ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
36. ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
முப்பத்தி ஆறாவது ஆசார்யர் கி.பி. 738 - 758
ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பாலாற்றங்கரையில் உள்ள தோரூரில் தமிழ் அந்தண மரபினத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸோம கிரி''. பெற்றோர் வைத்த பெயர் ''சுரேசர்'’.
இவரை கூடுதலாக ''சிதாநந்தர்'' என்றும் அழைக்கப்பட்டார்.
இவர் தமிழகம் எங்கும் பல யாத்திரைகள் செய்து மக்களுக்கு தனது ஆசிகளையும், அன்பையும் பொழிந்தார்.
ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி ப்ரியமுடன் செய்வார்.
இவர் கி.பி. 758 ஆம் ஆண்டு, ஹேவிளம்பி வருடம், ஐப்பசி மாதம், பௌர்ணமி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
36. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
35. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
35. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
முப்பத்தி ஐந்தாவது ஆசார்யர் [கி.பி. 710 - 737]
ஸ்ரீ சித்சு சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு ஆச்சார்யர்.
இவர் வேதாசலத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''விமலாக்ஷர்''. தந்தை இவருக்குச் வைத்த பெயர் “சுசீல கமலாக்ஷர்''.
சஹ்ய மலைத் தொடரில் காவிரி உற்பத்தியாகும் தலைக் காவேரிப் பகுதியிலுள்ள கவேர முனிவரின் குகையில் நீண்ட நெடும் காலம் உறைந்து தவமாய் தவமிருந்தவர். இவர் "பகுரூப சித்சுகர்” என அழைக்கப்பட்டார். இவர் தனது வாழ்நாள் பாதி காலம் கடும் தவத்திலேயே கழித்தார். பேசுவதை விட மௌனமாக இருப்பதையே அதிகம் விரும்பியபடி வாழ்ந்தார்.
இவர் கி.பி.737 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், சஷ்டி திதியில் சஹ்ய மலையில் சித்தி அடைந்தார்.
இவர் 27 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
34. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று
முப்பத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி.692 - 710]
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று வேகவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் ''மகா தேவர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சம்பு''.
இவர் இந்தியா முழுவதும் பல விஜய யாத்திரைகள் புரிந்தவர். செயற்கரிய செயல்கள் புரிந்தவர். ஒரு சமயம் காட்டுத் தீயில் ஒரு குழந்தை அகப்பட்டுக் கொண்டது. அந்த குழந்தையின் பெற்றோர் தவித்தனர். அப்போது அங்கே யாத்திரையாக வந்து கொண்டிருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன் அருள் கருனை கடாக்ஷத்தால் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.
இவர் காஷ்மீர யாத்திரை சென்ற போது காஷ்மீர மன்னன் ''லலிதாதித்யன்'' சபையில் பௌத்த மதத் தீவிரவாதியான "சங்குணன்" அமைச்சனாயிருந்தான். அவன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை வாதத்திற்கு அழத்தான். ஸ்வாமிகளும் அவனை வாதில் வென்று அத்வைத நெறியை நிலை நாட்டி காஷ்மீரத்திற்க்கும் காஞ்சி மடத்திற்க்கும் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்தினார்.
இவர் கி.பி.710 ஆம் ஆண்டு, சௌம்ய வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 18 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
33. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
33. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]
ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.
இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்
இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.3. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]
ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.
இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்
இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.
32. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
32. ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
முப்பதாதி இரண்டாவது ஆசார்யர் [கி.பி. 668 - 672]
ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தண குலத்தவர். இவரின் பெற்றோரரின் பெயர் ''கண்ணு சங்கரர்'' பெற்றோர் வைத்த பெயர் ''பத்மநாபர்''.
இவர் ‘'லம்பிகை’' என்னும் யோக சித்தியை அடைவதற்காக சருகுகளை [காய்த்த இலைகளை] மட்டுமே உண்டு வாழ்ந்தார். மிக பெரும் யோகியாகத் திகழ்ந்தவர்.
"லலிதாதித்யன்" [காஷ்மீர் மன்னன்] தன் தென்னகப் படை எடுப்பின் போது ''ரட்டா'' என்னும் கன்னட நாட்டு ராணியின் புதல்வனை ஆட்சி பீடம் ஏற விடாமல் செய்தான். "ஸ்ரீ சிதாநந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்" என்ற இந்த மகானின் பேரருளால் அவனை அரியணையில் அமர்த்தி அனுக்கிரஹத்ததை பற்றி ''ராஜ தரங்கணீ'' யத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ மடத்தில் இருந்து கொண்டு சந்திர மௌலீஸ்வர பூஜையோடு மட்டும் இல்லாமல் ராஜியத்திலும் தலையிட்டு பல நல்ல விஷயங்களை நாட்டு மன்னர்களுக்கு எடுத்து கூறியுள்ளார் இந்த மஹான்...
இவர் கி.பி. 672 ஆம் ஆண்டு, பிரஜோத்பத்தி வருடம், மார்கழி மாதம், சுக்ல பக்ஷம், சஷ்டி திதியில், காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் நான்கு ஆண்டுகள் மட்டுமே பீடத்தை அலங்கரித்துள்ளார்.
31. ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....
31. ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
முப்பத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 655 - 668]
ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''கெடில'' நதிக்கரையில் உள்ள சிற்றூரில் தமிழக அந்தண குலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''அனந்தர்''. தந்தை இவருக்கு வைத்த பெயர் “ஜ்யேஷ்ட ருத்ரர்".
இவர் ''சீலநிதி பிரம்மானந்தகனர்'' என்று போற்றப்பட்டவர். ஒரு முறை காஷ்மீர் அரசன் ''லலிதாதித்யன் கன்னோசி" மன்னன் "யசோவர்மனை" வென்ற பின்னர் தென்னகம் நோக்கிப் படை எடுத்தான். கர்நாடகம், கேரளம், சோழநாடு இவைகளை அவன் வெற்றி கொண்டதாக "ராஜ தரங்கணீயம்" சொல்கிறது.
"யசோவர்மனின்" அரசவைப் புலவர் ''பவபூதி'' சக்தி உபாசகர். அவர் லலிதாதித்யனின் வெற்றிகளை ''மஹா புருஷ விலாசம்'' என்ற நாடக நூலில் விளக்கியுள்ளார். அதில் "லலிதாதித்யன்'' ஆதி முதல் புகழ் பெற்றிருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளை தரிசித்து ப்ரஸாதம் பெற காஞ்சி சென்றான்” என்று கூறப்பட்டிருக்கின்றது.
வெற்றியோடு நாடு திரும்பிய ''லலிதாதித்யன்'' ஆசார்யாள் திரு நாமத்தால் ஒரு அன்ன சத்திரம் கட்டினான். தினமும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னமிட்டான் என்கிறது ''மஹாபுருஷ விலாசம்''.
இவர் கி.பி. 668 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், கார்த்திகை மாதம், சுக்லபக்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 13 ஆண்டுகள் பீடத்தை காலம் அலங்கரித்துள்ளார்.
30. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...
30. ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு....
முப்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 618 - 655]
ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. ஆந்திர குலத்தில் அந்தணராக பிறந்தார். இவர் காள ஹஸ்தியில் வாழ்ந்தவர்.
பெற்றோர் வைத்த பெயர் “பாலையா". இவரின் பெற்றோர்கள் பெயர் நமக்கு கிடைக்காததும், இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைத்தது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 655 ஆம் அண்டு, ஆனந்த வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 37 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
29. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
29. ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....
இருபத்தி ஒன்பாவது ஆச்சார்யர் [கி.பி. 601 - 618]
ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திர அந்தண குலத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸ்ரீ பதி''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிருஷ்ணர்''. இவர் சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவல்களும் கிடைக்க வில்லை என்பது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 618 ஆம் ஆண்டு, ஈச்வர வருடம், ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், ஏகாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.
28. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
28. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று...
இருபத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 577 - 601]
நேசக்கரமி ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று. இவர் ஆந்திராவில் மைதிலா அந்தண மரபில் தோன்றியவர். இவர் தந்தை பெயர் ''பானுமிச்ரர்’'. பெற்றோர் இவருக்கிட்ட பெயர் ''சேஷ நாராயணர்''. இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விவரம் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது...
இவர் கி.பி.601 ஆம் ஆண்டு, ரௌத்திரி வருடம், ஐப்பசி மாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 24 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
27. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
27. ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 564 - 577]
ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர மாநில அந்தண குலத்தில் பிறந்வர். இவர் பிறந்த ஊரான ஹஸ்திகிரி இவர் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற ஊராக அமைந்தது.
தந்தையின் பெயர் ''மதுசூதனர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஹரிகேசவர்''. இவரை பற்றிய கூடுதலான விவரங்களும், தகவல்களும் நமக்கு கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 577 ஆம் ஆண்டு, துன்முகி வருடம் சாந்திரமான வருடப் பிறப்பன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் சுமார் 13 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்....
சாதுர்மாஸ்ய விரதம்...
சாதுர்மாஸ்யம்
ஒவ்வோர் ஆண்டும் ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும்.அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல் கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள்.நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை நான்கு மாதம்.அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார்.இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார்.இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள்.பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும்.ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி சத்சங்கங்கள்,பஜனைகள்,வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள்.ரிஷிகள் எல்லாம் செய்வார்கள்.நாரத மஹரிஷிகூட அவர் பிறப்பதற்கு முன்பு இது போன்று சாதுக்கள்,மஹரிஷிகள் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது அவருடைய தாயார் அவர்களுக்கு சேவை செய்து அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.
இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம்.ஒன்று, இல்லறத்தார்கள்.ப்ரஹ்மச்சாரிகள் க்ரஹஸ்தர்கள் ஆண் பெண் அனைவரும் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு ஒரு பந்தலிலோ கோயிலிலோ அல்லது பொது இடத்திலோ நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி பாடல்கள் ஜபங்கள் பாராயணங்கள் ஸ்தோத்ரங்கள் த்யானங்கள் இவைகளிலேயே காலத்தை கழிப்பது பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை.அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம்.சன்யாசிகள் போன்றவர்கள் நான்கு மாத காலங்களிலும் பன்னிரெண்டு மாதங்களில் எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு இந்த நான்கு மாத காலம் எந்தவித யாத்திரையும் செய்யாமல் ஒரே இடத்தில் தங்க வேண்டும்.பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது.பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.க்ராமைக ராத்ரம் ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம் என்று நியதி.சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து சில சாதனைகளை செய்வதற்கும் அதே சமயத்தில் அஹிம்சையை அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் அதாவது மழைக்காலத்தில் அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும்.அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான்கு மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும் சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள்.அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.
இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து பகவானுக்கும் படைத்து விட்டு அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம்.பாரணை என்று சொல்லுவார்கள் பாரணை என்றால் உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை.அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம் ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.இது சன்யாசிகள் க்ரஹஸ்தர்கள் ப்ரஹ்மச்சாரிகள் வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது.பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.இது மஹாராஷ்டிரத்திலும் ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது.கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள்.தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.
சன்யாசிகள் மாத்திரம் தான் சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள்.அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால் நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள்.அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும்.அதாவது பால் சேர்க்காமல் இருப்பது தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது பழங்காலம் தொட்டு வருகிறது.அன்றைய தினம் பூஜையில் முதல் முதல் இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று(க்ராவண ஏகாதசி அன்று)முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று.ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும்.அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள்.இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும்.பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம்.அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு.அந்த சாதுர்மாஸ்யத்தை முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர்.ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள்.ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.
சனி, 16 செப்டம்பர், 2023
ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....
26. ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
இருபத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 548 - 564]
ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''பினாகி'' நதிக்கரையில் இருந்த சிற்றூரில் பிறந்தவர். ஆந்திர அந்தண குலத்தவர். இவரது தந்தையின் பெயர் ''பிரபாகரன்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சோணகிரி''.
இவரை பற்றிய வரலாறுகள் தெரியாமலே போனது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனால் இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையும், பசுக்களை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்...
இவர் கி.பி. 564 ஆம் ஆண்டு, சுபானு வருடம், வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 16 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
வெள்ளி, 8 செப்டம்பர், 2023
25. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
25. ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 527 - 548]
ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை "ஸ்ரீ சித்த குரு" என்று அன்புடன் அழைத்தனர். தமிழ் அந்தண மரபினர். தமிழகத்திலுள்ள ஸ்ரீ முஷ்ணத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''கிருஷ்ணர்''. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சாம்பர்''.
இவர் பாரதம் முழுவதும் மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார்.
இவர் ஸ்ரீ பாதம் படாத பகுதியே இந்தியாவில் கிடையாது எனலாம். அந்த அளவிற்க்கு யாத்திரை செய்தவர். அனைத்து விதமான மக்களையும் அரவணைத்து சென்றார். இவரை மக்கள் போற்றி புகழ்ந்து கொண்டாடினர்.
இவர் தன் யோக வலிமையால் விலங்குகள் பேசும் மொழிகளை அறிந்திருந்தார். அறுபத்தி மூன்று நாயன் மார்களில் சேரமான் பெருமாள் நாயனார் இவ்வாற்றல் பெற்றிருந்ததால் கழறிற்றறிவார் எனப் போற்றப்பட்டதாக பெரிய புராணம் சொல்கிறது.
இவர் கி.பி. 548 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆடி மாதம், சுக்ல பட்க்ஷம், பிரதமை தினத்தில் கோகர்ண க்ஷேத்திரத்தில் லிங்க ரூபியாக சித்தி அடைந்தார்.
இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
24. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
24. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
இருபத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி. 512 - 527]
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று கொங்கண நாட்டைச் சேர்ந்தவர். பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சர்மா''.
இவர் தனது அருளாட்சி காலமான பதினைந்து ஆண்டுகளையும் பெரும்பாலும் கொங்கணப் பகுதியிலேயே கழித்தார்.
இவர் கி.பி. 527 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆவணி மாதம், சுக்ல பட்க்ஷம், நவமி திதி அன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
வியாழன், 7 செப்டம்பர், 2023
23. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
23. ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி மூன்றாவது ஆசார்யர் [கி.பி. 481 - 512]
ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர அந்தண குலத்தவர். ஸ்ரீ காகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் ''சோம நாராயணர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிரீசர்''.
இவர் சுப்ரமண்ய ஸ்வாமி மீது பெரும் பக்தி கொண்டவர். முருகனை உபாஸனை செய்து குமரனின் பரிபூர்ண அனுக்கிரகத்தைப் பெற்றவர். இவர் காலத்தில் வாழ்ந்த பிர பல வானவியல் அறிஞரான ஆரியபட்டர் நாஸ்திகக் கொள்கையுடன் இருந்தார். அவர் பூஜ்ய ஸ்ரீ பெரியவாளுடன் வாதிட்ட பிறகே தெளிவு பெற்றவராய் வேதாந்தப் பிடிப்புடன் வாழத் தொடங்கினார்.
ஒரு முறை சூரிய கிரகணம் பற்றி ஆராய, கடல் தாண்டிச் சென்றார் ஆர்யபட்டர். அந்நாளில் கடல் தாண்டிச் செல்வது சாஸ்திர விரோதமானது என்பதால் அவர் ''சமூகப் பிரஷ்டம்'’ செய்யப்பட்டார். பூஜ்ய ஸ்ரீ பெரியவாள் தலையிட்டு உரிய பிராயச்சித்தங்களை விதித்து ஆரியபட்டரின் ''பிரஷ்டத்தை'' நீக்கினார்.
இவர் கி.பி. 512 ஆம் ஆண்டு, கர வருடம், வைகாசி மாதம், சுக்ல பட்க்ஷம் சப்தமி திதி அன்று ஜகந்நாத்திற்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 31 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
22. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
22. ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
இருபத்தி இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 447 - 481]
ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் அந்தண மரபினர்.
இரத்தினகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையாரின் பெயர் ''இராமநாதர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''மதுரா''.
இவர் ''பூலோக தன் வந்தரி'' என்று போற்றும் அளவு மருத்துவத்திறன் வாய்ந்தவர். ''அஸ்மா பிலாபிக'' என்னும் மந்திர வல்லமை பெற்ற மந்திர சாஸ்திர விற்பன்னர். மாபெரும் யோகியாகத் திகழ்ந்தவர்.
இவர் கி.பி. 481 ஆம் வருடம் ரௌத்திரி ஆண்டு, கார்த்திகை மாதம், வளர்பிறை, நவமி அன்று ஸ்ரீ பூரி ஜகந்நாத்துக்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 34 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
21. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
21. ஸ்ரீ ''ஸார்வ பௌம'' சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு.
இருபத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 437 - 447]
இவர் கொங்கண அந்தண குலத்தவர். இவரின் தந்தை பெயர் "அச்சுதன்". இவரே மூக சங்கரால் ஆட் கொள்ளப் பட்ட "மாத்ரு குப்தன்". இவர் தம் குருநாதரோடு பல விஜய யாத்திரைகள் சென்றவர். சந்திர மௌலீஸ்வரர் பூஜை செய்வதில் கை தேர்ந்தவர்.
இவர் கி.பி. 447 ஆம் ஆண்டு, விய வருடம் ஆவணி மாதம், கிருஷ்ண ஜெயந்தி அன்று காசியில் சித்தியடைந்தார்.
இவர் 10 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
20. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
20. ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபதாவது ஆசார்யர் [கி.பி. 398 - 437]
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''நான்காம் சங்கரர்'' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் தந்தை பெயர் ''வித்யாவதி'' வானவியல் வல்லுனர்.
பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ''ஸ்ரீ வித்யா கநேந்திரர்'' அருளால் பேச்சு வந்தது. உடனே ''மூகபஞ்ச சதீ'' என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். அதன் நன்றி கடனாக இவரை மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் அவரின் பெற்றோர்.
ஸ்ரீ மூக சங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவர் ''சஹாரி விக்ரமாதித்யன்''. அவனரது ஆட்சி காலம் [கி.பி. 375 - 413] என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
அவருக்கு கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட ''மாத்ரு குப்தனும்'', ''ப்ரவரசேனனுமாவர்''. இருவருக்குமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு. வேலைக்காரனான ''மாத்ருகுப்தன்'' அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.
சிறு வயதில் ''மாத்ருகுப்தன்'', ''சஹாரி விக்ரமாதித்யன்'' அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தார். ''விக்ரமாதித்யன்'' காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம் நள்ளிரவு. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, மாமன்னன் திடீரென விழித்தான். விளக்குகள் எல்லாம் அணைந்திருந்தன. வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான். ''மாத்ரு குப்தன்'' விளக்குடன் வந்தான்.
“நீ ஏன் தூங்க வில்லை?" என்று கேட்டான் அரசன். “புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம். இப்படி உறங்கிய பாண்டவர்களின் மைந்தர்களையும், மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமா வெட்டியது இரவில் தான் எனப் பொருள்படும் ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லிய படியே விளக்கேற்றினான் சிறுவன்.
மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறுவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரசசியமாக அரசாணை பிறப்பித்தான். பிறகு ''மாத்ருகுப்தனிடம்'' தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலை நகருக்கு அனுப்பினான்.
நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்கு, முக்காடிப் போனான் ''மாத்ரு குப்தன்''. சஹாரி விக்ரமாதித்யன் எதிர் பார்த்ததும் இதைத்தானே.
இப்படி எதிர் பாராத விதமாக மணி முடி சூட்டப்பட்ட ''மாத்ரு குப்தனுக்கு'' நாளடைவில் கர்வம் மிகுந்தது. அதனால் எவரையும் மதிப்பதில்லை. ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது. அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார். அரசன் இருப்பிடம் நெக்கி சென்றார். ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும், மேது [மெந்தன்] என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நனைத்தார். இருவரும் கவிபாடும் ஆற்றல் பெற்றனர். ராமிலன் ‘'மணிப்ரபா'' என்ற கவிதை நாடக நூலையும், மேது "ஹயக்ரீவ வதம்" என்கிற நாடக நூலையும் படைத்தனர்.
கவிதைத்திறன் என்பது ''கர்வம் கொள்வதற்கல்ல'' என்று புரிந்து கொண்டான் ''மாத்ருகுப்தன்''. அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது. மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான். “ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்” என்று வேண்டினான்.
“மன்னா! ஜீலம் நதி முதல் சிந்து நதிவரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது. கொடிய மிருகங்கள் வாழ்கின்றன. முட் செடிகள் அடர்ந்துள்ளன. ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். காட்டைத் திருத்திப் ''பாதை அமைத்துக் கொடு” என்றார் ஜகத்குரு.
அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றினான் ''மாத்ரு குப்தன்'' அந்த நெடுஞ்சாலை ''சுஷ்மா'' என அழைக்கப்படுகிறது. ''மாத்ரு குப்தன்'' ''ஸேது பந்தம்'' என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.
அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று ''ஸார்வ பௌமன்’' என்னும் நாமத்தோடு “இளைய குரு" ஆனார். ப்ரவரசேனன், ஸார்வபௌமர் ஜீவிதகாலம் வரை காஷ்மீர நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீகாமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜ தரங்கணீயம் கூறுகிறது.
இப்படி செயற்கரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி. 437 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆவணி மாதம், பௌர்ணமி அன்று கோதாவரி தீரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் 39 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
19. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
19. ஸ்ரீவித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
பத்தொன்பதாவது ஆசார்யர் [கி.பி. 386 - 398]
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. இவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். தந்தையார் பெயர் ''உமேச சங்கரர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''ஸ்ரீ கண்டர்''.
சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது. அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.
இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார். நோய் பறந்து போனது. ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்த வில்லை. இவர் தொடர்ந்து விடாமல் சூர்ய நமஸ்காரம் செய்து வந்ததால் இவரை பக்தர்கள் ''சூரியதாசர்'' எனவும், ''மார்த்தாண்ட வித்யாகனர்'' என்றும் அழைக்கப்பட்டார். இவர் தனது பதினெட்டாவது வயதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பொறுப் பேற்று பல திக் விஜய யாத்திரைகள் மேற் கொண்டார்.
இவர் கி.பி. 398 ஆம் ஆண்டு, ஹே விளம்பி வருஷம், புரட்டாசி மாதம், தேய்பிறை நவமியில் திதியில், கோதாவரி நதி தீரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் 12 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
18. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
18. ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
பதினெட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 375 - 385]
ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். தந்தையார் பெயர் ''மதுரா நாதர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''மாதவர்''.
இவருடைய யோக வல்லமை காரணமாக ‘'ஸ்ரீ யோகி திலகர்'' என்று கொண்டாடப் பட்டார். இவர் காலத்தில் "நரேந்திராதித்யன்" காஷ்மீர் மன்னராக இருந்தார். இவருடைய மருமகன் "சுரேந்திரனும்" ஒரு சிற்றரசனே.
சுரேந்திரனின் சபையில் ''துர்தீதிவி'' என்ற நாஸ்திகர், ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தார். ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.
இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் வணங்கி “இன்று முதல் இந்த காஷ்மீர் அரசுரிமை உங்களுடையது, உங்கள் ஆணைப்படி செயல் படுவேன்" எனக் கூறினார். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்தவர் இவர்.
இவர் கி.பி. 385 ஆம் ஆண்டு, தாருண வருடம், மார்கழி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று உஜ்ஜயினி அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 10 ஆண்டுகள் காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.
17. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
17. ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகள் [பாலகுரு]
பதினேழாவது ஆச்சார்யர் [கி.பி. 367 - 375]
ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [பாலகுரு] காஷ்மீர நாட்டு மந்திரியான ''தேவமிச்ரன்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைதத்தைப் பற்றியே பேசினார். இவர் பிறந்த பின் இவரின் தந்தையான தேவமிச்ரன்" ஜைன மதத்தைத் தழுவினார்".
மகனின் அத்வைத நெறியை மாற்ற சாம, தான, பேத, தண்டப் பிரயோகங்களை நடத்தினார். இரணியகசிபுவின் முயற்சிகள் எப்படி பிரகலாதனிடம் பலிக்க வில்லையோ அதே போல் "தேவமிச்ரனின்" முயற்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின.
இறுதியில் "தேவமிச்ரன்" கோபத்தில் தனது மகனை சிந்து நதியில் தூக்கி வீசி எறிந்தார். நீரில் தத்தளித்துத் தடுமாறிய சிறுவனை பாடலிபுரத்து அந்தணரான ''பூரிவசு'' பார்த்துக் காப்பாற்றினார். இந்த குழந்தை சிந்து நதியில் கிடைத்ததால் குழந்தைக்கு ''சிந்து தத்தன்'' எனப் பெயர் வைத்தார் ''பூரிவசு''. குழந்தைக்கு உபநயனம் செய்து முறைப்படி
வேத சாஸ்திரங்களைக் கற்பித்தார்.
அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான "ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திரரிடம் சரஸ்வதி ஸ்வாமிகளிடம்" அச்சிறுவனை ஒப்படைத்தார் "பூரிவசு". இதுவும் கடவுள் சித்தமே.
அவரை ''பாலகுரு'' என மக்கள் அன்போடு அழைத்தனர். இவர் தனது 17 வது வயதில் காஞ்சி ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார். இவரின் காலத்தில் மடத்தின் சார்பாக தினமும் ஆயிரக்கனக்கான அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தது இவரின் சிறப்பு.
பாலிக, பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார். இதை கண்ட காஷ்மீர் மக்கள் இவருக்குத் "தங்கப் பல்லக்கை" பரிசளித்தனர். அதில் அமர்ந்து பாரதம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். பல மதங்களை தனது வாதத் திறமையால் நாட்டை விட்டு விரட்டி அடித்து என்பது இவரின் சிறப்பு.
இந்த குருரத்தினம் தமது 25 ஆவது வயதில் கி.பி. 375 ஆம் ஆண்டு, பவ வருடம் ஆனி மாதம் கிருஷ்ண பட்க்ஷம் தசமி திதி அன்று ''நாசிக்'' நகருக்கு அருகிலுள்ள ‘'த்ரயம்பகத்தில்'' சித்தி அடைந்தார்.
இவர் 8 ஆண்டு காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.
16. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...
16. ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்...
பதினாறாம் ஆச்ரியர் [கி.பி 329-367]
ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர் குலத்தவர். இவரது தந்தையார் பெயர் ''கேசவ சங்கரர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''அச்சுத கேசவர்''.
காஞ்சி காமகோடி பீடாதிபதியான பிறகு இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை செய்துள்ளார். அப்போது "ச்யாநந்தூர" நாட்டு மன்னரான "குலசேகரனை" தன் அருள் நோக்கால் கவிஞராக்கினார்.
ஜைன மதத்திற்க்கு மாறிய அந்தணர்களை "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இந்து மதத்தை ஆக்கிரமிக்காமல் இருக்க இவர் அரும் பாடுபட்டார்.
இவர் கி.பி. 367ஆம் ஆண்டு, அக்ஷய வருடம் சுகல பக்ஷம், அஷ்டமி திதி அன்று காஷ்மீரத்திலுள்ள ''கலாபூரி'' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் ''உஜ்வல மஹாயதிபுரம்'' என்றழைக்கப்பட்டு வருகிறது.
இவர் 38 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரிதார்.
-------------‐---------------------------------------------
15. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...
15. ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
பதினைந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 317 - 329]
கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். இவரது தந்தையாரின் பெயர் “ஸ்ரீ காஞ்சி பத்ரகிரி”. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சுபத்ரர்".
இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடம் “பஞ்ச தசாக்ஷரி” மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்ட மஹான். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரெண்டு வயது தான். அந்த சிறிய வயதிலேயே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவரின் பெறும் ஆற்றலை கண்டு மக்கள் வியந்தார்கள்.
இவர் கி.பி. 329 ஆம் ஆண்டு, சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப் பிரதமை அன்று அகஸ்திய மலை அருகில் சித்தி பெற்றார்.
இவர் 12 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐-------------------------------------------
14. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...
14. ஸ்ரீவித்யா கநேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
பதிநான்காவது ஆச்சார்யர் [கி.பி. 272 - 317]
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று, ஆந்திர தேசத்து அந்தணர். இவரின் தந்தையின் பெயர் ''பாபண்ண ஸோமயாஜி" அவர்களுக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''நாயனா''.
இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமை உடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை வணங்கி ''பைரவ மூர்த்தி'' அப்பகுதியில் உள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள். வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தனக்குண்டான சக்திகளை பயன்படுத்தி மந்திரப் பிரயோகம் செய்து அந்த உக்கிரக பைரவரை சாந்தப்படுத்தினார். ஊர் மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
இவர் கி.பி. 317 ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதி அன்று மலையமலைத் தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தி அடைந்தார்.
இவர் 55 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------
13. ஸ்ரீ காஞ்சி காமகோடி குருபரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...
13. ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
பதிமூன்றாவது ஆசார்யர் [கி.பி.235 - 272]
ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் அந்தண ரத்தினமாக பிறந்தார்.
இவரின் தந்தையின் பெயர் "ஸ்ரீதர பண்டிதர்". இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சேஷய்யா".
"குரு
எவ்வழி சீடர் அவ்வழி" என்கிற வழியில், குருவைப் போலவே இவரும் ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரான ஸ்ரீ வித்யா கநேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளிடம் அனைத்து நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு மௌன விரதம்
மேற்கொண்டார். இவர் ஒரு அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி
நகர்ப்புறத்தில் இருந்தார்.
இவர் கி.பி. 272 ஆம் ஆண்டு, கர வருடம்,
சுக்லபக்ஷம், பிரதமை திதி அன்று காஞ்சியிலுள்ள ஸ்ரீ காயா ரோஹணேஸ்வரர்
கோவிலில் சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி மறைந்தார். [காணாமல் போனார்]
இவர் 37 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------------------‐------------
12. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...
12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
பன்னிரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 172 - 235]
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [ஒன்று] பாலாற்றங் கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தையின் பெயர் "ஸ்ரீ வத்ஸ பட்டர்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "ஹரி".
இவரின் சிஷ்யரான ஸ்ரீ சத்சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம், சந்திர மௌலீஸ்வர பூஜையையும், ஸ்ரீ மடம், மடம் சார்ந்த நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு "சார்வ பௌம" என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளாக "சார்வ பௌம" நிஷ்டையில் இருந்த மிக பெரிய தபஸ்வி இவர். இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா என்று நினைத்த மக்கள் இவரை போற்றி கொண்டாடினார்கள்....
இவர் கி.பி. 235 ஆம் ஆண்டு, ஆனந்த வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், நவமி திதியில் முதல் குருவான ஆதிசங்கரர் எப்படி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அது போலவே சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளினார். அதில் அழியாப் பேரானந்தம் அடைந்தவர் என்பது இவரின் சிறப்பு...
இவர் 63 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------
11. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...
11. ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
பதினொன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 127 - 172]
ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். இவரின் தந்தையின் பெயர் ''உஜ்வல பட்டர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஈச்வர வடு''. பல யாத்திரை சென்ற இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையை கிராமம் கிராமமாக செய்துள்ளார். சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி பிரியம் கொண்டவர்.
இவர், கி.பி.172 ஆம் ஆண்டு, விரோதி கிருது வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ தசமி திதியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.
இவர் 45 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------
10. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பத்து...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
10. ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
பத்தாவது ஆச்சார்யர் [கி.பி. 69 - 127]
இரண்டாம் ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர பிராம்மணர். கொண்காணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்து வந்த ''ஈஸ்வர பண்டிதர்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர்''மகேஸ்வர்''.
இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் சந்திர மௌலீஸ்வர பூஜையோடு விஜய யாத்திரைகள் மேற்கொண்டு மக்களுக்கு அருள் பாலித்தார். இவர் சென்ற ஊர்களில் எல்லாம் வேத நெறியைப் பரப்ப அரும்பாடுபட்டார். இருதியில் வட இந்தியா முழுவது யாத்திரையை முடித்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்தார்.
இவர் அக்ஷய வருடம், கி.பி. 127 ஆம் ஆண்டு, ஆனி மாதம், சுக்ல பக்ஷம், மூல நட்சத்திரத்தில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 58 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------
9. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஒன்பது...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
9. ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
ஒன்பதாம் ஆச்சார்யர் [28 -- 69 கி.பி]
ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர தேசத்து பிராமண குலத்தை சேர்ந்தவர். "ஆத்மன ஸோமயாஜி" என்பவரின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''கங்கையா''. ''கர்க்கா'' என்பது குல வழிப்பட்டம்.
இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்டவர். ''தாந்திரீய'' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார்.
காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்திலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி என்ன தக்கார்.
நம் மதத்தின் புனிதத்தை மீட்டெடுத்தவர். ஸ்ரீ ஆதி சங்கரரின் படைப்புக்களைப் புதுப்பித்ததற்க்கு இவரே காரணம்! முக்கிய இறை மூர்த்தங்களை பூஜை செய்ய தூய்மையான வழி, நெறி முறைகளை உருவாக்கி பக்திக்கான வழி காண்பித்தார்.
இவ்வழி பாட்டு முறைகளையே பின்னாளில் வந்த சைவ, நாயன்மார்களும் பின் பற்றினார்கள்.
கோவில்கள் செழிப்பாக இருப்பதற்காக காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திர பிரதிஷ்டை செய்து அதன் சக்திகளை அதிகப்படுத்தி சிறப்பாக நடக்க வழி முறைகளை செய்துள்ளார்.
இவர் கி.பி 69 ஆம் ஆண்டு, விபவ வருடம், கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம், திருதியை திதியில், மிருகசிரீர்ஷ நக்ஷத்திரத்தில் விந்திய மலைப்பகுதியில் சித்தி அடைந்தார்.
இவர் 40 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தார்.
மீண்டும் நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------
8. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... எட்டு...
8. ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி
எட்டாம் ஆச்சார்யார் [55 கி.மு - 28 கி.பி]
ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தண குலத்தவர். திருப்பதியில் பிறந்தார். ''த்ரைலிங்க சிவய்யா'' என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்! பெற்றோர் வைத்த பெயர் "மங்கண்ணா". இவரை ''சச்சிதானந்தர்'' எனவும் ''கைவல்யயோகி'' என்றும் அழைப்பார்கள். இவரின் அடுத்த வாரிசாக ஸ்ரீ கிருபா சங்கரரை நியமித்தார்.
இவர் கி.பி. 28 சர்வதாரி ஆண்டு தை மாதப் பிறப்பன்று, சுக்ல பக்ஷம், பஞ்சமி, சஷ்டி திதியில் பூர்வ பத்ர பாதா நக்ஷத்திரத்தில் காஞ்சி ''மண்டன மிச்ரர்'' அக்ரஹாரத்தில் ''புண்ணிய ரஸா'' என்னும் பகுதியில் சித்தி அடைந்தார்.
இவர் 83 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தவர்.
-------------‐---------------------------------------------
7. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஏழு...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...
ஏழாவது ஆச்சார்யர் கி.மு [124 -- 55]
ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த "சூரிய நாராயணமஹி" என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சின்னையா''. இவர் சக்தியை வழிபட்டு, சக்தி உபாசகராக இருந்தார்.
வெள்ளிக்கிழமைகளில் "கௌரி தேவிக்கு" விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் இலக்கண, இலக்கிய நூல்களைப் பற்றிய மிகுந்த புலமையும் அறிவாற்றலும் கொண்டவர்.
"ஆதிசங்கரரின் சங்கர பாஷ்யம்" என்ற நூலுக்கும், "சுரேஸ்வராச்சார்யாவின் வார்த்திகா" என்ற நூலுக்கும் எளிய முறையில் உரை நூல்கள் எழுதினார். அதற்க்கு ''ஆனந்த கிரி டீகா'' என்று பெயருடன் புத்தகமாக இருக்கிறது.
இவர் வட தேசம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். வரும் வழியில் ஆந்திராவில் உள்ள "ஸ்ரீசைலத்தில்" கி.மு 55 ஆம் ஆண்டு, குரோதன வருடம் வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், அவிட்டம் நக்ஷத்திரத்தில், நவமி திதியில், "ஸ்ரீ சைலத்தில்" சித்தி அடைந்தார்.
இவர் 69 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------
6. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... ஆறு.....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
ஆறாவது ஆச்சார்யர் [கி.மு 205
-124]
ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றினார். இவர் தந்தையின் பெயர் "பார்வு". "பார்வு" க்கு மகனாக பிறந்தவர் தான் "சுத்தானந்தேந்திர்". இவர்கள் வேதாரண்யத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த இவர்கள் ஒரு திராவிட பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "விஸ்வநாதன்". இவரது சந்யாச நாமம் "சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்". ஹிந்து மதம் வளரப் பெரும் பாடுபட்டவர். ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்.
இவர் கி.மு. 124 ஆம் ஆண்டு, நள வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷத்தில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் சஷ்டி திதியில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் 81 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார். நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------
திங்கள், 4 செப்டம்பர், 2023
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
அஷ்டோத்தர சத நாமாவளி:
1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய
நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்
ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர
பூஜாப்ரியாய நம:
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவாளி ஸம்பூர்ணம்.
ஞாயிறு, 3 செப்டம்பர், 2023
5. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 5. ஐந்தாவது ஆச்சார்யர்
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
5. ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
ஐந்தாவது ஆச்சார்யர் [கி.மு. 268 - 205]
ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சோழ நாட்டில் உள்ள "மங்கலம்" என்ற ஊரில் பிறந்தார். திராவிட அந்தண குலத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் "நாகேசன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஞானோத்தமன்''. தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர். ஸ்ரீ காமகோடி பீடத்தின் இரண்டாவது ஆச்சார்யரான "ஸ்ரீ சுரேஸ்வரர்" இயற்றிய ''நைஷ்கர்ம்ய சித்தி'' என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் "சந்திரிகை". அந்த நூலில் இவர் "ஸ்ரீ சுரேஸ்வரரையும்", "ஸ்ரீ சர்வஜ்ஞாத் மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையும்" விரிவாக போற்றி எழுதியுள்ளார்.
இவர் கி.மு. 205 ஆம் ஆண்டு, மன்மத வருடம், மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 63 ஆண்டுகள் ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------
4. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... 4. நான்காவது ஆச்சார்யர்
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
4. ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...
நான்காவது ஆச்சார்யர் [கி.மு. 364 - 268]
இவர் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில், அமராவதி நதிக்கரையில் வாழ்ந்தவர். இவரின் தந்தையின் பெயர் "தண்டவசரமன்". வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''பலிந்யாசர்''. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு "வாரத்திகங்கள்" இயற்றிய இவர் ''பதகசகம்'' என்னும் நூலை இயற்றினார். கால வெள்ளத்தில் இவற்றை எல்லாம் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.
இவர் கி.மு. 268 ஆம் ஆண்டு, நந்தன வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்க்ஷம் அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்....
இவர் 96 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 3. மூன்றாவது ஆச்சார்யர்
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
3. ஸ்ரீ சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி.
மூன்றாவது ஆச்சார்யர் [கி.மு. 407 - 364]
இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஸ்ரீ சங்கரர் மஹா குருவாகப் பொறுப் பேற்றார். அதாவது சர்வஞான பீடாரோஹணம் கொண்டார். அப்போதே சிறுவனான இவரை அழைத்து அடுத்து பொறுப்புக்கு வர வேண்டியவராக இவரையும் இணைத்துக் கொண்டார். இவருக்கு தானே சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி என்றும் பெயரிட்டார்! சுரேஸ்வராசார்யாவின் மேலான வழிகாட்டுதலிலும், கற்பித்தலிலும் இவர் சகலமும் அறிந்தார்.
சங்கர பகவத் பாதாள் எழுதிய சங்கர ப்ரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு 1267 அற்புத சுலோகங்களால் விளக்கம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
3. ஸ்ரீ சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி.
மூன்றாவது ஆச்சார்யர் [கி.மு. 407 - 364]
இவருக்கு
ஏழு வயதாக இருக்கும் போது ஸ்ரீ சங்கரர் மஹா குருவாகப் பொறுப் பேற்றார்.
அதாவது சர்வஞான பீடாரோஹணம் கொண்டார். அப்போதே சிறுவனான இவரை அழைத்து
அடுத்து பொறுப்புக்கு வர வேண்டியவராக இவரையும் இணைத்துக் கொண்டார்.
இவருக்கு தானே சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி என்றும் பெயரிட்டார்!
சுரேஸ்வராசார்யாவின் மேலான வழிகாட்டுதலிலும், கற்பித்தலிலும் இவர் சகலமும்
அறிந்தார்.
சங்கர பகவத் பாதாள் எழுதிய சங்கர ப்ரம்ம சூத்திர
பாஷ்யத்துக்கு 1267 அற்புத சுலோகங்களால் விளக்கம் எழுதினார். அதன் பெயர்
''சம்க்ஷேப சரீரகா'' என்பதாகும். சுரேஸ்வராசார்யாருக்குப் பின் பொறுப்பேற்ற
இவர் வெகு காலம் மடத்தை நிர்வகித்து வந்தார்.
இவர் கி.மு. 364 ஆம்
ஆண்டு, நள வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், ஏகாதசி திதியில்,
அஸ்வினி நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்....
இவர் 43 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐-------------------------------------------------------------------------------------------------------------------------------------------,,,------,-,,,,,-,----
எழுதினார். அதன் பெயர் ''சம்க்ஷேப சரீரகா'' என்பதாகும். சுரேஸ்வராசார்யாருக்குப் பின் பொறுப்பேற்ற இவர் வெகு காலம் மடத்தை நிர்வகித்து வந்தார்.
இவர் கி.மு. 364 ஆம் ஆண்டு, நள வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், ஏகாதசி திதியில், அஸ்வினி நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்....
இவர் 43 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐-------------------------------------------------------------------------------------------------------------------------------------------,,,------,-,,,,,-,----
2. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....
2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....
[கி.மு. 477 - 407]
ஆதிசங்கரர் மற்றும் சுரேஷ்வர் இந்த இரண்டு ஆசார்யர்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் மட்டுமே இருக்கும். மூன்றாவது ஆசார்யர்கள் பெயரோடு இந்திர சரஸ்வதி என்ற பட்டத்தோடு அவர்களின் பெயர் வரும் என்பது கூடுதல் தகவல்....
[முதல் குருவான ஆதி சங்கராச்சார்யர் ஐப்பசி மாதம், தசமி கிருஷ்ண பக்க்ஷம்
பூர்வபல்குனி நக்ஷத்ரம், தினத்தில் காஞ்சியில் முக்தியடைந்தார்....]
ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்வீக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பார்கள். இவருடைய மனைவி ஸரசவாணி, ஸரஸ்வதின் அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத, வேதாந்தங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்கு பிறகு அவரே பீடத்தை அலங்கிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திரும்ப அவர் இல்லம் தேடி வந்தார்.
அந்த காலத்தில் ஒருவர், ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றே வாதத்திற்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார். ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது நிபந்தனை. இரண்டு மலர் மாலைகளைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி ''சரஸவாணி''. இவரும் சளைக்காமல் பல நாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்திலுள்ள மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மனைவி தன்னையும் வாதத்தில் வென்றாலே பூரண வெற்றி என்று ''ஸரசவாணி'' தர்க்கம் செய்தால்.
அவரையும் தர்க்க சாஸ்திர படி ஜெயித்தார் சங்கரர். நிபந்தனை படி மிச்ரர் சந்நியாச ஆஸ்ரமத்தை ஏற்றார். ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்க்ஷா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராக இருந்தார. இவர் அத்வைத்த நூல்களை எழுதினார்.
சங்கரரின் ''ப்ரஹதாரண்யக உபநிஷத்'' நூலுக்கு வார்திகா என்ற விளக்க உரை நூல் செய்தார். வேதாந்த வியாக்ஞானங்களுக்கு ''நிஷிகாம்ய சித்தி'' என்ற நூலும் எழுதினர்! பல ஆண்டுகள் மடத்தை நிர்வகித்த வந்தார். ஏற்கெனவே சங்கரரால் அங்கீகரிக்கப்பட்ட ''சர்வஞாத்மநேன்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளாக'' காம கோடியின் அடுத்த வாரிசாக்கினார். இந்த மூன்றாவது ஆச்சார்கள் முதல் இந்திர சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஶ்ரீ சுரேஷ்வரருக்கு ஏற்பட்ட உடல் உபாதையை சரி செய்ய சங்கரர் அச்வினி தேவதைகளை அழைத்தார். அவர்களும் வந்து சிகிச்சை தந்ததார்கள். இதனால் கோபமுற்றான் இந்திரன். இந்திரனின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களை தண்டிக்க வஜ்ராயுதத்தை பிரயோகம் செய்ய துணிந்த இந்திரனை பகவத்பாதாள் தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தார். தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு கேட்டு, தனது பட்டமான இந்திர என்பதை காமகோடி ஆசார்ய பரம்பரைக்கு அளித்ததாக மஹாபெரியவாளே சொல்லியிருக்கார்கள். ஸர்வக்ஞ பீடாரோஹணத்தால் சரஸ்வதி தன் பெயரை அளிக்க இந்திர ஸரஸ்வதி என்று உருவானது. அதனால் தான் இந்த பீடத்தில் வருபவர்களின் படிப்பு, பல மொழி பேசுபவர்களா இன்றும் திகழ்கின்றார்கள்.
ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஸ்ரீ ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்து வந்தார். இவர் பல அத்வைத நூல்களை எழுதினார்.
இவர் கி.மு. 407 ஆம் ஆண்டு வைகாசி மாதம், சுக்ல பக்க்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.
இன்றும் காஞ்சி சங்கர மடத்தில் இவருக்கு தனி சன்னதியும், திருவுர்வமும் உள்ளது.
இவர் 70 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆச்சார்யர்கள் பரம்பரை...
ஆதிசங்கரர் அவதாரம் - 1
கி.பி. நான்காம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரிடம் வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒரு நாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.
வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தானஷ தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். ஜோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.
இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார்.
குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதை எல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.
--------------------------------------------
கனகதாரா ஸ்தோத்திரம் - இரண்டு...
குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்து விட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாக இருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷாம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள்.
இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார்.
19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மஹா லக்ஷ்மி பொன் மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது.
[இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோவிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது.] சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று முடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணி விடை செய்து வந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பால லீலை - மூன்று
தினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகு தொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது. இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. [இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி.] இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு ம ழான் கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர்.
சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான்.
பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார்.
ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி நான்கு துறவறம்: ஒரு நாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச் சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும், செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர்.
இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிகுந்த வருத்தம் அடுந்தாள். சிறுவயதில் இருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்து விட்டாள்.
ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசி ஆகலாம் என்று அனுமதி கொடுத்தார். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது.
பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார்.
அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின் கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோவிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.
குரு கோவிந்தபாதர்...
காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.
கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில் தங்கியிருந்து விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி.
ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்கா தேவி, இவரின் பாத அடிகளை தாமரை மலரால் (பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார்.
இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்த போது சங்கரர் முக்கிய இறை நூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வநாதரின் திருவிளையாடல்
ஒரு நாள் கங்கையில் நீராடி விட்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவ பெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் [தீண்டத்தகாதவன்] உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார்.
இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்ம நிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள் பட "மனீஷா பஞ்சகம்" என்று போற்றப்படும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்து போய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேதவியாசரை சந்தித்தல்....
சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும் படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேத வியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவ பெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார்.
வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதை கேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16 ஆம் முடிந்து விட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார்.
வியாசரின் அருளால் சங்கரரின் வாழும் காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.
வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேத விற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும் படியும் கூறினார்.
குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்
சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை.
உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது.
உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம்.
சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள்.
சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. ஸ்ரீ ஆதிசங்கரர்
முதல் குருவாக ஆதிசங்கரர் [கி.மு. 509 - 477]
ஸ்ரீ சங்கரர் கேரளா காலடியில் பிறந்தார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஸ்தாபித்தவர். ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை திரையிட்டுக் கொண்டு சொல்லும் போது திரை விலக்கிப் பார்த்த எல்லா சீடர்களும் நாகத்தின் விஷ மூச்சால் பொசுங்கிப் போனார்கள். வெளியே அனுப்பப் பட்டிருந்த கெளட பாதர் மட்டுமே பிழைத்திருந்தார். கௌடபாதரின் சீடர், ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர். இவரே ஆதிசங்கர பகவத்பாதரின் குரு. மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் சிருங்கேரியிலும் தெற்கில் ஸ்ரீ காமகோடி பீடம் காஞ்சியிலும் பீடங்களை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் தெற்கே வாசஸ்தலமும், சித்திஸ்தலமும் காஞ்சியே!
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜாதகம்....
புனர் பூச நக்ஷத்திரம் 2- ஆம் பாதம். கடக லக்னம், கடக ராசி, சூரியன், சுக்ரன், குரு, குஜன், சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் ஸ்ரீ ராமபிரான் ஜாதகத்தைப் போலவே உச்சம்.
சந்திரனும் ஸ்ரீ ராமர் ஜாதகத்தைப் போலவே ஆட்சி பெற்றிருக்கிறான் சுக்ரன், சூரியன், புதன், அதை போல் புதனும், சூரியனுடன் கூடியிருக்கிறான்.
குஜன் இருவருக்கும் ஒரே நக்ஷத்திரம். ஒரே மாதம் ராகு - கேதுக்கள் மட்டுமே இடம் மாறியிருக்கின்றன.
பிறந்த கிழமை - ஞாயிறு
திதி: சுக்ல பக்ஷ பஞ்சமி [வளர் பிறை]
ஆண்டு: நந்தன வருடம்.
காலம் : கலி 2593 [கி.மு.509] இவ்வாறு ப்ருஹத் ''சங்கர விஜயத்தில்’' கூறப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரே அதன் முதல் குருவாக இருந்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணமும் செய்து வைத்தார். ஸ்ரீ காமகோடி பீடத்தில் தனக்கென்று கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக ஸ்ரீ சுரேஸ்வரரை நியமித்தார்.
ஆதிசங்கரர் சமயவியல் அறிஞர்களை வாதிட்டு வென்றதும் காஞ்சியில் தான்! திருவானைக்காவில் ஸ்ரீ சக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ஆதிசங்கரர், காசி முதலான பிற க்ஷேத்திரங்களிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
"ஸ்வர்ண ஆகர்ஷண யந்திரத்தை " திருப்பதியில் செல்வவளம் கொழிக்கும் படி பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதி கேசா’ந்த ஸ்தோத்திரத்தை”யும் அருளினார்.
கிழக்குக் கடற்கரை பூரி கோவர்த்தன மடத்தில் ''விமலா பீடத்தில்'’ முதல் ஆச்சார்யராக பத்ம பாதரை நியமித்தார் ஆதிசங்கரர். இதுவரை 145 பீடாதிபதிகள் அந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
மேற்குக் கடற்கரை துவாரகா மடத்தில் மகாகாளிகா பீடத்தில் முதல் ஆச்சார்யராக நியமிக்கப்பட்டவர் ''ஹஸ்தாமலகர்''. இதுவரை 79 பீடாதிபதிகள் அதை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர்.
ஹிமாச்சலத்தின் பத்ரியில் ஜ்யோதிர் மடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடத்தில் முதல் ஆச்சார்யராக ஆதிசங்கரர் நியமித்தவர் தோடகர்.
கர்நாடக மாநிலத்தில் துங்கை - பத்ரை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் சிருங்கேரி. ரிஷ்ய சிருங்கர் அங்கே தவமியற்றியதால் சிருங்க கிரி என அந்த க்ஷேத்திரம் புகழ் பெற்றது. ஸ்ரீசாரதாம்பிகையின் விருப்பப்படி, தேவியை அங்கே பிரதிஷ்டை செய்து ஸ்ரீமடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தன் சீடரான பிருத்வீதரரை அதன் ஆச்சார்யராக நியமனம் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தையும் அங்கே ஸ்தாபித்தார்.
கி.மு. 477 ரக்தாட்சி வருஷம், வ்ருஷப மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று காஞ்சியில் சித்தியடைந்தார் என வரலாறு கூறுகிறது. ஸ்ரீ சங்கரரின் வழிவந்த ஸ்ரீ காமகோடி பீடத்தில் குரு ரத்தினங்களாக விளங்கிய குருரத்னங்களைப் பற்றி இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.
இவர் 32 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை எழுபது ஆசார்யர்கள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர். இன்று முதல் இந்த பீடத்தில் இருந்த ஆசார்யர்களின், பிறந்த ஊர், பெற்றோர்களின் பெயர், ஆசார்யர்களின் பூர்விஸ்ரம பெயர், எந்த ஆண்டு முதல் பீடத்தில் இருந்தார்கள், எத்தனை ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்கள், எந்த ஆண்டு சித்தி அடைந்தார்கள், எங்கே சித்தி அடைந்தார்கள் போன்ற விவரங்களை இன்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு ஆசார்யர் வீதம் தொடர்ந்து பதிவிப்படும். நமது ஆசார்யர்களை பற்றி இன்று முதல் நாம் அனைவரும் தெரிந்து கொள்வோம். இந்த பீடத்தில் இருந்த ஆசார்யர்கள் அவர்கள் வந்த காலங்களில் என்ன என்ன அதிசயங்களை செய்துள்ளார்கள் என்பதை இந்த தொடரை முழுவதுமாக படிப்பவர்களுக்கு ஒரு வர பிரசாதமாக இந்த தொடர் அமையும்.....