வியாழன், 24 ஏப்ரல், 2014

முழு மனதுடன் கொடுங்கள்!

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை. அரசருக்கு சந்தோஷம். இன்னும் ஒரே ஒருநாள் தான் பாக்கி! அதற்குள் யாருக்குமோதிரம் கிடைத்து விடப்போகிறது! என்ற நினைப்பில் இருந்தார். அரண்மனையின் எதிரே ஒரு சிறுவன் விளையாட்டு வில் அம்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு நேராக மோதிரத்தை அறுத்துத் தள்ளியது. பிறகென்ன! சிறுவனுக்கே மோதிரத்தைபரிசாகக் கொடுக்க வேண்டியதாயிற்று! ஒன்றைக் கொடுக்க நினைப்பவர்கள், நிறைந்த மனதுடன்பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பது போல் நடித்து தாங்களே வைத்துக் கொள்ள நினைத்தால், அந்தப் பொருள் ஏதோ ஒரு வழியில் போய்விடும்.

கருத்துகள் இல்லை: