வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கோரகும்பர்

கோரகும்பர்

பண்டரிபுரத்திற்கு அருகே உள்ள தோடகியில் பிறந்தவர் கோரகும்பார் மண்பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர்.

இவரின் சகோதரர் எற்றண்ணா.

கோரகும்பர் தாய் தந்தையர் எப்போதும் பண்டரிநாதனின் மேல் பக்தி கொண்டு இருந்தனர். வேலையின் போது பண்டரிநாதனின் மேல் பாடல்கள் பாடி வந்தனர். இதனால் கோரக்கும்பரும்
எற்றண்ணாவும் பக்திமானாக திகழ்ந்தனர். கோரக்கும்பருக்கு பத்மாவதி என்பவரை திருமணம் செய்வித்தனர்.

இருவரும் மிக்க அன்யோன்யமாக வாழ்ந்தனர். பத்மாவதியும் சிறந்த
பக்திமானாக இருந்தார். திருமணம் நடந்த சில வருடங்களிலேயே கோரக்கும்பரின் பெற்றோர் இறந்து போயினர்.

கோரகும்பாரின் தம்பி எற்றண்ணா
அண்ணனுக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

எற்றண்ணா திருமண வாழ்வில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தார்

ஓர் நாள் சூளையில் அடுக்கி வைத்திருந்த மண்பானைகளுக்கு எரியூட்டுவதற்காக ராட்டிகளை அடிக்கி அதற்கு தீயை வைத்தார் எற்றண்ணா.

சில பானைகளில் குட்டி பூனைகள் இருந்ததை கவனிக்கவில்லை.
சில நாட்கள் சென்று பானைகளை எடுக்கும் போது அதில் பூனை குட்டிகள் கருகி இருந்தது.

எற்றண்ணாவுக்கு மனது வலித்தது
பாவம் செய்து விட்டேன் என புலம்பினான்.

திடீரென ஓர் நாள் கங்கையில் மூழ்கி என் பாவத்தை போக்கி கொள்கிறேன் என கூறி காசி கிளம்பினான்.

தம்பி நடந்தே கங்கைக்கு செல்வதால்
கோரகும்பர் சோகத்தில் மூழ்கினார்.

கர்ப்பமான மனைவியை கூட அவர் அதிகம் கவனித்து கொள்ளவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் அவர் பாண்டுரெங்கனிடம் கொண்ட பக்தி அதிகமாகவே ஆகியது.

பத்மாவதி ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

கோரகும்பர் எப்போதும் மண்ணை காலால் குழைத்த வண்ணம்
பாண்டுரெங்கனை பாடிய வண்ணம் மண்பாண்டம் நிறைய செய்தார்.

வீட்டின் வரவான குழந்தையை அதிகமாக நேசிக்காத தந்தையாக சதா பாண்டுரங்கன் மேல் பித்தாகவே போனார்.

குழந்தையும் வளர்ந்து தவழ்ந்தது.

இவர் வழக்கம் போல மண்ணை காலால் குழைத்த வண்ணம் கைகள்
இரண்டையும் மேலே தூக்கி பாண்டுரங்கனை கண்களை
மூடியபடி
நினைத்து ஆடியபடி, பாடியபடி
மண்ணை மிதித்த போது
வீட்டில் இருந்து குழந்தை தவழ்ந்து சேற்றில் ஏறியதை வீட்டில் வேலையாக இருந்த பத்மாவதியும்
கவனிக்கவில்லை.

கோரகும்பரும் கவனிக்க வில்லை.

மண்ணை குழைத்த கால்கள்
குழைந்தையையும் சேற்றில் அமுக்கி மிதித்து
கூழாக ஆக்கியது.

குழந்தையை காணோமே என தேடிய பத்மாவதி கணவரின் கால்களில் கூழாகி போன குழந்தையை பார்த்து
அழுதபடி வந்த போதே கோரகும்பருக்கு நினைவு வந்தது.

பத்மாவதி "ஏன் இப்படி குழந்தையை பார்க்காமல் இப்படி செய்துவிட்டீர்களே" என கேட்ட மனைவியை "நீ தானே கவனித்துகொள்ள வேண்டும்"
என கூற,

குழந்தை வருவது கூட தெரியாமல் அப்படி என்ன தெவ்வ பக்தி வேண்டி கிடக்கு, பாண்டுரெங்கன் இப்படியா செய்ய சொன்னார் என சொன்னவுடன் கோரகும்பர் தன்னுடைய கடவுளையே தவறாக சொல்லிவிட்டாளே என சொல்லி கம்பால் அடிக்க ஆரம்பிக்கிறார்.

பத்மாவதி கோபமாய்
இனி என்னை அடிக்கவும் கூடாது
தொடவும் கூடாது இது பாண்டுரங்கனின் மேல் ஆணை என்கிறாள்.

அன்று முதல் மனைவியை தொடுவதில்லை
மனைவி தொட்டததையும் தொடுவதில்லை என சபதம் எடுத்து
தனியாக சமைத்து சாப்பிட்டார்.

கணவரை இப்படி திட்டிவிட்டோமே என வருந்திய பத்மாவதி
கோரகும்பரிடம் மன்னிப்பு கேட்டும்
அலர் மாறாததை கண்டு வருத்தப்பட்டாள்.

பத்மாவதி தன் தந்தையிடம் நடந்ததை கூறி,
அவளது தங்கையை கோரகும்பருக்கு திருமணம் செய்விக்க தந்தையோடும் தங்கையோடும் பேசி சம்மதிக்க வைத்தார்.

பத்மாவதியின் தந்தை கோரகும்பரை பார்த்து திருமணத்திற்கு சம்மதமா என கேட்டவுடன் கோரகும்பர்
அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

உறவினர்களின் வற்புறுத்தலில் திருமணம் நடக்கிறது.

திருமணம் முடிந்து ஊருக்கு கிளம்பிய கும்பாரிடம் அவர் மாமனார் எனது இரு பெண்களையும் சமமாக பாவித்து நடங்கள் என்றார்.

கோரகும்பர் சரி என சொல்லி இரண்டு மனைவியோடு ஊர் திரும்பினார்.

அக்காவை தொடுவது இல்லை அவள் தொட்ட எதையும் தொடுவது இல்லை போலவே இரண்டாவது மனைவியிடமும் இருந்தார்.

மாமனாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி கொண்டு வந்தார்.

சகோதரிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது.

இரவு பாண்டுரங்கனை பாடிவிட்டு அயர்ந்து தூங்கும் போது கோரகும்பரின் இருபக்கமும் இருவரும் படுக்க வேண்டியது என முடிவு செய்தனர்.

அது போலவே ஓர் நாள் அயர்ந்து தூங்கும் போது இருவரும் படுத்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த கோரகும்பர் கத்தியால் ஓர் கையை துண்டித்து கொண்டார்.
அதே கத்தியை நிறுத்தி மறு கையையும் வெட்டி கொண்டார்.

மனைவிகள் இருவரும் அழுது புலம்பினர்.

அந்த நேரம்,
காசிக்கு சென்று திரும்பிய எற்றண்ணா வீட்டு கதவை தட்டி உள்ளே வந்தவுடன் கையில்லாமல் நிற்கும் அண்ணனையும்
அழும் அவரின் மனைவிகளையும்
பார்த்து வருத்தமுற்று நடந்தவைகளை கேட்டறிந்தார்.

அண்ணனின் கைகளை எடுத்து ஒட்டி
சிகிச்சை அளித்தார் எற்றண்னா.

கைகள் ஒட்டியதே தவிர வேலைகளை செய்ய முடியவில்லை. கைகள் வளைந்திருந்தது.
எற்றண்ணாவின் உழைப்பில்
அவர்கள் வாழ்ந்தனர்.

பாண்டுரங்கனின் கோவில் விழாகோலம் பூண்டது
ஸ்ரீ நாமதேவர் அவ் விழாவிற்கு வந்தார்.

நாமதேவரின் மனதிற்கு
பண்டரிநாதனின் கோவிலில் பண்டரிநாதன் இல்லாமல் இருப்பது போலும்,
களையிளந்தும் கோவில் காணப்பட்டது.

பண்டரிநாதா
நீ இங்கில்லையா என கேட்பது போல பாடல் இயற்றி பாடினார்.

அன்றிரவு நாமதேவரின் கனவில்
நான் கோரகும்பரின் வீட்டில் அவர் தம்பி எற்றண்ணாவாக இருக்கிறேன் என்றார்.

மறுநாள் காலை நாமதேவர்
வந்து பார்த்த போது
சேற்றை மிதித்தபடியும்
மண்பாண்டங்கள் செய்தபடியும்
எற்றண்ணாவாக பண்டரிநாதன்
இருந்தார். காசிக்கு சென்ற எள்றண்ணாவுக்கு பதில் பாண்டுரங்கனே எற்றண்ணாவாக.

கையிழந்த தன் பக்தனின் குடும்பம் ஏழ்மையின் பிடியில் வருத்தப்படக்கூடாதே என எண்ணிய
பாண்டுரங்கனே மண் பானை செய்து விற்று இந்த குடும்பத்தை காப்பாற்றியதை கண்ட நாமதேவருக்கு கண்களில் கண்ணீராய் வந்தது.

கோரகும்பரின் பக்தியை மனதால் மெச்சிய வண்ணம்
கோரகும்பர் அவரது மனைவிகளோடும் எற்றண்ணாவோடும் பண்டரிபுரம் வந்தார் நாமதேவர்.
பாண்டுரெங்கன் இருந்தால்தானே திருவிழா நடக்கும்.

நாமதேவர் கோரகும்பர் அவரது மனைவி இருவரும் அமர்ந்து இருக்க
எற்றண்னா கோவில் கருவறைக்குள் சென்று மறைந்துவிடுகிறார்.

நாமதேவர் நடப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டார்.

அப்போது கோவிலுக்குள் பஜனை கோஷ்டி ஒன்று உள் நுழைந்து கைகளை தட்டிய வண்ணம் பாண்டுரெங்கனை பாடுகின்றனர்.

கோரகும்பர் தன் கைகளை தூக்க முயற்சிக்கிறார். செயலற்று
வளைந்து இருந்த கைகளை தூக்க முடியாமல் துக்க மேலீட்டில் அழுதவண்ணம் பாண்டுரங்கா விட்டலா என கண்ணீரோடு பாடுகிறார்.

வளைந்த கைகள் நேராகிறது
விரல்கள் இயங்குகிறது
கைகள் நன்றாக இயங்க ஆரம்பிக்கவே பண்டரிநாதா
விட்டலா என கத்தியபடி ஆனந்த கண்ணீர் விட்டார்.

அருகில் இருந்த அனைவரும் பாண்டுரெங்கா பாண்டுரெங்கா என கோஷமிட்டனர்.

அனைவரும் மகிழ்ச்சியோடு சன்னதியில் விழுந்து வணங்கினர்

பத்மாவதி அழுதவளாய் பாண்டுரெங்கா என் கணவரின் கையை கொடுத்தது போலவே என் குழந்தையை தாருங்கள் என்னை மன்னித்துவிடு பாண்டுரங்கா என்னை மன்னித்து என் குழந்தையை தாருங்கள் என கேட்க, கருவரையில் இருந்து பத்மாவதியின் குழந்தை தவழ்ந்து வந்தது. நாமதேவர் பாண்டுரங்கனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை: