செவ்வாய், 19 செப்டம்பர், 2023

31. ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீகாஞ்சி காமகோடி குரு பரம்பரா....

31. ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

முப்பத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 655 - 668]

ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''கெடில'' நதிக்கரையில் உள்ள சிற்றூரில் தமிழக அந்தண குலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''அனந்தர்''. தந்தை இவருக்கு வைத்த பெயர் “ஜ்யேஷ்ட ருத்ரர்".

இவர் ''சீலநிதி பிரம்மானந்தகனர்'' என்று போற்றப்பட்டவர். ஒரு முறை காஷ்மீர் அரசன் ''லலிதாதித்யன் கன்னோசி" மன்னன் "யசோவர்மனை" வென்ற பின்னர் தென்னகம் நோக்கிப் படை எடுத்தான். கர்நாடகம், கேரளம், சோழநாடு இவைகளை அவன் வெற்றி கொண்டதாக "ராஜ தரங்கணீயம்" சொல்கிறது.

"யசோவர்மனின்" அரசவைப் புலவர் ''பவபூதி'' சக்தி உபாசகர். அவர் லலிதாதித்யனின் வெற்றிகளை ''மஹா புருஷ விலாசம்'' என்ற நாடக நூலில் விளக்கியுள்ளார். அதில் "லலிதாதித்யன்'' ஆதி முதல் புகழ் பெற்றிருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளை தரிசித்து ப்ரஸாதம் பெற காஞ்சி சென்றான்” என்று கூறப்பட்டிருக்கின்றது.

வெற்றியோடு நாடு திரும்பிய ''லலிதாதித்யன்'' ஆசார்யாள் திரு நாமத்தால் ஒரு அன்ன சத்திரம் கட்டினான். தினமும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னமிட்டான் என்கிறது ''மஹாபுருஷ விலாசம்''.

இவர் கி.பி. 668 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், கார்த்திகை மாதம், சுக்லபக்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 13 ஆண்டுகள் பீடத்தை காலம் அலங்கரித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: