கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
கும்பகோணம்:தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சியில் சிதிலமடைந்து காணப்பட்ட ஆபத் சகாயேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள், அரசின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயில் 12ம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால், திருப்பணி செய்யப்பட்ட தலம். இங்கு குபேரனின் கருங்கல் திருமேனி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் நந்திகேஸ்வரர், பலி பீடம், வலதுபுறம் கிழக்கு நோக்கியவாறு இரண்டரை அடி உயரத்தில் சிவகணம் போன்ற தோற்றத்தில் குபேரன் சிலை உள்ளது.
சிலையை இதுவரை குண்டோதரன், பூதகணம், துவாரபாலகர் என்றே அழைத்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள சில திருத்தலங்களில் மட்டுமே காணக்கூடிய அரிதான குபேரனின் சிலை என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக