லாம் செய்யலாம்.
சாஸ்தா நம் {லோக வீரம்}
லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம் ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம் கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
7. சில வீர்ய க்ஷமுத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம் சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)
11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே
(ஸ்வாமியே சரணம் ஐயப்பா)…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா இன்று வீர சாஸ்தா
சங்கரர் தொழும் சாஸ்தா
கேரளத்தில் அவதரித்தவர் ஸ்ரீசங்கர பகவத் பாதர்கள். ஐயப்ப சாஸ்தா அரும்புகழ் பெற விளங்குவதும் கேரளத்தில் தான். சகல தெய்வங்களையும் போற்றித் துதி செய்த ஆசாரியர் சாஸ்தாவை ஏத்தி தோத்தரித்திருக்கிறாரா? சிவானந்த லஹரியில் பாணத்வம் என்று தொடங்கும் ச்லோகத்தில் திருமால் சிவபெருமானிடம் எத்தனை விதங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று ஆசாரியர் எடுத்துரைக்கிறார். அதிலே முதலில் அர்த்த வபுஷா பார்யா த்வம் ஆர்யாபதே என்றும் பின்னர் ஸகிதா என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. முதலில் சொன்னதற்குப் பொருள் ஆரியை எனும் அம்பிகையின் பதியான சிவனின் பாதி உடலைத் திருமால் பெற்றிருப்பதால் திருமால் சிவனுக்கு மனையாளாகிறான் என்பதாகும். அர்த்த நாரீஸ்வரக் கோலத்தில் எந்த இடப்பாதியில் அம்பிகை இடங்கொண்டுள்ளாளோ அதே பாதியில் சங்கர நாராயணக் கோலத்தில் திருமால் விளங்குகிறான்.
எனவே அவனே சக்தி வடிவினன்; அதாவது சிவனின் பத்தினி ஆகிறான். இங்கே சங்கர நாராயண வடிவை மட்டுமின்றி திருமால் மோகினியாக வந்து மோன சிவனை மோஹிக்கச் செய்து அவனுக்கு நாயகியாகி ஐயப்பனைப் பெற்றெடுத்ததை வெகு அற்புத ஸூக்ஷ்மச் சுருக்கமாக ஸ்ரீசங்கரர் சுட்டிவிடுகிறார் ஆர்யாபதே! என்று பரமேச்வரனை அழைப்பதன் மூலம். அம்பிகைக்கு எத்தனையோ பேர் இருக்க ஆர்யா என்கிறார். புருஷ தெய்வங்களுள் ஆர்ய என்ற பெயர் சாஸ்தாவுக்கே உள்ளது. கேரளத்தில் அவர் இருப்பது ஆரியங்காவு. மஹாவிஷ்ணு பரமேஸ்வரனுக்குப் பத்தினி ஸ்தானத்தில் இருந்த போது ஆரிய சாத்தனை ஈந்ததைச் சுட்டவே இங்கே அம்பிகைக்கு ஆயிர நாமமிருக்க, ஆரியா நாமத்தைச் சொல்லி, ஆர்யா பதே என்று ஆர்யாம்பாளின் புதல்வரான ஆசாரியர் ஈசனை விளிக்கிறார் எனத் தோன்றுகிறது. பின்னால் ஸகிதா என்று வருவதில் இந்த மொட்டினை மேலும் சற்று இதழ் விரித்துக் காட்டுகிறார். ஸகிதா என்றால் தோழியாயிருக்கும் தன்மை. மோகினியாக வந்த சமயத்திலன்றி வேறெப்போது திருமால், ஈசனுக்குத் தோழியாக இருந்திருக்கிறான்? சிவபெருமானைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வருணித்து சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என பகவத்பாதர் அருளியிருக்கிறார். அதில் முதலில் ஈசன் வாஸம் செய்யும் கைலாஸத்தையும் அவனது திவ்யாயுதங்களையும் வாஹன ரிஷபத்தையும் தோத்தரித்து விட்டு சிவ குமாரர்களை தலைக்கொரு ஸ்லோகத்தால் போற்றுகிறார். இங்கே தான் ஆனைமுகனையும் ஆறுமுகனையும் துதித்தபின் ஒரு முழு ஸ்லோகத்தால் ஐயப்பனை வாழ்த்தி வழிபடுகிறார்.
ஆரூட - ப்ரௌட - வேக - ப்ரவிஜித - பவநம்
துங்க துங்கம் - துரங்கம்
சேலம் நீலம் வஸாந : கர - தல - விலஸத்
காண்ட - கோதண்ட - தண்ட :
ராக - த்வேஷாதி - நாநாவித - ம்ருக - படலீ
பீதி - ஹ்ருத் பூத - பர்த்தா
குர்வந் - நாகேட - லீலா மதிவஸது மன
கானனே மாமகீனே
காற்றையும் வெல்லும் வேகம் வாய்ந்து, ஓங்கி வளர்ந்ததொரு புரவியின் மீது ஐயப்ப ஸ்வாமி ஆரோஹணித்திருக்கிறான். நீல ஆடை பூண்டிருக்கிறான். கையிலே அம்பும் வில்லும் ஒளிர்கின்றன. (காண்ட என்றால் அம்பு எனும் பொருள் கொண்டால், காண்ட கோதண்ட என்பது அம்பும் வில்லும் என்றாகும். காண்ட எனில் கரும்பு என்றும் கொள்ளலாம். அப்படியாகில் காமாக்ஷி போலவே சாத்தனும் கரும்பு வில்லோனாக சங்கரருக்குக் காட்சி தந்ததாகும்.) விற்கையனாக விசைப்பரியேறிச் செல்வது வீரக்கோலம். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரனாகக் காடு சென்றதே போன்ற தோற்றம். ஆனால் இது மூல ஐயப்பனின் அவதாரத்திலே காணும் நிகழ்ச்சியே. ஆசாரியர் மூல ஐயப்பனை நினைத்தே துதிக்கிறார் எனக் கொண்டால், சிவ கணத் தலைவனாக அவன் வேட்டைக்குச் செல்வதைச் சொல்கிறாரென்று ஆகும். பூத பர்த்தா என்று அவர் சொல்வது, ஈசனின் பூதப்படைக்கு நாயகன் சாஸ்தாவே என்று அவர் கருதுவதைக் காட்டுகிறது. மூத்த பிள்ளை கணபதியை நாம் சிவ ஸேனா நாதனாக எண்ண, ஆசாரியரோ மூன்றாம் பிள்ளைக்கு இவ்வுயர்வைத் தருகிறார். (மலையாளத்தில் பூத நாதன் என்று ஐயப்பனைக் குறிப்பிடுதுண்டென்றும், மக்களும் அப்பெயர் வைத்துக் கொள்வதுண்டென்றும் அறிகிறோம்.) வேட்டையாடும் வீரனிடம் கனிந்து வேண்டுகிறார். பின் இருவரிகளிலே பூதநாதனே! உனக்கு வேட்டை விளையாடலில் தானே வேட்சை? அப்படியானால் வா, எண்ணங்கள் மண்டி வளர்ந்திருக்கும் என் மனமெனும் காட்டுக்கு! இந்தக் காட்டிலே விருப்பு, வெறுப்பு முதலான பல்வேறு விலங்கு கூட்டங்கள் திரிகின்றன. அவற்றுக்கு அச்சமூட்டி வேட்டையாடிப் பொலிவாய்! இப்படிப் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர். கிராத வேடம் கொண்ட பரமேசனிடம் இவ்வாறே தமது சித்த அரணியத்திலே வேட்டையாட, ஸ்ரீசங்கரர் வேண்டுவதை சிவானந்த லஹரியில் காண்கிறோம். இங்கே மூத்த பிள்ளையின் ஸ்தானத்தோடு அப்பனின் ஸ்தானத்தையும் ஐயப்பனுக்கே கொடுத்து விடுகிறார். வீரனாகக் கண்டவனை கருணை கூர்வான் என்று நம்பி வேண்டியதால் அவனது அன்பு ஈரத்தைக் காட்டிவிடுகிறார். அதோடு அவன் விருப்பு வெறுப்புகளை வெல்ல வல்லவன் என்பதால் இவ்விருமையற்ற ஞான ஸாரனாகவும் அவனை நமக்கு உணர்த்திவிடுகிறார். அதாவது சக்தி, பிரேமை, ஞானம் மூன்றிலும் பெரியோனாகச் சாத்தனைக் காட்டிவிடுகிறார் சங்கரர்.
ஆசாரியர் கண்ட ஆரியரின் பெருமை இதுவே!
__________________________________________________________________________
ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்
” ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்”
பதிவு சற்று பெரிது பொறுமையாக படிக்கவும்.
ஸ்ரீசக்ரத்தை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்வதுண்டு. ‘ஸ்ரீவித்யா பூஜை’ என்றாலே ”ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?” என்றுதான் கேட்கிறோம். ”ஆமாம்” என்றே பதில் வரும். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை.
ஆலயங்களில் வேணுமானால் ஸந்நிதிகளில் விக்ரஹங்களுக்குக் கீழே அந்தந்த யந்த்ரம் பூமிக்குள் சில இடங்களில் வெளியிலேயே கூட ப்ரதிஷ்டையாகி இருக்குமே தவிர அகங்களில் அப்படியில்லை. [சிவனுக்கு] பாணம், [விஷ்ணுவுக்கு] ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் ‘ஸ்வர்ண ரேகா சிலா’ என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.
ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று அவயவங்களோடு கூடின மூர்த்தி அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடு கூட தனியாயில்லை ஸ்ரீசக்ரத்தோடு கூட அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது. ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை [வழிபாட்டு முறையை] எடுத்துக் கொண்டாலும் அதில் ‘மந்த்ரம்’, ‘யந்த்ரம்’ என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷாத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்; சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு; அபார சக்தியுண்டு. ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன ஆவாஹனாதிகளில் ப்ரயோஜன படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம் அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது. அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுக்கு [அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி] ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை;ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரஸித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது. அங்கே யந்த்ரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்ரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்ரமே பூஜை நடக்கிறது.
இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும் விட அம்பாளுக்கே யந்த்ரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்த்ரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது. கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி அபரிமிதமான சக்தி இருக்கிறது. [சிரித்து] கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும் திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன. ஸ்ரீ சக்ரத்தில் சக்ரம் என்று வட்டமாக இருக்கும் மத்ய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்ய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைப்பு என்பது நேர் அர்த்தம். இங்கே சுற்று, ப்ராகாரம், ரோவ் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஒருத்தரைச் சுற்றிப் பல பேர் நின்றால் ஆஸாமி தெரியாமல் மறைக்கத்தானே செய்யும்? அதனால் ஆவரணம் என்று பேர். மத்ய பிந்துவையும் கோணம் என்று சொன்னாற் போலவே ஆவரணம் என்றும் சொல்கிறது. வாஸ்தவத்தில் அதைச் சுற்றி நாற்பத்து மூன்று கோணங்களே ஐந்து ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. அதையும் சேர்த்து ஆறு ஆவரணம். நவாவரணம் ‘நவாவரணம்’ என்று ஒரு வார்த்தை பல பேர் கேட்டிருக்கலாம். இப்போது தீக்ஷிதரின் நவாவரண க்ருதிகளுக்கு மவுஸு ஏற்பட்டு ரேடியோவில் ஒலி பரப்புவதால் அந்த வார்த்தை ப்ரசாரத்தில் வந்திருக்கிறது. நவாவரணம் என்பது ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சுற்றுக்கள் தான். அந்த ஆவரணம் ஒவ்வொன்றிலும் யாரார் இருக்கிறார்கள், என்னென்ன தத்வங்கள் இருக்கின்றன அதற்கு அதிதேவதை யார் அவர்கள் என்ன அநுக்ரஹம் செய்கிறார்கள் அங்கே என்ன முத்ரை காட்ட வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருக்கிறது. அதையே சுருக்கமாக தீக்ஷிதர் கீர்த்தனத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆவரணத்திற்கு ஒரு க்ருதி. இப்போது அதில் ஆறு சொன்னேன். இந்த ஆறில் தான் 44 கோணங்கள் இருப்பது. இந்த ஆறுக்கு வெளியிலே இன்னும் மூன்று சுற்று. அதையும் சேர்த்தாலே நவாவரணம். அதிலே இரண்டு தாமரை இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்துள்ள சுற்றுக்கள். இந்த எட்டு ஆவரணத்திற்கும் சேர்த்து வெளி மதிலாக ஒரு ஆவரணம். அது மூன்று காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பினாற்போல மூன்று கோடுகளாக வெளியே இருக்கும். அவை சக்ராகாரமில்லை. சதுரம், சதுரமாகவே இருக்கும். இப்படி ஒரு டிஸைன், அபரிமிதமான திவ்ய சக்தியோடு…. ஆனால் இதில் ஜாக்ரதை வேண்டும். ஒரு யந்த்ரம் என்றால் அதில் ஒவ்வொரு கோடும், கோணமும் என்ன பரிமாணத்தில் இருக்க வேண்டுமோ அப்படிக் கணக்காக இருக்க வேண்டும். கொஞ்சம் கூட முன்னே பின்னே இருக்கக் கூடாது. ஒரு மந்திரத்தில் சப்தம் கொஞ்சம் மாறு பட்டால் கூடப் பெரிய தோஷமாகி விடலாம் என்பது போலவே யந்த்ரத்திலும் டிஸைனில் சின்னத் தப்பிதம் இருந்தாலும் கெடுதல் உண்டாகி விடும். டிஸைன் முழுக்க ஸரியாயிருந்தால் கூட ஸ்ரீ யந்திரத்தில் நடு முக்கோணம் கிழக்கு நோக்கி இல்லாமல் மேற்கு நோக்கியிருக்கும் படி வைத்து விட்டால் பலனே மாறிவிடும். பூஜா மூர்த்திகளைக் கிழக்குப் பார்க்க வைப்பதே கிரமம். எனவே ஸ்ரீசக்ரத்தையும் அவ்வாறே வைக்கவேண்டும். அதாவது நடு முக்கோணத்தின் கூர்முனை கிழக்குப் பார்க்க இருக்கவேண்டும்.
அதற்கு எதிரே அமர்ந்து பூஜகர் பூஜிக்கும் போது ஸ்ரீசக்ரத்தின் ஒன்பது முக்கோணங்களில் நடு முக்கோணம் உள்பட ஐந்தின் முனை அவரை நோக்கியும் மீதம் நான்கின் முனைகள் எதிர்த் திசை நோக்கியும் இருக்கும். இன்னொரு அம்சம் ஜாக்ரதை தேவைப்படும் அம்சம் என்ன வென்றால் விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும் போது சாஸ்திரோக்தமாகவும் மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும். தற்காலத்தில் தெரியாத்தனத்தால் கொஞ்சம் ஜம்பத்துக்காகக் கொஞ்சம் இது ஒரு ஃபாஷன் என்று கொஞ்சம் என்பதாகப் பல ‘கொஞ்சம் பேர். சேர்ந்து அதுவே நிறைய ஆகி ரொம்ப வீடுகளில் ஸ்ரீ சக்ர பூஜை என்ற பேரில் ஒன்று நடக்கிறது. ஆனால் நியமங்கள் போதாததால் துர்பிக்ஷம் அசாந்திகளும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன! ஆசைப்பட்டால் மட்டும் போதாது அது அதற்கு எப்படி சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதோ பெரியவர்கள் செய்து காட்டியிருக்கிறார்களோ அப்படி நாமும் செய்தால் தான் பலன் வரும். ஸ்ரீசக்ரத்தின் விசேஷத்தைப் பற்றி சாஸ்திரத்தில் நிரம்பச் சொல்லியிருப்பது வாஸ்தவம். ஆனால் அதை எப்படிப் பூஜிக்க வேண்டுமென்றும் அதே சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைத் தள்ளிவிட்டு இஷ்டப்படி ஸெளகர்யப்படி [பூஜை] பண்ணுவேன்!” என்றால் பலன் கிடைக்காது. விபரீத பலனே கிடைக்கலாம். யந்த்ரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும் அது மாத்திரமில்லாமல் ஸாக்ஷத் அந்த தேவதைக்கு ப்ரதிநிதியாகவுமே இருப்பது ‘ப்ரதி’நிதி என்பது கூட ஸரியில்லை. ‘ப்ரதி’- ‘காப்பி’- இல்லை; அஸலே அந்த தேவதை தான் இப்படி டிஸைன் ரூபத்திலிருப்பதும். அதிலும் அம்பாள் ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும் போது யந்த்ர ரூபத்திலேயே விசேஷமாக ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்த்ரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம ஸெளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்த்ர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. (நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை த்ரிபுர ஸுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது. ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்யம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் கட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.)
அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா? அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்….. இப்போது நான் சொன்னதில் இரண்டு தப்பு. ஒன்று, ஸ்ரீ சக்ரம் அம்பாளுடைய வாஸஸ்தானம் மட்டுமில்லை; அவளுமே தான்! வாஸஸ்தானம் + வஸிக்கிற ஆஸாமியாக அது இருக்கிறது! இன்னொரு தப்பு என்னவென்றால் அம்ருதஸாகரம் மாதிரியும் மேரு சிகரம் மாதிரியும் இது மூன்றாவது [வாஸ ஸ்தானம்] இல்லை. அம்ருத ஸாகரமானாலும் ஸரி, மேரு சிகரமானாலும் ஸரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே இந்த ஸ்ரீ யந்த்ரம் இருக்கும். நம் அகங்களில் ஒரு கையளவு இருக்கும் யந்த்ரம் அங்கே ஆயிரம் பதினாயிரம் மடங்கு பெரிசாக ஆவரணம் என்று சொல்லும் ஒன்பது சுற்று அங்கணங்களோடு இருக்கும். அந்த ஒன்பதிலும் அநேக தேவதைகள் தத்வங்கள் அம்பாளின் பரிவாரங்களாக இருப்பார்கள். ஒன்பதாவதாக உள்ள மத்ய பிந்துதான் பஞ்ச ப்ரம்மாஸனத்தில் அம்பாள் இருக்கிற இடம். மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும் போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்? அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்ரத்தையே ஸமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து அடுக்கடுக்காக மூன்று தளத்தில் ஆக [கூம்பாக] ப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது. இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்திற்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர். மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டு விட்டது. ஸமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை ஸம தளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு. மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் ஸந்நிதியில் பூர்ண மேரு. தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம் அம்பாள் பக்தர்கள் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்வார்கள். மற்ற ஸ்வாமிகளின் யந்த்ரங்களுக்கு அந்தந்த ஸ்வாமியின் பெயரையோ வேறே அந்த ஸ்வாமிக்கு உள்ள அடையாளத்தையோ சேர்த்து சிவசக்ரம், மேதா தக்ஷிணாமூர்த்தி யந்த்ரம், ஸுதர்சன யந்த்ரம், ஷடக்ஷர சக்ரம் என்றிப்படிப் பெயர் சொல்ல வேண்டியிருக்கிறது.
லலிதா த்ரிபுரஸுந்தரியின் யந்த்ரதிற்கு மட்டும் இப்படி ஒரு பெயரும் அடைமொழியும் கொடுக்காமல் பூஜிதமானது மங்களமானது என்பதால் ‘ஸ்ரீ’மட்டும் போட்டு ‘ஸ்ரீசக்ரம்’ என்றே சொல்லியிருக்கிறது. சக்ரம் என்றாலே இது தான் தனியாகப் பெயர் கொடுக்க வேண்டாம் என்கிற மாதிரி இருக்கிறது. அதேபோலத்தான் அவளுடைய உபாஸனா மார்க்கந்தான் மார்க்கம் என்று காட்டுகிற மாதிரி அதற்கும் ‘ஸ்ரீவித்யை’ என்றே பெயர் கொடுத்திருக்கிறது. இங்கேயும் ‘ஸ்ரீ’ என்பது பூஜிதமான அடைமொழியே தவிர ஸ்ரீதேவி என்ற லக்ஷ்மியைக் குறிப்பிடுவதில்லை. உபாஸனா மார்க்கங்களை வித்யை என்றும் தந்த்ரம் என்றும் சொல்வது. அப்படிச் சொல்லும் போது மற்ற ஸ்வாமிகளின் உபாஸனைக்கு அந்த ஸ்வாமியின் பெயரையோ அல்லது அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரையோ வைத்துப் பெயர் கொடுத்திருக்கும். ஆனால் த்ரிபுரஸுந்தரி வித்யைக்கு மட்டும் தனிப்பெயர் வைக்காமல் ஸ்ரீவித்யா என்றே சொல்வதாக இருக்கிறது. அந்த ஸ்ரீவித்யா மந்திரத்திலேயே சிலசில வித்யாஸங்களோடு பல தினுஸான மந்திரங்கள் இருக்கிறது. இங்கே மட்டும் எப்படி ஸ்ரீவித்யா மந்திரம் என்று ஒரே பேரைச் சொல்வது? வித்யாஸம் தெரியும் படியாக வேறே வேறே பேர் சொன்னால் தானே ஸரியாயிருக்கும்? அதனால் அந்த மந்திரத்தின் முதலெழுத்தை வைத்தோ அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரை வைத்தோ காதி வித்யா, ஹாதி வித்யா, லோபாமுத்ரா வித்யா, துர்வாஸ வித்யா என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பொதுவாக லலிதா தந்த்ரம் என்பதை ‘ஸ்ரீவித்யா’ என்றே சொல்லியிருக்கிறது. யந்த்ரம், தந்த்ரம் மட்டுமின்றி அவள் இருக்கிற ராஜதானிக்கும் தனிப் பெயரில்லை! ‘ஸ்ரீபுரம்’ அல்லது ‘ஸ்ரீநகரம்’ என்றே அந்த இடத்திற்குப் பெயர். புரம், நகரம் என்றால் வெறுமே ஊர் என்று தான் அர்த்தம். அப்படிச் சொன்னாலே போதும் அது அத்தனை ஊர்களும் இருக்கும் ஜகத்துக்கு ஜனனியாக இருக்கப்பட்ட அவளுடைய தலைநகரந்தான் என்று தெரிவிப்பதாக இப்படி ஸ்ரீபுரம், ஸ்ரீநகரம் என்றே பேர் இருக்கிறது! நித்யஸ்ரீயை, [அதாவது] என்றும் அழியாததான ஆத்மானந்தச் செல்வத்தை தருகிறவள் அம்பாள் என்பதால் அவளுக்கு [ஸஹஸ்ரநாமத்தில்] முதல் பேரே ‘ஸ்ரீமாதா’ என்று சொல்கிறோம். அதற்கேற்க ஸ்ரீவித்யை, ஸ்ரீசக்ரம், ஸ்ரீபுரம் என்றே அவளுடைய ஸம்பந்தமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன…… ஸ்ரீசக்ரம் என்ற ஸ்ரீயந்த்ரத்தைப் பற்றி ஸெளந்தர்ய லஹரியில் ஸ்லோகம் வருவதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆறு ஆவரணங்களாக உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று ‘கட்’ பண்ணிக்கொண்டு நாற்பத்து நாலு முக்கோணம் ஏற்படுவதாகச் சொன்னேனல்லவா? இந்த ஒன்பதிலே நாலு சிவ சக்ரங்கள் என்று ஐந்து சக்தி சக்ரங்கள் என்றும் சொல்லப்படும். பிந்துவைச் சுற்றியிருக்கும் நடு முக்கோணம் சக்தி சக்ரங்களில் சேர்ந்ததுதான். அகங்களில் பூஜிக்கும் போது அது பூஜிப்பவருக்கு அபிமுகமாக இருக்க வேண்டும். சிவ சக்திகளின் ஐக்யமான அத்வைதத்தைக் காட்டுவதாக ஸ்ரீ சக்ரத்தில் இரண்டு பேருடைய சக்ரங்களையும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னி வைத்திருக்கிறது. அதனால் ஏற்படும் கோணங்கள் அவற்றுக்கு வெளிச் சுற்றுக்களில் உள்ள பத்ம தளங்கள், வட்டக்கோடுகள், சதுரக் கோடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் இந்த [11வது] ச்லோகம் கணக்குக் கொடுக்கிறது.
இதெல்லாம் ஏதோ நாவல் படிக்கிற மாதிரியோ அல்லது academic interest -காகவோ தெரிந்து கொள்கிற விஷயமில்லை. குரு முகமாக உபதேசம் பெற்று குப்தமாக [பஹிரங்கப்படுத்தாமல்] ரக்ஷிக்கப்பட்ட வேண்டிய விஷயம். அடியோடு சொல்லாமல் விட வேண்டாமென்று கொஞ்சம் சொன்னேன். அதனால் ‘லைட்’டாக நினைத்து விடக்கூடாது! ஸ்ரீ சக்ரம் இல்லத்தில் இருந்து அதை முறைப்படி பூஜிக்க இயலாதோர் கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபடவும்.
ஸ்ரீ சக்கரம் :
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ