வியாழன், 21 மே, 2020

24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும், ஓர் கண்ணோட்டம் :-

காமதா ஏகாதசி

விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.

பாப மோசனிகா ஏகாதசி

நாம் செய்த பாவங்கள் தொலையும் நல்ல பேற்றினை ஏற்படுத்தும். த்ரோஹிகள் விலகுவர்.

 மோஹினி ஏகாதசி

உடல் சோர்வு நீக்கும். பாவம் நீங்கி புண்யம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும்

 வருதினி ஏகாதசி

உடல் ஆரோக்யம் தரும். சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

நிர்ஜல ஏகாதசி

வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன் வாயு அம்சம்.

அபரா ஏகாதசி

கேதார்நாத், பத்ரிநாத் யாத்ரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பணம் செய்த பலனும், ப்ராயாகையில் புண்ய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

விஷ்ணு சயன ஏகாதசி/ தயினி ஏகாதசி

முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்கும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

யோகினி ஏகாதசி

விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

புத்ரத ஏகாதசி

குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

காமிகா ஏகாதசி

தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய ஸ்வர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும்.

பரிவர்தன ஏகாதசி / பத்மநாப ஏகாதசி

இந்த்ரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

அஜ ஏகாதசி

குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது.

பாபாங்குச ஏகாதசி

வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்ரை சென்ற புண்யம் கிடைக்கும்.

இந்திரா ஏகாதசி

மூதாதயருக்கு ஸ்ரார்த்தம் செய்தால் அவர்கள் இந்த்ர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.

ப்ரபோதின ஏகாதசி/கைசிக ஏகாதசி

அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ரமா ஏகாதசி

இருபத்தியோரு தானம் செய்த புண்யம் தரவல்லது.

வைகுண்ட ஏகாதசி

உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி வ்ரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

உத்பத்தி ஏகாதசி

பகையை வெல்ல உதவும்.

பீஷ்ம, புத்ர ஏகாதசி

புத்ரபாக்யம் தரும்.

சபலா ஏகாதசி

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

ஜெய ஏகாதசி

அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோக்ஷம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் வ்ரக்தி நம்மை விட்டு நீங்கும்.

ஷட்திலா ஏகாதசி

கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கு, பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

ஆமலக்கி ஏகாதசி

நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் கோதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

விஜய ஏகாதசி

வெளிநாட்டில் உள்ள சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

🕉️ௐ நமோ நாராயணாய

கருத்துகள் இல்லை: