செவ்வாய், 21 ஜனவரி, 2014

திருவைந்தெழுத்து..." நமசிவாய''

சைவ சமயத்தின் மூல மந்திரம் " நமசிவாய'' எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது.

வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது. திருவைந்தெழுத்தான் நமசிவாய இதில்லுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவம் பொருளுடையவை

*ந.திரோத மலத்தையும்,
*ம.ஆவண மலத்தையும்,
*சி.சிவமயமாயிருப்பதையும்,
*வா.திருவருள் சக்தியையும்,
*ய.ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும். ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்.
" நமசிவாய'' " நமசிவாய'' " நமசிவாய'' " நமசிவாய'' " நமசிவாய''

கருத்துகள் இல்லை: