வியாழன், 7 செப்டம்பர், 2023

7. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஏழு...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...



ஏழாவது ஆச்சார்யர் கி.மு [124 -- 55]

ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த "சூரிய நாராயணமஹி" என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சின்னையா''. இவர் சக்தியை வழிபட்டு, சக்தி உபாசகராக இருந்தார்.

வெள்ளிக்கிழமைகளில் "கௌரி தேவிக்கு" விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் இலக்கண, இலக்கிய நூல்களைப் பற்றிய மிகுந்த புலமையும்  அறிவாற்றலும் கொண்டவர்.

"ஆதிசங்கரரின் சங்கர பாஷ்யம்" என்ற நூலுக்கும், "சுரேஸ்வராச்சார்யாவின் வார்த்திகா" என்ற நூலுக்கும் எளிய முறையில் உரை நூல்கள் எழுதினார். அதற்க்கு ''ஆனந்த கிரி டீகா'' என்று பெயருடன் புத்தகமாக இருக்கிறது.

இவர் வட தேசம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். வரும் வழியில் ஆந்திராவில் உள்ள "ஸ்ரீசைலத்தில்" கி.மு 55 ஆம் ஆண்டு, குரோதன வருடம் வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், அவிட்டம் நக்ஷத்திரத்தில், நவமி திதியில், "ஸ்ரீ சைலத்தில்" சித்தி அடைந்தார்.

இவர் 69 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------

கருத்துகள் இல்லை: