செவ்வாய், 21 ஜனவரி, 2014

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்
:தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால்
புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வரஅம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.

கருத்துகள் இல்லை: