மகா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார்
என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது
கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு
மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு. இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மகாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.
''ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.
அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:
''தான் ஏகாதசி, துவாதசி என்று உபவாசம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக் காகவும் மனம் இரங்கியதுண்டு. இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா?! பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத் தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை பேதம் பார்க்காத கருணை!
ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.
அப்போது, மடத்தில் பல்லக்கு தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.
மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மகாபெரியவா!''

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக