விஷ்ணு சகஸ்ர -நாமத்தை-- சாகதேவன் மூலம் இந்த உலகுக்கு அறிய வைத்த கங்கை -பாரத --போர் உடல் முழுவதும் அஸ்திரங்கள் எய்ய பட்டு அம்பு படுக்கையில் இருந்தார் பீஷ்மர் ---அவரை சுற்றி கண்ணன் --பாண்டவர்கள் --கௌரவர்கள் --என யாவரும் கவலையுடன் நின்றிருக்க --பீஷ்மரோ அம்பு படுக்கையிலும் கம்பீரமாக படுத்து கணீர் குரலில் நல்ல உபதேசங்களை கூறி கொண்டிருந்தார் ---அவரின் உபதேசங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்த பாண்டவர்களில் ஒருவரான தருமர் ---பாட்டனாரே உங்கள் உபதேச கருத்துக்கள் யாவும் மனிதன் போற்றி வாழ கூடிய ஒன்று ---ஆனால் வாழ்வில் இவையெல்லாம் ஒரு மனிதன் கடைபிடித்து வாழ்வது என்பது கடினமன்றோ --அதனால் எளிமையான உபதேசங்கள் எவையேனும் இருந்தால் அதை பற்றி கூறுங்களேன் என்று வேண்ட ----தருமர் கூறியதை கேட்ட பீஷ்மர் ---தன் இரு கண்களால் கண்ணனை பார்த்து கொண்டே தன் இரு கரம் கூப்பி கண்ணனை வணங்கி கொண்டே --ஆயிரம் ஆயிரம் பாவங்களை போக்க வல்ல ஆயிரம் அனந்தனின் நாமத்தை கூறுகிறேன் கேட்டு உயர்வு பெறுங்கள் என்று கூறி கொண்டே கூறியதுதான் விஷ்ணு -சகஸ்ர நாமம் ---அனந்தனின் ஆயிரம் நாமங்களையும் கேட்டு மனம் பூரிப்படைந்தனர் யாவரும் ஆனால் சகாதேவன் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருக்க அதை கவனித்த கண்ணன் சகாதேவனை தனியே அழைத்து சென்று அவனது யோசனைக்கு காரணம் கேட்க ----சகாதேவன் --பரமாத்மா அனைத்தும் அறிந்தவன் நீ என் யோசனை என்னவென்று அறியாதவனா நீ சரி நானே கூறுகிறேன் ---கண்ணா ---பீஷ்மர் கூறிய உனது ஆயிரம் நாமங்களை கேட்டு நாங்கள் மன-பாரம் குறைந்தோம் --மனம் தெளிவுற்றோம் என்பது எல்லாம் உண்மையே ஆனால் நங்கள் கேட்ட இந்த புண்ணிய விஷ்ணு -சகஸ்ர -நாமம் ஆயிரத்தையும் இனி வரும் மக்கள் யாவரும் கேட்கும் வண்ணம் அதை நாங்கள் குறிப்பெடுத்து வைக்கமுடியாமல் போயிற்றே அதை நினைத்து தான் நான் யோசனை செய்தேன் --என்று வருந்தி கூற --கண்ணன் ---சகாதேவா ---வருந்தாதே --பீஷ்மரின் கழுத்தில் ஒரு ஸ்படிக மாலை உள்ளது அவர் உடல் எரியூட்ட படுவதற்கு முன் அந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள் --அவர் கூறிய சகஸ்ர --நாமம் ஆயிரமும் உன் சிந்தனையில் தோன்றும் --நீ அதை எழுத்து வடிமாக உருவாக்கி வியாசர் மூலம் இந்த உலகுக்கு தந்து விடு என்றான் கண்ணன் --சகாதேவன் சிரித்து கொண்டே ---கண்ணா பீஷ்மரின் ஸ்படிகமாலைக்கு அவ்வளவு சக்தியா அப்படி என்ன சக்தி அதில் இருக்கிறது என்று கேட்க ----கண்ணன் --சகாதேவா--முன்பொருமுறை பீஷ்மர் இளைஞராக இருக்கும் போது கங்கை கரை நோக்கி சென்று ---கங்கை மாதாவை வணங்கி --தாயே என் தந்தை சாந்தனுவுக்காக என் வாழ்வில் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து சபதம் செய்துள்ளேன் எவருமே சொல்ல தயங்கும் இந்த வார்த்தையை நான் என் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததால் தேவர்களும் -முனிவர்களும் ---என்னை வாழ்த்தி --பிதாமகன் பீஷ்மர் என எனக்கு பட்டம் அளித்துள்ளனர் ---ஆனாலும் இந்த இளமையில் --காதலும் காமமும் என்னை ஆட்கொள்ளாமல் இருக்கவும் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் தாங்கள் தான் எனக்கு அருள வேண்டும் தாயே என்று வேண்டி அழுதார் பீஷ்மர் ---குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா என்ன ---தன் மகன் அழுததை பொறுக்காத கங்கை மாதா பீஷ்மர் முன் தோன்றி ---மகனே தேவவிரதா இல்லை இல்லை --மகனே பீஷ்மா அப்படித்தானே யாவரும் உன்னை அழைக்கிறார்கள் உன் இரு கரங்களையும் நீட்டு என்றாள் கங்கை மாதா --பீஷ்மரும் தன் இரு கரங்களையும் நீட்ட ---கங்கை நீர் பீஷ்மரின் இரு உள்ளங்கையிலும் சில துளிகள் விழுந்து பின் அதுவே ஒரு ஸ்படிக -மாலையாக மாறியது ---ஸ்படிக -மாலையை ஆச்சிரியதுடன் பார்த்து கொண்டிருந்த பீஷ்மரிடம் --கங்கை மாதா கூறலானாள்---மகனே --திருமாலின் வாமன அவதாரத்தில் அவரின் பாத கமலத்தில் ---பிரம்ம-தேவரின் கமண்டலத்தில் உள்ள நீரால் --- அபிஷேகம் செய்யப்பட்டு பெருக்கெடுத்து பூலோகம் வரும் வேளையில் சிவபெருமான் தன் சடையில் அந்த நீரின் வேகத்தை தாங்கி --சூடி கொள்ள --பின் பகீரதன் தவத்துக்கு இணங்கி சிவபெருமான் அந்த நீரை சடையில் இருந்து அவிழ்த்து பூலோகத்தில் பெருக்கெடுத்து ஓட செய்து அந்த நீரான எனக்கு கங்கை எனவும் பெயர் சூட்டி அழைத்தார் ----இப்படி மும்மூர்த்திகளின் ஸ்பரிசத்தால் பூலோகம் வந்ததால் பாவங்களை போக்கும் புண்ணிய நதி என்ற பெயர் எனக்கு உருவானது ---அப்படியே உன் கையிலும் இருக்கும் இந்த ஸ்படிகமாலையம் புனிதமாக இருக்க வைக்கும் உன்னை ---நீ நினைக்கும் --கூறும் நல்ல உபதேசங்கள் யாவும் இந்த ஸ்படிகமாலையில் பதிந்து விடும் அப்படியே--- உனக்கு பின் இந்த ஸ்படிக மாலையை யார் அணிகிறார்களோ அவர்களுக்கு உன் உபதேச மொழிகள் யாவையும் இந்த ஸ்படிக மாலை அவர்களின் உள்ளத்தில் புகுத்தி அவர்களையும் புனித படுத்திவிடும் --என்று கூறி கங்கை மறைந்தாள் ---பீஷ்மர் கண்ணீருடன் தன் தாயின் கருணையை எண்ணி ஸ்படிகமாலையை அணிந்து கொண்டார் என்று கண்ணன் சகாதேவனிடம் கூறி முடிக்க ---சகாதேவன் கண்ணனிடம் கண்ணா எங்கள் எல்லோர் மனதிலும் நீயே கேள்விகளை எழுப்பி அதற்க்கு நீயே விடைகளையும் கூறிவிடுகிறாய் ----உன் ஆயிரம் திருநாமங்களை கொண்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் கங்கையை போலவே யாவர் பாவங்களையும் நீக்க வல்லது ---பீஷ்மரின் ஸ்படிகமாலையை அணிந்து ---வியாசர் உதவியுடன் விஷ்ணு சகஸ்ரநாமத்தை எழுதி இந்த உலகுக்கு அளிப்போம் அதை படித்து யாவரும் புனிதமடையட்டும் அதுக்கு அருள் புரிவாயே கண்ணா --என்று சாகதேவன் கண்னை வணங்கி நின்றான் ----ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக