வியாழன், 24 ஏப்ரல், 2014

பக்கத்திலே நான் இருக்கேன்!

கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள்.துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து,இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான். துச்சாதனனும் அவ்வாறே செய்ய முற்பட்டான்.கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்றமகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அபலையாய் நின்று கதறினாள் பாஞ்சாலி. வேறு யாரும்கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள்.கண்ணா! மதுசூதனா!திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷõ, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,புரு÷ஷாத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள்.அடுத்து, துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில், இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள். அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்? என்றாள். கண்ணன் சிரித்தான். திரவுபதி! எனது எல்லாநாமங்களையும்சொல்லிஅழைத்த நீ, துவாரகாவாசா என்றும்சொன்னாய்அல்லவா! நான்துவாரகையில்இருந்து வரவேண்டாமா! அதனால்தான் தாமதம் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால், உன் இதயத்திலிருந்து உடனே வெளிப் பட்டிருப்பேன், என்றார். பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால், எந்தக் கஷ்டம் வந்தாலும், அவன் உடனே வருவான்.

கருத்துகள் இல்லை: