செவ்வாய், 21 ஜனவரி, 2014

இடிந்த நிலையில் காணப்படும் பழமையான சிவன் கோவில்

நீடாமங்கலம் வருவாய் வட்டத்தில் உள்ளது பழைய நீடாமங்கலம். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக் கோவில் மாடக் கோவில் வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது. முற்றிலும் கருங்கல் தூண்களால் அமைக்கப்பட்ட முன் மண்டபம் தற்போது இடியும் நிலையில் உள்ளது. 7 அடுக்கு ராஜ கோபுரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்து இருந்த இடம் தெரியாமல் காட்சியளிக்கிறது.

ராஜகோபுரம் நுழைவு வாயிலில் 5 மீட்டர் தூரத்தில் பலி பீடம் மட்டும் உள்ளது. கொடி மரம் அண்மையில் பழுதடைந்து விழுந்து தற்போது இல்லாத நிலையில் காட்சி தருகிறது. சுமார் 25 அடி உயரத்தில் செங்கல் சுண்ணாம்பால் கட்டப்பட்ட மதில் சுவர் இடிந்து உள்ளது. இடியாமல் உள்ள மதில் சுவர் நேற்று கட்டியது போல் காட்சி தருகிறது. அடி பீடம் கருங்கல்லாலும் மேல் மண்டபம் செங்கல்லால் கட்டப்பட்ட மூலவர் கோபுரம் இட மேல் மண்டபம் இடிந்த நிலையில் செடி, கொடிகள் முளைத்து உள்ளது.

இந்த இடத்திலே மூலவரான சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எல்லா சிவாலயங்களிலும் மூலவர் கோபுரத்திற்கு வெளியே தான் தனி சன்னதி கொண்டு அம்பாள் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் கருவறை அருகிலேயே அம்பாள் மீனாட்சி அம்மையார் திருப்பெயருடன் அழகிய திருமேணியாய் நின்ற கோலத் தில் காட்சி தருகிறாள். இக்கோவில் சிதிலமடைந் துள்ளது. பத்ரகாளியம்மன், சுப்பிரமணியர், வள்ளி, தெய் வானை, தெட்சிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகன் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளதால் கோவிலுக்குள் ஒரே இடத்தில் இம் மூர்த்திகள் பக்தர்கள் வழி பட வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் 23 ஐம்பொன் சிலைகள் இருந்ததாகவும், தற்சமயம் கிடைத்த 13 விலை மதிப்பற்ற சிற்ப கலை நுட்பத்துடன் வடிவமைக்க ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருவாரூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 6 கால பூஜை, வைகாசி விசாகம், திருவாதிரை, மகா சிவராத்திரி போன்றவைகள் சிறப்பாக நடைபெற்ற இக் கோவிலில் கிராமத்தின் நிர்வாகத்தில் ஒரு கால பூஜை கோவிலாக உள்ளது. கிழக்கு நோக்கி சன்னதி கொண்ட இக்கோவிலில் திருப்பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க் கிறார்கள்.

கருத்துகள் இல்லை: