வெள்ளி, 12 நவம்பர், 2021

பிறப்பு, இறப்பு தீட்டு

பிறப்பு, இறப்பு தீட்டு சம்பந்தமாக பலருக்கும் ஸந்தேகங்கள் உண்டு.

ஸ்ரீமதாநந்த குருப்யோ நமஹ || கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றைய பொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு [ஸங்கவ காலம்] மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் [தூரம்] இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை [270 நிமிடங்களுக்கு] முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு [முன் ஆச்ரம] மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நானம்.

88 அடிகளுக்குள் பிணம் [சவம்] இருந்தால் எடுக்கும் வரை சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ண முடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டு விட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அது போல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் [ஸ்ராத்த சங்கல்பம் ஆன பின்] தீட்டுத் தெரிந்தால் ஸ்ராத்தம் முடியும் வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை. வரித்த பின் போக்தா [ஸ்ராத்த ஸ்வாமிக்கு] தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும் வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு ஆறு மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் இருபத்தி நான்கு நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்து கொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை நான்கு நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் [உதகதானம்] தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும் போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

ஸ்ராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும் போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாட வேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல் தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும் போது பின் வந்த தீட்டும் முடிந்து விடும்.

உதாரணமாக பத்து நாள் தீட்டில் நாளாம் நாள் மற்றொரு பத்து நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் பத்தாம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்து விடும். ஆனால் முன் வந்த மூன்று நாள் தீட்டுடன் பின் வந்த பத்து நாள் தீட்டு முடியாது.

பத்து நாள் தீட்டின் இடையில் வந்த மூன்றாம் நாள் தீட்டுடன் பத்தாம் நாள் தீட்டு முடியாது. பத்தாம் நாள் தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக மூன்று நாள் மட்டும் காத்தால் போதும். ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் மூன்றாம் நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின் போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்து நாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து பத்து நாள் விலகும். ஒரு வேளை பத்தாம் நாள் மரணமானால் மேலும் இரண்டாம் நாள் அதிகரிக்கும். பத்தாம் நாள் இரவு ஆனால் மூன்று நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி மூன்று நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டு காலம் முடிந்த பின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்கு மேல் மூன்று மாதங்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் ஆறு மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள். ஆறு மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

மூன்று நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் மூன்று நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
 
ஒரு நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா, பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து பத்து நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் [ஆண்களுக்கு] ஸர்வாங்க க்ஷவரம் [வபனம்] செய்து கொண்டால் தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம்.

ஸர்வாங்கம் என்பது : தலையில் சிகை [குடுமி] தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம். கழுத்துக்கு கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் [முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் பத்தாம் நாள் காலை] ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னை விட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வபனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா, இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல் நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் [பிறப்பால்] ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு நாற்பது நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு முப்பது நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர். மறு மனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள், அது போல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
[பிதாமஹர்] அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு மூன்று நாள் தீட்டு குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால் ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் முப்பது நாளும், பெண் குழந்தையானால் நாற்பது நாளுக்கு பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் [கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது] ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு..

பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை [சந்ததியைச்] சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் மூன்று நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் மூன்று நாள் தீட்டு: உபநயனமான உடன் பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் [ஸஹோரதன் பிள்ளை]

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் [தந்தையின் வேறு மனைவிகள்]

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்] தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா.

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா.

தாயின் ஸஹோதரர்கள் [மாதுலன்]

தந்தையின் ஸஹோதரிகள் [அத்தை]

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் [ஸஹோதரனின் பெண்]

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் ஒரு நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் [ஸபத்னீ மாதா] குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ [குமாரத்தி]

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும் போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்க வேண்டும். பத்து நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் ஏழு தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் பத்து நாள் தீட்டு உண்டு.

பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ [ஆண்] குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு. இறந்தவர் [குழந்தையின் தந்தை] தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்.

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் குழந்தை ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் பதுது நாள் தீட்டு.

ஏழு வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. ஏழு வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லா விட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் பத்து நாள் தீட்டு. மூன்று நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் மூன்று நாள் தீட்டு. தாயின் தந்தை [மாதாமஹர்]
தாயின் தாய் [மாதாமஹி], தாயின் ஸஹோதரன் [மாதுலன்], மாமன் மனைவி [மாதுலானி], மாமனார், மாமியார், தாயின் உடன் பிறந்த ஸஹோதரி [சித்தி, பெரியம்மா], தந்தையின் ஸஹோதரிகள் [அத்தைகள்], ஸஹோதரியின் மகன் [உபநயனமானவன்] மருமான்
உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் [தெளஹித்ரன்] ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் [ஸமானோதகர்கள்], கல்யாணமான பெண், கல்யாணமான ஸஹோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் [ஜனனீ], ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை [ஜனக பிதா], ஸ்வீகாரம் போன மகன் [தத்புத்ரன்], ஏழு வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண், இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள், ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள், பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்து விட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்து விட்டாலும் மறு நாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. [ஒன்றரை நாள்]. அத்தையின் பிள்ளை அல்லது பெண்,
மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் ஸஹோதரியின் பெண்கள், பிள்ளைகள், தன்னுடைய ஸஹோதரியின் பெண், தன் ஸஹோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன், பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி [பெளத்ரீ] பெண் வயிற்றுப் பேத்தி [தெளஹித்ரி], உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை [தெளஹித்ரன்], உபநயனமாகாத மருமான் [ஸஹோதரி புத்ரன்] 

கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. [இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்]. ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி, ஸபத்னீ மாதாவின் பெண், மற்றும் மேற் சொன்ன மூன்று வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள், ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை, ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா, கல்யாணமாகாத ஆறு வயதுக்குட்பட்ட இரண்டு வயதுக்கு மேற்பட்ட பங்காளிகளின் பெண், ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த முன் கோத்ர ஸஹோதரர்கள், ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

மஹாளய பக்ஷம்

மஹாளய பக்ஷம் - செப்டம்பர் 21 ஆரம்பம்.   

மஹான்களான பித்ருக்கள் அனைவரும் இரண்டு மாஸங்கள் வரை இந்த பூலோகத்தில் தங்கி தத்தம் ஸந்ததியினர் மஹாளய ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வார்கள் என்று ஆசைப்பட்டு இங்கு வந்து தங்குவதால் அந்த காலத்தில் இந்த பூலோகமே மஹான்களுக்கு ஆலய(இருப்பிட) மாக ஆவதால் இது பெருமை பொருந்திய ஆலயமாக மஹாள(ல), யமாகக கூறப்படுகிறது.  இதனால் இந்த பூலோகத்தை மஹாள(ல) யமாக்கும் காலத்திற்க்கும் மஹாள(ல) யம் என்று பெயர் உண்டாயிற்று என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.   இந்த மஹாளய ச்ராத்தம் பக்ஷ மஹாளயம் ஸக்ருந் மஹாளாய ச்ராத்தம் என்று இரு வகைப்படும்.    பக்ஷ மஹாளய ச்ராத்தம் -  இந்த பாத்ரபத க்ருஷ்ண பக்ஷம் 15 நாட்களுடன் அடுத்த சுக்லபக்ஷ ப்ரதமையும் சேர்த்து 16 நாட்களிலும் அனுஸ்டிக்கப்படுவதாகும்.  இதை அன்ன தானமாகவோ — தரப்பணமாகவோ செய்யலாம்.  இப்பொழுதும் ஆஸ்திகர்கள் சிலர் அநுஷ்ட்டித்து வருகிறார்கள்.  இப்படி பக்ஷம் முழுவதும் செய்யப்படுவதால் இது பக்ஷ மஹாளயமாகும்.  இதில் திதிவார தோஷம் எதையும் பார்க்க வேண்டாம்.    *ஸக்ருந்மஹாளயம்*   இந்த மஹாளயபக்ஷத்தில் என்றேனும் ஒரு திதியில் ஒரு தடவை அநுஷ்ட்டிக்கப்படும் ச்ராத்தம் அல்லது தர்ப்பணம் ஸக்ருந்மஹாளயம் எனப்படும்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை பஞ்சமீ முதற்க்கொண்டு செய்வது உசிதம்.  ஆனால் பஞ்சமிக்கு முன்னாள் மஹாபரணி வந்தால் அப்பொழுது மஹாளய ச்ராத்தத்தை செய்யலாம்.   இந்த ஸக்ருந்மஹாளய ச்ராத்தத்தை சதுர்த்தசி,  ப்ரதமை ஷஷ்டி,  ஏகாதசி ஆகிய திதிகளிலும்,  வெள்ளிக்கிழமையிலும்,  ரேவதி,  மகம்,  தன்னுடையதும்,  தன் பத்னீ- புத்ரன் இவர்களுடையவும் நக்ஷ்த்திரங்கள்,  ரோஹிணீ இவற்றிலும்,  பார்யை ரஜஸ்வலையாயிருக்கும் போதும்  செய்யக்கூடாது.   மாதாபிதாக்களின் ச்ராத்தம் வருகிற மாஸத்தில் ச்ராத்தத்திற்க்கு முன் மஹாளய தரப்பணம் பண்ணக்கூடாது.   இந்த மஹாளய தர்ப்பணத்தை அநுஷ்ட்டிக்கப்பவர் முதல் நாள் இரவு பலாஹாரம் செய்யவேண்டும்.   மஹாளயபக்ஷ தர்ப்பணத்தை (அமாவாஸ்யை தர்ப்பணத்தைப் போல்) இரண்டு வர்க்கங்களுக்கும் புக்நங்களுக்கிடையே மேலும் இரண்டு புக்நங்கள் காருண்ய பித்ருக்களுக்காக சேர்த்து ஆவாஹநாதிகளைப் பண்ணித் தர்ப்பிக்கவேண்டும்.  *Understanding Mahalaya paksham.*   21st September, 2021 Mahalaya Paksham begins  During the Mahalaya Paksham, our Pitrus are said to descend on earth to receive the Pindam and Tilodakam being given by their descendents.   When our Pitrus are here on the earth, our earth becomes a Maha Aalayam, a Great Temple for us. Hence the name Mahalayam.   Our Pitrus are said to arrive here with great expectations that their children would perform the Shradhas and they could receive Tilodakas.   So, it is very necessary for every son whose parents are not alive, to perform the Mahalaya Shradham without fail.  There are two types of mahalayam being observed .:  1. Paksha mahalayam 2. Sakrun mahalayam  *Paksha mahalayam*  for observing everyday of the entire mahalayam paksham (16 sraddhams - Krishna  Prathamai to Shukla Prathamai);  *Sakrun mahalayam*-  one day  sraddham or tarpanam. This is in addition to Mahalaya Amavasyai sraddham or tarpaNam.   *Restrictions*:1.  1. Sakrun Mahalaya sradham should be observed from Krishna Panchami thithi.   2. If a pitru sraddham falls within mahalayam, then mahalayam (sraddham)  can be observed only after performing the pitru sraddham. Mahalayam can be performed on the next day after the pitru sraddham.  3. For sakrun mahalayam (one day),  on Fridays, prathamai, sashti, chaturdasi, ekadasi tithis, Revati, makam nakshatrams, self -janma nakshatram, patni-janma nakshatram or son's-janma nakshatram days should not be observed.   4. For some reason, if mahalayam can not be observed in bhadrapada krishna paksham, there is time up to thula (aiyppasi) masam.  *Exceptions*: 1. For paksha mahalayam, the above days of tithi, vara and nakshatra dosha restrictions do not apply.  2. For sakrun mahalayam, Certain days in this period are considered important:   For example the day with bharani is called *Mahabharani*;   Krishna paksha ashtami called *Madhyashtami*; navami called *Vyatipadam*; Thrayodasi called *Gajachaayai*.  In these days (mahabharani, madhyashtami, vyatipadam or gajachayai), one should not be concerned about restricted vara, nakshatram or tithis dosham as above (under restrictions)  for sakrun mahalayam.  sakrun mahalaya sraddham can be observed from Panchami days, on Panchami, saptami, ashtami, navami, dasami,dwadasi, thrayodasi and also pita tithi (excluding pitru sraddham day within mahalayam).  Just like Amavasyai Tharpanam keep buknam for both vargam i.e Pithru as well as Mathru vargam. In between these two, keep extra buknam for Karunya Pithru and do Aavahanam and tharpanam accordingly.

ஏழுமலையான் பகுதி - ஆறு

ஏழுமலையான் பகுதி - ஆறு




தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லக்ஷ்மி மகேஸ்வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின் கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வர வழைத்தார். பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லக்ஷ்மி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்று விடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச் சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம் என்றார். லக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்தாள். இதன் பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லக்ஷ்மிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்து சேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒரு முறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லக்ஷ்மி கடாக்ஷம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது என்று புகழ்ந்து பேசினர். தங்கள் நாட்டிற்கு வந்திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது.

மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லக்ஷ்மி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள். மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான். பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இது போன்ற உயர் ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல் என கேட்டான். லக்ஷ்மி பிராட்டி அவனிடம் மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்க முடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்து விட்டது. உலகத்திற்கே படியளக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக் கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர். சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து சேவகனே! இந்த பசு கரக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்து விட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள் என சொல்லி அனுப்பினான்.

பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையை விட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர் மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன் மேல் நோக்கி பார்த்தார். பால் வழிந்து கொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக் கொண்டனர். மகாராணி பராமரிப்பாளனை அழைத்து இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்து விடுகிறாயா? உண்மையை சொல்லா விட்டால் உன் தலையை எடுத்து விடுவேன் என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான். மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில் தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன என்று சொல்லி அவளது காலில் விழுந்தான். மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை. பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின் பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லா விட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பினாள்.

என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.

தொடரும்....