ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

2. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....

 2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....



 [கி.மு. 477 - 407]

ஆதிசங்கரர் மற்றும் சுரேஷ்வர் இந்த இரண்டு ஆசார்யர்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் மட்டுமே இருக்கும். மூன்றாவது ஆசார்யர்கள் பெயரோடு இந்திர சரஸ்வதி என்ற பட்டத்தோடு அவர்களின் பெயர் வரும் என்பது கூடுத‌ல் தகவல்....

[முதல் குருவான ஆதி சங்கராச்சார்யர் ஐப்பசி மாதம், தசமி கிருஷ்ண பக்க்ஷம்
பூர்வபல்குனி நக்ஷத்ரம், தினத்தில் காஞ்சியில் முக்தியடைந்தார்....]

ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்வீக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பார்கள். இவருடைய மனைவி ஸரசவாணி, ஸரஸ்வதின் அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத, வேதாந்தங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்கு பிறகு அவரே பீடத்தை அலங்கிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திரும்ப அவர் இல்லம் தேடி வந்தார்.

அந்த காலத்தில் ஒருவர், ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றே வாதத்திற்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார். ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது நிபந்தனை. இரண்டு மலர் மாலைகளைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி ''சரஸவாணி''. இவரும் சளைக்காமல் பல நாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்திலுள்ள மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மனைவி தன்னையும் வாதத்தில் வென்றாலே பூரண வெற்றி என்று ''ஸரசவாணி'' தர்க்கம் செய்தால்.

அவரையும் தர்க்க சாஸ்திர படி ஜெயித்தார் சங்கரர். நிபந்தனை படி மிச்ரர் சந்நியாச ஆஸ்ரமத்தை ஏற்றார். ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்க்ஷா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராக இருந்தார. இவர் அத்வைத்த நூல்களை எழுதினார்.

சங்கரரின் ''ப்ரஹதாரண்யக உபநிஷத்'' நூலுக்கு வார்திகா என்ற விளக்க உரை நூல் செய்தார். வேதாந்த வியாக்ஞானங்களுக்கு ''நிஷிகாம்ய சித்தி'' என்ற நூலும் எழுதினர்! பல ஆண்டுகள் மடத்தை நிர்வகித்த வந்தார். ஏற்கெனவே சங்கரரால் அங்கீகரிக்கப்பட்ட ''சர்வஞாத்மநேன்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளாக'' காம கோடியின் அடுத்த வாரிசாக்கினார். இந்த மூன்றாவது ஆச்சார்கள் முதல் இந்திர சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஶ்ரீ சுரேஷ்வரருக்கு ஏற்பட்ட உடல் உபாதையை சரி செய்ய சங்கரர் அச்வினி தேவதைகளை அழைத்தார். அவர்களும் வந்து சிகிச்சை தந்ததார்கள். இதனால் கோபமுற்றான் இந்திரன். இந்திரனின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களை தண்டிக்க வஜ்ராயுதத்தை பிரயோகம் செய்ய துணிந்த இந்திரனை பகவத்பாதாள் தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தார். தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு கேட்டு, தனது பட்டமான இந்திர என்பதை காமகோடி ஆசார்ய பரம்பரைக்கு அளித்ததாக மஹாபெரியவாளே  சொல்லியிருக்கார்கள். ஸர்வக்ஞ பீடாரோஹணத்தால் சரஸ்வதி தன் பெயரை அளிக்க இந்திர ஸரஸ்வதி என்று உருவானது. அதனால் தான் இந்த பீடத்தில் வருபவர்களின் படிப்பு, பல மொழி பேசுபவர்களா இன்றும் திகழ்கின்றார்கள்.

ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஸ்ரீ ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்து வந்தார். இவர் பல அத்வைத நூல்களை எழுதினார்.

இவர் கி.மு. 407 ஆம் ஆண்டு வைகாசி மாதம், சுக்ல பக்க்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.

இன்றும் காஞ்சி சங்கர மடத்தில் இவருக்கு தனி சன்னதியும், திருவுர்வமும் உள்ளது.

இவர் 70 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை: