வியாழன், 13 ஆகஸ்ட், 2020

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

ஓம் நமசிவாய

ஏழு ஜன்ம பாவம் விலகி நன்மை பெற
======================================
த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்
-------------------------------===================
ஸௌராஷ்ட்ரே ஸோமநாதஞ்ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஸ்வரம்
பரல்யாம் வைத்யநாதஞ்ச ஜடாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே ச ராமேசம் நாகேசம் தாருகாவனே
வாரணஸ்யாந்து விஸ்வேசம் த்ரியம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசஞ்ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
இந்த ஸ்லோகத்தை தினமும் படித்துவந்தாலும்,இந்த ஜ்யோதிர்லிங்கங்களை மனதால் நினைத்தாலிம் ஏழு ஜன்ம பாபம் விலகி நற்கதி ஏற்படும்.
இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட நாமமாகவும் சொல்லலாம்.
1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
ஓம் சோமநாதாய நம:
2. ஆந்திரபிரதேசத்தின் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்
ஓம் மல்லிகார்ச்சுன பரமேசாய நம:
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
ஓம் மஹாகாலாய நம:
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
ஓம் ஓங்காரேஸ்வராய நம:
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
ஓம் வைத்யநாதாய நம:
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
ஓம் பீமசங்கராய நம:
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
ஓம் ராதநாதேஸ்வராய நம:
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
ஓம் நாகேஸ்வராய நம:
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
ஓம் விஸ்வேஸ்வராய நம:
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
ஓம் திரியம்பகேஸ்வராய நம:
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
ஓம் கேதாரேஸ்வராய நம:
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்
ஓம் குஸ்மேஸ்வராய நம:

ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும் உபலிங்கங்கள் உண்டு.

சோமநாத லிங்கத்துக்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்தில் உள்ள அந்தகேசலிங்கம் ஆகும். பிருகு பர்வதத்துக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ச்சுன லிங்கத்தின் உபலிங்கமாம். அதே போல, மகாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்குக் கர்த்தமேச லிங்கமும், உப லிங்கங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம், கேதார லிங்கத்திற்கு உபலிங்கமாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேசுவர லிங்கம்,  விசுவேச்வர லிங்கத்திற்குச் சரஸ்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்குச் சித்தேச்வர லிங்கமும் வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேசுவர லிங்கத்திற்கு, ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேசுவர லிங்கமும், இராமேசுவர லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்கிரேசுவர லிங்கமும் உபலிங்கங்களாகும்.

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹா சாஸ்தா தாஸன்
பா.சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹா சாஸ்த்ரு பரபிரம்ம ஸ்தானம்
காடந்தேத்தி

கருத்துகள் இல்லை: