ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

5. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 5. ஐந்தாவது ஆச்சார்யர்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

5. ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

ஐந்தாவது ஆச்சார்யர் [கி.மு. 268 - 205]



ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சோழ நாட்டில் உள்ள "மங்கலம்" என்ற ஊரில் பிறந்தார். திராவிட அந்தண குலத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் "நாகேசன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஞானோத்தமன்''. தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர். ஸ்ரீ காமகோடி பீடத்தின் இர‌ண்டாவது ஆச்சார்யரான "ஸ்ரீ சுரேஸ்வரர்" இயற்றிய ''நைஷ்கர்ம்ய சித்தி'' என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் "சந்திரிகை". அந்த நூலில் இவர் "ஸ்ரீ சுரேஸ்வரரையும்", "ஸ்ரீ சர்வஜ்ஞாத் மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையும்" விரிவாக போற்றி எழுதியுள்ளார்.

இவர் கி.மு. 205 ஆம் ஆண்டு, மன்மத வருடம், மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 63 ஆண்டுகள் ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------

கருத்துகள் இல்லை: