கண்ணாடி மனசு வேணும்!
▪ எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல்"ஆஹா!என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
■ நாம் ஒரு இடத்திற்கு போனால் அங்கே இருப்பவர்கள்"குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்'என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது.எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
▪ தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும்.அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
■ மேலும் மேலும் பணம் தருகிற தொழில் மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
▪ காஞ்சி மஹா பெரியவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக