வியாழன், 7 செப்டம்பர், 2023

9. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஒன்பது...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

9. ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....



ஒன்பதாம் ஆச்சார்யர் [28 -- 69 கி.பி]

ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர தேசத்து பிராமண குலத்தை சேர்ந்தவர். "ஆத்மன ஸோமயாஜி" என்பவரின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''கங்கையா''. ''கர்க்கா'' என்பது குல வழிப்பட்டம்.

இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்டவர். ''தாந்திரீய'' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார்.

காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்திலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி என்ன தக்கார்.

நம் மதத்தின் புனிதத்தை  மீட்டெடுத்தவர். ஸ்ரீ ஆதி சங்கரரின் படைப்புக்களைப் புதுப்பித்ததற்க்கு இவரே காரணம்! முக்கிய இறை மூர்த்தங்களை பூஜை செய்ய  தூய்மையான வழி, நெறி முறைகளை உருவாக்கி பக்திக்கான வழி காண்பித்தார்.

இவ்வழி பாட்டு முறைகளையே பின்னாளில் வந்த சைவ, நாயன்மார்களும் பின் பற்றினார்கள்.

கோவில்கள் செழிப்பாக இருப்பதற்காக காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திர பிரதிஷ்டை செய்து அதன் சக்திகளை அதிகப்படுத்தி சிறப்பாக நடக்க வழி முறைகளை செய்துள்ளார்.

இவர் கி.பி 69 ஆம் ஆண்டு, விபவ வருடம், கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம், திருதியை திதியில், மிருகசிரீர்ஷ நக்ஷத்திரத்தில் விந்திய மலைப்பகுதியில் சித்தி அடைந்தார்.

இவர் 40 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தார்.

மீண்டும் நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------

கருத்துகள் இல்லை: